அறைக்கு சென்ற வானதி வெட்கத்தில் முகத்தை மூடி அமர்ந்து கொண்டாள்… அவளின் பின் வந்த அருள் அவள் கையை எடுத்துவிட்டு அவள் மடியில் தலை வைத்து படுத்து கொண்டான்….
அவளும் அவனை பார்த்து சிரித்து கொண்டே அவன் தலையை கோதி கொடுக்க அருள் வானதியின் முகத்தை பார்த்து “இந்த மாதிரி வீட்டுல சிரிப்பு சத்தம் கேட்கனும்னு எவளோ நாள் ஆசை தெரியுமா குட்டிமா…. இன்னிக்கு இந்த மாதிரி நடக்குற அப்ப ரொம்ப சந்தோசமா இருக்கு….” என்று கூறினான்… அவளும் அதை தலையசைத்து ஆமோதித்தாள்….
Advertisement
இருவரும் நடந்து முடிந்த விசயத்தை பற்றி பேசவில்லை… அருள் பேச பேச வானதி அவனின் இந்த பேச்சை சிரிப்புடன் கேட்டுக்கொண்டு இருந்தாள்…. அவனின் நீண்ட நாள் ஆசை இது… வானதியின் மடியில் படுத்து கொண்டு இவ்வாறு கதை பேச வேண்டும் என… அது இன்று நிறைவேறியதில் மிகவும் சந்தோசமாக இருந்தான்…
Advertisement
Advertisement
இவர்களின் இந்த பேச்சு அருளின் அலைபேசி சத்தத்தில் தான் நின்றது… யார் என்று எடுத்து பார்த்தால் பத்மினி தான் அழைத்து இருந்தார்….
“ஹெலோ சொல்லு ம்மா” என்று அருள் கேட்டான்…
Advertisement
“டேய் அருள் அப்பயே பசிக்குதுனு சொன்ன… வா சாப்பிடலாம்… எல்லாரும் உங்களுக்காக தான் காத்துகிட்டு இருக்காங்க… தூங்கிட்டிங்களா” என்று கேட்டார் பத்மினி…
“இல்ல ம்மா சும்மா பேசிட்டு தான் இருந்தோம்… இதோ வரோம்” என்று கூறி வைத்துவிட்டு வானதியை அழைத்து கொண்டு கீழே சென்றான்….
வானதி முகம் முழுக்க சந்தோசத்துடன் அருளின் கையை பிடித்து கீழே இறங்கி வருவதை பார்த்து அனைவரும் சந்தோசம் ஆகினர்…. நேற்று இரவு அவள் முகத்தை பார்த்து அனைவரும் நொறுங்கிவிட்டனர்… அது மட்டுமில்லாமல் நேற்று அவள் யாருடனும் பேசாமல் இருந்தது அனைவரையும் வருத்தமடைய செய்து இருந்தது… இன்று அவள் இப்படி சந்தோசமாக இருப்பது மிகவும் நிம்மதியை கொடுத்து இருந்தது…
கலகலப்பாக மதிய உணவு முடிந்து இருக்க ஹாலில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்…பாட்டிகள் இருவரும் இரவு சடங்கை பற்றி பேச ஆரம்பிப்பதற்குள் பத்மினி அந்த பேச்சை நிறுத்தி இருந்தார்…
பின் அவரே அருள் வானதியிடம் திரும்பி “அருள் வானதியை கூட்டிட்டு அனைக்கட்டு முனியப்பனை பார்த்துட்டு கொஞ்ச நேரம் அங்க இருந்துட்டு வாங்க” என்று அனுப்பினார்…. அருள் வானதி இருவரும் தயாராகி மற்றவர்களையும் வர சொல்லி அழைத்தனர்… அவர்கள் மறுத்துவிட்டு இருவரை மட்டும் அனுப்பி வைத்தனர்….
