Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

46. ஸ்ரீ - பிரியங்களின் நிழலில்

நிழல்-34

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும்

மு.வ விளக்க உரை: மனம் திறந்தாத உட்பகை ஒருவனுக்கு உண்டாகுமானால், அது அவனுக்குச் சுற்றம் சிர்படாமைக்கு காரணமான குற்றம் பலவற்றைத் தரும்.

அன்றைய மாலை தேவா கல்லூரியில் இருந்து வந்த சிறிது நேரத்தில் அவளது அறைக் கதவைத் தட்டி நின்றான் சாருகேஷ்.

கதவைத் திறந்தவளுக்கு அவனின் ஒளியிழந்த முகமே விஷயத்தைக் கூற உள்ளே அழைத்து அமர வைத்தாள்.



Advertisement

“நீ ஓகே தான கேஷா?”, என்றதற்கு அவனது கண்களில் மெலிதாய் நீர்ப் படலம்.

“நான்.. நான் உண்மையா தான் இருந்தேன் அண்ணி..”

“இட்ஸ் ஓகே. நம்ம மதிப்பு தெரிஞ்சு சரியானவங்க கைக்கு நாம போறதுக்கு முன்னாடி இது மாதிரி பரிட்சைகள் நடக்கும் தான்.”

Advertisement

“..”

Advertisement

“உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது அண்ணி?”

“நான் வேலை முடிச்சு கிளம்பும் போது வேற பையனோட பார்த்தேன். அப்பறம் இரண்டு மூணு தடவை அவனோட பைக்கிலேயும்.”

“..”

Advertisement

“நான் அந்தளவு மக்கா இருந்துருக்கேன் அண்ணி.”

“அந்தளவு அவ மேல அன்பா இருந்துருக்கனு தான் சொல்லணும். நமக்கு ரொம்ப பிடிச்சவங்களை நம்மளால எப்படி சந்தேகத்தோட பார்க்க முடியும்.”

“நான் அவளோட ரொம்ப பர்சனலா மூவ் பண்ணதில்ல அண்ணி.

எதுவாயிருந்தாலும் வீட்டில் சொன்னப்பறம்னு நினைச்சுருந்தேன். அவளுக்கும் அது தான் பிடிக்கும்னு நினைச்சுட்டேன். ஆனால் அவளுக்கு அது க்ரிண்ஞ்சா தெரிஞ்சுருக்கு.”

“Being Loyal is a basic character டா. நம்மகிட்ட ஒருத்தங்க அப்படியில்லங்கிறதுக்காக நம்ம கேரக்டர் தப்புனு ஆகிடுமா..”

“நீ இதிலிருந்து மொத்தமா வெளியே வரணும். அதுக்கு என்ன உதவி வேணாலும் நானும் உன் அண்ணாவும் பண்றோம்.”

“கொஞ்சம் கஷ்டமா இருக்கும் ஆனால் சீக்கிரமே தெளிஞ்சுருவேன் அண்ணி..”

“குட் உன்னை மாதிரி பசங்க இப்போ ரொம்ப ரொம்ப ரேர் கேஷா. உனக்கான பெஸ்ட் உன்னைத் தேடி கண்டிப்பா வரும்.”, என்ற அண்ணிக்கு புன்னகைத்தவன் அமைதியாய் வெளியேற அப்போது உள்ளே வந்த அதிரன் கேள்வியாய் மனைவியைப் பார்த்தான்.

தேவா விஷயத்தைக் கணவனிடம் கூற அவனோ கடுப்பாகியிருந்தான்.

“இந்த வயசில் என்ன லவ் வேண்டியது இருக்கு இவனுக்கு? அதுவும் இப்படி ஒரு செலெக்ஷன்?”

“சரி டென்ஷன் ஆகாதீங்க. இதெல்லாம் நம்ம கையிலேயா இருக்கு. அந்தப் பொண்ணுக்கு இவனோட செட் ஆகலை போயிட்டா.. என்ன இவன்கிட்ட சொல்லியே ப்ரேக்அப் பண்ணிட்டு போயிருக்கலாம்.”

