Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 38

தென்றல் – 38

“அந்த விக்ரம் ரொம்ப சந்தோசமா இருக்கான், இருக்கட்டும் இன்னும் எத்தனை நாள் அவன் முகத்தில் இந்த சிரிப்பு இருக்கும் என்று பாப்போம்.

நான் இருக்கும் வரை உன்னையும் உன்ன சேர்ந்தவர்களையும் நிம்மதியாக வாழ விட மாட்டேன். எனக்கு நீங்க இலைத்த துரோகத்துக்கு உன் குடும்பத்தை நான் அழித்தா தான் என் கோபம் தீரும்.



Advertisement

உன் சந்தோசம் எதுவென்று நீ நினைக்கிறாயோ அதை உன் கிட்ட இருந்து பரிப்பேன் ஹா…ஹா…”என்று சிரித்தான் ராபர்ட்.

“சிந்து…ஒரு நிமிடம் உன் கிட்ட பேசலாமா” என்றாள் ரஞ்சி.

சிந்து அவளைத் தவிர்த்தாள்.

Advertisement

காதில் வாங்கி கொள்ளாதவளால் அவளை திரும்பியும் பாராமல் சென்றாள்.

Advertisement

சிந்துவின் இந்த நிராகரிப்பு மிகுந்த வலியைக் கொடுத்தது.

ஆதவ் இதை கவனிக்கவே செய்தான்.

“ரஞ்சி உங்க ரெண்டு பேருக்குள்ள என்ன பிரச்சனை.

Advertisement

ஏன் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்க மாட்டேங்கிறீங்க?”என்றான் ஆதவ்.

“எல்லாம் என் தப்பு தான் ஆதவ். அவளை நான் தான் பேசி ரொம்ப காயப்படுத்திட்டேன்”என்றாள் ரஞ்சி.

அவன் அவளை கேள்வியாய் பார்த்தான்.

“அவ என் கூட இனி பேசாட்டியும் பரவாயில்லை ஆனா என்ன மன்னிச்சா மட்டும் போதும்” என்று சுசிலாவிடம் சிரித்து பேசிக்கொண்டு இருந்த சிந்துவை ரசித்துப் பார்த்தாள்.

சிந்து விக்ரம் திருமண ஏற்றப்பாடுகள் வெகு விரைவாக செய்யப்பட்டது.

விக்ரம் வீடு வண்ண தோரணங்களாலும்,பூக்கள் கொண்டும் அலங்காரிக்கப்பட்டு இருந்தது.

விளக்குள் தெருக்கோடி வரை ஒளிர்ந்து பகல் போல் காட்சியாளித்தன.

அனைவரும் சந்தோஷத்தில் திளைத்து இருக்க ரஞ்சிதா மட்டும் சோகம் தோய்ந்த முகத்தோடு தனியே அமர்ந்து இருந்தாள்.

“ஏங்க அங்க பாருங்க. அது நம்ம ரஞ்சி தானே” என்றார் ஆதவின் அன்னை.

“ஆமாம், அது ரஞ்சிதாவே தான். ஆனா ஏன் இப்படி தனியா சோகமா உற்காந்து இருக்கா.

சிந்து ரஞ்சியோட குளோஸ் பிரண்ட். அப்படி இருக்க சிந்துக்கு உள்ளே நலுங்கு வைக்க போறாங்க ஆனா இவ என்னடானா இங்க உற்காந்து இருக்கா”என்று குழப்பதுடன் ரஞ்சிதாவை நெருங்கினார்.

ரஞ்சி அவர்கள் அருகில் வருவதை கூட உணரவில்லை. எதையோ ஆலோசித்தபடி வெற்று நிலத்தை வெறித்து பார்த்து இருந்தாள்.

“ரஞ்சி…”என்று அவள் தோளை அழுத்த, ஹான்…. என்று பதறி எழுந்தாள் ரஞ்சி.

“ஆண்ட்டி…நீங்க….!!”

