Skip to content
Post Views: 5,939
“காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான் கண்டானாம் தான்கண்ட வாறு
மு.வ விளக்க உரை: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.”
ஒரு மணி நேரத்திற்குப் பின் விருந்தினர்கள் வர ஆரம்பித்திருக்க சிறிது நேரத்திலேயே அந்த அரங்கம் முழுவதும் மக்கள் தலைகளால் நிறைந்திருந்தது.
வருபவர்கள் காத்யாயினியிடம் வந்து நமஸ்கரித்து பேசிவிட்டுச் செல்ல அவரும் இருந்த இடத்திலிருந்தே அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
Advertisement
ஐயர் முகூர்த்த நேரம் ஆரம்பமானதில் மணமகளை அழைக்க அத்தனை பேரின் கண்களும் அதற்காக தயாராய் இருந்தது.
அதிரனின் மனைவி ANA க்ரூப்ஸின் மருமகளாகும் அதிர்ஷடக்காரி யார் என்பது தான் அவர்களின் ஆர்வம்.
கயல்விழியும் காயத்ரியும் தேவாவை அழைத்து வர அனைவருக்கும் வணக்கம் வைத்தவள் அமர கயல்விழியும் விஜயனும் அவளுக்குத் தாய் தந்தை இடத்தில் அமர்ந்தனர்.
Advertisement
மணமகன் சார்பாக கிருஷ்ணனும் விசாலாட்சியும் தான் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தனர்.
Advertisement
வந்தவர்கள் அத்தனை பேருக்கும் பெண் வீட்டார் என்று யாருமே இல்லையே என்பது தான் பேச்சாக இருந்தது. சாருகேஷ் என்ன வேலையானாலும் அவினாஷைத் தன்னை விட்டு நகரவே விடவில்லை.
நிச்சயம் முடிந்த பின் அதிரனை மேடைக்கு அழைக்க இருவரையும் அப்படி பார்த்ததில் காத்யாயினிக்கு மனம் குளிர்ந்து போனது.
இருவரும் மாலை மாற்றிய பின் கயலும் காயத்ரியும் மோதிரத்தை மணமக்களிடம் நீட்ட அதை வாங்கிக் கொண்ட வண்ணம் அதிரன் முதலாய் தன் கரத்தை தேவாவிடம் நீட்டியிருந்தான்.
Advertisement
“அண்ணா முதல்ல நீ போட்டு விடு..”
“இதென்ன ரூல்.. பரவால்ல நான் சேஞ்ச் பண்ணிக்குறேன்.”, என்றவன் தேவாவைப் பார்க்க அவள் ஒன்றும் கூறாமல் மோதிரத்தை அவன் விரலில் அணிவித்திருந்தாள்.
“தங்கச்சி உன்னை மலை போல நம்பிருந்தேன். இப்படி கவுந்துட்டேயே மா..”, என்ற ஜெயனைப் பார்த்து சிரிப்பைக் கட்டுப்படுத்தினாள் தேவா.
தேவ ரஞ்சனா தனது கரத்தை அதிரனின் முன் நீட்டிய படி அவளது கரத்தையே பார்த்திருக்க அதிரன் மோதிரத்தைப் போடாததில் நிமிர்ந்து அவனை ஏறிட்டாள்.
“மே ஐ பி யுவர் Giving side ரஞ்சனா?”, என்றதில் சட்டென கண்களைக் கண்ணீர் சூழ்ந்து கொள்ள அதைக் கட்டுப்படுத்தியவளாய் ஆமென தலையசைத்தாள்.
இருவருமாய் விருந்தினர்களைப் பார்த்த வண்ணம் நின்று கை கூப்ப அனைவருமாய் அட்சதையை மணமக்கள் மீது தூவி ஆசீர்வதித்தனர்.
“அண்ணா வெயிட்..”, என்ற சாருகேஷ் கேக் இருந்த சிறு சக்கர மேசையை அவர்களுக்கு முன் தள்ளி வந்து வைத்த படி அண்ணனின் புறம் நிற்க அவினாஷ் தமக்கையின் அருகில் நின்று கொண்டான்.
இளையவர்களின் ஆரவாரத்தோடு கேக்கை இருவருமாய் வெட்டி முதல் வாயைத் தேவாவிற்கு ஊட்டியிருந்தான் அதிரன்.
இயல்பாய் அவள் உதடு தொட்ட விரல்களில் இருந்த கேக்கை சுவைப்பது போல் ஈரம் செய்ய தேவாவிற்கு முகம் குங்குமமாகி விட்டது.
