Skip to content
Post Views: 2,392

கருப்பன் ஆட்டம் 11
Advertisement
அன்றைய நாள் இரவு நேரம் கருப்பன் தனது வீட்டிற்கு சென்று சாப்பிட்டுவிட்டு தனக்கு பிடித்த வீடான அந்த மண் வீட்டிற்கு வந்திருந்தான்.அவனுக்கு பின்னாலேயே வீட்டில் நுழைந்தான் தர்மன்.
Advertisement
வீட்டிற்குள் வந்த கருப்பனிடம் ஒருவித அமைதி. அவன் முகம் யோசனையில் நிறைந்திருப்பதை கவனிக்க தர்மன் அவனை என்னவென்று புரியாத பார்வை பார்த்தவன்.
Advertisement
“டேய் மச்சான் என்ன யோசனை எல்லாம் பலமா இருக்கு?”
Advertisement
அதற்கு கருப்பன் ஊர் மக்களுக்கு இடையில் நிலவி வரும் ஒரு முக்கிய விஷயத்தை பற்றி கூறினான்.
அதனை கேட்ட தர்மனும்
“ஆமாண்டா மச்சான் நானும் இத பத்தி உன்கிட்ட சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்தேன். பரவால்ல அதுக்குள்ள நீயே சொல்லிட்ட, இதுக்கு ஒரு தீர்வு கண்டுபிடிச்சே ஆகணும்டா மச்சான். இந்த பிரச்சனை எல்லைய மீறி போயிட்டு இருக்குது” என்று தர்மன் கருப்பனிடம் கூறினான்.
“இதுக்கான சரியான முடிவை கண்டிப்பா நாளைக்கு எடுத்திடலாம் மச்சான்!” என்று கருப்பனும் தர்மனிடம் பேசியவன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்து விட,
“என்னடா மச்சான் மறுபடியும் என்னத்தையோ போட்டு யோசிக்கிற? இப்ப என்ன விஷயம்?”
அதற்கு அவனோ மிக தீவிரமாக “இல்லடா ஒரு வாரத்துக்கு முன்னாடி என் அத்தமக மயிலு கூட ஒரு புள்ள வந்துச்சு இல்ல!” என்று கருப்பன் கேட்க,
“யாரடா கேட்குற?” என்று குழம்பியாவாரு கேட்டான் தர்மன்.
“அதாண்டா இந்த வீட்டுக்குள்ள வந்து கூட சண்டை போட்டுட்டு போனாலே!” என்று கருப்பன் நினைவூட்ட,
“ஓ.. அந்த புள்ளையா..! சரி அந்தப் பிள்ளைய பத்தி நீ எதுக்கு கேக்குற?” என்று தர்மன் கேட்க,
“அதுவா…! அன்னைக்கு பேசும்போது சொல்லிட்டு இருந்தா நான் நெதமும் வருவேன். இந்த வீட்டுல வந்து தான் என் காலப்பொழுதே விடியும் அது இதுன்னு சொல்லிட்டு இருந்தா,
அவ பேசு பேசுன பேச்செல்லாம் வச்சு பார்த்தா தினமும் வருவான்னு பார்த்தேன். ஆனா போய் ஒரு வாரம் ஆச்சு இன்னும் தலைய கூட காணோமே!” என்று கருப்பன் அதனை பற்றி தீவிரமாக யோசித்து அவனிடம் கேள்வியை கேட்க,
“இது என்னடா கிறுக்கு தனமான கேள்வி? நீ தான இந்த பக்கம் வந்தா வீட்டுல சாணி மொழுக வச்சிருவேன்னு சொல்லி மிரட்டி விட்ட, அப்புறம் எப்படி அந்த புள்ள வரும்?”
