Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 39

தென்றல் – 39

 

“டேய்…கவனமா கேளுங்க. இன்னைக்கு விக்ரமோட கல்யாணம். எல்லாரும் கல்யாணத்துல ரொம்ப கவனமா இருப்பாங்க. இது தான் முக்கியமான தருணம்.



Advertisement

அந்த பைத்தியத்தை கொன்றுவிடுங்கள்.

இந்த முறை மிஸ் பண்ணீங்க,நானே உங்களை கொன்னுருவேன்” என்றான் ராபர்ட்.

“இந்த முறை மிஸ்சே ஆகாது சார். உங்க தங்கச்சியை கொன்னு உங்க பழைய கணக்கை தீர்த்து விடுகிறோம்” என்று படையெடுத்து சென்றனர் குண்டாக்கள்.

Advertisement

சுசிலா என்று கண்களை இறுக்கி மூடி பழைய நினைவுகளை நினைவுப்படுத்தினான் ராபர்ட்.

Advertisement

“இங்க பாரு எஸ்தர் நீ அந்த ஆளை திருமணம் செய்து கொள்வது எனக்கு பிடிக்கல.

அவன் ஒரு ஹிந்து. நமக்கும் அவங்களுக்கும் ஒத்துவராது உன் காதலை நீ மறந்துரு.

நான் பார்த்து இருக்கும் மாப்பிள்ளையை கட்டிக்கோ. அப்படி எங்க பேச்சை மீறி நீ அவனை தான் கட்டிப்பேன்னு சொன்னா, நீயும் இருக்க மாட்ட, அவனும் இருக்க மாட்டான் ஜாக்கிரதை” என்றார் ராபர்ட்.

Advertisement

“அண்ணா…நீ என்னை கொன்னு போட்டாலும் சரி, நான் அவரை திருமணம் செய்து கொள்வது உறுதி.

வாழ்ந்தால் அவரோடு இல்லையேல் மண்ணோடு” என்றார் சுசிலா (எஸ்தர்)

“அதையும் பார்க்கலாம்” என்று சுசிலாவை அறையில் இட்டு கதவடைத்தார்.

“அம்மா…நீங்க அக்காவை பத்திரமா பார்த்துக்கோங்க, நாளைக்கு காலையில் கல்யாணம். நான் அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு வருகிறேன்” என்று வெளியே சென்றான்.

“அம்மா…ப்ளீஸ். என்னை அவரோடு வாழ விடுங்கள். இல்லையேல் என்ன கொன்னுருங்க. தயவு செஞ்சி இந்த கல்யாணம் எனக்கு வேண்டாம் அம்மா” என்று கெஞ்சினார்.

“இங்க பார் எஸ்தர். எனக்கு உன் மனசு புரியுது ஆனா எனக்கு உன் சம்மததை விட என் மதம் தான் எனக்கு பெரியது” என்றார்.

“அம்மா…. ஜாதி, மதம் இதெல்லாம் உனக்கு என்ன கொடுத்துச்சு. நாம எல்லாம் மனுசங்க” என்றாள் எஸ்தர் (சுசிலா )

சற்றே யோசித்தவர் இறுதியில்

“நீ பேசாம உன் அண்ணன் பேச்சை கேளு, இப்படி அழுது ஆர்ப்பாட்டம் பண்றதுல எந்த பயனும் இல்லை எங்களுக்கு எங்க மதமும், மானமும், மரியாதையும் தான் முக்கியம்” என்று கூறிவிட்டு சென்றார்.

அடுத்த நாள் காலை கல்யாண ஏற்பாடுகள் நடந்துக் கொண்டு இருக்க, ஃபாதர் வீட்டுக்கே வரவழைக்கப்பட்டு இருந்தார்.

“ராபர்ட் நீ ஏன் நம்ம தேவாலயத்தில் திருமணத்தை நடத்தாமல் இப்படி யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்து நடத்துகிறாய் ஏதாவது தவறு செய்கிறாயா” என்றார் ஃபாதர்.

“ஃபாதர் எஸ்தர் வழி மாறி போகிறாள். அவள் மாற்று மதத்தை சார்ந்த ஒருவனை காதலிக்கிறாள்.

என்னால எப்படி அவர்களை சேர்த்து வைக்க முடியும்.