விருந்தினர்கள் வந்து மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து புகைப்படம் எடுத்து நகர யாரையும் தெரியாதவளாய் தேவா அமைதியாய் புன்னகையோடு நின்று கொண்டாள்.
வினித் வந்து நண்பனை வாழ்த்தி விட்டு இருவருக்குமாய் நடுவில் நின்று ரகளை செய்து புகைப்படம் எடுத்து நகர மணமக்களுக்கான போட்டோ ஷுட்டும் ஒரு வழியாய் முடிந்திருந்தது.
அதிரன் மேடையில் இருந்தாலும் கவனம் அந்த அறை முழுவதும் அவ்வப்போது சுற்றி வர தங்கைகளின் மாமியார் தாயிடம் ஏதோ கூறுவதும் அவர் இயல்பாய் இருக்க முயன்று பதில் கூறுவதும் கண்ணில் பட்டது.
அனைவரும் இருந்த காரணத்தால் கடினப்பட்டு அமைதி காத்தவன் தங்கையை அழைத்து விஷயத்தைக் கூற காயத்ரி வேகமாய் சென்று மாமியாரை அங்கிருந்து கிளப்பியிருந்தாள்.
காத்யாயினி நினைத்திருந்ததை விட பல விதமான கேள்விகளும் விமர்சனங்களும் எழுந்ததில் அவர் அதிகமாய் சோர்வுற்றிருந்தார்.
உறவில் அவருக்கு அண்ணன் முறையில் ஒருவர், காத்யாயினிக்கு அவர் மீது பெரும் மரியாதையும் மதிப்பும் எப்போதும் உண்டு.
அவரோ காத்யாயினியிடம்,
“என்ன மா இப்படி அவசர அவசரமா கல்யாணம் பண்ற அளவு என்ன நடந்துச்சு?”
“அண்ணா..”
“வெளியிலே சொல்ல முடியாத மாதிரி எதுவும்??”
“அண்ணா என்ன பேசுறீங்க?”
“பின்ன நீ யாரு உன் குடும்பம் என்ன? நாங்க சொந்த பந்தத்திலேயே எத்தனை பொண்ணு சொல்லிருப்போம். எல்லாத்தையும் வேண்டாம்னு சொன்னது இதுக்காக தானா?”
“தேவா ரொம்ப நல்ல மாதிரி ண்ணா..”
“எல்லாரும் நல்லவங்க தான் மா.. ஆனால் சபைக்கு அந்த பேரு போதாதே. பொண்ணு வீட்டுச் சொந்தம்னு ஒருத்தரையும் காணும்.
நம்ம அதிரனுக்கு இப்படி ஒரு இடத்திலேயா பொண்ணு பார்க்கணும்?”
“வேற எப்படி பொண்ணு பார்த்துருக்கணும்னு சொல்றீங்க?”, என்ற அதிரன் இரு கைகளையும் கால் சராயினுள் விட்ட வண்ணம் அறை வாசலில் நின்றிருந்தான்.
“அதி நீ போய் சாப்பிடு போ..”
“அவர் உங்க அண்ணனா இருக்கலாம். அதுக்காக எங்க அம்மாவை இப்படி கேள்வி கேட்குற வேலையெல்லாம் வேண்டாம்.”
“!!”
“இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?”
“..”
“வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு காரணமும் இங்கே இல்ல.
எங்க அம்மாக்கும் எனக்கும் அவளைத் தான் பிடிச்சுருக்கு.
நஞ்சுண்டான் குடும்பத்து மருமகளா வர அவளுக்குத் தான் எல்லா தகுதியும் இருக்கு. போதுமா? வேற எதுவும் பேசணுமா?”
“..”
“ம்மா டயர்டா இருக்கீங்க நீங்க வீட்டுக்கு கிளம்புங்க..”
“அதி..”
“போதும் மா கிளம்புங்க.”, என்றவனின் பார்வை அந்த நபரின் மேல் இருக்க ஒன்றும் பேச முடியாமல் வெளியேறியிருந்தார்.
“நீ போ நான் பார்த்துக்குறேன் அதி.”
“இதெல்லாம் எப்பவும் என்கரேஜ் பண்ணாதீங்க சொல்லிட்டேன்.”, என்றவன் அங்கிருந்து நகர்ந்திருக்க காத்யாயினி தலையில் கை வைத்து விட்டிருந்தார்.
