ஒரு வழியாக சண்டையும் கொஞ்சலும் காதலும் சீண்டலுமாக மேலூர் வந்து சேர்ந்து இருந்தனர்…. நேராக வானதி வீட்டிற்கு தான் சென்றனர்… வானதி குளிக்க செல்ல அருள் தாயம்மா பாட்டியை கையோடு வெளியில் இருக்கும் திண்ணைக்கு அழைத்து வந்து “கிழவி வானுவை அவ பேச முடியாதுனு எதோ பேசி குழப்புனாங்களா… குழந்தை அப்படி தான் பிறக்கும் அந்த மாதிரி…. உண்மை மட்டும் சொல்லு” என்று தீவிரமாக கேட்டான் அருள்…
அவரோ “நான் பெத்தேனே அந்த சிறுக்கி தான் பேசியிருக்கு…. அதை பாத்துட்டு ஒருத்தி வந்து சொன்னா…. இவ அழுட்டுட்டே வீட்டுக்கு வந்தா… எனக்கு வந்தது பாரு கோவம்…. போய் அந்த சிறுக்கியை நாலு அடி அடிச்சிட்டு உன் விஷயத்துல தலையிடுறோமோ… நீ மட்டும் ஏன் எங்க விசயத்துல மூக்க நுழைக்கறனு கேட்டு திட்டிட்டு வந்துட்டேன்…. நீ எதுவும் பண்ணாத… நான் பாத்துக்குறேன் அவள” என்று கூறி சென்றுவிட்டார் பாட்டி…
நாயகியின் மேல் கோவம் வந்தாலும் பாட்டி அடித்து விட்டு வந்ததால் அப்டியே விட்டுவிட்டான்…. அதன்பின் நாட்கள் அனைவர்க்கும் சந்தோசமாக நகரந்தது….
யுகேனும் பாரதியும் அவரவர் கல்லூரியில் பழகி விட்டனர்…. இரண்டு மாதம் முடிந்து இருக்க பாரதி வாரத்தில் ஒரு நாள் வந்து செல்வாள்…. யுகேன் ஒரு முறை வந்து சென்று இருந்தான்….
அந்த நள்ளிரவு நேரத்தில் ரஞ்சிக்கு பிரசவ வலி ஏற்பட்டு இருந்தது….வேலுவின் பெற்றோர்கள் வெளியூர் சென்று இருக்க ரஞ்சியும் வேலுவும் மட்டுமே வீட்டில் இருந்தனர்…. அவள் அழுகையை பார்த்து வேலு பயந்துவிட்டான்….
பின் ரஞ்சியே தன்னை மீட்டு கொண்டு அவனை தைரிய படுத்தி வானதிக்கும் பத்மினிக்கும் அழைக்க கூறினான்….
வானதி கேட்டவுடன் உடனே வந்துவிட்டாள்… பாட்டிகள் இருவரும் வேலுவின் பெற்றோருடன் தான் சென்று இருந்தனர்….
பத்மினியும் அருள் மற்றும் தேவாவுடன் வந்து இருந்தனர்…. வானதி ஹாஸ்பிடல் செல்ல தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து வைத்து இருந்தாள்….
அருள் காரை எடுக்க வேலு அவளை தூக்க முற்பட்டான்… ஆனால் அவன் கை நடுங்கியது… வானதி அவனை தடுத்து விட்டு தேவாவை தூக்க கூறினாள்….
தேவாவும் அவளை தூக்கி காரில் அமர வைத்துவிட்டு பைக்கை எடுத்தான்…. காரில் அருள் காரோட்ட வேலு ரஞ்சி கையை பிடித்து அவள் அருகில் அமர்ந்து கொண்டான்…. அவன் பயந்த முகத்தை பார்த்து ரஞ்சி அவள் கத்துவதை நிறுத்திவிட்டு பல்லை கடித்து வலியை பொறுத்தாள்… பத்மினி முன்னே அமர்ந்து கொண்டார்…
வானதி தேவாவுடன் பைக்கில் ஏறிக்கொண்டாள்… அடுத்த பத்து நிமிடத்தில் மேட்டுரில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்….
