Skip to content
Post Views: 2,107
கருப்பன் ஆட்டம் 28
தர்மன் கருப்பன் மற்றும் மலர்விழிக்கு தனிமை கொடுக்க எண்ணி அங்கிருந்து வெளியேறி இருந்தான்.
Advertisement
மலர்விழி அந்த வீட்டினுள் ஒருவித நிறைவான மனதோடு நுழைந்தாள்.
அவளுடனே உள்ளே வந்த கருப்பன் அவளின் முகத்தில் தெரிந்த ஒருவித நிறைவான உணர்வை பார்த்தவன்,
Advertisement
Advertisement
“என்னடி பொண்டாட்டி மூஞ்சி ஒரு மாதிரி ப்ரைட்டா இருக்கு…!” என்று கேட்டான்.
“பின்ன, இருக்காதா எத்தன நாள் ஏங்கி இருப்பேன்…! ஏன் நேத்து நைட்டு வரைக்கும் கூட பாதுகாப்பா தங்க எடம் இல்லாம, போக எடம் இல்லாம ஒரு நாடோடிய விட மோசமா நான் இந்த ஊருக்குள்ள இருந்தேன்.
Advertisement
ஆனா இப்போ எனக்குன்னு உரிமையா ஒரு வீடு அப்பறம் நீங்களும் கிடைச்சிருக்கீங்க …!” என்று கூறினால் மலர்.
“ஆனா மலரு இது ரொம்ப குட்டி வீடா இருக்குடி.., இது உனக்கு புடிச்சிருக்கா….? ஏன் கேக்குறேன்னா…!
மெட்ராசுல உங்க குடும்பம் கொஞ்சம் பணக்கார குடும்பம்னு தர்மன் சொல்லி கேள்விப்பட்டேன்…. அப்படி இருக்கும்போது உனக்கு இந்த குட்டி வீடு வசதியா இருக்குமாடி….!” என்று கேட்டான்.
“வசதியில என்னங்க இருக்கு….? நேத்து நானே ஏதோ குருட்டு தனமா முடிவு எடுத்து வெளிய வந்துருந்தாலும் கூட ஒரு பொண்ணா நிம்மதியா இருக்க இடமில்லாம, அந்த நைட் நேரத்துல எங்க போறதுன்னு தெரியாம தான் அந்த பஸ் ஸ்டாப்ல நின்னுட்டு இருந்தேன்.
நல்லவழியா நான் தர்மன் அண்ணே கண்ணுல பட்டேன். இல்லன்னா இந்நேரம் நான் எங்க எப்படி இருந்து இருப்பேன்னே என்னால நெனச்சு பாக்கவே முடியல…!
அப்படி இருந்த என்னோட நிலைமைக்கு இப்போ இந்த வீடு ஒருவித சொர்க்கம் மாதிரி இருக்குங்க, உங்களுக்கு அதெல்லாம் சொன்னாலும் புரியாது” என்று கண்களில் தேங்கிய கண்ணீரோடு கூறினால் மலர்விழி.
“ஏ லூசு அதுக்கு ஏன்டி அழுகுற…? என்று கூறியவன் மலர்விழியின் கன்னம் தாங்கி இனிமே இது நம்ம வீடு….! ஆனா இந்த வீட்ல உனக்கு கண்டிப்பா வசதி பத்தாது. நம்ம வேணும்ணா ஊருக்குள்ள ஒரு நல்ல வீடா பார்த்து போய்க்கலாமா…!” என்று கேட்டான்.
“இல்லைங்க அதெல்லாம் வேண்டாம்…! எனக்கு இந்த வீடு தான் புடிச்சிருக்கு. நாலாப்பக்கமும் தோப்பு, நடுவுல குட்டி வீடு அதுக்குள்ள நீங்களும் நானும் மட்டும்…! வாழ்க்கை முழுசும் இப்படியே நம்ம வீட்ல உங்க பொண்டாட்டியா இப்பிடி உங்களுக்குள்ளேயே இருக்குறத தவிர எனக்கு வேற என்னங்க வேணும்….!
எனக்கு பெரிய பெரிய கட்டடமா பாசம் நேசம் இல்லாம இருக்கிற வீட்டை விட, குட்டி வீடா இருந்தாலும் அதுக்குள்ள காதலும் அன்பும் பாசமும் நெறஞ்சு வழியிற இந்த வீடு தாங்க புடிச்சிருக்கு…! என்று கூறியவள் கருப்பனின் மார்பில் தலை சாய்த்து அவனை உரிமையாக அணைத்துக் கொண்டாள்.
