தென்றலாய் என் காதல் – 12
தென்றல் – 12
“ஆதவ் ஏன் ரஞ்சிதாவிடம் இத்தனை நெருக்கம் காட்டுகிறான்”.
Advertisement
“அவன் எதற்காக வீட்டுக்கு அனுப்பினோம்,ஆனால் என்ன செய்துக்கொண்டு இருக்கிறான்”.
“எதற்கு தேங்க்ஸ் இருவரும் மாறி மாறி சொல்லிக்கொள்கின்றனர்” என்று அவன் பல விதமாக யோசித்து கொண்டு இருந்தான்.
Advertisement
“எக்ஸ்கியூஸ்மீ சார் மே ஐ கம் இன்” என்றான் ஆதவ்.
Advertisement
“எஸ்” என்றான் விக்ரம்.
“சார் இதோ நீங்க கேட்ட ஃபைல் என்று விக்ரமின் முன் நீட்டினான்” ஆதவ்.
அதை கையில் வாங்கியவன் ஆதவை முறைத்துக்கொண்டே அதை தூக்கி கோபத்தோடு எறிந்தான்.
Advertisement
ஆதவ் புரியாமல் “பாஸ் என்ன ஆச்சு” என்றான்.
“என்ன ஆதவ்” என்று எரிக்கும் பார்வையோடு “எப்போ வர சொன்னா நீ எப்போ வர?”
“கொஞ்சம் ஆச்சும் பஞ்சுவேலிட்டி இருக்கா”.
“இந்த ப்ராஜெக்ட் நான் பண்ணப் போறது இல்லை. போ எல்லாத்தையும் எடுத்துக்கிட்டு” என்றான் விக்ரம்.
“சார் ஆனா ப்ராஜெக்ட் முடிக்க இன்னும் நிறைய டைம் இருக்கே” என்றான்.
அதை கேட்டதும் தன் இருக்கையை விட்டு எழுந்தவன்.
“ஓ…. அப்படிங்களா சார். அப்போ இங்க வாங்க வந்து இந்த சீட்ல நீங்க உக்காருங்க வாங்க” என்றான் விக்ரம்.
“சாரி சார்” என்று தலையை கவிழ்த்தி நின்றான்.
“எனக்கு என்ன பண்ணனும் என்ன பண்ணக்கூடாதுனு நீ சொல்லி தராத.
கொஞ்சம் விட்டா போதுமே” “தலைக்கு மேல ஏறிடுவீங்க”.
“எல்லாம் என்ன சொல்லனும். யார் யாரை எங்க நிறுத்தணுமோ அங்க நிறுத்தணும்.
இல்லைனா இப்படி தான் அவங்க இடம் எதுன்னு தெரியாம இப்படி அட்வாண்டேஜ் எடுத்துக்கிட்டு பிஹேவ் பண்ணுவாங்க”
என்றான் விக்ரம்.
ஆதவிற்கு அவன் கூறிய வார்த்தைகள் யாவும் அவன் மனதில் ஈட்டியாய் இறங்கின.
“இங்க பாரு ஆதவ், வீட்டுக்கு போனமா கொடுத்த வேலையை பார்த்தோம்மானு இருக்கணும் புரியுதா”.
“போ ஆதவ் இங்க இருந்து” என்று அவன் மீது எரிந்து விழுந்தான் விக்ரம்.
ஆதவ் அடுத்த நொடி அங்கிருந்து சென்று இருந்தான்.
தன்னவளிடம் பேசி சிரித்து விட்டானே என்ற கோபம் தான் விக்ரமின் இந்த செயலுக்கு காரணம் இது அவனுக்கே தெரியாது.
அவள் குரலை கேட்க வேண்டுமாய் தோன்றியது.
அவன் உள்ளம் அவளுக்கு அழைக்கச்சொல்லி மன்றாடியாது.
ஆனால் எப்படி அழைப்பது என்று தெரியாமல் கையில் தன் அலைபேசியை வைத்து சுழற்றிக் கொண்டு இருந்தான்.
அவன் அலைப்பேசி திடீர் என்று ஒலித்தது.
யார் என்று பார்க்க தொடு திரை ரஞ்சிதா என்ற பெயரில் ஒளிர்ந்தது.
