Skip to content
Post Views: 7,256
“உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான் ஏதம் பலவும் தரும்
மு.வ விளக்க உரை: உறவுமுறையோடு உட்பகை உண்டாகுமானால், அது ஒருவனுக்கு இறக்கும் வகையான துன்பம் பலவற்றையும் கொடுக்கும்.”
அதிரனின் குடும்பம் மொத்தமும் டெல்லி ஆக்ரா சுற்றுப் பயணத்தில் இருந்தனர். அந்த அழகிய ரெஸார்ட்டில் அனைவருமாய் அமர்ந்திருக்க ஆண்கள் அனைவரும் நீச்சல் குளத்தில் இறங்கி விட்டிருந்தனர்.
காத்யாயினி தனது மருமகள் மகள்களோடு புல்வெளியில் அமர்ந்திருந்தார்.
Advertisement
காயத்ரியை புன்னகை முகமாய் பார்த்ததில் அவருக்கு பெரும் நிம்மதி.
“காயூ இப்போ, எல்லாம் ஓகே தான?”, என்ற தாயைப் பார்த்தவள் புன்னகையோடு ஆம் என்பதாய் தலையசைத்தாள்.
“தேங்க்ஸ் அண்ணி..”
Advertisement
“என்ன காயூ தேங்க்ஸ் எல்லாம்.”
Advertisement
“இப்போவும் எங்க மாமியார் குணம் மாறலை தான். ஆனால் எங்களுக்குள்ளே நிறைய மாற்றம் வந்துருக்கு. எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம்.
அன்னைக்கு நான் பண்ணது எவ்வளவு பெரிய தப்புனு அப்பறம் தான் புரிஞ்சுது. அதி அண்ணா டென்ஷன் ஆகி எதாவது பேசிருந்தா நிலைமை ரொம்ப மோசமாகியிருக்கும்.”
“அதெல்லாம் பக்குவமா சமாளிச்சுருப்பாரு காயூ..”
Advertisement
“ம்ம் மனசாட்சியைத் தொட்டு சொல்லு தேவா..”, என்ற மாமியாரை முறைக்க முயன்றவள் சிரித்திருந்தாள்.
“இப்போ எல்லாம் உங்க அண்ணன் வீட்டு விஷயத்தில் பெருசா தலையிடுறதே இல்ல. பாதி ப்ரஷர் எனக்கு அதிலேயே குறைஞ்சுடுச்சு கயல்.”
“ம்மா வந்த மூணு மாசத்துக்கே மருமக கையில் வீட்டை முழுசா ஒப்படைச்சுட்டீங்களே?”, என்ற கயல் விளையாட்டாய் சிரித்தாள்.
“வீட்டுக்கு நீங்க இரண்டு பேரும் வந்து ரொம்ப நாள் ஆச்சுல. வந்து உங்க அண்ணனும் அண்ணியும் குடும்பம் நடத்துற அழகைப் பாருங்க. அப்பறம் புரியும் நான் சொல்றது.”
“ம்மா ஏன் ம்மா நீங்க வேற..”, என்ற தேவாவின் முகத்தில் சிறிதான வெட்கம்.
“ஏன் அண்ணி இப்போ நாங்களாவது, படிச்சோம். படிப்பை முடிச்சவுடனே கல்யாணம் குடும்பம் இப்படியே போயிடுச்சு.
ஆனால் நீங்க ஒரு இன்டிபென்டெண்ட் வுமன்னா இருந்தாலும் கல்யாண வாழ்க்கையை எப்படி இவ்வளவு அழகா பேலன்ஸ் பண்றீங்க?”
“அண்ணி நமக்கான சூழ்நிலைகள் தான் நாம எப்படியிருக்கணும்ங்கிறதை தீர்மானிக்கும். நான் இன்டிபெண்டென்டா இருந்ததை கிட்டதட்ட வெறுக்குற நிலைமையில் தான் உங்க அண்ணன் என் வாழ்க்கைக்குள்ளே வந்தாரு.
அதனால ஹேப்பியா என்னை அவர்கிட்ட ஒப்படைச்சுட்டு ரெஸ்ட் எடுக்கலாம்னு நினைச்சுட்டேன்.