நான் எதிர்பார்க்கவே இல்லைங்க பஞ்சாயத்துக்கு போற வழியில எங்கேயோ போறேன்னு சொன்னதும், சரி கடைக்கு போய் ஜூஸ் எதுவும் குடிக்க போயிருப்பீங்க நினைச்சேன்.
ஆனா ஊர் பெரியவங்க எல்லாம் சேந்து என்ன ஊர விட்டு ஒதுக்கி வைக்குறத பத்தி சொல்லிட்டு இருந்தாங்க, ஆனா அந்த பேச்சு கூட மதிக்காம திடீர்னு என் கழுத்துல தாலி கட்டிட்டீங்க…!” என்றால் மலர்.
“ஏன்னா எங்க ஊர்ல, அதுவும் இந்த மாதிரி கூடுற பஞ்சாயத்துல இந்த பேச்சும் இந்த வார்த்தையும் வரும்னு எனக்கு முன்னமே தெரியும் மலரு…. இத்தனை வருஷம் இந்த ஊர்ல இருக்கேன் எனக்கு தெரியாதா….!
அதுதான் யோசிச்சு டக்குனு போயி பக்கத்துல இருந்த ஒரு கடையில மஞ்ச கிழங்கும் மஞ்சள் கயிறும் வாங்கி அத கட்டி ரெடியாக எடுத்துட்டு வந்தேன்.
உனக்கு தான் இந்த கல்யாணத்துல விருப்பம் இருக்காதுன்னு நினைக்கிறேன்….!”
“ஏன் மாமா அப்படி சொல்றீங்க….! அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்ல மாமா…!”
“இல்ல மலரு உனக்கு உங்க அப்பா அம்மா எப்படியெல்லாமோ கல்யாணம் பண்ணனும்னு நினைச்சிருப்பாங்க, அப்படி தான் ஊர்ல உனக்கு நடக்க இருந்த கல்யாணமும் கூட இருந்திருக்கும்….!
ஆனா உன் கல்யாணம் இப்படி நடக்கும்னு நீயே கூட எதிர்பார்த்திருக்க மாட்ட இல்ல….!”
“மாமா….! இன்னொரு தடவை இந்த மாதிரி உங்க வீட்ல அப்படி பண்ணி இருப்பாங்க, அப்படி இருந்திருப்ப, இப்படி இருந்திருப்ப இந்த பேச்சு எல்லாம் பேசாதீங்க மாமா….!
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும். உங்கள மட்டும் உசுரா நினைச்சுட்டு இருக்கேன். உங்களுக்காக இந்த சின்ன விஷயத்தை மட்டும் இல்ல, எவ்ளோ பெரிய விஷயமா இருந்தாலும் அதை ஏத்துக்கிட்டு உங்க கைய மட்டும் புடிச்சுட்டு வாழ்க்கை முழுசும் நான் வருவேன் மாமா…!”என்று கண்களில் தேங்கிய காதலோடு கூறினாள் மலர்விழி.
“அந்த அளவுக்கு என்ன உனக்கு பிடிக்குமாடி….?”
“பின்ன பிடிக்காமையா….? இந்த கருவாப்பயல என் அழகு காட்டான எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்…!” என்றால் மலர்.
“கருவாப்பய… காட்டானா….! இதென்னடி புது புது பேரெல்லாம் வைக்கிற…?”
“உங்களுக்கு நான் முதல் முதல்ல வச்ச செல்ல பேரு கருவா…! அப்பறம் தான் காட்டான்….!” என்று கூறி அவனின் மார்பில் முகம் புதைத்து புன்னகைத்துக் கொண்டால் மலர்.
சிறிது நேரம் அப்படியே நின்றிருந்தனர் இருவரும். பின் கருப்பன் எதையோ யோசித்தவனாக…! “மலரு உனக்கு பசிக்கலையா….?” என்று கேட்டான்.
“இல்லங்க பசிக்கல…”
“ஏண்டி… மணி 11 ஆக போகுது..விடிஞ்சும் விடியாமயுமா பஞ்சாயத்தை கூட்டி இவ்வளவு நேரம் அங்க நிக்க வச்சுட்டாய்ங்க, இந்நேரம் மட்டும் எங்க ஆத்தாகிட்ட துடுக்கா பேசி மூஞ்சிய தூக்கி வச்சிட்டு வராம இருந்திருந்தா… நான் பெத்த மயன் பசி தாங்க மாட்டியான்னு நெனச்சு அதுவே சோத்தை இங்கன கொண்டு வந்திருக்கும்.
இப்ப எங்க ஆத்தா கொஞ்சம் கோவத்துல இருக்கு போல அதான் சோத்த காணோம்…!” என்று கூறினான் கருப்பன்.