பின் சிறியவர்கள் அனைவரையும் உள்ளே அனுப்பிவிட்டு இவர்கள் மட்டும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்… தாயம்மாள் பாட்டியோ “ஏன் பத்மினி பேச வேண்டாம்னு சொன்ன” என்று கேட்டார்…
“அத்தை நாம அவசர அவசரமா கல்யாணம் பண்ணி வெச்சு இருக்கோம்… அவங்க நம்மளை புரிஞ்சிகிட்டாங்க… ஆனா ராத்திரி சடங்குக்கு எல்லாம் தயாராகி இருக்க மாட்டாங்க…. ஒரு வாரம் போகட்டும் அதை பத்தி அப்பறம் பேசிக்கலாம்…. ” என்று கூறினார்…. பத்மினி கூறியது அனைவர்க்கும் புரிந்தது….
எனவே அந்த பேச்சை விட்டனர்… ஆனால் பாட்டியோ “ஒரு வரவேற்பு நிகழ்ச்சியாச்சும் வைக்கணும் அதுக்கு நாள் பாரு” என்று கூறினார்…. பத்மினிக்கும் அந்த யோசனை இருந்தது…. அதனால் “சரி அத்த நாளைக்கு ஜோசியரை போய் பார்த்துட்டு வரலாம்” என்று கூறி அந்த பேச்சை முடித்தனர்….
இங்கு கோவிலுக்கு சென்ற காதல் ஜோடி இருவரும் முனியப்பனை தரிசித்து விட்டு பார்க் நோக்கி சென்றனர்… வார நாட்கள் என்பதால் கூட்டம் கொஞ்சம் குறைவாக தான் இருந்தது… ஊஞ்சலை பார்த்து வானதி சிறு குழந்தை போல் அதில் அமர்ந்து ஆடி கொண்டு இருந்தாள்… அருள் அவளை சிறு சிரிப்புடன் பார்த்து கொண்டு இருந்தான்…
வானதியின் இது போன்ற குழந்தைத்தனம் எல்லாம் அருளின் முன் மட்டுமே வெளிப்படும்…. பத்மினி அருளுக்கு அழைத்து கூறிவிட்டார்… இரவு வெளியில் சாப்பிட்டு விட்டு வாருங்கள் என… எனவே ஒரு லாங் டிரைவ் சென்றுவிட்டு ஒரு நல்ல ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பினர்…
இருவர் மனதிலும் இரவு சடங்கு ஏற்பாட்டை குறித்து பயம் இருந்து கொண்டே இருந்தது… எங்கே இதற்காக தான் வெளியில் அனுப்பி வைத்து இருந்தார்களோ என…..
அனைத்தும் நல்ல விதமாக முடிந்து இருந்தாலும் வானதிக்கு நேற்றைய தாக்கம் இன்னும் மிச்சம் இருந்தது… அது அவள் வெளியில் சொல்லாமல் இருந்தாலும் அவளை பற்றி அனைத்தும் தெரிந்து வைத்து இருக்கும் அருளுக்கு அது தெரியாமல் போகுமா…
எங்கே இந்த ஏற்பாடு தன்னவளுக்கு வருத்தத்தை தருமோ என்று பயந்து போய் இருந்தான்…. வீட்டில் அனைவரும் உறங்க சென்று இருக்க பத்மினி மட்டும் இன்னும் உறங்காமல் இருந்தார்….
இருவர் வந்தவுடன் இருவருக்கும் பால் குடுத்துவிட்டு அவரும் உறங்க சென்று இருந்தார்…. இருவரும் ஒருவித பயத்துடனே மேலே அறைக்கு சென்றனர்… எந்தவித அலங்காரமும் இன்றி இருந்த அறையை பார்த்து நிம்மதி அடைந்தனர்…
இருவரும் ரெப்பிரேஷ் ஆகிவிட்டு சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்… பேசிக்கொண்டு இருந்த இருவரும் இருவரின் அருகாமையில் அவர்களுக்கே அறியாமல் அப்டியே உறங்கி இருந்தனர்….
தன் மாமன் நெஞ்சில் தூங்கியாதாலோ என்னவோ அவள் வழக்கமாக எழுந்துகொள்ளும் நேரம் தாண்டியும் எழுந்துகொள்ளாமல் ஆழ்ந்த உறக்கத்தியோ இருந்தாள் வானதி….
அவனும் அவனின் குட்டிமாவின் அருகாமையில் தன்னை மறந்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்…. இருவரையும் யாரும் தொந்தரவு செய்யவில்லை…. பத்து மணிக்கு மேல் முதலில் அருள் தான் எழுந்தான்…. எழுந்தவன் தன் நெஞ்சில் படுத்து இருக்கும் தன்னவளை பார்வை மாறாமல் பார்த்து கொண்டு இருந்தான்….
