பாறையில் மலர்ந்த தாமரையே! 22
சந்தான லஷ்மி நல்ல உறக்கத்தில் இருந்தாள். இரவு உணவுக்காக கூட எழுந்திருக்கவில்லை.. நிம்மதியாக தூங்கட்டும்.. இது போன்ற மனதை அழுத்தும் மிகப்பெரிய சஞ்சலத்திலிருந்து விடுபட தூக்கம் ஒன்றுதான் மருந்து என வாத்சயல்னும் அவளை எழுப்ப முயலவில்லை.
மனைவியின் கரத்தைப் பற்றிக் கொண்டு அவள் முகத்தை பார்த்தபடியே வேறு ஏதேதோ யோசனைகள் இழுத்துச் செல்ல பிரமை பிடித்தவன் போல் அமர்ந்திருந்தவன்.. ஆறு மணிக்கு மேலாக யாரோ கதவை தட்டும் ஓசையில் எழுந்து வந்து கதவைத் திறந்தான்.. மீனாட்சி நின்றிருந்தாள்..
கண்களை சுருக்கி ஒரு கணம் பார்த்தாலும் அடுத்த கணம் “வாம்மா” என்றான் இயல்பான குரலில்.
அவனின் சோர்ந்து வழிந்த விழிகளையும் சோகம் அப்பிய முகத்தையும் எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினாள் அவள்.
Advertisement
“இப்ப எப்படின்னா இருக்காங்க..?” வெளியே நின்றபடியே கவலையோடு கேட்டாள் அவள்.
“கொஞ்சம் பரவாயில்லை, தூங்கிட்டு இருக்கா எழுப்பட்டுமா..!” ஒரு பேச்சுக்காகத்தான் இப்படி கேட்டான்.. மனைவியை எழுப்பும் எண்ணமில்லை அவனுக்கு.
“இல்ல வேண்டாம் தூங்கட்டும்..! ஏதாவது சாப்பிட்டாங்களா..?”
Advertisement
“இனிமேதான்!”
Advertisement
“நான் வேணும்னா ரெண்டு பேருக்கும் சாப்பிட ஏதாவது கொண்டு வரட்டுமா..?”
“பரவாயில்லை இருக்கட்டும்மா.. நான் ஏதாவது பாத்துக்கறேன்.. நீ.. நீ உள்ளே வாம்மா!” வழி விட்டு நின்றான்.
“இருக்கட்டும்ண்ணா! பசங்கள தனியா விட்டுட்டு வந்துருக்கேன்.! அக்கா கையில கட்டை பார்த்துட்டு பதறி ஓடி வந்தேன். கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க அண்ணா.! ஏதாவது வேணும்னா கூப்பிடுங்க.. என் நம்பர் அக்கா கிட்ட இருக்கு..!” அவள் சொன்னதுக்கெல்லாம் சரி சரி என தலையைசைத்து வைத்தான்..
Advertisement
மீனாட்சி போனதும் உள்ளே வந்தவன் மெத்தையில் ஏறி மனைவியின் மீது அழுத்தாமல் கை போட்டபடி படுத்துக்கொண்டான். கண் விழிக்காமல் அவள் மயக்கத்திலேயே கிடப்பதில் பசி தாகம் மறந்து போனான். சோர்வும் தீராத மன உளைச்சலும் மட்டுமே தொண்டையை அடைக்க.. வலி தாங்க முடியாமல்.. தூக்கம் ஒன்றே தனக்கும் தீர்வென கருதி விழிகளை மூடி உறங்க முயன்றான்.
