Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

35. Dayani Shalokshan - ஹார்ட் பீட் திருடன்

ஹார்ட் பீட் திருடன் 01

ஹார்ட் பீட் திருடன் 01

அந்த இராப் பொழுது என்றும்மில்லாதவாறு அமைதியாக இருந்தது. “டேய்… மெதுவாடா, மெதுவா!” மகிஷா தன் மனசுக்குள்ளேயே சொல்லிக்கிட்டா.

அந்தப் பெரிய பங்களாவோட காம்பவுண்ட் செவுத்துல ஏறி நிக்கும் போது, அவளோட ஹார்ட் பீட் ‘லப்டப்’னு இல்லாம, ஒரு ஏ.ஆர். ரஹ்மான் பிஜிஎம் ரேஞ்சுக்கு எகிறிக்கிட்டு இருந்துச்சு. சுத்திப் பார்த்தா ஒரே அமைதி

பௌர்ணமி நிலவு வேறு இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் மகிஷாவோட மனசுக்குள் மட்டும் சின்னப் புயல் அடிச்சுகிட்டே இருந்தது.



Advertisement

மகிஷா பெயருக்கேற்ற மாதிரியே கம்பீரமும் அழகும் அவ முகத்துல இருக்கும் ஆனா அந்தப் பெரிய கண்களுக்குள் ஒரு பெரிய சோகமே ஒளிந்திருக்கும் அவ அநாதைங்கிறது அவளோட அடையாளமா இருக்கலாம் ஆனா அந்த அன்பு இல்லமும். அங்க இருக்கிற குழந்தைகளுக்கும் அவ தான் எல்லாமே.

தாய் தந்தை விபத்தில் இறந்து விட பெண் பிள்ளையை யார் பொறுப்பேற்பது, தந்தையின் வகையில் உறவினரொருவர் அவளை அன்பு இல்லத்தில் சேர்த்து விட்டார். தனது ஆறு வயதில் அன்பு இல்லத்தில் காலடி வைத்தவளுக்ளோ அன்பு இல்லமே எல்லாமாகிப் போனது. தனது பாடசாலைக் கல்வியை அரச பாடசாலையிலேயே நன்றாகக் கற்றவள் ஸ்காலர்ஷிப் கிடைக்கவே அதில் கல்லூரியில் காலடி எடுத்து வைத்தாள்.

அனைத்து துறையிலும் கெட்டிக்காரியாய் இருந்தவள் ஸ்காலர்ஷிப் உதவியில் கல்லூரிப்படிப்பை முடித்தாள். யாரோடும் இலகுவில் பேசாதவள் கல்லூரியில் கரன் நீட்டிய நட்புக் கரத்தைப் பிடித்துக் கொண்டாள்.

Advertisement

கரனின் தாய் நோயினால் இறக்க தந்தை மறுமணம் செய்து கொண்ட நிலையில். தாத்தா பாட்டி உடன் தான் இருக்கிறான் அவர்கள் கிராமத்தில் விவசாயம் செய்து பேரனை படிப்பிக்கின்றனர் கரனும் தன் நிலை உணர்ந்து படிப்பில் முழு மூச்சாக இருந்தான். சனி ஞாயிறு தினங்களில் கடையில் செய்து வருகிறான்.

Advertisement

எப்போதும் தனியாக இருக்க மகிஷாவை கண்டவனுக்கு தன்னையே பார்ப்பது போல் தோன்றும். அன்று கேண்டினில் இருந்து படித்துக் கொண்டிருந்தவள் முன் வந்மர்ந்தான் கரன்.

“ஹாய்” என்றான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு “ஹாய்” என் மெலிதாக  முனுமுனுத்தவள் தனது  வேலையைத்  தொடர்ந்தாள்.

இப்படியே நாட்களும் கடக்க பைனல் ப்ரொஜெக்ட்க்கு கரனும் மகிஷாவும்  ஒரே குழுவில் தெரிவாகியிருந்தனர். மகிஷாவிக்கும். யாரோடும் அவ்வளவாக பழக்கமில்லை, அவள் நடை உடைக்கு ஆரம்பத்தில் கிண்டல் செய்த சந்தர்ப்பங்களும் உண்டு. அதனாலேயே அவளாகவே தன்னைச் சுற்றி வட்டமிட்டு  எட்டியே நின்றாள். அவள் அழகில் சிலர் கல்லூரியில் ப்ரபோஸ் செய்ய அதை மறந்துபடிப்பில் கவனம் செலுத்தினாள். அன்று ப்ராஜெக்ட் தொடர்பான மீட்டிங் நடைபெற இருந்தது மீட்டிங் நடைபெறும் ஹாலிற்கு நுழைந்தவள் பார்வை சுற்றி படரவிட்டவள் கரனைக் கண்டுகொண்டாள்  பின் கரனருகில்  வந்து அமர்ந்தும் கொண்டாள். மெல்ல இருவரும் பேசி பழகி ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருவரும் இணைபிரியாத நண்பர்களாகினர். இருவரும் இழப்பை சந்தித்தவர்கள் அன்பிற்காக ஏங்குபவர்கள் இருவருக்குள்ளும் ஆத்மார்த்தமான நட்பு ஏற்பட்டிருந்தது.