“நம்ம வேணும்னா மண் அடுப்புல சாப்பாடு செய்யட்டுமா….! ஆனா அதுக்கு வேண்டிய பொருள் எதுவுமே இந்த வீட்டில் இல்லையே மாமா…!” என்று கேட்டால் மலர்விழி.
“ஓஹோ…! கல்யாணம் ஆனதும் முழு குடும்பஸ்தியாவே மாறிட்டீங்களோ…?” என்று குறும்பாக கேட்டான் கருப்பன்.
“ஏன் ஆகக்கூடாதா…? நீங்க வேற 10 புள்ளை பெத்து தர சொல்லி கேட்டு இருக்கீங்க…? நீங்க சொன்ன மாதிரியே இப்போ ஸ்டார்ட் பண்ணா தானே நம்மளுக்கும் வயசு ஆகுறதுக்குள்ள பத்து புள்ளையவும் பெத்து போட முடியும்….! அப்போ அதுக்கு தகுந்தாப்புல என்ன மாத்தணும்னா… இந்த விஷயத்தையும் நான் தான செய்யணும்….!” என்று அவனைப் பார்த்து கண்ணடித்து கூறினாள் மலர்விழி.
“அடி கள்ளி…!” என்று அவளின் கை பிடித்து இழுத்த கருப்பன் அவளை அணைத்து கொண்டவன்,
அவள் முகத்தை கையில் ஏந்தி அவளின் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன் என்ன நினைத்தானோ,
“அதுக்கு இது சரியான நேரமில்லை, அப்பறம் பாத்துக்கலாம்…! அப்பறம் இப்போதைக்கு சாப்பாடெல்லாம் ஒன்னும் செய்ய வேண்டாம், ஹோட்டல்ல போய் நம்ம மூணு பேத்துக்குமான சாப்பாடு நான் வாங்கிட்டு வரேன்.
அப்பறமா நானும் தர்மனும் மதுரைக்கு போய் வேணுங்குற பொருள் வாங்கிட்டு வரோம். நாளையிலிருந்து நீ சாப்பாடு செய்றதுக்கு வேண்டிய எல்லா பொருளும் இந்த குட்டி வீட்டுக்குள்ளயே அடைக்கலமா இருக்கிற அளவுக்கு வாங்கிட்டு வந்து வைக்கிறேன் போதுமா…?” என்று கேட்டான் கருப்பன்.
“எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல மாமா… ஆடம்பரமான பொருள் எதுவும் வேண்டாம். சமைக்கிறதுக்கு வேண்டிய அடுப்பு சிலிண்டர் அதுக்கான பாத்தரம் மட்டும் போதும் மத்தபடி நம்மளுக்கு இந்த கயித்து கட்டில் போதும் வேறு எதுவும் தண்டமா வாங்கிடாதீங்க….!” என்றால் மலர்விழி.
“அடியே உன்ன மெட்ராசுல இருந்து வந்த புள்ளையின்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாய்ங்கடி…, ஆடம்பரமான பொருள் வேணான்னு சொல்ற….! ஏன் எனக்குமே கூட இப்போ அந்த சந்தேகம் வருது நீ உண்மையிலேயே மெட்ராஸ்ல இருந்து தான் வந்தியா…?” என்று கேட்டான் கருப்பன்.
“பேசிகிட்டே நேரத்த வீணடிக்காதீங்க மாமா… ஹோட்டல்ல இந்நேரம் சாப்பாடு எல்லாம் தீந்து போய் இருக்க போகுது…!”என்று கூறி கருப்பனை அனுப்பி வைத்தால் மலர்விழி.
கருப்பனுக்கு கலர் (ஜூஸ்) வாங்குவதற்காக கடைக்கு வந்திருந்தான் தர்மன்.அப்பொழுது தானும் தன் வீட்டிற்கு ஏதோ ஒரு பொருளை வாங்குவதற்காக அங்கு வந்திருந்தால் மயில்.
மயில் கேட்ட பொருளை காணாமல் பின்னால் திரும்பி மிக தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார் அந்த கடைக்காரர்.
அந்த நேரம் மயிலின் அருகில் சென்று நீண்ட தர்மன் “என்னடி மாமன் நெனப்புலயே இருக்க போல…!” என்றான்.
“மாமனா எவன் அவன்…!” என்றால் மயில்.
“இந்தாடி.. இப்படி எல்லாம் பொசுக்குன்னு மரியாதை இல்லாம பேசக்கூடாது…, நான் தான் உன் மாமன்..!” என்றான் தர்மன் தனது சட்டை காலரை தூக்கி விட்டு கொண்டு.
“இருந்தாலும் உனக்கு ஆசை அதிகம் தான்…!”என்றால் மயில்.