அதான் அவசர அவசரமாக இந்த திருமணத்தை நடுத்துக்கிறேன்” என்றான் ராபர்ட்.

“ராபர்ட் என்ன நினைச்சு நீ இதெல்லாம் பண்ணிக்கொண்டு இருக்க.

மனம் பொருந்தாத இருவரை சேர்த்து வைக்க நம் மதத்தில் அனுமதி இல்லை.

இந்த கல்யாணம் நடக்காது” என்று வெளியே செல்ல, அவரை நான்கு ஐந்து அடியாட்கள் சூழ்ந்தனர்.

“ஃபாதர் நீங்க வேண்டும் என்றால் இயேசுவோட வழியில் நீதி நேர்மை நியாயம்னு இருங்க, ஆனா எங்களுக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை.

எனக்கு என் மதம் தான் மதமே.

மரியாதையா கல்யாணத்தை நடத்தி வைத்து விட்டு போங்க.இல்லை என்றால் நீங்க ஜிசஸ் கிட்ட போகவேண்டியது இருக்கும்”என்று அவரை ஏளனமாய் பார்த்தான்.

“என்ன மிரட்டுறியா ராபர்ட். நான் உனக்கு கட்டுப்பட உன் கையால் இல்லை. நான் இறைவனுக்கு மட்டும் தான் பயம் கொள்வேன் தவிர உன்னை போலே மதவெறி பிடித்த மிருகத்திற்கு ஒரு போதும் நான் பயம்கொள்ள மாட்டேன்” என்றார் ஃபாதர்.

அவன் கண்ணால் தன் ஆட்களை ஏவ ஃபாதரை கட்டையால் அடித்தனர். முகம் கை கால்கள் அனைத்திலும் இரத்தம் வழிய “அச்சோ…நான் தான் சொன்னன்ல ஃபாதேர், பாருங்க இப்போஇப்படி…வயசான காலத்துல இதெல்லாம் தேவையா.

இங்க பாருங்க மாப்பிள்ளை ரெடி, பொண்ணும் ரெடி சும்மா முரண்டு பிடிக்காமல் கல்யாணம் பண்ணிவைங்க ஃபாதர்” என்றான் ராபர்ட்.

“நீ ரொம்ப தப்பு பண்ற ராபர்ட்.

உன்னை அந்த ஆண்டவரே மன்னிக்க மாட்டார்” என்றார்.

“அம்மா…. எஸ்தரை கூட்டிட்டு வாங்க இந்த கிழவன் சும்மா சொன்னதையே சொல்லி சாவடிக்குறான்” என்றான்.

“ராபர்ட்…. உன் தங்கச்சி…உன் தங்கச்சி…என்று அழுதுக்கொண்டே காணோம் டா”என்று பதறினார்.

என்ன சொல்ற என்று அறைக்குள் செல்ல அங்கு ஒரு கடிதம் இருந்தது.

“மதத்தை விட மனிதம் பெரியது.

கடவுளை விட காதல் சிறந்தது.

உங்கள் மதமும் வேண்டாம் நீங்களும் வேண்டாம். இப்படிக்கு உங்கள் எஸ்தர் – அவரின் சுசிலா” என்று எழுதப்பட்டு இருந்தது.

அவமானம் தாங்காமல் ராபர்ட் அம்மா த*கொலை செய்துக்கொண்டார்.

அன்னையில் இருந்து ராபர்ட்க்கு முதல் எதிரி சுசிலாவின் குடும்பம் தான்.

சுசிலாவின் கணவரை கொன்றான்.

அவன் தான் தன் சொந்த தங்கச்சியின் மகள் என்றும் பாராமல் இனியாவை கார் ஏற்றிக்கொண்டான்.

அந்த அதிர்ச்சியில் தான் சுசிலா மனம் பாதிக்கப்பட்டார்.

அனைத்தும் ஒரு காட்சியாய் வந்து போனது ராபர்ட் நினைவில்.

உன்ன கொள்ளாம விட மாட்டேன்.

“நீ, உன் மருமகள், உன் மகன் அனைவரும் இன்றோடு பரலோகம் அடையப்பபோறீங்க…. ஹா…ஹா..”என்று சிரித்தான்.

“சிந்து நீ இன்னைக்கு ரொம்ப அழகா இருக்கமா. என் கண்ணே பட்டுவிடும் போல் இருக்கு” என்று திருஸ்ட்டி முறித்தார் அம்சவேணி.

