Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல்❤️ 7

அங்கு ஹாலில் அமர்ந்து இருந்த அருளை கண்டுகொள்ளாமல் ஓர பார்வை பார்த்து கொண்டே அவனை தாண்டி சென்று அறைக்குள் நுழைந்து கொண்டாள் வானதி…. அவளின் ஓர பார்வையில் விழுந்த அருள் மொத்தமாக விழுந்துவிட்டான்…

அறைக்குள் இருந்தவள் அவனை நான்கு வருடம் கழித்து பார்த்த சந்தோசத்தில் முகத்தில் புன்னகையுடன் அனைத்தும் செய்து கொண்டு இருந்தாள்… உள்ளே இருக்கும் பாத்ரூமில் ஒரு காக்கா குளியல் போட்டு விட்டு அவசரமாக கைக்கு கிடைத்த குர்த்தி மற்றும் பாண்ட் போட்டு கொண்டு வெளியே வந்தாள் வானதி….



Advertisement

எப்போதும் பள்ளி விட்டு வந்தால் நைட்டி தான் போட்டு கொள்வாள்… ஆனால் தற்போது அருள் இருப்பதால் குர்த்தி போட்டு கொண்டாள்…. ஆனால் அருள் அவளை இந்த உடையில் கூட கண்டது இல்லை….  ஸ்கூலுக்கு சுடிதார் தான் அணிந்து கொண்டு சென்றாலும் இந்த மாதிரி அவளை குர்த்தி போட்டு எல்லாம் அவன் கண்டது இல்லை…

Advertisement

அவள் பள்ளியில் வரும்போது அணிந்து வந்த சேலையில் மயங்கியவன் அவளை இந்த குர்த்தியில் மேலும் மயங்கி வேண்டுமென்றே அவள் வரும்போது அவள் அழகில் மயங்கியத்தை போல் செய்தவனை பார்த்து காண்டாகி அங்கு இருந்த பொம்மையை எடுத்து அவனை நோக்கி வீசி இருந்தாள் வானதி…

Advertisement

ஏற்கனவே அவன் மேல் கோவமாக இருந்தாள் வானதி… அவன் மணப்பெண் யார் என்று ஒழுங்காக கேட்டு இருந்தால் இந்த கல்யாண ஏற்பாடே தேவை இல்லை என நினைத்தாள்… ஆனால் இவன் தேவி என்ற பெயரை மட்டும் கேட்டு சம்மதம் கூறி கல்யாணம் நடைபெற வேண்டிய நேரம் வரை வந்து விட்டது…. ஒருவேளை கல்யாணம் நடந்து இருந்தால் என்ன ஆகி இருக்கும் என கோவத்தில் இருந்தால் அவள்…

Advertisement

அவனை தற்போது பயங்கரமாக முறைத்து கொண்டு இருந்தாள் வானதி…. அவளுக்கு டீ வைக்க செல்லும் போது அவனுக்கு பிடித்த சுக்கு ஏலக்காய் தட்டி போட்டு அவன் சுவைக்கு ஏற்ப சக்கரை கொஞ்சம் அதிகம் போட்டு டீ வைத்து அவன் முன் டப் என்று வைத்தாள் வானதி….

டீயின் வாசத்திலேயே  அவள் எவ்வாறு வைத்து உள்ளாள் என தெரிந்து கொண்டு அவன் முகத்தில் இருக்கும் புன்னகை மேலும் கூடியது…. எதுவும் பேசாமல் டீயை எடுத்து குடித்து விட்டான்….

இவர்கள் குடித்து கொண்டு இருக்கும் போதே “அக்கா…..” என்று கத்தி கொண்டே வந்தாள் பாரதி…. “அக்கா நீ சொன்ன மாதிரியே அத்தானுக்கு கல்யாணம் நடக்கலயாம்…. அத்தானே கல்யாணத்தை நிறுத்திட்டாங்கலாம்…. பாட்டி சொல்லிச்சு… எப்படி க்கா நீ கரெக்டா சொன்ன…. நிஜமாவே சூப்பர் லவ் க்கா உங்க லவ் ….” என்று கூறிக்கொண்டே வந்தவள் அருளை பார்த்து முழித்து அவனை பார்த்து இளித்து வைத்தாள்…..

வானதியை ஒரு பார்வை பார்த்துவிட்டு “ஹீ ஹீ அத்தான்… எப்படி இருக்கீங்க….. நீங்க பேசுங்க..  என்னை பாட்டி கூப்பிடுற மாதிரி இருக்கு… நான் அப்பறம் வரேன்..  பாய் க்கா….. ” என்று படபடவென கூறிவிட்டு சிட்டாய் பறந்து விட்டாள் அவள்…. பாரதி போவதை பார்த்து தலையிலேயே அடித்து கொண்டாள் வானதி …

வானதி அங்கு கீழே அமர்ந்து இருக்க அவள் முன் சென்று மண்டியிட்டு அமர்ந்தான்… அவளின்  கையை பிடித்து “சாரி குட்டிமா” என்று கூறினான்….

