தென்றலாய் என் காதல் – 31
தென்றல் – 31
“என்ன விக்ரம் இது. சுத்த பைத்தியக்காரத் தனமா இருக்கு. மொதல்ல வழி விடுங்க!”
Advertisement
“ஆதவ்…ஆதவ்…நீங்க எங்க இருக்கீங்க” என்று ஆதவை அழைக்க விக்ரம் தேகம் சூடாகியது.
“ஏய்…சிந்து உனக்கு நான் சொன்னது புரியல, உன்ன எனக்கு பிடிச்சு இருக்கு” என்றான் விக்ரம்.
“ஓ…எதனால சார் திடீருனு என்ன பிடிச்சது.
Advertisement
இத்தனை நாள் என்ன கண்டாலே வெறுக்குற நீங்க, நான் எது பண்ணாலும் அது தப்பாவே தான் இருக்கும்னு என்ன காயப்படுத்துற உங்களுக்கு இப்போ எப்படி சார் திடீருனு பிடிச்சது.
Advertisement
என் முகத்தை பார்த்தாலே எரிஞ்சு விழுவிங்க, இப்போ ஆயுள் முழுக்க இந்த முகத்தோடு எப்படி குடும்பம் நடத்துவிங்க.
சார்…நீங்க செஞ்ச உதவிக்கு ரொம்ப நன்றி. அதுக்கு நான் நன்றி கடன் பட்டு இருக்கேன். என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சம் கொஞ்சமா நீங்க துளசியை படிக்க வைக்க செலவழித்த அமௌண்ட்டை தந்து கடன் அடைத்து விடுகிறேன்.”
கை எடுத்து கும்பிட்டாள், “தயவு செய்து என்னை விட்டிருங்க சார்” என்றாள் சிந்து.
Advertisement
“இங்க பாரு சிந்து, இப்பவும் சொல்றேன் நான் ஒரு வாட்டி ஒரு பொருள் மேல ஆசைப்பட்டுட்டா அதை அடையாம விடமாட்டேன். இல்லைனா அத அழிச்சிருவேன் அவ்ளோவே தான்.
இப்போ எனக்கு உன் மேல ஆசை வந்து இருக்கு. சோ உன்ன யாருக்கும், பட்டிக்குளரா அந்த ஆதவுக்கு விட்டுக்கொடுக்க முடியாது” என்றான்.
“சோ…அப்போ ஆதவ் என்னை லவ் பண்றேன் சொன்னதால தான் உங்களுக்கு இத்தனை பிடிவாதம். இது எப்படி இருக்கு தெரியுமா, சிறு பிள்ளை ஒன்று பொம்மை வைத்து விளையாடிக்கொண்டு இருக்க அதன் மேல் ஆசைப்படும் மற்றொரு குழந்தையின் பொறாமையை போல் இருக்கிறது” என்றாள் சிந்து.
“இப்ச்…நீ எப்படி வேண்டும் என்றாலும் நினைத்துக்கொள் சிந்து. ஆனால் எனக்கு நீ வேண்டும்” என்றான் விக்ரம்.
“எப்படி விக்ரம் இப்படி மாறிப் போனான். ஒன்றும் புரியவில்லை சிந்துவிற்கு.
அவன் சற்று கோபமான குணம் கொண்டவன் தான் எனினும், இவ்வாறு காரணமே இல்லாமல் அடம் பிடிப்பவனோ இல்லை போட்டி இடுபவனோ கிடையாது. இருப்பினும் ஏன் இவ்வாறு நடந்துக்கொள்கிறான். இதன் காரணம் தான் என்ன என்று ஆலோசித்தபடி நின்று இருந்தாள் சிந்து.
சுசிலாவை கொல்ல வந்தது யார். அவர்களின் நோக்கம் என்னவென்று போலீஸ்சார் தீவிரமாக விசாரணையை நடத்திக் கொண்டு இருந்தது.
“என்னங்கடா இந்த முறையும் அந்த பைத்தியக்காரியை உங்களால கொல்ல முடியலையே துஉஉஉஉஉஉஉஉ நீங்க எல்லாம் ரௌடிங்கனு சொல்லிக்கவே எனக்கு வெக்கமா இருக்கு.
போங்கடா போய் ஏதாவது கோவில் வாசல்ல உற்காந்து பிச்சை எடுங்க” என்று அந்த இடமே அதிர கத்தினான் ராபர்ட்.