ஆம், சிந்துவின் எண்ணை ரஞ்சிதா என்று தான் சேமித்து வைத்து இருக்கிறான் விக்ரம்.
அவள் அழைத்ததும் இன்ப அதிர்ச்சியில் செய்வதரியாது திக்குமுக்காடினான். ஆனாலும் தன்னை இயல்பு நிலைக்கு மாற்றிக்கொண்டு
ஹுக்கும்…என்று குரலை செருமி அழைப்பை ஏற்றான் விக்ரம்.
“ஹலோ…. சார்” என்றாள் அமுதூறும் அந்த தேன் குரலில்.
“சொல்லுங்க ரஞ்சிதா?”என்றான் சற்றே மென்மையான குரலில்.
“அம்மாவுக்கு மெடிசின் தீர்ந்து போச்சு. வரும்போது வாங்கிட்டு வரிங்களா” என்றாள் கனிவாய்.
“ஹ்ம்ம்.. சரி” என்றவுடன் அழைப்பை துண்டிக்கப் போனாள் சிந்து.
ஆனால் அவன் அடுத்த வார்த்தையாய் “அம்மா சாப்டாங்களா?”என்றான்.
“ஹ்ம்ம்…சாப்பிட்டாங்க சார்”என்றாள்.
சரி என்றான்.
“ஹ்ம்ம்…அப்போ வச்சிரவா” என்றாள்.
“ஹ்ம்ம்…”என்றான். அடுத்த நொடி அழைப்பு துண்டிக்கப்பட்ட ஓசை கேட்க, “ரொம்ப நல்ல பொண்ணு. அளவா பேசுறாங்க” என்று மெச்சினான்.
“இப்படி தான் பொண்ணுங்கனா அமைதியா அடக்கம் ஒடுக்காம குனிந்த தலை நிமிராமல் இருக்கனும்” என்று இதழின் ஓரமாய் புன்னகைத்தான் விக்ரம்.
அவன் நினைவில் அந்த வாயாடிப் பெண் மீண்டும் குறுக்கிட்டாள்.
“இப்ச்…ச்ச…அவளை எல்லாம் எவன் கட்டிக்கிட்டு அவஸ்த்தைப்பட போறானோ தெரியல” என்றான்.
“ஐயோ…. என்ன ஆச்சு சிந்து. ஏன் இப்படி இரும்புகிறாய்?”
தெரியவில்லை கீதா…க்கா. பொறை ஏறிடுச்சு”என்று மீண்டும் இரும்பினாள்.
“யாரோ நினைக்குறாங்க போலே இருக்கு சிந்து. இந்தா இந்த தண்ணியை குடி” என்று தலையில் தட்டி விட்டார் கீதா.
திட்டினாலும் விக்ரம் நினைப்பது என்னவோ சிந்துவைத்தானே.
நேரம் சிறுக சிறுக கடந்து கொண்டு இருந்தது.
சூரியன் மெல்ல அஸ்தமித்துக்கொண்டு இருந்தது.
அலுவலகம் முடிந்து அனைவரும் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தனர்.
விக்ரமின் பேச்சு ஆதவின் மனதை மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கியிருந்தது.
மனச்சோர்வுடன் தன் இருக்கையில் சாய்ந்தப்படி விட்டத்தைப் பார்த்து அண்ணார்ந்து ஆலோசனையாய் அமர்ந்து இருந்தான் ஆதவ்.
“என்ன ஆதவ் நீ இன்னும் வீட்டுக்கு கிளம்பலையா” என்றனர் சக வேலையாட்கள்.
“இல்லை கொஞ்சம் ஒர்க் பெண்டிங் இருக்கு சோ அதான் நீங்க போங்க” என்றான் சமாளிக்கும் விதமாக.
“ஹ்ம்ம் ஓகே” என்று அவர்களும் பேசிக்கொண்டே சென்றனர்.
“என்ன தான் நாம சாருக்கு உண்மையாகவும்,அன்பாகவும் இருந்தாலும் அவர் நம்மை வேலைக்காரனாத் தான் பார்க்குறாரு”. “நான் தான் அவர என் சொந்த அண்ணனைப் போல் நினைச்சு இருக்கோம்”.
