Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதயத்தின் ஓசை கேட்குதோ ❤️ ( இரண்டாம் பாகம் )

ஓசை ❤️ 5 ( இரண்டாம் பாகம் )

ஆரவ் கதவை திறக்க சென்றவன் இன்னும் வரவில்லை என சுபாவும் காண செல்ல அங்கு இருந்தவர்களை பார்த்து அதிர்ந்து நின்று விட்டாள்… ஏனென்றால் அங்கு இருந்தது ரேவதி… அதுவும் கையில் ஸ்டிக் வைத்து கொண்டு கொஞ்சம் தடுமாற்றமாக நின்று இருந்தாள்…. அவளை தாங்கியவாரு நேற்று ஆஷாவை அழைத்து செல்ல வந்தவனும் ஆஷாவும் நின்று இருந்தனர்…

வீட்டிற்கு வந்தவர்களை வெளியே செல் என கூற மனமில்லாமல் “வாங்க” என்று மட்டும் கூறிவிட்டு அவர்களை உள்ளே வர அனுமதித்தாள்….



Advertisement

உள்ளே வந்தவர்கள் அங்கு மாட்டி இருந்த அர்ஜுனன் போட்டோவை பார்த்து அதிர்ந்து விட்டனர்…. சுபாவை இங்கு பார்த்ததும் இவள் ஏன் இங்கு வேலை செய்கிறாள் என்ற யோசனையோடு தான் வந்தாள்… ஆனால் இப்படி ஒன்றை அவள் எதிர்பார்க்கவே இல்லை…

Advertisement

யாருக்கும் என்ன கூறுவது என்றே தெரியவில்லை… ரேவதியுடன் வந்தவன் தான் முதலில் பேச ஆரம்பித்தான்….

Advertisement

“ரேவதி உங்களுக்கு பண்ணதுக்கு மன்னிப்புனு கேட்டு அதை சரி செய்ய முடியாது…. அவ உங்களை எப்படி கஷ்டபடுத்தினானு எனக்கு தெரியும்…. அவ எப்போ மனசு மாறுனாளோ அப்ப இருந்து உங்க பேமிலி எல்லார் கிட்டயும் மன்னிப்பு கேட்கனும்னு சொன்னா…. பட் ஏழு வருஷம் முன்னாடி எதிர்பாராம நடந்த அஃசிடென்ட்ல அவ கால் எடுக்க வேண்டிய சூழ்நிலை…  அதுனால ரொம்ப நாள் ஹாஸ்பிடல்ல இருந்தோம்… கால் எடுத்ததுல கொஞ்சம் டெப்ரெஷன் ஆயிட்டா… எனக்கு இங்கயும் ஆபீஸ் வீடு இருக்குறதுனால இங்க ஷிப்ட் ஆகிட்டோம்…. காலைல அவ உங்களை பார்த்த அப்டினு சொன்னதும் இங்க வந்தோம்….

Advertisement

அவ பண்ண தப்புக்காக நான் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன்…. நீங்க மன்னிக்குற மாதிரி அவ தப்பு பண்ணல… நீங்க மன்னிக்கலனாலும் உங்க கிட்ட மன்னிப்பு கேட்டதே கொஞ்சம் மனசுக்கு நிம்மதியா இருக்கு” என்று கூறி கை கூப்பி மன்னிப்பு கேட்டான் ரேவதியின் இரண்டாவது கணவன் ஜேம்ஸ்…..

ரேவதி மெதுவாக சுபா அருகில் வந்து “என்னை மன்னிச்சிடுங்க சுபா க்கா… ரொம்ப உங்களை எல்லாரையும் நான் கஷ்டப்படுத்திட்டேன்…. மன்னிப்பு கேட்குற அருகதை கூட எனக்கு இல்ல… நான் பண்ண எல்லா தப்பையும் புரிய வெச்சிட்டாரு ஜேம்ஸ்…

எனக்கு எப்போ என் தப்பு புரிஞ்சதோ…. அப்போ இருந்து உங்களுக்கு நான் பண்ணது எல்லாமே புரிய ஆரம்பிச்சது…. முதல்ல இவரையும் நான் மதிக்கவே இல்ல….

இவரையும் எதிர்த்து பேசி அடிச்சி எல்லாமே பண்ணேன்…. அவரும் முதல்ல பொறுமையா இருந்தாரு… ஆனா போக போக ரொம்ப மோசமா நடந்துகிட்டேன்…  அதனால அவரும் என்னை அடிக்க  ஆரம்பிச்சாரு….

