Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

28. இதழ்யா இசை - கருப்பனின் காரிகையவள்

கருப்பன் chapter 4

கருப்பன் ஆட்டம் 4

  • நேற்றைய பொழுது கவுன்சிலர் செல்வம் கருப்பனிடம் கஞ்சா செடி வளர்ப்பு பற்றி பேச ஆரம்பிக்கும் பொழுது அவனின் மீது துளிர்த்த சந்தேகத்தின் காரணத்தால் அவனுக்கு தெரியாமலே தனது ஃபோனில் வீடியோவை ஆன் செய்துவிட்டு தான் செல்வத்திடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தான் கருப்பன்.



Advertisement

அவன் கஞ்சா செடி பற்றி கூறவும் தனக்குள் எழுந்த கோபத்தை அடக்கி கொண்டதற்கும் காரணம் அதுவே,

 இன்று காலை நேரம் செல்வத்தின் கட்டைவிரலை துண்டித்த பொழுது அவன் கருப்பனிடம் “ஏய் என் கட்ட விரலையே வெட்டிட்டல்ல உனக்கு இருக்குடா!

Advertisement

Advertisement

 இனிமே ஆயுசு முழுக்க உன்ன ஜெயில்ல தள்ளி கம்பி எண்ண வைக்கல நான் கவுன்சிலர் செல்வம் இல்லடா” என்று வலியில் கோபத்தில் கத்திய செல்வத்தின் முன்பு அசால்ட்டாக நிமிர்ந்து நின்றவன், தனது இடுப்பில் சொருகி இருந்த ஃபோனை எடுத்து நேற்று அவன் எடுத்த வீடியோவை பிளே செய்து காட்டவே,

 இத்தனை நேரம் இருந்த ஆத்திரம் கோபம் என அனைத்தும் சென்ற இடம் தெரியாமல் மனம் முழுதும் பயம் வந்து தொத்தி கொள்ள,

Advertisement

 “ஏ.. ஏய்.. கருப்பா, என்ன இ…இ..த இத போய் ஏன் எடுத்து வச்சிருக்க?” என்று தட்டு தடுமாரி கேட்டான்.

அதற்கு கருப்பனோ, “அது உனக்கே தெரியும். நீ என்கிட்ட சொன்ன விஷயத்துக்கும் நீ இவ்வளவு நாள் பண்ண விஷயத்துக்காகவும் தான் இந்த தண்டனை.

இதுக்கு அப்புறம் நீ என்ன பத்தியோ இல்ல இந்த விஷயத்தை பத்தியோ வெளிய மூச்சு விட்டா கூட எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல.

ஆனா இதுவே நான் இதைப்பற்றி வெளியே சொன்னா?”என்ற தனது கையில் உள்ள போனை ஆட்டி காட்டியவன்,

 “அதுக்கப்புறம் தெரியும் வருஷம் முச்சூடும் நான் ஜெயில்ல கிடக்கணுமா, இல்ல நீ இப்பிடி ஒரு பொறுப்பான பதவியில இருந்து கிட்டு மக்களை வேதனை படுத்துறியே, இந்த கவுன்சிலர் பதவி! அதையும் இழந்து, ஜெயிலையும் கம்பி எண்ணி, இனிமே எந்த காலத்துலயும் உன்னால கவுன்சிலர் பதவிக்கு போட்டி போட முடியாம போயிடும் பரவாயில்லையா?” என்று அமைதியாக மற்றும் அழுத்தமான குரலில் கேட்டான் கருப்பன்.

 அதனை கேட்ட செல்வதற்கு பயத்தின் உச்சத்தில் உடல் முழுவதும் வியர்த்து வெடவெடக்க ஆரம்பித்தது.

 அப்பொழுது நடந்த விஷயத்தை செல்வம் தனது அல்லக்கைகளிடமும் கருப்பன் தனது ஆருயிர் நண்பன் தர்மனிடமும் கூறி முடித்திருக்க,

தர்மனோ கருப்பனின் கையைப் பிடித்தவன் “டேய் மச்சான் சூப்பர்டா! எவ்ளோ பெரிய காரியம் பண்ணிட்டு இவ்வளவு அசால்டா வந்து உக்காந்து இருக்க!” என்று கேட்டான்.