அமைதியாய் தன்னருகில் வந்து நின்றவனையே பார்த்திருந்த தேவா பிறரறியாமல் அவனது வலது கரத்தை எடுத்து தனது இடக்கரத்தோடு கோர்த்துக் கொண்டாள்.
ஒன்றும் பேசாமல் அதிரன் அவளைத் தலை திருப்பி பார்க்க லேசாய் முறுவலித்தவள்,
“ரிலாக்ஸ்..”
“அவ்வளவெல்லாம் முகத்தில் ஒண்ணும் தெரியாதே?!”
“ஆனால் கண்ணில் தெரியும்.”
“அதுக்கு இப்படி கையைப் பிடிச்சா?”
“நீங்க தான கல்யாணம் வரைக்கும் அப்பப்போ இந்தக் கையை உங்ககிட்ட கொடுத்து வாங்கிக்க சொன்னீங்க.”, என்ற போது அதிரனின் கட்டை விரல் அவளது பின் கையை மென்மையாய் வருடிய படி இருந்தது.
“நான் சொன்னது…”, என்று இழுத்தவனின் கண்களில் குறும்பு தெரிய தேவ ரஞ்சனா கையை உறுக நினைத்த போது அவன் இன்னுமாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
“கல்யாணம் வரையும் கையைக் கொடுத்தா உன்னையே கொடுத்த மாதிரி இருக்கட்டும்னு..”
“ஷ்ஷ்!!”, என்றவளுக்கு பேச நா எழவில்லை.
“நான் தான் இப்போ யோக்கியனா இல்லைனு சொன்னேன்ல.”
“போதும். யாராவது பார்த்தா..”
“பார்த்தா..”
“ப்ளீஸ்ங்க…”, என்றவள் கண்களால் இரைஞ்ச பேச்சை அத்தோடு நிறுத்திக் கொண்டவன் அமைதியாய் நின்று கொண்டான்.
அனைவரும் கிளம்பிய பின் அவினாஷ் சாருகேஷோடு வீட்டிற்குச் செல்வதாய் கூறிவிட தானே தேவாவை வீட்டில் விடுதாய் கூறி கிளம்பினான் அதிரன்.
பட்டுச் சேலையும் லேசான கன்னத்து சந்தன மணமும் தலை நிறைத்த பூவுமாய் தன்னருகில் அமர்ந்திருந்தவள் அதிரனை வெகுவாய் அமைதிப் படுத்தினாள்.
அவனது பார்வை அவ்வப்போது தன்னை தீண்டுவதை உணர்ந்தவள் அமைதியாய் அவனது புஜத்தைப் பற்றி தோள் சாய்ந்து கொண்டாள்.
மனமெங்கும் ஒரு வித அமைதியும் நிம்மதியும் நிறைந்திருப்பதாய் தோன்றியது தேவாவிற்கு.
அத்தனை நேரம் கட்டுப்படுத்தியிருந்த கண்ணீர் இப்போது வெளிப்பட்டது.
அவனது சட்டையை கரையாக்கி விடப் போகிறோம் என்று எண்ணியவள் சட்டென தலையை இழுத்துக் கொள்ள அதிரன் கேள்வியாய் அவளைப் பர்த்தான்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுக்கு காரணம் நீங்க. தேங்க் யூ..”, என்றவளுக்கு தனது கரத்தை நீட்ட அதை இறுகப் பற்றிக் கொண்டாள்.
“நம்மளை நாமளே பார்த்துக்க ஆரம்பிச்ச பிறகு பெண்மை ரொம்பவே குறைஞ்சு ஒரு ஆண்த்தனம் நமக்குள்ளே வந்துடும்.
இந்த அச்சம் மடம் நாணம்னு எல்லாம் சொல்லுவாங்களே அதெல்லாம் கண்காணாம போயிடும்.
ஆனால் திடீர்னு எங்கேயிருந்தோ ஒருத்தர் வந்து அந்த பெண்மையை மீட்டெடுத்து என்னை Receiving sideல உட்கார வைக்கும் போது..”
..”
“மனசு ரொம்ப பலகீனமாயிடுது. என்னை என்னால நல்லா பார்த்துக்க முடியும் தான்.
ஆனால் நான் பார்த்துக்குறேன்னு ஒருத்தர் வந்து நிக்கும் போது எதைப் பத்தியும் யோசிக்காம அப்படியே அவர் காலடியில் பூனைக்குட்டி மாதிரி வாழ்ந்துரணும்னு தோணுதுங்க.”, என்றவள் விழிகள் மறைத்த நீரோடு புன்னகைத்தாள்.
