தென்றலாய் என் காதல் – 17
தென்றல் – 17
சிந்துவின் அலறளால் அந்த இடமே அதிர்ந்து அடங்கியது. சுசிலா அம்மாவும் விழித்துக்கொண்டார்.
விக்ரமிற்கு கோபம் தான் வந்தது.
Advertisement
படியில் இறங்கி சென்றவன் அவள் மீது அளவு கடந்த கோபத்தோடு திரும்பி வந்தான்.
அவளை ஆக்ரோசத்தோடு பார்த்தவன்
“ஏய் ஏன் இப்படி கத்துற? படிச்ச பொண்ணு தானே நீ இப்படி தான் பிஹேவ் பண்ணுவியா?”என்று திட்டினான் விக்ரம்.
Advertisement
அவளுக்கு இன்னும் அதிர்ச்சியே அடங்கவில்லை.
Advertisement
ரஞ்சிதாவிற்கு சிந்துவின் நிலைமை நன்கு புரிந்தது.
ஓடி சென்று அவளை அணைத்து சமாதாப்படுத்தினாள்.
“ரஞ்சிதா அவங்க பண்றதுக்கு எல்லாம் நீங்க சப்போர்ட் பண்ணாதீங்க.மொதல்ல இங்க இருந்து போக சொல்லுங்க. என்னவோ தெரியல இந்த பொண்ண பார்த்தலே எனக்கு பிடிக்கலை ரொம்ப கர்வம் பிடிச்ச பொண்ணு” என்றான்.
Advertisement
சிந்துவிற்கு மனம் வருத்தம் அடைந்தது.
இனி இங்கே இருந்தாள் மேலும் அவமானப்பட கூடும் என்று நினைத்தவள் எதுவும் பேசாமல் அவன் வீட்டை விட்டு வெளியேறினாள்.
விக்ரமை கடக்கையில் அவனை வலிக்கொண்ட பார்வை ஒன்றை பார்த்து கடந்தாள்.
அவன் மனம் என்னவோ செய்தது. இனம் புரியா அந்த வலி ஏன் என்று அவனுக்கு புடிப்படவில்லை.
ரஞ்சிதா அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க என்றவன் அவள் பின்னே சென்றான்.
தன் பின்னே வரும் விக்ரமை அவள் கவனிக்கவில்லை.
“கீதா அவள் அழுத்தபடி போவதை கண்டு ஏய்…சிந்து என்ன ஆச்சு, எங்க போற” என்று கேட்டு கொண்டே பின் தொடற அவள் திரும்பியும் பார்க்காமல் சென்று மறைந்தாள்.
“என்ன ஆச்சு இவளுக்கு நல்லா தானே இருந்தா” என்று குழப்பதுடன் அடக்களைக்குள் புகுந்தார்.
கீதாவின் இந்த செயல் விக்ரமிற்கு ஏதோ ஒரு வித சந்தேகத்தை ஏற்படுத்தியது.
“என்ன எல்லாரும் கொஞ்சம் வித்தியாசமா நடந்துக்கறாங்க” என்று நினைத்தவன் தன் கைக்கடிகாரத்தை பார்த்து ஓ சிட் என்று அவசரமாக அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றான்.
அவன் சென்றதும் சிந்துவை தேடினாள் ரஞ்சிதா.
“சிந்து…சிந்து”என்று அழைத்துக்கொண்டே வர அவள் வெளியே ஒரு மூலையில் அழகுத் செடியின் பின் மறைந்து இருந்தாள்.
“ஏய்…சிந்து இங்க என்ன பண்ற? உள்ள வா சார் போய்ட்டாரு” என்றாள்.
“இல்ல ரஞ்சி. இனி நான் இங்க வேலை செய்ய விரும்பல.
விக்ரம் சாருக்கு என் கிட்ட ஏதாவது பிடிக்கலைனா அதை நான் மாத்திக்குவேன். ஆனா அவருக்கு என்னையே பிடிக்கலை ரஞ்சிதா.