அவ்வளவு கொடுப்பினை இருக்கிறதா உனக்கு! என எள்ளி நகையாடிய நித்ராதேவி அத்தனை சீக்கிரம் அவனை அள்ளி அணைத்துக் கொள்ளவில்லை.. புரண்டு படுப்பதும்.. சில நிமிடங்கள் கழித்து மடிக்கணியை எடுத்து வைத்துக்கொண்டு வேலை செய்ய முயலுவதும்.. மீண்டும் மனைவியின் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருப்பதும்.. தாங்க முடியாத துயரத்திலிருந்து வெளியே வர முயல்வதுமாக. நிமிடங்கள் கொடுமையாய் கழிந்து கொண்டிருந்தன.. கதவை திறந்து கொண்டு மொட்டைமாடிக்கு சென்று இயற்கை காற்றை உள்வாங்கி நெஞ்சை குளிர்வித்துக் கொள்ளத்தான் நினைத்தான்..
ஒருவேளை சந்தான லஷ்மி உறக்கத்திலிருந்து விழித்து தன்னை தேடினால் என்ன செய்வது..! எந்த கணம் கண் திறந்தாலும்.. அவள் முன்னால் தான் இருக்க வேண்டுமென நினைத்தான்.. சொல்ல வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.. மீண்டும் அவள் கலங்கி தவித்து புலம்பி அழும் முன் அதைப்பற்றி பேசியாக வேண்டும். ரணப்பட்டு போயிருக்கும் அவள் மனதை கொஞ்சம் நிம்மதியடைய செய்தால் போதும்.. பேரிடருக்கு பின் வரும் அவசரகால நடவடிக்கை போல் அதற்காகத்தான் அவளை சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறான்.. எப்படியோ ஒரு வழியாக நள்ளிரவைத் தாண்டி இறுக மூடியிருந்த கண்களுக்குள் உறக்கம் படர்ந்து கொள்ள தொடங்கியது.
“வாத்சா.. வாத்சா!” மறுநாள் காலையில் அவனை தட்டி எழுப்பியது லஷ்மிதான்!
அடித்து பதறி எழுந்தவன் மனைவியின் கண் மூக்கு வாய் கழுத்து.. கை கால்கள் என அனைத்தையும் ஒருமுறை தொட்டு தொட்டு ஆராய்ந்து விட்டு பிறகு நிம்மதியாக மூச்சு விட்டான்..
என்னப்பா ஆச்சு..! அவன் பதட்டம் புரியாமல் விழித்தாள் லஷ்மி!
“ஒன்னும் இல்ல..!’ இதழ் குவித்து காற்றை வெளியேற்றினான்.
“ஆபீஸ் போகலையா நீங்க.. நேரமாச்சுதே..!” என சுவர் கடிகாரத்தை பார்த்தாள்.
முந்தைய நாள் அதிகப்படியாக அழுது தீர்த்ததில் தொண்டை அடைத்து போயிருக்க கீச்சுக் குரலில் பேசிக் கொண்டிருந்தவளை கூர்ந்து பார்த்தான் அவன்.
“இப்ப வலி எப்படி இருக்கு..!” கட்டு போட்டிருந்த அவள் கையை தடவினான்.
“ம்ம்! இப்ப வலியே இல்ல.! உங்களை ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் இல்ல..! தேவையில்லாமல் ஹாஸ்பிடல் அங்க இங்கன்னு அலைய வேண்டியதா போச்சு..” இடது கையால் அவன் தலையை வருடி கொடுக்க.. அவள் கரத்தை பற்றி கன்னத்தில் வைத்துக் கொண்டான் வாத்சல்யன்.
“காபி போட்டு கொண்டு வரட்டுமா..! பசிக்குதுன்னா சொல்லு.. பிரேக்ஃபாஸ்ட் ஏதாவது ரெடி பண்றேன்.. இங்க சாப்பிட வேணாம்னா ஆர்டர் பண்ணிக்கலாம்.!”
“பசிக்கலை.. ஆனா காபி குடிக்கணும் போல தோணுது.. இருங்க.. ரெண்டு பேருக்கும் நானே காபி கலந்து கொண்டு வரேன்..” என எழப்போனவளின் கையை பற்றினான் வாத்சல்யன்..
