Skip to content
Post Views: 3,581
குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க எங்கோ இலக்கின்றி வெறித்துக் கொண்டிருந்தது பவித்ராவின் பார்வை.
நானும் எவ்வளவு தூரம் தான் ஓடுவேன்…? ஏன் என் விதி என்னை துரத்தி துரத்தி அடிக்கிறது…. நைந்து போன நிலையில் மருதலித்து அமர்ந்திருந்தாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று மூளை உணர்த்தவில்லை.
சௌமி வீட்டிற்குள் வந்து எதுவும் பேசாது இரவு உணவிற்கு இட்லி ஊத்தி வைத்து விட்டு ஈஸியாய் செய்யக் கூடிய பாம்பே சட்னியை செய்து முடித்தாள்.
கிச்சனில் பாத்திரம் உருளும் சத்தமும் தாளிப்பு வாசனையும் உணர்ந்து கிச்சனுக்குள் நுழைந்தாள் பவித்ரா.
Advertisement
வா பவி… டிபன் வேலை முடிச்சுட்டேன் சாப்பிடு!
இல்லக்கா எனக்கு பசிக்கல.. நீங்க சாப்பிடுங்க!
அது எப்படி பசிக்காம போகும்? மணி எட்டாகுது.
Advertisement
பவியின் கை பிடித்து இழுத்து போய் டைனிங் டேபிளில் அமர்த்தியவள் வற்புறுத்தி உண்ண வைத்தாள்..
Advertisement
சாப்பிடும் போது பேச வேண்டாம் என்று அமைதி காத்தவள் உண்டு முடித்த பின்னே…பவி ஹரி ஏதோ டென்ஷனில் பேசிட்டார். பேசினதை எண்ணி ரொம்ப வருத்தப்பட்டார். உனக்கு சாரி சொல்ல சொன்னார்.
சௌமியின் பேச்சு கேட்டு அவள் பதிலேதும் பேசவில்லை.
குடலை உருவும் ஆழம் வரை கத்தியை பாய்ச்சிவிட்டு வழியும் குருதி கண்டும் உயிர் துடிக்கும் வேதனை கண்டும் சாரி என்று ஒற்றை வார்த்தை சொல்லி விட்டால் போதுமா?
Advertisement
பவியை பொறுத்தவரை தமயந்தியும் ஹரியும் ஒன்று தான். என்ன தமயந்தி உயிர் கொடுத்து உருவம் கொடுத்த உரிமையில் கடுமை காட்டி நெஞ்சில் நெருப்பை கொட்டினாள்.ஹரிசரணோ சம்மந்தேமே இல்லாமல் நெஞ்சில் நெருஞ்சில் முள்ளை கொட்டினான்.
ஹரிக்கு வக்காலத்து வாங்கறேன்னு நினைக்காத பவி…. ஹரியோட மனநிலையும் கிட்டத்தட்ட உன்னோட மனநிலை தான்…
அக்கா நான் போய் சாரை அனுப்புறேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க…. எழுந்து அறைக்குள் சென்றுவிட்டவள் குழந்தைகளை தான் பார்த்துக் கொண்டு அகிலனை சாப்பிட அனுப்பினாள்.
என்ன சௌமி ஏதாவது பேசினியா? சங்கடமாய் கேட்டான் அகிலன்.
பேசினேன்… அவ சைடு நோ ரியாக்ஷன்.
ம்ம்ம்ம்… தெரிந்தது தான். காயம் எவ்வளவு ஆழமோ… அதை பொறுத்து தான் காயம் ஆறும் நாளும் அதிகமாகும்.
இவர்கள் பேசிக் கொண்டிருக்க சௌமியின் மொபைலில் அழைப்பு.
சொல்லு ஹரி.
பவி சாப்பிட்டாளா?
ம்ம்ம்ம்… வற்புறுத்தி சாப்பிட வச்சேன்.
தேங்க்ஸ்!
நீ சாப்பிட்டியா ஹரி?
ம்ம்ம்… நூடுல்ஸ் செய்தேன்!
ஏதாவது பேசினியா?
பேசினேன்… உன் சார்பா சாரி சொன்னேன்.
சரி விடு சௌமி… மேற்கொண்டு அவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்.
