Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 33

தென்றல் – 33

 

இரவு தூங்காமல் அமர்ந்து இருந்தாள் சிந்து.



Advertisement

அதை கவனித்தவள் “இன்னும் நடந்ததையே நினைச்சிட்டு இருக்கியா. எல்லாத்தையும் கெட்ட கனவா நினச்சு மறந்துரு சிந்து.இப்படியே நீ எதையோ பறிகொடுத்ததை போலே இருக்கறதை ஹாஸ்டல் பிள்ளைகளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும் தெரியும்ல.

இங்க இருக்குற பொண்ணுங்களும் கிட்ட தட்ட அவனுங்க மாதிரி தான். நாம நம் வலிகளை வெளியேக் காட்டிக்கொள்ளாத வரையில் தான் நாம் இங்கு பயணிக்க முடியும். ஒரு வேளை வெளிய காட்ட ஆரம்பிச்சோம், நம்ம பழகீனம் என்னனு தெரிஞ்சுக்கிட்டு அதையே நம்மை வீழ்த்தும் ஆயுதமா பயன்படுத்துவாங்க. அதனால தான் சொல்றேன் சிந்து. இந்த இரவோட எல்லாத்தையும் மறந்து விடியும் காலையில் இருந்து ஒரு புதிய வாழ்வை துவங்கு.

இப்போ படுத்து நிம்மதியா தூங்கு. காலம் எல்லா நினைவுகளையும் மாற்றும். அதுக்கப்பறம் இப்படி ஒரு சம்பவம் நடந்ததையே நீ மறந்துருவ” என்று அவளை படுக்கையில் சாய்த்து போர்வையை கழுதுத்வரை போர்த்தி விட்டு அவளை அன்போடு பார்த்து கதவடைத்துச் சென்றாள் ரஞ்சிதா.

Advertisement

நேரம் கடந்தது. ரஞ்சிதாவின் உரக்கம் ஏதோ ஒரு உள்ளுணர்வால் கலைந்தது.

Advertisement

படுக்கையை விட்டு எழுந்து அமர்ந்தவள், “ஐயோ…என்ன மனசு இப்படி கடந்து தவியா தவிக்குது.

மனசெல்லாம் படப்படனு பறித்தவிக்குது என்று தன் இதயத்தில் கைவைத்தாள்.”சிந்து…சிந்து” என்ன பண்றா என்று அவளின் அறைக்கு சென்றாள்.

என்ன கதவு திறந்து இருக்கு என்று உள்ளே நுழைய படுக்கையில் சிந்துவைக் காணவில்லை.

Advertisement

“ஐயோ…சிந்து எங்கப் போனா” என்று பதஷ்டத்துடன் தேட கழிவறையில் விலக்கு ஒளிர்வதைக் கவனித்தாள்.

“ஓ…மை.. காட். கொஞ்ச நேரத்துல ரொம்ப பயந்துட்டேன் என்று பெருமூச்சு விட்டவள் படுக்கையில் தளர்ந்து அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் கடந்தது. சிந்து வெளியே வரவில்லை.

எழுந்து சென்று கதவைத் தட்டினாள். “சிந்து…சிந்து…என்ன ஆச்சு. வெளியே வா” என்று கூப்பிட்டாள்.

அங்கிருந்து எந்த பதிலும் வரவில்லை.

சிந்துவின் பயம் கூடியது. வேகமாக கத்திக்கொண்டே கதவைத் தட்டினாள்.

சிந்து ஏதாவது தப்பான முடிவு எடுத்து இருப்பாளோ என்று கலங்கினாள்.

வாட்ச் மென்…என்று கத்த அனைவரும் ஹாஸ்டலில் விழித்துக்கொண்டனர்.

என்ன ஆச்சு ரஞ்சிதா. ஏன் இப்படி கத்துற?

“அது…அது…வந்து…

அடியே என்ன பிரச்சனைன்னு சொல்லிதோலடி.

நம்ம சிந்து பாத்ரூம்குள்ள போய் ரொம்ப நேரம் ஆச்சு இன்னும் அவ வெளியே வரல. கதவை தட்டினாலும் திறக்கமாட்டேங்குற எனக்கு ரொம்ப பயமா இருக்கு” என்று அழுதாள்.

“ஏய்…சீ.. அழாதா…

ஏய் வாங்கடி அந்த கட்டில தூக்குங்க” என்று ஒரு பெண் தோழி கூற பெண்கள் அனைவரும் கூடி கட்டிலை தூக்கி சென்று கதவை உடைத்து தள்ளினர்.

