Skip to content
Post Views: 2,682

சுபா அழுது அழுது மயக்க நிலைக்கே சென்று இருந்தாள்… அவளை இனிமே சமாதானம் செய்ய முடியாது என தூக்க மாத்திரை குடுத்து தான் தூங்க வைத்து இருந்தனர்…..
Advertisement
ஆண்கள் அனைவரும் வெளியே சென்று தேடி கொண்டு இருந்தனர்… அப்போது ஒரு தெரியாத எண்ணில் இருந்து முகுந்தனிற்கு அழைப்பு வந்தது… முதலில் எடுக்காதவன் மீண்டும் மீண்டும் வந்ததால் அழைப்பை ஏற்றான்..
Advertisement
அதை ஏற்று “ஹலோ” என்று சொன்னான்…. அந்த பக்கம் “சார் நீங்க முகுந்தன் தானே” என்று கேட்டார்…
Advertisement
“ஆமா நான் முகுந்தன் தான் நீங்க யாரு??” என்று கேட்டான் முகுந்தன்
Advertisement
“சார் நான் ***ஏரியா இன்ஸ்பெக்டர் பேசுறேன்…. அர்ஜுனனை இங்க ***ஹாஸ்பிடல் தான் அட்மிட் பண்ணி இருக்கோம்…. அவர் மயங்குறதுக்கு முன்னாடி உங்க நம்பர் தான் குடுத்துட்டு மயங்குனாரு… உங்க கிட்ட இன்பாரம் பண்ண தான் கால் பண்ணேன்…. சீக்கிரம் வர முடியுமா” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர்…
முகுந்தன் பதறி “சார் இன்னும் அரை மணிநேரத்துல அங்க வரேன் சார்…. ரொம்ப பயப்படுற மாதிரி எதுவும் இல்லையே…” கேட்டான்….
“கொஞ்சம் அடி தான் சார் ரொம்ப பயப்படுற அளவுக்கு இல்லை நீங்க வாங்க பொறுமையாவே… நான் வைக்குறேன்…”என்று கூறி அந்த இன்ஸ்பெக்டர் போனை வைத்தார்…
வீட்டில் பெண்களுக்கு விவரம் சொல்லாமல் ஆண்களுக்கு மட்டும் கூறி முகுந்தன் சசி வாணன் மூவர் மட்டும் ஹாஸ்பிடல் செல்ல மற்ற அனைவரும் வீட்டிற்கு சென்றனர்….
வீட்டிற்கு சென்ற அனைவரிடமும் அங்கிற்கும் அனைவரும் அழுது கொண்டே கேட்டனர்…. கிடைத்துவிடுவான் மற்றவர்கள் தேடி தான் சென்றுள்ளனர் என்று கூறி சமாதானம் செய்து இருந்தனர்…
மூவரும் அந்த இன்ஸ்பெக்டர் சொன்ன ஹாஸ்பிடலுக்கு சென்று சேர்ந்தனர்… அங்கு அந்த இன்ஸ்பெக்டர் இருந்த இடத்துக்கு வேகமாக சென்றனர்… “சார் என்ன ஆச்சு… எப்படி அடி பட்டுச்சு” என்று முகுந்தன் கேட்டான்….
“சார் காம் டவுன்… உயிருக்கு எந்த பிரச்சனையும் இல்ல… தலைல கொஞ்சம் அடி… அப்புறம் கால்ல கொஞ்சம் அடி… வேற எந்த பிரச்சனையும் இல்ல… இப்போ மயக்கத்துல இருக்காங்க… என்ன நடந்ததுனு அவரே சொல்வார்… எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு சார்… கொஞ்ச நேரம் கழிச்சு வரேன்” என்று கூறி அவர் சென்றுவிட்டார்….
மூவரும் சிறிது நேரம் காத்து இருந்தனர்…. ஒரு செவிலி வெளியே வந்து இவர்களிடம் “பேசன்ட் அர்ஜுனனோட விசிட்டர்ஸ் யாரு… அவர் கண்ணு முழிச்சிட்டாரு… போய் பாருங்க…” என்று அனுப்பினார்….
