தென்றலாய் என் காதல் – 13


தென்றல் – 13
சந்தேகத்துடன் “கீதா, அந்த பொண்ணு பேர் என்ன சொன்னிங்க?” என்றான் விக்ரம்.
“என்ன தம்பி நீங்க? இப்போ தானே சொன்னேன்.
Advertisement
வர வர உங்களுக்கு நியாபக மறதி அதிகம் ஆயிடுச்சு போல இருக்கு” என்று சிரித்தார்.
“இப்ச்…. என்ன கேட்டேனோ அதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. ஏன் இன்னொரு வாட்டி கேட்டா சொல்லமாட்டீங்களா?”என்றான் கோபமாக.
“மன்னிச்சிருங்க தம்பி.
Advertisement
அந்த பொண்ணுப்பேரு சிந்து” என்று விட்டு அடக்களைக்குள் சென்றார் கீதா.
Advertisement
இம்முறை விக்ரம் இதை விடுவதாய் இல்லை.
அவளைத் தேடிப் போக ஆயத்தம் ஆனான்.
“தம்பி இந்த நேரத்துல எங்க போறீங்க?”
Advertisement
“இப்ச்…”என்றவன் பதில் எதுவும் கூறாமல் சென்றான்.
கீதா வருத்ததோடு வாசலைப் பார்த்து நின்றார்.
கீதா நீண்ட காலமாக இங்கே தான் வேலைப் பார்க்கிறார்.
விக்ரமை தன் சொந்த மகனாய் தான் நினைத்துக் கொண்டு இருக்கிறார்.
அதனால் தான் விக்ரம் தன்னை எத்தனை காயப்படுத்தினாலும் கீதா எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்கிறார்.
“ஓய்…. சிந்து என்ன டி வேலை எல்லாம் எப்படி இருக்கு” என்றாள் ரஞ்சிதா.
“ஹ்ம்ம்…எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு ரஞ்சி. சுசிலா அம்மா இப்போ என் கிட்ட ரொம்ப நல்லாப் பழகுறாங்க.
எனக்கு அவங்களை ரொம்ப பிடிச்சு இருக்கு ரஞ்சி.
குழந்தை மாதிரி டி அவங்க.
எவ்ளோ ஸ்வீட் தெரியுமா?”என்றாள் சிந்து.
“சரி சரி போதும் உன் சுசிலா அம்மா புராணம் வா தூங்கலாம். ஆல்ரெடி லேட்” என்று கூறினாள் ரஞ்சிதா.
“போடி,எனக்கு தூக்கமே வரமாட்டேங்குது” என்றாள் சிந்து.
“ஏன்….மா என்ன ஆச்சு? ஒரு வயசு பொண்ணு அதுவும் கல்யாணம் ஆகாத அழகான பொண்ணுக்கு தூக்கம் வரலைன்னு சொன்னா என்ன அர்த்தம்” என்று வார்த்தையை இழுத்து கூறியப்படி வம்பு செய்தாள் ரஞ்சிதா.
இப்ச்….என்று விட்டு பெருமூச்சு விட்டு சலிப்புடன் “தெரியல டி” என்றாள் சிந்து.
ஓ…. என்ற இழுவையோடு, எனக்கு தெரியுமே” என்றாள் ரஞ்சி.
“உனக்குத் தெரியுமா?
சரி சொல்லு ஏன்?”
“ஏன்னா…உனக்கு நோய் வந்துருச்சு” என்றாள்.
“அடியே என்னடி சொல்ற?
கொரானாவா?”
“ஐயோ…என் குடும்பம், தங்கச்சி படிப்பு என் கனவு ஐயோ கடவுளே நான் என்ன பண்ணுவேன்” என்று அழ,
“சீ வாயமூடு டி” என்றாள் ரஞ்சிதா.
வாயை மூடிக்கொண்டும் அழுதாள்.
“ஐயோ…. லூசு…உனக்கு கொரானாவும் இல்ல ஒன்னும் இல்ல”என்றாள்.
“அப்போ என்ன” என்று கேட்க
“வா…பக்கத்துல” என்று ஏதோ ரகசியம் கூறப்போவதுப் போல் அமர்த்திக்கொண்டு,
“அது…அது..வந்து காதல் நோய்”என்றாள் ரஞ்சிதா.
ரஞ்சிதாவை தள்ளிவிட்டு “எதே…. போவியா”
“காதலாவது கத்தரிக்காயாவது,
அவ அவளுக்கு ஆயிரத்தெட்டுப் பிரச்சனை
இதுல காதல் ஒன்னு தான் கேடு” என்றாள் சிந்து.