“இவ்வளவு பொறுமையா எப்படி ஹேண்டில் பண்ற? நான் போய் அவனை என்னனு கேட்குறேன்.”

“அதி அந்த வயசு அப்படி தான. இது மாதிரியான விஷயங்கள் வாழ்க்கையை புரிய வைக்கும். நீங்க இப்போ போய் கத்தி கூச்சல் போட்டா அவனுக்கு பொண்ணுங்க மேலேயும் நம்பிக்கை வராது ரிலேஷன்ஷிப் மேலயும் நம்பிக்கை வராது.

காலேஜ் டேஸில் காதலிக்காதவங்க நீங்களும் நானுமா தான் இருப்போம். அதுக்காக அவன் பண்ணிணது தப்புனு ஆகிடுமா?

நீங்க கவலைப் படாதீங்க அவன் மேல எப்பவும் என் கவனம் இருக்கும். அதெல்லாம் அவன் சீக்கிரமே கடந்து வந்துருவான்.”

“என்னவோ சொல்ற நீ. அவனோட பேக்ரவுண்ட்க்கு இப்படி சின்னத்தனமான விஷயமெல்லாம் என்னால ஏத்துக்கவே முடியலை.”, என்றவன் இரு கரங்களையும் தனது கால்சாரையின் பாக்கெட்டினுள் விட்ட படி நின்றிருக்க தேவா மென்மையாய் அவனது வலக் கரத்தைப் பற்றிக் கொண்டாள்.

“நான் பார்த்துக்குறேன்னு சொல்றேன்ல. நீங்க டென்ஷன் ஆகாம இருங்க அதி..”, என்றவளின் நெருக்கம் அவனது மனநிலையை மொத்தமாய் மாற்றுவதாய்.

“காயத்ரி விஷயத்திலேயும் இப்போ இவன் விஷயத்திலேயும் நான் இப்படி எல்லாம் பொறுமையா இருந்துருக்கவே மாட்டேன் டி.”

“இரண்டுமே ஒவ்வொரு விதத்தில் சென்சிட்டிவ் விஷயம்ங்க. அண்ணியோட மாமியார் எப்படினு உங்களுக்கேத் தெரியும் நீங்க பேச அவங்க பதில் பேசனு பிரச்சனை பெருசாக தான் வாய்ப்பு அதிகம்.

இதில் பாதிக்கப்பட போறது காயத்ரியும் அண்ணாவும் தான். அவங்க இரண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் அவ்வளவு விரும்புறாங்க.

புருஷன் பொண்டாட்டி பிரச்சனை குடும்ப பிரச்சனையா மாறினால் மனஸ்தாபங்களும் வருத்தங்களும் தான் மிஞ்சும்.

எதாவது ஒரு கட்டத்தில் நீங்க பணக்காரங்கனு தான் இப்படியெல்லாம் பண்றீங்கனு அண்ணாக்கு எண்ணம் வந்துட்டால் அது காயத்ரியை அதிகமா பாதிக்கும்.”

“நீ சொல்றது கரெக்ட் தான். ஆனால் என்னால இத்தனையை எல்லாம் யோசிச்சு பேசிட்டு இருக்க முடியாது.

அவ சந்தோஷமா இருக்கணும் அவ்வளவு தான் எனக்கு வேணும். இதுக்கு தான் நமக்கு சரி சமமான குடும்பமா பாருங்கனு அம்மாகிட்ட சொன்னேன். எங்க கேட்டாங்க?”

“அப்போ சார் மட்டும் ஏன் என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களாம்?”, என்றவள் இடுப்பில் கை வைத்து கணவனை முறைத்து வைத்தாள்.

“இதுவும் அதுவும் ஒண்ணு இல்ல டி..”

“ஒரு வேளை நீங்க சொல்ற மாதிரி பணக்கார குடும்பத்தில் கல்யாணம் பண்ணிருந்தா அந்த மாமியார் மட்டும் நல்லவங்களா இருப்பாங்களா?

அப்பவும் புருஷன் வேலை வேலைனு போகாம இருப்பானா.
பிரச்சனைனால் எல்லாத்துலேயும் பிரச்சனை இருக்கு தான்.

