Skip to content
Post Views: 5,851
“அறிவிலான் நெஞ்சுவந் தீதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம்
மு.வ விளக்க உரை:
அறிவில்லாதவவன் மனம் மகிழ்ந்து ஒரு பொருளைக் கொடுத்தலுக்கு காரணம், வேறொன்றும் இல்லை, அப் பொருளைப் பெறுகின்றவனுடைய நல்வினையே ஆகும்.”
“பேச வானு கூப்பிட்டா இது தான் என் வேலையானு கேட்டுட்டு ஏன் டா அடிச்ச அவனை?”
“வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறான். வேற என்ன பண்ண சொல்ற?”
Advertisement
“எதாவது பிரச்சனை ஆகிருந்தா தெரியும்..”
“அதான் ஆகலையே. ஏன் கத்திட்டே வர்ற.”
“உன்னை இத்தனை வருஷத்தில் இன்னமும் சரியா புரிஞ்சுக்கவே முடியலை டா அதி.”, என்றதற்கு ஒன்றும் கூறாமல் அமைதியாய் காரை இயக்கிக் கொண்டிருந்தான் அதிரன்.
Advertisement
மறுநாள் வேலைக்கு வந்தவள் அதிரனுக்கு நன்றி கூறுவதற்காக அவனது அறைக்குச் சென்றாள்.
Advertisement
அதென்னவோ இவனைப் பார்த்தாலே இப்போதெல்லாம் பதட்டம் அதுவாய் வந்து ஒட்டிக் கொள்கிறது.
கணினியில் கண்களைப் பதித்திருந்தவன் அவளிடமிருந்து பேச்சு வராமல் இருக்கவே,
“எஸ் ரஞ்சனா?”
Advertisement
“அது.. சார்.. நேத்து..”, என்றதில் பார்வையை அவள் புறம் திருப்பியிருந்தான் அதிரன்.
“தேங்க் யூ சொல்லலாம்னு..”
“தட்ஸ் ஓகே அப்பறம் எதுவும் ப்ராப்ளம் இருந்துதா?”
“இல்ல. ஒண்ணுமில்ல சார்.”
“ஃபைன். அதை மறந்துட்டு வேலையை கவனிங்க.”
“ஓகே சார்..”, என்றவள் அவள் போக்கில் வெளியேறியிருக்க எப்போதும் போல் அவளை அமர்த்தி பேசத் துடிக்கும் மனதினை கண்டு வியந்தவனாய் தன் வேலையை கவனித்தான்.
அப்படியான ஒரு வரி இரு வரி உரையாடல்களைத் தாண்டாமல் இருவரும் போக்கு காட்டிக் கொண்டிருக்க அன்று மாலை அலுவலகத்தில் இருந்து கிளம்பிய நேரம் தேவாவிற்கு ஒரு அழைப்பு வந்தது.
“ஹலோ தேவா நான் காத்யாயினி பேசுறேன்.”
“ம்மா சொல்லுங்க எப்படியிருக்கீங்க?”
“நல்லாயிருக்கேன் மா. நாளைக்கு சரஸ்வதி பூஜைல வீட்டுக்கு வந்து தாம்பூலம் வாங்கிட்டு போ தேவா.”
“!!”
“ஹலோ?”
“ஆங்.. மா வரேன் மா.”, என்றவளுக்கு பதில் கூறி அழைப்பைத் துண்டித்தவரிடம் இரு கட்டை விரல்களையும் நீட்டிச் சிரித்தனர் கயல்விழியும் காயத்ரியும்.
“அதி என்ன சொல்லுவானோ தெரியலை.”
“அதி அண்ணா அந்த நேரத்துக்கு வீட்டில் இருக்க எல்லாம் வாய்ப்பில்ல மா.
அதுவுமில்லாம நாங்க தான் இன்னும் அவங்களைப் பார்க்கவே இல்லை. இதை விட்டால் எங்களுக்கும் சான்ஸ் கிடைக்காது.”
“என்ன டி முடிவே பண்ணிட்டீங்களா?”
“நீங்க சொன்னப்போவே முடிவு ண்ணிட்டோம். இதில் சாருகேஷ் சொன்னதை வைச்சு அடிச்சு சொல்றோம் அவங்க தான் எங்க அண்ணி.”, என்றதில் பெண்கள் மூவருமாய் சிரித்தனர்.
