Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்Uncategorized

நிழல்-2

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை

மு.வ விளக்க உரை: ஒருவன் தன்னோடு பொருந்தாமல் வேறுபடுதலைக் கருதி அன்பில்லாதவற்றைச் செய்தாலும் தான் இகழ் கொண்டு அவர்க்கு துன்பம் செய்யாதிருத்தல் சிறந்ததாகும்.

“ஊருக்குள்ளே நல்ல பேரு இருக்குனு சொல்லாம சொல்றீங்க சரி தான்.

ஆனால் எங்களோட வேலைக்கு ஏத்த ஊதியமா இது தெரியலைங்களே..”



Advertisement

“இப்போ என்ன இப்படியே பேசி என்னை கோபப்படுத்தி நான் கையை ஓங்கணும் இல்ல உன் சட்டையைப் பிடிக்கணும் அதை உன் ஆளு வீடியோவா சோஷியல் மீடியால போடுவானா?”, என்றவன் ஒவ்வொரு வார்த்தைகளையும் அவனது கண்களை நேருக்கு நேராய் பார்த்த வண்ணம் அழுத்தமாய் கூறி முடிக்க எதிராளியின் கண்களில் பயமும் பதட்டமும்.

வசந்த் அவசரமாய் யார் வீடியோ எடுக்கிறார் என்பதை சுற்றும் முற்றும் பார்க்க அதிரன் ஒரு சொடுக்கிட்டு வசந்திடம் ஒரு திசையைக் காட்ட அந்த பக்கம் சற்று மறைந்திருந்த ஒருவனின் புறம் ஓடினான்.

அவனைத் திரும்பி பார்த்த படி நின்ற யூனியன் லீடருக்கு அடுத்த சொடுக்கிட்டவனாய்,

Advertisement

“போய் இந்த ஐடியா கொடுத்த அந்த கம்பெனி முதலாளிகிட்ட இங்கே நடந்ததை ஒண்ணு விடாம சொல்லிட்டு அவன்கிட்டேயே வேலைக்கும் சேர்ந்துக்கோ.”

Advertisement

“சார்!!”

“இந்த இடத்தில் இருக்குறது ஒண்ணும் சாதாரண விஷயம் இல்ல. ஒழுங்கா இப்பவே கிளம்பினால் உனக்கு நல்லது.”, என்றவனின் உறுமலும் வெட்டும் பார்வையும் அவனுக்கு உதறலைக் கொடுத்திருந்தது.

அவன் அங்கிருந்து நடக்கத் தொடங்க வசந்த் கையில் ஒரு கைப்பேசியோடு அவனிடம் ஓடி வந்தான்.

Advertisement

“வீடியோ?”

“டெலிட் பண்ணியாச்சு சார்.”

“த்ரோ ஹிம் அவே. எக்காரணம் கொண்டும் அவனை நான் இனி பார்க்க கூடாது.”, என்றவன் கோபத்தை அடக்கிக் கொண்டு அங்கிருந்து சென்றிருந்தான்.

வசந்த் பெருமூச்சோடு அவனது இருக்கையில் அமர கேஷியர் சுந்தரம் அவனருகில் வந்தார்.

“என்ன வசந்த் அதுக்குள்ளே டயர்ட் ஆயிட்டியா?”

“ஏன் சார் நீங்க வேற? இருந்த கடுப்பில் என்னைக் கொதறாம விட்டதே பெருசு. முதுகில் கூட கண்ணு வைச்சுருக்காரு சார்.

நம்மளால அப்படியெல்லாம் இருக்க. முடியலை.”

“நீயும் தினமும் புலம்புற அப்பறம் அவரோட தான் சுத்திட்டு இருக்க..”, என்றவர் சிரித்தார்.

“என்ன சொன்னாலும் சார்கிட்ட கத்துக்குறதுக்கு நிறைய இருக்கே சுந்தரம் சார். என்னை விட அஞ்சு வயசு தான் அதிகம் அவருக்கு.

ஆனால் எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கார். என்னோட ரோல் மாடல் சார் அவர்.”

“அது சரி. அவர் பேசுற நாலு வார்த்தையில் விஷயத்தை புரிஞ்சுக்குற ஒரே ஆள் நீ தான்.”, என்றவர் புன்னகைத்த வண்ணம் வந்த வேலையை முடித்து விட்டு வெளியேறியிருந்தார்.