“நான் மிரட்டுறதுக்கு எல்லாம் பயப்படறவளா அவ, அவ சரியான ரப்புகாரிடா நான் சொல்றதுக்கு மீறி தான் அவ செய்வா, அப்படிப்பட்ட அழுத்தகாரி தான் அவ. அப்படி இருக்கும்போது அவ ஏன் அதுக்கு அப்புறம் இந்தப்பக்கம் வரல?” என்று மீண்டும் அதையே கேள்வி கேட்டான்.
“அந்தப் புள்ள அதுக்கப்பறம் இங்க வரலைன்னு யோசிக்கிறியா? இல்ல வரணுமுன்னு யோசிக்கிறியா?” என்று ஒற்றைப் புருவம் உயர்த்திய தர்மன் கருப்பனிடம் கேட்க,
“சீ..ச்சீ, அந்த புள்ள வரணும்னு எல்லாம் எதிர்பார்க்கல, மறுபடியும் அவளை பார்த்து யாரு அவ கிட்ட வாய் கொடுக்குறது? அதுக்கெல்லாம் நினைக்கல. ஆனா வரலையே அப்படின்னு யோசிக்கிறேன்”
“கண்டதையும் போட்டு யோசிக்காமல் பேசாம படுடா” என்ற தர்மன் தான் கட்டி இருந்த லுங்கியின் முடிச்சை அவிழ்த்து கையில் இருந்தாவாரு உதறி அதையே போர்வையாக்கி இழுத்துப் போர்த்தி கொண்டு படுத்து விட,
ஒரு பெருமூச்சு இழுத்து விட்ட கருப்பனோ அவனின் அருகில் படுக்க, அன்றைய பொழுது நிகழ்வினை பற்றி பேசி கொண்டு உறங்கி போயினர் நண்பர்கள் இருவரும்.
காலை பொழுது யாருக்காகவும் காத்திராமல் அழகாக புலரவே, இன்று முதன்முறையாக அதுவும் முதல் நாள் கல்லூரிக்கு ப்ரொஃபஷராக செல்வதற்காக அதிகாலையில் எழுந்து அமுதாவிற்கு சிறு உதவிகள் செய்து குடுத்து தனது காலை வேலைகளை முடித்தவள்,
பின் குளித்து முடித்து நேர்த்தியாக ஒரு காட்டன் புடவையை கட்டிக்கொண்டு கூந்தலை தளர பின்னி இரு புருவத்தின் மத்தியில் சிறு கருப்பு பொட்டு ஒன்றை வைத்துக் கொண்டவள்,ஒரு ஹேண்ட் பேக்கை எடுத்து அதில் தனக்கு வேண்டிய பொருட்களை அடுக்கி கொண்டிருந்தாள்.
அப்பொழுதே மணி ஏழு ஆகி இருக்க, உருண்டு பிரண்டு பொறுமையாக கண்விழித்த மயில் தன் முன்பு அழகு பதுமையாய் கிளம்பி இருந்த மலர்விழியை பார்த்தவள்
“என்னடி காலங்காத்தால சேலை எல்லாம் கட்டிருக்க என்ன விஷயம்?” என்று கேட்டுக் கொண்டே எழுந்தமற,
அவளை பார்த்து முறைத்த மலர்விழியோ “ஏ எருமை இன்னைக்கு நான் முதல் நாள் வேலைக்கு போறேன். உனக்கு தெரியாதா?” என்று கேட்க,
கண்களை அழுந்த தேய்த்து விட்டு தலையை சொரிந்த மயிலோ, “ஆமால… இன்னைக்கு நீ வேலைக்கு போறல்ல.. சரிடி பார்த்து போயிட்டு வா” என்று மீண்டும் படுக்க போக,
“ஒன்ன கொன்றுவேன் எழுந்திருடி எருமை” என்றால் மலர்
“என்னா..டி” என்று சடைந்து கொண்டால் மயில்.
“எனக்கு இங்க இருந்து ரெண்டு சந்து தள்ளி தனியா போனாலே திரும்பி வீட்டுக்கு வர தெரியாது. அப்பிடி இருக்கும்போது அங்க மட்டும் என்ன தனியா போக சொல்ற?