காலையிலேயே அதிரனின் வீட்டிற்குத் தயாராகிக் கொண்டிருந்தவள் பல ஆயிரம் தடவை தனக்குத் தானே கேட்டுக் கொண்ட கேள்வியைத் தான் இப்போதும் தனக்குள் கேட்டு நின்றாள்.
எதற்காக வருகிறேன் என்று கூறினேன்? அது காத்யாயினி என்பதாலா அல்லது அதிரனின் தாய் என்பதாலா என்ற சிந்தனையில் தொலைந்தவள் வெளியே வந்த நேரம் அவினாஷ் தமக்கையைப் பார்த்து விழி விரித்தான்.
எப்போதாவது நடக்கும் குறிஞ்சிப் பூ பூக்கும் நிகழ்வு போன்றது தேவா புடவை உடுத்துவது.
என்னவோ அவளைப் புடவையில் பார்த்தாலே அவனுக்குத் தாயின் நினைவுகள் வந்துவிடும்.
அதை உணர்ந்ததாலோ என்னவோ அவள் புடவையை பெரும்பாலும் தவிர்த்து விடுவாள்.
இப்போதும் தம்பியின் பார்வையில் புன்னகைத்தவள் அவனது கன்னம் கிள்ளி சிரித்தாள்.
“காத்யாயினி அம்மா பூஜைக்காக வீட்டுக்கு கூப்பிட்டுருக்காங்க அவி. போயிட்டு வந்துறேன்.”
“சரிக்கா போயிட்டு வா..ம்ம் அக்கா ஒரு நிமிஷம் இரு வரேன்.”, என்றவன் வண்டி சாவியை எடுத்துக் கொண்டு செல்ல தனது கைப்பையை சரி பார்த்து வைத்தாள் தேவா.
ஐந்து நிமிடத்தில் வந்தவன் கைகளில் மல்லிகைச் சரம் இருக்க தமக்கையிடம் நீட்டி வைத்துக் கொள் என்று கூறி புன்னகைத்தான்.
எப்போதும் போல் ஒரு அரவணைப்பைத் தேடிய மனதை புறந்தள்ளி தம்பியிடம் புன்னகைத்து கிளம்பியிருந்தாள் தேவா.
வீட்டு வாசல் வரை வந்து விட்டவளுக்கு உள்ளே செல்வதில் பெரும் தயக்கம் எழுந்திருந்தது.
அதிலும் அரண்மணைக்கு நிகரான அந்த வீட்டிற்குள் செல்ல தான் வேண்டுமா என்ற எண்ணம் கூட வந்திருந்தது.
அதற்குள் காவலாளி அவளிடம் விசாரிக்க வந்து விட அவரிடம் கூறி விட்டு வண்டியை அந்த பெரிய தோட்டத்திற்கு பக்கவாட்டில் அவர் கூறியது படி நிறுத்தி விட்டு உள்ளே நுழைந்தாள்.
உள் வாசலில் நின்றவளுக்கு உள்ளே செல்வதில் பெரும் தயக்கம். அந்த பிரம்மாண்டம் அவளை வெகுவாய் தயங்க வைத்திருக்க என்ன செய்வதென யோசித்த நேரம் விலையுயர்ந்த பட்டுப் புடவையில் வந்த ஒரு பெண் அவளை புன்னகை முகமாய் வரவேற்றாள்.
“ஹாய் வாங்க வாங்க. உள்ளே வாங்க..”
“!!”
“அம்மா நீங்க வருவீங்கனு சொல்லிருந்தாங்க. வாங்க..”, என்றவளோடு உள்ளே சென்றவளுக்கு அந்த சிகப்பு தரையும் பழைமை மாறாத அந்த வீட்டின் அமைப்புகளும் மிகவும் பிடித்திருந்தது.
“ம்மா இங்கே பாருங்க யாரு வந்துருக்கானு.”, என்றதில் காத்யாயினி நாற்காலியை தேவாவின் புறம் திருப்பியிருந்தார்.
“அடடே வா தேவா. நீ வந்ததில் ரொம்ப சந்தோஷம்.”, என்றதில் வாங்கி வந்திருந்த பழங்களை அவரிடம் நீட்டினாள்.
“காயூ இதை வாங்கிக்கோ. இவ காயத்ரி என் இரண்டாவது பொண்ணு. கயல் எங்கே இருக்கா? வர சொல்லு..”, என்றவர் தேவாவை சோபாவில் அமருமாறு கூறினார்.