அதிரன் பெயரைப் போலவே வித்தியாசமானவன் தான்.

கோபத்திலும் கூட வார்த்தைகளை அளந்து பேசும் அவனது திறன் கண்டு வசந்த் வியக்காத நாளில்லை.

கண்மண் தெரியாத கோபத்திலும் எதிரில் இருப்பவரின் மரியாதைக்கு எவ்விதத்திலும் பங்கம் வராத மாதிரியான வார்த்தை கையாடல்கள் அவனிடம் எப்போதுமே உண்டு.

சற்று தள்ளி நின்று கவனித்தால் அவனது கண்களில் இருக்கும் ருத்ரத்தை தவிர அவன் கோபமாய் இருப்பதை கண்டுகொள்ள வேறு வழிகளே இருக்காது.

இந்நேரம் எவன் அந்த பிரச்சனைக்கு காரணமோ அவனுக்கு செய்ய வேண்டியதை சிறப்பாய் செய்திருப்பான் என்பது வசந்தின் யூகம்.

அதிரன் மன்னிக்கும் குணம் கொண்டவனே தவிர மறக்கும் குணம் அவனுக்கு எப்போதும் கிடையாது.

தன்னை தேவையில்லாமல் சீண்டினால் கரை வைத்து அவர்களுக்கு பதிலடி கொடுக்காமல் நிச்சயம் இருக்க மாட்டான்.

மாலை தாய் கூறிய நேரத்திற்கு முன்னதாவே வீட்டிற்கு வந்தவன் தங்கைகளை வரவேற்பதற்காக வரவேற்பறையிலேயே அமர்ந்து அங்கிருந்த நாளிதழை கையில் எடுத்துக் கொண்டான்.

சில நிமிடங்கள் பொறுத்து தன்னறையில் இருந்து வெளிய வந்த காத்யாயினிக்கு மகனின் பொறுப்பை நினைத்து எப்போதும் போல் பெரும் உவகை தான்.

சரியாய் மகள்களும் குடும்பத்தோடு உள்ளே நுழைய அதிரன் எழுந்து நின்று அனைவருக்குமாய் கை கூப்பினான்.

“அண்ணா எப்படியிருக்கீங்க?”, என்ற கயல்விழியும் காயத்ரியும் அண்ணனுக்கு இருபுறமுமாய் அணைத்து நின்றனர்.

“நல்லாயிருக்கேன் டா. நீங்க எப்படியிருக்கீங்க?”, என்றவனின் கரம் லேசாய் இருவர் முதுகிலும் தட்டி விலகியது.

மாப்பிள்ளைகள் அவர்களின் பெற்றோர் என அனைவரையும் நலம் விசாரித்தவன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டான்.

“அதிரன் மாப்பிள்ளை இது நம்ம வீட்டுக் கல்யாணம் கண்டிப்பா முன்னமே வந்து சிறப்பா நடத்திக் கொடுக்கணும்.

சம்மந்தியம்மா நீங்க தான் முன்ன நின்னு நடத்தணும்.”

“கண்டிப்பா அண்ணே. நம்ம ஜானகிக்கு நான் நிக்காமலா?”, என்றவர் அதிரனைப் பார்க்க,

“கண்டிப்பா வரப் பாக்குறேன். இந்தியாவில் இருந்தா நிச்சயமா வருவேன். வாங்களேன் மச்சான் நாம வெளியில் போய் பேசிட்டு இருக்கலாம்.”, என்றவன் தங்கை கணவர்களோடு தோட்டத்திற்குச் சென்றிருந்தான்.

பெரியவள் கயல்விழியின் கணவர் விஜயன் மருத்துவராய் பணிபுரிய இவர்களுக்கு மூன்று வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

இளையவள் காயத்ரியின் கணவர் ஸ்டார்ட் அப் கம்பெனி நடத்தி வருகிறார். இவர்களுக்கு ஒரு வயது மகன் இருக்கிறான்.

இருவருமே மிகவும் நல்ல மாதிரி தான். அவர்களின் தாயார் தான் அவ்வப்போது எதாவது பேசி பிரச்சனை வர வைப்பாரே ஒழிய மகன்கள் அதை சாதுரியமாய் அதிரனின் காதிற்குச் செல்லாத அளவிற்குப் பார்த்துக் கொள்வர்.