எந்திரிச்சு என் கூட காலேஜுக்கு வந்து ட்ராப் பண்ணிட்டு வா” என்று மலர் கேட்க,
“என்னது ஒன்ன வந்து டிராப் பண்ணிட்டு வர்றதா! நீ என்ன சின்ன புள்ளையா வழி சொல்றேன் கேட்டுட்டு அதுப்படி போ,
ஃபர்ஸ்ட் இங்கே இருந்து நேரா பஸ் ஸ்டாண்டுக்கு போ அங்க போனா பஸ் வந்துரும். அடுத்த பஸ் ஸ்டாண்ட்ல இறங்குனா காலேஜ் வந்துரும்” என்று கூறி அவள் மீண்டும் படுக்க போக,
“ஏ.. மயிலு நாளைல இருந்து நானே போய்க்கிறேன்டி. இன்னைக்கு ஒரு நாளைக்கு என் கூட வாடி” என்று மலர் அவளை எழுந்து வர கூறிக் கொண்டிருக்கும் பொழுது,கட்டிலுக்கு அருகில் வந்து நின்றார் அமுதா.
“மம்மி..! என்ன மம்மி என்னைக்கும் இல்லாம இன்னைக்கு இவ்வளவு பக்கத்துல வந்து மகள சைட் அடிச்சிட்டு இருக்க? நான் அவ்வளவு அழகா இருக்கேனா?” என்று மயில் முகத்தில் விரல் கொண்டு வருடி வெக்கப்பட்டு கொண்டே கேட்க,
அமுதா அவளை பார்த்து முறைத்து விட்டு பின்னால் மறைத்திருந்த துடப்பத்தை முன்னாள் கொண்டு வரவ,
“மம்மி.. வீடு கூட்ட போறியா? சரி, அப்படியே இந்த பெட்ஷிட்டையும் மடிச்சு வச்சுட்டு கூட்டு நான் பாத்ரூம் போயிட்டு வரேன்” என்று அங்கிருந்து நைசாக நகர்ந்து விட்டால் மயில்.
போகும் அவளை முறைத்துக் கொண்டு நின்றிருந்தார் அமுதா. அதற்கு மலர்விழியோ வாயில் கை வைத்து சத்தமிட்டு சிரிக்க, ஒடனத்த புள்ள அஞ்சு மணிக்கெல்லாம் எந்திரிச்சு எல்லா வேலையும் முடிச்சுட்டு குளுச்சு வேலைக்கு கிளம்பிடுச்சு, எனக்குன்னு வந்து பொறந்திருக்கு பாரு!” என்று அமுதா தலையில் அடித்து கொண்டார்.
ஒருவழியாக மயிலை கிளப்பி தானும் கிளம்பிய மலர்விழி அமுதாவிடம் விடை பெற்று இருவரும் அந்த ஊரின் பேருந்து நிலையம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிரில் கருப்பனும் தர்மனும் நின்று கொண்டிருக்க, கருப்பன் ஒருவனை பிடித்து அடித்து துவைத்துக் கொண்டிருந்தான்.
அதனைப் பார்த்து மலர்விழியோ “இந்தா ஆரம்பிச்சுட்டான்ல உன் ஐத்தான். இன்னைக்கும் எவனோ சிக்கிட்டான் போல, ஏன்டி உன் ஐத்தானுக்கு வேற எந்த வேலையுமே இருக்காதா? எப்ப பார்த்தாலும் எவனையாவது போட்டு அடிச்சுக்கிட்டே இருக்கான்?” என்று மலர் கடுகடுப்பாக முகத்தை வைத்துக் கொண்டு மயிலிடம் கேட்டாள்.