ஆனா என்னை அடிச்சிட்டு நைட் நான் தூங்கிட்டேன் னு நினைச்சு அவர் ரொம்ப அழுதாரு….  அப்போவே எனக்கு கொஞ்சம் கொஞ்சம் மனசு மாற ஆரம்பிச்சது…

ஆனாலும் ஏன் கல்யாணம் பண்ணோம்னு தோன்னிச்சு…. வீட்டை விட்டு போகலாம்னு முடிவு எடுத்தேன்…. நானும் அவரும் தனி தனி ரூம்ல தான் இருந்தோம்… நான் இது வரைக்கும் அவர் ரூமுக்கு போனது இல்ல…

அன்னிக்கு போனப்ப அவரு என்னை எவ்வளவு லவ் பண்ணி இருக்காருனு அன்னிக்கு தான் புரிஞ்சிக்கிட்டேன்…. என்னை அங்க வேலைக்கு சேர்ந்ததுல இருந்தே லவ் பண்ணி இருக்காரு…. வீட்டை விட்டு போற முடிவை சேஞ் பண்ணிக்கிட்டு அங்கேயே இருந்தேன்….

அப்பறம் கொஞ்சம் கொஞ்சமா அவரை புரிஞ்சிக்க ஆரம்பிச்சேன்…. என்னோட மாற்றத்தை பாத்துட்டு அவரு திட்டுறது கூட இல்ல…. எனக்கும் அவர் மேல லவ் வர ஆரம்பிச்சது….

ரெண்டு பேரும் கொஞ்ச நாள் லவ் பண்ணோம்… எங்க வீட்டுல பேசுனோம்… ஆனா என்னை நம்பல அவங்க…..  நான் எடுத்த என்னோட அக்கா நகைக்கு பணம் குடுத்துட்டு திரும்பியும் வந்துட்டோம்…. அதுக்கு அப்பறம் நான் அவங்களை பாக்கல…..

ஆனா நான் செஞ்ச பாவத்துக்கு தான் எனக்கு குழந்தை பெத்துக்குற வாய்ப்பை கடவுள் எனக்கு தரல போல….. ரொம்ப நாள் அதுனாலேயே மன அழுத்தத்துல இருந்தேன்….. அதுல இருந்து கொஞ்சம் மீண்டு வரதுக்குள்ள எனக்கு அஃசிடென்ட் ஆகிடிச்சி…..

ரொம்ப டெப்ரெஷன் ஆகிடிச்சு… ஹாஸ்பிடலயே மூனு மாசம் ஆகிடிச்சு…. அப்புறம் என்னால சென்னைல இருக்க முடியல…. அது தான் இங்க வந்துட்டோம்….

ஐ ஆம் ரியலி சாரி…எனக்கு தினமும் உங்க ஞாபாகம் வந்துடும்…. கண்டிப்பா உங்க கிட்ட சாகறதுக்குள்ள மன்னிப்பு கேட்கனும்னு தோணும்… இன்னிக்கு கேட்டுட்டேன்…. ரொம்ப ரொம்ப சாரி….” என்று கூறி சுபாவின் காலில் விழ முயன்றாள் ரேவதி….

“ஐயோ என்ன பண்ற…. அது எல்லாம் வேண்டாம்….  எனக்கு நீ பண்ணது எல்லாம் மறந்தே போயிடுச்சு…. ” என்று அவளின் காலில் விழ விடமால் கூறினாள்…. மீண்டும் அவளை நாற்காலியில் உட்கார வைத்தாள்….

ஜேம்ஸை நோக்கி ” நீங்களும் உட்காருங்க…. ” என்று கூறிவிட்டு அவர்களுக்கு குடிக்க எடுத்து வர சென்றாள்….

அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து குடுத்தாள்…. பின் ரேவதி தயங்கியவாறே “அக்கா அத்தானுக்கு என்ன ஆச்சு..” என்று கேட்டாள்….

சுபா இவர்களுக்கு சொல்லட்டும்…… நான் உங்களுக்கு சொல்றேன்….

சசி மித்ராவுக்கு கல்யாணம் முடிந்து ஐந்து மாதம் முடிந்து இருந்தது…. இருவரும் வீட்டிலேயே இருப்பதை பார்த்து சுபா அடம் செய்து அவர்களை மணாலி அனுப்பி இருந்தாள்….

இருவரும் கொஞ்சம் தயக்கமாகவே சென்று இருந்தனர்… வீட்டில் அனைவரும் இருக்கும் போது சகஜமாக பேசுபவர்கள் தனியாக இருந்தால்  கொஞ்சம் தயங்கி தயங்கி தான் பேசுவர்……

ஆனால் உறங்கும் போது அவளை அணைத்து கொண்டு தான் உறங்குவான் சசி..  மித்ராவுக்கு அதுவே மிகவும் சந்தோசமாக இருக்கும்….

இருவரும் மணாலியை அடைந்தனர்… பயங்கர குளிர் நிலவியது அங்கு…. குளிரில் தானாகவே மித்ரா சசியின் கைவளவிற்கு சென்று இருந்தாள் அவளை அறியாமலே….

