Skip to content
Post Views: 2,358
இதில் அவர்கள் தைப்பது எண்ணிக்கை கணக்கில் எடுக்கமாட்டார்கள் என்றாலும், சூப்பர்வைசர் கண்காணிப்பில் அவர்கள் வேலையில் தப்பிக்கவும் முடியாது. இந்த முறை பெரும்பாலும் எக்ஸ்போர்ட் கம்பெனிகளில் மட்டுமே நடைமுறையில் உள்ளது.
வெள்ளி, சனி இரண்டு நாளும் திருப்பூர் எப்பொழுதையும் விட மிக சுறுசுறுப்பாக இயங்கும்.
Advertisement
காரணம் திங்கள் ஈரோட்டில் நடக்கும் மார்க்கெட்டில் நிறைய பார்ட்டிகள்(கஸ்டமர்ஸ்) வந்து தங்களுக்கான துணி வகைகளை மொத்தக்கொள்முதல் செய்து கொண்டு, மேற்படி அவர்களுக்கு தொடர்ந்து தேவைப்படுவதை ஆர்டராகவும் கொடுத்து செல்வர்.
அதனால் பெரும்பாலான கம்பெனியில், சனிக்கிழமை எல்லாம் மார்கெட் கொண்டு செல்ல வேண்டியவை பேக் செய்யப்பட்டு.. பண்டலாக்கப்பட்டுவிடும்.
Advertisement
Advertisement
ஞாயிறு அதை வண்டியில் அனுப்பிவிட்டு, திங்கள் அதிகாலையிலேயே அங்கு வியாபாரம் கலைகட்ட துவங்கிவிடும்.
அதே நாள் இரவும் மார்கெட் செயல்படுவதால் பெரும்பாலும் திங்கள் மிகவும் முக்கியமான நாள் தான் அங்கு தொழில் செய்பவருக்கு.
Advertisement
அந்த வகை மார்க்கெட்டில் பெரிய பெயர் பெற்ற கடைகளில் கிடைக்கும் அதே பனியன் மெட்டிரியல் வகைகள்.. குறைந்த விலையில் வாங்க முடியும்.. என்பதால் டஜன் கணக்காக வாங்க நினைப்பவரும் அங்கு குவிந்துவிடுவார்கள்.
சில்லறை விற்பனைக்காகவும்.. இங்கு மொத்தமாக கொள்முதல் செய்து போவோர் அநேகர்.
அப்படிப்பட்ட வெள்ளி என்பதால்.. தீனாவின் ஓட்டம் இன்று இன்னும் கூடுதலாகவே இருந்தது.
கட்டிங் முடிந்து தைக்க எடுத்துச்சென்றவர்களுக்கு ஒன்றுக்கு இரண்டு முறை அழைத்து.. அவசரப்படுத்தி,
பேக்கிங் வேலை நிற்காமல் நடக்க.. அடுத்து அடுத்து என்ன தேவை..? என்பதை முன்கூட்டியே அனுமானித்து அதை வர வைத்து.. என பம்பரமாய் சுழன்றவனுக்கு பெரும் தலைவலியாய் வந்தது வெளியே கொடுத்த பீஸில் வைத்த அளவீடு மாற்றம்.
எப்போதும் அதில் எஸ், எம், எல், எக்ஸ் எல், டபுள் எக்ஸ் எல்.. போன்ற லேபிள் டேக் பண்ணி கொடுக்க வேண்டியது தைப்பவரின் பணியில் ஒன்று.
அன்றைக்கு எம் சைஸூக்கு.. எல் லேபிள் வைத்து அவர் கொடுத்திருக்க.. இவனுக்கு இருந்த மனநிலையில் அதை சரிவர பார்க்காமல் அது பேக்கிங் வரை சென்றுவிட்டது.
பேக்கிங்கில் இருந்தவர் சந்தேகத்தின் அடிப்படையில் அதை சொல்ல, டேப் வைத்து அளந்து பார்த்த போது.. அளவு மாற்றம் தெரிய வந்தது.
அப்படியே.. அந்த சைஸ் டாப்பை இடமாற்றம் செய்ய வைத்துவிட்டு, அந்த தவறை செய்தவரை அழைத்து.. அதை மாற்றி கொண்டுவர செய்து விட்டு, அந்த நேர பேக்கிங்கிக்கு வேறு ஏற்பாட்டை செய்து முடிக்கும் போது.. ‘அய்யோடா..’ என்றாகி போனது.
