Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மௌனமாய் ஒரு காதல் செய்வோம்

காதல் ❤️ 24

தேவா பாரதி இருவரும் தங்கள் முன் நிற்பவனை பார்த்து ஒரு நிமிடம் தான் அதிர்ந்தனர்… பின் அவர்கள் இருவரும் தங்கள் வேலையை கவனிக்க ஆரம்பித்தனர்… வேறு என்ன வேலை ஒருவரை ஒருவர் சைட் அடிப்பது தான்…



Advertisement

அங்கு நின்றது வேறு யாரும் இல்லை… யுகேன் தான்…. முதலில் அதிர்ந்ததை பார்த்து நக்கலாக சிரித்தவன் பின் அவரவர் வேலையை பார்ப்பதை பார்த்து இருவருக்கும் நடுவில் நின்று “டேய் ஒரு வயசு பையனை வெச்சிட்டு என்ன டா பண்ணிட்டு இருக்கீங்க… அநியாயமா இல்ல… ஒரு பையனை பசியில வெச்சிட்டு ஊட்டி விட்டு விளையாட்டிட்டு இருக்கீங்க நகருங்க அந்த பக்கம்” என்று இருவரையும் நகர்த்தி விட்டு இருவருக்கும் நடுவில் உட்கார்ந்து சாப்பிட ஆரம்பித்தான்….

அவனை பார்த்து சிரித்து விட்டு பாரதி அவனுக்கு பரிமாற ஆரம்பித்தாள்…

Advertisement

Advertisement

இங்கு இவர்கள் இப்படி இருக்க அங்கு நம் நாயகன் நாயகியோ இன்னும் உறக்கத்தில் தான் இருந்தனர்…

முதலில் எழுந்தது என்னவோ வானதி தான்…  கண் திறந்துவுடன் அவள் கண்டது என்னவோ அவளை அணைத்து கொண்டு குழந்தை போல் உறங்கும் அவளின் மாமனை தான்….

Advertisement

அவனின் தலையை கலைத்து விட்டு விளையாடி கொண்டு இருந்தவள் எதார்த்தமாக மணியை பார்த்தவள் அதிர்ந்துவிட்டாள்…

அவசர அவசரமாக அவனிடம் இருந்து விலகி எழ பார்த்தவளை மீண்டும் தன் மேல் விழ வைத்து அணைத்து கொண்டான் அருள்…

“எங்க போற குட்டிமா கொஞ்ச நேரம் தூங்கு” என்று கூறி கண் மூடினான் அவன்…

அவனை கிள்ளி எழுப்பி விட்டவள் அவனை மணியை பார்க்க வைத்தாள்… மணியை பார்த்தவன் அதிர்ந்து அவளை விட்டு விட்டான்… அந்த  இடைவெளியில் அவனிடம் இருந்து எழுந்தவள் மாற்று உடை எடுத்து கொண்டு குளியல் அறை சென்று இருந்தாள்…

அருளும் அறையை சுத்தம் செய்துவிட்டு தேவா அறையில் குளித்து முடித்து விட்டு அவன் அறைக்கு வரும் போது வானதியும் குளித்து முடித்து வந்து ரெடியாகி இருந்தாள்…

இருவருக்கும் பசி வயிற்றை கிள்ள ரஞ்சி வீட்டுக்கு செல்ல வெட்கமாக இருந்தது… அப்போது ரஞ்சியிடம் இருந்து குறுஞ்செய்தி வந்து இருந்தது…. அதன் வெளிச்சத்தில் தான் எடுத்து பார்த்தனர்…

அதில் “வானு எழுந்தவாட்டி வெட்கப்பட்டுட்டு உட்காரமா கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்து சேருங்க” என்று அனுப்பி இருந்தாள்….

அதை பார்த்து வெட்கப்பட்டு அருளிடம் காட்டிவிட்டு கீழே புஜை அறைக்கு சென்று அங்கு சாமி கும்பிட ஏற்பாடு செய்துவிட்டு அருளின் வருகைக்கு காத்து கொண்டு இருந்தாள்… அவனும் ஐந்து நிமிடத்தில் வந்து இருக்க வீட்டில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டை பூட்டி விட்டு அவர்கள் ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு சென்று விட்டு ரஞ்சியின் வீட்டிற்கு சென்றனர்….