இருவரும் அந்த தனிமையில் ஒருவரை ஒருவர் நன்றாக பேசி புரிந்து கொண்டனர்…. இருவரும் தங்கள் வாழ்க்கையை சந்தோசமாக ஆரம்பித்து இருந்தனர்….

அடுத்த மூன்று மாதத்தில் மித்ரா கருவுற்று இருந்தாள்…. மித்ராவுக்கு வளைகாப்பு நடைபெறும் போது சுபா அனைவரிடமும் பேச வேண்டும் என்று கூறினாள்…. அனைவரும் வந்து அமர்ந்தவுடன்  “எல்லாரும் வந்துட்டீங்களா… நான் பேச வந்ததை பேசலாம் தானு….” என்று கேட்டாள்

அனைவரும் பேசலாம் என்று கூறினார்…. “கர்ணனுக்கு கல்யாணம் வயசு ஆகிடிச்சு…. அதுனால அவனுக்கு கல்யாணம் பண்ணலாம்னு முடிவு பண்ணி இருக்கேன்…. பொண்ணும் பாத்து வெச்சிட்டேன்… உங்களுக்கு சம்மதம்னா கல்யாணம் பேசி முடிக்கலாம்..” என்று கூறினாள்….

அனைவருக்கும் கர்ணன் சுப்ரியா காதல் அரசல்புரசலாக தெரியும்… சுபா கூறியதை கேட்டு சுப்ரியாவுக்கு அழுகையே வந்துவிட்டது…. ஆனால் அவள் அதை யாருக்கும் தெரியாமல் மறைத்து கொண்டாள்…

கர்ணன் சுபாவிடம் இருவரும் காதலிப்பதை கூற முற்படும் போது சுப்ரியா கண்ணை காட்டி அடக்கிவிட்டாள்…. அவளுக்கு சுபா என்றால் கொள்ளை பிரியம்…. அவள் என்ன சொன்னாலும் பிரியா கேட்பாள்….

அர்ஜுனன் இவள் தெரிந்து பேசிகிறாளா இல்லை தெரியாமல் பேசுகிறாளா என்று பார்த்து கொண்டு இருந்தான்….

அனைவரும் அமைதியாக இருப்பதை பார்த்து “என்ன எல்லாரும் அமைதியா இருக்கீங்க… சரி இன்னிக்கே பொண்ணு பார்க்குற விஷேசம் வைக்கலாம்னு நினைக்குறேன்….  எல்லாம் ரெடி ஆகுங்க” என்று கூறினாள்….

“சுபா என்ன பண்ணிட்டு இருக்க… கர்ணனுக்கு விருப்பமானு கேட்டியா…. நீயே முடிவு பண்ணிட்டு இருக்க”… என்று கொஞ்சம் கோவமாக கேட்டான் அர்ஜுனன்…..

அவனை கண்டுகொள்ளாமல் கர்ணனிடம் “கர்ணா நான் பாக்குற பொண்ணை நீ கட்டிக்க மாட்டியா” என்று முகத்தை பாவமாக வைத்து கேட்டாள்…. அவனால் எதுவும் கூறமுடியவில்லை…. “ஆம்” என்று தலை மட்டும் அசைத்தான்…..

“பாருங்க மாமா… ஓகே சொல்லிட்டான்… சரி பொண்ணு போட்டோ பார்த்துட்டு பொண்ணு பாக்க போலாம்” என்று கூறி போட்டோவை அனைவரும் இருக்கும் வாட்சப் குரூப்பில் பெண் போட்டோவை அனுப்பினாள்…..

அனைவரும் போட்டோவை பார்த்து அதிர்ந்து பிறகு சந்தோஷப்பட்டனர்….. ஆனால் கர்ணன் பிரியா இருவரும் பார்க்கவே இல்லை…. கர்ணனிடம் சசி “டேய் போட்டோ பாரு….”  என்று கூறி காட்டினான்…. அதே போல் மித்ராவும் பிரியாவிடம் கூறினாள்….

இருவரும் ஒரே நேரத்தில் போட்டோவை பார்த்துவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்தனர்…. பிரியா உடனேயே சுபாவை ஓடி சென்று கட்டிக்கொண்டாள்…. ஏனென்றால் சுபா அனுப்பிய போட்டோ கர்ணன் பிரியா இருவரும் சசி கல்யாணத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரே நிறத்தில் உடை அணிந்து எடுத்த போட்டோ அது…..

அதன்பிறகு கல்யாண வேலைகள் வேக வேகமாக நடைபெற்றது…. தன்சிகா பிறந்து இரண்டு மாதத்தில் இருவருக்கும் கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!