மூவரும் வேகமாக உள்ளே சென்று பார்த்த போது சோர்வுடன் கண்ணை மூடி படுத்து இருந்தான்…. இவர்கள் வந்த அரவத்தில் கண்ணை திறந்த மூவரையும் பார்த்து சிரித்தான்…
வாணன் தான் அர்ஜுனனிடம் “அர்ஜுனா என்ன ஆச்சு… எங்க போன… எப்படி அடிபட்டுச்சு….” என்று அவனின் தலையை தடவி விட்டவாரு கேட்டான்…
“அத்தான் துர்கை அம்மன் பூசாரி கூப்பிட்டு இருந்தாரு காலைல…. அம்மன் நகை வெச்சு இருந்த பெட்டி எல்லாம் திறந்து கீழ விழுந்து இருந்துச்சாம்…. நகை எல்லாம் காணாம போய் இருந்தது போல… வெளியே எல்லார் கிட்டயும் சொன்னா பிரச்சனை ஆகிடும்னு என்கிட்ட சொன்னாரு… நான் யார் கிட்டயும் சொல்லாம நம்ம ஊர் இன்ஸ்பெக்டர் கிட்ட மட்டும் விஷயத்தை சொல்லி நானும் அவரும் மட்டும் தேட போனோம்… சிசிடிவி செக் பண்ணி போனோம்…. அதுல ஒரு குரூப் ரெண்டா பிரிஞ்சி போய் இருந்தது… நான் ஒரு பக்கம் அவர் ஒரு பக்கம் போனோம்…. அவர் போன பக்கம் ஆளுங்க மட்டும் இருந்து இருக்காங்க… அவரு அந்த ஊர் இன்ஸ்பெக்டர் கிட்ட பேசி அவங்களை பிடிச்சி நான் இருக்க இந்த ஊருக்கு வந்து இருக்காரு…
அவரு போற அப்பயே சொல்லிட்டு தான் போனாரு…. இந்த ஊர் இன்ஸ்பெக்டர் கிட்ட பேச சொல்லி அவர் கூட போக சொல்லி… நான் போய் சொல்லிட்டு அவங்களை கூட்டிட்டு வரதுக்குள்ள தப்பிச்சி போயிடுவாங்கனு நான் மட்டும் போயிட்டேன்…
ஆனா அவங்க ஆயுதம் வெச்சு இருந்து இருக்காங்க…. என்னை பார்த்து அவங்க அடிக்க ஸ்டார்ட் பண்ணாங்க…. நானும் அவங்களை தாக்க ஆரம்பிச்சேன்…. அதுக்குள்ள இன்ஸ்பெக்டர் அந்த ஊர் இன்ஸ்பெக்டர் கூட்டிட்டு நான் இருக்க இடத்துக்கு வந்து இருந்தாரு ஆனா அவங்க என் தலைல அடிச்சிட்டு கால்ல உடைச்சிட்டு போக போனாங்க…. அப்போ ரெண்டு இன்ஸ்பெக்டரும் அவங்களை அடிக்க ஸ்டார்ட் பண்ணாங்க.. அப்போ ஒருத்தன் நம்ம ஊர் இன்ஸ்பெக்டரை துப்பாக்கி வெச்சு கைல ஷூட் பண்ணிட்டாங்க…. அவர் மயக்கதுக்கு போயிட்டாரு… ஆனா குண்டு உள்ள போகல…. ஏற்கனவே அவர் கைல அடிபட்டு இருந்து இருக்கு… மறுபடியும் அங்கேயே பட்டு காயம் பெருசு ஆகி மயக்கம் போட்டுட்டாரு….எனக்கும் மயக்கம் வர மாதிரி இருந்தது… அது தான் அப்போ முகுந்தம் நம்பர் தான் ஞாபகம் வந்தது… அதை சொல்லிட்டு நானும் மயங்கிட்டேன்” என்று கூறி முடித்தான்….
அதை கேட்டு அதிர்ந்து “டேய் யார் கிட்டயோ சொல்லிட்டு போக வேண்டியது தானு…. அங்க பாப்பா வேற நீ காணோம்னு சாப்பிடாம மயங்கியே போயிட்டா…. சொல்லி இருக்கலாம்ல…. அங்க அவ ரொம்ப பயந்து போய் இருக்கா டா… உனக்கு எதோ ஆகி இருந்தா அவ என்ன ஆவானு யோசிச்சியா நீ…. சாமி வேற குறி சொன்னதுல இருந்து ரொம்ப பயந்து இருக்கா நீ வேற ஏன்டா…. அதை விடு இனிமே இப்படி எல்லாம் பண்ணாத டா….” என்று கூறிவிட்டு “இன்ஸ்பெக்டர் எங்க டா…” என்று கேட்டான் வாணன்…
“தெரியல த்தான்… நீங்க கேட்டு பாருங்க நர்ஸ் கிட்ட” என்று கூறினான்… மீண்டும் வாணனிடம் “த்தான் சாமி என்ன குறி சொல்லிச்சு… தப்பா எதோ குறி சொன்னதா…” என்று பதறி கேட்டான்….
