Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன்♥️22

பொய் சொன்ன உன்னை கொன்னுடுவேன்…. அவள் கழுத்தை நெறிக்க வந்தவன் தன்னை சிரமப்பட்டு நிதானப் படுத்தினான்.

நான் ஏன் சார் பொய் சொல்லப் போறேன்?

இல்ல…. உன் கண்ணில் நிஜமில்லை… நான் நம்ப மாட்டேன்.

அப்புறம் உங்க இஷ்டம்…! தோளை அசட்டையாய் குலுக்கி விட்டு போகும் அவளை இயலாமையுடன் பார்த்தான்.



Advertisement

பவி நில்லு! உண்மை சொல்லு…! இறைஞ்சும் அவன் பார்வை அவளை சிறு துகள் அளவும் பாதிக்கவில்லை.

வேறெப்படி சொன்னா நம்புவீங்க?  சாதாரணமாய் கேட்டுவிட்டு சென்றாள்.

ஹரி ஏன் கிளம்பிட்ட? லன்ச் முடிச்சுட்டு போகலாமில்ல.. சௌமி அழைத்தும் நில்லாமல் சென்றவன் முக்கியமான வேலை இருக்கு சௌமி என்று வேகமாய் சென்று விட்டான்.

Advertisement

தன் வீட்டிற்கு வந்தவன் உள்ளம் கொதிக்க டீபாய் மீதிருந்த கண்ணாடி ஜாடியை தூக்கி வீசினான். ஆத்திரம் அடங்குவதாய் இல்லை.

Advertisement

குலாபி வந்துடு…. சீக்கிரம் என்கிட்ட வந்துடு… டீபாயை எட்டி உதைத்தான்.

குறுக்கும் நெடுக்கும் நடந்து சோர்ந்து படுத்தவன் அவள் வார்த்தைகளின் ரீங்காரத்தில் இருந்து விடுப்பட முடியாமல் தவித்தான்.

“—————-“

Advertisement

எப்படி அவளை அணுகுவது என்றே அவனுக்கு புரியவில்லை.

அவளை பார்க்கவும் முடியவில்லை… பார்க்காமலும் இருக்க முடியவில்லை.

இவள் பேச்சு நிஜம்தானா என்று அகிலனிடம் கேட்டு பார்க்கலாமா…? ச்சே சே என்னை பற்றி என்ன நினைப்பான்…? தலையை குலுக்கிக் கொண்டான்.

ஹரி உள்ளே நுழைந்தாலே… அவனை வெறுப்பேற்றும் பொருட்டு காபி சாப்பிடறீங்களா சார் என்று அன்பொழுக கேட்கிறாள் பவித்ரா.

அவளின் உபசரிப்பு அவனுக்கு எரிச்சலை உண்டு பண்ணியது.

அக்கா அத்தான் கால் பண்றாங்க பேசிட்டு வரேன்…

சொல்லுங்கத்தான்… இல்ல இல்ல.. பிஸி எல்லாம் இல்ல… நீங்க பேசுங்க! மொபைலை காதில் வைத்துக்கொண்டுதான் எந்த வேலையாக இருந்தாலும் செய்கிறாள்.

முகம் முழுதும் மத்தாப்பு புன்னகை தான்.

நான் சாப்பிட்டேன் அத்தான் …! உங்களுக்கு புடிச்ச உருண்டை குழம்பு தான் செய்தேன்.   இன்னைக்கு எல்லாம் உங்க ஞாபகம் தான்….

எனக்கு மட்டும் ஆசையா… இப்படி உங்களை விட்டு கண்காணாம வந்து லோல் பட்டுகிட்டு இருக்க… உங்களை இப்போவே பார்க்கணும் போல இருக்கு அத்தான்…

ச்சீ போங்கத்தான்… சிரித்துக்கொண்டே துணி மடிப்பவளை எதுவும் செய்து விட வேண்டும் என்று தோன்றிய வெறியை அடக்கிக் கொண்டான் ஹரி.

“—————-“

பவி  கமிங் சன்டே அனிருத் கான்சர்ட்  இருக்கு. டிக்கெட் கிடைச்சிருக்கு…நீ போயிட்டு வரியா?

ஹை அனிருத்தா… ராஜேஷ் அத்தானுக்கு ரொம்ப பிடிச்ச மியூசிக் டைரக்டர்… எனக்கும் பிடிக்கும்.

பல்லை நற நறவென கடித்தான் ஹரி.

நீ போறியா?

யார் கூட…?

அகிலனும் ஹரியும் போறாங்க… நீயும் போயிட்டு வா!

இல்ல வேணாம்…!

ஏன்…? அகிலன் அக்கறையுடன் கேட்டான்.