“ஹே…ய்! இரு.. ஒரு வாரத்துக்கு கையை அசைக்க கூடாது.. ஸ்ட்ரெயின் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க.. ஏதாவது வேணும்னா என்கிட்ட கேளு.. நீயா ஒன்னு கிடக்க ஒன்னு பண்ணி மறுபடி வில்லங்கத்தை இழுத்து வச்சுக்காதே..” என்றவனை தலை சாய்த்து பரிதாபமாய் பார்த்தாள் லஷ்மி!
வில்லங்கம் என எதை சொல்கிறான் என்றொரு கேள்வி அவளிடம்.
அதை சரியாக புரிந்து கொண்டவன் போல்.. “வேலையெல்லாம் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு வாரத்துக்கு நல்லா ரெஸ்ட் எடு ஆஃபீஸ்க்கு லீவ் போட்டுடு. நானும் எங்கேயும் போகப் போறதில்ல.. உன் பக்கத்திலேயேதான் இருக்க போறேன்.” என்றான் அவசரமாக.
“ஏன்பா?” சோர்வாக ஒலித்தது அவள் குரல்.
“ஏன்! நான் உனக்கு தொந்தரவா தெரியறேனா..!”
“ஆமாம்!” என உதட்டுக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டு தலையசைக்க..
“அடி கழுதை!” என நாக்கை கடித்து அவள் தலையில் வலிக்காமல் குட்டினான் அவன்.
“காபி வேணும் வாத்சா!” என்றதும் ஒரு நிமிஷம்.. என அவள் நெத்தியில் முத்தமிட்டு விட்டு எழுந்து போனவனுக்கு.. கிச்சனுக்குள் நுழைகையில் அந்த முகங்களை எதிர்கொள்ள வேண்டுமே என்ற கவலை.. எப்படியோ முந்தைய நாள் கோபத்தை இழுத்து பிடித்துக் கொண்டு நாசூக்காக விஷயத்தை போட்டு உடைத்து விட்டான். இனியும் அப்படி பொறுமையாக இருக்க முடியுமா தெரியவில்லை..
பேசாமல் தனிக்குடுத்தனம் போகும் வரை மாடி அறைக்குள் தங்களுக்காக மட்டும் சமைத்துக் கொள்ள ஒரு மினி கிச்சன் ஏற்பாடு செய்து கொள்ளலாமா என யோசித்தபடி சமையலறைக்குள் நுழைய நல்ல வேளையாக அங்கே யாருமில்லை.
நீண்ட மூச்செடுப்புக்கு பின்.. குளிர்சாதன பெட்டியை திறந்து பாலை எடுத்து காபி கலந்து இரண்டு கோப்பைகளில் நிரப்பிக் கொண்டு மேலே வந்தான்.
“பால்கனிக்கு போகலாமா..!”
“உன்னால முடியுமாடி..?”
“ஸ்டாப்பிட் வாத்சா! என்னை பேஷன்ட் மாதிரி பாக்காதீங்க.. ஏதோ கைல லேசா அடிபட்டுருக்கு.. அவ்வளவுதான்.! நீங்க இவ்வளவு கான்ஷியஸா இருக்கறது எனக்கு ரொம்ப அன்ஈசியா இருக்கு.!”
அவள் எழுந்து கொள்ளும் போது கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள நெருங்கியவன் லஷ்மி பேசியதன் பொருளுணர்ந்து.. நிதானித்து “சரி போ” என வழி விட்டு நின்றான்.
இருவருமாக பால்கனியில் போய் நின்றுக்கொள்ள.. இடது கையால் காபி கோப்பையை பிடித்து மிடறு மிடறாக விழுங்கியபடி.. சாலையை வேடிக்கை பார்க்க தொடங்கினாள் லஷ்மி.
மனைவியின் மனம் புண்படாமல்.. அன்றைய சம்பவங்களை கிண்டி கிளறாமல்.. விஷயத்தை எப்படி தொடங்குவதென யோசித்துக் கொண்டிருக்கிறான் வாத்சா!
“வாத்சா!”
“ம்ம்?” யோசனை களைந்து அவளிடம் திரும்பினான்.
“நாம இங்கிருந்து போயிடலாமா..?”
அவன் விழிகள் லஷ்மியை நிலைத்து பார்த்தன..
