Skip to content
Post Views: 2,522

கருப்பன் ஆட்டம் 7
Advertisement
மலர் வீட்டிற்குள் வந்ததும் அவள் குடத்தை தூக்கிக் கொண்டு வருவதைப் பார்த்து வாயில் கை வைத்து சிரித்த மயில்,
“உனக்கு ஏண்டி இந்த தேவையில்லாத வேலை, உனக்கு தான் தண்ணி குடம் தூக்கி பழக்கம் இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த மாதிரி வீர சாகசம் எல்லாம் பண்றேன்னு நினைச்சு காமெடி பண்ற?” என்று கூறிய மயிலோ மேலும் சிரிக்க,
Advertisement
Advertisement
இடுப்பில் கைவைத்து அவளைப் பார்த்து முறைத்த மலரோ “நானே செம்ம கடுப்புல இருக்கேன் எதாவது பேசி என்கிட்ட வாங்க கட்டிக்காதடி” என்றாள்.
“கடுப்புல இருக்கியா! எதுக்குடி?” என்று அப்பொழுதும் புன்னகை மாறாமல் கேட்டால் மயில்.
Advertisement
அந்த நேரம் வீட்டிற்குள் அமுதா வரவும் மலரின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு கொள்ளை புறம் அழைத்து வந்திருந்த மலரோ கருப்பன் தன் மேல் வந்து இடித்ததாய் மயிலிடம் கூற, அதனை கேட்ட மயிலோ மேலும் சத்தம் போட்டு சிரிக்க,
“நீ மட்டும் இப்ப சிரிப்பு அடக்கல மவளே என்கிட்ட செத்த சொல்லிட்டேன்” என்று மலர் கோபமாக கேட்க,
“சரி சரி சிரிக்கல” என்று கடினப்பட்டு தனது சிரிப்பை அடக்கினால் மயில்.
“சரியான காட்டான் எப்படி உடம்பு வளத்து வச்சிருக்கான். நான் தான் தண்ணி தூக்கிட்டு வந்ததுல கவனிக்காம வந்துட்டு இருந்தேன். அவன் கண்ணை எங்க முதுகுக்கு பின்னாலயா வச்சிருந்தான். நேரா பார்த்து வர்றது இல்ல, ஒருவேளை வேணும்னு வந்துடுச்சு இடுச்சுருப்பானோ?”என்று அந்த சிறிய விபத்தை பற்றி மிக தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள் மலர்.
“ஏய் நீ வேற கண்டதையும் கற்பனை பண்ணிட்டு திரியாத, என் அத்தான் அந்த அளவுக்கு எல்லாம் சல்லித்தனமான வேலை செய்றவர் இல்ல, அவர் பொண்ணுங்கள திரும்பி கூட பாக்க மாட்டாரு அப்படிப்பட்ட தங்கமான மனுஷன்”.
“ஆமா! நீ ஒருத்தி எப்ப பாத்தாலும் அந்த ஆளுக்கு சர்டிபிகேட் தூக்கிட்டு வந்துருவ!” என்று சடைந்து கொண்டால் மலர்.
“ஏய் உண்மைய தாண்டி சொல்றேன். என் அத்தான் ஒன்னும் அப்படி பண்றவரு இல்ல. இந்த சுத்தப்பட்டு ஊரிலேயே என் அத்தான மாதிரி ஒழுக்கமானவரு யாருமே இல்ல. அப்படி இருக்கும்போது உன்னையே போயி வேணும்னு இடிச்சாருன்னு நீ சொல்லுவ இதை நான் நம்பனுமாக்கும்” என்று மயில் கேட்டாள்.
“என்னமோ பண்ணு போ நான் என்ன சொன்னாலும் நீ ஒத்துக்க மாட்ட” என்றவள் வீட்டிற்குள் சென்று அடுக்கலையில் வேலை செய்து கொண்டிருந்த அமுதாவிடம் வந்தாள்.
“என்னமா வேணும்” என்று அமுதா வாஞ்சையோடு மலரிடம் கேட்க,
அதற்கு மலரோ “எனக்கு ஒன்னும் வேண்டாம்மா உங்களுக்கு ஏதாவது ஹெல்ப் வேணுமா, குடுங்க நான் செஞ்சு தரேன்” என்று கூறினாள்.
அதற்கு அமுதாவோ “இல்லடாம்மா பெருசா ஒன்னும் இல்ல
நீ போய் உட்காரு நைட்டுக்கு இட்டிலியும் சட்டினியும் தான் செய்ய போறேன் உனக்கு வேற எதுவும் வேணுமாம்மா!!” என்று கேட்டார்.