பின் எதார்த்தமாக மணியை பார்த்தவன் பதறி எழுந்துகொண்டான்… ஆனால் அந்த அரவத்தில் கூட அவனின் மனையாட்டி எழுந்துகொள்ளவில்லை….. “குட்டிமா குட்டிமா எழுந்திரி மணி ஆகிடிச்சி” என்று அவளின் கன்னத்தை பிடித்து கொஞ்சினான்…. அவளோ மேலும் அவனோடு ஒன்றி படுத்தாள்… இது ஆகாது என்று அவனின் கன்னத்தை கடித்து விட்டான்… அடித்துப்பிடித்து எழுந்தவள் பாவமாக கன்னத்தை பிடித்து கொண்டு அவனை பார்த்தாள்…
அவளை அப்டியே திருப்பி கடிகாரத்தை காட்டினான்…. மணியை பார்த்து பதறி எழுந்தவள் அவசர அவசரமாக பாத்ரூம் சென்றாள்… சென்றவள் அதே வேகத்தில் திரும்பி வந்தாள்… அவள் வந்ததை பார்த்து “என்ன குட்டிமா திரும்பி வந்துட்ட” என்று கேட்டான்…..
அவளோ “ட்ரெஸ் எதுவுமே இங்க இல்லையே… குளிச்சிட்டு எது போடுறது” என்று சைகையில் கேட்டாள்…
அவளை அழைத்து கொண்டு கப்போர்டு முன் நின்றவன் அவளை முன்விட்டு அவளை அணைத்து கொண்டு பின் நின்றவன் “ஓபன் பண்ணு குட்டிமா” என்று கூறினான்…
அவளும் திறந்து பார்த்தாள்… அங்கு அவளுக்கு தேவையான அனைத்து ஆடைகளும் இருந்தது… இவனின் அன்பை நினைத்து மிகவும் நெகிழ்ந்து போய் இருந்தாள்… திரும்பி அவனை அணைத்து கொண்டவள் அவனின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஒரு ஆடையை எடுத்து கொண்டு குளிக்க சென்று இருந்தாள்….
இவனும் சிரித்து கொண்டே படுக்கையை மடித்து வைக்க சென்று இருந்தான்.. அவள் வந்தவுடன் இவன் குளிக்க சென்று இருக்க இவள் தயாராகி கீழே சென்று இருந்தாள்… அனைவரும் வெளியே சென்று இருக்க பத்மினியும் கமலாவும் மட்டும் இருந்தனர்….
வந்தவள் இருவரையும் பார்த்து மலர்ந்த புன்னகையை தந்தவள் சாமி அறைக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு இருவரிடமும் வந்து சாப்பிட்டாச்சா என்று சைகையில் வினவினாள்…. அவர்கள் நாங்க சாப்பிட்டோம் நீங்க சாப்பிடுங்க என்று கூறினர்…
அருளும் குளித்து முடித்து வந்தான்… இருவரையும் அமர வைத்து பத்மினியும் கமலாவும் பரிமாறினர்…. சாப்பிட்டு முடித்து சிறிது நேரம் ஹாலில் அமர்ந்து இருந்த அருள் வெளியே சென்று வருகிறேன் என்று கூறி சென்று விட்டான்…
மதிய சமையல் செய்ய சென்ற இருவரையும் அமர்த்திவிட்டு சமைய வேலையை வானதி எடுத்துக்கொண்டாள்… என்ன செய்யவேண்டும் என்று கேட்டு காய்கறிகளை அவர்களிடம் கொடுத்து வெட்டி தர கூறிவிட்டு வேகமாக சமையலை முடித்து இருந்தாள்…
அந்த நாள் சிரிப்பும் சந்தோசமாக முடிய பத்மினியும் கமலாவும் அருள் வானதி ஜாதகத்தை எடுத்து கொண்டு ஜோசியரிடம் சென்றனர்… அங்கு அவர்களின் ஜாதகத்தை பார்த்துவிட்டு ஜோசியர் கூறியதை கேட்டு இருவரும் அதிர்ந்து விட்டனர்…