Skip to content
Post Views: 5,128
அத்தியாயம் – 4
தன் முன் அமர்ந்திருக்கும் சிவராமனை மௌனமாக பார்த்து கொண்டு இருந்தார் முத்து.சிவகாமி சங்கடமாக அமர்ந்திருந்தாள்.சிவராமனும், சிவகாமியும் அன்று நடந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு மேலும் பத்து நாட்கள் கடந்தே முத்துவை பார்க்க வர வந்திருக்கிறார்கள்.
வீட்டுக்கு வந்தவர்களை முத்து தான் “வாங்க!” என்று அழைத்தார்.முத்துவின் மனைவி காந்திமதி அவர்களை ஆழ்ந்து பார்த்தாரே ஒழிய ஒரு சிறு தலையசைப்பு கூட இல்லை.அதுவே அவர்களது மனநிலையை எடுத்து காட்ட சிவகாமிக்கு சங்கடமாகி போனது.
மனக்கசப்பை தள்ளி நிறுத்தி விட்டு காரியமே கண்ணாக சிவகாமி பேச்சை தொடங்கினாள்”அண்ணே! எங்க மேல கோபமா இருக்கீங்கன்னு புரியுது?” மிகவும் தன்மையாக கேட்க.
Advertisement
“கோபமெல்லாம் இல்லம்மா, ஆனா வருத்தமா இருக்கு அத்தனை தூரம் நான் பேசி சிவா கிட்ட உறுதி வாங்கி தான் எங்க வீட்டு பொண்ணை கொடுத்தோம்” மேலும் பேச முடியாமல் பேச்சை நிறுத்தி கொண்டார் முத்து.
கணவனின் நிலை உணர்ந்த காந்திமதி, “எங்க வீட்டு பொண்ணே தப்பு செஞ்சிருந்தாலும் எங்களை கூப்பிட்டு விஷியத்தை சொல்லி வச்சு பொண்ணை அனுப்பிருக்கனும்.இல்லையா நீங்க வந்து பேசி அவளை விட்டுட்டு போயிருக்கனும்.அவ கல்யாணத்தை முன்னேருந்து பெத்துவங்களா நடத்தி வச்சது நாங்க தானே.
அப்போ அவங்க நல்லது, பொல்லது எல்லாமே எங்களை தானே சேரும்.எங்களுக்கு பிள்ளைங்க இல்லை.எங்க கடைசி காலம் அவங்களை கொண்டு தான்.அப்படி இருக்கும் போது நீங்க செஞ்ச வேலைக்கு எங்ககிட்ட கோபப்பட்டு ஊரே விட்டு சொல்லாம குடும்பத்தோட போயிட்டாங்க.
Advertisement
அந்த புள்ளைங்க கூட சொல்லல.அப்போ பார்த்துக்கோங்க. அவங்க எத்தனை தூரம் வருத்தமா இருப்பாங்கன்னு” பட படவென கொட்டி விட்டாள் காந்திமதி.
Advertisement
என்று காந்திமதிக்கு குழந்தை இல்லை என்று தெரிந்ததோ அன்றில் இருந்து அமுதனும், விசாலாட்சியும் தான் அவளுக்கு பிள்ளையாகி போனார்கள்.அதுவும் அமுதன் மீது தனி பிரியம் அவருக்கு.அவனும் தனது தாய்க்கு நிகராக பார்த்து கொள்வான். அத்தை என்ற வேறுபாடே அவனிடம் இருக்காது.
ஆனால் இவர்களின் பிழை பெரும் மனக்கசப்பை கொடுக்க.தன்னிடம் கூட சொல்லாம சென்று விட்டார்கள்.நெருங்கிய உறவுகளுக்கு சொல்லி எங்கு இருக்கிறார்கள் என்று விசாரிக்க சொல்லிருக்கிறார் முத்து.இன்னும் தகவல் தான் வந்த பாடில்லை.
காந்திமதி சொன்னதை கேட்டு அதிர்ந்தனர் சிவராமனும்,சிவகாமியும் “என்ன சொல்றீங்க?” தவிப்புடன் சிவகாமி சிறு அலறலாக கேட்க.
Advertisement
“ஒன்னுமே சொல்லுறதுக்கு இல்லம்மா என் தங்கச்சி விஷியத்தை வந்து சொல்லும் போது என்ன? ஏதுன்னு? விசாரிக்கிறேன்னு சொன்னேன்.சிவா கிட்ட பேசிட்டு தம்பிகிட்ட பேசிடலாம்னு நாங்க இரண்டு பேரும் பேசி முடிவு பண்ணுனோம்.
