Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 34

தென்றல் – 34

 

“அம்மாவை யாரு கொல்ல வந்ததுன்னு ஏதாவது தகவல் கிடைச்சதா?



Advertisement

போலீஸ் விசாரணையில் ஏதாவது தெரியவந்ததா?” என்று வினவினான் விக்ரம்.

“இல்லை…சார். இன்னும் போலீஸ் விசாரிச்சுட்டு தான் இருக்காங்க” என்றான் மனோ.

“ஓ ஐ சீ…சரி ஆதவ் எங்க?”

Advertisement

“அவர் பார்ட்டி முடியறதுக்குள்ளேயே கிளம்பிட்டாரு சார்.”

Advertisement

“ஏன்?”

மனோ மௌனமாய்…. “ஹும்…அப்படியே தெரியாத மாதிரி நடிக்கிறாரு பாரு, பாவம் ஆதவ் சிந்துவை விரும்புவதாய் சொன்ன அடுத்த நொடி இப்படி அவர் காதலை அடியோடு போட்டு கொளுத்திட்டு இப்போ எதுவும் தெரியாததை மாதிரி கேக்குறாரு” என்று முனுமுனுத்தான்.

“ஏய்…நீ பேசுறது எனக்கு நல்லாவே கேக்குது இங்க இருந்து போ” என்றான் விக்ரம்.

Advertisement

“ஆத்தாடி” என்று ஓடியே விட்டான் மனோ.

பார்ட்டி எல்லாம் முடிந்து அனைவரும் கிளம்பியிருந்தனர். வீட்டை சுத்தம் செய்துக்கொண்டு இருந்த கீதாவிடம் “அம்மா எங்க?” என்று வினவினான்.

“அம்மா தூங்கறாங்க தம்பி. அவங்களுக்கு பயம் இன்னும் தெளியல சிந்து பாப்பா தான் தூங்க வச்சிட்டு போச்சு” என்றார் கீதா.

“என்ன சிந்து போய்ட்டாங்களா”என்றான் அதிர்ச்சியோடு.

“ஆமாம்…விக்ரம் தம்பி. அவங்க அப்போவே போய்ட்டாங்க” என்று கூற, “இதை ஏன் என் கிட்ட மொதல்லயே சொல்லல, அம்மாவை பத்திரமா பார்த்துக்கோங்க” என்று கார் சாவியை எடுத்து விரைந்தான்.பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தாள் சிந்து.

“என்ன இவ்ளோ நேரம் ஆகியும் ஒரு பஸ் கூட காணோம்.”

“இந்த ரஞ்சி சொல்லாம கொள்ளாம எங்கே போனாள்” என்று கை கடிகாரத்தை பார்த்தபடி நின்று இருந்தாள்.

அதை தொலைவில் இருந்து ரசித்தவன், அவனை அறியாமல் புன்னகைதான்.

“உண்மையாவே ஷி இஸ் கார்ஜியஸ்” என்று கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான்.

“இவளையா நாம் வெறுத்தோம். இவளையா பண்பு இல்லாதவள், அன்பு இல்லாதவள் என்று திட்டி தீர்த்தோம்”. “என் அன்னைக்கு அன்னையானவள் இவள்”.ஆழ்மனம் அவனை திட்டி தீர்த்தது.

“ச்ச…. எவ்ளோ பெரிய முட்டாளா இருந்து இருக்கோம்.இப்படி இத்தனை நாள் நம்மை ஏமாற்றி இருக்கிறாளே!ரொம்ப ஸ்மார்ட் தான். ஆனா இனி ஏமாற மாட்டேன்” என்று தனக்குள்ளே நகைத்துக்கொண்டான்.இன்னும் பேருந்து வந்தாகவில்லை.

நேரம் கடக்க அங்கு ஒரு ஆட்டோ அவள் முன் வந்து நின்றது. “என்னமா எங்க போகணும் சொல்லு…நான் போய் ட்ராப் பண்றேன்” என்றான் அவளை உச்சு முதல் பாதம் வரை பார்த்தவனாய்.

“ஹலோ சார் உங்க கிட்ட நான் ஆட்டோ வேணும்னு கேட்டேனா? இல்லைல அப்பறம் என்ன? உங்க வேலையை பார்த்து போங்க” என்றாள்.

“ஹ்ம்…ரொம்ப பிகு பண்ணாதமா. எவ்ளோ வேணும் சொல்லு எக்ஸ்ட்ரா அம்பது நூறு ஆனாலும் பரவாயில்லை. பார்க்க ரொம்ப அம்சமா இருக்க உனக்கு எவ்ளோ வேணும்னாலும் நான் செலவு பண்ணலாம்” என்றான் அவன்.

“சீ வாய மூடு. தனியா ஒரு பொண்ணு நின்னுற கூடாதே, நான் நினைக்குற மாதிரி பொண்ணு இல்லை” என்றான்.

