Skip to content
Post Views: 186
விஜய சிவமாறனும் ஷைலஜாவும் மருத்துவர் ஆஷிகா பேகம் முன்பு அமர்ந்திருந்தனர். மருத்துவர் கிரிஸ்டினாவிடம் பரிசோதித்திருந்த ஷைலஜாவின் பரிசோதனைகளை பார்த்துவிட்டு, மீண்டும் ஒருமுறை பரிசோதனைகளையும் இரத்த-மாதிரிகளையும் பரிசோதித்து பார்க்குமாறு மருத்துவர் பரிந்துரைக்க, அவை அனைத்தையும் செய்து முடித்து அதன் முடிவுகளை பெறுவதற்குள் மதிய நேரத்தை கடந்துவிட்டது.
பரிசோதனை முடிவுகள் அனைத்தையும் ஒருமுறைக்கு இருமுறையென பார்த்துவிட்டு தன்னெதிரில் அமர்ந்திருந்த விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவை ஒருநொடி நோக்கியவர் தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விடுத்துவிட்டு
Advertisement
“சாரி சிவா…. ஷைலஜாவுக்கு பிரிமெச்சூர் ஓவரியன் இன்சஃபிஷியன்சி இருக்கு….” என்று ஆஷிகா கூறியதை கேட்டு இத்தனை நேரமிருந்த துளியளவு நம்பிக்கையும் விஜய சிவமாறனிடம் கரைய தொடங்கிவிட்டது.
“இதை குணப்படுத்த முடியாதா ஆஷிகா?” என்று விஜய சிவமாறன் வினவ
Advertisement
Advertisement
“இதை முழுமையா குணப்படுத்தும் அளவுக்கு இப்போ வரைக்கும் எந்த ட்ரீட்மெண்டும் இல்ல சிவா, ஆனா இந்த மாதிரி கண்டிஷன்ஸ் இருந்தாலுமே இயற்கையாவும் ஐ.வி.எஃப் மூலமாவும் பிரெக்னென்டாகி இருக்காங்க ஆனா ஷைலஜாவோட சிச்சுவேஷன் அது இல்ல…. அவங்க யூட்ரஸ் ரொம்ப வீக்கா இருக்கு, எக் ட்ரான்ஸ்பிளான்ட் பண்ணாலும் அது அவங்க உயிருக்கு தான் ஆபத்தா முடியும்…. அவங்களுக்கு ஒரு குழந்தையை சுமக்குற அளவுக்கு சக்தி இல்ல….” என்று ஆஷிகா கூறியதை கேட்டவள்
“குழந்தை பெத்துக்குறதுக்கு வேற வழி இருக்கா டாக்டர்? என்று வினவியவளிடம் ஆஷிகா ஏதோ கூற வருவதற்குள்
Advertisement
“சர்ரோகேசி மூலமா குழந்தை பெத்துக்க முடியும்ல?” என்று ஷைலஜா கூறியதை கேட்டு விஜய சிவமாறனும் ஆஷிகாவும் அதிர்ச்சியாக பார்த்து கொண்டிருந்தனர்.
“ஷைலஜா, என்ன பேசுற நீ? நாம எந்த முயற்சியும் பண்ணாம நேரா சர்ரோகேசி மூலமா குழந்தை பெத்துக்கலாமான்னு கேக்குற?” என்று விஜய சிவமாறன் அடக்கப்பட்ட கோபத்துடன் வினவ, அவனை தீர்க்கமாக பார்த்தவள்
“நான் சரியா தான் கேக்குறேன் ஷிவ்…. நீங்க சொல்லுங்க டாக்டர், என்னால இயற்கையாவோ இல்ல ஐ.வி.எஃப் மூலமாவோ குழந்தை பெத்துக்க முடியுமா?” என்று வினவிய ஷைலஜாவிடம் இல்லை என்று கூறி தலையசைத்தவரிடம்
“எத்தனை டெஸ்ட்ஸ், எவ்வளவு செலவு பண்ணாலும் கடைசியா இந்த முடிவு தான் எடுக்கப்போறோம் அதை ஏன் இப்போவே எடுக்கக்கூடாது?” என்று ஆஷிகாவிடமும் விஜய சிவமாறனிடமும் ஷைலஜா வினவ, அவள் கூறியதை கேட்டு கோபமடைந்தவன்
“போதும் ஷைலஜா, இதுக்கு மேல இதை பத்தி பேசவேண்டாம்…. நாங்க கிளம்புறோம் ஆஷிகா….” என்று விஜய சிவமாறன் கூறிவிட்டு வேகநடையுடன் முன்னே செல்ல, அவன் பின்னே ஷைலஜாவும் சென்றிருந்தாள்.