ம்ம்ம்ம் குட்நைட் ஹரி.
“——————“
சமீப நாட்களாகவே உறக்கம் பாவபட்டு அதுவாய் தழுவினால் தான் உண்டு என்ற நிலையில் தான் இருக்கிறாள் பவித்ரா.
இன்றும் அவ்வாறே…. உருண்டு புரண்டும் மனதின் வலி அழுத்தி பிடிக்க நித்ராதேவி எங்கணம் நெருங்க…
எப்போது கண்ணயர்ந்தாள் என்று அவளுக்கே தெரியாது…
எத்தனை மணிக்கு உறங்கினாலும் ஐந்தரைக்குள் எழும் பழக்கம் கொண்டவள். அலாரம் தனியே வைக்கத் தேவையில்லை ஆழ்மனமே எழுப்பி விட்டுவிடும். இன்றும் அவ்வாறே… ஐந்தரைக்கு எழுந்து காலைக்கடன்கள் முடித்து தன்னறையின் பால்கனி கதவு திறந்து ஜாடியில் வைத்த துளசி செடிக்கும் பக்கத்தில் வைத்துள்ள ரோஜா செடிக்கும் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
மேலிருந்து தண்ணீர் அவள் மேல் பூந்தூரலாய் விழ… கண்ணை கசக்கிக் கொண்டு வானத்தை பார்த்தாள். மழை எதுவும் பொழியவில்லையே….
வியந்து ஒரு கணம் நின்றவள் மீண்டும் செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்க…. மீண்டும் அவள் மேல் பூந்தூரல் .. நேரே அண்ணார்ந்து மேலே பார்க்க… மேலிருந்து அவள் மீது நீர் தெளித்து கொண்டிருந்தான் ஹரிச்சரண்.
கடுமையான முறைப்புடன் இவள் மேலே பார்க்க.. தன் பால்கனியின் கண்ணாடி தடுப்புக்கு போட்டிருக்கும் பிடியை பிடித்து சாய்ந்து ஒய்யாரமாய் நின்றவன் மஞ்சள் வண்ண சல்வாரில் ரோஜாவாய் மலர்ந்து நின்றவளை அள்ளி அணைத்து ஆலிங்கணம் செய்து கொண்டான் மனதிற்குள்ளே.
அவள் சிடு சிடுத்து முறைக்க….கண்சிமிட்டி குட் மார்னிங் என்றான்.
இவள் பல்லை கடித்துக் கொண்டு உள்ளே வர… மொபைல் அழைத்தது. அவளுக்கு புரிந்து போனது அந்த வேலையத்தவன் வேலை என்று…
இரண்டு முறை அழைப்பு வந்து நின்று போக… டொய்ங் என்று மெசேஜ் வந்து விழும் சத்தம்.
அதை ஏன் பார்க்க வேண்டும் அவனுக்கு ஏன் முக்கியத்துவம் தர வேண்டும்…அசட்டையாய் தோளை குலுக்கிக் கொண்டு கிச்சனுக்குள் சென்று காபி போடும் முனைப்பில் இருந்தாள்.
காலிங் பெல் சத்தம்…!
இந்த ஆறேகால் மணிக்கு யாரா இருக்கும்? பாலை சிம்மில் வைத்துவிட்டு யோசனையினூடே கதவை திறந்தாள்.
வசீகர புன்னகையுடன் கதவில் காலூன்றி குட் மார்னிங் என்றான் ஹரி.
ச்ச…. இவனா தான் இருப்பான்னு யோசிக்காம போயிட்டோமே… தன்னையே நொந்து கொண்டவள் மீண்டும் கிச்சனுக்குள் நுழைய.
பவிம்மா ஒக கப் காபி தாகவச்சா? அத்தனை மென்மை அவன் குரலில்.
ஆயம்மா கையில் காபி குடிக்கிறது உங்க ஸ்டேட்டஸ்க்கு நல்லா இருக்காது. இன்னும் கொஞ்சம் நேரத்தில் உங்க பிரண்ட் எழுந்துடுவாங்க. அவங்க வந்து கலந்து தருவாங்க வெயிட் பண்ணுங்க!
மீரு ஆயம்மா காதுரா நா பிரியத்தமா… நா பங்காரம்.. அடி மன ஆழத்தில் இருந்து கர கரத்து வந்தது வார்த்தைகள்.