எனக்கு நைட்டில் கண் விழிச்சா தலைவலி வரும்…. நீங்க போயிட்டு வாங்க சார் என்றாள்.

அவள் வருவாள் என்று தான் அவளுக்கும் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்திருந்தான் ஹரி.

இவளை…. கை முஷ்டியை மடக்கி தொடையில் குத்திக் கொண்டு வெளியேறினான்.

“—————–“

நேத்து இங்கே அனியோட கான்சர்ட் நடந்துச்சு அத்தான்.

இல்ல… நான் போகலை… நீங்க இல்லாத கச்சேரிக்கு நான் மட்டும் போய் பார்க்கணுமா…?

விடுங்கத்தான்… நம்ம ஊரில் நடக்கும் போது சேர்ந்தே போய் பார்ப்போம்.

அகிலனுடன் அமர்ந்து செஸ் விளையாடிக் கொண்டே அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு ரத்த அழுத்தம் கூடியது.

டாமிட்…. வேகமாய் காயை தட்டிவிட… செஸ் போர்டு கவிழ்ந்து தலைகுப்புற விழுந்தது.

அகிலன் முறைப்புடன் பார்க்க…

என்னை ஏன்டா முறைக்கிற..? கை தவறி விழுந்துடுச்சு!

நம்பிட்டேன்… முறைத்துக் கொண்டே உள்ளே சென்றவன்.

இதுங்க ரெண்டு பேருக்கும் இடையில் என்னவோ ஓடிட்டு இருக்கு… போனையே கையால் தொடாத பிள்ளை இவன் வந்தா மட்டும் போன் பேசுது…. தனக்கு தானே பேசிக் கொண்டே குழந்தைகளை கொஞ்ச சென்று விட்டான்.

கொஞ்சம் கேரட் ஜுஸ் கிடைக்குமா? பவித்ராவிடம் கேட்டான்.

ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்… அத்தான் லைனில் இருக்காரு… பேசிட்டு உங்களுக்கு ஜுஸ் போட்டு தரேன்.

அத்தான்… அத்தான்… எவன்டி அவன் அத்தான்…? டேபிள் மீதிருந்த பீங்கான் தட்டை எடுத்து சுவரில் அடித்தான்.

சார்… நடுக்கத்துடன் பார்த்தாள்.

சத்தம் கேட்டு அகிலன் ஓடிவந்தான்.

சில்லு சில்லாய் உடைந்து கிடந்த தட்டை பார்த்தான்.

இதுவும் கை தவறி தான் உடைஞ்சுது அது தானே…

அதே தான்… தலையை கோதிக் கொண்டு நின்றான் ஹரி.

ம்மா பவித்ரா எல்லா பீங்கான் பாத்திரத்தையும் இவனுக்கு கைக்கு எட்டாத உயரத்தில் வை…! இல்லாட்டா அதையும் கை தவறி உடைத்துடுவான்… நண்பனை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டே மீண்டும் அறைக்குள் சென்றான் அகிலன்.

ஏய்… இனி எவன் கிட்டயும் இப்படி சிணுங்கி சிரிச்சு பேசிட்டு இருந்தேன்னு வையேன்… பல்லை உடைச்சுடுவேன்… அவள் கரம் பற்றி காதுக்குள் மிரட்டல் விடுத்தான்.

சார் கையை விடுங்க! உங்க லிமிட் தான்டி நடந்துகிறீங்க…! என் அத்தான்கிட்ட என்னை பேசக்கூடாதுன்னு சொல்ல நீங்க யாரு சார்?

நான் யாரா… அவள் கழுத்தை பற்றிவிட அவன் கரம் நீண்டு வர…

சார் OVW (Office on Violence Against Women) 911 க்கு கால் பண்ணிடுவேன்.

உங்க மிரட்டுற வேலையை என்கிட்ட வச்சுக்காதீங்க!

என் அத்தான் தானே என் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் எல்லாம்… நீங்க எப்படி அவர்கிட்ட  பேசக்கூடாதுன்னு சொல்லலாம்? நீங்க யாரு முதல்ல?

கூடிய சீக்கிரம் எங்க மேரேஜ் நடக்கும். முதல் பத்திரிகை உங்களுக்கு தான்… அவன் கரத்தை தூசு போல் தட்டிவிட்டு சென்றாள்.

அதற்கு மேலும் அங்கு நிற்க பிடிக்காதவன் தன் வீட்டுக்கு வந்து சேர்ந்தான்.

ஏன்டி இப்படி பேசின… ஏன் இப்படி பேசின…. உறுமியவன் மொபைலை எடுத்து ஸ்ரீனிக்கு அழைத்தான்.

