Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 20 1

மின்னல்  ஒரு  கோடி

 அத்தியாயம் – 20  ( Final . 2)



Advertisement

  குருவம்மாள்  கோடிஸ்வரன்  தன்னிடம்  பேச வில்லை .ஆனால் அவன்  மனைவியோடு சந்தோஷமாக  இருக்கிறான் என்று  நினைத்தவர். கோடிஸ்வரனுக்கு   இரண்டாவது குழந்தை பிறக்க  போகுது. முதல் பேரனை  முகத்தை கூட இன்னும் பார்க்க வில்லையே  என்று மனம் வருந்தியவர். கோடி எப்போவாவது வந்து பிள்ளைகளை காண்பித்தால்  போதும் என்று   கடவுளை வணங்கி விட்டு வர.

Advertisement

ஒரு  சிறிய  பையன்  தன் முன் வந்து  மம்மி , பாப்பா  என்று அழ.

Advertisement

குருவம்மாள்  என்னட ஏன் அழற .

மம்மி  என்றவன் குருவம்மாளை அழைத்து கொண்டு  கௌசியிடம் செல்ல.

Advertisement

கௌசியை  குருவம்மாள்  இந்த நிலையில் பார்பேன் என்று நினைக்க வில்லை.அடியே  உனக்கு என்ன ஆச்சு என்று கேட்க.

அத்தை என்றவன் மயக்கமாக.

குருவம்மாள்  துருவாவை பார்க்க கோடியின் சாடையில் இருக்க.தன் பேரன்  என்று நினைத்தவர். அழும்  துருவாவை  எய்யை அழத  என்றவர். பேரணை அணைத்து கொண்டு அழதே ராஜா என்றவர். யாராவது வாங்க ,என்று கத்த ஒரு சிலர் சத்தம் கேட்டு வர.ஒரு ஆட்டோ பிடித்தவர் கௌசியை ஹாஸ்பெட்டலில் சேர்த்தார்.

குருவம்மாள்  துருவாவிடம்  அப்பா எங்கே டா.

 நைனா வா  சிவா மாமாவுக்கு  பாப்பா பிறந்து இருக்கு காருல போயிருக்காரு.

கௌசியை குருவம்மாள் ஹாஸ்பெட்டலில்  சேர்த்து விட்டு  போனில்  கோடிக்கு அழைக்க.

கோடி போனை பார்த்து விட்டு.  போனை எடுத்தால் ,எங்கே இருக்க என்று கேட்பார். சில மாதமாக கோடி குருவம்மாளிடம் பேசாமல் இருக்க. இப்போ எப்படி எடுக்கவென்று . போனை சைலண்டில் போட்டான்.

கௌசியை ஹாஸ்பெட்டலில்  அட்மிட் பண்ணியவர்   அழும் துருவாவை  சமாதானம்  பண்ணி கொண்டு இருக்க. நர்ஸ் வந்து  அவங்க பேர் என்ன .  அவங்க ஹஸ்பென்ட வர சொல்லுங்க.  ஆபரேஷன்  பண்ணனும் சைன் வேணும் .பணம்  1 லட்சம் கட்டுங்க என்று சொல்ல. இதோமா பத்து நிமிசத்துல  பணம்  கட்ட . சொல்லுறேன் என்றவர். என் பையன் வெளியூர் போகியிருக்கான்  வரலேட்டாகும்  நான்  கையெழுத்து போடுறேன் என்று சொல்ல.

அந்த நர்ஸ்  நீங்க சைன் போடமுடியாது. அவங்க ஹஸ்பென்டுதான். போட முடியும் அப்பறம் தான்  ட்ரீட்மென்டை ஆரம்பிப்போம் என்று சொல்ல.

குருவம்மாள் அப்படி  சொல்லாதமா எவ்வளவு பணம் வேணும்ணாலும் பணம் கட்டுறேன். என் மருமகளையும் , அவ வயித்துல உள்ளே பிள்ளையை காப்பாத்துங்க என்று  நர்சின் காலில் விழ.

அட என்னம்மா என் காலுல விழற என்று பதறியவர் .டாக்டர்  கிட்ட  போயி நர்ஸ்  சொல்ல .  அவரோ  அந்த அம்மா கிட்ட சைன் வாங்கிட்ட  ட்ரீட்மென்ட் பாருக்க என்று கௌசிக்கு   முதலில் கழுத்தில் இருந்து வரும் இரத்தை நிறுத்தி. குழந்தை  காப்பாத்த வேண்டிய முயற்சி செய்ய.

 குருவம்மாள் சுந்தருக்கு போனில் அழைத்து  மௌன்ட்  ஹாஸ்பெட்டலுக்கு 2 லட்சம் பணம்  எடுத்துட்டு வா என்க.