நீங்க பேசுறது அதிகபடின்னு உங்களுக்கு தோணல…?
நோ… ஹரி எப்போதும் அனாவசியமா பேச மாட்டான்.
இவன் முகத்திலா இந்த காலை பொழுது விடியவேண்டும்? தன்னையே நொந்து கொண்டாள்.
பொங்கும் பாலை அமர்த்தி விட்டு . மறுபுறம் டிகாஷனுக்கு காபி பொடி போட்டு பில்டரில் வெந்நீர் ஊற்றினாள்.
கிச்சன் வாயிலில் நின்றவன்…பவி நூவு பசுப்பு குலாபிலா
கனிப்பிஸ்துநாவு…. இதழ் பிரியாது நகைத்தவன் நல்ல பிள்ளையாய் போய் சோஃபாவில் அமர்ந்து கொண்டான்.
இந்த காண்டாமிருகம் காலையிலே வந்து என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிறானே…. என்னமோ பருப்பு பசப்புன்னு சொல்றான்… முணு முணுத்துக் கொண்டவள் டிகாஷன் இறங்கி விட்டதா என்று பில்டரை ஸ்பூன் கொண்டு ஓரத்தில் தட்ட…
கொட்டாவி விட்டபடி எழுந்து வந்தாள் சௌமியா.
ஹரி குட் மார்னிங்… அவிழ்ந்த கூந்தலை அள்ளி கொண்டை இட்டுக் கொண்டவள் பவி ஹரிக்கு பில்டர் காபி ரொம்ப பிடிக்கும்.. ஒரு கப் கலந்து கொடு… நான் பிரஷ்ஷப் ஆகிட்டு வரேன்.
அக்கா ஒரு நிமிஷம்… இங்க வாங்க…!
என்ன பவி… கையை உதறி நெட்டை உடைத்துக் கொண்டே வந்தாள்.
பசுப்பு குலா….. அப்படின்னா என்னக்கா….?
எது…. சரியாக தான் காதில் கேட்டதா என்று சௌமி விழி விரித்து பார்க்க…
அய்யோ போச்சு…. எழுந்து ஓடிவந்த ஹரி…. சௌமி உன் பொண்ணு சிணுங்குறா என்னனு பாரு என்றான்.
இருவரையும் ஏற இறங்க பார்த்துக் கொண்டே சென்றவளுக்கு உள்ளுக்குள் அவ்வளவு சிரிப்பு.
அடி லூசு நன்னு அடகண்டி மீக்கு தெலுகு செப்புதான்னு…
அவனை முறைத்துக் கொண்டே தனக்கு மட்டும் காபி கலந்து ஆத்திக் கொண்டிருந்தாள்.
எப்படி சொல்லணும்… ம்ம்ம்ம்.. என்னை கேளு தெலுகு சொல்லி தரேன்.
மஞ்சள் ரோஜா மாதிரி அழகா இருக்கேன்னு சொன்னேன். அதை சொல்ல தான் கால் பண்ணேன் மெசேஜ் பண்ணினேன். நீ கால் அட்டன் பண்ணி இருந்தா நான் இப்போ வந்திருக்கவே மாட்டேன்… இதுவரை இல்லாத ஒருவித உணர்வு அவன் விழியிலும் மொழியிலும்.
நீங்க நான் இருக்கும் வரைக்கும் இங்கே வராம இருக்கிறது பெட்டர்.
அப்படியா… அவள் பதமாய் ஆற்றி வைத்திருந்த காபியை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.
அய்யோ அது நான் சுகர் போதுமான்னு டேஸ்ட் பண்ணின காபி.
அப்புடு அதி மரிங்கா ருசிகரங்கா உண்டுந்தி. கண்மூடி ஒவ்வொரு மிடராய் ரசித்து சுவைத்து அருந்தி முடித்தவன் பவிம்மா காபிக்கு பால் ரொம்ப காய்ச்சக் கூடாது. காபி ரொம்ப திக்கா இருந்தாலும் டேஸ்ட் நல்லா இருக்காது… அவளுக்கு காபி போட டிப்ஸ் கொடுத்தவனை ஆனமட்டும் முறைத்து பார்த்தவள் இடியட் என்றாள் பல்லை கடித்தபடி.