Advertisement

கல்லூரியில் இறுதி பரிட்சை முடிவடைந்ததும் நண்பர்கள் இருவரும் கேண்டினில் சந்தித்துக் கொண்டனர். “மகி என்னாச்சு ஏன் டல்லா இருக்க?” என கரன் கேட்க “எக்ஸாம் முடிஞ்சிடுச்சு, இனி தங்க இடம் வேலை பார்க்கணும் என்றாள். “ஏன் ஹோம்ல” என கரன் இழுவையாய் கேட்க ” அது அங்க என்னப் போல எவ்வளவு பேர் இருக்காங்க அதோட  காலேஜ் முடிஞ்சதும் வேலை தேடி போய. போயிடுவாங்க முதல்ல போல ஹோமுக்கு டொனேஷன் கூட கிடைக்கிறது குறைஞ்சிடுச்சு. இங்கிருந்து வெளியேறினவங்க சிலர் உதவி செய்வாங்க அவ்வளவுதான் என்றாள் சோர்வாக.

கரணுக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை “பார்க்கலாம் காலேஜ் இன்டர்வியூ எப்ப?” “வார செவ்வாய்க்கிழமை” “ஓ நல்லா ப்பிரிப்பேராகு வேலை கட்டாயம் கிடைக்கும்” என்றான்.

இப்படியே சில நாட்கள் சென்றிருக்கும் அன்பு இல்லத்தின் மரத்தின் கீழ் இருந்த மதிஷாவின் அருகில் வந்தர்மந்தார். அவ்வில்லத்திற்கு. பொறுப்பான தேவியம்மா. “மகிஷா” என அவர் அழைக்க அவர் குரலில் தன்னுணர்விற்கு வர “என்னம்மா யோசனை” என கேட்டவருக்கு தெரியும் தானே மகிஷாவின் மனநிலை  “இங்கிருந்து எங்கம்மா போறது, உங்களையெல்லாம் விட்டுட்டு எனக் கேட்க அவரோ அவளின் தலையை வருடியவர். “என்னம்மா செய்றது வேலை கிடைக்கும் வரை இங்கேயே இருக்கலாம்” என்றார். அவளுக்கும் தெரியுமே இல்லத்தின் நிலை

மறுநாள் காலையில் நேரத்துக்கு குளித்தவள்மெல்லிய நீல நிற சேலையில் தயாராகி தனது கல்வி சான்றிதழ் என அனைத்தையும் எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு புறப்பட்டாள். கல்லூரிக்குள் நுழைந்தவள் இன்டர்வியூ நடைபெறும் இடத்திற்குச் செல்ல ஏற்கனவே அங்கு சில மாணவர்கள் அமர்ந்திருந்தனர் மகிஷாவும் அவர்களுடன் இணைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் கரனும் அங்கு வந்து சேர இன்டர்வியூவும் ஆரம்பமானது.

ஒவ்வொருவராக உள்ளே சென்றனர் மகிஷாவின் பெயரை அழைக்க அவளும் ஒரு படபடப்புடன் தான் உள்ளே சென்றாள். ” நடுநாயகமாக இருந்த பெண்மணி “உட்காருங்க” என்றதும் மகிஷாவும் இருக்கையில்  உட்கார்ந்தாள்.  தொடர்ந்து அவர்களின் கேள்விகளுக்கு எல்லாம் சரியாக பதில் அளிக்க அவளின் ஃபைனல் ப்ராஜெக்ட்  பார்த்தவர்களுக்கு மகிஷாவின் திறமையை புரிய. அவ்விடத்திலேயே அப்பாயின்மென்ட் ஆடரைக் கொடுத்தனர். அவளுக்கும் அப்படி ஒரு மகிழ்ச்சி அடுத்து சென்ற கரனும் அப்பாயின்மென்ட் ஆர்டருடன் வர இருவருக்கும் மகிழ்ச்சியின் உச்சம். சடுதியில் மகிஷாவிற்கு இல்லத்தின் எண்ணம் வர அவளின்  முகமும் மாறியது. அடுத்து இரு நாட்கள் வேலையில் ஜாயின் பண்ண சொல்லியிருந்தனர் அக் கடிதத்தில்.