இல்லத்திற்கு வரும் வரையில் இருவரும் ஒருவார்த்தை கூட பேசவில்லை. விஜய சிவமாறன் மற்றும் ஷைலஜாவின் வருகையை கண்டு இல்லத்தின் கூடத்தில் அமர்ந்திருந்த விஜய திருநாவுக்கரசரும் பருவதமும் மருத்துவ பரிசோதனைகளை பற்றி விசாரிக்க, அவர்களிடம் பிரச்சனை எதுவுமில்லை என்று பொய்யுரைத்தவன் தன் அறைக்குள் சென்றுவிட, அவன் பின்னே சென்றவள் அறையின் கதவை தாழிட்டுவிட்டு அவன் முன்பு நின்றிருந்தாள்.
தன்னெதிரில் நின்றிருக்கும் ஷைலஜாவை தீப்பார்வையென பார்த்தவனிடம்
“அதான் எல்லாம் தெரிஞ்சிடுச்சே, நீ கோபப்படுறதுல எந்த அர்த்தமும் இல்ல…. சர்ரோகேசிக்கு ட்ரை பண்ணலாம் ஷிவ்…. ஒருமுறை யோசிச்சு பாரு…. எனக்காக?” என்று ஷைலஜா நாதழுதழுக்க வினவ
“எடுத்தோம் கவுத்தோம்னு எதையும் முடிவு பண்ணாத ஷைலஜா…. இதுக்கு என்னென்ன ட்ரீட்மென்ட் இருக்குன்னு முதல பார்ப்போம் அதுக்கு அப்புறம் மத்தத்தை முடிவு பண்ணலாம்….” என்று விஜய சிவமாறன் கூற, அவன் கைகளை இறுக்கமாக பற்றியவள்
“என்னால குழந்தை பெத்துக்க முடியாது ஷிவ்…. அதுக்கான தகுதி எனக்கு இல்ல…. ஆனா ஒரு குழந்தைக்கு அம்மாவா இருக்கனும்னு நான் ஆசைப்படுகிறேன்…. பிளீஸ் ஷிவ்…. எனக்காக…. முக்கியமா நமக்காக…. பிளீஸ்….” என்று ஷைலஜா கூறி அழ ஆரம்பிக்க, அவளது அழுகையில் கரைந்தவன் முதலில் மறுத்தாலும் சில நாட்களிலேயே வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்ள சம்மதம் தெரிவித்திருந்தான்.
விஜய சிவமாறனும் ஷைலஜாவும் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற முடிவுசெய்திருப்பதை அறிந்த இருவரின் பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்திருந்தனர்.
“நம்ம கிட்ட என்ன பணமா இல்ல? அங்கங்க எவ்வளவோ மெடிக்கல் ஃபெஸிலிட்டி வந்திருக்கு? இந்தியாவுல பண்ண முடியலையா, வெளிநாட்டுக்கு போய் ட்ரீட்மெண்ட் பண்ணுங்க அதெல்லாம் விட்டுட்டு வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு சொல்றீங்க? இது எனக்கு சுத்தமா சரிப்படல….” என்று விஜய திருநாவுக்கரசர் கூறியதை கேட்டு பருவதம், பத்மநாபன் மற்றும் ரங்கநாயகி என மூவரும் அவருக்கு ஆதரவாக பேச, அவர்களையும் தன் தந்தை கூறுவதும் சரிதான் என்று யோசித்தவனையும் பல்வேறுவிதமாக பேசி, கெஞ்சி, அழுது என பல போரட்டாங்கள் செய்து இரண்டே நாட்களில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள சம்மதம் பெற்றுவிட்டாள் ஷைலஜா.