அவன் பிடித்து இருந்த கையை இழுத்து அவன் கன்னத்திலேயே சப்பென்று அடித்தாள்…. அருள் என்னவோ மெடல் வாங்குவதை போல் இன்னொரு கன்னத்தையும் காட்டி நின்றான்…  அவள் மாறி மாறி இரண்டு கன்னத்திலும்  அறைந்து விட்டு அவன் நெஞ்சிலே சாய்ந்து விட்டாள்….

எல்லாம் ஒரு நிமிடம் தான் பின் அவன் சட்டை பையில் இருந்து போனை எடுத்து “எனக்கு உன் மேல இன்னும் கோவம் போகல… ஒழுங்கா வெளிய போயிடு…. நானே உங்கிட்ட பேசனும்னு தோணுனா வரேன்” என்று டைப் செய்து கூறிவிட்டு அறைக்குள் சென்று கதவை அடைத்து கொண்டாள்…..

ஐந்து நிமிடம் சத்தமே இல்லை…. அவன் போய் விட்டானா என்று கதவை திறந்து பார்த்தவளை இழுத்து அணைத்து உச்சியில் முத்தமிட்டு விட்டு “லவ் யூ குட்டிமா” என்று கூறிவிட்டு வெளியேறினான்……

அவனின் செயலில் சிறிது புன்னகை வந்தாலும் அவன் மேல் இன்னும் கோவத்தில் தான் இருந்தாள்…. அதை அவன் தான் சமாதானம் செய்ய வேண்டும்….

***********************************************

மேலும் ஒரு வாரம் சென்று இருக்க ரஞ்சி வானதியை அழைத்து வீட்டுக்கு வர கூறி இருந்தாள்… அன்று ஞாயிற்று கிழமை பள்ளி விடுமுறை என்பதால் காலையிலேயே வர கூறி இருந்தாள் ரஞ்சி.. அவள் வரும் போது பாரதியையும் அவள் பாட்டியையும்  வர கூறி இருந்தாள்…..

காலையிலேயே மூவரும் வந்து இருக்க தடபுடலாக காலை உணவு முடிந்தது…. அனைவரும் சாப்பிட்டு முடித்து இருக்க அப்போது தான் அருள் வந்தான் அங்கு…  இன்னும் பாட்டியும் வேலனும் அவனிடம் பேசவில்லை….

ரஞ்சி அவனிடம் “வா ண்ணா சாப்பிடு”  என்று கூப்பிட்டாள்… அவன் வேண்டாம் ஏற்கனவே சாப்பிட்டு விட்டேன் என கூறி விட்டான்…..

சரி என அவளும் விட்டுவிட்டு மதிய சமையலுக்கான வேலையை பார்க்க சென்றாள்… வானதியும் அங்கு தான் இருந்தாள்…. அவன் முகத்தை பார்த்துவிட்டு உள்ளே சென்று அவன் சாப்பிட இட்லி மட்டன் குழம்பு மட்டன் வறுவல் என அனைத்தும் வைத்து எடுத்து வந்தாள்……

வந்தவள் தேவாவை நோக்கி அவனை சாப்பிட சொல்ல சொன்னாள்…. அருள் எதோ ஒரு யோசனையில் சோபாவில் சாய்ந்து கண் மூடி இருந்தான் …

தேவா அவனிடம் சென்று அவன் தோள் தொட்டு “அண்ணா சாப்பிடு” என்று கூறினான்… “வேண்டாம் டா சாப்பிட்டேன் ஏற்கனவே…..”  என்று அவன் கூறி கொண்டு இருக்கும் போதே அவன் முன் ஒரு கை இட்லியை பிய்த்து குழம்பில் தொட்டு அவனுக்கு ஊட்ட நீட்டியது….

அதை பார்த்து அவனுக்கு கண்ணீர் தான் வந்தது… கடைசியாக அவன் அப்பா அவனுக்கு ஊட்டி விட்டது தான்…. இப்போது வானதி ஊட்ட முற்படும் போது கண்கள் தான் கலங்கியது….

இதற்கு முன் அவளும் சிறு பிள்ளை…. ஆனால் தற்போது அவனின் ஆசை அவளுக்கு புரிந்தது… அது மட்டும் இல்லாமல் அவன் எதையோ நினைத்து தற்போது கலங்குகிறான் என்று புரிந்தது….

அவன் எதுவும் கூறாமல் அவள் ஊட்ட ஊட்ட சாப்பிட்டான்…. இட்லி காலி ஆவதை பார்த்து ரஞ்சிக்கு கண் காட்டினாள்… அவளும் இட்லி எடுத்து வந்து வைத்தாள்…. அருள் வயிறு நிரம்பியவுடன்  அவனே போதும் என கூறும் வரை வானதி ஊட்டினாள்…..