சொல்லு ஹரி…!

ஸ்ரீனி ஒரு டீட்டெயில்ஸ் கலெக்ட் பண்ணனும்.

சொல்லு ஹரி என்ன டீட்டெயில்ஸ்… யாரு பத்தி?

சொல்றேன்… வாட்சப் பாரு! அந்த அட்ரசில் உள்ள அந்த நபர்  பற்றி A to Z எனக்கு தெரிந்தாகணும்!

சரி!

இன்னைக்கே தெரியணும்!

இன்னைக்கேவா? ஸ்ரீனி வியப்புடன் கேட்டான்.

எஸ்.. இன்னைக்கு நைட் நான் தூங்கணும்னா எனக்கு இந்த டீட்டெயில்ஸ் வேணும். ஹரியப் மேன்… டூ இட் இம்மிடியேட்லீ.

ஹரி இந்த கேஸ்.. எனக்கு சந்தேகமா இருக்கு மேன் …!நமட்டு சிரிப்புடன் கேட்டான் ஸ்ரீனி.

டேய் ஃபூல் சந்தேகமே வேண்டாம்… நிஜம் தான்… அப்புறம் என்ன… கோ ஃபாஸ்ட்.

இந்த ஸ்ரீனிவாசனை டிடெக்டிவ் என்று மட்டும் ஈஸியாக சொல்லி விட முடியாது. பல அரசியல் பெரும்புள்ளிகளுக்கு, முக்கிய பிரமுகர்களுக்கு உளவு சொல்பவன்… ஏழு கடல் ஏழு மலை தாண்டிய ரகசியத்தை கூட தோண்டி துருவி விடும் ஜித்தன்.

அவனிடம் ஒப்படைத்த விஷயம் என்றுமே தோற்றதில்லை. எல்லா இடத்திலும் அவனுக்கு செல்வாக்கு உண்டு.  மறைமுகமாக அரசியல்வாதிகளையே ஆட்டிவைக்கும் வல்லமை கொண்டவன்.

ஹரிக்கு தாய் வழி உறவினன் இந்த ஸ்ரீனி.

ஓகே மேன்… ஐ வில் ட்ரை!

எது ட்ரையா? மகனே இந்தியாக்கு பறந்து வந்து அடிப்பேன்.

எனக்கு உன் மெசேஜ் தான் ஸ்லீப்பிங் டேபிளட்  மாதிரி.

முடிச்சுட்டு லைனில் வர்ர… மிரட்டி விட்டு ஹரி ஓய்ந்து அமர… ஸ்ரீனி சிரித்துக்கொண்டான்.

“——————–“

பவி, ஹரியை பத்தி நீ என்ன நினைக்கிற…? குழந்தைக்கு டயப்பர் மாற்றிக் கொண்டே சௌமியா  கேட்க…

நான் ஏன் நினைக்கப் போறேன்…? அசட்டையாய் கேட்டுக் கொண்டே சப்பாத்தி மாவு பிசைந்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

இல்ல… நீ பார்த்த வகையில ஹரி எப்படி? மீண்டும் துருவினாள்.

ஸாரிக்கா…நான் அவரை சரியா கவனிச்சதே இல்லையே… வேணும்னா பார்த்துட்டு சொல்லவா?

தெளிவா இருக்க… சிரித்துக்கொண்டே குழந்தையை தோளில் தட்டிக் கொண்டிருந்தாள் சௌமி.

சரி அதை விடு!

மேரேஜ் எப்போ பண்ணிக்கப் போற? எப்படியாவது அவள் வாயை பிடுங்கினால் வார்த்தை வரும் என்ற ஒரு நப்பாசை சௌமிக்கு.

நீங்க எத்தனை வயதில் மேரேஜ் பண்ணிட்டீங்க? எதிர் கேள்வி கேட்டவளை ஒருவித அசூயையுடன் பார்த்தாள் சௌமி.

நான் டுவெண்ட்டி செவனில் மேரேஜ் பண்ணிக்கிட்டேன்.

எனக்கு டுவெண்ட்டி ஃபோர் தான் ஆகுது!

என்னமா ரிப்ளை கொடுக்குறா… சௌமியால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

எப்படியும் இவளிடம் வார்த்தைகளை வாங்க முடியவில்லையே…? சப்பென்று ஆகிப்போனது சௌமிக்கு.

அக்கா யூடியூப்பில் ஒரு தால் மக்னி ரெசிபி பார்த்தேன். அது டிரை பண்ணவா?

ம்க்கும்… ரொம்ப முக்கியம்… ஹரி நீ அய்யோ பாவம் தான். உள்ளுக்குள் நண்பனுக்காய் வருந்தினாள்.