எப்போதும், ‘வேலை..’ என ஓடிக்கொண்டு இருந்தாலும், முகத்தில் சிறு சோர்வும் காட்டாதவனை இன்று யாரோனும் கண்டால், “உடம்பு சரியில்லையாப்பா..?” என்று கேட்டு விடுவார்கள். அப்படியான நிலையிலேயே இருந்தான் தீனா.
எதேச்சையாக சிசிடிவியில் அவனை கண்ட தங்கமணிக்கு சந்தேகம் எழ, அங்கிருந்த ஒரு பையனை அனுப்பி, தீனாவை அலுவலக அறைக்கு வரவழைத்தார்.
‘இன்னும் செய்து முடிக்க வேண்டிய வேலை இருக்க, இப்போது இவரின் அழைப்பு எதற்கு..?’ என்ற யோசனையோடே அங்கு வந்த தீனா,
“என்ன ண்ணே.. எதுக்கு கூப்புடீங்க..? இன்னைக்கு வெளியே பார்ட்டிக்கு போக வேண்டியது எல்லாம், மதியமே பண்டல் பண்ணி குட்டி யானையில பார்ஷல் சர்வீஸ் போயிடுச்சே..!” என்று அவன் அவசரமாக சொல்ல,
“டேய், உட்கார்டா..” என்றார் அதிகாரமாய்.
அதில் அவரை பார்த்தவன் அவரின் முகத்தில் தெரிந்த கடுமையில் அவருக்கு முன் இருந்த இருக்கையில் அமர,
“என்னடா பிரச்சினை..?” என்றார், எந்த முகாந்திரமும் இல்லாமல்.
டேக்.. மாறியதை பற்றி கேட்பதாக நினைத்தவன், தயங்கி.. பின் நடந்த தவறையும்.. அதை தான் கவனிக்காததையும் குற்ற உணர்வோடு சொல்லி முடித்தான்.
அவன் சொல்வதை முழுதும் கேட்டவர், “அடேய் மடையா.. நா அதையா கேட்டேன்..? உனக்கு என்ன பிரச்சினை..?” என்றார் இன்னும் கடுப்பாக.
“எனக்கா..! எனக்கு என்ன பிரச்சினை..? நா நல்லா தான் இருக்கேன்..” என்றவனுக்கு, ‘சுத்தமாக புரியவில்லை.. அவரின் கேள்வி, ஏன்.. என்றே..’
“ஓ.. அப்படியா..?” என்றவர்,
“அமீர்..” என்று கத்த, வெட்டிய துணிக் கட்டுக்களை மேல் தளத்துக்கு கொண்டு செல்ல.. லிஃப்டில் ஏற்ற எடுத்து வந்த ஒருவன்.. அதை வைத்துவிட்டு அவசரமாக அவர் அலுவலக அறைக்கு வர,
“தீனா.. எப்படி இருக்கான்..?” என்றார் எதுவும் சொல்லாமல்.
அவனுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை என்றாலும்.. தீனாவை பார்த்ததுமே ஏதோ வித்தியாசமாய் பட, “உடம்பு முடியாத மாதிரி இருக்குங்க.. சார்..” என்றான் மரியாதையோடு.
“ம்ம், சரி நீ போய் வேலைய பாரு..” என்று அனுப்பியவர்,
“வந்து.. மூனு மாசம் ஆன பையனுக்கு உன் முகத்தை பாத்து ஏதோ சரியில்லைன்னு சொல்ல தெரிஞ்சிருக்கு.. பத்து வருஷமா பார்க்கறேன்.. என்கிட்ட மறைக்கறே..? ஏன்டா.. இப்படி இருக்கே..!” என்று கோபமாக ஆரம்பித்து இயலாமையோடு கேட்க,
“அண்ணே.. நிஜமா ஒண்ணுமே இல்லை ண்ணே..” என்றவனை கண்டு,
“ஊர்ல இருந்து போன் வந்துதா..?” என்றார் அவனை கூர்ந்தபடி.
அதுவரை, ‘அது தான் தன்னை அழுத்துகிறது..’ என்பது கூட புரியாத நிலையில் வேலையில் தன்னை மூழ்கடித்து கொண்டவனுக்கு அவரின் கேள்விக்கு பின்னே தான்.. அது தோன்ற,
தலைகுனிந்து, “ம்ம்..” என்றான் மெல்லிய குரலில்.
“ஓ.. பணம் கேட்டாங்களா..?” என்றார் அவர்களை பற்றி அறிந்தவராக.