அவள் கை கழுவ பின் பக்கம் செல்லும் போது அவனும் அவள் பின் சென்றான்…. யாரும் எதுவும் கண்டுக்கவில்லை…. கை கழுவி விட்டு தன் பின் வந்தவனின் வாயை துடைத்து விட்டு அங்கிருக்கும் செடிகளை பார்த்து கொண்டு இருந்தாள்…

அவளை பின் இருந்து அணைத்து “குட்டிமா திரும்பியும் ரெண்டு வருஷம் துபாய்க்கு கூப்பிடுறாங்க….  என்ன பண்றது தெரியல…. சேமிப்பு எல்லாம் இருக்கு தான்.. ஆனா நான் இங்க வந்து ஒரு சூப்பர் மார்க்கெட் திறக்கலாம்னு தான்  வந்தேன்… ஆனா இருக்குற காசு பத்தாது…. உடனே நகையை எடுக்காத குட்டிமா… ( இந்த ஒருவாரத்தில் அவன் அவளிடம் வாங்கிய நகையை குடுத்து இருந்தான் ).. ரஞ்சிக்கு தான் ஜாதகத்துல சீக்கிரம் பண்ணணும்னு கல்யாணம் காலேஜ் முடிச்சதும் பண்ணியாச்சு…. ஆனா உனக்கு இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும் டா…. நானும் துபாய் போயிட்டு ரெண்டு வருஷத்துல வரேன்… அப்பறம் நாம ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணலாம்… சூப்பர் மார்க்கெட்டும் ஸ்டார்ட் பண்ணலாம் நீ என்ன சொல்ற குட்டிமா” என்று கேட்டான்…..

சிறிது நேரம் யோசித்தவள் முன்பக்கம் திரும்பி அவனை அணைத்து கொண்டு சட்டை பையில் இருந்து போனை எடுத்து “நீ சொல்றது சரி மாமா…. நீ போயிட்டு வா…. உனக்காக நான் எப்பயும் இருப்பேன் மாமா…. ” என்று டைப் செய்து காட்டினாள்….

அதை படித்ததும் அப்டியே அவளை இறுக்கி அணைத்து நெற்றியில் இதழ் பதித்து விட்டு மீண்டும் மென்மையாக அணைத்தான்…. சிறிது நேர மௌனத்திற்கு பிறகு “நீ போ குட்டிமா… நான் கொஞ்ச நேரம் இங்க இருந்துட்டு வரேன்…. நான் துபாய் போறது எல்லார் கிட்டயும் சொல்லிடு” என கூறி அனுப்பி வைதான்….

அவளும் உள்ளே சென்று டைப் செய்து வேலனுக்கு காட்டினாள்…. முதலில் வேண்டாம் என கூறியவர்கள் பின் ஒத்துக்கொண்டனர்….

மதிய விருந்தும் ஏற்பாடு ஆகியது…. அனைவரும் சாப்பிட்டு முடித்து ஹாலில் உட்கார்ந்து பேசி கொண்டு இருந்தனர்…. அப்போது ஐஸ்கிரீம் வண்டி அங்கு வந்தது…. அனைவருகும் வேலன் வாங்கி கொடுத்தான்…. வானதி அமைதியாக இருந்தாள் எதுவும் கேட்காமல் அதை பார்த்து வேலன் ” உனக்கு என்ன வேணும் பாப்பா” என்று கேட்டான்… அவன் கேட்டவுடன் பதில் அருளிடம் இருந்து வந்தது…. வானதியிடம் பேசியதில் தெளிவுற்று அவனின் குறும்புதனம் வெளியில் வந்து இருந்தது…..

“மச்சான் எனக்கும் உன் தங்கச்சிக்கும் குல்பி சொல்லுடா…. உனக்கு ஓகே தானு குல்பி” என்று வேண்டும் என்றே கத்தி கூறினான் அருள்….

அதை கேட்டு வானதியும் வேலனும் முறைக்க ரஞ்சி வாயை பொற்றி சிரித்தாள்…. ஏன்னென்றால் சிறு வயதில் வானதி அதிக குல்பி சாப்பிடுவாள்… அதனால் அவளை கேலி செய்ய குல்பி என்று தான் அழைப்பான் அருள்… தற்போது அப்படி கூப்பிடுவதால் தான் வேலன் வானதி இருவரும் அவனை முறைத்தனர்…..

அவன் குல்பி வாங்கி சாப்பிடும் போதும் ரஞ்சியிடம் “ரஞ்சி குல்பி ரொம்ப சூடா இருக்கு தெரியுமா” என்று நக்கல் குரலில் கேட்டான்.. அதை கேட்டு கோவப்பட்டு  வானதி அவனை அடிக்க அவனை நோக்கி ஓடினாள்….. அவனும் அவள் வருவதை பார்த்து ஓடினான்…. சிறியவர்கள் மூவரும் அவர்களை நோக்கி ஓடினர்…. பாரதியும் யுகேனும் அருளை காக்க ஓட தேவாவோ அவனை பிடிக்க ஓடினான்…..

அத்தி அத்திக்கா அத்தை மடி மேலே    ஆடி கிடந்தால் சுகமல்லோ

தத்தி தத்திக்கா தட்டை மொழி பேசும் தங்கக்கிளிகள் நாமல்லோ

நாங்கலெல்லாம் ஒருயிர்தான்

நடந்துவந்தால் ஒர் நிழல் தான்

நாம் சிரித்தால் மெல்லிசைதான்……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!