அங்கு இரு  பாட்டிகளும் வெளியில் உட்கார்ந்து கொண்டு இருந்தனர்.. இருவரும் முகத்தை பார்த்தே இருவரும் வாழ்க்கையை தொடங்கி விட்டனர் என அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரும் வெட்கத்துடன் வருவதை பார்த்து சிரித்து கொண்டே இருவரையும் உள்ளே அழைத்து சென்றனர்….

இருவரையும் மற்றவர்கள் அனைவரும் வரவேற்று அமர வைத்தனர்… அடுத்த கால் மணி நேரத்தில் மதிய உணவு தயாராகி இருக்க ரஞ்சி அவர்களை அமர வைத்து உணவு பரிமாறினாள்…

யாரும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை… அனைவரும் மதியம் உண்டுவிட்டு மேட்டுர் டேம் செல்லலாம் என முடிவு செய்து மேட்டுர் கிளம்பினர்….

அருள் ஒரு காரை எடுக்க வேலு ஒரு காரை எடுத்தான்… அனைக்கட்டு முனியப்பனை தரிசித்து விட்டு பார்க் சென்று விளையாட ஆரம்பித்தனர்…

என்ன தான் பெரியவர்கள் ஆனாலும் அனைவரும் சிறு குழந்தை போல் விளையாடி கொண்டு இருந்தனர்… வார நாள் என்பதால் கூட்டம் அளவாக தான் இருந்தது…

இரவு உணவை அங்கு உள்ள ஹோட்டலில் முடித்து விட்டு அனைவரும் வேலுவின் வீட்டிற்கு தான் சென்றனர்… அருள் மற்றும் வானதியை வீட்டிற்கு செல்ல கூறினர்… ஆனால் அவர்கள் மறுத்து விட்டு வேலுவின் வீட்டிலேயே தங்கி கொண்டனர்…

பெரியவர்கள் அனைவரும் கீழே தூங்க செய்துவிட்டு மேலே சென்று தூங்கலாம் என்று  சிறியவர்கள் முடிவு செய்தனர்… ஆனால் தாயம்மா பாட்டி தான் “எல்லாரும் கீழயே தூங்குங்க…. ரஞ்சிக்கு குழந்தை பிறந்து நாலு அஞ்சு மாசம் கூட ஆகல… அதுக்குள்ள பனியில தூங்க போறீங்க… நாங்க எல்லாரும் ரூம்ல கூட தூங்குறோம்… நீங்க இங்க கூடத்துல கூட தூங்குங்க” என்று கூறி பெரியவர்கள் உள்ளே சென்று விட சிறியவர்கள் அனைவரும் கூடத்தில் ஒன்றாய் கதை அடித்து கொண்டு உறங்கினர்….

அடுத்த நாள் அருள் யுகேன் மற்றும் பாரதியை ஊருக்கு கிளம்ப சொல்ல பாட்டியோ அதை மறுத்து “அருளு வர ஞாயிறு முனியப்பன் கோவில்ல கிடா வெட்டிட்டு அப்பறம் கிளம்பட்டும்… அவங்க கிட்ட நேத்தே சொல்லிட்டேன்” என்று கூறினார்….

அடுத்த இரண்டு நாளும் ஆட்டம் பாட்டமாக செல்ல ஞாயிறு அன்று அனைக்கட்டு முனியப்பன் கோவிலில்  குடும்பத்தினர் மட்டும் சென்று கிடா வெட்டி பொங்கல் வைத்து சாமிக்கு படைத்து விட்டு மேலூர் வந்து ஊருக்கே விருந்து வைத்தனர்….

அன்று மாலையே பாரதி மற்றும் யுகேன் இருவரும் அவரவர் கல்லூரிக்கு கிளம்பிவிட்டனர்…

அதன் பின் நாட்கள் காற்றாய் சென்று ஆறு மாதங்கள் கடந்து இருந்தது…. தேவா தன் கனவை நிறைவேற்ற யுபிஎஸ்சி எக்ஸாம் எழுத சென்னைக்கு புறப்பட்டு கொண்டு இருந்தான்… நாளை மறுநாள் அவனுக்கு தேர்வு முதல் நாளே சென்று விடலாம் என்று அவனும் அவனுடன் வேலுவும் கிளம்பினர்… பெரியவர்கள் அனைவர் காலிலும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கி விட்டு வானதியின் முன் நின்றான்…

அவள் எதிர்பாரா நேரம் அவள் காலிலும் விழுந்தான்… முதலில் அதிர்ந்து அவனை எழுப்பி விட பார்த்தாள்… ஆனால் அவன் எழவில்லை…  எனவே அவன் தலை மேல் கை வைத்து மனதினுள் வாழ்த்தி அனுப்பி வைத்தாள்…

அருள் அவனை அணைத்து வாழ்த்து கூறி அனுப்பி வைதான்…. ரஞ்சியும் அவன் காலில் விழும் முன் தடுத்து “ஆல் தி பெஸ்ட் தேவா… எதை பத்தியும் யோசிக்காம நல்ல படியா எக்ஸாம் பண்ணிட்டு வா…” என்று கூறினாள்….