இன்னொன்னு இப்போ ஒரு வேளை உங்க அண்ணா என்னை மட்டம் தட்டுறவராவோ அடிமை படுத்துறவராவோ எனக்குப் பிடிக்காத விஷயத்தை எல்லாம் என் மேல திணிக்குறவராவோ இருந்தா தினம் தினம் பிரச்சனைகள் கண்டிப்பா வரும்.
ஆனால் எனக்காக எல்லாமே யோசிச்சு என்னை கம்போர்டபிளா பார்த்துக்குற ஒருத்தரோட வாழுற வாழ்க்கை எப்படி பிரச்சனையைக் கொடுக்கும். எனக்காக அவர் கண்டிப்பா நிறைய மாறிருக்கார்.
அப்போ அவருக்காக நான் சிலதை மாத்தி நடந்துக்குறது தான நியாயம். என்னைப் பொறுத்தவரை கல்யாணம் எப்பவுமே சரி பாதி அன்பும் சரி பாதி விட்டுக் கொடுத்தலோடவும் இருந்தா தான் சக்சஸ் ஆகும்.
நாம மட்டுமே பொறுத்துப் போனால் கண்டிப்பா ஒரு கட்டத்தில் வெறுப்பு வந்துரும் தான?”
“உண்மை தான் அண்ணி.. நீங்க எங்க புருஷங்ககிட்ட என்ன சொன்னீங்களோ தெரியாது. ஆனால் நாங்க அவங்க மேல வைச்சுருக்க அன்பை அவங்க எந்தளவு மதிக்குறாங்கனு இப்போ எல்லாம் தினம் தினம் நாங்களே புரிஞ்சுக்குறோம்.
காயூ கூட அதுக்கப்பறம் தான் அன்னைக்கு நடந்தது எவ்வளவு சின்னபிள்ளைத் தனமான விஷயம்னு புரிஞ்சுக்கிட்டா..”, என்றதில் தேவா புன்னகைத்தாள்.
“அண்ணி ஒரு விஷயம் எங்களுக்குத் தெரிஞ்சே ஆகணும்.”
“என்ன காயூ?”, என்றவளின் கண்களில் கலவரம் அதைப் புரிந்துக் கொண்டவளாய் காயூ சிரிப்புடன்,
“உங்க ரிலேஷேன்ஷிப் கண்டிப்பா 50-50 இல்ல 80-20 இல்ல 90-10 தான்.
ஆனால் அந்த அதிகம் யாரு நீங்களா அண்ணாவா?”, என்றதில் தேவாவின் முகம் சிவந்து விட்டிருந்தது.
மாமியாரை ஓரப் பார்வை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் இருக்க காயூவும் கயலும் அவளை விடுவதாய் இல்லை.
“கண்டிப்பா அவர் தான். ஏன்னால் ஆண்கள் அதிகமா காதலிக்குற உறவு தான் ரொம்ப உறுதியாவும் சந்தோஷமாவும் இருக்கும்.”
நீருக்குள் இருந்தவனின் பார்வை மொத்தமும் மனைவியிடம் தான். அவ்வப்போது சிவந்து போகும் அந்த முகம் அவனை இதுதான் முதல் முறை என்பது போல் பார்க்க வைத்துக் கொண்டேயிருந்தது.
“மச்சான் மொத்தமா சரண்டர் போலேயே?”, என்ற விஜயனின் பேச்சில் தான் பார்வையைத் திருப்பியவன் மெலிதான புன்னகையோடு மேல் திண்டில் ஏறி அமர்ந்தான்.
“என்ன மச்சான் நான் சொன்னது உண்மை தான?”
“பொண்டாட்டிகிட்ட சரண்டர் ஆகாம வாழ்க்கை எப்படி சந்தோஷமா இருக்கும் மச்சான்?”, என்றவனின் பதிலில் இருவரும் சிரித்தனர்.
“புதுசா கல்யாணம் ஆகிருக்கு. அப்போ இப்படியெல்லாம் பேச்சு இல்லைனால் தான் ஆச்சரியப்படனும்.”
“பிசினஸிலேயே சொன்ன வாக்கை எப்பவும் கடைப் பிடிக்கணும்னு நினைக்குறவன். என் பொண்டாட்டிகிட்ட எப்படி அதை மாத்திக்குவேன். இன்னைக்கு சொல்றது தான் என்னைக்கும்.”
“தேவாவும் நீங்களும் அப்படி ஒரு பொருத்தம் மச்சான். இப்போ தான் கல்யாணம் ஆனவங்கனு சொல்ல முடியாத அளவுக்கு ஒரு புரிதல் இருக்கு உங்க இரண்டு பேருக்கும்.”
