Skip to content
Post Views: 5,869

மாங்கனிங்களின் நகரம் என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டத்தில் தமிழ்நாட்டின் அலுமினிய நகரம் என்று அழைக்கபடும் மேட்டூர் அருகில் உள்ள மேலூர் ( கற்பனை ஊர் ) சூரியன் இன்னும் உதிக்காத அந்த வைகறை பொழுதில் (வைகறை பொழுது 2மணி முதல் 6 மணி வரை) ஒரு பெண் தன்னுடைய வீட்டின் பின்புறம் அமர்ந்து வானத்தை வெறித்தவாறு அமர்ந்து இருந்தாள்…
அவளின் கண்கள் வெறுமையை தாங்கியவாரு இருந்தது…. கண்களில் இருந்து கண்ணீர் வற்றிப்போய் இருந்தது…
Advertisement
அவளின் மனமோ கதறியவாறு எதையோ நினைத்து அழுதுக்கொண்டு இருந்தது…
Advertisement
இன்று அவளின் உயிரானவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்… இத்தனை வருட காதலின் தோல்வி அவளை நிலைக்குலைய வைத்து இருந்தது… சொல்லவேண்டும் என்றால் இவள் பிறந்ததில் இருந்து அவனின் காதல் உள்ளது… இவளின் காதலை விட அவனின் காதலின் காலமே அதிகம் ஆகும்… இருந்தும் சூழ்நிலை அவர்களுக்கு எதிராக இருக்கும் காரணத்தினால் இன்று அவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் திருமணம்… இது தான் விதியின் சதியோ?!?!?!…..
Advertisement
“அம்மா அப்பா என்னை ஏன் தனியா விட்டுட்டு போனீங்க.. என்னையும் உங்க கூடயே கூட்டிட்டு போய் இருக்கலாம்ல…. எனக்கு துணையா நீங்க தான் இல்லை… எனக்காக இருந்தவரையும் எங்கிட்ட இருந்து எடுத்துடீங்கல…. ” என்று காலம் சென்ற தன்னுடைய பெற்றவர்களிடம் மானசீகமாக உரையாடி கொண்டு இருந்தாள்…
Advertisement
பிறகு என்ன நினைத்தாளோ அங்கு இருக்கும் கிணற்றை நோக்கி சென்றாள்…. அவள் வானதி தேவி…
அவளுக்கு துணை யாருமில்லை…. அவளுடைய துணை அவளே ஆவாள்…. மிகவும் தைரியமான பெண் அவள்… அவளுக்கு இருக்கும் ஒரு குறையை நினைத்து மனம் தளராமல் படித்து தற்போது ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணி புரிந்து கொண்டு உள்ளாள்…
துணையாக வர போகிறான் என்று நினைத்தவனும் வேறு ஒருவளை திருமணம் செய்துகொள்ள போகிறான்…. அவனின் பிரிவு அவளை கலங்க வைத்து உள்ளது… அவளுக்கு துணை யாரோ?!??!….
******************************************
அதே வேலையில் அங்கு ஒரு மண்டபத்தில் வாயிலில் அருள்மொழி வெட்ஸ் தேவிகா என்று பேனர் வைத்து அலங்கரித்து இருந்தது…
மணமகளின் குடும்பத்தினர் தான் அங்கும் இங்கும் ஓடியாடி திருமண வேலைகளை செய்து கொண்டு இருந்தனர்…
மணமகனின் தாயார் பத்மினி அவர் கணவனின் தங்கையும் தற்போது சம்பந்தி ஆக போகும் தன்னுடைய நாத்தனார் நாயகியிடம் ” நாயகி தேவி ரெடி ஆகிட்டாளா…. யாரு அவ கூட இருக்கா… தனியா இருக்காளா…. நீ என்ன செய்ற…” என்று கேட்டார் அவர்….
அதற்கு நாயகியோ “ரெடி ஆயிட்டா அண்ணி… கூட அவ ப்ரெண்ட்ஸ் இருக்காங்க… கொஞ்சம் அவர் வேலை சொன்னாரு அண்ணி அதை செஞ்சிட்டு இருக்கேன்….. ” என்று கூறினார் அவர்
“சரி நாயகி நீ வேலையை பாரு… நான் போய் ரஞ்சியை பாக்குறேன்…. காலைல இருந்து ஒரே இடத்துல இருக்கா… இந்த பசங்களும் அங்கேயே இருக்காங்க… என்னனு பாத்துட்டு வரேன்…..” என்று கூறி அங்கிருந்து சென்றார்….