“இந்தாடி… உனக்கு என்ன புடிச்சிருக்குன்னு நீ உங்க வீட்ல சொன்னதா தங்கச்சிமா என்கிட்ட சொல்லிடுச்சு…!” என்றான் தர்மன்.
“அந்த ஓட்ட வாய் சும்மா இல்லாம அதுக்குள்ள உன் கிட்ட சொல்லி வச்சிட்டாளா…?” என்றால் மயில்.
“ஆமா சொல்லிடுச்சு”என்றான் தர்மன்.
“சரி… இப்போ ஒனக்கு தெரிஞ்சு மட்டும் நீ என்னத்த பெருசா கிழிச்சுட போற…?” என்றால் மயில்.
“ஏண்டி இப்பிடி அநியாயத்துக்கு கால வார்ற…?”
“பின்ன வேற எப்பிடி சொல்றதாம்…! பாத்தையில பஞ்சாயத்துல என் அத்தானோட கெத்த…, ஊர்கார பய பூராம் சேந்து மலர் புள்ளயை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறோம்ன்னு பேசினப்ப கூட, என் பொண்டாட்டிய எவன்டா ஊற விட்டு ஒதுக்கி வைக்க சொல்ல முடியும்ன்னு எவ்வளவு கெத்தா நின்னு மலரு கழுத்துல தாலிய கட்டுனாருன்னு …?
நீயும் தான் இருக்கியே வெத்து வெட்டு…!” என்று கூறியவள் தான் கேட்டிருந்த , அந்த கடைக்காரர் எடுத்து கொடுத்து பொருளை வாங்கிக் கொண்டு தர்மனை ஒரு பார்வை பார்த்து விட்டு கிளம்பினாள்.
“இப்ப இவ நம்மள என்ன பண்ண சொல்றா…? நம்மளும் பஞ்சாயத்து கூட்டணுங்குறாளா…! இல்ல கதிரு மாதிரியே என்னையும் பஞ்சாயத்துல வச்சு தாலி கட்டி கூட்டிட்டு போன்னு சொல்றாளா…? ஒன்னும் புரியலையே…!” என்று தலையை சொரிந்து கொண்டு நின்று இருந்தான் தர்மன்.
அதனை கவனித்த கடைக்காரர் “இந்தாப்பா தர்மா கடைக்கு வந்து ரொம்ப நேரமா அங்க என்னத்த பாத்து மண்டைய சொரிஞ்சிட்டு இருக்குறவன்….! என்னயா வேணும்….?” என்றார்.
“அண்ணே ரெண்டு கலர் வேணும்”
அவன் கேட்ட ஜூஸை எடுத்து அவனிடம் கொடுத்தார் கடைக்காரர்.அதனை வாங்கிக் கொண்ட தர்மன் தோப்பு வீட்டிற்கு கிளம்பினான்.
தர்மன் தோப்பு வீட்டின் அருகில் வரும் பொழுது கருப்பன் வீட்டில் இருந்து வெளியேறினான். அதை பார்த்தவன் அவனின் அருகில் சென்று
“டேய் கதிரு அந்த புள்ளய வீட்டில் தனியா விட்டுபுட்டு நீ எங்கடா வெளிய போற…?” என்று கேட்டான்.
அதற்கு கருப்பனோ “சாப்பாட்டு நேரம் தாண்டி போச்சுடா…! வீட்ல சாப்பாடு செய்யறதுக்குன்னு பண்ட பாத்திரம்னு ஒன்னும் இல்ல, அதான் இன்னைக்கு ஒரு நாளைக்கு ஹோட்டல்ல வாங்கிட்டு வந்து கொடுக்கலாமுன்னு ஹோட்டலுக்கு போயிட்டு இருக்கேன்”
“அதெல்லாம் ஒன்னும் வேணாம். இந்தா சாப்பாடு இருக்கு பாரு வா போய் சாப்பிடலாம்…!” என்றான் தர்மன்.
“சாப்பாடு ஏதுடா உனக்கு…?” என்று கேட்டான் கருப்பன்.
“அதுவா நான் பொட்டி கடையிலிருந்து வந்துட்டு இருந்தனா அப்போ உங்க ஆத்தா தான் உனக்கும் எனக்கும் மலர் புள்ளைக்கு சேர்த்து சோறு கொடுத்துவிட்டுச்சு….”
“ஆத்தா குடுத்து வுட்டுச்சா பரவாயில்லையே…! மவன் மேல உள்ள கோவம் அதுக்குள்ள போயிடுச்சு போலயே…! சரி வா..!” என்று தர்மனை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்று
பொண்ணுத்தாயி கொடுத்த உணவினை வயிராற சாப்பிட்டனர் மூவரும்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள்💝💝💝
கமெண்ட் ப்ளீஸ் 🙏🏻
error: Content is protected !!