“இல்லம்மா எனக்குன்னு நீங்க சிரமப்பட்டு எதுவும் செய்ய வேணாம் நீங்களும் மயிலும் என்ன சாப்பிடுவீங்களோ நானும் அதையே சாப்பிட்டுக்குறேன்” என்றால் மலர்.
“செஞ்சுட்டு கூப்பிடுறேன் நீ போய் மயிலுகூட உக்காந்து பேசிட்டு இரு” என்று அமுதா இரவு உணவிற்கு வேண்டிய வேலைகளை முடித்துக் கொண்டு வெளியில் வந்தவர்,
“அடியே மயிலு அண்ணே இன்னும் வேலை முடிச்சு வீட்டுக்கு வரல என்னனு ஒரு போன் போட்டு கேளுடி” என்றார்.
அதற்கு மயிலோ “அண்ணே என்ன சின்ன புள்ளையா வந்துரும்மா நீ போய் இட்லிய எடுத்துட்டு வா பசிக்குது, மத்தியானம் கூட எங்கேயுமே சாப்பிடல” என்று குறைபடவும்,
“சரி இரு எடுத்துட்டு வரேன். ஆனா அதுக்கு முன்னாடி அவனுக்கு ஒரு வார்த்தை போன் போட்டு எங்க இருக்கான்னு கேளுடி” என்று அமுதா கூறவும்,
“சரி சரி கூப்பிட்டு கேக்குறேன்” என்று தனது போனை எடுத்தவள்
“கூட பிறந்த ஒருத்தி ஊருக்கு போனாளே! எங்க இருக்கா என்ன பண்றா கிளம்பிட்டாளா? இப்பிடி ஏதாவது ஒரு வார்த்தை போன் போட்டு கேட்டனா உன் ஆசை மவன், இப்பயும் நான் கூப்பிட்டா கூட எடுக்க மாட்டான். எதுக்கு இந்த ஆத்தா தேவை இல்லாத வேலை பார்க்க சொல்லுதோ!!” என்று சடைந்து கொண்டே அழைப்பு விட எதிர்முனையில் மயில் கூறியது போல அழைப்பு ஏற்கப்படவில்லை.
“தெரிஞ்சது தானே! இவன பத்தி தெரிஞ்சும் போன் போட்டேன் பாத்தியா என்ன எதைக்கொண்டு அடிக்கிறது” என்று யோசிப்பதை போல பாவலா செய்து கொண்டே கூற,
“எதுக்கு போன் பண்ண வேலை முடிச்சா நானே வர மாட்டேனா “ என்று வெளியில் இருந்து ஒரு கம்பீரமான ஆணின் குரல் கேட்டது.
அந்த குரல் கேட்கவும் மயிலின் முகம் அஷ்ட கோணலாக மாறவும் வந்திருப்பது யார் என்று ஆர்வமாக பார்த்தாள் மலர். வந்திருந்தது மயிலின் அண்ணன் அமுதாவின் தவப்புதல்வன் அய்யனார்.
அய்யனார் என்பவன் நல்லவனா கெட்டவனா என்று கேட்டால் நல்லவன்பாதி கெட்டவன் மீதி கலந்து செய்தவன்.
கருப்பன் வெளியில் தான் செய்யும் காரியங்கள் தவறாக தெரிந்தாலும் கூட அதன் பின்பு ஏதேனும் ஒரு நல்ல காரியம் ஒழிந்து மறைந்திருக்கும்.
ஆனால் அய்யனாரோ தான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் கூட அதனை துளியும் யோசிக்காமல் மனதில் சிறு அச்சமும் இல்லாமல் செய்து விடும் குணம் படைத்தவன்.
அய்யனார் வீட்டிற்குள் வந்ததும் வீட்டில் இன்னொரு ஆள் இருப்பதை கவனித்து மலரை பார்க்க, அவன் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட மயிலோ,
“இது என்னோட ஃபிரண்டு” என்றால் மயில் முந்திக்கொண்டு. அவள் அவ்வாறு கூறவும் புருவம் சுருக்கி யோசனை செய்ய ஆரம்பித்தான் அய்யனார். அவன் யோசனையின் காரணம் உணர்ந்த மயிலோ
“அது நடக்க இருந்த கல்யாணத்துல இவளுக்கு விருப்பம் இல்ல, அதனால தான் நான் அவளை இங்க கூட்டிட்டு வந்துட்டேன்” என்று கூறவும் சுருங்கிய புருவத்தை விரித்து மயிலை பார்த்தால் அய்யனார்.