சுந்தர் யாருக்குமா என்னாச்சு என்று கேட்க. குருவம்மாள் நடந்ததை அனைத்தையும் சொல்ல.

சரி சித்தி பணம் எடுத்து வர்ரேன் என்றவன். கோடிக்கு சொல்லியாச்ச  என்றான்.

குருவம்மாள் நான் போன் போட்டேன்  கோடி போனை எடுக்கல. நீ அவனுக்கு போன் போட்டு. ஆஸ்பத்திரிக்கு வர சொல்லு.   அவன் பொண்டாட்டியை பத்தி சொல்லாத   அவன் தாங்க மாட்டான் என்றார்.

சுந்தர். கோடிக்கு போன் போட. அவன் பெங்களுருக்கு வந்து கொண்டு இருந்தவன் .போனை சத்தமில்லாமல் வைத்து இருக்க.

 அவனுக்கு ஒரு மெஜேஸை  ஹாஸ்பெட்டல் வா என்று போட்டு.

பணத்தை எடுத்து கொண்டு  ஹாஸ்பெட்டல் செல்ல.

இங்கே கோடி வீட்டுக்கு வந்து   பார்க்க  வீடு பூட்டி இருந்தது . கௌசியும் , துருவாவும் எங்கே  போனார்கள். என்று போனை எடுக்க அது சைலண்டில்   இருந்தது.  சுந்தரிடம் இருந்து நிறைய அழைப்புகள் இருக்க.எதுக்கு இந்த தடவை போன் பண்ணி இருக்கான்.நைனாவுக்கு உடம்பு முடியவில்லையா , அதான் அம்மா போன் போட்டாங்கல என்று நினைத்து. சுந்தர் அனுப்பிய மெஜேசை பார்த்தவன்.

முதலில் கௌசிக்கு போன் போட அது நாட் ரீச்சபல்  என்று   வர. எங்கடி போன என்று புலம்பியவன்.  மறுபடியும்  கௌசிக்கு  அழைக்க அது மறுபடியும் நாட் ரீச்சபல் என்று வர. ஹாஸ்பெட்டலுக்கு வந்தான்.

ஹாஸ்பெட்டலில்   வந்த கோடி பழனியின்  பெயரை  சொல்லி கேட்க . அங்கே  ரிஷப்சனில் உள்ள பெண்  பழனி என்ற பெயரில் யாரும்  அட்மீட்  ஆகலையே என்று  சொல்ல.

கோடி சுந்தருக்கு போன் போட .

சுந்தர் போனை எடுத்து எங்கேடா இருக்க என்றான்.

கோடி  இங்கே  ஹாஸ்புட்டலில் தான்  இருக்கேன் என்றான்.

இரு வர்ரேன் என்றவன்.கோடியை நோக்கி வர.

கோடி கௌசிக்கு மறுபடியும் போன் போட்டு கொண்டு  இருக்க.அது நாட் ரிசபல் என்று  வர.

சுந்தர்   துருவாவை  தூக்கி  கொண்டு கேன்டினில்  இருந்து வெளியில் வர.

கோடி ஹாஸ்பெட்டல்  வரண்டாவில்  நின்று  போனை  காதில் வைத்து   கொண்டே  கௌசியை எங்கடி போன சார்சு போடலியா என்று திட்டிக்கொண்டே  திரும்பி பார்க்க. சுந்தர்  துருவாவை  தூக்கி கொண்டு வருவதை  பார்த்தவன்.

டேய்  நீ எங்கே  இங்கே  என்று துருவாவை கேட்க.

நைனா என்று துருவா அழுக்கொண்டே  மம்மி , மம்மி  கீழே  விழுந்துட்டா என்றான்.

என்னட ஆச்சு  என்று  துருவாவிடம் கேட்டவன்.சுந்தரிடம் என்னாச்சு  கௌசிக்கு  யாருக்கு  இங்கே   ஹாஸ்பெட்டலில்  சேர்த்து  இருக்காங்க.

சுந்தர் கோடியை  தோள் அணைத்தவன்  ஒன்னும் இல்லடா என்று கௌசிக்கு  நடந்ததை  சொன்னவன். சித்தி தான்  கௌசியை  பார்த்து  ஹாஸ்பெட்டலில்  சேர்த்தாங்க வா என்றான்.

கோடி  கௌசிக்கு என்ன ஆச்சு. குழந்தை என்று புலம்பியவன், அவள  தனியா  விட்டு  போன்னேன் என்று  தன்னை  தானே நிந்தித்தவன்.சுந்தரிடம் எங்கே  என்று கேட்க.

சுந்தர்  ஆப்ரேஜன்  நடக்கும்  இடத்தை  சொல்ல.

  ஒரு  நர்ஸ்  வந்து இங்கே யாரும்மா  கௌசியோட  ரிலேஷன்  என்று கேட்க.