 எதிர்ப்புறமோ “எண்ணணே இப்படி ஆயிப்போச்சு, அந்த கருப்பன இப்ப எண்ணனே பண்ண போற?” என்று கேட்க,

“இப்பொழுதைக்கு நம்மளால ஒன்னும் பண்ண முடியாது. இது நான் தார் வெட்டும்போது வெட்டிகிட்டதாவே இருக்கட்டும்.

“ஆனா அண்ணே உன் விரல வெட்டுனது அந்த கருப்பன் தான் அப்படின்னு ஊர்ல எல்லாத்துக்குமே தெரியுமே! அது உனக்கு அசிங்கம் தானே!” என்று அவனின் அல்லக்கைகளில் ஒருவன் கேட்டான்.

அதற்கு முகத்தில் வன்மம் மின்ன கடுமையான குரலில் “எனக்கு எல்லாம் தெரியும்டா, ஆனா இப்பொழுதைக்கு நம்ம கோபப்படுறத விட அமைதியாக காய் நகத்தணும்,

 நான் இப்ப கோவப்பட்டா இப்போ இருக்கிற கவுன்சிலர் பதவியும் சரி பிற்காலத்துல வர இருக்கிற பதிவியும் என் கைக்கு கிடைக்காமல் போயிடும். அதுக்கு தாண்டா இந்த அமைதி.

 எப்பவுமே முந்திக்கிட்டு போயி மூக்கொடை பட்றதவிட பொறுமையாக இருந்து காய் நகத்துறதுதான்டா புத்திசாலித்தனம்” என்று செல்வம் அவனின் அல்லக்கைகளிடம் கூறிக் கொண்டிருந்தான்.

தோழிகள் இருவரும் மதுரை பேருந்து நிலையத்தில் வந்து இறங்கி இருந்தனர்.

 அதன் பின் மயிலின் கிராமத்திற்கு வரும் பேருந்தில் ஏறி அதில் பயணித்துக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது,

மாலை வானில் மறையும் சூரியன்! மென்காற்றில் அசையும் பயிர்கள்! அடர்ந்த மரங்கள் சூழ, இயற்கையின் எழில் கொஞ்சும் கிராமம் இருக்கும் வழி பாதையில் பேருந்து சென்று கொண்டிருக்க,

சுற்றிலும் இருந்த இயற்கை வனப்பையும், அதன் பசுமையான அழகையும் கண்கள் மின்ன பார்த்துக் கொண்டே வந்தால் மலர்விழி.

 ஆனாலும் அவள் மனதில் முதன் முதலாக தாய் தந்தையை எதிர்த்து செய்யும் செயலால் ஒரு வித பயம் இருந்து கொண்டு தான் இருந்தது.

அதைவிட ஒரு படி அதிக பயம் மயிலுக்கும் இருக்கவே செய்தது. அவள் மனதிலோ ‘மலர எப்படியோ அங்க இருந்து கூட்டிட்டு வந்துட்டோம்.

 ஆத்தா கிட்ட சொன்னா அது ஒத்துக்குமா என்னமோ தெரியலையே! கல்யாணத்துக்கு போயிட்டு கல்யாண பொண்ணு கூட்டிட்டு வந்துட்டியாடின்னு என்னை விளக்கமாத்தால சாத்துமே!’ என்று பலவித குழப்பங்களோடு பயணித்துக் கொண்டிருந்தாள்.

 இருந்தாலும் தன்னை நம்பி வந்து விட்டால் அவளுக்கு தகுந்த பாதுகாப்பினை நான் கொடுத்தே ஆக வேண்டும் என்பதில் அவள் உறுதியாக இருந்தாள்.

 கருப்பன் தனது வயக்காட்டிலில் இருக்கும் தேவையற்ற புல்களை களையெடுத்து கொண்டிருந்தான்.