பின் சிறிது நேரத்தில் அமுதா தான் சமைத்து வைத்த உணவுகளை எடுத்து வரவும் அய்யனார் முதலில் சாப்பிட்டு முடித்தவுடன் பெண்கள் மூவரும் அமர்ந்து உணவு உண்ண ஆரம்பித்தனர்.
இங்கே பொண்ணுத்தாயி தன் மகனுக்கான இரவு உணவாக கருவாட்டு குழம்பினை செய்து வைத்து விட்டுஅவன் வருவானோ வரமாட்டானோ என்று இரு வேறு யோசனையோடு அமர்ந்திருந்தார்.
அவரின் அந்த யோசனை சரி என்பது போல் கருப்பன் சென்றது தன்னுடைய வாழை தோப்பிற்கும் மாந்தோப்பிற்கும் புளியந்தோப்பிற்கும் தென்னந்தோப்பிற்கும் மத்தியில் மன்சுவரால் சூழப்பட்டு தென்னங்கீற்றால் கூரை மேவப்பட்டு
சிறிதாக இருக்கும் அந்த மண் வீட்டிற்கு தான்.
அவன் பின்னோடு வந்த தர்மன் “டேய் மச்சான் உன்னை ஆத்தா சாப்பிட கூட்டிய்யார சொல்லுச்சுடா என்று கூப்பிட,
“இல்ல நான் வீட்டுக்கு போல நீ ஆத்தா கிட்ட சொல்லிடு எனக்கு சாப்பாடும் வேண்டாம்” என்றான் கருப்பன்.
“கதிரு இப்போ நீ சாப்பிட வர போறியா இல்லையா?” என்று கேட்க,
“நான் சொன்னது மட்டும் போய் சொல்லு, எனக்கு இப்போ சாப்பாடு வேண்டாம்” என்று கட்டன் ரைட்டாக கூறிவிட்டான் கருப்பன்.
பின் அந்த மண் வீட்டிற்குள் நுழைந்து அதில் போடப்பட்டிருந்த கயிற்று கட்டிலில் அமர்ந்த கருப்பனை பார்த்த தர்மன்,
அவன் புருவ முடிச்சவுடன் யோசித்து கொண்டு இருப்பதை உணர்ந்து,
“டேய் மச்சான் என்னடா ஆச்சு ஏதோ
பலத்த யோசனைல இருக்க போல?” என்று கேட்டான்.
அதற்கு கருப்பனோ “யாருடா அந்த புள்ள?” என்று கேட்டான்.
“எந்த புள்ள டா”
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட
என்ன வந்து இடிச்சாலே அந்த பொண்ணு”
“அதுவா! ஊருக்கு புதுசா தெரிஞ்சது மத்தபடி எந்த விவரமும் இன்னும் தெரியல டா இனிமே தான் விசாரிக்கணும்”
“யாரு என்னன்னே தெரியாம அவ எதுக்குடா என்னை காட்டான்னு சொல்றா?” என்று கருப்பன் கேட்க,
தர்மன் மனதிலோ ‘உண்மைதான் சொல்லிருக்கு அந்த புள்ள’ என்று நினைத்துக் கொண்டவன்,
“அது.. அது.. எப்படி மச்சான் எனக்கு தெரியும். நாளை பின்ன அந்த புள்ளைய நீ எங்கேயாவது பார்த்தா கேட்டுப்புடு மச்சான். அந்த புள்ள உனக்கு எதாவது பதில் சொல்லுச்சுன்னா அதை அப்படியே வந்து என்கிட்ட சொல்லு மச்சான்” என்று கூலாக கூறினான் தர்மன்.
“உன்னைய வச்சுக்கிட்டு ஒன்னத்துக்கும் பிரயோஜனம் இல்ல” என்று கருப்பன் சடைந்து கொண்டான்.
“டேய் மச்சான் அத விடுடா நீ ஏண்டா அந்த செல்வியோட புருஷனை போட்டு அந்த அடி அடிச்ச கொஞ்சம் விட்டா அவன் செத்துப் போய் இருப்பான்டா” என்று தர்மன் அவனைப் பற்றி ஆரம்பிக்க,
அதற்கு கருப்பனோ முகத்தில் கடுமை பூசிக்கொள்ள, அவனை ஏறிட்டுப் பார்த்தான் அவனின் பார்வையின் அர்த்தம் புரிந்து கொண்ட தர்மனோ,
“ மொறைக்காதடா, என்றவன் சரி சரி மொறச்சதுதான் மொறச்சுட்ட இப்ப விஷயத்த சொல்லு” என்று கேட்டான்.