நேனு இடியட்டா….? எஸ் இடியட்… அதான் நேத்து அர்த்தம் இல்லாத கோபத்தில் உன்னை கண்டபடி பேசிட்டேன்.சாரிரா அம்மாயி.
ஓரளவு சாந்தமாய் பேசிக் கொண்டிருந்தவள் அவன் சாரி கேட்கவே உக்கிரமாய் உருமாறி போனாள்.
இவன் மனிதனா.. இவனுடன் என்ன பேச்சு வேண்டி கிடக்கு என்பது போல் தனது அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள்.
“—————–“
என்ன ஹரி உன்னோட பசுப்பு குலாபி என்ன சொல்றாங்க…? சிரித்துக்கொண்டே வந்து நின்றாள் சௌமி.
ஹே…. நீ வேற…? நாண சிவப்பில் அவன் முகம் சூடேறிப் போனது.
என்ன ஹரி நீ பிரேமம் ஏ ஸ்தாயிலோ உந்தி…? வெகு அக்கறையுடன் கேட்டான் அகிலன்.
நீங்க நெட் பிளீக்ஸ் அமேஸான் எல்லாம் யூஸ் பண்றது இல்லை போல..
ஏன்டா?
எங்க கதையை ஓட்டி பார்க்கிறீங்களே… சிரித்துக்கொண்டே சென்று விட்டான் ஹரிச்சரண்.
ஹரி ஒரு நிமிஷம்?
ஏமிரா?
பவித்ராவை காயப்படுத்தவோ கட்டாயப்படுத்தவோ செய்துடாத ப்ளீஸ். அந்த பொண்ணு இதுக்கு மேல தாங்காது.
அகி போதும் ஸ்டாப்பிட் . நான் பார்த்துக்கிறேன். அவளை காயப்படுத்தினா எனக்கு தான் வலிக்கும். அவ நா பசுப்பு குலாபி… தீவிரமாய் சொல்லி சென்றான்.
“——————“
என்னங்க நாம தப்பு பண்றோம்னு தோணுது.
என்னடி தப்பு பண்றோம்?நாம ஹஸ்பண்ட் அன் வைஃப்…. சீரியஸாய் அகிலன் சொல்ல… பேச்சை பாரு! நங்கென்று நடு மண்டையில் கொட்டி வைத்தாள்.
ரொம்ப மொக்க போடாதீங்க… நான் ஹரி பவியை பத்தி சொல்ல வந்தேன்.
ஏன் அவங்களுக்கு என்ன?
இல்ல நாம ஹரி லவ்வுக்கு சப்போர்ட் பண்ணி என்கரேஜ் பண்றோமே இது சரியா வருமா? தயங்கினாள் சௌமி.
இதோ பாரு சௌமி நீ பவியோட அம்மாவை பத்தி யோசிக்கிற…
நான் பவிக்கு நல்ல வாழ்க்கை அமையப் போகுதுனு சந்தோஷப் படறேன்.
இதெல்லாம் சரியா வருமா?
ஏன் வராது?
இல்ல தமயந்தி ஆன்டிக்கு லவ் ஆகாதே… சும்மாவே பவித்ராவை அடித்து துவைத்துட்டாங்க… ஹரி வேற ஆளு… நாத்தனார் பையனுக்கு கொடுக்க மாட்டேன்னு சொல்றவங்க வேற ஸ்டேட்டில் வேற இனத்து மாப்பிள்ளைக்கு…
உன் கேள்வி நியாயம் தான் சௌமி. லவ் மேட்டரில் எதிர்ப்பு இருக்க தான் செய்யும்.
நம்ம லவ்வுக்கு எவ்வளவு போராடினோம்…. ஹரி இல்லைனா நமக்கு மேரேஜ் நடந்திருக்குமா?
எல்லாம் ஓகே தான். இங்கே வந்து தான் பவித்ராக்கும் ஹரிக்கும் காதல் வந்துச்சு நாமளும் உடந்தைனு நம்மை பிளேம் பண்ண போறாங்க.
பண்ணட்டும்!
பவித்ராவை அவங்க அம்மா திரும்ப கஷ்டபடுத்திடு வாங்களோன்னு தான் சங்கடமா இருக்கு.
