Skip to content
Post Views: 1,784

“டேய் அபி முதல்ல அது யாருனு பாரு… எப்ப பாத்தாலும் அப்பா அப்பானு….” என்று அவனை விஷ்ணுவிடம் இருந்து பிரித்தாள்…
விஷ்ணுவை பார்த்த அபி “மாமா” என்று மீண்டும் அவனை கட்டிக் கொண்டவன் “மாமா அம்மா அடிக்குறா…. வலிக்கிது…” என்று பொய்யாக அழுக தொடங்கிவிட்டான்…
Advertisement
“டேய் அவ இவனு சொல்ல கூடாது னு சொல்லி இருக்கேன்ல டா… அப்பயும் அப்படியே பேசுற… மரியாதை குடுத்து பேசனும் சொல்லி இருக்கேன்ல… கொஞ்சமாச்சும் மரியாதை தெரியுதா.. அப்படியே அப்பன் மாதிரி …. அவனுக்கு இருக்க திமிரு இவனுக்கும் இருக்கு… ” என்று கோவமாக அபியை நெருங்கினாள்…
Advertisement
அவள் பேசிக் கொண்டு இருக்கும் போதே தன் பின்னால் அமர்ந்து இருந்தவளை ஒரு பார்வை பார்த்தான் விஷ்ணு… அவன் பார்வையில் அவள் பட்டென்று கீழே இறங்கி கொண்டாள்….
Advertisement
சத்யா கூறியதை கேட்ட அபி “நீ மட்டும் அப்பாவை அவன் இவன் சொல்ற… நான் சொல்ல கூடாதா” என்று கேலியாக கேட்டான்..
Advertisement
“அபி” என்று அடிக்க வந்தவளை பார்த்த விஷ்ணு அபியை ஒரே கையில் தூக்கி தனக்கு முன்பு உட்கார வைத்தவன் “ஒரு ரவுண்டு போகலாமா சாம்ப்” என்று கேட்டு வண்டியை ஓட்ட ஆரம்பித்துவிட்டான்….
போகும் அவர்களை பார்த்த சத்யா மகிமாவிடம் “மகிமா உள்ள வா மாமனும் மருமகனும் எப்போ வர போறாங்களோ….” என்று கூறி அவளை உள்ளே அழைத்து சென்றாள்…
“என்ன மகிமா முகம் எல்லாம் அழுத மாதிரி இருக்கு… உங்க வீட்டுல இருக்க கிழவி எதோ பேசிடுச்சா.. அந்த கிழவிக்கு இதே வேலையா போச்சு…. என்கிட்ட வராமயா போயிடும்… அப்ப இருக்கு அதுக்கு…” என்று கோவமாக கூறினாள்..
அவளை பார்த்து சிரித்த மகிமா “நீங்க இப்போ அபியை கண்டிச்சிங்க… இப்போ நீங்களே மரியாதை இல்லாம பேசுறீங்க … இதுல அண்ணன் மேல வேற பழி போடுறிங்க….” என்று கிண்டலாக கேட்டாள்
“மகிமா அது வேற இது வேற…. நீ பேச்சை மாத்தாத….நானும் உன் கிட்ட சொல்றேன்ல நீ ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆகுறனு…. கொஞ்ச நாள் அந்த கிழவியை விட்டு தள்ளி இரு… ஒரு மாசம் இங்கயே இரு… எதுவா இருந்தாலும் பாத்துக்கலாம்…..” என்று கூறினாள்…
“ப்ச் விடுங்க அண்ணி எல்லாம் என் தலைவிதி… இப்போ எல்லாம் அம்மாச்சி சொல்ற மாதிரி மாமா வேற யாரையோ கல்யாணம் பண்ணி இருந்தா சந்தோசமா இருந்து இருப்பாருனு தோணுது…. நானே அவருக்கு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்…” என்று கூறினாள்..
அவள் கூறியதை கேட்டு சத்யா “என்ன பேசுற” என்று கேட்கும் போதே “நீ பொண்ணு எல்லாம் பாக்காத… கம்மனு எனக்கு கருமாதி பண்ணிட்டு நீயும் செத்துரு” என்று கோவமாக கூறிவிட்டு யாரையும் பார்க்காமல் வண்டியை எடுத்து கொண்டு வேகமாக சென்றுவிட்டான்…
அவன் கோவமாக சென்றதை பார்த்த மகிமா சத்யாவின் மடி சாய்ந்து கதற ஆரம்பித்துவிட்டாள்….
சத்யாவும் எதுவும் கூறாமல் அவள் தலையை வருடிக் கொடுக்க ஆரம்பித்துவிட்டாள்…
அவளை சிறிது நேரம் அழுக விட்ட சத்யா அவளிடம் “இப்படி எல்லாம் பேசாத மகிமா அண்ணா உன்மேல எவ்வளவு லவ் வெச்சு இருக்காரு…. உங்க ரெண்டு பேருக்கும் வீட்டுல பார்த்து பண்ணி வெச்ச கல்யாணம் தான்… ஆனா அண்ணா உன்னை எப்படி பாத்துக்குறாரு….. நீ என்னனா அவரை ஈஸியா விட்டு கொடுக்குறனு சொல்ற…..இனிமே இதை பத்தி யோசிக்கவே கூடாது…. இப்போ கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறி தட்டி கொடுத்தாள்…. மகிமாவும் அழுது அழுது உறங்கி இருந்தாள்….
இங்கு வேகமாக சென்ற விஷ்ணு தங்கள் வயலில் வண்டியை நிறுத்திவிட்டு அங்கிருக்கும் கிணற்றின் மேல் அமர்ந்து கொண்டான்….