காயத்ரி விஷயத்தில் பிரச்சனை பணம் இல்ல. ஒரு குழந்தை பிறந்த அப்பறம் எல்லா புருஷன் பொண்டாட்டிக்கும் வர்ற ஒரு சின்ன இடைவெளியைச் சமாளிக்கத் தெரியாத சூழ்நிலை அவ்வளவு தான்.”

“அப்போ நாளைக்கு என் பொண்டாட்டி எல்லா சூழ்நிலையையும் சமாளிச்சுருவானு சொல்ற?”, என்றவன் மனைவியின் இடைப் பற்றி தன்னோடு நிறுத்தினான்.

“ஓகோ குழந்தை பிறந்தா என்னை கண்டுக்காம போயிடுவீங்களா நீங்க?”

“ஆமா டி பொறுப்பு அதிகமாயிடும். நல்ல ஒரு அப்பாவா நடந்துக்கணும். அதையெல்லாம் விட்டுட்டு உன் பின்னாடியே சுத்துவாங்களா?”

“இந்த நாட்டுக்கே நீங்க ராஜாவானாலும் எனக்கான நேரத்தை எப்பவும் யாருக்கும் விட்டுத் தர மாட்டேன்.”

“உன் புள்ளைக்கு கூடவா?”

“ஆமா எனக்கு அப்பறம் தான் ,நீங்க என் புள்ளைக்கே..”

“அவ்வளவு பிடிக்குமா புருஷனை?”

“இப்போ எல்லாம் என் மனசில் என்னை விட அவர் தான் அதிகமா நிறைஞ்சுருக்கார்.”, என்றவளின் நெற்றி முட்டி புன்னகைத்தான் அதிரன்.

காத்யாயினிக்கு மகனும் மருமகளும் வாழும் வாழ்வை கண்முன் பார்ப்பதே அத்தனை மகிழ்வாய் இருக்கிறது.

எதற்கெடுத்தாலும் கோபமும் படபடப்பும் இருக்கும் மகனும் அவனைச் சமாதானப் படுத்த தன் கண்ணசைவிலேயே ஆயிரம் காதல் கதைகளைச் சுமந்து நிற்கும் மருமகளும் காத்யாயினிக்கு அருமருந்தாகிப் போயிருந்தனர்.

குடும்பத்தின் எந்த ஒரு பிரச்சனையையும் அறிவால் அணுகும் மகனுக்கு பக்க பலமாய் மனதால் அலசி ஆராய்ந்து அவனுக்கு எடுத்துக் கூறும் மருமகளை அவ்வளவு பிடித்தது அவருக்கு.

அதிரனின் தொழில் விஷயம் எதிலும் தப்பித் தவறியும் தன் கருத்து என எதையும் தெரிவிக்காதவள் வீட்டு விஷயத்தில் மட்டும் அவளே முடிந்தளவு பிரச்சனையை கையாண்டு விடுவாள்.

அதிரனுக்குமே கல்லூரியில் மனைவியின் நிர்வாகத் திறமை வியப்போடு பெருமையைக் கொடுத்திருந்தது.

தெரியாத சிறு விஷயத்தைக் கூட எவ்வித தயக்கமும் இன்றி அவனிடம் கேட்டு புரிந்துக் கொண்டு வேலை செய்யும் பாங்கு அவனுக்கு அவளிடம் பெரும் மரியாதையை ஏற்படுத்தியிருந்தது.

அன்று அதிரனின் பொறியியல் கல்லூரியில் கேம்பஸில் தேர்வான மாணவர்களை வைத்து ஒரு சிறு பார்ட்டி போன்று கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்க அதிரனும் அதற்கு வந்திருந்தான்.

மாணவ மாணவிகள் அனைவரும் ஆட்டம் பாட்டம் கூச்சல் என தங்களின் வெற்றியைக் கொண்டாடிக் கொண்டிருக்க அவினாஷ் புன்னகை முகமாய் அமைதியாய் அவர்களை ரசித்த படி கைத் தட்டி அமர்ந்திருந்தான்.