“ஐயா…நான் சரியாகத் தான் குறிவைத்தேன். ஆனா சின்ன மிஸ்டேக் நடந்துருச்சு அதனால தான் மிஸ் ஆச்சு. கண்டிப்பா அடுத்த வாட்டி நான் சரியா அந்த கிழவியை போட்டு தள்ளிருவேன் ஐயா. என்ன நம்புங்க” என்றான் அந்த ரௌடி.
“இப்ச்…இனி உன்னை நம்பி எந்த புண்ணியமும் இல்லை.
நான் வேற ஆளைப் பார்த்துக்கொள்கிறேன். நீ இங்க இருந்து போ” என்றான் ராபர்ட்.
“ஐயா…. “என்று வார்த்தையை இழுக்க, “இப்ச்…நீ இன்னும் கிளம்பலையா என்று துப்பாக்கியை பார்க்க, மன்னிச்சிருங்க ஐயா” என்று அவ்விடத்தை விட்டே ஓடினான்.
அவன் ஓடுவதை பார்த்து சிரித்தவன் “பேசாம நாமே நேரா போய் கொன்னுட்டா என்ன” என்றான்.
“ச்ச…ச்ச…யாரு கொன்னது எதுக்காக கொன்னாங்கனு தெரியாமே இருக்கனும் அது தானே கதையோட சுவாரஷ்யம் ஹா…ஹா…ஹா..”வென சிரித்தான் ராபர்ட்.
மனம் உடைந்த ஆதவ்….தன் இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு கடற்கரைக்கு விரைந்தான்.
இது வரை ஒரு முறைக் கூட வாழ்வில் மது அருந்தியது இல்லை. கையில் அத்தனை பெரிய குப்பியை வைத்து முழுவதுமாக அருந்தினான்.
குப்பியை கடலில் தூக்கி எறிந்தான். அது அலையின் உந்துதளால் அவனிடமே திரும்ப வந்தது.
கோபம் கொண்டவன் அதை தூக்கி வெறிகொண்டு வெகு தொலைவுக்கு வீசி எறிந்தான்.
அது மிதந்து மிதந்து குப்பிக்குள் நீர் நிறைந்து முழுவதுமாக மூழ்கியது.ஆ….. வென்று கத்தினான். அந்த பௌர்ணமி நிலவொளியில் கடல் வெள்ளியென ஜொலித்தது.
அவன் வேதனையை யாரோடு பகிர்வது. இதோ இங்கே தனியாய் காய்ந்துக் கொண்டு இருக்கும் நிலவோடா?
இல்லை ஆற்பரித்துக்கொண்டு இருக்கும் இதோ இந்த கடலோடா?
இல்லை எண்ணிலடங்கா அந்த விண்மீனோடா?
இல்லை இதோ தேவதாசாய் என்னை மாற்ற என் அருகில் படுத்துக் கிடக்கும் இந்த வீதி நாயா?
“எது…இதில் எது என் சோகத்தை புரிந்து கொள்ளும்,என் கவலையை மாற்ற ஆறுதல் சொல்லித்தேற்றும்.
காதல்…என் வாழ்வின் முதல் உணர்வு. அவளை கண்டு தான் எனக்குள்ளும் அன்பும், காதலும் இருக்கிறது என்று உணர்ந்துக்கொண்டேன்.
காதல் இத்தனை வலியைத் தரும் என்பதையும் நான் அவளிடமே கற்றுக்கொண்டேன்.
இப்போ…இப்போ அவளே எனக்கு சொந்தம் இல்லை.ஏன்?!என் காதல் இனி அவ்வளவு தானா” என்று கண்ணீர் விட்டுக் கதறினான் ஆதவ்.
“ஆதவ்…. “என்ற அழைப்பில் திரும்ப அங்கு நின்று இருந்தாள் ரஞ்சிதா.
“ஏய்…. ரஞ்சி நீங்க எங்க இங்க. அதுவும் இந்த நேரத்துல” என்றான் தட்டு தடுமாறி.
“ஹ்ம்ம்…. அது இருக்கட்டும் ஆதவ், நீங்க ஏன் சொல்லாம கொள்ளாம இங்க பார்ட்டி முடியறதுக்குள்ள வந்துட்டீங்க” என்று கேட்டாள் ரஞ்சி.