மணமகனின் சகோதரர்களும் சகோதரியும் அவளின் கணவனும் யாருக்கு கல்யாணம் என்ற ரீதியில் அமர்ந்து இருந்தனர்…
மணமகனோ இவர்களின் நடவடிக்கையை பார்த்தாவாரு யோசனையுடன் கல்யாணத்திற்கு தயாராகி இருந்தான்….
பத்மினி இவர்கள் அருகில் வந்து “ரஞ்சி ஏன் இங்க உட்காந்து இருக்க.. போய் உன் அண்ணி கூட இருக்கலாம்ல…. பாக்குறவங்க என்ன நினைப்பாங்க… டேய் நீங்க ரெண்டு பேர் இங்க ஏன் உட்காந்து இருக்கீங்க… போய் வேலையை பாருங்க… உங்க மாமா மட்டும் தனியா வேலை செஞ்சிட்டு இருக்காரு போங்க ” என்று விரட்டினார்….
அதற்கு கடைகுட்டியோ “இவங்க ஒன்னும் எங்க அண்ணி இல்ல.. எங்க அண்ணி எப்பயும் வானு அண்ணி மட்டும் தான் ” என்று கொஞ்சம் இல்லை மிகவும் கோவமாகவே கூறினான்….
அவனின் பேச்சை கேட்டு கோவமடைந்த பத்மினி அவனை அடித்து விட்டு “என்ன சொன்ன….. அந்த… ” என்று அடுத்து கூறுவதற்குள் வீரவேலன் ரஞ்சியின் கணவன் அருளின் நண்பன் “என்ன பண்றிங்க அத்த” என்று கேட்டு கொண்டே கடைகுட்டி யுகேந்திரனை தன்பக்கம் இழுத்து கொண்டு “பாப்பாவை பத்தி ஒரு வார்த்தை தப்பா உங்க வாயில இருந்து வந்துச்சு மனுஷனா இருக்க மாட்டேன் “என்று கோவமாக கூறினான்…..
“அது மாப்பிளை… பாக்குறவங்க எல்லாம் கேட்கிறாங்க.. பையனோட தங்கச்சிக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லையானு அந்த கோவத்துல வந்து கத்திட்டேன்….” என்று மெல்லிய குரலில் கூறினார் பத்மினி….
அதற்கு கடைகுட்டிக்கு முன்னால் பிறந்த தேவதரணோ “ஆமா என் பொண்ணுக்கு இஷ்டம் இல்லனு சொல்லிடு ” என்று நக்கலாக கூறினான்…
வேலன் அவனிடம் “அமைதியா இரு தேவா ” என்று கூறிவிட்டு பத்மினியிடம் திரும்பி “உங்ககிட்ட ஆரம்பத்துலயே சொல்லிட்டோம் அத்தை இந்த கல்யாணம் நடக்காதுனு…. அவனுக்கு பொண்ணு யாருனு தெரிஞ்சா அவனே நிறுத்திடுவான்.. இந்த கல்யாணம் அவனை மீறி நடந்தாலும் இனிமே எங்களுக்கும் அந்த வீட்டுக்கும் சம்பந்தம் இல்ல…. இவனுங்க ரெண்டு பேரையும் என் பசங்களா நான் பாத்துப்பேன்… அப்பாவும் அம்மாவும் அதுனால தான்னு கல்யாணத்துக்கு வரல… அவங்களுக்கும் விருப்பம் இல்ல தயவு செஞ்சி போங்க அத்தை…. பாருங்க உங்க சம்பந்தி ஆக போறவரு ரொம்ப நேரமா எனக்கு பின்னாடி நின்னு ஒட்டு கேட்டுட்டு இருக்காரு…. அவரு எதோ பிளான் சொல்லுவாரு அதை வெச்சு கல்யாணத்தை நடத்த ஏற்பாடு செய்ங்க…. ஆனா நாங்க யாரும் அருளுக்கு கல்யாணம் நடக்க கூடாதுன்னு நினைக்கல அத்தை என்று கூறி அங்கேயே அமர்ந்து விட்டான்…. அவனுடன் மற்ற மூவரும் அமர்ந்து கொண்டனர்….
