Skip to content
Post Views: 4,511
மணியை அழைத்து அந்த ஜனனியை ஊருக்கே பேக் பண்ண சொன்ன பிறகும் பரணிக்கு கோபம் அடங்கவேயில்லை!
தான் கொஞ்ச அசந்த நேரம், தன் வீட்டாரை என்ன பாடுப்படுத்தி எடுத்திருக்கிறாள்!
இத்தனைக்கும் அவளிடம் அவன் பழையபடி அன்பாக கூட இல்லை, குறைந்தபட்சம் நட்பாக கூட பேசியிருக்கவில்லை, இருந்தும் எங்கிருந்து வந்தது அவளுக்கு இந்தளவு தைரியம்!
விஷப்பாம்புக்கு இரக்கப்பட்டது போலல்ல ஆயிடுச்சு! அது புத்திய காட்டிருச்சு பாரு!
Advertisement
அதான் பெரியவங்க இரக்கப் படுறத கூட தகுதிப் பார்த்துதான் படனும்னு சொல்லியிருக்காங்க போல, பாத்திரம் அறிந்து பிச்சையிடுன்னு!
பரணிக்குள் ஒரே ஆதங்கம்! அவன் மேலயே கோபம்!
அன்று காலை அவன் ஆபீஸ்க்கு வந்திருந்தாள் அவன் சித்தி தாமரை!
Advertisement
அவள் அப்படி அடிக்கடி வருபவள் அல்ல. எனவே ஏதோ ரொம்பவும் முக்கிய விஷயம் போல என்று அவளிடம் பேச உட்கார்ந்தான்.
Advertisement
தாமரை, ”பரணி நீ என்ன ப்ளான்ல இருக்க?” என்றாள்.
“என்ன ப்ளான் என்றால் எத கேக்குறீங்க சித்தி?”
“அதான் உன் கல்யாண விசயத்தில்! நீ யாரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறே?”
Advertisement
இது என்ன கேள்வி சித்தி, அதான் உங்க எல்லோருக்குமே தெரியுமே, “நானும் டாக்டர் ஜான்வியும் லவ் பண்ற விஷயம்!”
“அப்புறம் ஏன் அந்த ஜனனியையும் கொண்டு வந்து வீட்டுக்குள்ள வச்சுருக்க?
அவளை தான் நீ முதல்ல லவ் பண்ணுனன்னு எனக்கும் தெரியும், உன் சித்தப்பா சொல்லியிருக்காரு! ஆனா அப்பவே அவருக்கு அவளைப் பிடிக்கலதான்!”
“ஆமாம் சித்தி, நான் பர்ஸ்ட் லவ் பண்ணினது என்னமோ அவளைத் தான், ஆனா சித்தப்பா இறந்தப்போ இங்க வந்தவ, ப்ரேக்அப் பண்ணிட்டு போய்ட்டா,
இந்த பட்டிக்கட்டுல எல்லாம் இருக்க மாட்டேன், நீ இந்த குடும்பத்தை விட்டுட்டு, சொத்தை மட்டும் பிரிச்சு வாங்கிட்டு வந்தா தொடரலாம்னு சொன்னா!
போடின்னு அவளை அப்பவே தலை முழுகிட்டேன்!”
“அப்ப, இப்ப எதுக்கு திரும்ப கூட்டிட்டு வந்திருக்க?”
“அவ இங்க ஏதோ வேலை விசயமா வந்தாளாம், ஒரு வாரம்மட்டும் தங்க இடம் வேணும்னு ரொம்ப கெஞ்சிக் கேட்டா, சரி பாவம்னு கூட்டிட்டு வந்தேன்.
வந்த இடத்தில் அவளுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லாம போயிடுச்சு, சரி நம்ம வீட்டுல இருக்கிற நேரம் அவளுக்கு ஏதாவது நடந்தா, நாம தானே வீணா பதில் சொல்லிட்டு இருக்கணும், அதான் அவ உடம்பு சரியானவுடனே அனுப்பி வைக்கலாம்னு இருக்கேன்” என்றான் பரணி!
“நீ இப்படி சொல்ற, அவ என்னமோ நீ அவளைத் தான் கல்யாணம் செய்யப் போறது மாதிரி வீட்டுல எல்லோரையும் அதிகாரம் பண்ணிட்டு இருக்கா!”