“நான் எப்பவும் உனக்காக இருக்கேன் மை கேர்ள். நீ ஸ்ட்ராங்கா இருக்க வேணாம் இப்படி குழந்தை மாதிரியே என்கிட்ட இருந்துடு. இந்த டஃப்பான பொண்ணை ஹேண்டில் பண்றது எனக்கு ரொம்ப கர்வமா இருக்கு.”
“நீங்க காரணமா இல்லாத எல்லா காயத்துக்கும் உங்களை அறியாமலேயே மருந்தா மாறியிருக்கீங்க அதிரன்..”, என்றதில் மெதுவாய் அவளைத் தன்புறம் இழுத்து உச்சந்தலையில் லேசாய் இதழ் பதித்தான்.
“வாழ்க்கையில நிறைய ஹர்ட் ஆன பொண்ணை டீல் பண்றது ரொம்ப கஷ்டம்னு சொல்லுவாங்க.
நீங்க நினைச்சுருந்தா என்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டு போயிருக்கலாம்.
வேற யாரா இருந்தாலும் அதை தான் பண்ணிருப்பாங்க. ஆனால் நீங்க என்னை சூஸ் பண்ணதோட இல்லாம நம்ம வாழ்க்கைக்கு ரொம்ப பொறுமையா என்னைத் தயார் பண்ணிருக்கீங்க.
இப்போ நீங்களே இதை வேண்டாம்னு சொன்னாலும் உங்க மேல வைக்குற அன்பை என்னால குறைச்சுக்க முடியாது.
இந்த பேரழகனை என்னைக்கும் எப்பவும் யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவே மாட்டேன்.”, என்றவளை காரை நிறுத்தி விட்டு இழுத்து இறுக அணைத்திருந்தான் அதிரன்.
தயக்கமிருந்தாலும் தேவாவிற்குமே அந்த நேரத்திற்கு அந்த அணைப்பு மிக மிக தேவையானதாய் இருந்தது.
எவ்வித சரசமுமின்றி அன்பின் முத்திரையாய் இருந்த அந்த அணைப்பு இருவருக்குமே பெறும் அமைதியைக் கொடுத்திருந்தது.
“இன்னும் இரண்டு மாசம் உன் பக்கத்திலேயே வரக் கூடாதுனு இருக்கேன். அதனால என்ன பேசுறதா இருந்தாலும் யோசிச்சு பேசு. இல்லைனால் என் பதில் இப்படி தான் இருக்கும்.”
“சரிங்க இன்ட்ரோவெர்ட்..”, என்றவள் மெதுவாய் சிரிக்க அவளைத் தன்னிடமிருந்து விலக்கியவனாய்,
“பார்க்குறேன் எவ்வளவு தூரம் தாக்கு பிடிக்குறேன்னு..”
..”
“ஒரு வேளை இரண்டு மாசத்தையும் வெற்றிகரமா கடந்துட்டேன்னு வை..”
“என்னை மிரட்டுறீங்க நீங்க..”
“வாட் எவர்.. ஒரு வேளை கடந்துட்டேன்னால் கல்யாணத்து அன்னைக்கு நைட் நடக்குற எதுக்குமே நான் பொறுப்பாக மாட்டேன். மார்க் வை வேர்ட்ஸ்..,”, என்றதில் முகத்தை வெளியே திருப்பியிருந்தாள் தேவா.
“என்ன பேச்சைக் காணும்..”
“இன்ட்ரொவெர்ட்னால் இது தான் அர்த்தமா?”
“இன்ட்ரொவெர்ட்க்கு அர்த்தம் தெரிஞ்சு வைச்சுருக்க.. அதோட இன்னொன்னும் தெரிஞ்சுக்கோ..”
“?!!”
“என்னை மாதிரி வெளி உலகத்தில் பேசவே விருப்பப்படாதவங்க எல்லாம் அந்த ஒரு பொண்ணுகிட்ட ரொம்பவே வைல்டா (Wild) இருப்பாங்களாம்.”
“அதிரன் ஜஸ்ட் ஸ்டாப் திஸ்..”, என்றவளுக்கு வயிற்றிலிருந்து தொண்டைக்குள் என்னவோ ஒன்று நகர்ந்து பயமுறுத்தியது.
error: Content is protected !!