ஹரியை பத்தி உனக்கு முழுசா தெரியல சௌமி.
இனி நாம நினைச்சா கூட எதுவும் பண்ண முடியாது.
நிஷ்டூராமாய் முறைத்து நின்றாள் சௌமி.
நிஜத்தை சொல்றேன். உங்க வீட்டுல வந்து உன்னை பெண் கேட்கும்போதே நீங்களா பொண்ணு கொடுத்தா டீசண்டா கிராண்டா மேரேஜ் பண்ணலாம். நாங்க தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணி வைத்தால் உங்களுக்கு அசிங்கம்னு தொடையை தட்டினவன்.
அது தான் பயமா இருக்கு… கவலையில் இறங்கியது அவள் பேச்சு.
ஹரிச்சரண் நந்தமூரி எர்ரபள்ளி ஃபுல் ஃபார்மில் இருக்கான். யாராலேயும் அவனை ஒன்னும் பண்ண முடியாது. அவன் முடிவு பண்ணினா பண்ணினது தான். எக்காரணம் கொண்டும் அவன் பேக்கடிக்க மாட்டான்.
இன்னொன்னு சொல்லவா? அவன் ரொம்ப நாளெல்லாம் வெயிட் பண்ணமாட்டான்…
சீக்கிரம் கல்யாணம் பண்ணிடுவான்.
சீக்கிரம்னா…?
இன்னைக்கோ… நாளைக்கோ…
எ… என்னங்க…. நடுங்கி விட்டாள்
அடி லூசு சும்மா சொன்னேன். ஆனா மேரேஜை இனி தள்ளி போட மாட்டான். அவங்க அம்மா அழுது புலம்புறாங்க.
ம்ம்ம்ம்ம்ம் என்றாள் பெருமூச்சுடன்.
சௌமி நீ என்ன பண்ற… தாரணி ஆன்டிக்கு கால் பண்ணி ஹரியை மேரேஜ் பண்ண சொல்லி பிரஷர் கொடுக்க சொல்லு!
என்னங்க இது இப்படி கேவலமா பிளான் போடறீங்க?
சீரியஸா தான் சொல்றேன் சௌமி. எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கணும் இல்லையா. பவிக்கும் ஒரு நல்லது நடக்கணும். அது நம்ம மூலமா நடக்கட்டும்.
“——————“
சொல்லுடா யுவி நல்லா இருக்கியா?
நல்லா இருக்கேன்கா… நீ எப்படி இருக்க?
நல்லா இருக்கேன் என்றவள் குரலில் அவ்வளவு அயற்சி.
ஊருக்கு போனியா?
ம்ம்ம்ம்… போன வாரத்துக்கு முன்னாடி வாரம் தான் போயிட்டு வந்தேன்.
ஊரில் எல்லாரும் நல்லா இருக்காங்களா?
எல்லாரும் நல்லா இருக்காங்கக்கா.
ஜெயா பெரியம்மாவை மாடு கீழே தள்ளி தோள் பட்டை எலும்பு பிராக்சர் ஆகிடுச்சு.
அய்யோ அப்புறம்…?
புத்தூர்ல போய் கட்டு போட்டுட்டு வந்திருக்காங்க.
அப்புறம் இன்னொரு விஷயம்கா சபிதா அக்கா வந்து பெரியம்மாவை பார்த்துச்சு.
நிஜமாவா யுவி?
ம்ம்ம்ம்… ஆமாங்கா.
எப்படிடா… பெரியப்பா பெரியம்மா எதுவும் சொல்லலையா? வியப்புடன் கேட்டாள்.
சபிதா அக்காக்கு கையில் ஒரு வயசு ஆண் குழந்தை இருக்கு. வீட்டுக்காரருக்கு EB யில் வேலை கிடைச்சுருக்காம்.
இது போதுமே பெரியம்மாவுக்கு என்றாள்.
அக்கா… இன்னொரு விஷயம்…
சொல்லு யுவி.
அது… அது என்னன்னா…
சொல்லுடா வீட்டுல ஏதாவது பிரச்னையா?
அக்கா ராஜேஷ் அத்தானுக்கு எங்கெங்கோ பொண்ணு பார்க்குறாங்களாம் அவர் கல்யாணத்துக்கு சம்மதிக்கவே மாட்டேங்கிறாராம்.