எதார்த்தமாய் அதிரனை அவன் பார்த்த நேரம் அவினாஷைத் தன்புறம் அழைத்தான் அதிரன்.

“சொல்லுங்க மாமா..”

“ஏன் டா அமைதியாவே உட்காந்துருக்க. அவங்களை மாதிரி என்ஜாய் பண்ண மாட்டியா? நான் இருக்கேன்னு அடக்கி வாசிக்குறியா?”

“அப்படியெல்லாம் இல்ல மாமா. நான் எப்பவுமே இப்படி தான்.”, என்றவன் சிறிதாய் புன்னகைத்தான்.

“சரி சொல்லு இந்த வேலைக் கிடைச்சதுக்கு உனக்கு என்ன வேணும்? நான் வாங்கித் தரேன்.”

“அதெல்லாம் எதுக்கு மாமா..”

“அவி.. என் தம்பி தங்கச்சிங்க எல்லாம் உன் அக்காவோட எப்படி பழகுறாங்கனு உனக்குத் தெரியும் தான?”

“..”

“நீ ஏன் என்கிட்ட இருந்து தள்ளியே இருக்க?”

“..”

“உன் அக்கா மாதிரி எனக்கு படபடனு பேச வராது டா..”, என்றதில் அவினாஷ் சிரித்திருந்தான்.

“நான் ரொம்ப கம்மியா தான் பேசுவேன். நீயும் இப்படி ஒதுங்கியே இருந்தா என்ன அர்த்தம்.

உன் அக்கா தான் உன்னை அம்மா ஸ்தானத்தில் இருந்து வளர்த்துருக்கா. அப்போ நான் யார் உனக்கு?”, என்றதில் கண்கள் கலங்கியிருந்தன அவினாஷிற்கு.

“நீ பொறுப்பா இருக்குறது ரொம்பவே சந்தோஷம் தான் ஆனால் கொஞ்சமாவது வாழ்க்கையை என்ஜாய் பண்ணு. உனக்குப் பிடிச்சதை பண்ணு என்ன வேணுமோ எதைப் பத்தியும் யோசிக்காம என்கிட்ட கேளு. சந்தோஷமா இரு. புரியுதா?”

“ம்ம் தேங்க்ஸ் மாமா..”, என்றவன் கண்களைத் துடைத்துக் கொண்டான்.

“இப்போ சொல்லு உனக்கு என்ன கிப்ட் வேணும்?”

“நாம எல்லாருமா சேர்ந்து எங்கேயாவது போயிட்டு வரலாமா மாமா?”

“இது கிப்டா?”

“அக்காவுக்கும் எனக்கும் கிடைச்ச பெரிய கிப்ட் நீங்க தான். இதுக்கு மேல எதுவும் வேண்டாம்.

ஆனால் நாம எல்லாருமா ஸ்பெண்ட் பண்ற டைம் எனக்கு பெஸ்ட் மெமரியா இருக்கும்.”, என்றவனின் தோள் தட்டியவனாய்,

“சீக்கிரமே போலாம். ஏற்பாடு பண்ணிட்டு சொல்றேன்.”, என்றதில் சந்தோஷமாய் தலையசைத்தான் அவினாஷ்.

வீட்டிற்கு வந்தவன் மனைவியிடம் கலந்து பேசி தங்கைகள் குடும்பத்தோடு அனைவருமாய் டெல்லி செல்வதாய் முடிவானது.

சாருகேஷ் ஓரளவு நடந்ததை ஏற்றுக் கொண்டு விட்டாலும் முன்பிருந்த கலகலப்பு சற்று குறைந்து விட்டிருந்தது அவனிடம்.

தேவா தம்பியிடம் கூறி முடிந்த அளவு அவனை எதாவது ஒரு விஷயத்தில் பிசியாகவே வைத்திருக்குமாறு பார்த்துக் கொண்டாள்.

இந்தப் பயணம் அவனுக்கும் ஒரு நல்ல மாற்றமாய் இருக்கும் என்று தோன்றியது அதிரனுக்கும் தேவாவிற்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!