அதுக்கு அடுத்த நாளுல இருந்து இவளுக்கு முடியாம பேச்சு.எங்களுக்கு யாரு இருக்கா புள்ளையா? குட்டியா? என் தங்கச்சியும் விசாலாட்சியும் தான் பார்த்துக்கிட்டாங்க.அப்படியும் என் தங்கச்சி கேட்கும் போதெல்லாம் பேசுறேன் பேசுறேன்னு தட்டி கழிச்சேன்.
நான் வேணுன்னு செய்யல என் சூழ்நிலை அப்படி. நாள் போக, போக நம்பிக்கையும் போச்சு போல இனி என்கிட்டையும் பேசி பயனில்லன்னு கிளப்பிட்டாங்க. என் மேலையும் இருக்கு.
இந்த முடிவை எடுக்குற அளவுக்கு என் தங்கச்சிக்கு துணிச்சல் இல்லை, ஆனா அமுதன் செய்யக் கூடியவன் தான்.அவன் செயல் தப்புன்னு இப்போ நம்ப சொல்ல முடியாது இல்லையா?
முத்து சொன்னதைக் கேட்டு கணவனிடம் சடாரென திரும்பிய சிவகாமி வெடித்து விட்டாள், “போதுமா இப்ப சந்தோசமா தலை பாடா அடிச்சிகிட்டேன் போயி பேசுங்கன்னு கேட்டிங்களா? அப்பாவும், மகனும் அலட்சியம் காட்டி நின்னீங்கள. இப்போ அனுபவிங்க போச்சு எல்லாம் போச்சு இந்தப் பாவத்தை எங்க போயி தொலைக்கன்னு தெரியலையே “
இன்னும் எதோ புலம்பி கொண்டே இருந்தவர் ஒரு கட்டத்துக்கு மேல் தாங்க முடியாமல் கதறி அழுக முத்துவும் காந்திமதியும் பதறி நின்றனர்.சிவராமன் மனைவியைச் சமாளிக்க முடியாமல் தவித்துப் போனார்.
“சிவா கண்டு புடிச்சிடலாம் கோவைய விட்டு எங்கையும் போயிருக்க முடியாது” சிவராமன் சமாதானம் செய்ய முயல அதற்கும் கத்தி வைத்தார்.
“இதோ இந்த அலட்சியம் தான் இப்போ இப்படி வந்து நிக்குது. சின்ன பிள்ளைங்களா இருந்தாலும் எத்தனை தைரியமா முடிவெடுத்து வச்சிருச்சு பாருங்க உங்க அலட்சியத்துக்கு நல்லா வேணும்.இனி என்னை விட்டுருங்க.
எல்லாம் என் தப்பு நான் அவனை அப்படியே விட்டுருக்கனும். இல்லையா என் பேத்திங்கள ஒருத்திய கட்டி வச்சிருக்கனும். அப்போ அவன் இப்படி செஞ்சுருப்பானா? செஞ்சிருந்தா உங்க பொண்ணுங்க சும்மா இருந்திருப்பாளுகளா?
அடுத்து விட்டு பொண்ணு தானே அந்த அலட்சியம் இருக்கத் தான் செய்யும்.என்னமோ பண்ணுங்க உங்க பேத்திக்கு நீங்களே பதில் சொல்லுங்க” என்ற சிவகாமி படக்கென எழுந்து கொண்டு முத்துவையும் அவரது மனைவியையும் நோக்கி கை கூப்பி.
“மன்னிச்சுடுங்க வேற வார்த்தையே என்கிட்ட இல்லங்க “என்றவள் விடு விடுவேன வெளியில் சென்று விட்டார்.
சிவராமன் அத்தனை அழைத்தும் அவர் நிற்க வில்லை.முத்துவை சங்கடமாகப் பார்த்தவர்
“முத்து தணிகாக்கும், விசாலாட்சிக்கும் எந்த வித சச்சரவும் இருக்கிற மாதிரி தெரியல. என் பொண்ணுங்களோட தவறான புரிதல் தான் இதுக்குக் காரணம். குமாரி மருமக பொண்ணு இல்லாம ஒரே அழுக நாள் போகப் போக ரொம்ப அடம் பண்ணுறா.