கரனிடம் விடை பெற்று இல்லத்திற்கு வந்தவள் தேவியம்மாவிற்கு முன் மௌனமாக நின்றாள் அவரும் அவளையை நோக்க கண்களில் ஒருவித கவலை குடி கொள்ள அப்பாயின்மென்ட் ஆர்டரை கொடுத்தாள் அவரும் அதைப் படித்துப் பார்த்தவர்.   வாழ்த்துக்கள் மகிஷா என அவளை அனைத்து வாழ்த்தினார்.

“சென்னயில லேடிஸ் ஹாஸ்டலுக்கு ஏற்பாடு செய்றன்  ரெடி ஆகுமா” என்றார். அவளோ அவரை அனைத்து அழ அவர் கண்களுக்கு இருபத்தி இரண்டு  வயது பெண் அடம் பிடிக்கும் சிறு குழந்தையைப் போல் தான் தெரிந்தாள்.

அன்றைய நாள் இல்லத்தில் பிள்ளைகளுடனேயே கழித்தாள். அடுத்த நாளும் மெல்லப் புலர தன்னுடைய பொருட்களுடன் தயாராக இருந்தாள் சென்னை செல்வதற்கு. அவளை இல்லத்துப் பிள்ளைகள் கண்ணீருடன் வழியனுப்பினர்.

தனது புதிய வாழ்க்கையைத் தேடி பஸ்ஸில் சென்னையை நோக்கி புறப்பட்டாள். பஸ் மெல்ல மெல்ல  வேகம்மெடுத்தது.

மகிஷாவுக்கு மனதெல்லாம் ஒரு வித பயம். சில மணி நேர பயணத்தில் பின் சென்னை வந்தடைந்தவள் ஒரு ஆட்டோவை பிடித்து. தேவியம்மா கூறிய  லேடிஸ் ஹாஸ்டலுக்கு சென்றாள்.

அங்கு உள்ள பொருப்பாளரிடம் தேவியம்மா அனுப்பியதாக சொல்ல அவரும் அவளுக்கு  அறையொன்றை ஏற்பாடு செய்து கொடுத்தார். அவளது அறை வந்த ஹாஸ்டலுக்கு பொறுப்பான பெண்மணியோ “பொண்ணு உன் பேர் என்ன அவளோ. மெதுவாக “மகிஷா” என்றாள் “ஓகே மகிஷா சாப்பாடு கீழ கேண்டில்ல எடுக்கலாம், இல்ல நீ சமைக்கிறதுனாலும் சரி, இரவு எட்டு மணியோட கேட்ட லாக் பண்ணிடுவன் அதுக்கு முதல் ஹாஸ்டலுக்கு வந்துடு, இங்க காலேஜ் பொண்ணுங்களும் இருக்கிறாங்க, அதோட மாசம் மாசம் சரியா ஐந்தாம் தேதி  ஹாஸ்டல் வாடகையை தந்துடனும். மொதமாத வாடகையே தேவியம்மா அக்கவுண்டுக்கு போட்டுட்டாங்க. இதான் என் நம்பர் எதுனாலும்  கூப்பிடு” என காரணமாக பேசியபடி வெளியேறினார்.

அவர் சென்றதும் புயல் அடித்து ஓய்ந்தது போல் இருந்தது. ‘சாஃப்ட்டா பேச தெரியாது போல’ என தனக்குள்ள எண்ணியவள் அறையோடு ஒட்டி இருந்த கதவை திறக்க அது  குளியலறையாக இருந்தது. தனது பையை வைத்தவள் உடையை எடுத்துக் கொண்டு குளியலறை நுழைந்து கொண்டாள் பயணக் களைப்பு தீர குளித்து வந்தவளுக்கு பசி எடுக்க. கேண்டின்கு வர அங்கு உணவு காலியாகவும் நிலை. தேவி அம்மா தந்த ஆயிரம் ரூபாய் பணம் மட்டுமே இருந்தது. இரண்டு பூரியை வாங்கி உண்டவள் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