“கல்யாணமான பிறகு பத்து வருஷம் இந்த இடத்துல வாழ்ந்துருக்கேன்.. எவ்வளவோ சண்டை வந்திருக்கு.. குடும்பம்னா அப்படித்தான் இருக்கும்னு எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு போயிடுவேன்.. எதையும் பெருசா காதுல போட்டுக்கிட்டதே இல்லை.. ஆனா இப்போ..? உயிரோடும் உணர்வோடும் கலந்திருக்கிற இந்த வீடும்.. இந்த வீட்டு மனுஷங்களும் எனக்கு அந்நியமா தெரியறாங்களே வாத்சா.. உங்களால என்னை புரிஞ்சுக்க முடியுதா..! இல்ல நான் சொன்னதுல உங்களுக்கு கோபம் வருதா..!” கண்ணீர் தளும்ப அவள் நின்ற கோலம் கண்டு காபி கோப்பையை மாடி சுவரின் மீது வைத்துவிட்டு.. நெருங்கி அவள் தோள் தொட்டு அணைத்துக் கொண்டான் வாத்சா!
“நீ எதுவும் தப்பா சொல்லல..! ஆக்சுவலி நான் என்ன யோசிச்சேனோ அதைத்தான் நீ சொல்லியிருக்க! என்னால உன்னை புரிஞ்சுக்க முடியுது சந்தா! இவங்க உனக்கு செஞ்சது அநியாயம். எந்த பொண்ணும் இதை சகிச்சுக்கவே மாட்டா..” அவன் சொல்ல சொல்ல லஷ்மியிடமிருந்து விம்மல் வெளிப்பட.. தேவையில்லாததை பேசி அவளை மீண்டும் புண்படுத்தி விட்டோமென தன்னையே நொந்து கொண்டு..
“இனி நாம இங்கிருக்கவே வேண்டாம்.. டி நகர்ல நம்ம ரெண்டு பேர் பேர்லையும் வாங்கி போட்ட பிளாட் ரென்டுக்கு விட்டுருந்தோமே..!”
“அவங்கதான் காலி பண்ணி போயிட்டாங்களே..!” லஷ்மி அவன் நெஞ்சிலிருந்து தலையை தூக்கி பார்த்தாள்.
“ஆமா.. கொஞ்சம் மெயின்டனன்ஸ் ஒர்க் பெண்டிங் இருக்கு..! இந்த ஒன் வீக்ல எல்லாத்தையும் சரி பண்ணிட்டு நாம அங்க ஷிப்ட் ஆகறோம்..”
கணவனின் அதிரடி முடிவில் லஷ்மி திணறினாள்.
“வாத்சா.. ஆனா உடனே.. உடனே எப்படி..?”
“உடனேத்தான் போகணும். ஆற அமர யோசிச்சு முடிவெடுக்க இதுல ஒன்னுமே இல்ல.. நமக்கு முக்கியத்துவம் இல்லாத இந்த வீட்ல சுயமரியாதை இழந்துட்டு வாழ வேண்டாம். நாம போயிடலாம்.!”
“ஆனா அங்கிருந்து ஆபீஸ் போறதுக்கு ரொம்ப கஷ்டமாச்சே!”
“பாத்துக்கலாம் சந்தா! இங்கிருந்துகிட்டு நாம அனுபவிக்கிற மன கஷ்டத்தை விட அது ஒன்னும் பெருசில்லையே.. சமாளிச்சுக்கலாம்.. எப்படியும் ஒரு பதினைஞ்சு நாளைக்கு நீ வேலைக்கு போக முடியாது.. ஒருவேளை அப்படி ஒத்து வரலனா.. அங்க இருந்துகிட்டே வேற வீடு பாத்துக்கலாம். அதுக்காக எதையும் தள்ளி போட வேண்டாம்.”
“எனக்காக நீங்க பெருசா ரிஸ்க் எடுக்கறீங்கன்னு தோணுது.”