“ஹ்ம்ம்…இப்போ தான் வந்தோம். அது சரி நீ ஏன் இப்படி தனியா உற்காந்து இருக்க. உள்ள சிந்துவுக்கு நலுங்கு ஃபங்க்சன் நடந்துகிட்டு இருக்கு. நீ என்னடானா இப்படி தனியா இருக்க. வாமா உள்ள போகலாம்” என்று அழைத்தார்.

“இல்லை ஆண்ட்டி. நான் வரல. எனக்கு கொஞ்சம் தனிமை வேணும்.

நீங்க போங்க ஆண்ட்டி” என்றாள் சிந்து.

“இப்ச்…. ரஞ்சி கண்ணு என்னமா, அன்கிள் சொன்னா கூட கேக்க மாட்டியா” என்றார் ஆதவின் தந்தை.

அவள் மென்மையாய் புன்னகைத்து “வாங்க ஆண்ட்டி, அன்கிள் உள்ள போகலாம்” என்று இருவரின் கையை பிடித்துக்கொண்டு உள்ளே சென்றாள்.

“ஏய்…ரஞ்சி எங்க போன. இங்க எவ்ளோ வேலை இருக்கு. போ போய் உன் பிரண்ட்ட அழைச்சிட்டு வா. நலுங்கு வைக்க நேரம் ஆச்சு” என்று உரிமையோடு அதட்டினார் கீதா.

வராத புன்னகையை வரவழைத்து “ஹான் சரிங்க அக்கா”என்று சிந்துவின் அறை நோக்கி சென்றாரள் ரஞ்சி.

சிந்து அழகாரங்களை முடித்து கண்ணாடியை வெறித்து அமர்ந்திருந்தாள்.

என் வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் எதிர் பார்க்கவேயில்லை.

என் வாழ்க்கை அந்த கொடூர சம்பவத்தில் அழிந்துவிட்டது என்று தான் நினைத்தேன்.

ஆனால் விக்ரம்…. விக்ரம் என் வாழ்க்கையை மாற்றிவிட்டார். என் எண்ணத்தை மாற்றிவிட்டார். என் வேதனையில் இருந்து என்னை விலக்கி விட்டார்.

இனி என் வாழ்க்கை முழுவதும் நான் விக்ரம்மிற்காக அர்ப்பணம் செய்வேன்.

என் வாழ்வில் நான் நேசித்த முதல் ஆண்.என்னை நேசித்த முதல் மனிதன்.

இனி என் உடல், உயிர், ஆதி அந்தம் என அனைத்திலும் நீங்க தான் விக்ரம்…நீங்க தான்.

உங்களை விட்டு நான் எப்போதும் போக மாட்டேன். அப்டியே உங்களை பிரியக்கூடிய சூழ்நிலை வந்தாள் நான் உயிருடனே இருக்க மாட்டேன் விக்ரம் என்று கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தையே பார்த்து சொல்லிக் கொண்டாள்.

சிந்து என்று உள்ளே நுழைந்தவளைப் திரும்பிக் கூட பார்க்காமல், “அங்கே நில்லு ரஞ்சிதா. உள்ள வராதா?”என்றாள் சிந்து.

“சிந்து ப்ளீஸ். இன்னும் என் மேல உனக்கு கோபம் குறையவில்லையா?

நான் செஞ்சது தப்பு தான்.

ஆனா அதுக்காக எனக்கு எதுக்கு இவ்ளோ பெரிய தண்டனை.

அதுக்கு என்ன நாலு அடி வேணும்னா அடிசுக்கோ சிந்து. ஆனா என் கூட பேசாம மட்டும் இருந்துறாத” என்றாள் ரஞ்சி.

“போதும் நிறுத்து ரஞ்சி. நீ பேசுன வரைக்கும் போதும். இனியும் பேச நான் விட்டா என் மனசை சுக்கு நூறா உடைச்சிட்டு போயிருவ. என் சந்தோசத்தை கெடுக்க தான் நீ இங்க வந்தியா?