 அப்பொழுது அங்கே வந்த ஒரு இளம் பெண் கையில் ஒரு குழந்தையையும் இடுப்பில் ஒரு குழந்தையை வைத்துக்கொண்டு அழுது கொண்டே வந்தவள்,

 “அண்ணே, கருப்பண்ணே!” என்று கூறிக்கொண்டே அவன் அருகில் வந்தாள்.

 அந்த பெண்ணை என்னவென்று புரியாமல் நிமிர்ந்து பார்த்தான் கருப்பன். அவள் தனது குழந்தைகளை தனக்கு முன்னே நிறுத்தி அழுத வண்ணம் இருக்க,

 அதனை பார்த்து புருவம் இடுங்கிய கருப்பன் “ஏய் இந்தாம்மா செல்வி, எதுக்கு இப்ப நீ அழுதுட்டு இருக்க?அதுவும் பச்ச புள்ளைய வச்சுக்கிட்டு இந்நேரம் இங்க வந்துருக்க! என்ன விஷயம்? ஏன் அழுதுட்டு இருக்க, அழுகாமல் விஷயத்தை சொல்லுத்தா?” என்று கேட்டான்.

 அதற்கு அந்தப் பெண்ணோ மேலும் தேம்பியவள் தான் வந்த காரணத்தை கூற ஆரம்பித்தாள்.

“அண்ணே அவரு இப்ப எல்லாம் சரி இல்லண்ணே, காலைல வேலைக்கு போறாரு நைட் 11 மணிக்கு மேலதான் வீட்டுக்கு வராரு,

வேலைக்கும் சரியா போறதில்ல வேலை பார்க்கிற காசையும் கொண்டு வந்து வீட்டில் குடுக்கறதும் இல்ல நானும் புள்ளைகளும் அன்னாடம் சோத்துக்கே கஷ்டப்பட்டு இருக்கோம். இத்தனை நாள் அவருக்கு தான் உடம்பு முடியலன்னு நான் விட்டுட்டு இருந்தேன்.

ஆனா இப்ப தான் தெரியுது, அந்த ஆளு என் வீட்டுக்கு ரெண்டு சந்து தள்ளி இருக்கிற சுந்தரியை கூத்தியாளா வச்சுக்கிட்டு திரியிறான் போலண்ணே!

 என்னையும் புள்ளைகளையும் இங்க பட்டனில போட்டுட்டு அந்த சக்காளத்தி வீட்டுக்கு போய் வேணுங்கிறதெல்லாம் வாங்கி குடுத்துட்டு இருக்காண்ணே! அவன் வாங்குன கடனுக்கு கடங்காரன் எல்லாம் நிதம் என் வீட்டு வாசல்ல வந்து நிக்கிறாய்ங்கண்ணே!” என்று கூறி அழுதால் செல்வி.

 அவள் கூறியதை கேட்ட கருப்பன் கோபம் கொண்டவனாக “என்னத்தா சொல்ற? இப்ப எங்க அவன்?” என்று கேட்டான்.

அதற்கு அவளோ “இப்ப வேலை முடிச்ச கையோட வாங்கிட்டு வந்த சம்பளத்தை கொண்டு போய் மொத்தமா அந்த சிறுக்கி கிட்ட கொடுக்கிறதுக்கு போயிட்டு இருக்காண்ணே அது தெரிஞ்சு தாண்ணே நான் இங்க வந்தேன்.

இப்போ அந்த ஆளு சம்பளத்தை கொண்டு போய் குடுத்துட்டான்னா ரவைக்கு எங்களுக்கு சாப்பாட்டுக்கு வழி இல்லண்ணே நானும் என் புள்ளைகளும் பட்டினியா தாண்ணே கிடக்கணும்” என்று அந்த பெண் கூறி மேலும் அழுகவே,

 “இந்தாத்தா என்ன லூசுதனமா பேசிகிட்டு இருக்குற, நீ எதுக்கு பட்டினியா கிடக்கணும்” என்றவன் தனது சட்டை பையில் உள்ள 500 ரூபாய் பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தவன் அவன் நைட்டுக்குள்ள உசுரோட உன் வீட்டுக்கு வந்துவிடுவியான்.