“இங்க பாரு சிந்து, நீ என்ன தான் வேண்டாம் வேண்டாம் என்று விலகினாலும், வெறுத்தாலும் காதல் உன்னை வந்தடைந்தே தீரும்.
ஏன் என்றால் காதல் காற்றைப் போன்றது”என்றாள்.
“அடச்சை…. சும்மா எதையாவது உலராதே டி ரஞ்சி.
என் வாழ்க்கையில் எந்த ஆணுக்கும் இடம் இல்லை.
அது உனக்கே நன்குத் தெரிந்த ஒன்று.
பின் எதுக்கு டி இப்படி எல்லாம் பேசுற?” என்று முகத்தை திருப்பிக்கொண்டாள் சிந்து.
“எனக்குப் புரியுது சிந்து. ஆனா இப்படியே எத்தனை நாளைக்குத் தான் இருப்ப சொல்லு.
உனக்குன்னு ஒரு வாழ்க்கை வேண்டாமா? உனக்குன்னு ஒரு குழந்தை குடும்பம் வேண்டாமா சிந்து”.
“நீயும் மற்றவர்களைப்போல சந்தோசமாக வாழ வேண்டும் என்று எனக்கு ஆசை இருக்காதா” என்றாள் ரஞ்சிதா.
“வலியோடுப் புன்னகைத்து எனக்கா! வாழ்க்கையா! அடிப் போடி பைத்தியமே”.
“நான் இன்னும் நடமாடிக்கொண்டு இருக்கிறேன் அவளவு தான்.
மற்றப்படி என்றோ இறந்துவிட்டேன்”.
“என்னால் என் குடும்பமாவது சந்தோசமாக வாழட்டும்” என்று படுக்கையில் கவிழ்ந்துந்தாள் சிந்து.
அவளை வருத்ததோடு பார்த்து “ஹ்ம்ம்…என்னைக்கு தான் இவ பழைய சிந்துவா மாறப்போறாளோ?” என்று பெருமூச்சு விட்டு காற்றில் அசையும் ஜன்னலை திரையை சரி செய்து விட்டு ஜன்னலை அடைத்தாள் ரஞ்சிதா.
கீழே காரில் அமர்ந்து வீட்டை நோட்டமிட்டான் விக்ரமின்.
ரஞ்சிதாவைக் கண்டதும் இதழ் தானாக விரிந்தது.
“ச்ச…தேவையில்லாமல் நாம தான் சந்தேகப்பட்டுட்டோம்” என்று மன அமைதியுடன் வீடு திரும்பினான் விக்கரம்.
ரஞ்சிதா விக்ரமின் காரை கவனிக்காமல் இல்லை.
உறங்கும் சிந்துவை திரும்பிப் பார்த்தாள்.
“ஒரு வேளை விக்ரம்” என்று சந்தேகத்தோடு ஆலோசித்தவாரு தானும் அவள் அருகே வந்து படுத்துக்கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவளும் உறங்கிப்போனாள்.
“வேண்டாம்…வேண்டாம்…என்ன விட்டுருங்க ப்ளீஸ்”.
“ஐயோ!”
“யாராச்சும் என்ன காப்பாத்துங்க. இங்க யாரும் இல்லையா?
யாராச்சும் வாங்களேன்.
என்ன விட்ருங்க…என்ன விட்ருங்க” என்று உறக்கத்தில் அலறினாள் சிந்து.
அவள் இட்ட சப்த்ததில் ரஞ்சிதாவின் உறக்கம் கலைந்தது.
“ஏய்…சிந்து” என்று அவளை கட்டிக்கொண்டு “ஒன்னும் இல்ல டி நான் இருக்கேன். காம்டௌன், காம்டௌன்” என்று அவள் முதுகை ஆதரவாக வருடினாள் ரஞ்சிதா.
சிந்துவின் இதயம் படபடத்தது.
“ஒன்னும் இல்லடா எல்லாம் கனவு” என்றாள் ரஞ்சிதா.
“இல்ல…இல்ல ரஞ்சி…எல்லாம் உண்மை. என் கசப்பான உண்மை.
நான் எதை மறக்க இத்தனை வருடங்களாகப் போராடுகிறேனோ அதுவே தினம் தினம் இரவில் என்னை இப்படி தூங்கவிடாமல்ச் செய்கிறது”.
“நான் இரவில் நிம்மதியாகத் தூங்கி பல வருடம் ஆகிறது” என்று பெருமூச்சு விட்டு சரி நீ போய் தூங்கு டி ரஞ்சி என்றாள்.