நான் பணத்துக்காக தான் இங்க வேலைக்கு வந்தேன். அதை நான் ஒத்துக்கறேன். ஆனா என் தன்மானத்தை இழந்து தான் இந்த வேலையை நான் பார்க்கணும்னா அப்படிப்பட்ட வேலை எனக்கு தேவை இல்லை ரஞ்சி”.
அப்போ தங்கச்சி படிப்பு என்றாள் கேள்வியாய்.
“எப்படியோ என் தலையை அடமானம் வைத்தாவது என் தங்கச்சியை நான் படிக்க வச்சிருவேன்.
ஆனா இங்க என்னால என் தன்மானத்தை இழந்து ஒரு நிமிஷம் கூட இருக்க மாட்டேன் நான் போறேன் ரஞ்சி” என்று நகர, “அம்மாடி சிந்து” என்று அழைத்தார் வாச்மென்.
அழுகையை அடக்கிக்கொண்டு புன்னகைத்தாள் சிந்து.
“எங்க போற” என்றார் அவர்.
“நான் தோத்துட்டேன் ப்பா…என்னால இந்த வீட்டில் இருக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரியே நடந்துருச்சு. வந்த அன்னைக்கே கேட்டை திறந்து வச்சீங்க அப்போவே நான் போய் இருந்தாள் எனக்கு இத்தனை கஷ்டமும் அவமானமும் வந்து இருக்காது.நான் போயிறேன்” என்றாள் சிந்து.
“என்ன தாயி நீ. விக்ரம் தம்பியைப் பற்றி உனக்கு தெரியாது பாப்பா. அவர் பேச்சு தான் இப்படி ஆனால் மனம் சொக்கத்தங்கம்”.
“ஏதோ கோபத்துல ரெண்டு வார்த்தை அதிகமா பேசிட்டாரு ஆனால் அவர் ரொம்ப நல்லவர் சிந்து”.
“நான் சொல்றதை கேளு”. “அவருக்காக இல்லை என்றாலும் உன் மீது அன்பு வைத்து இருக்கும் சுசிலா அம்மாவின் நிலையை நீ நினைத்து பார்த்தாயா?
அவருக்காகவாவது நீ இங்கே இருக்க வேண்டும் சிந்து” என்றார் வாச்மென்.
“அவர் சொல்றது ரொம்ப சரி” என்றார் அங்கு வந்த கீதா.
“எனக்கு எல்லாம் தெரியும் சிந்து என்று அவள் தோளை ஆதரவாய் அழுத்தினார்”.
சிந்துவும், ரஞ்சிதாவும் ஆச்சரியத்தோடு கீதாவை பார்க்க “என்ன அப்படி பாக்குறீங்க?”
நீ இங்கே வேலைக்கு வந்த அன்று உன் ரெசியுமை நான் பார்த்தேன். அதில் ரஞ்சிதா என்ற பெயருடன் இதோ இவள் புகைப்படத்துடன் இருந்தது.
முதலில் அதிர்ச்சியானேன். பின் உன் குணம் அறிந்த நான் இதைப்பற்றி பெரிதாக பொருட்படுத்தவில்லை.
எனக்கு எப்படியாவது சுசிலா அம்மாவை பார்த்துக்கொள்ள ஒரு நல்ல பெண் வேண்டும் என்று தான் நினைத்தேன்.
“அது சிந்துவாக இருந்தாள் என்ன?
ரஞ்சிதாவாக இருந்தாள் என்ன? நீ எதற்கும் பயப்படாதே சிந்து உனக்காக நான் எப்போதும் இருப்பேன்” என்று சமாதானம் கூறினார்.
“எனக்கும் இது முன்னரே தெரியும் சிந்து” என்றார் கீதா.
அதிர்ச்சியோடு அவரை நோக்கி திரும்பினாள் சிந்து.
“அக்கா….” என்றவள் கையை பிடித்து ஆறுதலாய் அழுத்தினார்.
“எதைப் பற்றியும் யோசிக்காதே உனக்காக நாங்கள் இருக்கிறோம்” என்றார்.