“என்னது அதிகாரம் பண்ணிட்டு இருக்காளா? என்ன சொல்றீங்க சித்தி?” அதிர்ந்தான் பரணி!
“ஆமா, இந்தா இந்த cctv புட்டேஜை பாரு!” என்று அவள் பவி அனுப்பி வைத்ததைக் காட்டினாள்.
அதில் அவள் ஆதவனின் தலையில் அடிக்கும் காட்சியைக் கண்டவுடன் அவனுக்கு அப்படியே ரத்தம் கொதித்தது!
பின் அவள் தாமரையைப் பற்றி அடித்த கமெண்ட்டையும் கேட்டவன் கோபத்தின் உச்சநிலைக்கே போய் விட்டான்!
சரியாக அதே நேரம் அங்கு வந்துவிட்ட பரத், அவன் பண்ணி வைத்திருந்த கால் ரெக்கார்டையும் போட்டு காட்டிவிட அவ்வளவுதான் பரணி ரவுத்திர மூர்த்தி ஆகிவிட்டான்!
அடக்க முடியா கோபத்துடன் தான் அவன் வீட்டிற்குள் வந்ததே!
அவன் இப்படி வந்து கொண்டிருப்பது தெரியாமல், ஜனனி அங்கு கனகுவைக் கால்பிடித்து விட சொல்லி, கேவலமாக பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டு விட்ட பிறகு கோபம் தலைக்கேறி அவளை உடனே வீட்டை விட்டு அனுப்பி விட்ட பின்தான் அவனுக்கு மூச்சே விட முடிந்தது!
இதையல்லாம் கனகுவின் மூலம் கேள்விப் பட்டுவிட்ட ஜகது உடனே மகள் வீட்டில் இருந்து கிளம்பிவிட்டார்.
கிளம்பிய உடனே பரணியின் ஹாஸ்பிட்டல் சீப் டாக்டரிடம் பேசி, உடனே ஜான்வியை கேம்ப் டியூட்டியில் இருந்து அனுப்பி வைக்க சொல்லி கேட்டுக்கொண்டார்.
கேம்ப் முடிய இன்னும் கூட நாட்கள் இருந்தன!
ஆனால் பாதியிலேயே அவளை அனுப்பி வைக்க சொல்லிக் கேட்டுக் கொண்டார் அவர். அதான் அந்த ஜனனியைத் துரத்தி விட்டாச்சே!
அடுத்த நாள் காலை.
ஜான்வி அந்த மெடிக்கல் கேம்பில் இருந்து விடைப்பெற்றுக்கொண்டு, ஹாஸ்பிட்டல் வந்து, அவளின் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பினாள்.
அப்போது அவளைக் குறுக்கே வந்து தடுத்தார் ஒருவர்!
வேற யார் கனகு தான்! ஆபரேசன் ஸ்டார்ட்ஸ் நவ்!
“யம்மாடி ஜானகி, அம்மாச்சிய உன் வண்டில வீட்டுக்கு கூட்டிட்டு போ, இந்த மணிப் பய என்னை அம்போன்னு விட்டுட்டு கட்சிக் காரங்களை பார்த்தவுடன் ஓடிப் போய்ட்டான்!”
“சரி அம்மாச்சி ஏறிக்கோ” என்று அவள் ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து வீடு நோக்கி ஓட்டினாள்.
கனகு அவளிடம் பேச்சுக் கொடுத்தார்.
“எப்படிம்மா போச்சு உன் மருத்துவ முகாம் வேலை! தங்கின இடம் எல்லாம் வசதியா இருந்துச்சா?”
“சூப்பரா போச்சு அம்மாச்சி, அங்க நான் தங்கின வீடு கூட உங்க பிரண்ட்டோட வீடு தானாமே! அந்த பாட்டி ரத்தினகுமாரி, உண்மையில ஜெம்! என்னை அப்படி பார்த்துக்கிட்டாங்க!”
“ஆமா ஆமா ரத்தினமும் எங்க சினேகிதி தான்!