உன்னை பார்க்கும் போது எல்லாம் என் கடந்த காலங்கள் எனக்கு நினைவுக்கு வருது.

ப்ளீஸ்..என்ன விட்டுட்டு, நான் எல்லாத்தையும் மறந்து நிம்மதியா வாழனும் நினைக்குறேன். அதுக்கு நீ என் கூட இருக்க கூடாது” என்று கெஞ்சனாள்.

வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டவள் மூச்சை நன்கு இழுத்து விட்டு, தைறியத்தோடு அவளை நிமிர்ந்து நோக்கி, “சரி சிந்து நான் உன்னை விட்டு போனாள் தான் உனக்கு சந்தோசம் என்றால் நிச்சயம் நான் போறேன்.

நீ சந்தோசமா இருந்தா அதுவே போதும்.

ஆனா எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும் தான், உன் கல்யாணத்தை என் கண்ணால பார்த்து சந்தோசப்பட்டுட்டு அப்பறம் நிச்சயமாக நான் போயிறேன்.

உன் கண்ணுலக் கூட படமாட்டேன் இது சத்தியம் சிந்து.

ப்ளீஸ் உன் கல்யாணத்தையாவது என்னை பார்க்கவிடு” என்று கை எடுத்துக் கும்பிட்டாள்.

சிந்து சில நிமிடங்கள் ஆலோசித்து “சரி…ஆனா என் கண் முன்னாடி நீ இருக்க கூடாது ரஞ்சி” என்றவள் அங்கிருந்து அவள் பதிலுக்கு கூட காத்திருக்காமல் சென்றாள். இத்தனை வருட நட்பு தன் வார்த்தைகளால் பிளவு பட்டத்தை எண்ணி வருந்தினாள் ரஞ்சி.

சிந்துவின் கோபத்தில் இருக்கும் நியாயத்தையும், வலியையும் புரிந்துகொண்டாள்.

சிந்துவை கண்டதும் சக இளம் கன்னிமார்கள் அவளை அழைத்து வந்து நாற்காளியில் அமர்த்தினார்.

கை, கால், முகம் என சந்தனம், மஞ்சள் கலந்த கலவையால் நலுங்கு வைக்கப்பட்டது.

“துளசி சிந்துவை அக்கா நீ ரொம்ப அழகு. இப்போ மட்டும் மாமா உன்னை பார்த்தாரு அவ்ளோ தான்.

நாளைக்கு வரைக்கும் எல்லாம் வைட் பண்ண மாட்டாரு போலே இருக்கே” என்றாள்..

“ஏய் வாலு என்ன பேச்சு இதெல்லாம்” என்று கண்டித்தாள் சிந்து.

“அக்கா நான் கல்யாணத்தை நாளைக்கு வரைக்கும் தள்ளி போட மாட்டாரு இன்னைக்கே தாலி கட்டிருவாருன்னு சொன்னேன்.

நீ தப்பா புரிஞ்சிகிட்டா நான் என்ன பண்றது, உனக்கு நினைப்பு சரியில்லை” என்றாள்.

“ஏய்…என்று காதை பிடித்து திருக, அக்கா மாமா வந்துட்டார்” என்றதும் “எங்க” என்று அவள் காதை விட்டு விட்டு கூட்டத்தில் தேடினாள்.அவள் சிந்துவிடம் இருந்து நகர்ந்து ஓடினாள்.

“ஏய்…அக்கா சும்மா தான் சொன்னேன்.ஏமாந்துட்டியா” என்று கிண்டல் அடிக்க அங்கு இருந்த அனைவரும் சிரித்தனர்.

அதை எல்லாம் கூட்டத்திற்கு ஒரு ஓரம் நின்று ரசித்து பார்த்து கொண்டு இருந்தாள் ரஞ்சிதா.