அழுது கொண்டே   இருந்த  குருவம்மாளுக்கு  நர்ஸ்  கௌசி  என்று  பெயரை சொல்லியதும்  மட்டும்  கேட்க. நர்ஸிடம் வந்தவர் என்னாச்சும்மா என் மருமகளுக்கு என்று கேட்க.

நர்ஸ் இந்தாங்கம்மா  அவங்களுக்கு  பெண் குழந்தை பிறந்து இருக்கு  என்று குருவம்மாளிடம்  குழந்தையை குடுக்க வர.

 குருவம்மாளுக்கு  சந்தோஷம்,  பின்பு நான்  வேண்டாம்மா  முதலில்  வேற  யாருக்கிட்டையாவது  குடுக்க என்றவர் மூடி இருந்த  குழந்தையை பார்த்துக் கொண்டே.

அந்த நர்ஸ் நீங்க தானே  அந்த பொண்ணோட  மாமியார் .நீங்க  மட்டும்  சரியான நேரத்துல கொண்டு  வந்து உங்க மருமகள சேர்க்கலைனா. இப்போ  இவங்க இரண்டு பேரும் இல்லம்மா. வாங்கிக்கோங்க உங்க பேத்தியை  என்று  அவர் கையில் குடுக்க.

குழந்தையை  வாங்கியவர் என் மருமக எப்படி இருக்கா.

ஒன்னும்  பிரச்சனை இல்லம்மா, ஐ,சி,யுல  இருக்காங்க  பயப்படுற மாதிரி  ஒன்னும்  பிரச்சனை இல்ல.  கொஞ்ச நாளைக்கு பேச முடியாது  அவ்வளவு தான்.

குருவம்மாளுக்கு  குழந்தையை  வைத்துக்கொண்டு  சரியாக  நிற்க முடிய வில்லை .குழந்தையின் முகத்தை  மூடி  இருந்தார்கள். குருவம்மாள்  ஒரு சேரில் அமர்ந்து கொண்டு , குழந்தையின் முகத்தை பார்க்க   அச்சு  அசல்  அவரின் அக்கா கோடியின் அம்மா ஜானகி  மாதிரியே குழந்தை இருக்க. குருவம்மாள் அக்கா என்று   அழுதிருந்தார். அக்கா நீயா  வந்து இருக்க. உன்ன  பாக்க தான்  இவ்வளவுமா என்றவர்  கதறி அக்கா என்று அழ.   குருவம்மாளின் வீட்டில் எல்லோரும் கருப்புத்தான். ஜானகி மட்டும் கலராக இருப்பார் . ஏர் நெத்தி,  சிறிய மூக்கு  நீண்ட முகம் என்று   அப்படியே தன் அக்காவே வந்து  பிறந்தது போல கோடியின் மகள் இருக்க , ஜானகி   அக்கா என்று  குருவம்மாள்  குழந்தையை மார்போடு  அணைத்து  கொண்டு அழ.

சுந்தரும்   கோடியும்  துருவாவை தூக்கி கொண்டு  ஐ,சி,யுவின் பக்கத்தில் வர.

குருவம்மாளின்  அழகை சத்தம்  கேட்டு  கோடி  தூரத்திலே  நின்று விட்டான்.

சுந்தர்  வாடா  என்றான்.

 கோடி  அந்த வரண்டாவில்  கடைசில்  குருவம்மாள்  குழந்தையை   மார்போடு  அணைத்து வைத்து கொண்டு அழுவதை  பார்த்தவன். அன்று  அவன்  தென்றலின்  குழந்தையை  மார்போடு அணைத்து அழுதது ஞாபகம் வர. அப்படியே நின்று விட்டான்.இந்த   கொடுமையை நான் எப்படி  பார்ப்பேன். யாருக்கு என்னாச்சு என்று தெரியலயே என்றவன்  மடிந்து  கீழே அமர்ந்து விட்டான். அவனால் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியவில்லை.

சுந்தர்  வாடா என்று  கோடியை எழுப்ப.

அவனால் அசைய முடியவில்லை.

குருவம்மாள்  இருவரின்  சத்தம்  கேட்டு நிமிர்ந்து  பார்த்தவர். கோடி கீழே  மடிந்து அமர்ந்து  இருப்பதை கண்டவர் .கோடி  என்று மகனிடம் வந்தார்.

அவனோ  தன் அம்மா  தன்  குழந்தைக்கு ஏதோ ஆகிவிட்டது  என்று  சொல்வார் என்று முகத்தை மூடி  கொண்டு  அழ.

குருவம்மாள்  எய்யா  அழதா , உங்க அம்மா ஜானகியே  உனக்கு வந்து  பிறந்து இருக்க பாரு என்று சொல்ல. அவனுக்கு உள்ள அதிர்ச்சியில்  அவன் தன் அம்மாவை பற்றி  ஏதோ  சொல்கிறார் என்று  நினைத்தவன். முகத்தை மூடி அழ.