ஆஷிகா பேகம் உதவியுடன் வாடகை தாய்க்கான தேடலும் அதற்கு அடுத்து செய்ய வேண்டிய விதிமுறைகளும் ஒவ்வொன்றாக தொடங்கியிருந்தது. முதற்கட்டமாக குழந்தை பெற்று தர வாடகை தாய் தேடும்போது விதி வசத்தால் கிடைத்தவள் தான் ஆழினி. வாடகை தாய் யாரென்று கூறுவது சட்டத்திற்கு புறம்பானது என ஆஷிகா கூறியதால் ஆழினிக்கு தேவையான பணம் மற்றும் மருத்துவ உதவிகள் அனைத்தும் விஜய சிவமாறன் பார்த்து கொண்டான்.
மனம் விரும்பிய பெண்ணை திருமணம் செய்ய போகிறோம் என்ற ஆவலில் இருந்தவன் விதி வசத்தால் வேறொரு பெண்ணை திருமணம் செய்து, பிடிக்காவிட்டாலும் அவள் தான் தன் மனைவி என்று கொஞ்சம் கொஞ்சமாக அவளை நேசிக்க தொடங்கிய நேரத்தில் விஜய சிவமாறனின் வாழ்வில் பெரும் இடியாய் வந்தது இந்த வாடகை தாய் செய்தி. விரும்பாத பெண்ணுடன் திருமணம் நடந்து அதன் சுவடு மறைவதற்குள் தன் உயிரை வேறொரு பெண் அதுவும் யாரென்று தெரியாத ஒரு பெண் சுமப்பதை நினைத்து தனது வாழ்வை எண்ணி சிரிப்பதா அழுவதா என்று நிம்மதி இல்லாமல் தவித்தவன் அறியவில்லை, அவனின் உயிரை சுமப்பவள் அவன் உயிருக்குறாய் நேசித்த ஆழினி தான் என்று.
இரண்டு மாதங்கள் கழித்து ஆழினி கருவுற்றிருக்கும் செய்தியை கேட்டு ஷைலஜாவின் மனம் சந்தோஷத்தில் துள்ளி குதித்தது. விஜய சிவமாறன் மட்டுமல்லாது அவனின் பெற்றோர்களும், ஷைலஜாவின் பெற்றோர்களும் அதை ஓர் செய்தியாய் கடந்து சென்றாலும் சிறிது நாட்களில் தங்கள் வீட்டிற்கு ஓர் குழந்தை வரமாக வரவிருக்கிறது என்று நினைத்து தங்களின் மனதை ஆறுதல் படுத்திக்கொண்டனர்.
லண்டனிலுள்ள கல்லூரியில் விஜய சிவமாறன் முதுகலை படித்து கொண்டிருந்தபோது அவனுக்கு கிடைத்த நண்பன் தான் ரிச்சர்ட். லண்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவன். இருவரும் இணைந்து லண்டனில் விஜயாஸ் உணவகம் தொடங்க திட்டம் தீட்டியிருந்தனர். இரண்டு மாதம் சுற்றுப்பயணமாக இந்தியா வந்த ரிச்சர்ட், விஜய சிவமாறனை சந்தித்து சென்னையின் புகழ்பெற்ற ஓர் மது கூடத்திற்கு அழைத்து சென்று மது அருந்தியவாறு அவனுடன் கல்லூரி கதைகளை பேசி கொண்டிருந்தான்.
கல்லூரி கதைகளை அடுத்து அவர்களின் திருமண கதைகள் ஆரம்பிக்க, விஜய சிவமாறனை பொய்யான கோபத்துடன் முறைத்தவன்
“நீ சரியான அமுக்கினி சிவா, சொல்லாம கொல்லாம மேரேஜ் பண்ணிட்டு நானா ஃபோன் பண்ணும்போது தான் எல்லாத்தையும் சொல்ற?” என்று வினவிய ரிச்சர்டை கண்டு சிரித்தவன்
“திடீர்னு மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிடுச்சு ரிச்சர்ட்…. நீயும் வேர்ல்ட் டூர் போறேன்னு கிளம்பிட்ட நான் என்ன பண்ணட்டும்?”
“ஐயோ, அதை நியாபகப்படுத்தாத சிவா…. எனக்கு கல்யாணமான முதல் நாளே என் வொய்ஃப் லாரா ‘அதை பத்தி யோசிக்கவேக்கூடாதுன்னு’ சொல்லிட்டா…. இப்போ நான் சந்தோஷமாயிருக்கேன், மறுபடியும் ஆரம்பிக்காத….”
“ஏன் ரிச்சர்ட் அப்படி சொல்ற? வர்ஸ்ட் எக்ஸ்பிரியன்ஸ் எதாவது நடந்துச்சா?”