ஷ்..ஷ்.. அப்பா என்னடி இது வெயில் இந்த போடு போடுது இப்பவே!” கனகு புலம்பலை ஆரம்பித்தார்! கொஞ்சம் உள் நோக்கத்துடன்!
இது புரியாமல், அவருக்கு ஒத்து ஊதினாள் ஜான்வி!
“ஆமா அம்மாச்சி, வெயில் இப்பவே இப்படி கொளுத்துது! எனக்கு அப்படியே எங்காச்சும் குளம் குட்டையில் ஓடிப் போய் விழலாமான்னு இருக்கு!”
“அப்படியா சொல்ற? குளத்தில் எல்லாம் வேணாம், போற வழியில நம்ம தென்ன்னந்த்தோப்பு இருக்கு.
அங்க பம்ப் செட் ஓடிட்டு இருக்கும் அங்க வேணா போய் குளிக்கிறியா? அங்கன்னா வெளி ஆள் யாரும் வர மாட்டாங்க, நீ பாட்டுக்கு நிம்மதியா அந்த தொட்டில இறங்கி குளிக்கலாம்!
கையில் கூட மாத்து துணி தான் வச்சுருக்கியே! வண்டிய தோப்பு பக்கம் விடு!”
ஜான்விக்கும் பம்ப் செட்டில் குளிக்க ஆசை வந்தது!
இரண்டொரு முறை அவள் பவி, பாரதியுடன் இங்கு வந்து குளித்து இருக்கிறாள்!
இவள் ஆசைப் பட்டு கேட்டாள் என்று கூட்டி வந்திருக்கிறார்கள் அவர்கள்!
“சரி அம்மாச்சி, நீயும் வாயேன் குளிக்க!” கேட்டாள் ஜான்வி!
“ஆத்தி, இவ என்னை என் வேலையையே கெடுத்துடுவா போலயே!” என்று நினைத்தவர், “என் கிட்ட மாத்துதுணி இல்லயே, நீ போய் குளி, நான் இந்தா இங்க மருதாணியிலை பறிச்சுட்டு வரேன்!
பேத்திங்க எல்லாம் வச்சுப்பீங்க! இங்க பக்கத்துல வேலியோரம் இருக்கிற மருதாணிதான் நல்லா பத்திக்கும்! பொடிஇலையா இருக்கு பாரு” என்று சொல்லி கழன்று கொண்டார் கனகு!
“ம்ம். சரி அம்மாச்சி” என்று ஜான்வி குளிக்க போய் விட்டாள் தனியே!
அங்கிருந்த வாட்ச்மேன் சுந்தரத்தை அழைத்தார் கனகு!
அவன் வந்ததும், தன் ஜாக்கெட்டில் இருந்த மணிப் பர்சை எடுத்தவர், அவனிடம் ஒரு நூறு ரூபாயைக் கொடுத்து,
“டேய் சுந்தரம், நீ போய் முருகன் கடையில டீ வடை சாப்பிட்டுட்டு, அப்படியே ஆத்தாவுக்கு சூடா மெதுவடை வாங்கிட்டு வா!
சூடா வேணும்டா, இருந்து போட சொல்லி பொறுமையா வாங்கிட்டு வா!
ஆறுன வடையை வாங்கிட்டு வந்த தொலைச்சுப்புடுவேன்! நான் இங்க பார்த்துக்கிறேன், நீ போ! மீதி காசை நீயே வச்சுக்கோ!”
அதைக் கேட்டவுடன் அந்த சுந்தரம் குஷியாகி, தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு போய் விட்டான்!
இப்போது கனகு மட்டும் தான்!
அடுத்து அவர் போன் செய்தது பரணிக்கு!
“டேய் பரணி, நான் இங்க நம்ம தோப்புல இருக்கேன்டா, வந்து என்னைக் வீட்டுக்கு கூட்டிட்டு போடா!”
“நீ எதுக்கு ஆத்தா அங்க போன? யார் கொண்டு போய் அங்க விட்டா?”
“நான் வீட்டுக்கு தாண்டா போயிட்டு இருந்தேன் நம்ம முருகேசன் கூட!
வழியில் நம்ம தோப்புல வெளிப்பக்கம் வேலியோரம் இருக்கிற மருதாணி மரத்தைப் பார்த்ததும் பறிக்க இறங்கிட்டேன்!”