அனைவரிடமும் பேசினாலும் அவனின் பார்வை அவனவளை தான் தேடியது…. அவன் பார்வையை உணர்ந்த தாயம்மா பாட்டி “தேவா பாரதி கோவிலுக்கு போய் இருக்கு…. சாமி கும்பிட்டுட்டு அப்டியே அவளை பாத்துட்டு கிளம்பு” என்று கூறி அவனை அனுப்பி வைத்தார்….

அவனும் தலை அசைத்து விட்டு அனைவரிடமும் விடை பெற்று காரில் ஏறி அமர்ந்தான்…. வேலுவும் அனைவரிடமும் சொல்லி கொண்டு கார் எடுத்தான்… கோவிலின் முன் காரை நிறுத்தி விட்டு “போய் பேசிட்டு வா” என்று  கூறி தேவாவை மட்டும் உள்ளே அனுப்பி விட்டு காரிலேயே இருந்து கொண்டான்…

அங்கு பாரதி தீவிரமாக தன்னவன் நன்றாக தேர்வு எழுத வேண்டும் என்று வேண்டிக்கொண்டு இருந்தாள்.. உள்ளே சென்றவன் தன்னவளை தேடி அவள் அருகில் நின்று கொண்டான்…

அவள் கண் திறந்து சாமியை தரிசித்து விட்டு பூசாரி குடுத்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைக்கும் நேரத்தில் தேவா அவன் கையில் இருக்கும் குங்குமத்தை வைத்து இருந்தான்… அப்போது தான் அவனை பார்க்கவே செய்தாள்… அதுவரை யார் அருகில் நிற்கிறார்கள் என்று கூட தெரியாமல் வேண்டிக்கொண்டு இருந்தாள்…

முதலில் வேறு யாரோ வைத்ததாக நினைத்து கோவமாக நிமிர்ந்தவள் தன்னைவனை பார்த்து சிரித்து விட்டு தானும் அவனுக்கு வைத்து விட்டாள்…

பின் இருவரும் கோவிலை சுற்றி விட்டு ஒரு இடத்தில் அமர்ந்தனர்… சிறிது நேர அமைதிக்கு பின் பாரதியே பேச ஆரம்பித்தாள்… “எத பத்தியும் யோசிக்காம நல்லா எக்ஸாம் எழுதிட்டு வாங்க… நான் ஆசை படுறதை விட அக்கா உங்களை போலீஸ் ட்ரெஸ்ல பாக்கணும்னு ரொம்ப ஆசை படுறாங்க…  அதுக்காகவே நீங்க போலீஸ் ஆகனும்…. ஆல் தி பெஸ்ட்…” என்று கூறி அவன் கையை பிடித்து சிறிதாக அழுத்தம் குடுத்தாள்…

இன்னொரு கையால் அவள் கையை பிடித்து தட்டி கொடுத்த தேவா கண்டிப்பா ரதி…  உனக்காகவும் வானு ம்மாக்காகவும் போலீஸ் ஆவேன்… மாமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க… நீயும் வீட்டுக்கு கிளம்பு…. வீட்டுக்கு போயிட்டு மெசேஜ் பண்ணுடா… என்று அவளையும் கையோடு வெளியில் அழைத்து வந்தான்….

வேலுவிடம் பேசி விட்டு பாரதி வீட்டிற்கு கிளம்ப இருவரும் அவளிடம் விடைபெற்று கொண்டு சென்னை நோக்கி தங்கள் பயணத்தை தொடர்ந்தனர்….

அருளும் வேலுவின் அப்பாவும் வெளியில் கிளம்பி இருக்க பெண்கள் அனைவரும் வீட்டின் முன்புறம் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்… எதோ வேலையாக பின்புறம் சென்ற வானதி தீடீரென்று மயக்கம் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து இருந்தாள்… அனைவரும் அவள் ரூமில் உள்ளாள் என நினைத்து நீண்ட நேரமாக பேசிக்கொண்டு இருந்தனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!