உள்ளே சென்று பார்த்த சக தோழிகள் அதிர்ந்தனர்.

சிந்து குளியல் அறையில் தன் கை நரம்பை கிழித்துக்கொண்டு மூர்ச்சையாய் கிடந்தாள்.

ஐயோ…சிந்து என்று அவளை கட்டி அணைத்து அழுதாள் ரஞ்சி.

ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டாள் சிந்து.

“இரத்தம் அதிகமா போய்டுச்சு. இப்போ உடனடியாக பி பாசிட்டிவ் ப்ளட் தேவைப்படுகிறது. இப்போதைக்கு பிளட் பேங்க்ல பிளட் இல்ல.யாராச்சும் பிளட் டோனேட் பண்ண முடியுமா” என்றார் செவிலியர்.

அங்கு இருந்த மூன்று நான்கு பெண்கள் நாங்க தரோம். எத்தனை லிட்டர் வேணும்னாலும் எடுத்துக்கோங்க என்று முன் வந்தனர். ரஞ்சி அனைவரையும் கையெடுத்துக்கும்பிட்டாள்.

“ரொம்ப…ரொம்ப…தேங்க்ஸ் ஃபிரண்ட்ஸ்’ “உங்களை எல்லாம் நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்” என்று கண் கலங்கினாள்.

“ஏய்…லூசு நாங்க யாரு? நாம எல்லாமே பிரெண்ட்ஸ் டி நமக்குள்ள போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு. உங்களுக்கு ஒன்னுனா நாங்க வர மாட்டோமா. ஒன்னும் மட்டும் தெரிஞ்சுக்கோ ரஞ்சிதா பெண்ணுக்கு பெண் இங்கே எதிரி இல்லை” என்றாள் அந்த பெண்.

“கண்களில் நீர் ததும்ப புன்னகைய்தாள். புரிஞ்சுக்கிட்டேன்டி.. நல்லா புரிஞ்சுக்கிட்டேன் என்று கூற அவளை செல்லமாய் அடித்துவிட்டு இரத்த தான மையதுக்குள்ச் சென்றனர்.

தெய்வாதீனத்தில் சிந்து உயிர் பிழைத்துக்கொண்டாள்.

அவளைக் கண்டதும் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் ரஞ்சிதா.

என்ன தனியா விட்டுட்டு போகலாம்னு நினைச்சிட்டல. உன்ன வீட்டா எனக்கு யாரு இருக்கா. என்னப்பத்தி நீ யோசிக்கவேயில்ல அப்படி தானே” என்று கோபித்தாள்.

“அது…. ரஞ்சி என்னால நடந்த எதையும் மறக்கவும் முடியல ஏத்துக்கவும் முடியல. இப்படியே நான் கொஞ்சம் கொஞ்சமா சாகுறதை விட ஒரேடியா செத்து ஒழிஞ்சுறேன் என்றவள் வாயைப்பொத்தி நீ எந்த விளக்கமும் எனக்கு சொல்ல வேண்டாம்.

“இனிமே இதுபோல் முடிவு உன் வாழ்நாளில் எப்போதும் எடுக்கமாட்டேன்னு சத்தியம் பண்ணு” என்றாள் ரஞ்சிதா.

தயக்கத்தோடு அவள் கைமீது தன் கையை வைத்து சத்தியம் என்றாள் சிந்து.

அவள் முகம் மலர்ந்தது அவளை கட்டி அணைத்துக்கொண்டாள்.

இனி நான் எந்த ஆம்பளையும் நம்ப மாட்டேன். எல்லா ஆண்களும் கெட்டவங்க தான். அவங்களுக்கு மனசாச்சுன்னு ஒன்னு கிடையாது. ஆண்கள் எல்லாம் மிருகம். அவள் கண்முன்னே எல்லாரும் வந்து சென்றனர் அந்த கார்க்காரனையும் சேர்த்துத் தான்.

ஏய் உனக்கு என்ன ஆச்சு சிந்து.

ரஞ்சி இந்த உலகத்தில் இருக்குற ஆண்கள் எல்லாமே மோசமானவங்க. சந்தர்ப்பம் அமைந்தால் சன்யாசிக் கூட இதுபோல நடந்துப்பான். நான் இந்த ஆண் சமூகத்தை அடியோடு வெறுக்கிறேன். இனி என் வாழ்நாளின் எதிரி இந்த ஆண்கள் சமூகம் மட்டும் தான்” என்று ஆவேசமாக புலம்பினாள். “சரி…சரி…எமோஷனல்” ஆகாத சிந்து. அமைதியா இரு என்று சாந்தப்படுத்தினாள்.