“சரி ஆத்தா, நானும் வீட்டுக்குதான் வந்திட்டு இருக்கேன், நீ அங்கியே இரு! வரேன்!” என்று வைத்து விட்டான் பரணி!
சொன்ன மாதிரி அடுத்த ஐந்து நிமிசத்தில் அவன் வந்து கொண்டிருப்பதை தூரத்திலேயே பார்த்து விட்ட கனகு, ஜான்வி என்ன பண்ணுகிறாள் என்று உள்ளே எட்டிப் பார்த்தார்.
அவள் குளித்து முடித்து அருகில் இருந்த மோட்டார் ரூமில் போய் கதவைத் தாளிட்டுக் கொண்டு உடை மாற்ற போனது தெரிந்தது.
அதற்குள் பரணியும் வந்து விட, அவனை இன்னும் கொஞ்ச நேரம் இங்கயே நிறுத்தி வைக்க எண்ணி, “டேய் பரணி நான் இங்க இருக்கேண்டா” என்று குரல் கொடுத்தார்!
அவரைப் பார்த்தவுடன் பரணி அதிர்ந்தான்!
“அய்யோ என்ன ஆத்தா, உனக்கு வயசு திரும்புதா, எது மேல ஏறி நின்னுட்டு இருக்க?”
கனகு அங்கே அந்த மருதாணி மரம் அருகே தாழ்வாக சென்று கொண்டிருந்த ஒரு வேப்ப மரத்தின் கிளையில் நின்று கொண்டிருந்தார்!
“அதாண்டா, ஏதோ ஒரு ஆர்வக் கோளாறில் ஏறி விட்டேன், இப்ப பயமா இருக்குடா, என்னைக் கொஞ்சம் இறக்கி விடுடா!”
“சரி இரு வரேன்.” என்ற படியே வேஷ்டியை மடித்துக் கட்டிக்கொண்டு அவனும் கொஞ்சம் அந்த கிளையில் ஏறி, கனகுவின் கையைப் பிடித்து இறக்கி விட முயற்சித்தான்!
பரணி இப்போதெல்லாம் பெரும்பாலும் வேஷ்டிதான் அணிகிறான்.
எக்ஸ்போர்ட் கம்பெனி மீட்டிங் அல்லது வேறு எங்காவது முக்கிய மீட்டிங்ஸ் என்றால் மட்டுமே பார்மல்ஸ்!
மற்றபடி வேஷ்டி தான் அவனுக்கு வசதியாய் இருந்தது!
இப்போதும் கனகு ஸேபாக இறங்கி விட்டிருக்க, பாவம் பரணி தான் பக்கத்து வயல் வரப்பில் விழுந்து விட்டான்!
எழுந்தபோது களிமண் மீண்டும் வழுக்கி விட அப்படியே சேற்றில் நன்றாகவே விழுந்து விட்டான்!
அன்றைக்கு பரத் பைக்கில் இருந்து கீழே விழுந்து கையை உடைத்துக் கொண்டதுபோல, இன்று பரணியும்!
“அய்யோ அய்யோ பார்த்துடா பரணி! மெல்ல.. மெல்ல நல்லா காலை ஊன்றி எழுந்திரு!”
“என்ன ஆத்தா இப்படி பண்ணிட்ட?” சலித்த படி, எழுந்தான் பரணி!
“சரி நீ போய் பம்ப் செட்டில் கைகால் கழுவிட்டு வா”
“அது தான் பண்ணனும்! இப்படியேவா போக முடியும்!” என்றவன்,
“இந்தா புடி” என்று வாட்ச் மற்றும் மொபைல்போனை அவரிடம் கொடுத்து விட்டு பம்ப்செட் நோக்கி போனான்.
கனகு ஜான்வி வெளியே வந்து விட்டாளா என்றுப் பார்த்தார்!
இன்னும் கதவு திறக்கப்படவில்லை!
அடுத்து அவர் போன் செய்தது மணிக்கு!
“டேய் எங்க இருக்க?”
“இதோ வந்திட்டோம் ஆத்தா, ஒரு நூறு எண்றதுக்குள்ள வந்திடுவோம். அங்க எல்லாம் ரெடி தானே!”