“இந்த நேரத்துல தனியா பஸ் ஸ்டாண்ட்ல பட்டு புடவை தலை நிறைய பூனு இப்படி அலங்காரம் பண்ணிக்கிட்டு எதுக்கு நிப்பாங்க ரொம்ப நடிக்காதமா போலீஸ் வரதுக்குள்ள சீக்கிரம் ஆட்டோல ஏறு” என்றான் அவன்.

“சீ…இங்க இருந்து போறியா இல்லை நானே போலீஸ் கூப்பிடவா” என்றாள் மிரட்டும் விதமாக.அவன் ஏதோ நகைச்சுவையை கேட்டதை போலே சிரித்தான்.

அதை அமைதியாகப் பார்த்துக்கொண்டு தான் இருந்தான் விக்ரம்.

அவள் தன் கை பையில் இருந்த பெப்பர் ஸ்பிரே எடுத்து அவன் முகத்தில் அடித்து விட்டு அங்கிருந்து வேகமாக நடந்தாள்.

“ஹ்ம்ம்…. ஓல்ட் டெக்கினிக்” என்று இடம் வலமாக தலையசைத்தவன் “இப்போ போய் ஹெல்ப் பண்ணா வேற ஓவரா பெண்ணியம் பேசுவா. என்னை எனக்கே காப்பாதிக்க தெரியும் ஆண்கள் உதவி எனக்கு ஒன்னும் தேவையில்லைனு சொல்லுவா. சரி என்ன பண்றது எதையும் கண்டுக்காம இருக்க வேண்டியது தான்” என்று அவளை பின் தொடர்ந்தான்.

அந்த ஆட்டோகாரனோ மிகுந்த கோபத்துடன் அவளை பின் தொடர்ந்தான்.

“ஏய்…நில்லுடி உனக்கு எவ்ளோ திமிர் இருந்தா இப்படி பண்ணுவ”என்று சில பெண்களை குறிக்கும் கெட்ட வார்த்தைகளை உபயோகிதான்.அவ்விடத்தில் திடீர்ரென்று தெரு விலகுகள் அணைந்தன.

சொல்லவா வேண்டும்…அவளுக்கு அந்த பதஷ்டம் தொற்றிக்கொண்டு கை கால்கள் நடுங்க ஆரம்பித்தது.

“என்ன இவ தைரியமான பொண்ணு எல்லாத்தையும் சமாளிப்பான்னு பார்த்தால் இவ்ளோ பயந்தானக்கோழியா இருக்கா” என்று சிரித்தவன் “இனியும் அவளை தனியாக விட்டாள் ஆபத்து” என்று காரை விட்டு இறங்கி அந்த ஆட்டோக்காரணை அடித்து துவைத்தான்.

அவள் அங்கு நிற்கவில்லை. “டேய்…இனி எந்த பொண்ணுங்க கிட்டையாவது இப்படி நடந்துகிட்ட ஆட்டோ ஓட்ட ஆட்டோ இருக்கும், ஆனா உனக்கு கை இருக்காது, ஓடுடா”என்றதும் அவன் தலைத்தெறிக்க ஓடினான்.

“எங்க சிந்துவைக் காணோம்” என்று சுற்றி பார்க்க அவள் ஓட்டமும், நடையுமாக சென்றுக்கொண்டு இருந்தாள்.

அவளை பின் தொடர்ந்தவன் “ஏய்…சிந்து மேடம் நில்லுங்க மேடம்”என்றான்.

அவள் திரும்பியும் பாராமல் சென்றாள்.

“ஓய்…இப்போ என்ன நடந்ததுன்னு இப்படி சொல்லிக்காம கூட வீட்டை விட்டு வந்துட்ட” என்று அவள் கையை பற்றி நிறுத்தி கேட்டான்.

“இப்ச்…என் கையை விடுங்க விக்ரம் சார்.

நீங்க இன்னைக்கு என் கிட்ட நடந்துகிட்ட விதம் எனக்கு சுத்தமா பிடிக்கல.

எல்லா ஆம்பளைகளும் ஒரே மாதிரி தான்”என்று விட்டு அவள் கையை அவன் பிடியில் இருந்து விளக்கினாள்.

விக்ரமின் முகம் வாடியது.

“சிந்து ப்ளீஸ்…உன்ன புரிஞ்சுக்காம தான் நான் அப்படி எல்லாம் நடந்துகிட்டேன். அதுக்காக என்ன மன்னிச்சிரு. ஆனா என்ன இப்படி அவொய்ட் பண்ணாத சிந்து.

நான் உண்மையாகவே உன்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்புகிறேன்”என்றவனை பார்த்து வேதனையோடு சிரித்தாள்.

“என்ன சார், உங்க காதல் விளையாட்டுக்கு நான் தான் கிடைச்சேன்னா!

உங்களுக்கு கல்யாண ஆசை வந்துருச்சுனா நீங்க உங்க தகுதிக்கு ஏத்த பொண்ணா பார்த்து மாரேஜ் பண்ணிக்கோங்க. அதை விட்டுட்டு, உங்க தகுதிக்கும், அந்தஸ்துக்கும் கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாதா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கணும் ஆசைப்படுறீங்க. உங்க விளையாட்டுக்கு நான் ஆள் இல்லை. அது மட்டும் இல்லாம எனக்கு எந்த ஆண் மேலயும் நம்பிக்கை இல்லை.