“அவர் முதலாளி நான்?ஹ்ம்ம்…”என்று விரக்தியாய் சிரித்து விட்டு “நான் எல்லாம் போய் அவர் மேல உரிமை எடுத்துக்கலாமா” என்று பெருமூச்சு விட்டான் ஆதவ்.
கண்களை மூடினான்.அவன் கண்களில் இருந்து ஒருத்துளி நீர் கசிந்தது.
அவன் விழித்திரையில் இதோ அவள் தோன்றி மறைந்தாள்.
அவன் இதழ் புன்னகைத்தது.அவன் கண்களில் வழிந்த நீர் உளர்ந்தது.
“சிந்து” என்று கண்களைத் திறந்தான்.
அவள் தன்னை தொட்டுத் தள்ளி காப்பாற்றியது அவன் நினைவில் காட்சியாய் தோன்றி மறைந்தது.
‘நீண்டு அகன்ற அவள் இரு புருவங்கள்’.
‘அகன்ற பிறை நெற்றியில் சிறிய வட்ட வடிவிலான கருப்புப் பொட்டு’.
‘கூறான மூக்கில் ஒற்றைக் கல் மூக்குத்தி’
‘அடர்த்தி குறைந்து மெல்லிய தாமரை இதழ்களின் மெழுகு போன்ற பலபலப்புடன் அவள் செவ்வாய்’.
‘அடிக்கடி சிரிக்கும் போது தெரியும் ஒரு பல்லின் விலகல்’
அத்தனைக்கும் மேலாக நீரின்றி வாழும் மீன்கள் என அவள் கண்கள்’ அவள் அழகை சொல்ல வார்த்தைகள் ஏது?
அவன் மனம் வர்ணித்தும், ரசித்து கொண்டும் இருந்து.
“ரொம்ப அழகா இருக்காங்க. ரொம்ப நல்லப்பொண்ணு”என்று தானக்குள்ளே அவளைப்பற்றி கூறிக்கொண்டான்.
“ஹே…ஆதவ். என்ன மணி ஆறு ஆகுது. ஏன் இன்னும் நீ வீட்டுக்கு கிளம்பலையா” என்றான் விக்ரம்.
“போகணும் சார். இதோ கிளம்பிட்டேன்” என்று தன் பைக் சாவியை எடுத்தான் ஆதவ்.
“ஏன் ஆதவ் பைக். நாம கார்லயே போகலாம்” என்றான் விக்ரம்.
“வேண்டாம் சார் நான் பைக்ல போகிறேன்” என்றான் ஆதவ்.
“அப்பறம் உன் விருப்பம்” என்றவன் தன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
அவன் பின்னே கிளம்பிச்சென்றான் ஆதவ் .
என்ன தான் அவனிடம் வேலை செய்தாலும் தன்மானம் என்பது மிக அவசியமான ஒன்று அல்லவா.
காரில் சற்று மெல்லிய ஒலியில் இளையராஜா பாடலுடன் நெடுஞ்சாலையில் பயணித்தான் விக்ரம் .
மாலை நேரம் என்பதால் கதிரவன் ஓய்வெடுக்க புறப்பட்டுக் கொண்டு இருந்தான்.
அவன் செங்கதீர்களினால் அடர் தங்க மஞ்சள் நிறத்தை பூமியின் கோப்பைகள் எங்கிலும் நிரப்பிக்கொண்டு இருந்தான்.
அந்த அழகிய மாலைப்பொழுதில் மலர் உதிரும் சாலையில் தன் ஸ்கூட்டியில் தேவதையாய் வந்தாள் ரஞ்சிதா.
ஏதேர்ச்சியாக திரும்பிய விக்ரம் கண்களில் விழுந்தாள் ரஞ்சி.காரை சட்டர்ன் பிரேக்ப் பொட்டு நிறுத்தினான் விக்ரம்.
நெடுஞ்சாலை மரங்களில் கொன்றை மலர்கள் சிகப்பு தீ போல் காட்சி அளித்தது அந்த அழகான அந்தியில்.
அவை யாவும் காற்றில் உதிர அந்த மலர்களின் தூவல்களுக்கு இடையே மலரவள் வந்தாள்.
அவன் விழித்திரைகள் ரஞ்சிதாவை படம் எடுத்துக்கொண்டது.