“ரஞ்சி…”என்ற அழைப்பில் “ஆதவ், சொல்லுங்க நீங்க ஏன் இங்க, உள்ள சிந்துவிற்கு நலுங்கு வைக்கிறாங்க.நீங்க போய் பார்க்கலையா”என்றாள்.

“ஹ்ம்ம்…. நீங்க வரலையா.”

“நான் இங்க இருந்தே பார்த்துக்கொள்வேன் ஆதவ்” என்று வலியோடு புன்னகைத்தாள்.

சுசிலா அம்மாவை அழைத்து வந்த கீதா சிந்துவிற்கு நலுங்கு வைக்க உதவினார்.

காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக்கொண்டாள் சிந்து.

தன் அறையில் இருந்து வெளியே வந்தவன் சிந்துவை கண்டு வாயடைத்து நின்றான்.

எத்தனை அழகு…. மஞ்சள் நிற புடவையில் தங்கம் என ஜோலித்தாள்.

மேலும் அவள் கன்னங்கள் வெக்கத்தால் ரோஜா இதழினைப் போல் சிவந்து மினிமினுத்தது.

கூட்டத்தை விலக்கி விட்டு சிந்துவை நோக்கி வர, “விக்ரம் தம்பி நீங்க இப்போ சிந்துவை நேருக்கு நேர் பார்க்கக் கூடாது.

நலுங்கு வச்சு முடிச்சாச்சு.

எதுவா இருந்தாலும் இனி நாளைக்கு காலைல மண மேடையில் தான் அவள் முகத்தை பார்க்க வேண்டும். இது தான் சாஸ்திரம்” என்றார் அம்சவேணி.

“அட போங்க அத்த இந்த காலத்துல போய், நான் என் பொண்டாட்டிக்கு நலுங்கு வைக்க வேண்டாமா அத்த”என்றான்.

“சரி தம்பி உங்க நீங்க தாராளமா உங்க பொண்டாட்டிக்கு நலுங்கு வைங்க. மனசளவுல இவ்ளோ அன்யோனியம் இருக்கும் போது இந்த சாஸ்திரம், சாம்பிராதாயம் எல்லாம் எதற்கு.

நீங்க போய் நலுங்கு வைங்க தம்பி”என்றார் அம்சவேணி.

அவன் சிந்துவை ரசித்துப் பார்த்தப்படி அடி மேல் அடிவைத்து நடந்தான்.

சிந்து அவன் பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் வெட்கத்தால் தலை தாழ்த்திக்கொண்டாள்.

சந்தனத்தை எடுத்து அவள் கன்னங்களில் பூச கண்களை மூடி அந்த அற்புத தருணத்தை ரசித்தாள்.

“சிந்து ஐ…. லவ்…யூ….”என்றான்.

அவள் அவனை நிமிர்ந்து கை எடுத்துக்கும்பிட்டு தன் கண்ணீரால் நன்றியை தெரிவித்தாள்.

அங்கு இருந்த அனைவரும் பூவிதலை அவர்கள் மேல் தூவி வாழ்த்தினர்.

 

அதிகாலை….மண்டபம் முழுக்க சொந்த பந்தங்கள் கூடி இருக்க, அக்கினி மூட்டப்பட்டு மந்திரங்கள் ஓதிக் கொண்டு இருந்தனர் ஐயர்.

 

“சொல்லுங்க விக்ரம் அவரை உங்களுக்கு எப்படி தெரியும்?

சொல்லுங்க…..”

“சிந்து ப்ளீஸ் நான் சொல்வதை கொஞ்சம் பொறுமையாக கேள்”.

“நான் எதையும் கேட்க தயாரா இல்லை இனி இந்த கல்யாணம் நடக்காது. நான் நல்லா ஏமார்ந்திருக்கேன்.கல்யாணத்தை நிறுத்துங்க” என்று கத்தினாள் சிந்து.

தென்றல் மீண்டும் வீசும்…

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!