“அப்போ நீ?
நான் கொஞ்சம் காத்தாட வெளியே போயிட்டு வறேன்” என்றாள் சிந்து.
‘ஏய்…என்ன சொல்ற இந்த நேரத்திலா?
மணி என்ன ஆகுது தெரியுமா?” ஆ…என்று கொட்டாவி விட்டு வாயை பிளந்தாள் ரஞ்சி.
“இப்ச்…அதனால என்னடி.
சொல்லப்போனால் இந்த இரவு எவ்ளோ அமைதியானது தெரியுமா?”
“அனைவரும் நித்திரைக் கொள்ளும் நேரம், நிலவும் நக்ஷத்திரங்களும் வானில் கதைப்பேசிக் கொண்டு இருக்கும்”.
ஹ்ம்ம்…அப்பறம்
“பூக்களும் வெண் பனிக்காற்றும் ஊடல்க்கொள்ள, அதை கண்டு வண்ணப்பறவைகள் எல்லாம் தன் கூட்டில் துணைக்குருவியுடன் கூடல்க்கொள்ளும் இந்த அற்புதமான இரவு என்றும் எனக்கு இனிமையானது தான்” என்றாள் சிந்து.
“யாருடா.. இவ” என்று தலையை சொரிந்தாள்.
“சரிப் போய்த் தொலை.
ஆனா ஒன்னு ரொம்ப தூரம் போகக் கூடாது” என்றாள் ரஞ்சி.
“ஹ்ம்ம்…ஓகே ப்ரோமிஸ் ரஞ்சி” என்றவள் “போயிட்டு வறேன்” என்று அறையை விட்டு வெளியேறினாள்.
“அடியே கேட்டை மெதுவா திற, வீட்டுக்காரப் பொம்பளைக்கு தெரிஞ்சா காலையில் நமக்கு சுப்ரபாதம் தான்” என்றாள்.
“ஹான் சரி டி நான் கேட்டையே திறக்க மாட்டேன் போதுமா?”என்றாள் “ஹஸ்கி வாய்ஸ்சில்.
ஹ்ம்ம்.. டேக் கேர்” என்றவள் “ஆலோசனையாய் கேட்டைத் திறக்கமாட்டாலாம்…அப்பறம் எப்படி போவா???? “
“அவ தான் சூப்பர் விமேன் ஆச்சே ஏதாவது தகீடு தத்தம் பண்ணி போய்டுவா நம்ம தூங்குவோம்” என்றப்படி மீண்டும் படுக்கையில் விழுந்தாள் ரஞ்சி.
ரஞ்சி வசிக்கும் வீட்டின் உரிமையாளர் மிகவும் கண்டிப்பானவர்.
சொல்லப்போனால் அக்கறையானவர். யாரோ பெற்ற பிள்ளைகள் தானே என்று எல்லாம் சுயநலமாய் இருக்கமாட்டார்.
தன் வீட்டு பிள்ளைகளைப் போலே மிகுந்த சிறதையுடன் பார்த்துக்கொள்பவர். மெல்ல சத்தமின்றி மாடிப் படியில் கீழே இறங்கினாள் சிந்து.
“ஆத்தாடி…. இதை நாம மறந்துட்டோம்” என்று கால்கள் நடுங்க நின்று இருந்தாள்.
“சீசர்ரோ” அவளை வெறிப்பிடித்ததை அவளைப் பார்த்தது.
அது ஒரு வெளிநாட்டு வகை நாய். அது சிந்துவை விட பெரியதாய் இருந்தது.
“ஐயோ பாக்குறானே! பாக்குறானே! நான் என்ன பண்ணுவேன்”.
“பேசாம மேலப் போய்டலாமா” என்று இரண்டு படிகட்டுக்கள் ஏற அது லொள் லொள் என்று குறைக்க ஆரம்பித்தது.
“அடேய்…குலைக்காத டா. குந்தாணிக் கிழவி எழுந்தா என்னால சம்மாலிக்க முடியாது”என்று அடக்கப்பட்ட குரலில் அந்த நாயோடு பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருந்தாள்.
அது சற்று அமைதியானது.
“அப்பாடா…குட் சீசர்” என்று பாராட்டி விட்டு மதில் சுவற்றை ஏற மீண்டும் குலைக்க துவங்கியது.
“அட சண்டால, இனி வேற வழி இல்ல குதிச்சிர வேண்டியது தான்”என்று விட்டு “அங்காளபரமேஸ்வரி தாயே இந்த அபலையை காப்பாற்று” என்று குதித்தாள் சிந்து.