“—————“

டி வி பார்த்தான், பாடல் கேட்டான், தன் அறையை ஒழுங்கு படுத்தினான்… குப்புற படுத்தான், மல்லார்ந்து படுத்தான், ஹாலில் சிறு நடை பயின்றான்….எப்படியும் நேரம் போகவில்லை.

கடிக்க இன்னும் விரலில் நகம் இல்லை.

வெறுப்பாய் இருந்தது. பூமி சுற்றாமல் நின்று விட்டதோ என்ற ஐயப்பாடு அவனுக்கு.

இந்த இடியட் ஸ்ரீனி என்ன முட்டை போடுறானா? பேரு பெத்த பேரு… உள்ளுக்குள் வசைபாடினான்.

அவன் தவியாய் தவித்துக் கொண்டிருந்த வேளை மொபைல் அழைப்பு… துள்ளி ஓடி அழைப்பை ஏற்று பார்த்தால் அவன் அன்னை.

அய்யோ என்றானது! ஆர்வம் இல்லாத குரலில் தாயிடம் பேசினான்.

அந்த பொண்ணுட்ட பேசினியா ஹரி…? அவ்வளவு ஆர்வம் தாரணியின் குரலில்.

இன்னும் இல்லம்மா…!

ஏம்ப்பா தள்ளி போட்டுட்டே போற..? எதிர்பார்ப்பில் இருந்த குரல் கவலைக்கு தாவி விட்டிருந்தது.

சீக்கிரம் பேசிடுவேன்மா…!

எம்புள்ள தயங்குறானா…? என்னால நம்பவே முடியல ஹரி. உனக்கு சங்கோஜமா இருந்தா எனக்கு நம்பர் அனுப்பு நான் பேசி பார்க்கிறேன்.

அய்யோ அம்மா… அதெல்லாம் ஒன்னும் பிரச்னை இல்லை. இன்னைக்கு நாளைக்குள்ள நானே பேசிடுவேன். நீங்க பீல் பண்ணாதீங்க சரியா?

பேசிட்டு அம்மாக்கு சொல்லு!

கண்டிப்பாம்மா….! தாயிடம் பேசி சரிகட்டி அழைப்பை துண்டிக்கும் போது மனதை ஒரு பெரும்பாரம் அழுத்தியது.

அம்மாவிடம் சொல்லாமல் இருந்திருக்கலாம்… பாவம் அவர் எதிர்பார்ப்பை  தூண்டிவிட்டோம்… தன்னையே நொந்து கொண்டான்.

ரத்தம் தெறிக்கும் அளவில் விழிபடலம் சிவப்பேறி கிடந்தது.

பவி… நா குலாபி…. எச்சில் சுரக்கா வறண்ட நாவிற்குள் முணு முணுத்துக் கொண்டான்.

மீண்டும் மொபைல் அழைப்பு… இம்முறை அழைப்பில் சௌமி.

சொல்லு சௌமி!

ஹரி வந்து சாப்பிட்டு போ!

எனக்கு பசிக்ககல சௌமி.

பவி பச்சைபயறுள ஒரு தால் பண்ணி இருக்கா… செம்ம டேஸ்ட்…! பிகு பண்ணாம வா… இல்லைனா மிஸ் பண்ணிடுவ!

இல்ல சௌமி கண்டிப்பா மிஸ் பண்ண மாட்டேன்!

நீ என்ன சொல்ற?

இதோ வரேன்னு சொன்னேன்!

“——————-“

சௌமி சப்பாத்தி திரட்டி கொடுக்க… நெய் விட்டு பதமாய் சப்பாத்தி சுட்டு கொண்டிருந்தாள் பவித்ரா.

அகிலனும் ஹரியும் சாப்பிட அமர..தட்டு வைத்து பரிமாறினாள் சௌமி.

மென்மையான சாப்பாத்தியை தாலில் தோய்த்து வாயில் வைத்த ஹரிக்கு மொபைல் அழைப்பு.

இம்முறை அழைப்பில் ஸ்ரீனி.

ஹலோ என்றான் எகிறி குதிக்கும் இதயத்துடன்.

ஹரி சாப்பிடுறா அப்புறம் பேசிக்கலாம்… அகிலன் நண்பனை முறைத்தான்.

இல்லரா முக்கியமான கால்… நான் அப்புறம் சாப்பிட்டுக்கறேன் நீ சாப்பிடு! கைகழுவிக் கொண்டு வெளியேறினான் ஹரி.

ஸ்ரீனி பேச பேச… ஹரிக்குள் ஆத்திரம் மூண்டது.

———தொடரும் ———

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!