“உண்மை தான் பெண்கள் அதிகமா காதலிச்சால் அந்த வாழ்க்கை எவ்வளவு அழகாயிருக்கும்னு ஒரு ஒரு நாளும் தெரிய வைக்குறா.”, என்ற நேரம் தேவாவும் அவனைப் பார்த்திருக்க பிறர் அறியாத கண் வழி கடத்தப்பட்ட முத்தங்களின் சத்தங்களைத் தாங்கள் மட்டுமாய் உணர்ந்து புன்னகைத்தனர்.
சாருகேஷும் அவினாஷும் தான் உண்மையில் அதிக மகிழ்ச்சியோடு அந்த சுற்றுலாவை அனுபவித்தனர்.
அனைவரின் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிரனையும் தேவாவையும் இன்னுமாய் மகிழ்வித்திருக்க எப்போதும் போல் ஒருவரை ஒருவர் அளவுக்கதிகமாய் நாடியதான ஒரு கூடல்.
“என்ன திமிரழகி முறைக்குற?!”
“எல்லாம் உங்களால தான்.”
“நானா நான் என்ன டி பண்ணேன்?”, என்றவன் சிரிப்பை அடக்கிக் கொண்டு தன்னவளின் தலை வருடிய யடி படுத்திருந்தான். சட்டென தலை நிமிர்த்தி அவனைப் பார்த்தவள்,
“நான் எல்லாம் எவ்வளவு அப்பிராணி தெரியுமா. பச்சை மண்ணா இருந்த என்னை இப்படி மோசமானவளா மாத்தி வைச்சுருக்கீங்க.”, என்றதில் அதிரன் சத்தமாய் சிரித்திருந்தான்.
“ஷ்ஷ்.. சத்தம் போடாதீங்க…”
“நீ சொன்னதை மறுக்க முடியாது ஒத்துக்கிட்டு தான் டி ஆகணும்.”, என்றதில் கணவனை வலிக்கக் கிள்ளியிருந்தாள்.
“இது நம்ம வாழ்க்கை நமக்கு பிடிச்ச மாதிரி எல்லா விஷயத்திலேயும் சந்தோஷமா வாழறதில் என்ன தப்பிருக்கு சொல்லு. ஐ லவ் டு மேக் யூ ஈவன் மோர் வொர்ஸ்ட் ரஞ்சு..”, என்றதில் கணவனின் இதழ்களில் முத்திரை பதித்தவளாய்,
“என்னோட ஒவ்வொரு நாள் முடியும் போதும் எனக்காக நீங்க வேணும் அதி. என்னோட எல்லா புலம்பலுக்கும் வருத்தத்துக்கும் கோவத்துக்கும் அந்த நாளோட எல்லாத்தையும் கொட்டித் தீர்க்குறதுக்கும் ஐ ஜஸ்ட் நீட் யூ.”, என்றவளின் இறுகிய அணைப்பில் குழந்தையாய் தன்னைத் தொலைத்துக் கொண்டான் அதிரன்.
சில வருடங்களுக்குப் பிறகு,
“மாமா இவ ரொம்ப டார்ச்சர் பண்றா. சீக்கிரம் மொட்டையை முடிக்க சொல்லுங்க..”, என்ற அவினாஷின் கதறலைக் கண்டு கொள்ளாதவனாய் மகளின் அழுகையை நிறுத்துவதற்குப் போராடிக் கொண்டிருந்தான் அதிரன்.
“ம்மா பாப்பா பாவம்..”, என்ற நான்கு வயது யஷ்வந்த் தேவாவின் தோள் சாய்ந்து எந்த நொடியும் அழுவதற்குத் தயாராக இருந்தான்.
“அவி ஒழுங்கா பிடி டா.. தலையை அசைச்சுற போறா.”, என்ற அதிரனின் மகள் யாழினியைத் தான் கோவிலில் இருந்த கூட்டம் மொத்தமும் வேடிக்கைப் பார்த்தது.