“ஏய்…பின்ன என்னடி சிந்து உனக்கு தயக்கம். வா உள்ளே” என்று அழைத்துச் சென்றாள் ரஞ்சிதா.
சிறு பிள்ளைப் போலே பொம்மையோடு சிந்துவிற்காக காத்திருந்தார் சுசிலா.
கையில் உணவோடு வந்தவள் பொங்கிவரும் கண்ணீரை அடக்கிக்கொண்டு “அம்மா சாப்பிடுங்க”என்று ஊட்டினாள்.
மறுக்காமல் அதை சாப்பிட்டார் சுசிலா.
“ஏன் இனியா அழற?
உன்ன யாரும் அடிச்சுட்டாங்களா?” என்று கேட்க, சிந்துவிற்கு தொண்டைக்குழி அடைத்தது.
ஆனாலும் புன்னகைத்து என்ன “யாரும் அடிக்கல சுசிலா அம்மா எல்லாம் என் விதி” என்றாள்.
சுசிலாவோ எதுவும் புரியாமல் அவளைப் பார்க்க “நீங்க சாப்பிடுங்க…மா” என்று மீண்டும் ஊட்டினாள்.
ரஞ்சி எப்போதோ அங்கிருந்து போய் இருந்தாள்.
சிந்துவின் கைப்பேசி ஒலித்தது.
வேறு யார் நம் விக்ரம் தான்.
“ஹலோ” என்றாள் தேன் ஊறும் குரலில்.
அவன் உடல் சிலிர்த்து அடங்கியது.
“சொல்லுங்க சார்” என்றாள் சிந்து.
தடுமாற்றதுடன், “ஹான்…. அம்மா…அம்மாக்கு எப்படி இருக்கு” என்றான் தன் நிலைத்தடுமாற்றத்தை காட்டிக் கொள்ளாமல்.
“ஹான்…இப்போ பரவாயில்லை சார்” என்றாள்.
“ஹ்ம்ம்…. என்றவன், அப்புறம் ரஞ்சிதா நான் இன்னைக்கு கொஞ்சம் ஹார்ஸ் நடந்துகிட்டேன். நீங்க எதுவும் பயந்துட்டீங்களா? நான் உங்க பிரண்ட் கிட்ட அப்படி நடந்துகிட்டத்தை பார்த்து” என்றான்.
அவள் மௌனமாய் இருந்தாள்.
“புரியுது ரஞ்சிதா. ஆனா உண்மையாவே அவ ஒன்னும் அவ்ளோ நல்லப்பொண்ணு கிடையாது.
நீங்க அவ கிட்ட இருந்து தள்ளி இருங்க ரஞ்சிதா”.
“அண்ட்.. உங்க குணம் என்ன அவ குணம் என்ன நீங்க எப்படி அவளுக்கு போய் பிரண்ட் ஆனீங்கனே தெரியலை ரஞ்சிதா எனிவே அதை விடுங்க நீங்க என்ன தப்பா நினைக்கலை தானே”என்றான்.
“தன்னை பற்றி தன்னிடமே குறை கூறுகிறானே இவன். இதில் அவனை தவறாக நினைக்க கூடாதாம் என்ன வாழ்க்கை இது.
எல்லோருக்கும் சாதாரணமாக அமைவதெல்லாம் எனக்கு மட்டும் இத்தனை போராட்டங்கள் நிறைந்து அமைகிறது”.
“எல்லாம் கடவுள் செயல் என்றாள் அந்த கடவுளும் சதிகாரன் தானே” என்று அவள் மனதில் தோன்றியது.
“ஏய்…ரஞ்சி என்ன ஆச்சு ஏன் இப்படி மௌனமாய் இருக்கீங்க. உங்க தோழியை குறை சொல்லிவிட்டேன் என்று என் மீது உங்களுக்கு கோபமா?”