“வெரி வர்ஸ்ட் எக்ஸ்பிரியன்ஸ் சிவா…. இந்தியாவுக்கு வந்ததும் நான் ஃபர்ஸ்ட் போன இடம் டெல்லி தான்…. அங்க மேக்ஸிமம் டென் டேய்ஸ் ஸ்டே பண்ணலாம்னு இருந்தேன் பட் என் பிளானையே ஒரு பொண்ணு மூணு மாசம் எக்ஸ்டென்ட் பண்ண வச்சிட்டா தெரியுமா? ப்பா, ஷி இஸ் டாம் பியுட்டிஃபுல் மேன்…. அவளோட ஒவ்வொரு நாளும்….”
“ரிச்சர்ட் ஸ்டாப் தி நான்சென்ஸ்….”
“ஹே ஸ்டுப்பிட், ஐ லவ் ஹெர் டியூட்…. ஒரு பொண்ணு பின்னாடி இப்படி சுத்துவேன்னு நான் சத்தியமா எதிர்பார்க்கவேயில்ல தெரியுமா? ஐ ரியலி லவ் ஹெர்…. பட், நான் அவளை லவ் பண்ண அளவுக்கு அவள் என்னை லவ் பண்ணல…. ஷி நீட்ஸ் ஒன்லி மனி ஃப்ரம் மீ….”
“என்ன சொல்ற ரிச்சர்ட்?”
“அவள் என் கிட்டயிருந்த பணத்தை தான் லவ் பண்ணா சிவா…. உனக்கு தெரியுமா? என்னால அவள் பிரெக்னென்ட் ஆகிட்டா ‘உன்னை நான் கல்யாணம் பண்ணிக்குறேன், உன்னையும் குழந்தையும் நான் பார்த்துக்குறேன்னு’ எவ்வளவோ சொன்னேன் ஆனா அவள் ‘எனக்கு வேற ஒருத்தனோட கல்யாணம் நிச்சயமாகிடுச்சு, அவன் உன்னை விட பணக்காரன், நீ எனக்கு வேண்டாம்னு’ சொல்லி என்னை பிரேக்கப் பண்ணிட்டா…. அவள் என் கிட்ட இதை சொல்லும்போது என் குழந்தை…. என் குழந்தையை அபார்ட் பண்ணிட்டு தான் வந்து சொன்னா தெரியுமா? எனக்கே தெரியாம என் குழந்தையை அபார்ட் பண்ணிட்டா சிவா….” என்று நாதழுதழுக்க கூறிய ரிச்சர்ட் கவலையில் அளவுக்கு அதிகமாக மது பருக ஆரம்பிக்க, அவன் கூறியதை கேட்டு அதிர்ச்சியில் திளைத்தவன் தன் நண்பனது தோளில் ஆதரவாக பற்றியவாறு அவனை ஆசுவாசப்படுத்த முயலும் நேரத்தில் ஷைலஜாவிடம் அழைப்பு வந்துள்ளதாக கூறி அவனது அலைபேசி அலறி கொண்டிருந்தது.
விஜய சிவமாறனின் அலைபேசியில் ஷைலஜாவின் புகைப்படத்தோடு அவளது பெயர் ஒளிர்ந்து கொண்டிருக்க, அதை கண்டு கோபமடைந்தவன்
“இவளா? இவள் இங்கேயும் வந்துட்டாளா? என்னை ஏமாத்திட்டு சிரிக்கிறியா நீ? உன்னை சும்மா விடமாட்டேன் டி….” என்று ரிச்சர்ட் போதையில் கத்த ஆரம்பிக்க, அவன் கூறியதை கேட்டவன் அதிர்ச்சியில் சிலையென உறைந்துவிட்டான்.