“என்னாச்சு மச்சான் போன வாரம் உங்க ஹாஸ்பிட்டல்ல ஏதோ பிரச்சனைனு கேள்வி பட்டேன்?”

“அது ஒரு டாக்டர் பண்ணின ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகலை. அதில் ரிலேட்டிவ்ஸ் எல்லாம் சேர்ந்து ஒரே பிரச்சனை பண்ணிட்டாங்க.”

“ம்ம் நீங்க வேணா வேற ஹாஸ்பிட்டல் ட்ரை பண்ணுங்களேன். சமீபமா நிறைய இஷுஸ் ரிபோர்ட் ஆகுற மாதிரி இருக்கு.”

“நானும் அந்த யோசனையில் தான் இருக்கேன். பார்த்துக்குறேன் மச்சான்.”, என்றவனுக்கு எப்போதும் போல் மச்சானின் முன் பேச்சு வருவேனாவென்றது.

அடுத்து தன்னிடம் தான் பேசுவான் என்பது உணர்ந்தவனாய் ஜெயன் அதிரனிடம்,

“எனக்குமே க்ளையண்ட் சைட் கொஞ்சம் டம்ர்ஸ் சரியில்லை மச்சான். மாத்திடலாம்னு தான் இருக்கேன்.”

“ஆரம்பத்துலேயே இதை பண்றது தான் நல்லது. எதுவும் உதவி வேணும்னால் சொல்லுங்க.”, என்ற நேரம் அவனுக்கு அழைப்பு வர அதிரன் அலுவலக அறைக்குச் சென்றதைக் கவனித்து இருவரின் மனைவிகளும் கணவரிடம் வந்திருந்தனர்.

“ஏங்க இவ்வளவு டென்ஷன்?”

“நல்லா மச்சான் டி எங்களுக்கு. எல்லா விஷயத்தையும் தெரிஞ்சு வைச்சுகிட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசுறார்.”

“பின்ன தங்கச்சிங்க வாழ்க்கை மேல அக்கறை இருக்காதா?”

“மனசாட்சியை தொட்டு சொல்லு நீங்க இரண்டு பேரும் தான் எங்களை வைச்சு செய்யுறீங்க..”

“ஓகோ அவ்வளவு ஆயிடுச்சா மாமா வாங்க இப்போவே பஞ்சாயத்தை கூட்றேன்” என்ற காயத்ரியின் வாய் மூடி அழைத்துச் சென்றான் ஜெயன்.

“அப்பறம் சம்மந்தி அதிரன் மாப்பிள்ளைக்கும் வயசாகிட்டே போகுதுங்களே?”

“ஆமா அண்ணி நானும் சொல்லி பார்த்துட்டேன். பிடி கொடுக்கலை இத்தனை நாளும். இப்போ தான் பொண்ணு பாருங்கனு சொல்லிருக்கான். தரகர் நல்ல சம்மந்தமா சொல்றேன்னு சொல்லிருக்காரு.”

“ம்ம் பொண்ணு கொடுத்து பொண்ணெடுக்கலாம்னு ரெம்ப ஆசைப் பட்டோம். நடக்காம போச்சு.”

“என்ன அண்ணி ஜானுக்கு கல்யாணம் பேசியாச்சு இன்னும் எதுக்கு இந்த பேச்சு.”, என்றவர் வேறு பேச்சிற்கு சென்றிருந்தார்.

“அக்கா நேரமாச்சே எப்போ வருவ வீட்டுக்கு?”

“இன்னும் அரை மணி நேரத்தில் வரேன் அவி. நீ எதுவும் சாப்பிட்டியா?”

“இல்ல கா நீ வந்தப்பறமே சாப்பிடலாம். நான் சட்னி அரைச்சு வைச்சுட்டேன்.”

“சரி டா வண்டியை எடுக்குறேன். பை.”, என்றவள் தனது தலைகவசத்தை அணிந்த படி வண்டியை உயிர்பித்தாள்.

தம்பியிடம் கூறியது படியே அரை மணி நேரத்தில் வீட்டை அடைந்தவள் வேகமாய் தனதறைக்குச் சென்று உடை மாற்றி வந்து நிற்க இருவருக்குமான தோசையோடு உணவு மேசையில் வந்தமர்ந்தான் அவினாஷ்.