“ஏய் என் அத்தான் ஒன்னும்.. பொழுதுபோகாம புடுச்சு யாரையும் அடிக்கிறவர் இல்ல, அவர் அவ்வளவு சீக்கிரம் கை நீட்ட மாட்டாரு அப்படி அதையும் மீறி கை நீட்டுனாருன்னா அவன் மேல தப்பு இல்லாம இருக்காது. எதுவும் தெரியாம தேவையில்லாம பேசாம உன் வேலைய பாத்துட்டு வாடி” என்று மயில் கூற, சரி என்று மலரும் நடந்து வந்து கொண்டிருக்க,
கருப்பனின் அருகில் வர வர அவனுக்கு முன்பு அடி வாங்கிக் கொண்டிருந்தவன் வலியினை தாங்க முடியாமல் சோர்ந்து விட்டான். அதனை பார்த்து கவலை உற்ற மலர்விழியோ அவனை நோக்கி செல்ல,
மலர்விழியின் கால்கள் கருப்பனின் அருகில் செல்வதை உணர்ந்த மயில்,
“அடியே ஆத்தா புண்ணியவதி, ஒன்ன கையெடுத்து கும்பிடுறேன். , ஏற்கனவே நீ எங்க அத்தான் கிட்ட பேசினதெல்லாம் போதும்.… வாடி உனக்கு காலேஜுக்கு டைம் ஆச்சு” என்று அவளின் கைப்பிடித்து மயில் இழுக்க,
“ஏய் இருடி கண்ணுக்கு முன்னாடி ஒருத்தன் அடி வாங்கியே செத்துருவான் போல, இப்படியே விட்டுட்டு போக சொல்றியா? என்னதான் காரணம்ன்னு கேட்டு உங்க ஐத்தான நாக்கு புடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டுட்டு வரேன்” என்று அப்பொழுதும் அடங்காமல் மலர்விழி கருப்பனின் அருகில் செல்ல,
“இன்னைக்கு என்ன வில்லங்கத்த வெலைக்கு வாங்க போறான்னு தெரியலையே!” என்ற மயில் அங்கிருந்து இரண்டு அடி தள்ளியே நின்று விட்டாள்.
கருப்பனின் அருகில் வந்து அவனுக்கு இடையே நின்று அவனின் விழிகளை நேருக்கு நேராக பார்த்த மலர்விழியோ,
“நீ என்ன தான் நெனைச்சுட்டு இருக்க? நீ என்ன பெரிய சண்டியரா யாரு கிடச்சாலும் அடுச்சுட்டே இருக்க,
உனக்கு பொழுதுபோக்குக்கு வேற எதுவுமே இல்லையா? உனக்கு கோவம் வந்துச்சுன்னாலோ பொழுது போகலைனாலோ உன் வீட்டுக்கு போய் நாளா பக்க செவுத்துல போய் முட்டு, அதுக்கு எதுக்கு கண்டவங்கள எல்லாம் அடிச்சிட்டு இருக்க?” என்று அவனின் விழிகளில் பார்த்து நேருக்கு நேராக கேட்க,
தர்மனோ அவள் கேட்டதை பார்த்துவிட்டு கருப்பனை பார்க்க, அவனோ தன் கையில் உள்ளவனை விடுத்து, மயிலின் புறம் திரும்பியவன்,
“ஆமா பொழுது போகலன்னா, நான் அடிப்பேன். இன்னைக்குன்னு பாத்து கை வேற ரொம்ப பரபரப்பா இருந்துச்சா, எவனும் சிக்கல அதான் அவன பிடிச்சு அடிச்சுட்டு இருந்தேன். இதுல உனக்கு எதுவும் பிரச்சனையா?” என்று அவனும் எதிர் கேள்வி கேட்டான்.
“நீ எல்லாம் என்னதான் மனுஷனோ! நான் அன்னைக்கு காட்டான்னு சொன்னது சரியாத்தான இருக்கு. அப்ப மட்டும் என்னவோ பெரிய நியாயஸ்த்தன் மாதிரி கேள்வி கேட்ட? இதுதான் நியாயமா?” என்று மலர்விழியும் அவளின் விழிகளை பார்த்து கேட்க,
இவர்கள் இருவரும் தேவையற்ற வாக்குவாதங்களை பார்த்துக் கொண்டிருந்த மயிலுக்கும் தர்மனுக்கும் இது எங்கே சென்று முடிய போகிறதோ! என்கின்ற பயம் தொற்றிக்கொண்டது.