எதார்த்தமாக அந்த பக்கம் வந்த தீனா அவனை பார்த்து அவன் பக்கம் சென்றான்…. “டேய் மாப்ள இங்க என்ன பண்ற… என்ன பிரச்சனை….” என்று கேட்டான்…
அவனும் மடை திறந்த வெள்ளம் போல் அனைத்தும் கொட்டி விட்டான்…. “என் வீட்டு கிழவி தொல்லை நாளுக்கு நாள் அதிகம் ஆகிட்டே போகுது… மகியை குத்தி காட்டி பேசிட்டே இருக்கு…. அவளும் சத்யா கிட்ட வேற பொண்ணை பாத்து கல்யாணம் பண்ணி வெக்குறேன்னு சொல்லிட்டு இருக்கா…. ஒரே எரிச்சலலா இருக்கு மச்சா…” என்று சுவற்றில் கையை குத்தி கொண்டு கூறினான்….
சத்யா என்ற பெயரை கேட்டு கோவமடைந்த தீனா தன் எரிச்சலை மறைத்து கொண்டு “டேய் மாப்ள…. தங்கச்சி அப்படி பேச உங்க வீட்டு கிழவி மட்டும் காரணமில்லை…. அதை தூண்டி விட இங்க நிறைய பேரு இருக்காங்க… கொஞ்ச நாள் நீ தோப்புக்கு போகாம இரு… உன் வீட்டு கிழவி பாதி பேச்சை குறைக்கும்….” என்று தன் எரிச்சலை அவனிடம் மறைக்க முடியாமல் கோவமாக சொல்லிவிட்டான்….
“அந்த கிழவியை தூண்டி விடுறவங்களுக்கு ஒரு நாள் இருக்கு…. அப்பறம் மச்சான் நான் தோப்பு வீட்டுக்கு போக கூடாதுனு நீ முடிவு பண்ண கூடாது… நான் அங்க போவேன்.. உன்னால ஒன்னும் பண்ண முடியாது…. நான் இப்போ அங்க தான் போறேன்… போய் தங்கச்சி கையால பரோட்டா சிக்கன் குழம்பு சாப்பிட்டு அப்படியே என் பொண்டாட்டியை அருவி வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டு வரேன்…. ரெண்டு நாள் எங்கள தேட வேண்டாம்” என கூறிவிட்டு பைக்கில் ஏறி தோப்பு வீட்டுக்கு புறப்பட்டான்…
“எப்ப பாத்தாலும் சத்யா சத்யானு ச்சே… முதல்லா இவன் கிட்ட இருந்து அந்த சத்யாவ பிரிக்கனும்….” என்று கூறிக்கொண்டு தன்னுடைய வயலுக்கு சென்றுவிட்டான்….
தோப்பு வீடு…
விஷ்ணு செல்லும் போது சத்யாவும் மகிமாவும் எப்படி இருந்தனரோ அதே போல் தான் அவன் வரும் வரையிலும் இருந்தனர்….. அபியும் அவனின் குட்டி தலையணையில் உறங்கி இருக்க மகிமாவை தன் மடியில் படுக்க வைத்து. கொண்டு ஒரு கையால் அவள் தலையை தடவி கொடுத்து கொண்டு இருந்தாள்…. மற்றொரு கையில் வேள்பாரி புத்தகத்தை கையில் வைத்து கொண்டு படித்து கொண்டு இருந்தாள்…
உள்ளே வந்த விஷ்ணுவை பார்த்த சத்யா “வாங்க ண்ணா… உள்ள கூட வராம முன்ன போயிட்டீங்க…. அவ பாவம் ண்ணா.. நீங்க பாதி நேரம் வயல்ல தான் இருக்கீங்க…. உங்க பாட்டிய பத்தி தெரியாதா…. ஒரு வாரம் எங்கயோ வெளிய போயிட்டு வாங்க ண்ணா… உங்களுக்கு நைட் இங்க தான் டின்னர்.. என்ன செய்யட்டும்” என்று கேட்டாள்..
“தங்கச்சிம்மா எனக்கு பயங்கரமா பசி…. எதுவா இருந்தாலும் சரி…. அப்டினு மட்டும் சொல்ல மாட்டேன்… எனக்கு பரோட்டா மட்டன் குழம்பு வேணும்… இந்தா மட்டன்…” என்று நீட்டினான்….
“அண்ணா நீங்க முன்ன கோவப்பட்டு போனதும் நீங்க சாப்பிட வர மாட்டீங்கனு சொன்னிங்க…. ஆனா நீங்க” என்று சிரித்து கொண்டே கூறினாள்..
“சோறு அது தானே எல்லாம்…” என்று சிரித்து கொண்டே கூறியவன் தூங்கி கொண்டு இருந்த மகிமாவை கொட்டி எழுப்பி விட்டவன் அவளை சமையல் செய்ய சத்யாவுக்கு உதவியாக போக சொன்னான்….
அவளோ “திட்டினல போக மாட்டேன்” என்று மீண்டும் உறங்க முயன்றாள்…
அதை கேட்ட விஷ்ணு “தங்கச்சி ம்மா நமக்கு மட்டும் பரோட்டா… தோ இவளுக்கு பழைய சோறு போடு போதும்…” என்று கூறி காலை நீட்டி தரையில் படுத்துக்கொண்டன்..
“என்னது பரோட்டாவா…. இதை முன்னாடியே சொல்லமாட்டியா மாமா….” என்று கூறியவள் வேகமாக கிட்சன் சென்றுவிட்டாள்…..
சத்யா இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே உள்ளே சென்றுவிட்டாள்….
error: Content is protected !!