அந்த இன்ட்ரொவெர்ட் மகானிற்கு பிறந்த இரண்டு பேருமே கம்ப்ளீட் எக்ஸ்ட்ரோவெர்ட்டாக வந்திருக்க எங்கு சென்றாலும் ஊர் கவனம் மொத்தமும் தங்களிடம் தான் என அதிரனையே விழி பிதுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
“தயவு செஞ்சு கொஞ்ச நேரம் வாயை மூடு டா”, என்ற நிலையில் மகனும், “உன் பொண்ணு என்னை உன் பக்கத்திலேயே விட மாட்றா டி”, என்பதான மகளுமாய் வாழ்க்கையை இருபத்தி நான்கு மணி நேரமும் பிசியாக வைத்திருக்கிறார்கள் அதிரனுக்கு.
மொட்டை அடித்து முடித்த நேரம் தன்னைப் பிடித்து வைத்ததற்காக மாமனை நாலு அடி அடித்து கடித்து வைத்த பின்பே தந்தையிடம் வந்தவள் தந்தையைப் பார்த்ததும் இன்னுமாய் உதடு பிதுக்கினாள்.
“போதும் டி அப்பாவைப் பார்த்ததும் எக்ஸ்ட்ராவா நடிக்காத..”, என்ற கயல் குழந்தையை குளிப்பாட்ட எடுத்துச் சென்றாள்.
“இதெல்லாம் கணக்குல வைச்சு நான் கேட்குறப்போ எல்லாம் ட்ரிப் கூட்டிட்டு போகலைனால் இருக்கு மாமா உங்களுக்கு..”
“அதான் நிச்சயம் பண்ணி ஒருத்தி தலையில் உன்னைக் கட்டியாச்சுல அவளோட எங்கே வேணுமோ போடா கல்யாணத்தை முடிச்சுட்டு.”, என்றவன் மனைவியை பார்த்து இடவலமாய் தலையசைத்து நகர்ந்தான்.
மகனை சாருகேஷிடம் கொடுத்து விட்டு கணவனுக்காக தண்ணீர் எடுத்துக் கொண்டு அவனைத் தேடிச் செல்ல சற்றுத் தள்ளி நின்று தனக்கு வந்த அழைப்பை ஏற்றுப் பேசிக் கொண்டிருந்தான் அதிரன்.
“என்னை ஏன் டி இப்படி படுத்துறீங்க..”
“மிஸ்டர் இன்ட்ரொவெர்ட்க்கு ஏத்த பசங்க..”, என்றவள் உதடு மடித்துச் சிரிப்பை அடக்கினாள்.
“ராத்திரி இருக்கு டி கச்சேரி உனக்கு..”, என்றவனைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்று எல்லாரோடும் நின்று கொண்டாள் தேவா.
கோவிலிலிருந்து கிளம்பியவர்கள் வீட்டை அடைந்திருக்க தங்கைகளும் அன்று அங்கு தான் தங்கும் காரணத்தால் பிள்ளைகள் இருவரையும் விட்டு விட்டு ஓடாத குறையாக காருக்குச் சென்றிருந்தான் அதிரன்.
“அக்கா இதெல்லாம் ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்.”, என்ற சாருகேஷின் மனைவியின் வாயைப் பொத்திவளாய் பிள்ளைகளுக்குத் தெரியாமல் நழுவி வெளியே வந்தவள் காத்யாயினியிடம் கூறிவிட்டு கிளம்பத் தயாராக,
“யாரோ ஒரு பொண்ணு கல்யாணம் பண்ணிக்குற ஐடியாவே இல்லைனு கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி சொன்னா தேவா..”, என்றதில் அவர் முன் மண்டியிட்டு அமர்ந்தவளாய் மடியில் முகம் புதைத்துக் கொண்டாள்.
“ம்மா.. அவர் நாளைக்கு யூ எஸ் கிளம்புறதுனால இந்த ட்ரிப்க்கு நோ சொல்ல முடியலை.”
“சும்மா கேலி பண்ணினேன். நீங்க நிம்மதியா போயிட்டு வாங்க. நாங்க இந்த வாண்டுகளை பார்த்துக்குறோம்.
உங்களுக்கான நேரம் ரொம்பவே கம்மியா போச்சு.”, என்றவருக்குப் புன்னகைத்து விட்டு ஓடியிருந்தாள்.
கார் வீட்டை கடந்ததும் அதிரனிடத்தில் ஒரு பெருமூச்சு அதைப் பார்த்துச் சிரித்தவளாய் தனது நகைகளைக் கழற்றி வைத்துக் கொண்டிருந்தாள் தேவா.