அதற்கும், “ம்ம்..” என்றிட,
“எதுக்காம்..?” என்றார் கோபமாக.
“அக்காக்கு.. ஆடி சீர் கொடுக்க..” என்று அவன் சொன்னதும்,
“கல்யாணம் ஆகி.. பத்து வருஷமாகியும்.. இன்னும் உங்க வீட்டுல ஆடி சீர் கொடுக்கறாங்களா..? பரவாயில்லையே..! உன்னோட அக்காக்கு போன போடு..” என்றார் ஆச்சர்யம் போல் நக்கல் நிறைந்த குரலில்.
அவரின் பாவனையே அவர் எதற்காக போன் போட சொல்கிறார்.. என்பதை அவனுக்கு விளக்க,
“அண்ணே.. விடுங்க. அவங்க கொடுக்கறாங்க.. இல்ல.. அக்காவுக்காக ன்னு சொல்லும் போது.. கூடபொறந்தவனா நான் செய்ய வேண்டியது என்னோட கடமை..” என்றதும்,
“அடேய்.. அக்காவுக்கு செய் வேணாமுன்னு சொல்லலையே நான். அந்த பொண்ணு மேல அக்கறையோட கேட்கற உங்க அப்பாக்கு.. கல்யாண வயசுல, இன்னும் தனியா இருக்கீயே.. உனக்கு ஒரு நல்லது பண்ணி பார்க்கனுமுன்னு ஏன் தோணல..?” என்றார் கோபமாக.
பதில் சொல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்தவனை கண்டும் கோபமே அவருக்கு.
“இப்படி நீ அமைதியா இருந்தா.. காலத்துக்கும் நீ தனியா.. அவங்களுக்கு சம்பாருச்சு கொடுக்கற ஏடிஎம் மிஷின் மட்டும் தான்னு முடிவே பண்ணிடுவாங்கடா..
ஒழுங்கா நா சொல்றத கேளு. நா பார்க்கற பொண்ணை கட்டிக்கிட்டு உன் வாழ்க்கைய சந்தோஷமா வாழப்பாரு..” என்று அக்கறையோடு சொல்ல,
அமைதியாய் இருந்தவன் சில நொடி கழித்து, “நான் வாழ்ற நரகத்துல.. புதுசா ஒரு அப்பாவி ஜீவனையும் சேர்த்து இழுத்துவிட நான் விரும்பல அண்ணே..” என்று விட்டு எழுந்து வேலை நடக்கும் இடத்திற்கு சென்றவனை கண்டவருக்கு.. அவனை பெற்றவர் மீது அவ்வளவு கோபம் எழுந்தது.
“நா உன்ற அப்பனான்னே சந்தேகமா இருக்கு..! உன்ற ஆத்தா நெசமாலுமே எனக்குதா உன்னய பெத்தாளான்னு யாருக்கு தெரிய்யு..?” என்ற வார்த்தையை நிஜமாக்கிடக்கூடாதே.. என்ற ஒரே காரணத்திற்காக, இன்று வரை அவரை “அப்பா..” என்று அழைத்து,
அவரின் குடும்பத்தேவைக்கு.. மாடாய் உழைத்து பணத்தை அனுப்புவனுக்கு.. என்று தான் விடிவு காலம் வருமோ..? என்ற அவரின் வேண்டுதல்.. அந்த வானத்து தேவதைகளின் காதில் சென்று சேர்ந்தது போல..!!
விரைவில் அவனை, ‘கவலை..’ என்ற சொல்லை அண்டவிடாமல்.. அவனுக்கு மனவேதனையை தந்தவரை ஆட்டிப்படைக்க போகிறவள் முன்.. தானாய் போய் நிற்க போகிறான் தீனதயாளன்.
அவளின் வருகை அவனின் ஆழ்மனத் தேடலை பூர்த்தியாக்கி.. அவனை அன்னையாய் மடி தாங்கி அவனின் அனைத்துமாகி போவாள்.. என்பதை அவன் உணரும் காலமும் வந்திடுமோ அப்போதே..?!
விழியின் அந்த தேடலும்
அலையும் உந்தன் நெஞ்சமும்
புாிந்தாலே போதுமே
ஏழு ஜென்மம் தாங்குவேன்..
அனல் மேலே வாழ்கிறாய்
நதி போலே பாய்கிறாய்
ஒரு காரணம் இல்லையே
மீசை வைத்த பிள்ளையே..
error: Content is protected !!