வேலன் சொன்னது போல் ஒட்டு கேட்டு கொண்டு இருந்த நாயகியின் கணவன் கண்ணப்பன் வேலன் அவ்வாறு கூறியவுடன் வேகமாக அங்கிருந்து சென்றுவிட்டார்….. வேலனின் பேச்சில் கொஞ்சம் குழம்பி தான் போய் இருந்தார் பத்மினி….
இங்கு மணமகளோ ஒருவித பயத்துடனே தயாராகி அமர்ந்து இருந்தாள்…. அவள் தேவிகா…. நாயகி அந்த அறைக்கு வந்து அவளின் தோழிகளை கொஞ்ச நேரம் வெளியே இருக்க கூறிவிட்டு அறையை சாற்றிவிட்டு ” அடியே தேவி கல்யாணம் நல்லபடியா நடக்கும்ல… எனக்கு என்னவோ பயமா இருக்கு…. நீ வேற ஏன்டி இவன் தான் வேணும்னு அடம் பண்ணி கல்யாணம் பண்ணிக்குற… நமக்கு இருக்குற காசுக்கு எவளோ பெரிய பணக்காரனை கல்யாணம் பண்ணலாம்… இந்த ரவுடி பையன ஏன்டி கல்யாணம் பண்ண பிடிவாதம் பண்ற” என்று கோவமாக கேட்டார்…
என்ன நம்ம பணமா…. இது யாரோட காசு… நம்மகிட்ட எப்படி வந்துச்சுனு தெரியாம பேசுறியா…. கோர்ட்ல கேஸ் அவங்களுக்கு சாதகமா தீர்ப்பு வர வாய்ப்பு இருக்குனு வக்கீல் சொன்னாரு…. சொத்து நம்ம கைவிட்டு போகமா இருக்க தான் இந்த கல்யாணம்… இந்த கல்யாணம் மட்டும் நடக்கட்டும் அந்த கிழவியை கூட அந்த வீட்டை விட்டு அனுப்பிடுவேன்” என்று கேலியாக கூறினாள்…
“ஐயோ என்னடி சொல்ற… கேஸ் அவங்க பக்கம் போகுற மாதிரி இருக்கா… முன்னாடியே சொல்லல….” என்று கொஞ்சம் வேகமாக கேட்டார்….
“ஆமா… உங்கிட்ட சொன்னா முன்னாடியே எல்லார்கிட்டயும் ஒளறி வெச்சிடுவ…. அது தான் சொல்லல…. இன்னும் கொஞ்ச நேரம் தான்… அப்பறம் நிஜமாவே அந்த சொத்து நமக்கு தான்” என்று சந்தோசமாக கூறினாள்….
இந்த கல்யாணம் நடைபெறுமா?!?!?!….
*********************************************
இங்கு வானதி வீட்டில்….
“அக்கா அக்கா எங்க இருக்கீங்க….” என்று கேட்டுக்கொண்டே வானதியின் வீட்டுக்குள் அவளை தேடி ஓடி வந்தாள்….
அவள் கிணற்றடியை நோக்கி சென்று கொண்டு இருப்பதை பார்த்து “ஐயோ அக்கா என்ன பண்ண போறீங்க… தப்பான முடிவு எடுக்குறீங்க…. ” என்று கேட்டு கொண்டே அவளிடம் ஓடினாள் அவள்….
ஓடி சென்று அவளின் கையை பிடித்து தடுத்து நிறுத்தி “அக்கா ஏன்க்கா இப்படி தப்பான முடிவு எடுத்தீங்க…… உங்க உயிரை விட முடிவு எடுத்துதீங்க…..” என்று அவளை அணைத்து கொண்டு அழுதாள்…..
வானதியோ அவளை தள்ளி நிறுத்தி விட்டு அழுது கொண்டு இருந்தவளை கூப்பிட்டு ஒரு இடத்தை நோக்கி கையை காட்டினாள்…. அதை பார்த்துவிட்டு அவள் வானதியை நோக்கி பல்லை காட்டி நின்றுவிட்டாள்…..
error: Content is protected !!