“இப்படியா இழுத்துட்டு வருவீங்க. பட்டுப் புடவையை கூட மாத்த விடாம..”
“ஏன் டி சொல்ல மாட்ட அப்பறம் உன் பொண்ணு உரிமைக் கொடி தூக்கிட்டு வந்துருப்பா. நீயும் அவளை விட்டுட்டு வர மாட்டேன்னு கண்ணைக் கசக்கி என் ப்ளானையே கெடுத்துருப்ப…”
“இரண்டு புள்ளை வந்தப்பறமும் பேச்சைப் பாரு..”, என்றவளுக்கு முகம் பூரிப்பாய் இருந்தது.
“எத்தனை வயசானாலும் ஐ அம் Obsessed ஆன் யூ டி ரஞ்சு.”, என்றவன் தனது இடக்கரத்தை நீட்ட இறுக்கமாய் பற்றிக் கொண்டாள் தேவா.
வால்பாறையில் இருக்கும் ஹெஸ்ட் அவுஸிற்கு வந்தவர்கள் அப்படியே கட்டிலில் விழ அடித்துப் போட்டது போன்று ஒரு தூக்கம் இருவருக்கும்.
இரவு ஏழு மணிக்கு மேல் கண் விழித்தவர்களாய் பொறுமையாய் குளித்து உணவை முடித்து தோட்டத்தில் அமர்ந்திருந்தனர்.
“ஒன் மன்த் ரஞ்சு. நீயில்லாம நான் எப்படியிருப்பேன்.”
“இப்படியெல்லாம் பேசினால் நானும் தான் என்ன பண்ணுவேன்.”, என்றவள் கண்கள் கலங்க அவசரமாய் இழுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
“சரி விடு கண்ணை மூடித் திறக்குறதுக்குள்ளே ஓடிரும். ஆனால் ஒரு மாசத்துக்கு தாங்குற மாதிரியான கவனிப்பு வேணும்.”, என்றதில் கணவனின் தோள் தட்டியவளாய் அவளது கைப்பேசியை எடுத்து பாடலை ஒலிக்க விட்டாள்.
“ஆ… இப்படி நிம்மதியா பாட்டு கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு..”, என்றவனோடு எழுந்து கொண்டவள் எப்பபோதும் போல் அவனுக்கு ஈடு கொடுத்து ஆட ஆரம்பித்திருந்தாள்.
“இதயம் உருகித்தான்
கரைந்து போவதை பாா்க்கிறேன்
நான் பாா்க்கிறேன் இந்த நிமிடம்
தான் இன்னும் தொடருமா
கேட்கிறேன் உனை கேட்கிறேன்
இது என்ன இன்று வசந்த காலமா
இடைவெளி இன்னும் குறைந்து போகுமா”
பாடல் முடிந்த நேரம் மனைவியை அப்படியே கைகளில் ஏந்திக் கொண்டவனாய் உள்ளே சென்றிருந்தான் அதிரன்.
முன்பு போன்ற தனிமை கிடைப்பதில்லை முன்பு போல காதல் பரிமாற்றங்களைச் செய்து கொள்ள முடிவதில்லை.
முன்பு போல கணவனும் மனைவியுமாய் மனது விட்டுப் பேசிக் கொள்ள முடியவில்லை பத்தாததற்கு வேலைகளும் பொறுப்புகளும் இருவருக்கும் சரி சமமாய் இருக்க ஒரு நாளின் இருவருக்குமான நேரம் என்பதே இல்லாத நிலை தான்.
ஆனாலும் அவர்களின் காதலில் துளியும் குறைவில்லாமல் ஒருவரை ஒருவர் கிடைத்த நேரத்தில் எல்லாம் கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள்.
மனிதர்கள் எப்போதுமே பிரியங்களின் எதோ ஒரு வடிவின் நிழிலில் இருந்து வாழ்ந்து மடிந்து விடவே பிரியப்படுகிறார்கள்.
பிரியங்களின் நிழலில் இருப்பவர்களை இப்பிரபஞ்சத்தின் எந்த வித வெப்பச் சலனங்களும் நெருங்குவதே இல்லை.
அவர்களுக்கான உலகமும் பொழுதும் இணையின் கண் பார்வையிலும் கை கோர்த்தலிலுமே அடங்கி விடுகிறது.
*********** முற்றும் ************
error: Content is protected !!