நீ போயி புள்ளைங்களுக்கு வேணுங்குறத வாங்கி கொடுத்தா” என்று கூறியவன் கையில் உள்ள அருவாலை அங்கிருந்த வரப்பிற்குள் வீசி எறிந்தவன் அங்கிருந்து கிளம்பி செல்வியின் கணவனை பார்க்க சென்றான்.

 பேருந்தில் அந்த கிராமத்திற்கு செல்லும் வழியில் இருக்கும் தோட்டங்களையும் இயற்கை சூழலையும் பார்த்த மலர்விழி மயிலிடம்,

“அடியே மயிலு நீ முன்ன எல்லாம் சொல்லுவல்ல உன் கிராமம் சூப்பரா இருக்கும்னு, அது இப்பதாண்டி தெரியுது, எவ்வளவு சூப்பரா இருக்கு!

எங்க பார்த்தாலும் பச்சை பசேல்னு கண்ணுக்கு குளிர்ச்சியா அவ்வளவு இதமா இருக்குடி! வச்ச கண்ணு எடுக்காம பார்த்துட்டே இருக்கலாம் போல இருக்குடி! என்று மலர்விழி கூறவே,

 “இது என்ன பெருசு, இதைவிட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு” என்றால் மயில்.

 “ஸ்பெஷல் ஐட்டமா! என்னடி சொல்ற?” என்று கேட்டால் மலர்விழி.

 “ஆமாண்டி இதைவிட எங்க ஊர்ல இன்னும் நிறைய நிறைய மரமும் செடியும் காடும் கரையும் பார்க்கவே சூப்பரா இருக்கும். நீ அங்க வந்தா வீட்டுக்குள்ளே இருக்க மாட்ட, பொழுதுக்கும் வாய்க்கா வரப்புல தான் திரிய போற” என்று கூறினால் இருவரும் ஒருவாராக இயற்கையை ரசித்துக் கொண்டு தங்களின் கிராமத்தில் வந்து இறங்கினர்.

 முதலில் மயில் இறங்கியவள் “பொறுமை இறங்கி வாடி, மொதோ மொறைய எங்க ஊருக்கு வர, வலது கால் எடுத்து வெச்சு வா” என்று கிண்டல் அடித்துக் கொண்டு கூறவும்,

மலர் படி இறங்க காலெடுத்து வைக்க எங்கிருந்தோ யாரோ தூரத்த மூச்சிரைக்க ஓடி வந்த ஒருவன் பஸ்ஸில் ஏற படியில் கால் வைக்க செல்லும் முன் தடுமாறி சரியாக அந்த படியில் வந்து விழுந்தான் செல்வியின் கணவன்.

திடீரென்று பஸ்ஸில் ஏற வந்த ஒருவன் தடுமாறி விழுகவும் அவனை பார்த்து பதறி தூக்க குனிந்தால் மலர்விழி.

அப்பொழுது அவனின் பின்னால் வந்த ஆடவன் அவனுக்கு உதவ வந்த கரத்தையும் அந்த கரத்திற்கு சொந்தகாரியையும் ஒரு பார்வை பார்த்து விட்டு பின்னாடி இருந்தவாறு முழங்கையை மடக்கி முட்டியை கொண்டு அவனின் முதுகில் ஓங்கி ஒரு குத்து குத்தியவன் அவனின் சட்டை காலரை பிடித்து தூக்கி பஸ்ஸில் சாய்த்து நிறுத்தி அவனின் முகத்திலும் வயிற்றிலும் மாறி மாறி குத்தினான் கருப்பன்.

 அவன் அடித்த அடியில் வலியினை பொறுக்க முடியாது அவன் அலறி துடித்துக் கொண்டிருக்க, படியின் பாதியில் நின்று கொண்டிருந்த மலர்விழி வழியில் துடித்துக் கொண்டிருக்கும் அவனையும் கண்கள் நிறைய ஆத்திரம் பொங்க அடித்துக் கொண்டிருக்கும் கருப்பனையும் பார்த்தவள்,

 யார் என்று தெரியாது பார்த்த முதல் பார்வையிலேயே கருப்பன் மீது காரணம் இல்லா கோபம் எட்டிப் பார்த்தது.