“என்ன ரிஸ்க்! நானும் பாதிக்கப்பட்டுருக்கேன். அவமானமும் அவமரியாதையும் எனக்கும்தான்.!”
“இருந்தாலும் பிறந்து வளர்ந்த வீட்டை விட்டுட்டு தனியா போன பிறகு.. நமக்குள்ள ஏதாவது ஒரு சண்டை.. பிரச்சனைன்னு வந்து.. மனசுக்குள்ள ஒரு வெற்றிடம் பரவும் போது.. நீங்க என்னை வெறுத்துட்டா.. ச்சே எல்லாரையும் விட்டுட்டு உனக்காக வந்தேனேன்னு அந்த நேரம் உங்க வாயிலிருந்து ஒரு வார்த்தை வந்துச்சுன்னா..”
“பைத்தியம்..! ரொம்ப ஓவரா திங்கிங் பண்ணாத.! நமக்குள்ள சண்டை வந்தாலும் எத்தனை நாள் நீ என்கிட்டயும் நான் உன்கிட்டயும் பேசாம இருந்தாலும்.. இந்த மாதிரி மட்டும் ஃபீல் பண்ணவே மாட்டேன். எனக்கு அம்மா அப்பா முக்கியம்தான்.. இல்லைன்னு சொல்ல மாட்டேன். ஆனா நீ என்னோட உயிர்.. உன்னை யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன். நான் எப்பவும் உன் பக்கம்தான் நிப்பேன்.” இரு கைகளால் அவள் கன்னத்தை அழுத்தி பிடித்துக் கொண்டு.. கண்களை உருட்டி அழுத்தமாகச் சொன்னான் அவன்.
இதயத்திலிருந்து கொட்டி தீர்த்த வார்த்தைகள்.
சில நொடிகள் மவுனம். லஷ்மி அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க இமைகளோரம் துடித்தன.
“பாருப்பா! வாத்து சினிமா டயலாக்கெல்லாம் பிச்சு உதறுது.” பட்டென சிரிப்புக்கு தாவ முயன்று உதடுகள் திணறின்.
அவளை முறைத்தான் அவன்.
“அடி வாங்குவ..! ஒரு மனுஷன் எவ்வளவு உணர்ச்சிப்பூர்வமா பேசிட்டு இருக்கேன். அதை அனுபவிக்காம காமெடி பண்ணிட்டு இருக்க நீ..!”
“அனுபவிச்சு உள்வாங்கினா அழுகை வந்திடுமே..! ஏதாவது காமெடி பண்ணி இயல்பா இருக்கற மாதிரி காட்டிக்க வேண்டியதுதான்..” என்றவளை ஊன்றி பார்த்தான் வாத்சா! இருவரும் பொங்கி வெடிக்க காத்திருந்த மனவேதனைகளை மிக சாமர்த்தியமாக.. ஒருவருக்கொருவர் தெரியாமல் மறைத்துக் கொண்டு சிரித்தனர்.
தொடரும்.

Vatsa is a gem ngaaaaa 💗💗💗💗
Puridhal onnu podhum
Yendha problem vandhallum samalikalamnu thariyama ah irukkalam. 😍😍😍
Vatsa❤️❤️❤️santha
Super super super super super super super super
Ippo than nalla mudivu eduthurikinga Lakshmi vathchalyan
Vatsa romba nalla manushan semma nalla mudivu eduthu irukkengae rendu perum super
“Nee enoda uyir yaarukkagavum unna vittu kudukka maatea ”
Ethana husband epdi solluvangae rendu perukku irukka puridhal romba vu azhaga irukku 😍😍
Writer ji 👌👌👌
யோவ் வாத்து gem யா நீ என்னமோ போய்யா 🥹🥹🥹
லச்சு ரொம்ப யோசிக்காத உன்னோட வாத்து சொல்ற மாதிரி செய் என்ன தான் நடக்கும் ன்னு பாத்துக்கலாம் 🙂🙂🙂
என்ன ஒரு understanding பா ரெண்டு பேருக்கும் இடையே ❤️❤️