“ஏன் என்னவோ போல இருக்க? ப்ரீயா இரு தேவா.”, என்றதற்கும் மெலிதான புன்னகை தான் அவளிடத்தில்.
இரு மகள்களையும் அறிமுகப் படுத்த இருவரும் தேவாவிற்கு இரு புறமுமாய் அமர்ந்து பேச ஆரம்பித்திருந்தனர்.
சற்று நேரத்தில் எல்லாம் தேவா சாதாரணமாக பேச ஆரம்பித்திருந்தாள்.
அந்நேரம் கீழே வந்த சாருகேஷ் அவளை அங்கு எதிர்பாராதவனாய்,
“அட ஹெச் ஆர் மேம் வாங்க வாங்க..”
“எனக்குப் பேர் இல்லையா? எப்போ பார்த்தாலும் என்ன ஹெச் ஆர்?”
“பாருங்க நீங்க கூட தான் என்னை ஸ்டுடண்டை விரட்ற மாதிரியே விரட்டுறீங்க..”
“அது என் பேச்சே அப்படி தான்.”
“ம்ம் அவி சொல்லிருக்கான்.”, என்றவன் கண்சிமிட்டிச் சிரித்தான்.
“நானே உனக்கு தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன்.”
“தேங்க்ஸா எதுக்கு?”
“அவியை டீமில் சேர்த்துகிட்டதுக்கு. இப்போ எல்லாம் அவன் ரொம்ப ஹேப்பியா இருக்கான். அதுக்கு காரணம் நீ தான் தேங்க்ஸ் சாருகேஷ்.”
“அவன் நல்ல ப்ளேயர். அவன் எங்க டீமுக்கு கிடைச்சா எங்களுக்கு பெருமை தான. இதில் என்ன இருக்கு.”
“உங்க தம்பியை நாங்க பார்த்துருக்கோம். இங்கே ஒரு தடவை வந்துருக்கான்.”
“ம்ம் சொன்னான்.”
“சரி நீங்க பேசிட்டு இருங்க. நான் லஞ்ச் ரெடி பண்ண சொல்றேன் சாப்பிட்டு தான் போகணும்.”
“இல்லங்க அதெல்லாம் வேண்டாம். அம்மா கூப்பிட்டாங்களேன்னு தான் வந்தேன். தாம்பூலம் வாங்கிட்டு நான் கிளம்புறேன்.”, என்ற நேரம் கைப்பேசியில் பேசிய படி உள்ளே வந்த அதிரன் அங்கிருந்தவளைப் பார்த்து சற்று வெளிப்படையாகவே ஆச்சரியப்பட்டான்.
இருந்தும் பேச்சில் கவனமாய் அமைதியாய் அவன் உள்ளே வர தேவ ரஞ்சனாவோ எழுந்து நின்றிருந்தாள்.
அதிரன் ஒன்றும் கூறாமல் உள்ளே சென்று விட அனைவரின் முன்னும் அவளுக்குத் தான் பதட்டமாய் இருந்தது.
“தப்பா எடுத்துக்காதீங்க. நான் கிளம்புறேனே ப்ளீஸ்..”
“காயூ போய் தாம்பூலம் எடுத்துட்டு வந்து கொடு.”, என்றதில் பெண்கள் இருவருமாய் உள்ளே செல்ல அதற்காகவே காத்திருந்தவன் போல் அதிரன் தலையை மட்டும் வெளியே நீட்டி,
“ரஞ்சனா..”
“சார்!!”
“கிளம்பும் போது என் ஆபீஸ் ரூம் வந்துட்டு போங்க.”, என்றதற்கு தலையசைத்து இருக்கையில் அமர காத்யாயினி அவளைத் தான் கண்டும் காணாதது போல் கண்காணித்துக் கொண்டிருந்தார்.
கயல்விழியும் காயத்ரியும் புடவை ரவிக்கையோடு தேங்காய் வெற்றிலைப் பாக்கு என வெள்ளித் தட்டில் வைத்து அவள் முன் நீட்ட ஒரு நொடி அதைப் பார்த்தவள் காத்யாயினியை நமஸ்கரித்துப் பெற்றுக் கொண்டாள்.
“ரொம்ப நன்றி மா. நான் வரேன்.”