அதுக்கு?
இல்ல… கலா அத்தை நம்ம பாட்டிக்கு போன் பண்ணி உன் பேத்தி தான் என் புள்ள மனச கெடுத்துட்டா… என் புள்ள கல்யாணம் பண்ணிக்காம பிரம்மசாரியா இருந்தாலும் உன் பேத்தியை மட்டும் மருமகளா ஏத்துக்க மாட்டேன்னு கத்தி தீர்த்துட்டாங்க.
அம்மா ரொம்ப அப்சட். அழுதுட்டே இருக்காங்கக்கா. நம்ம மாமாட்ட உன் கல்யாணம் விஷயம் பேசி பேசி புலம்புறாங்க.
அக்கா எங்களை எல்லாம் நினைச்சு உன் கல்யாணத்தை தள்ளி போடாதேக்கா ப்ளீஸ்.
ம்ம்ம்ம்ம் என்றவளுக்கு மனசுக்குள் அவ்வளவு வலி.
அக்கா சொல்றேன்னு தவறா நினைக்காதக்கா… நீ சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோ அம்மாவை பார்த்தா பாவமா இருக்குக்கா.
சரிடா பெரிய மனுஷா… நீ நல்லா படி!
“——————“
தம்பியிடம் பேசிவிட்டு அழைப்பை துண்டித்த அடுத்த நிமிடம் மீண்டும் மொபைல் அழைப்பு.
சொல்லு யுவி!
யுவி இல்ல ஹரி… அட்டகாசமாய் சிரித்தான்.
நீங்களா?
ம்ம்ம்… மச்சான்னு நினைச்சியோ?
எது?
உன் தம்பின்னு நினைச்சியா? நான் உன்னோட ஆறு வயசு பெரியவன்மா.
ரொம்ப முக்கியம்!
இல்லையா பின்ன..?
எனக்கு இருக்குற பிரச்னை போதும்… ப்ளீஸ் என்னை டார்ச்சர் பண்ணாதீங்க.
எல்லா பிரச்னைக்கும் ஒரே சொல்யுஷன் தான் நீ மிசஸ் ஹரிசரணா மாறிட்டா போதும்!
உளறாதீங்க… ஒரு ஆயம்மாகிட்ட எப்படி பேசணும்னு தெரியல உங்களுக்கு?
பவி நான் பேசினத்துக்கு நடந்துகிட்டதுக்கு சாரி. உன் நிலைமை எனக்கு புரியாம இல்லை. நான் சீரியஸா தான் கேட்குறேன். சீக்கிரம் மிசஸ் ஹரிசரணா வந்துடு! அத்தனை தீவிரம் அவன் குரலில்.
ஷட்டப்… போய் பிழைப்பை பாருங்க சார்.. ஓய்ந்து போனது அவள் குரல்.
பவி சீக்கிரம் ஒத்துக்கோ… எனக்கு வயசாகிட்டே போகுதாம்.உன் அத்தகாரு டார்ச்சர் பண்றாங்க. அது தான் உன் மாமியார்.
ச்ச…
ஏய் குலாபி… தெலுகு தெரியலைன்னு கவலை படாதே… நான் நல்லா தமிழ் பேசுவேன் அது போதும்!
இனி கால் பண்ணீங்க அசிங்கமா பேசிடுவேன். பட்டென்று அழைப்பை துண்டித்தாள்.
‘————-“
நான் என்ன டீன் ஏஜ் பையனா? அடியேய் இந்த ஹரிசரண் ஆசைப்பட்ட ஒரே பொண்ணு நீ தான். நீ இவ்வளவு சுத்தலில் விடற…ஆற அமர லவ் பண்ண டைம் இல்லையே…
ஏற்கனவே முப்பது கம்ப்ளீட் இவ வேற இவ்வளவு பிகு பண்றா…
நானெல்லாம் சீரியஸ் மோடுக்கு போனா ஆன்டி ஹீரோவை விட மோசமான லெவல் தான். நம்ம குடும்ப பின்னணி அப்படி. மனதுக்குள் முணங்கி கொண்டான்.
———–தொடரும் ——–
error: Content is protected !!