இப்போ சொல்லுங்க ஆதவ்…அவ இப்படி ஆண்கள் சமுதாயத்தை வெறுப்பதில் என்ன தவறு இருக்கிறது.

“அவள் நிலைமையில் இருந்து பார்த்தாள் தான் அவள் பக்கம் இருக்கும் நியாயம் உங்களுக்கு எல்லாருக்கும் புரியும் என்று கூறினாள்.

ஆதவ் அசையாமல் அமர்ந்து இருந்தான். “என்ன ஆதவ் இப்படி சிலை மாதிரி நீங்க உற்கார்ந்து இருக்கீங்க.அவ நாலு பேரால க*பழிக்கப்பட்டான்னு தெரிஞ்சது உங்களால அவளை உங்க காதலி ஸ்தானதுல வைக்க முடியலைல என்று ஏளனமாய் பார்த்தாள் ரஞ்சி.

“ஹே…அப்படியில்லை ரஞ்சிதா

சிந்து இவளோ கஷ்டத்தை தனக்குள்ளே வைத்து தான் நம்ம கிட்ட இவ்ளோ காம்மா நடந்துகிட்டாங்களா?

அவங்க ரொம்ப பாவம்.ஆனாலும் இன்னும் மத்தவங்களுக்காக வாழறாங்க ஷி இஸ் ரியலி குட் ஹியூமன்” என்றான் ஆதவ்.

“எஸ்…”என்று அவளும் மெல்லிதாய் புன்னகைத்தாள்.

சிந்து இனியாவது நல்லா வாழனும் ரஞ்சிதா. இந்த உண்மை எல்லாம் விக்ரம் சாருக்கு தெரியவந்தா கண்டிப்பா அவர் சிந்துவை ஏற்றுக்கொள்ளமாட்டார்.”

“அது மட்டும் இல்ல, ஏற்கனவே சிந்து ஆள்மாராட்டம் செய்து இருக்கிறார். இதில் இந்த உண்மையும் தெரிந்தாள் சொல்லவே வேண்டாம்.

அவர் இந்த கல்யாணத்தையே நிறுத்திவிடுவார் ரஞ்சிதா.

ஏன் ஆதவ்…இவ்ளோ நேரம் சிந்துவை இழந்த சோகத்தில் தானே இருந்திங்க. ஆனா இப்போ என்னடானா இப்படி அவருக்கு சாதகமா பேசுறீங்க என்றாள் ரஞ்சி.

ஐயோ…. ரஞ்சிதா நீங்க வேற, நான் இப்பவும் சிந்துவை காதலிக்கிறேன். நான் விரும்புனது அவங்க உள்ளத்தை தான், அவங்க உடம்பை இல்லை.

அது மட்டும் இல்லாம, கற்பு அவங்க உள்ளத்தில் தான் உள்ளதே தவிர உடம்பில் இல்லை.

என்னை பொறுத்தவரை சிந்து தேவதை. அந்த தேவதையை தவறாக பேச நான் அனுமதிக்க மாட்டேன். ஒரு வேளை விக்ரம் சார் உண்மை தெரிந்து சிந்துவை அவமானப்படுத்தி விட்டாள் என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதால் தான் நான் பயப்படுகிறேன் என்றான் ஆதவ்.

நீங்க ரொம்ப நல்லவர் ஆதவ்.

அட ஏன் ரஞ்சி நீங்க வேற!

சிந்துவை விடவா என்றான் ஆதவ்.

ஐ லவ் யூ ஆதவ் என்றாள் அவன் எதிர்பாராத தருணத்தில்.

கண்கள் விரிய எதுவும் புரியாமல் விசித்திரமாய் ரஞ்சிதாவைப் பார்த்தான்.

என்ன ஆதவ் இப்படி பாக்குறீங்க?

ஏன் எனக்கு காதல் வரக்கூடாதா, நான் காதலிச்சா குத்தமா என்று கேள்வியாய் ஏக்கம் கொண்ட பார்வையோடு கேட்டாள்.

அதெல்லாம் ஒன்னும் இல்லை ரஞ்சிதா. நான் சிந்துவை உயிருக்கு உயிராய் காதலிக்கிறேன். அது உங்களுக்கே தெரியும்.

அப்படி இருக்கும் போது எப்படி என்னை உங்களால் நேசிக்க முடிந்தது என்று அவளிடம் கேட்டான் ஆதவ்.

புன்னகைத்து காதலுக்கு ஏது சார் கட்டிப்பாடு….என்று முடித்தாள்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!