“அப்பா தப்பிச்சோம்” என்று நெஞ்சில் கை வைத்து பெருமூச்சு விட்டவள் “நாயைப் பார்த்து திரும்பி அடிங்க…”என்றாள்.
அது சிந்துவை முறைக்கப் பார்த்தது.
“என்ன மொறைக்குற முகத்திலேயே குத்திவிடுவேன்.பாவம் வரும்போது ஏதாவது பிஸ்கெட் வாங்கி போடலாம்னு நினச்சேன். ஆனா என்னையே பார்த்து கொலைக்குற நில்லு வரும்போது வெடி வாங்கிட்டு வந்து உன் வாலுல கட்டி வெடிக்க வைக்குறேன்” என்றாள்.
அது மிகுந்த கோபத்துடன் அவளை பார்த்து குலைக்க அவள் அதை பார்த்து “வவ்.. வவ்..” என்று பழித்தாள்.
எதிரே நின்று இருந்தான் ஆதவ்.
“சார்…நீங்களா?”
“நீங்க இங்க எப்படி?”
“அதை நான் கேக்கணும், இது என் வீடு” என்றான்.
‘ஹே…ன்…’என்று வாயைப் பிளந்தாள்.
“இப்போ எதுக்கு இப்படி வாயை திறக்குற?கொசு போய்ட போகுது வாயை மூடு” என்றான்.
“ஆஆ…ப்…”என்று வாயை அடைத்துக்கொண்டாள்.
“இ…இ.. இது உங்க விடுங்களா சார்…?”என்று அசடு வழிய
ஒற்றை புருவத்தை உயர்த்தி…ஆமாம். அது மட்டும் இல்ல. அந்த குந்தாணி ஹவுஸ் ஓனர் என் அம்மா தான்”என்றான் ஆதவ்.
“ஐயோ…இப்படி வசமா மாட்டிக்கிட்டேனே” என்றவள்…ஆயுதத்தை கையில் எடுத்தாள்.
“ஐயோ…. சார்…என்ன மன்னிச்சிருங்க” என்றபடி ஓ…வென அழத்துவங்கினாள்.
“ஹே…ஹே…இப்போ ஏன் அழற?”
“யாராச்சும் பார்க்க போறாங்க”. “அதுவும் வெளிய நின்னுட்டு யாராவதுப் பார்த்தாள் என்ன தான் தப்பா நினைப்பாங்க” என்று பதறினான்.
ஆனால் அவள் கேட்பதாய் இல்லை.
“இல்லை சார்…நான் இருந்தாலும் உங்க அம்மாவை குந்தாணின்னு சொல்லி இருக்கக் கூடாது. என்ன மன்னிச்சிருக்கிங்க” என்று அழ
“அம்மா தாயே கொஞ்சம் அழகுறதை நிப்பாட்டு மா. நான் மன்னிச்சுட்டேன் போதுமா” என்றான் ஆதவ்.
“அப்பாடி பிளான் சக்ஸஸ்” என்று எண்ணிக்கொண்டு கண்களை துடைத்துக் கொண்டாள்.
ஷ்….. என்று பெருமூச்சு விட்டவன் “கொஞ்ச நேரத்துல என்னைய ஒரு வழி படுத்திட்டியே’ என்றான் ஆதவ்.
கள்ளப் பார்வை பார்த்தவள் மெல்ல சிரித்தாள்.
அதை அவன் கவனித்தும் விட்டான்.
“ஹ்ம்ம்…அது சரி. சரியான வாலு தான் நீ” என்று அவனும் புன்னகைத்தான்.
“சரி எங்க இந்த நேரத்துல சுவர் எல்லாம் ஏறிக்குதித்து சாகசம் எல்லாம் பண்ணிட்டு இருக்க?
தூக்கம் வரலையா?” என்றான் ஆதவ்.
“ஹ்ம்ம்….. ஆமாம் சார். அதான் காலார நடந்துட்டு வரலாம்னு.
அது சரி இந்த நேரத்துல தனியாவா?”என்றான்.
“ஹ்ம்ம்…ஆமாம்” என்றாள்.
“என்ன பேசறீங்க நீங்க?”
“இந்த காலத்துல சமூகம் எப்படி கெட்டு இருக்கு. இப்படி ஒரு பொண்ணு தனியா வரீங்களே?
யாராவது ஏதாவது?” என்று கூறி முடிக்கும் முன்பே
“போதும் நிறுத்துங்க சார்” என்று கத்தினாள்.
தென்றல் மீண்டும் வீசும்….