தன் மனதினை ஒருநிலைப்படுத்தி ரிச்சர்ட் கூறுவதை ஏற்பதற்கே விஜய சிவமாறனுக்கு பலமணிநேரங்கள் தேவைப்பட்டது. தன்னை ஒருவாறு சமாளித்து அதிலிருந்து சிரமப்பட்டு மீண்டவன்
“ரிச்சர்ட்…. இவளை…. இவளை உனக்கு தெரியுமா?” என்று திக்கி திணறியவாறு கேட்டவனது மனமானது தன் நண்பன் ‘இல்லை’ என்ற பதில் தான் கூறவேண்டும் என அந்நொடி இறைவனிடம் பலமுறை மன்றாடி கொண்டிருக்க, ஆனால் அதை பொய்யாக்கும் விதமாய்
“ஏன் தெரியாம? இவள் தான் ஷைலஜா…. என்னை ஏமாத்தினவ…. என் குழந்தையை அழிச்சவ….” என்று கூறிய ரிச்சர்ட் அவ்விடத்திலேயே போதையில் மயங்கி சரிய, அவனை தன் கரங்களில் தாங்கி கொண்டவனின் மனதை யாரோ ஈட்டியால் குத்தியது போன்ற உணர்வு ஏற்பட்டது.
தன் நண்பனை அவன் தங்கியிருந்து விடுதியில் விட்டுவிட்டு தன் இல்லத்திற்கு வந்திருந்த விஜய சிவமாறன் யாரிடமும் பேசாமல் நேராக தன் அறைக்குள் சென்று முடங்கிவிட்டான். தன் தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டம் என கூறிவிட்டு காலையிலேயே வெளியில் சென்ற ஷைலஜா இரவு பதினோரு மணி போல் இல்லம் திரும்பியிருந்தாள்.
அறையில் கோபமே உருவமாய் அமர்ந்திருக்கும் விஜய சிவமாறனின் மனநிலையை அறியாதவள்
“எப்போ ஷிவ் வீட்டுக்கு வந்தீங்க? இன்னிக்கு கிரிஸ்டினாவோட பர்த்டே பார்ட்டி, நீங்களும் வந்திருக்காலம்…. அவளோட ஹஸ்பென்ட் அவளுக்கு டைமென்ட் நெக்லஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமா?” என்று ஷைலஜா கூறி கொண்டே போக, அவள் பேசியதை வைத்து தன் மனையாள் மது அருந்திவிட்டு தான் வந்திருக்கிறாள் என்று சரியாக கணித்தவன் அதை புறந்தள்ளிவிட்டு
“நீ காலேஜ் எங்க படிச்ச ஷைலஜா?”
“சென்னையில…. என்ன திடீர்னு என் காலேஜ் பத்தி கேக்குறீங்க?”
“கல்யாணமாகுறதுக்கு முன்னாடி எங்க வர்க் பண்ண?”
“டெல்லியில ரெண்டு வருஷம் வர்க் பண்ணேன் ஷிவ்…. சுமன் இன்டெஸ்ட்ரிஸ்ல என்னை பத்தி கேட்டா எல்லாருக்கும் தெரியும்….”
“உனக்கு ரிச்சர்ட்னு யாரையாவது தெரியுமா?” என்று விஜய சிவமாறன் வினவ, அவன் கூறியதை கேட்டவளின் புன்னகை அனைத்தும் காணாமல் போனது.
ஷைலஜாவின் அமைதியில் அனைத்தையும் கண்டறிந்தவன்
“சொல்லு, உனக்கு ரிச்சர்ட்னு யாரையாவது தெரியுமா?” என்று விஜய சிவமாறன் வினவ, அவனை அழுத்தமாக பார்த்தவள்
“என்ன? உன் ஃபிரண்ட் ரிச்சர்ட் எல்லாத்தையும் சொல்லிட்டானா?” என்று ஷைலஜா அமைதியாகவும் அதே சமயம் ஏளனத்துடனும் வினவ, அவள் கூறியதை கேட்டவன் பேரதிர்ச்சி அடைந்திருந்தான்.
தன்னையே இமைக்காமல் பார்த்து கொண்டிருந்த விஜய சிவமாறனை கண்டு நக்கலாக சிரித்தவள்
“மதியம் நீயும் உன் ஃபிரண்ட் ரிச்சர்ட்டும் சேர்ந்திருக்க ஃபோட்டோவ அவன் ஃபேஸ்புக்ல அப்லோட் பண்ணும்போதே நீங்க ரெண்டுப்பேரும் ஃபிரண்ட்ஸ்னு எனக்கு தெரிஞ்சிடுச்சு…. ஆனா ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி நடந்ததெல்லாத்தையும் அவன் உன் கிட்ட சொல்லுவான்னு நான் எதிர்பார்க்கல….” என்று ஷைலஜா சாதரணமாக கூற
“அப்போ உன்னால குழந்தை….” என்று விஜய சிவமாறன் முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள்
“ஆமா, என்னால குழந்தை பெத்துக்க முடியும்…. ஆனா எனக்கு அதுல இன்ட்ரெஸ்ட் இல்ல….” என்று ஷைலஜா கூறியதை கேட்டு அதிர்ச்சியில் சிலையென நின்றிருந்தவனை மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாய் அனைத்தையும் கூற தொடங்கியிருந்தாள் ஷைலஜா.