“அவன எல்லாம் இன்னுமே கூட பொழந்துருக்கணும், கல்யாணம்னு ஒன்னு பண்ணி, பொண்டாட்டி புள்ளனு ஆயிடுச்சின்னா கண்ட கருமத்தை எல்லாம் விட்டு ஒழிச்சுட்டு பொண்டாட்டி பிள்ளையை கூட சேர்ந்து குடும்ப நடத்தனும்.
இல்ல எனக்கு பொண்டாட்டி வேணாம் புள்ளையும் வேணாம் எனக்கு கூத்தியா தான் வேணும் அப்படின்னு நினைக்கிறவன் எந்த காலமும் ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி இன்னொரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க கூடாது.
நீ மட்டும் வந்து தடுக்காம இருந்திருந்தா இந்நேரம் அந்த நாதாரி பய செத்து இருந்தாலும் ஆச்சரிய பட்றதுக்கு இல்ல”
“டேய் நீ பாட்டுக்கு செத்துருப்பான் அது இதுங்குற அவன் செத்தா, பொறவு அவன் பொண்டாட்டி புள்ளையெல்லாம் நடுத்தெருவுல நிக்குமேடா!” என்று தர்மன் கேட்டான்.
“சோத்துக்கு நடுரோட்டில் நிக்கணுமா!? என்னடா சொல்ற அதுக்கு தான் இருக்கவே இருக்கு நம்ம ஊரு மூச்சூடும் வயக்காட்டு வேலை, இல்ல கைப்புள்ளைய வைச்சுக்கிட்டு பொழுதுக்கும் வயக்காட்டு வேலை பார்க்க முடியாதுன்னா இன்னும் கம்மியான நேரத்துல கவர்மெண்ட்ல இருந்து 100 நாள் வேலை இருக்குல்ல அத பாத்துகுட்டு அப்பிடி ஒருத்தன் இல்லாம நிம்மதியா இருக்க போகுது, எதுக்கு இந்த புள்ள சோத்துக்கு கஷ்டப்பட போகுது?” என்று கருப்பன் யோசித்த விஷயத்தை தர்மனிடம் கூறினான்.
“அது எங்கடா இங்க இருக்கு?”என்றான் தர்மன்.
“ஏன்டா அப்படி சொல்ற? அப்ப நம்ம ஊர்ல 100 நாள் வேலை இல்லையா?” என்று கருப்பன் கேட்க,
“மாசத்துல ஒரு வாரம் தான் வேலை இருக்குது போலடா, ஆனா அதுல வேலை பாக்குறவங்களுக்கும் சரியான சம்பளம் வருது இல்லன்னு சொல்லி எங்க ஆத்தா புலம்பிட்டு இருந்துச்சு” என்று கூறினான் தர்மன்.
“ ஓ அதுலயும் கமிஷன் அடிக்க ஆரம்பிச்சிட்டாங்களா? இருக்கட்டும் அவங்களுக்கு ஒரு பாடம் கற்றுக் குடுக்கணும்டா” என்றான் கருப்பன்.
நீ ஒண்ணு யோசிச்சா அதிலிருந்து யாராலும் பின் வாங்க முடியுமா என்ன, கண்டிப்பா சிறப்பு பண்ணிடலாம் மச்சான்” என்றான் தர்மன்.
கருப்பன் வேட்டை தொடரும்…
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
error: Content is protected !!
Very nice sister ❤️❤️..
அய்யனார் நீ கடவுள் பாதி மிருகம் பாதி என்றால் கன்டிப்பாக இவனால்.
மலர் வாழ்கையில் யில் thollaigal Vara vaaippu ullathu…
Paaru da malar, karuppan iruvarum oruvarai oruvar idiththathai ninaiththu konsi ullanar..
Karuppan ne seivathu konjam kuda sari illai..
Un ammaavai pattri konjam kuda yosikka maattaen aenkiraai ..
Pettra ammaavai mathikka maattaen aenkiraai …
Tharuman karuppanukku jadikku aeththa moodi thaan ..
Kathiyum athan pokkum arumai..
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻
Iyyanar nallavana kettavana… Ivanala malarku prblm varama irundha sari… Karuppan enna da malar ah pathi ketkara… Sisy mayil manasula dharman irukana… Super sis😍😍😍😍😍
Thank you so much 🥰🙏🏻🙏🏻🫶🏻