“சரி தேவா. அதி ஆபீஸ் ரூம் வர சொன்னானே பார்த்துட்டு போ..”, என்றதில் தங்கைகள் தங்களுக்குள் பார்வை பரிமாற்றம் செய்து கொள்ள காத்யாயினி வழி சொல்லி தேவாவை அனுப்பி வைத்தார்.
அவர் கூறிய அறைக் கதவைத் தட்டி விட்டு காத்திருக்க உள்ளே வருமாறு அதிரன் குரல் கொடுத்தான்.
புடவையில் இருந்தவள் இன்னுமே அவனது கண்ணுக்கு நிறைவாய் தோன்றினாள்.
ஒப்பனையற்ற முகமானாலும் இன்று ஏதோ முழு நிலவென பிரகாசிப்பதாய் தோன்றியது அவள் நெற்றியில் இருந்த சந்தன குங்குமத்தால்.
“சார்?”
“உட்காரு ரஞ்சனா..”, என்றவனது விழிப்பே அவன் பேசப் போவது திருமணத்தைப் பற்றி என்று தெளிவாய் உரைத்தது.
“என்னால ஆபீஸில் வைச்சு இந்த விஷயத்தைப் பத்தி விவரமா பேச முடியலை.
இன்னைக்கு இங்கே உன்னை பார்த்தது ரொம்பவே எதிர்பாராதது.”
“அது.. மேடம் தான்..”
“வாட் எவர். உன்னை இங்கே அவங்களில் ஒருத்தியா பார்க்குறதுக்கு எனக்குப் பிடிச்சுருக்கு.”
“!!!”
“யூ ஆர் போல்ட் இனாஃப் அது எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனால் ஏன் என்கிட்ட இவ்வளவு அமைதி.”
“!!”
“அம் ஐ டிஸ்டபிங் யூ?”, என்றவனின் கேள்வியும் குரலும் உள்ளுக்குள் பலவித உணர்வுகளை கொடுத்துக் கொண்டிருந்தது.
“யெஸ் ஆர் நோ?”, இரண்டில் எதை கூறினாலும் அது சரியான பதிலாய் இருக்காதே!
உண்மையில் அத்தனை அவஸ்தையாய் இருந்தது தேவாவிற்கு.
“இதை நான் வேற யார்கிட்டேயும் பேச முடியாது ரஞ்சனா. நீ என்ன நினைக்குறனு சொன்னால் தானே தெரியும்?”
“சார்.. இது எப்படி சரியா வரும்? எனக்கு அது தான் ரொம்பவே யோசனையா இருக்கு.”
“ஓகே அந்த குழப்பத்தை தள்ளி வைச்சுட்டு இந்தக் கல்யாணத்தில் உன்னோட விருப்பம் என்ன?”
“அவி.. தம்பியோட வாழ்க்கை என் கைக்குள்ளே பத்திரமா வாழ்க்கை முழுசும் இருக்கும்ங்கிற நம்பிக்கை இருக்கு.”
“அவ்வளவு தானா? வாட் அபௌட் யுவர்ஸ்?”
“பொதுவா எல்லாருக்கும் Giving side receiving sideனு இரண்டு விஷயம் இருக்கும். அன்பு பொறுப்பு எல்லாத்தையும் கொடுக்குறதும் வாங்குறதும்.
ஆனால் நான் வாழ்க்கையில் இத்தனை வருஷமும் எப்பவும் Giving sideல தான் இருந்துருக்கேன். சோ கல்யாண வாழ்க்கையிலேயும் கண்டிப்பா என்னோட 100% நான் கொடுப்பேன்.”
“மே ஐ பி யுவர் Giving side ரஞ்சனா? ஃபார் எவர் மே பி கடைசி வரைக்கும்.”, என்றதில் ஒரு நொடி அவன் கண்களை நேருக்கு நேராய் பார்த்தவள் தவித்த மனதை அடக்கும் வழி தெரியாமல் முகத்தை கைகளுக்குள் புதைத்து குலுங்கி அழ ஆரம்பித்திருந்தாள் தேவ ரஞ்சனா.
தன் இருக்கையில் இருந்து எழுந்தவன் அவளது பின்புறம் நின்று இரு தோள்களையும ஆதரவாய் அழுத்த அவளது எதிர்ப்போ பதட்டமோ இல்லாததில் மெதுவாய் வருடிய படி அவளது அழுகை அடங்குவதற்க்கு காத்திருந்தான்.
error: Content is protected !!