ஆனால் இப்பொழுது எதை பேசினாலும் இவர்கள் கேட்க போவதில்லை” என்று தெரிந்து இருவரும் அமைதியாக நின்று இருந்தனர்.
ஒரு வாரத்திற்கு முன்பு கூட இவர்கள் இருவரும் வீட்டிற்குள் பேசிக் கொண்டதால் அது யாருக்கும் பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
ஆனால் இன்று இப்பொழுது இவர்கள் ஊர் மத்தியில் நின்று பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அந்த கிராமத்து மக்கள்,
“ஏய் மங்கம்மா இங்க பாருடி இந்த மெட்ராஸ் காரி, நம்ம கருப்பனையே எதிர்த்து கேள்வி கேட்கிறா?” என்று கூறி அவர்களுக்குள்ளாக பேசியவர்கள், இவர்கள் இருவரும் என்ன பேசுகிறார்கள் என்பதை கூட ஆராயாமல் அவர்களாக ஒரு கட்டுக்கதை கட்டி பேச ஆரம்பிக்க,
அதனை கவனித்த மயிலோ “அடியே மலரு பேசாம வரியா? இல்லையா? பஸ்ஸு வந்துரும்? என்று கேட்டு மலர் பேச பேச அவளை பிடித்து தரதரவென இழுத்து சென்றாள்.
திரும்பி திரும்பி பேசிக்கொண்டே போகும் அவளையே பின்னிருந்தவாறு ரசித்துக் கொண்டிருந்தான் கருப்பன்.
அரக்குசிவப்பு நிறத்தில் காட்டன் புடவையை நேர்த்தியாக மடிப்பெடுத்து கட்டி, கழுத்தில் மெல்லிய சங்கிலியும் காதில் ஒற்றை கல் பதித்த சிறிய வைரத்தோடும், தளர்வாக பின்னி இருந்த அவளின் கார்மேகம் கூந்தல் இடைக்கும் கீழே நீண்டு அசைந்தாடி கொண்டிருக்க, அவளின் வெண்பனி பாதங்களில் சிறிதும் ஒலி எழுப்பாமல் அவளின் பாதங்களில் சுற்றி சுழன்று கொண்டிருந்த மெல்லிய கொலுசு என அவளை ரசித்துக் கொண்டிருந்தான் கருப்பன்.
தோழிகள் இருவரும் பஸ் ஸ்டாண்டில் நின்று இருக்கவே, அந்த நேரம் சரியாக பஸ் வந்து விடுவே அதில் அவளை ஏற்றி விட்டவள் “அம்மா தாயே நல்ல படியா போயிட்டு வாடி” என்று நினைத்தவள் போகும் பஸ்ஸையே பார்த்து மானசீகமாக ஒரு பெரிய கும்பிடாக போட்டாள் தங்கமயில்.
ஊர் பெண்மணிகள் கட்ட ஆரம்பித்த கதை எங்கு சென்று என்ன செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை???
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻
ஸ்டோரிக்கு கீழ உள்ள கமெண்ட் பாக்ஸ்ல கமெண்ட் பன்றவங்க நம்ம கதை பேரையோ அல்லது கேரக்டர் பேரையோ குறிப்பிட்டு சொல்லி எழுதுங்க அப்போ தான் நான் என் கதைக்கான கருத்தை அப்ரூவ் செய்து என் ஐடிக்கு மாற்ற முடியும் வாசகர்களே 😊.
error: Content is protected !!
Karrupan malar rendu பெரும் sandaikozhi mathiri sandai podaradhu super super super super super super super super super super super super super
Thank you so much 🙏🏻💖🥰