தயவு செஞ்சி உங்க எண்ணத்தை மாத்திக்கோங்க.

என் வாழ்க்கையில் காதலுக்கோ, கல்யாணத்துக்கோ வாய்ப்பே இல்லை” என்று அவள் சென்றாள்.

அவனோ சில நிமிடங்கள் அவ்விடத்திலேயே அசையாமல் நின்று இருந்தான். பின் தன்னை உணர்ந்தவன் அவள் பின்னே மீண்டும் சென்று, “நீ உன் முடிவை சொல்லிட்ட நான் என் முடிவை சொல்ல வேண்டாமா அதுக்குள்ள போற நில்லுடி” என்று வழி மறித்தான்.

“இப்ச்…இப்போ உங்களுக்கு என்ன தான் பிரச்சனை. நான் இங்கே இருப்பது தானே. சரி நான் நாளைக்கே கோயம்பத்தூர் கிளம்புறேன் போதுமா இப்போ எனக்கு வழியை விடுங்க”.அவள் குரல் அவன் உயிருக்குள் தேனாய் ஊடுருவியது.

அவளை விக்ரம் விடுவதாயில்லை.

“இல்லை சிந்து இன்னைக்கு உன் முடிவு தெரியாம நான் வழியை விடுவதாய் இல்லை” என்றான்.

“என்ன முடிவு” என்றாள்.

“என்ன எப்போ மேரேஜ் பண்ணிக்க போற” என்றான். அது இந்த “ஜென்மத்தில் நடக்காது” என்றவளை பார்த்து “ஏன் நீ ஆதவ்க்கு ஓகே சொல்லப் போறியா”என்றான்.

“அதை கேக்க நீங்க யாரு?

எனக்கு பிடிச்சு இருந்தா நான் ஓகே சொல்வேன்.உங்களுக்கு எல்லாம் சொல்லணுக்கற எந்த அவசியமுமில்லை” என்று அவனை விட்டு நகர, அவள் கையை வளைத்து அவள் நூலிடை வலிக்க அழுத்தி அவள் மென் இதளோடு தன் வன் இதழைப் பதித்தான்.

அவள் கை அவன் மார்போடு இருக்க அவனை தன் பலம் கொண்டு தள்ளினாள்.

அவள் இயலாமை அவனிடம் அவளை சரணடைய வைத்தது.

வான் நிலா தனியே காய இவர்களின் காதலுக்கு சாட்சியாய் அமைந்தது.

சில நிமிட முத்தத்திற்கு பிறகு அவளின் இறுக்கத்தை தளர்த்தினான் விக்ரம்.

அவள் கண்கள் தீரக்கவேயில்லை.

அவள் உடல் நடுக்கம் எடுத்தது.

‘ஏய்…என்ன ஆச்சு சிந்து. கண்ணத் திறடி” என்று உசுப்பினான்.

அவள் அப்போதும் எந்த உணர்வையும் காட்டவில்லை. சிந்து என்று அழுத்தமாக கூப்பிட மயங்கி அவன் மார்போடு சரிந்தாள்.

அவனுக்கு சிரிப்பு தான் வந்தது.

அவளை கையில் மரகத வீணையென அள்ளி தூக்கினான்.

தன் காரின் முன் இருக்கையில் அமர்த்தி சீட் பெல்ட் போட்டு விட்டான். அவள் நெருக்கமும் வாசனையும் அவன் ஆண்மையை வம்புக்கு இழுத்தது.ஏற்கனவே அவள் தன்னை எதியாக பாவிக்கிறாள்.இதில் இதுவேறையா?

பின் அவளிடம் அடிவாங்க வேண்டியது இருக்கும் என்று சுதாரித்துக்கொண்டான்.

தலையை ஒரு முறை உளுக்கி “ஷ்….சப்பா…. வாட்டி வதைக்குறா” என்றவன் சாலையில் கவனத்தை பதித்து காரை ஓட்டினான்.

அவள் அழகை பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த வான் நிலா விக்ரமின் கார் ஜன்னல் வழியே பின் தொடர்ந்தபடி ரசித்தது.

நிலா மட்டுமல்ல நம் விக்ரமனும் தான்.அந்த பயணம் விக்ரமின் வாழ்வில் மறக்க முடியாத நினைவுகள்.

கார் வீட்டை வந்தடைய வெளியே ஆங்காங்கே கூட்டம் சேர்ந்து இருந்தது.

ஒருவருக்கொருவர் மிக முக்கியமாக பேசிக்கொண்டு இருந்தனர்.”என்ன ஆச்சு அதுவும் இந்த நேரத்துல இவங்க எல்லாரும் இங்க என்ன பண்றாங்க?”என்று

விக்ரம்…. சந்தேகத்தோடு வீட்டு முற்றத்தில் காரை நிறுத்தினான்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!