“ஹ்ம்ம்…ஆமாம் ரஞ்சிதா. எனக்கு அங்க இருக்க பிடிக்கல”என்று தலையை தொங்கப் போட்டுக்கொண்டான் ஆதவ்.
“ஏன்?!”
“இப்ச்…. விடுங்க ரஞ்சி ஏற்கனவே ரணமாய் கிடக்குற என் மனச மேலும் நீங்க கேள்விகளை கேட்டு ரணமாக்காதீங்க” என்றான் வேதனையோடு.
“ஐயோ…!
நான் உங்களை கஷ்டப்படுத்தனுக்குக்கற நோக்கத்தோடு கேக்கல ஆதவ்.
உண்மையாவே உங்களுக்கு ஆறுதளுக்காக தான் நான் பேசினேன்.
உங்களுக்கு அதில் ஏதாவது மனக் கஷ்டம் ஏற்பட்டு இருந்தாள் ஐ அம் ரியலி சாரி” என்று விட்டு அவள் அவனை விட்டு விலகினாள்.
“ரஞ்சி நீங்களும் என்னை விட்டு போறிங்களா” என்றான் உடைந்தக் குரலில்.
“அது….. நான்…என்று வார்த்தை பிரள இல்லை ஆதவ் நான் எங்கையும் போகல” என்று அவன் அருகில் வந்து அமர்ந்தாள்.
“ரஞ்சி நான்…. சிந்துவை மனதார விரும்புகிறேன்.
அவளை எப்படி ரஞ்சி நான் வீட்டுக்கொடுப்பது.
அவங்கள நான் என்னைக்கு முதல் முறை பார்த்தேனோ அன்னைக்கே அவங்க தான் என் எதிர்காலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்.அவங்க துணிச்சல், தைரியம், போராடும் திறன் இதை எல்லாம் பார்த்து தான் நான் இன்ஸ்பயர் ஆனேன்.
ஆனா விக்ரம் சார் இப்படி பண்ணுவாருன்னு நான் கொஞ்சம் கூட எதிர் பார்க்கவே இல்லை.
அதுவும் என் காதலை வெளிப்படையாக சபை ஏற்றிய பின்பும், அதே சபையில் விக்ரம் சார் இப்படி நடந்துகிட்டது அநாகரிகம்” என்றான் ஆதவ்.
“ஹ்ம்ம்…. புரியுது ஆதவ்.
உங்க ஆதங்கம் என்னனு எனக்கு நல்லாவேப் புரியுது.
ஆனா சிந்து உங்களை ஏற்றுக்கொள்ள மாட்டாள். விக்ரமன் சாரையும் ஏற்றுக்கொள்ளமாட்டாள்” என்றாள் ரஞ்சி.
“என்ன சொல்றிங்க ரஞ்சி எனக்கு ஒன்னும் புரியல.
எங்கள் இருவரில் யாரை பிடிக்குதோ அவரை அவர் தேர்ந்தெடுக்கட்டும் நான் அவர்களின் விருப்பதுக்கு மாறாக கட்டாயப்படுத்தமாட்டேன். விக்ரமை தான் சிந்துவிற்கு பிடித்து இருக்கிறது”என்றால் தாராலமாக மணந்துக்கொள்ளட்டும்.
‘எனக்கு சிந்து எங்கு இருந்தாலும் சந்தோசமாக இருந்தாள் போதும்” என்றான்.
“எல்லாம் சரி தான் ஆதவ். ஆனா மறைக்கப்பட்ட உண்மைகளை நீங்க தெரிஞ்சுகணும்.
உங்களுக்கு நான் சொல்லப்போற விஷயம் பெரிய அதிர்ச்சியை கொடுக்கலாம்” என்றாள் ரஞ்சி.
“என்ன சொல்றிங்க ரஞ்சிதா. நீங்க எதைப் பத்தி பேசறீங்கனு எனக்குத் தெரியல, அப்படி என்ன நடந்தது சிந்துக்கு” என்றான் கேள்வியாய்.
“ஹ்ம்ம்…சொல்றேன் ஆதவ்…”
“சிந்துவும் நானும் சின்ன வயசுல இருந்தே நல்ல பிரண்ட். அவ தான் எனக்கு எல்லாம். எனக்குன்னு உறவுனு சொல்லிக்க யாரும் இல்லை. அதனால நான் சிந்துவோட குடும்பத்தை என் சொந்த குடும்பமா பார்க்க ஆரம்பித்தேன்.அவங்களும் என்னை அப்படி தான் பார்த்தாங்க.