அம்மா, உனக்கு உன் பெரிய பொண்ணு மேல தான் பாசம், என் மேல உனக்கு பாசமே இல்லை” என்றாள் துளசி.

“துளசிமா நீயும் தான் ரொம்ப அழகு. என் பொண்ணுங்க ரெண்டு பேரும் தங்க விக்ரகம், அழகுக்கு என்ன பஞ்சம். இதுல யாரு ஒசத்தினு அளக்க முடியுமா”என்று துளசிக்கும் திருஸ்ட்டி கழித்தார்.

“சரி…சரி…கீழ உன்ன கீதா அக்கா கூப்பிட்டாங்க வா” என்று அம்சவேணியை அழைத்து சென்றாள் துளசி.

கல்யாண கனவுகளோடும், மனம் நிறைந்த காதலோடும் முக்கூர்த்த நேரத்தை எதிர் நோக்கி காத்திருந்தாள் சிந்து.

“என்ன விக்ரம் இந்த பக்கம் போறாரு?

மாப்பிள்ளை சார அவருக்கே தெரியாம நாம சைட் அடிப்போம். இன்னும் சில மணி நேரத்தில் எல்லாம் அவர் என் கணவர். இப்போ என் காதலன். என் காதலனை ரசித்து விட்டு வருகிறேன்” என்று அவன் பின்னே தொடர்ந்தாள் சிந்து.

பட்டு வேட்டி சட்டையில் விக்ரம் அழகிய தமிழ் மகனாய் தோன்றினான்.

“என்ன இவர் எங்க தான் அப்படி போகிறார். முகூர்த்ததுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் தான் இருக்கு” என்று சந்தேகம் கொண்டாள்.

யாரோ தன்னை பின் தொடர்வதை உணர்ந்து திரும்பி பார்த்தான் விக்ரம்.

அங்கு யாரும் இல்லை. சிந்து அவன் திரும்பும் வேகத்தில் தன்னை சுவரின் பின்னால் மறைத்துக்கொண்டாள்.

மீண்டும் நடந்தான்.

அவளுக்கு சந்தேகம் மேலும் அதிகரித்தது.

“விக்ரம்மிற்கு என்ன ஆச்சு. ஏதோ தப்பா இருக்கே” என்று குழப்பதோடு அவன் செயலை கவனிக்க,

அங்கு வந்தார் விக்ரமின் முன்னாள் கார் ஓட்டுநர்.

“இவரு…இவர…நான் எங்கயோ பார்த்து இருக்கேன். இவர் யாரு எனக்கு நியாபகம் வரவில்லை.

ஆனா எங்கையோ பார்த்து இருக்கேன்” என்று மூளையை போட்டு கசக்கினாள் சிந்து.

“ஏய்…இப்போ எதுக்கு நீ இங்க வந்த?

உன்ன தான் இங்க வர கூடாதுனு சொல்லி இருக்கேன்ல, சிந்து உன்னை பார்த்துவிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

எல்லாம் தெரிந்து இருந்தும் நீ ஏன் இப்படி பண்ற.

சார், நானும் வேணும்னு இங்க வரல சார் என் மனைவிக்கு அவசரமா இருதய அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும். அதற்கு அஞ்சு லக்சம் செலவு ஆகும். வேறு வழியில்லாமல் தான் விக்ரம் சார் உங்கள் உதவியை நாடி வந்தேன்”என்றார் அவர்.

“பணம் வேணுமா எனக்கு கால் பண்ண வேண்டியது தானே.

சரி சரி நீ இங்க இருந்து போ சிந்து கண்ணுல மட்டும் நீ படவே கூடாது புரியுதா உன் அக்கௌன்ட்க்கு பணம் வந்து சேரும்” என்றான் விக்ரம்.

“சரிங்க சார்…ரொம்ப நன்றிங்க. என் குடும்பமே உங்களுக்கு நன்றியோட இருப்போம்” என்று விட்டு கை எடுத்துக்கும்பிட்டு சென்றார் ஓட்டுநர்.

சிந்து ஆழ்ந்த யோசனைக்கு பின், நினைவு வந்தவளாய்…”இவரு…இவரு” என்று கடந்த காலத்தை நினைவுக்கு கொண்டு வந்தாள்.