நேத்து எல்லை மீறி போயி பள்ளி கூடத்துக்குப் போகாம ரொம்ப வம்பு பண்ணி வச்சுடுச்சு.இவளும் தள்ளி போடமா பேசுங்கன்னு சொல்லிகிட்டே இருந்தா.இப்போ அவ பயந்த மாதிரி ஆகி போச்சு” கட கடவென நடப்பை சொன்னவர்.
“நான் திரும்ப வந்து நிதானமா பேசுறேன். நம்பப் பக்கமும் ஆள் விட்டு விசாரிக்கச் சொல்றேன் இப்போ சூழ்நிலை சரியில்லை என்றவர் முத்துவை நெருங்கி அவரது கைகளைப் பற்றிக் கொண்டே.மன்னிச்சுக்கோ குடுத்த வாக்கை காப்பாத்த முடியல,ஆனா சரி பண்ணிடுவேன் நம்பு டா” என்றதும் தலையை மட்டும் ஆட்டி வைத்து.
“நீ தங்கச்சிய பாரு”
முத்துவுக்கு சிவராமானுடன் இயலபாகப் பேச கூட முடியவில்லை போலும். அத்தனை வருத்தம் நண்பன் மேல்.அதனை சிவராமனும் உணர்ந்து கொண்டார்.பின்பு இருவரிடமும் விடை பெற்று மனைவியை நோக்கி செல்ல முத்து மனைவியிடம் திரும்பி,
“என்ன காந்திமதி இது? இவங்க ஒன்னு சொல்லுறாங்க, ஆனா மரகதம் வேற மாதிரில சொல்லுச்சு”
“அதான் உங்க நண்பர் சொன்னாரே தவறான புரிதல்ன்னு இன்னது தான் காரணம்ன்னு சுட்டி காட்ட முடியலைன்னா விசா மேல தப்பே இல்லனு தானே அர்த்தம்”காந்திமதி யோசனையாகச் சொல்ல.
“சின்னதுல இருந்து பாக்குறோம் அவளை. அவ குணம் கொண்டு சொல்றேன் அந்தச் சின்னப் பிள்ளையை அவ ஒதுக்க வாய்ப்பே இல்லை. இரண்டாதாராம்னு நான் சொன்னப்ப கூட நீங்க என்ன சொன்னாலும் சரின்னு சொன்ன பிள்ளை அவ. அவ போயி அந்தப் பிள்ளையைப் படுத்தி வைப்பாளா?” அவரும் ஆழ்ந்து யோசனையோடு சொல்லி வைத்தார்.
“நான் அப்பவே உங்க கிட்ட சொன்னேனா இந்த வரன் வேணாம் அமுதனுக்கும் விருப்பம் இல்லன்னு நீங்க கேட்கவே இல்லை. அவனுக்கே அதுவே கோபம் தான். நான் தான் கல்யாணத்துல பேசி, பேசி ஒவ்வொரு சடங்குக்கும் நிக்க வச்சேன் “சலிப்பாகச் சொன்னவரை பார்த்த முத்து.
“சிவராமன் வீட்டுல நடந்த சண்டையில அவன் வெறுத்து போயி இருந்தான். என் கையைப் பிடிச்சு அவன் பொண்ணு குடுன்னு கேட்கும் போது என்ன செய்யச் சொல்லுற. நமக்கு பொண்ணு இருந்தாலும் இதைத் தான் செஞ்சிருப்பேன்.
பணத்தை விடு நான் தணிகாசலம் குணத்துக்கு மட்டும் தான் இந்தக் கல்யாணத்தைப் பேசி முடிச்சேன்.நல்ல எண்ணத்துல தான் செஞ்சேன்.அது இப்படி ஆகி போச்சு காந்திமதி எண்ணம் போல் வாழ்க்கைன்னு சொல்லுவாங்க.
அது உண்மைனா என் எண்ணம் பழிக்கும் அதுங்க சேர்ந்து நல்ல இருக்குங்க” என்றவர் சாய்வு நாற்காலியில் படுத்து கொண்டு கண்களை இறுக்க மூடி கொள்ளக் கவலையுடன் கணவனைப் பார்த்துக் கொண்டிருந்தார் காந்திமதி.
“ஏங்க அமுதன் எங்க இருக்கானு எதுவும் தகவல் வந்துச்சா?”
“விசாரிச்சுட்டு இருக்கேன் காந்தி இரண்டு நாள் குள்ள தகவல் தாரேன் சொல்லியிருக்காங்க”
“ஹ்ம்ம்!.. என்னவோ எல்லாம் நல்ல படியா நடக்கனும்” என்ற காந்திமதி முகத்திலும் அத்தனை கவலை.