தம்பியின் பொறுப்பைக் கண்டு எப்போதும் போல் மனம் கனக்க அமைதியாய் வந்து அமர்ந்தாள் தேவ ரஞ்சனா.

“என்னக்கா தினமும் நேரமாகுது?”

“வர வர இங்கே வேலை பார்க்கவே கடுப்பா தான் இருக்கு அவி. ANA க்ரூப்ஸில் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணியிருக்கேன். கிடைச்சுரும்னு தோணுது. பார்ப்போம்.”

“உன் கல்யாணத்தை பத்தி என்ன முடிவு பண்ணிருக்க கா?”

“இப்போ எதுக்கு இந்தப் பேச்சு?”

“அப்பா அம்மா இருந்திருந்தா இந்நேரம் உனக்கு குழந்தையே இருந்திருக்கும்.”

“அவி..”

“என்னை நல்லா பார்த்துக்குற. எனக்கு வேண்டியதெல்லாம் நீ பண்ற அப்போ உனக்கு வேண்டியதை நான் செய்யனும் தான க்கா..”

“அவி நீ சொல்றதெல்லாம் சரி தான் ஆனால் அதுக்கப்பறம் நீ எப்படி டா இங்கே தனியா இருப்ப? இன்னும் ஒரு ஆறு மாச படிப்பிருக்கு.”

“அப்போ என்னால தான் நீ கல்யாணத்தைப் பத்தி யோசிக்க மாட்றியா?”

“டேய் என்ன பேசுற நீ..”

“போதும் க்கா உன் வாழ்க்கையையும் பார்க்கணும். நான் நம்ம ரவி அங்கிளுக்கு தெரிஞ்ச தரகர் கிட்ட பேசிட்டேன்.

சொல்லுறேன்னு சொல்லிருக்காரு.”, என்றதில் தம்பியை முறைத்தாள் தேவ ரஞ்சனா.

“இந்த விஷயத்தில் இனி அடம் பிடிக்காத கா. ஜஸ்ட் பார்க்க ஸ்டார்ட் பண்ணலாம். உனக்கு பிடிச்சா தான் மத்ததெல்லாம்.”, என்ற தம்பியை நினைத்து பெருமையாய் இருந்தது பெண்ணவளுக்கு.

தேவ ரஞ்சனா ஆனந்த் பல்லவி தம்பதியரின் மூத்த மகள். நடுத்தர குடும்பம் அவர்களுடையது.

தேவ ரஞ்சனா கல்லூரி படித்துக் கொண்டிருந்த போது உறவினர் திருமணத்திற்குச் சென்ற தந்தையும் தாயும் விபத்தில் இறந்து விட அதன் பின்னான நாட்கள் அனைத்தும் அவளும் தம்பியும் தான்.

சொந்தங்களை எல்லாம் பெரிதாய் சார்ந்திருக்க அவளுக்கு விருப்பமில்லை.

தேவையான நேரத்திற்கு உதவாதவர்கள் இப்போது மட்டும் எதற்கு என்று நினைத்தாள்.

தந்தை வாங்கியிருந்த சிறிது கடனோடு இப்போது இருக்கும் இந்த வீடு தான் அவர்களின் சொத்து.

எம்பிஏ முடித்து மருத்துவ கல்லூரியில் ஹெச்ஆராக பணிபுரிகிறாள்.

அவினாஷ் பொறியியல் கடைசி வருடத்தில் இருக்கிறான். அக்கா தான் அவன் உலகம். வயதிற்கு மிஞ்சிய பொறுப்பும் பொறுமையும் அவனிடத்தில்.

இளமையில் வறுமையும் சோதனையும் வாழ்வில் பல விஷயங்களை சீக்கிரமே கற்றுக் கொடுத்து விடும் என்பதற்கு இவர்கள் இருவருமே சிறந்த எடுத்துக் காட்டு.

அவள், தம்பிக்காக அனைத்து கவலைகளையும் மனதிற்குள் புதைத்துக் கொண்டு இருந்தால் தம்பியோ அக்காவிற்காக அந்த வயதின் ஆசைகள் ஏக்கங்கள் அனைத்தையும் தனக்குள்ளேயே பூட்டி வைத்துக் கொள்வான்.

இந்த அழகான கூட்டிற்குள் வரப்போகும் அந்த புது உறவு இவர்களுக்கான நிழிலிடத்தை கொடுக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!