“இவர் அன்று அந்த சூழ்நிலையில் உதவி கேட்டும் தன்னை தனியே அந்த மிருங்களுக்கு இறையாக விட்டு சென்ற அதே ஆள்.

கருணையற்ற மிருகம். அவர் நினைத்து இருந்தாள் நிச்சயம் தன்னை காப்பாற்றி இருக்க முடியும். ஆனால் அவர் அதை செய்யவில்லை.

இந்த ஆள் எப்படி இங்க. அதுவும் விக்ரம் கூட ரொம்ப சகஜமா பேசுறாரு.”

கோபத்தோடு சென்றவள் விக்ரமின் சட்டை காலரை பற்றி கொண்டு,

“இங்க என்ன நடக்குது,அவரை உங்களுக்கு எப்படி தெரியும்.

அந்த ஆள் எதற்காக இங்க வரணும், உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்.

சொல்லுங்க…

இதுல என்னவோ ஒரு சூழ்ச்சி இருக்கு. என் வாழ்க்கையே இந்த ஆள்னாலே தான் போச்சு.

இந்த கல்யாணம் இனி நடக்காது. கல்யாணத்தை நிறுத்துங்க”என்று கதறினாள். அவனை தன்னால் முடிந்தவரை அடித்தாள்.

“சிந்து ப்ளீஸ்…நான் சொல்வதை கேளு.

நான் எல்லா உண்மையையும் உனக்கு சொல்றேன்.

கொஞ்சம் பொறுமையா இரு சிந்து” என்று அவள் கைகளைப் பற்றி தன் மார்போடு அணைத்தான் விக்ரம்.

“என்ன விடுங்க, அப்போ…அப்போ…அன்னைக்கு கார்ல இருந்தது நீங்க…. நீங்க தான்ல.

கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம அன்னைக்கு என்ன அந்த மிருகங்கள் கிட்ட விட்டு போனது நீங்களா விக்ரம்.

என்னால நம்பவே முடியல.

உங்களை நான் எவ்ளோ நம்பினேன்.

என் இந்த நிலைமைக்கு காரணமே நீங்க தான்.

அன்னைக்கு கை எடுத்து கும்பிட்டேன். என்னை காப்பாத்துங்கனு ஆனா என் கதறல் உங்க காதில விழல.

அப்போ என் மனநிலை என்னவா இருந்துச்சுனு உங்களுக்கு தெரியுமா.

மரண பயத்தை விட பல மடங்கு. என் மானத்தை காப்பாற்றிக்கொள்ள தானே நான் உங்க கிட்ட உதவி கேட்டான் ஆனா நீங்க என் வாழ்க்கையை இப்படி கெடுத்திட்டீங்களே.

என்ன பொறுத்தவரை என்ன க*பழிச்ச அந்த மிருகங்களுக்கும் உங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

செய்வதை எல்லாம் செஞ்சி விட்டு

ஏதோ தியாகி மாதிரி என் கிட்ட நாடகம் ஆடி..ச்ச…நீயெல்லாம் ஒரு மனுசனா.

உன்ன எவ்ளோ நம்பினேன்.

அதுக்கு என் மார்பில் கத்தி எடுத்து குத்தி கொன்று இருக்கலாம். உன்னை நேசித்த பாவத்திற்காக மரணத்தை சந்தோசமா ஏற்றுக்கொண்டு இருப்பேன். ஆனா நீ…. நீ…. உன் முகத்தை பார்ப்பதற்கு கூட எனக்கு அசிங்கமா இருக்கு.

இனி ஒரு நிமிஷம் கூட நான் இங்கே இருக்க மாட்டேன்.நான் போறேன், உன்னை விட்டும், உன் வீட்டை விட்டும்.

இந்த கல்யாணம் இனி நடக்காது.

ஒரு பொண்ணோட கண்ணீரை நிராகரித்து சென்ற உன்னை திருமணம் செய்துக்கொண்டு உனக்கு பொண்டாட்டியா வாழ்வதை விட நான் காலம் முழுக்க இப்படியே வாழ்த்துவிட்டு போகிறேன்” என்று அங்கிருந்து செல்ல, அவள் கையை பற்றினான் விக்ரம்.

“சீ என் கையை விடு” என்று உதறிவிட்டு சென்றாள் சிந்து.

தென்றல் மீண்டும் வீசும்…..

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!