அங்கே கோவையில்…
பெரும் யோசனையில் இருந்தாள் விசாலாட்சி.அவளை பற்றியே சுய அலசல் போலும் அரிவை பெண்ணுக்கு.அவ்வப்போது கணவன் குணத்தையும் கணிக்கப் பார்த்து தோற்று நின்றாள்.இந்த ஒரு மாதத்தில் அவளது நிலை இப்படித் தான் சென்று கொண்டிருந்தது.
இதில் மரகதம் வேறு வித விதமாகக் கேள்விகளைக் கேட்டு விசலாட்சியைக் குடைந்து கொண்டு இருந்தார்.இன்றும் அது போல் தான் யோசனையில் இருந்த மகளிடம் வந்து அமர்ந்து கொண்டவர்,”அம்மாடி!” என்றழைக்க.
“ஹ்ம்ம்!”
“உங்க அண்ணனுக்கு தெரியாம நாளைக்கு நான் மாமாவ போயி பார்த்துட்டு வரேன் என்ன? அமுது கேட்டாக்கா நான் கோவிலுக்குப் போயிருந்தேனு சொல்லு” அதுவரை யோசனையில் இருந்தவள் தாயின் பேச்சில் தெளிந்து.
“எதுக்கு இப்போ அங்க போறீங்க? அதுவும் அண்ணனுக்குத் தெரியாம போக என்ன அவசியம்?”
“என்னடி கேள்வி இது? அவங்க கிட்ட சொல்லாம வந்தது தப்புன்னு தெரியாதா உனக்கு?”
“அது தப்பு தான் அதுக்குத் தான் நீங்க போறீங்கனா அதை அண்ணன் பார்த்துப்பான் நீங்க எங்கையும் அலைய வேண்டாம்”
“விசா! உன் வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டாமாடி”
“கண்டிப்பா வேணும் அதையும் அண்ணன் பார்த்துக்கும்”
“ப்ச்! அவனுக்கு அந்த எண்ணம் இருக்குற மாதிரி தெரியல. உனக்குப் படிப்பு வேலைன்னு பார்த்துட்டு இருக்கான் விசாலாட்சி.அவனை நம்பிருந்தா ஒன்னும் வேலைக்கு ஆகாது. அம்மா சொல்லுறதை கேளு கண்ணு ஒரு எட்டு போயிட்டு அவன் வரதுக்குள்ள ஓடி வந்துடுறேன்”
எத்தனை தூரம் சொன்னாலும் சூழ்நிலையைப் புரிந்து கொள்ளாமல் பேசும் தாய் மேல் கோபம் வர.
“ம்மா! நான் இருக்குறது தா உங்களுக்குக் கஷ்டம்னா நான் பெண்கள் விடுதி போயி தங்கிக்கிறேன் என்றவள் மரகதம் பதில் சொல்லும் முன் வெடுக்கென எழுந்து போக
“ஏய்! நான் எதைப் பத்தி பேசுறேன் நீ என்னடி சொல்லற”
“ஏன் பேச்சை நீ கேட்கலானா நான் அப்படி தான் பேசுவேன். என்னை கொண்டு தானே யோசிச்சு கஷ்ட படுற அதான் நான் போறேன்னு சொல்றேன். நான் கிளப்பிட்டா எல்லாமே சரியா போகும்” என்றவள் வேகமாக தனது அறைக்குள் புகுந்து கொள்ள.
மகளை எண்ணி இதயத்தில் பிரளயமே வெடித்தது அந்தத் தாய்க்கு.மகளது வாழ்க்கையை எண்ணி பெரும் பயம் சூழ, “காந்தி இருந்தாளாவது அதுகிட்ட புலம்பி தீர்ப்பேன்.
இப்போ யாருமே இல்லாத இடத்துல வந்து விட்டுட்டு போயிட்டான்.அண்ணனுக்கு நான் இங்க இருக்கு றதை எப்படி சொல்றதுன்னு ஒன்னும் புரியலையே.
அப்பா முருகா இதுக்கு ஒரு வழிய சொல்லிடு” என்று கடவுளிடம் பாரத்தை இறக்கியவர் அமர்ந்த வாக்கிலே சாய்ந்து படுத்து விட்டார்.உடலும் மனதும் சோர்வு கொண்டு அவரைச் சாய்த்து வைத்தது போலும்.
error: Content is protected !!