“ம்ம். ரெடி தான் நீ வா” என்று போனை வைத்தார் கனகு!
கதிரவனும் அவன் மாமனாரும் தீவிரமாய் இருந்த கட்சியின் தலைவர் அப்போது வேறு வேலையாக திருச்சி வந்திருக்க,
அவரிடம் பரணி நடத்திக்கொண்டிருக்கும் இலவச மருத்துவமுகாம் பற்றி கட்சிக்காரர்கள் காதில் போட்டு வைக்க, அவர் தாமரையின் அப்பாவை அழைத்து விவரம் கேட்டார்!
“ஏன்யா, நம்ம கதிர் பேருல இருக்கிற ஆஸ்பத்திரி நடத்துற இந்த முகாமை நாம் பார்த்து வாழ்த்து சொல்லாட்டா எப்படி! நீ ஏன் இதப் பத்தி என்கிட்ட சொல்லவே இல்ல?” செல்லமாக கோபித்துக் கொண்டார் தலைவர்!
“அது இல்ல தலைவரே, பரணி தம்பிக்கு அரசியல் ஆர்வம் இல்லை, இது என்னோட தனிப்பட்ட வேலை, இதுக்கு அரசியல் கலர் பூச வேணாம்னு சொல்லிடுச்சு! அதான்!” அவர் தயங்கியபடி சொன்னார்!
“அது எப்படி நம்ம கதிர் குடும்பத்திற்கு அரசியல் சம்பந்தம் இல்லாம போகும்?
வாங்க நாம அங்கப் போயிட்டு போகலாம்” என்று அவர் நேரே போய் விட்டார் கட்சிகாரர்கள் மீடியாக்கள் சூழ!
இது பரத்திற்கு தெரிந்து அவன் பரணியை அழைத்து உடனே மெடிக்கல் கேம்பிற்கு வர சொல்ல எண்ணி அவனை அழைக்க, பரணி பம்ப் செட்டிற்கு சென்றிந்த சமயம் அது!
போனை அட்டென்ட் பண்ணிய கனகு, “சரிடா நான் அவன் கிட்ட சொல்லி அங்க வர சொல்றேன்” என்று போனை வைத்தவர்.
அடுத்து மணியை அழைத்தவர் “டேய் நீ எங்க இருக்க?” என்று கேட்டார்.
“ஆத்தா, நான் இங்க தலைவர் கூட இருக்கேன்! அவர் நம்ம கேம்பிற்கு கூட வந்துருக்கார் தெரியமா, பரணி அண்ணன தான் காணோம்!” என்றான் மணி!
“டேய் மணி அவன் இங்க தோப்புல இருக்காண்டா, நீ ஒண்ணு பண்ணு.
தாமரை அப்பா கிட்ட போய், தலைவரை அப்படியே வீட்டுக்கு அழைச்சுகிட்டு வந்து கதிர் போட்டோவுக்கு மாலை போட்டு மரியாதை பண்ணினா தினகரன் அய்யாவுக்கு சந்தோசமா இருக்கும்னு சொல்லி வை.
அவங்கள எப்படியாவது வீட்டுக்கு அழைச்சுட்டுப் போ!”
“எதுக்கு ஆத்தா?”
“சொன்னத செய்டா!”
“சரி ஆத்தா!”
சொன்ன மணி கனகு சொன்னபடியே தாமரை அப்பாவின் காதில் போய் சொல்ல, அவரும் அப்படியே தலைவரிடம் விண்ணப்பித்தார்!
தலைவரும் சந்தோசமாகவே சம்மதித்தார்!
உடனே கார்கள் எல்லாம் வரிசைக் கட்டி பரணியின் வீட்டை நோக்கி திருப்ப பட்டன!
போகும் வழியில் தான் இருந்தது பரணியின் தென்னந்தோப்பு!
அங்கு பரணியின் ஸ்கார்பியோ நிற்பதைப் பார்த்து விட்ட மணி,
“பரணி அண்ணன் கூட இங்கதான் இருக்குது போல” என்று கத்தினான்!
உடனே தலைவர், “வண்டிய கொஞ்சம் நிறுத்துப்பா, பரணி தம்பியைப் பார்த்து பேசிவிட்டு அவரையும் அழைத்து போகலாம்!” என்றார்.