ஸ்கூல்ல உருவான எங்க நட்பு காலேஜ் வரைக்கும் தொடர்ந்தது.
நாங்க அப்போ தேர்ட் இயர்.
எப்போதும் ரொம்ப சந்தோசமா ஜாலியான பெண் தான் நம்ம சிந்து. அவளுக்கு ஆண், பெண் என்கின்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. எல்லாரும் அவளுக்கு சரி நிகர் தான் என்று நினைப்பவள். பழக்க வழக்கங்களிலும் அப்படியே.
அவளுக்கு சொல்லப்போனால் பெண் நண்பர்களை விட ஆண் நண்பர்களே அதிகம்.
எல்லா ஆண்களையும் நம்பக்கூடியவள் அவள்.
அப்படி இருக்க ஒரு நாள்….”என்று வார்த்தையை முடித்தாள்.
“என்ன ஆச்சு ரஞ்சிதா. ஏன் நிறுத்திட்டீங்க சொல்லுங்க” என்று பதறினான்.
“எங்க லைப் ரொம்ப சந்தோசமா போயிட்டு இருந்தது. ஆனா எல்லாம் அந்த ஒருநாளோட மண்ணோடு மண்ணாப் போச்சு. அன்னைக்கு ஒரு நாள் காலேஜ்க்கு நான் உடம்பு சரியில்லைனு என்னால போக முடியல. சோ எக்ஸாம் நெருகிட்டதால சிந்துவை காலேஜ் போகச் சொல்லி நான் தான் கட்டாயப்படுத்தினேன்.அன்னைக்கு காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் வேற.
அவளும் போனா…
“காலேஜ்ல கல்ச்சுரல்ஸ் முடிஞ்சு ஹாஸ்டலுக்கு திரும்பும் போது….”
அன்று…
“என்ன மழை வர மாதிரி இருக்கு. எப்படி ஹாஸ்டலுக்கு போறது.இந்த ஃபோன் வேற அடிக்கடி சார்ஜ் இறங்கி போயிடுது.
இப்போ யாருக்கும் கால் பண்ணனும் முடியாதே என்று புலம்பியப்படி சாலையில் பதஸ்டதோடு நடந்து வந்தாள் சிந்து.
மணி வேற ஒன்பது ஆயிடுச்சு. அப்போவே சொன்னேன் நான் முன்னாடியே போறேன்னு சொன்னா கேட்டா தானே, பார்ட்டி வைக்குறேன் சொல்லிட்டு இவ்ளோ நேரம் ஆயிடுச்சு. பாவம் ரஞ்சிதா வேற என்ன செய்றாளோ தெரியல” என்றவளின் முகத்தில் கார் ஒன்றின் முகப்பு விலக்கின் ஒளி சுல்லென்று பட்டது.
கண்கள் கூச சிந்து “இப்ச்…”என்றப்படி கை வைத்து முகத்தை மறைத்தாள்.
“ஏய்…அறிவில்ல, இப்படி தான் கார் ஓட்டுவாங்களா? முன்னாடி ஆள் நிக்கிறது தெரியலையா” என்றாள் சிந்து.
காரை விட்டு நான்கு ஆண்கள் முகத்தை மூடிக்கொண்டு இறங்கினர்.
சிந்துவின் மனதில் பயம் தொற்றிக்கொண்டது.
“ஏய் யாருடா நீங்க?
மரியாதையா வழியை விடுங்கடா. இல்லைனா நான் போலீஸ்க்கு ஃபோன் பண்ணவேண்டிய நிலை வரும்” என்றாள் அவர்களை மிரட்டும் நோக்கில்.
நால்வரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்.
அதில் ஒருவன் கண்ணைக்காட்ட அவளிடம் அடி மேல் அடிவைத்து நெருங்கினான்.
“ஏய் என் கிட்ட வராத”என்று பின்னோக்கி நகர்ந்தாள்.
அவன் அவளை நெருங்க கையில் இருந்த புத்தகத்தை தூக்கி அவன் மேல் எறிந்துவிட்டு ஓடினாள்.
“டேய்…பிடிங்கடா அவள…”
தென்றல் மீண்டும் வீசும்…