“என்ன நினைச்சிட்டு இருக்க நீ? உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ண சம்மதிச்சேன்னு நினைக்குறியா? என்னை மாதிரி நீயும் பரம்பரை பணக்காரன், வீட்டுக்கு ஒரே பையன், லண்டன்ல படிச்சு வளர்ந்தவன் இதுனால தான் உன்னை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்…. ஆனா நீ, கல்யாணமான முதல் நாளே ‘ஹஸ்பென்ட் அன்ட் வொய்ஃப் இப்படி தான் இருக்கனும், அவங்க லைஃப் இப்படி தான் ஸ்டார்ட் ஆகனும்னு’ கிளாஸ் எடுக்க ஆரம்பிச்சிட்ட…. ஐ வாஸ் ஃப்ரஸ்ட்ரேட்டட், அதுனால தான் அடுத்த நாளே நீ பார்டியில ட்ரிங்க்ஸ் பண்ணும்போது உன் ட்ரிங்க்ல நான் மாத்திரை கலந்தேன்…. எல்லாமே நான் நினைச்ச மாதிரி தான் நடந்துச்சு ஆனா நீ தான் ஏதோ தப்பு பண்ண மாதிரி என் கிட்ட ஒதுங்கி போன….” என்று ஷைலஜா கூறியதை கேட்டு விஜய சிவமாறன் கண்களின் ஓரம் கண்ணீர் துளிகள் திரண்டு நிற்க, அதை உணராதவன் போல் தன்னெதிரிலிருப்பவளை இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தவனிடம்
“நீ என் வழியில வரணும்னா இதை பண்ணா தான் சரிவரும்னு என் ஃபிரண்ட் கிரிஸ்டி சொன்னா, அவள் சொன்ன மாத்திரையை தான் தினமும் நீ குடிச்ச பால்ல நான் கலந்தேன்…. நான் நினைச்ச மாதிரி தான் எல்லாமே நடந்துச்சு அதுவும் கொஞ்ச நாள் தான்…. அதுக்கு அப்புறம் மறுபடியும் நீ என்னை விட்டு போக ஆரம்பிச்ச…. திரும்பவும் உன்னை என் வழிக்கு கொண்டு வரதுக்குள்ள நான் பட்ட கஷ்ட்டம் இருக்கே அது எனக்கு தான் தெரியும்…. சொசைட்டிக்கு தெரியுற மாதிரி நல்ல பொண்டாட்டியா இருக்கணும்னா அதுக்கு நான் குழந்தை பெத்துக்கனும் எனக்கு அதுல சுத்தமா விருப்பம் இல்ல…. கிரிஸ்டி கிட்ட சொல்லி பொய்யான ரிப்போர்ட் ரெடி பண்ணி என்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு உன்னை நம்பவச்சேன், நீ என்னடான்னா உன் ஃபிரண்ட் ஆஷிகா கிட்ட கூட்டிட்டு போன அங்க வேறொரு ஆள் பிடிச்சு ரிப்போர்ட் மாத்த எத்தனை லட்சம் செலவு பண்ணேன்னு எனக்கு தான் தெரியும்….” என்று ஷைலஜா கூறியதை கேட்டு மனமுடைந்தவன்
“ஏன்…. ஏன் ஷைலஜா இப்படி பண்ண?உன்னால குழந்தை பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சதும் நான் எவ்வளவு கஷ்ட்டப்பட்டேன் தெரியுமா?” என்று விஜய சிவமாறன் நாதழுதழுக்க வினவ, அவனை கண்டு தன் நீண்ட பெருமூச்சை உள்ளிழுத்து வெளியில் விட்டவள்