அவருக்கு பரணியை கட்சிக்குள் இணைத்துக்கொள்ள ரொம்ப ஆசை!
பம்ப் செட்டில் உடம்பைக் கழுவிக் கொண்டு, வேஷ்டியை நனைத்து பிழிந்துக் கட்டிக்கொண்டு வந்த பரணி தோப்பிற்குள் நுழைந்த கட்சிக் கொடி கட்டிய கார்களின் அணிவகுப்பைக் கண்டு ஒரு கணம் திகைத்தான்!
பின்னேயே வந்து அவன் வலது புறங்கையை தன் கையுடன் இணைத்துக் கொண்டாள், அப்போது தான் உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்த ஜான்வி இத்தனை கட்சிக்காரர்களைக் கண்ட பயத்தில் திகைப்பில் எதையும் யோசிக்காமல்!
அப்போது தான் குளித்து முடித்தற்கு அடையாளமாய் அவள் தலையில் ஈரத்துண்டு! இவன் இடுப்பில் ஈர வேஷ்டி!
சட்டென்று பார்ப்பவர் கண்களுக்கு இருவரும் பம்ப் செட்டில் ஒன்றாக ஜாலியாக ஜலக்க்ரீடை பண்ணி விட்டு வந்திருக்கும் தோற்றம்!
தாமரையின் அப்பாவிற்கு சங்கடமாக போய் விட்டது!
“என்ன இது, இவன் இப்படி இந்த பெண்ணுடன் இப்படி இருக்கிறான்?” என்று ஒரே சங்கடம் அவருக்கு!
அதற்குள் கனகு சட்டையை மணியிடம் கொடுத்தனுப்ப அவனிடம் இருந்து அதை அவசரமாய் வாங்கி அணிந்தி கொண்டு வணக்கம் சொல்லி தலைவரை வரவேற்றான் பரணி!
“உன் சித்தப்பா கதிர் நினைவா கதிரவன் நினைவு மருத்துவ மனை ஆரம்பித்து, இப்ப ஒரு இலவச மருத்துவ முகாம் நடத்தி சமூகப் பணி செய்றீங்க தம்பி வாழ்த்துக்கள்!” என்றார்!
கூட வந்த மீடியாக்கள் இதை கவர் செய்தன!
மேலும் அவரிடம், “மறைந்த கதிரவன் மாதிரி பரணிதரனையும் உங்கள் கட்சியில் சேர்த்துக் கொள்ளும் நோக்கம் இருக்கிறதா” என்று!
“இதற்கு தம்பி தான் பதில் சொல்லணும்! இப்ப நடத்திட்டு இருக்கிற சமூகப் பணிகளை நம் கட்சியில் இணைந்து அவர் செய்யலாம்! என்ன தம்பி சொல்றீங்க?” அவனிடம் திரும்பிக் கேட்டார் அவர்.
“இல்லங்க ஐயா, அதப் பத்தி நான் ஒண்ணும் இது வரை யோசித்தது இல்லை! இப்போதைக்கு என் குடும்பத்திற்கு நான் செய்ய வேண்டிய கடமைகளையே இன்னும் முடிக்க வேண்டியிருக்கிறது!”
“நாங்களும் பார்த்தோம்” என்றார் ஒரு ரிப்போர்ட்டர் குறும்பாக!
“யோவ் யாருய்யா அது, இப்படி எல்லாம் பேசி தம்பியை சங்கடப் படுத்தாதீங்க!”
“நல்லா சொல்லுங்க தலைவரே, அந்த பொண்ணு பரணி கல்யாணம் பண்ணிக்கப் போற பொண்ணு!” என்றார் தாமரையின் அப்பா!
“ஓ. அப்படின்னா எப்ப கல்யாணம்? சொல்லுங்க நம்ம தலைமையிலேயே பண்ணி வச்சிடுவோம்!”
கல்யாணத்திற்கு தலைமை தாங்க அவரின் டேட் கேட்டு ஒரு கும்பல் அலைந்து கொண்டிருக்கும் போது, தலைவரே இப்படி சொல்லியதும்,
கூட இருந்த கட்சிக் காரர்கள் தாமரையின் அப்பா காதைக் கடித்து சொன்னார்கள்!