‘எப்படி போட்டு ஒருத்தன் அடிக்கிறான் பாரு, இவனெல்லாம் மனுஷனா, அவன் வழில அவ்வளவு துடிக்கிறானே, கொஞ்சம் நாளும் இவனுக்கு காதுல விழுகுதா பாரு, சரியான காட்டானா இருப்பான் போல” என்று நினைத்துக் கொண்டிருக்க,

பேருந்துக்கு உள்ளே இருந்த நடத்துனர் “ஏப்பா கருப்பு அங்குட்டு கொண்டுட்டு போய் அடியப்பா, நான் ஆள இறக்கிட்டு பஸ்ஸ பத்திரமா கொண்டு போய் ஸ்டாண்ட்ல நிறுத்தணும்” என்று கூறவே, நடத்துனரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனின் காலரை பிடித்து இழுத்துக்கொண்டு சென்றான் கருப்பன்.

 போகும் கருப்பனையும் அவனின் கையில் இருக்கும் அந்த ஆண்டவனையும் பார்த்த மயிலோ,

‘என்ன, இவன் செல்வி அக்கா புருஷன் மாதிரி இருக்கு! அட அவனே தான் நெனச்சேன். இவன் கூத்தியா வீட்டுக்கு போயிட்டு வந்துட்டு திரியும்போதே என்னைக்காவது ஒருநாள் அத்தான் கைல சுக்குவியான்னு இன்னைக்கு அவனுக்கு உசுரு மட்டும் தான் மிஞ்சும்’ என்று நினைத்துக் கொண்டே நின்றிருந்தால் மயில்.

 அதிர்ச்சி மாறாமல் புதிதாக பார்த்த ஆடவனின் மீது தோன்றிய கோபம் கலந்த எரிச்சலோடு படிகளில் இருந்து கீழிறங்கியவள் கருப்பனை பார்த்துக் கொண்டிருக்கவும் மயிலின் அருகில் வந்து நின்ற மலர்

“ஏய் மயிலு யாருடி இவன் சரியான காட்டு பயலா இருக்கான். அந்த ஆளு வழியில அவ்வளவு துடிச்சும் கூட இப்பிடி போட்டு அடிச்சிட்டு இருக்கான் காட்டான்” என்று கேட்டாள்.

கருப்பன் வேட்டை தொடரும்…

💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝

 இன்றைய எபிசோடு குறித்து உங்களின் கருத்துக்களை மறக்காமல் கமெண்ட் செய்யவும் 🙏🏻😊

3 thoughts on “கருப்பன் chapter 4

  • DEEPA V

    மிகவும் அருமை…

    அந்த கவுன்சிலர் கிட்ட கருப்பன் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்..

    அவன் பதவியை வைத்து என்ன வேண்டும் என்றாலும் செய்வான்..

    ஆண்கள் என்றாலே கண்டிப்பாக ஒரு கூத்தியால் வைத்து கொள்ள வேண்டும் போல்..
    செல்வி புருஷன் மாதிரி ஆளுங்களுக்கு கருப்பன் கொடுக்கும்.தண்டனை இனி அந்த ஊரில் யாரும் இது போல் செய்ய கூடாது…

    முதல் அறிமுகம் நாயகன், நாயகி இருவருக்கும் செம்ம போங்க …

    பார்க்கலாம் இனி என்ன நடக்க போகிறது என்று..
    கட்டிய மனைவிக்கு துரோகம் செய்யும் ஆண்களுக்கு மட்டும் அல்ல,அவன் கூட தகாத முறையில் பழகும் பெண்களுக்கும் சேர்த்தே தண்டனை கொடுக்க வேண்டும்

    Reply
    • Idhazhya IsaiPost author

      Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻

      Reply
  • Vini Krishnan

    Super sis… Edhukum karuppan konjam usara irukanum.. Indha vena pona counsiler prblm pannuva… Hero heroin intro super😍…

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!