“சரி இனி அந்த பெண்ணைப் பற்றி எதுவும் சொல்ல மாட்டேன். கண்டுக்கொள்ளவும் மாட்டேன். அவள் ஏதோ செய்கிறாள் எனக்கு என்ன?”
“ஆனால் நீங்கள் எனக்கு மிகவும் முக்கியம் ரஞ்சிதா.
உங்களின் பணிவான குணமே என்னை உங்களோடு இணைக்கிறது.
தவறாக நினைத்துக்கொள்ள வேண்டாம் ரஞ்சி.
உங்களை எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது.
உங்கள் குரலில் ஏதோ ஒரு ஈர்ப்பு விசை இருக்கிறது.
அந்த மென்மையான கீத குரலை என் ஆன்மா உணர்கிறது”.
“கனவில் கேட்ட குரலோ, இல்லை பூர்வ ஜென்ம நினைவுகளோ எனக்கு தெரியவில்லை ஆனால் ஏதோ ஒன்று உங்க குரலில் இருக்கு ரஞ்சி”என்றான்.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்துக்கொண்டு இருந்தது.
“என்ன ரஞ்சி நான் இவ்ளோ பேசறேன் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசமாற்றிங்களே சொல்லுங்க ரஞ்சி என்னை உங்களுக்கு பிடிக்குமா?” என்றான்.
அவள் ஈர கண்கள் விரிந்தன.
அவன் கேட்டதில் வாய்யடைத்து போனாள்.
“ரஞ்சி ப்ளீஸ். இப்படியே மௌனமாய் இருந்து என்னை கொள்ளாதீங்க.
ஏதாவது சொல்லுங்க ரஞ்சி. நீங்க என்ன தப்பா கூட நினைச்சுக்கோங்க. சத்தியமா சொல்றேன் நான் உங்க அழகை பார்த்து உங்க கிட்ட மயங்கவில்லை. உங்கள் குணம், பண்பு, மற்றவர்கள் மீது நீங்கள் காட்டும் கரிசனம் இத்தனைக்கும் மேல் உங்கள் குரல்…இதனால் மட்டும் தான் உங்களை நான்……..” என்று அடுத்த வார்த்தை கூற வர…
“ஐயோ…சார்” என்று தடுத்து நிறுத்தினாள். “ரொம்ப தேங்க்ஸ் சார்.நான் என் கடமையைத் தான் செய்தேன்.
வாங்கும் பணத்திற்கு உண்மையாய் இருக்கிறேன். அனைவரிடமும் அன்பாக பழகுவது என் இயல்பு. சுசிலா அம்மா, நீங்கன்னு இல்ல, அந்த இடத்தில் யார் இருந்தாலும் நான் இதைத் தான் செய்து இருப்பேன்” என்று அவன் சிந்தனையை மாற்றினாள்.
விக்ரம் முகம் வாடியது.நா உளர்ந்தது.
வார்த்தை வரவில்லை.
“ஹலோ…சார் இருக்கீங்களா? ஹெலோ” என்றாள்.
“அவன் ஹான்…. இருக்கேன் சொல்லுங்க ரஞ்சி”என்றான்.
“ஓகே சார் அம்மாவை குளிக்க வைக்கணும் சோ…”என்று வார்த்தையை இழுக்க குரலில் சற்றே தளர்வுடன் “ஹ்ம்ம் ஓகே ரஞ்சி நான் வைக்கிறேன்” என்று அழைப்பை துண்டித்தான்.
அவளுக்கு பொங்கி வரும் அழுகையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. வாயில் கையை அடைத்துக்கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தவள் கதறி அழுதாள்.
பின் என்ன செய்வாள் அவளும், தன்னை முற்றிலும் வெறுப்பவன் தன் குரலை இந்த அளவு நேசிக்கிறான்.ஆண்களையே வெறுக்கும் இவளோ விக்ரமை மட்டும் எப்படி ஏற்பாள் அதுவும் வேறு ஒருவருக்கு சொந்தமான அந்த காதலை.இனி என்ன செய்யப்பபோகிறாள்.
தென்றல் மீண்டும் வீசும்….