கோடியின் மகள்   நான்   உயிரோடு இறக்கிறேன் என்று  தகப்பனுக்கு  சொல்ல வீர் என்று அழுதாள்.

கோடி முகத்தில்  இருந்து  கையை எடுத்து பார்த்தான்.    குருவம்மாள்  அவனிடம் குழந்தையை நீட்டி கொண்டு  இருக்க. கோடியின் வீட்டின்  அரசி கையை ஆட்டி  வீரிட்டு  அழ .நீண்டிய  குழந்தையை  வாங்கியவன் கீழேயே அமர்ந்து விட்டான். குழந்தை நன்றாக இருக்கவும் தான் அவனுக்கு உயிரே வந்தது. குழந்தையை உற்று பார்க்க. சிறு வயதில்   போட்டோவில்  பார்த்த அம்மா  ஜானகியின்  போல் இருக்க. குருவம்மாளின்  முகத்தை பார்த்த கோடி  ஏதோ  சொல்ல வர.

என் அக்கா ,உன் அம்மா  ஜானகியே வந்து உனக்கு பிறந்து இருக்க  கோடி என்றவர்.

மகன் கீழே அமர்ந்து   இருப்பதை பார்த்தவர் ஒன்னும் இல்லையா உன்  பிள்ளை, உன் பொண்டாட்டியும்  நல்ல இருக்காங்க  எந்திரி  வா என்று அவனை சேரில் அமர வைத்தவர். குருவம்மாள்   கோடியின் முகத்தை தன்  சேலையால்  துடைத்து விட்டவர். உன் பொண்டாட்டி நல்ல இருக்க .டாக்டர்  சொன்னாங்க என்றவர்.

சுந்தரிடம்  இருந்த துருவாவை பார்த்து  இவன் உன்ன மாதிரியே இருக்கான்  கோடி இந்த பய   என்று  துருவாவை அழைத்து உன் பாப்பாவை பாரு என்றார்.

துருவா   கோடியின் அருகில் சென்று குழந்தையை பார்த்தவன். கோடியின்  மடியில் இருந்த குழந்தையை பார்த்து நம்ம  பாப்பாவா நைனா என்றான்.

கோடி ஆமாம் என்று தலையாட்ட.

துருவா குருவம்மாளிடம்  வந்தவன்  ரொம்ப தாங்யூ  பாட்டி என்று  கையெடுத்து கும்பிட்டவன். அவரின் காலில் விழ.

குருவம்மாள்  பதறிவிட்டார்  சின்ன  குழந்தை  காலில்  விழ நான் யாரு  என்று தெரியாமலே  என்  காலில் விழுந்து  நன்றி  சொல்லுது என்று  பார்க்க.

சுந்தர்  என்னடா  பெரிய  மனுஷன் மாதிரி  பண்ணுறே.

துருவா  எங்க  கமலம்மா  நமக்கு  யாரவது உதவி பண்ண நன்றி சொல்லனும்.  பெரியவங்களா இருந்த  காலில்  விழுனுமுன்னு  சொல்லி  இருக்காங்க பாட்டி என்றவன். மறுபடியும் நன்றி பாட்டி  என்றான்.

குருவம்மாள் துருவாவிடம்  உங்க கமலம் பாட்டி உனக்கு நல்லதா சொல்லி வளத்து இருக்காங்க  என்றவர் துருவாவை அணைத்து கொண்டு என்ன அறிவா பேசுறே. நான் வர்ரேன் டா என்றவர்  துருவாவின் கையையில் 500  ரூபாய்  நோட்டையை குடுத்து. நீ பொம்மை வாங்கிக்கோ என்றார்.

துருவா வேண்டாம் பாட்டி காசு என்றவன் குருவம்மாளிடம்  திருப்பி கொடுக்க. பேரனை முத்தம் மிட்டவர். கோடியின் மகளுக்கு  அவரிடம் இருந்த  பணத்தை எடுத்தவர்  குழந்தையின் கையில்  கொடுத்து விட்டு .கோடி தலையில்  கை வைத்தவர்  யாரிடமும் ஒன்றும் பேசமல் சென்று விட்டார்.

கோடி  கண்ணீல்   நீரோடு  போகும்  அம்மாவை  பார்த்து  இருந்தான். இங்கே இருக்கள் என்று  சொல்ல  முடியாத  நிலை.  அவரிடம்  என்ன  பேசுவது என்றே தெரியாமல் .அவரிடம் என்ன சொல்வது  தன் உயிரே  காப்பாற்றி  தந்து விட்டு   செல்லும் குருவம்மாளை  எப்படி அழைப்பது என்று  தெரியவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!