பயணக் களைப்பு,தூக்கம் கண்களைச் சுழற்ற அப்படியே தூங்கியவள் விடியற்காலையில் தான் கண் விழித்தாள்

குளித்து தயாராகி வெளியே வந்தவள் ஹாஸ்டல் பொறுப்பான பெண்ணிடம்” சாஃட் டெக்  கம்பெனி  தெரியுமா?” எனக் கேட்க அவரும்  அங்கு வெளியேறிய மற்றோரு பெண்ணிடம்   “சுஜா கொஞ்சம் வாமா இந்த பொண்ணு ஏதே அட்ரஸ் சொல்லுது எங்கன்னு பாருமா” என அவரும் நகர. சுஜா என்ற பெண்ணோ மகிஷாவைப் பார்க்க மகிஷாவும் “சாஃப்ட் டெக் கம்பெனி “என்றாள். அப் பெண்ணோ “அங்க தானா வேலை செய்றீங்க நானும் அந்தப் பக்கம் தான் போகனும் வாங்க என்றாள். இருவரும் பேசியபடி பஸ் ஸ்டாண்டிற்கு வந்தனர். :நூற்றில் பத்து இதுல போனா கடைசி ஸ்டாப் உங்க ஆஃபிஸ் தான்” என்றாள் சுஜா. சிறிது நேரத்தில் பஸ்ஸூம் வர இருவரும் அதில் ஏறினர். ஒரு பதினைந்து நிமிடம் பயணம் தான் பஸ்ஸூம் கடைசி நிறுத்தத்தில் நிற்க இருவரும் பஸ்ஸில் இருந்து இறங்கிக் கொண்டனர்.

பஸ்ஸில் இருந்து  இறங்கியவளுக்கு  கண்ணில் தென்பட்டதென்னவோ  சாஃப்ட் டெக் என நியான் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட ஐந்து அடுக்கு கட்டடம் தான் கட்டடத்தின்  முன் வந்து நின்றவள்  ஆச்சரியமாக விழி விரித்துப் பார்க்க. போவோர் வருவோர் எல்லாம் அவளையே வித்தியாசமாக பார்த்துச் சென்றனர். அவளும் கட்டடத்தினுள் நுழைந்து முன் கதவைத் திறந்து  உள்ளே செல்ல, ஏசியின் குளுமை முகத்தில் ஜில் என்று அடித்து.

ஹை ஹீல்ஸ் சப்தமிட குட்டைப் பாவாடையிலும், ஷர்டும்,  ஜீன்ஸிலும் பெண்கள் அங்குமிங்கும்   நடமாடிக் திரிந்தனர்.  காலைப் பொழுதென்பதால் சற்றுப் பரபரப்பாக இருந்தது.

ரிஷெப்சனில் தனது அப்பாயின்மெண்ட் ஆடரைக் கொடுக்க அதனைப் வாங்கிய அப் பெண்ணோ மகிஷாவை ஏற இறங்கப் பார்த்தாள். மகிஷாவோ தனது நீண்ட கூந்தலை பின்னலிட்டு இருப்பதில் சற்று  நல்லாதான சுடிதாரை அணிந்திருந்தாள்.

“செகன்ட் ப்ளோர்ல ரெயினிங் ஏற்பாடு  பண்ணிருக்கு அங்க போங்க” என்றாள் ரிஷப்சனிஸ்ட். மகிஷாவும்  லிஃப்ட்டை நோக்கிச் செல்ல அங்கு கரன்  நின்றிருந்தான். அப்போது தான் மகிஷாவிற்கு  சற்று நிம்மதி படர்ந்தது இருவரும் பேசியபடி இரண்டாம் தளத்திற்கு வந்தனர்.

தங்களைப் போல் தெரிவு செய்யப்பட்ட சிலர் அங்கு இருக்க அவர்களுடன் இணைந்து கொண்டனர். சிறிது  நேரத்தில் அவர்கள் வேலை பற்றியும் கம்பனி பற்றியும் பேசிய அக் கம்பனி முகாமையாளர் அனைவருக்கும் வாழ்த்தையும்  தெரிவித்து விடைபெற  அனைவருக்கும் பயிற்சிகள் வழங்கப்படத் தொடங்கியது.

அதன் படி  அவர்கள் ஒவ்வொரு குழுவில் இனைக்கப்பட்டனர் கரனும் மகிஷாவும் வேறு வேறு குழுக்களில் இனைந்தனர்.உணவு இடைவெளியில் மட்டுமே அவர்களால் அலுவலகத்தில் பேச முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!