“நீ மட்டும் நல்லவனா? மனசுல ஒருத்திய வச்சிக்கிட்டு தான என்னை கல்யாணம் பண்ண? உன் நெஞ்சுல பச்சை குத்தியிருக்கியே அதை நான் கல்யாணமான ரெண்டாவது நாளே கண்டுப்பிடிச்சிட்டேன் ஆனா அதை பத்தி உன் கிட்ட எதாவது கேட்டேனா? இல்லையே, அதேமாதிரி நீயும் என்னை பத்தி கண்டுக்கமாட்டேன்னு நினைச்சேன் ஆனா நீ, இதை பண்ணாத அதை பண்ணாதன்னு என்னை டார்ச்சர் பண்ண ஆரம்பிச்ச…. அதுனால சில நாள் தேவையேயில்லாம உனக்கு பிடிச்ச மாதிரி நடக்க வேண்டியதா போச்சு…. என்னிக்காவது ஒருநாள் உனக்கு என்னை பத்தி தெரியவரும்போது கண்டிப்பா என்னை நீ டிவோர்ஸ் பண்ண யோசிப்ப ஆனா நமக்கு குழந்தை இருந்தா அந்த குழந்தைக்காகவாது என்னோட நீ இருப்ப, அப்படியே டிவோர்ஸ் ஆனாலும் காம்பன்சேஷன், ஜீவனம்சம்னு சொல்லி எனக்கு பணம் வரும்னு தான் வாடகை தாய் மூலமா குழந்தை பெத்துக்கலாம்னு நினைச்சேன்…. ஏனா எனக்கு குழந்தை பெத்துக்குறதுல சுத்தமா விருப்பம் இல்ல ஷிவ்…. குழந்தை பெத்தா என் அழகு பொய்யிடும்னு நினைச்சேன்…. அதுனால தான் குழந்தையை அபார்ட் பண்ணிட்டேன்…. என்ன பார்க்குற? நான் சொன்னது ரிச்சர்ட்டோட குழந்தை இல்ல…. உன் குழந்தை…. இதுவரை ரெண்டு தடவை உன் குழந்தையை நான்….” என்று ஷைலஜா முழுவதுமாய் கூறி முடிப்பதற்குள் தன் ஐவிரல் பதியும் வண்ணம் தன்னெதிரில் நின்றிருந்தவளின் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான் விஜய சிவமாறன்.
தன்னெதிரில் கோபமாக நின்றிருப்பவனை கண்டு ஏளனமாக சிரித்தவள்
“இதை தான் நான் எதிர்பார்த்தேன்….” என்று கூறியவாறு தன் உதட்டோரம் கசியும் இரத்தத்தை துடைத்தவள்
“உன்னை டிவோர்ஸ் பண்ணலாம்னு நான் முடிவு பண்ணிட்டேன்…. என்ன பார்க்குற? உன்னை விட பெரிய பில்லியனர், மிஸ்டர் சுமன் ஷெட்டி கேள்விப்பட்டு இருக்கியா? அவரும் நானும் லவ் பண்றோம்…. இவ்வளவு நேரம், நான் அவரோட தான் இருந்துட்டு வரேன் தெரியுமா? அப்புறம் சொல்ல மறந்துட்டேன், நமக்கு வாடகை தாயா ஒரு பொண்ணை உன் ஃபிரண்ட் செலக்ட் பண்ணாலே அவளோட வயித்துல வளர குழந்தையை நான் அபார்ட் பண்ண சொல்லிட்டேன்…. நீயே வேண்டாம்னு முடிவெடுத்ததுக்கு அப்புறம் அந்த குழந்தையை வச்சு நான் என்ன பண்றது? அதான் காசு கொடுத்து அதை அபார்ட் பண்ண சொல்லிட்டேன்…. என்ன? கோபம் வருதா? அப்போ அடி, எவ்வளவு வேணாலும் அடி, இதை வச்சே உன் மேல கேஸ் போட்டு நான் டிவோர்ஸ் வாங்குவேன் பார்க்குறியா? இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உன்னை தேடி டிவோர்ஸ் பேப்பர் வரும், ரெடியா இரு….” என்று ஷைலஜா கூறிவிட்டு தன் உடைமைகள் அனைத்தையும் எடுத்து கொண்டு விஜய சிவமாறன் என்ற ஒருவனை உயிருடன் கொன்றுவிட்டு நள்ளிரவு என்பதையும் மறந்து அங்கிருந்து சென்றுவிட்டாள்.
ஒளி வீசும்….
error: Content is protected !!