“யோவ் நல்ல சான்ஸ்யா இது, தலைவர் இப்ப மதுரைக்குப் போறாரு, அப்படி அங்கிருந்து தென் மாவட்டங்களுக்கு ஒரு ரெண்டு நாள் ட்ரிப்!
திரும்ப திருச்சி வழியாக அவரும் போது அவர் தலைமையில் கல்யாணத்தை நடத்திடுங்க!”
“இன்னும் ரெண்டு நாளிலா? நான் பரணியின் அப்பாவிடம் பேசணுமே!”
“பேசுங்க பேசி சீக்கிரம் தேதி வைங்க! இப்பவே ரெண்டு பேரையும் மீடியாக் காரங்க எல்லாம் கவர் பண்ணிட்டாங்க பாருங்க.
நாளைக்கே போட்டுடுவான்! டாக்டரை மணக்க இருக்கிறார் மறைந்த கதிரவனின் அண்ணன் மகன் பரணின்னு!” சொல்லி விட்டு அவர் தலைவர் பின்னால் சென்று விட்டார்.
கொஞ்ச நேரம் யோசனையை நின்றவர் பின் ஒரு முடிவுக்கு வந்தவராய், அவரும் தலைவரோடு சென்று விட்டார்.
வீட்டிற்குப் போய் கதிரவனின் போட்டோவிற்கு மாலை அணிவித்து வணங்கிய பின், பரணியின் அப்பா தினகரனை நலம் விசாரித்துவிட்டே சென்றார் தலைவர்.
தாமரையின் அப்பா, தினகரனிடம் பரணியின் கல்யாணம் பற்றி பேசினார்.
அவர் வீட்டிலுள்ள எல்லோரையும் அழைத்து பேசினார்.
எல்லோருக்கும் தலைவர் தலைமையில் திருமணம் நடத்த சம்மதமே, ஜான்வியைத் தவிர்த்து!
அவளின் பப்பாவிற்கு தெரியாமல் எப்படி?
அவள் தயங்கிய போது, கனகுவும் ஜகதுவும் அவள் மண்டையைக் கழுவினார்கள்!
“உன் அப்பா படித்த டாக்டர் தானே! அதெல்லாம் இப்போது உள்ள சூழ்நிலையை எடுத்து சொன்னால் அதெல்லாம் புரிந்து கொள்வார்!
நீ ஒண்ணும் வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காதே!” என்று இதையே வேறு வேறு வார்த்தைகளைப் போட்டு பேசினார்கள் இருவரும் மாற்றி மாற்றி!
கூடவே ராமருக்கு அணில் போல பரத்தும் விக்கியும்!
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தாலும், ஜான்வி அவள் அப்பாவை கனெக்ட் பண்ணி பேசும் முயற்சியைக் கைவிடவே இல்லை!
திரும்ப திரும்ப அவர் நம்பருக்கு ட்ரை செய்து கொண்டு தான் இருந்தாள்!
ஜகதீஸ், ஒரு உலக டாக்டர்கள் மாநாடுக்காக அமெரிக்கா சென்று இருந்தார்! அவரை என்ன முயன்றும் தொடர்பு கொள்ள முடியவே இல்லை!
இந்த சூழ்நிலையில் தான் யாருமே எதிர்பார்க்காத ஒருவரிடம் இருந்து ஒரு போன்கால் வந்தது அவர்கள் வீட்டின் லான்ட்லைனிற்கு!
ஹலோ! ஜெகதாம்பாள் இருக்காங்களா? என்று கேட்டது எதிர்முனையில் ஒரு வயதான பெண்குரல்!
“ஜெகதாம்பாளா, யாரு அத்தைப்பேரை இப்படி சொல்லி கேட்பது?” என்று ஒரு கணம் குழம்பினார் போனை அட்டென்ட் செய்த தமிழரசி!
ம்ம். இருக்காங்க. நீங்க யாரு?
நான் ஜானகி! ஜகதுவோட சினேகிதி! பெங்களூரில் இருந்து பேசுறேன்! என்றது மறுமுனை!
error: Content is protected !!