தன் வீட்டில் இருந்து தான் அவள் வீட்டிற்கு திரும்புகிறாள் என்று நினைத்தான் விக்ரம்.
அவளை அழைத்து பேசவே மனம் ஏங்கியது. என்றாலும் அவளுடன் இப்போது நெருக்கம் காட்ட வேண்டாம்.
“அவள் யார்? அவள் முழுமையான குணம் என்ன?”என்று முழுவதுமாக தெரிந்துக்கொள்வோம்.
பின் அனைத்தையும் பார்த்துக்கொள்ளலாம் என்று அமைதிகாத்தான் விக்ரம். அவள் சாலையின் இறுதி வளைவு வரை சென்று திரும்பினாள்.
அவள் சென்றதும் அங்கு அவனுக்கு என்ன வேலை.
அவன் தன் காரை எடுத்து புறப்பட்டான்.
சாலையின் வளைவில் ரஞ்சிதாவிற்காக காத்து இருந்தாள் சிந்து.
சிந்துவை கண்டதும் “ஹாய் டி…”என்றாள் ரஞ்சி.
“என்ன டி? ஏன் இவ்ளோ நேரம்?
நான் எவ்ளோ நேரமா இங்க உனக்காக வெயிட் பண்றேன் தெரியுமா?”என்றாள் சிந்து.
“சாரி டி சிந்து. இன்னைக்கு கொஞ்சம் ஆபீஸ்ல அதிக வேலை. அதான் முடிச்சிட்டு வர கொஞ்சம் நேரம் ஆயிடுச்சு” என்றாள் ரஞ்சிதா.
“ஹ்ம்ம்…சரி சரி…சீக்கிரம் வண்டியை எடு பசிக்குது” என்றாள் சிந்து.
“ஹ்ம்ம்…இதோ ஒரு பைவ் மினிட்ஸ்” என்று விரைந்து ஓட்டினாள் ரஞ்சிதா.
ஒரு கனம் விக்ரம் திரும்பி இருந்தாள் சிந்துவை பார்த்து இருக்கலாம்.
ரஞ்சிதாவிற்கும், சிந்துவிற்கும் என்ன சம்மந்தம் என்றாவது சந்தேகம் எழுந்துயிருக்கும்.
இரு தோழிகள் வாழ்வில் இனி என்ன என்ன விபரீதங்கள் எல்லாம் நடக்கப்போகிறதோ என்று தெரியவில்லை.
வீட்டை அடைந்தான் விக்ரம்.
கீதா என் ரூமுக்கு ஒரு காஃபி எடுத்துட்டு வாங்க என்றவன் தன் அறைக்கு சென்றான்.
“ஹ்ம்ம்…சரிங்க தம்பி” என்றவர் சில வினாடிகளில் காஃபியை தயார் செய்து விக்ரமின் அறைக்கதவை தட்டினார்.
“எஸ் உள்ள வாங்க கீதா” என்றான் விக்ரம்.
கீதா உள்ளே வந்து விக்ரமின் கையில் காஃபியை கொடுத்தார்.
அதை வாங்கி பருகியவன் தன் மடி கணினியில் வேலைப்பார்த்துக்கொண்டே “அம்மா சாப்டாங்களா?”என்று விசாரித்தான்.
“ஹ்ம்ம்…சாப்பிட்டாங்க தம்பி”.
“செத்த முன்ன வந்து இருக்கக்கூடாதா?
இப்போ தான் அந்த பொண்ணு சிந்து வீட்டுக்கு போச்சு.
பாருங்க இன்னைக்கும் உங்களால அந்த பொண்ணு சிந்துவை பார்க்கமுடியவில்லை”என்றார் கீதா.
மெல்லியதாய் புன்னகைத்தான்.
ஆனால் இவர் ஏன் மீண்டும் மீண்டும் சிந்து சிந்து என்ற பெயரிலேயே ரஞ்சிதாவை அழைக்கிறார்.
அன்று ஏதோ வந்த புதியதில் பெயரை நினைவு வைத்துக்கொண்டு இருக்க மாட்டார் என்று நினைத்தேன் . ஆனால் இதுவரை பெயர் கூடவா தெரியாமல் போகும்இவருக்கு என்ற சந்தேகம் விக்ரமின் மனதில் எழுந்தது.
மீண்டும் தென்றல் வீசும்…..