டாக்டர் செக் செய்துவிட்டு குழந்தை பிறக்க இன்னும் நேரம் ஆகும் என்று கூறிவிட்டார்…
அடுத்த ஒரு மணிநேரத்தில் பிரசவ வலி நன்றாக எடுத்து லேபர் வார்டுக்கு ரஞ்சி அழைத்து செல்லப்பட்டாள்….. உள்ளே சென்ற ஐந்து நிமிடத்தில் வேலு ரஞ்சியின் குட்டி இளவரசி இவுலகத்தை அடைந்து இருந்தாள்….
வேலு மிகவும் பயந்து போய் விட்டான்…. வானதி தான் அவன் அருகில் அமர்ந்து சமாதானம் படுத்தினாள்…. அருள் மருத்துவமனை வந்ததும் வேலுவின் அப்பாவிற்கு அழைத்து கூறிவிட்டான்…
உடனடியாக அங்கு வர முடியாது என்று கூறிவிட்டு காலை அங்கு இருப்போம் என்று கூறி வைத்து விட்டார்…
அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறையின் முதல் வாரிசு… வேலுவிற்கு பெண் குழந்தை தான் வேண்டும் என்று ஆசை இருந்தது… அதே போல் இளவரசி பிறந்தவுடன் மிகவும் சந்தோசம் அடைந்து இருந்தான்….
ஆனால் ரஞ்சி வலியில் துடித்ததை பார்த்து மிகவும் பயந்து போய் இருந்தான்… அவனுக்கு அவளிடம் பேச வேண்டும் முதலில்….
குழந்தையை எடுக்க வந்து அவனிடம் கொடுக்க அவனோ வானதியை கை காட்டினான்.. அவள் திகைத்து நின்று விட்டாள்…
பத்மினி எந்தவித கோவமும் இன்றி சந்தோசமாக அதை பார்த்தார்.. வானதி திகைத்து நிற்பதை பார்த்து வேலு அவளிடம் “வானு குட்டி பாப்பாவை வாங்க மாட்டியா நீ வாங்கு… உன் மருமகளை முதல்ல வாங்கு” என்று கூறினான்….
அவள் கண்களில் நீருடன் சந்தோசமாக குழந்தையை வாங்கினாள்… வாங்கியவள் குழந்தைக்கு வலிக்காமல் நெற்றியில் முத்தமிட்டாள்… அதை தேவா அழகாக போட்டோ எடுத்தான்…..
அருள் குழந்தையுடன் நிற்கும் தன்னவளை மெய் மறந்து நின்று இருந்தான்…. குழந்தையை அனைவரும் கொஞ்சிவிட்டு செவிலியர் உள்ளே கொண்டு சென்றார்…
சிறிது நேரம் கழித்து ரஞ்சியை பார்க்கலாம் என்று செவிலியர் கூறியவுடன் வேலு வேகமாக உள்ளே சென்றான்….
சோர்வுடன் படுத்து இருந்தவள் வேலுவை பார்த்து புன்னகைத்தாள்… அவள் அருகில் வேகமாக வந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டான்….
“பாப்பாவை யார் முதல்ல வாங்குனா மாமா…”என்று கேட்டாள் ரஞ்சி….
“நீ சொன்ன மாதிரி உன் அண்ணி தான் வாங்குனா போதுமா… தேவா போட்டோ எடுத்தான் வந்த உடனே வாங்கி பாரு” என்று அவளின் நெற்றி உரசி கூறினான்…
பின் அவளிடம் “இன்னும் வலிக்குதா டா உனக்கு…. ரொம்ப கஷ்டமா இருந்ததா…” என்று கண்ணீர் வலிய கேட்டான்…
அவன் கண்ணீரை துடைத்து விட்டு “வலி எல்லாம் இல்ல மாமா…. இது எல்லாம் ஒரு வித சந்தோசம் தான் தெரியுமா… நம்ம பாப்பா வெளியே வர அப்ப எப்படி சந்தோசமா இருந்தது தெரியுமா…. என் மாமாவோட ரத்தம் என் வயித்துல ஒரு உயிரா வளர்ந்து வெளிய வரப்ப எவளோ சந்தோசமா இருந்தது… அது எல்லாம் நினச்சா இது எல்லாம் வலியே இல்ல… பாப்பாவோட குரலை கேட்டதும் வலி எல்லாம் பறந்து போச்சு” என்று கண்ணை சிமிட்டி கூறினாள்…..
அவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு அவள் கையை பிடித்து அமர்ந்து விட்டான்… அவர்கள் இளவரசி அழுது இருக்க இவன் மென்மையாக பாப்பாவை தூக்கி ரஞ்சியிடம் குடுத்து விட்டு பத்மினியை உள்ளே அனுப்பினான்….
அவரும் உள்ளே சென்று பாப்பாவுக்கு பால் குடுக்க உதவி செய்தார்…. அதன் பிறகு அருள் தேவா வானதி அனைவரும் பாப்பாவை பார்த்தனர்… விடியற்காலையில் வேலுவின் பெற்றோர்கள் பாட்டிகள் இருவர் அனைவரும் வந்து விட்டனர்…
அந்த வீட்டின் குட்டி இளவரசியை பார்த்து அனைவரும் சந்தோசம் அடைந்தனர்… தேவாவை வானதி பாரதியை அழைத்து வர அனுப்பி இருந்தாள்… அவள் இரவில் இருந்தே ஒரே ரகளை நான் குழந்தையை பார்க்க வேண்டும் என… வானதி தான் மிரட்டி காலையில் தேவாவை அனுப்புகிறேன்… அவனுடன் வா என்று கூறி அடக்கி வைத்து இருந்தாள்….
யுகேனும் இரவே புற்பட்டு இருந்தான் அவனின் மருமகளை காண…. பாரதி குழந்தையை பார்த்ததும் குஷி ஆகி விட்டாள்….
யுகேனும் வந்து விட இருவரும் சிறு பிள்ளை போல் பாப்பாவை வைத்து என் மருமகள் என் மருமகள் என சண்டையிட்டு கொண்டு இருந்தனர்….
அருள் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே வானதியிடம் “குட்டிமா ரெண்டு பேரையும் பார்த்தா ப்ரோபஸ்சனல்(professional) கோர்ஸ் படிக்குற மாதிரியா இருக்காங்க… சின்ன பசங்க மாதிரி அடிச்சிட்டு விளையாடிட்டு இருக்காங்க” என்று கூறி அவர்களிடம் சென்று அவ என் மருமக.. என்கிட்ட குடுங்க ரெண்டுபேரும்” என்று தூக்கி கொண்டான்…
பாப்பாவை நேற்றே வீட்டிற்கு அழைத்து வந்து இருந்தனர்…. மருத்துவமனையில் அமைதியாக இருந்த இருவரும் வீட்டிற்கு வந்த பின் அவர்கள் ரகளையை ஆரம்பித்து இருந்தனர்….
இருவரையும் கஷ்டப்பட்டு கல்லூரிக்கு அனுப்பி இருந்தனர் வீட்டில் இருப்பவர்கள்…. அடுத்த பதினைந்து நாட்களில் தீபாவளி வந்து இருக்க இருவரும் மீண்டும் ஊருக்கு வந்து இருந்தனர்….
பாப்பாவிற்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சி வைத்து இருந்தனர்…. இருவரும் எங்கள் விடுமுறை நாளில் தான் வைக்க வேண்டும் முடிவாக கூறிவிட்டனர்…
அன்று பாப்பாவிற்கு பெயர் வைக்கும் நாள்… நெருங்கிய சொந்தகளை மட்டும் வைத்து பாப்பாவிற்கு வர்ஷிகா என்று பெயர் வைத்து இருந்தனர்…
அதன்பிறகு நாட்கள் எந்த வித பிரச்சனையும் இல்லாமல் சந்தோசமாக சென்றது…. அருள் வானதியும் காதலும் சீண்டலுமாக சந்தோசமாக இருந்தனர்….
மூன்று மாதங்கள் சென்று இருக்க அன்று ஒரு நாள் வானதியை யாரோ கடத்தி இருந்தனர்…. அருள் எங்கு எங்கோ தேடி அலைந்தான்…. ஆனால் வானதியோ மயக்கத்தில் இருக்க அந்த அறையில் ஒருவன் அமர்ந்து அவளையே வக்கிரமாக பார்த்து கொண்டு இருந்தான்…
அருள் வானதியை காப்பானா…..?!?!?!?!?!…..
Advertising
Disclaimer
This story is the intellectual property of the author . Any unauthorized distribution of this novel, in any form such as PDF, written, audio, or otherwise, will result in legal action.