“அப்புறம் சொல்றேன் அர்ஜுனா” என்று கூறி இன்ஸ்பெக்டரை பார்க்க வெளியே சென்றுவிட்டான்…முகுந்தனும் அவன் பின்னே சென்று இருந்தான்….
“சசி அன்னிக்கு என்ன ஆச்சுனு உண்மையை மட்டும் சொல்லு” என்று சத்தமாக கேட்டான் அர்ஜுனன்…
அவனும் ஆரம்பத்தில் இருந்து அனைத்தையும் சொல்லி இருந்தான்… பாட்டியிடம் கூறியது… சசி கர்ணன் குடும்பத்துடன் வரும் போது கூறியது பின் இருவரிடமும் ஆணி வேர் இல்லாமல் போக போகிறது என்று கூறியது என தொடங்கி அனைவருக்கும் கூறியது கடைசியாக சுபாவிற்கு கூறியது அதை கேட்டு சுபாவிற்கு அடிபட்டு மயங்கியது…. பாட்டி இறந்தது என்று அனைத்தும் கூறி இருந்தான்…..
அர்ஜுனனிற்கு என்ன கூறுவதில் என்றே தெரியவில்லை…. அதற்குள் வாணன் முகுந்தன் இருவரும் வந்து இருந்தனர்… அந்த இன்ஸ்பெக்டரின் குடும்பத்தினர் வந்து இருந்ததால் இவர்கள் வந்து விட்டனர்…
அர்ஜுனனை வீட்டிற்கு அழைத்து செல்லலாம் என கூறியவுடன் இவனை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றனர்….
வீட்டில் சுபா மீண்டும் எழுந்து இருக்க வர்ணன் தான் அவளை சமாதானம் செய்து இருந்தான்… டேய் பாப்பா அவனுக்கு ஒன்னும் இல்ல… வீட்டுக்கு தான் வந்துட்டு இருக்கான்… நீ அழுகாம சாப்பிடு… பாரு நீ அழுகுறதை பார்த்துட்டு பாப்பாவும் அழுகுறா என்று கூறி மெல்ல மெல்ல சாப்பிட குடுத்தான்….
இவள் சாப்பிட்டு கொண்டு இருக்கும் போதே அர்ஜுனனை அழைத்து கொண்டு வந்து இருக்க சுபா அவனை பார்த்து அழுது அழுதே மீண்டும் மயங்கி இருந்தாள்….
மீண்டும் மயக்கத்தில் இருந்து எழுந்தவள் அர்ஜுனனை விட்டு ஒரு நொடி கூட நகரவில்லை… மிகவும் பயத்தில் இருந்தாள்… எங்கே அவனை விட்டு நகர்ந்தால் மாயமாக மறைந்து விடுவானோ என்று பயந்து அவன் அருகிலேயே இருந்தாள்…
குழந்தைகளை கூட அவள் கவனிக்கவில்லை… தேவியின் அம்மாவும் அப்பாவும் தான் இங்கேயே தங்கி குழந்தைகளையும் மித்ரா சுப்ரியா இருவரையும் பார்த்து கொண்டார்… இருவருக்கும் குழந்தை பிறந்து மூன்று மாதம் ஆனதால் வேலை அதிகம் செய்ய முடியவில்லை…
வாணன் வர்ணன் அவர்கள் குடும்பத்தை அழைத்து கொண்டு அவர்கள் வீட்டிற்கு சென்று இருக்க முகுந்தன் காலை மாலை இரண்டு வேளையும் பார்த்து விட்டு சென்றான்… கண்மணி, அவளின் அம்மா செண்பகம், மருதாயி பாட்டி மூவரும் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பார்த்து விட்டு சென்றனர்…
சுபாவின் பயம் நாளுக்கு நாள் அதிகம் ஆகிக்கொண்டே இருந்தது அவளை எப்படி சமாதானம் செய்வது என்றே யாருக்கும் தெரியவில்லை….
error: Content is protected !!