Skip to content
Post Views: 3,400

நாட்கள் அதன்போக்கில் செல்ல பத்மினிக்கு வளைகாப்பு செய்யலாம் என்று தாயம்மாள் முடிவு செய்து பத்மினியின் அண்ணனிடம் பேசினார்… பத்மியின் அண்ணன் கந்தனும் “நானே உங்க கிட்ட பேசலாம்னு இருந்தேன் அத்த… ஆனா எப்படி பேசுறது…. என்ன பண்றதுனு தெரியாம தயங்கிட்டு இருந்தேன்….” என்று சங்கடமாக கூறினார்….
Advertisement
“இதுல சங்கட பட என்ன இருக்கு கந்தா… உன் தங்கச்சிகாக நீ என்ன பண்ணாலும் சந்தோஷம் தான்…. இப்படி ஒரு மருமகளை கொடுத்ததே எனக்கு ரொம்ப சந்தோஷம்…. அம்மா அப்பா இல்லாம ஒரு ஆளா ஒரு பொம்பள பிள்ளையை வளர்த்து இருக்க… அதுவும் நல்லபடியா…. நீயும் நல்லவனா வளர்ந்து இருக்க… நீ எதுவும் செய்யவேண்டாம்…. என் மருமகளுக்கு நான் பண்ணிக்குறேன்…” என்று கூறினார் தாயம்மாள்…..
Advertisement
“அது உங்க பெருந்தன்மை அத்த… என்ன பண்ணனும்னு சொல்லுங்க நான் பண்றேன்” என்று கந்தன் தன்மையாகவே கூறினார்..
Advertisement
“சரி கந்தா… உன் விருப்பப்படி உன் தங்கச்சிக்கு ஒரு பவுன் நகை வை… வேற எதுவும் வேணாம்… சாமியும் இது தான் சொல்லுவான்.. இதுவும் உன்னால முடிஞ்சா மட்டும் போதும்…. “என்று கூறிவிட்டு “அப்புறம் உன் கல்யாணத்தை எப்போ பண்ணலாம்னு இருக்க…. உனக்கும் வயசு ஆகுதுல… உன் பக்கத்துல யாரோ பொண்ணு இருக்கா….” என்று கேட்டார் தாயம்மாள்….
Advertisement
“அதுக்கு என்ன அத்த… கொஞ்ச நாள் போகட்டும்… பாப்பாவுக்கு குழந்தை பிறக்கட்டும்… அதுக்கு அப்பறம் பாத்துக்கலாம்” என்று கூறினார் கந்தன்….
“அதை பத்தி உன் தங்கச்சிகிட்ட பேசிக்குறேன்… நல்ல நாள் பாத்து சொல்றேன் அன்னிக்கி வளைகாப்பு வெச்சிக்கலாம்.. உன் சொந்ததுக்கும் சொல்லிடு” என்று கூறினார் தாயம்மாள்….
“சரி அத்த” என்று கூறிவிட்டு “நான் கிளம்புறேன் அத்த… தங்கச்சிகிட்ட சொல்லிடுங்க” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டார்…
நாட்கள் கடந்து வளைகாப்பு நாளும் வந்தது… வளைகாப்பு எந்தவித பிரச்சனையும் இன்றி சிறப்பாக நடைபெற்றது…. நாயகி முகத்தை தூக்கி வைத்து கொண்டே தான் வந்து இருந்தார்… வளைகாப்பிற்கு வந்து இருந்த அனைவரும் “நீ இன்னும் குழந்தை உண்டாகலயா” என்று கேட்டு விட்டு சென்றனர்….
ஏற்கனவே கோவத்தில் இருந்த நாயகி இதை கேட்டு இன்னும் கோவமடைந்தார்… ஆனால் எதுவும் செய்யமுடியாமல் அமைதியாக அவர் வீட்டிற்கு சென்று விட்டார்…
தாயம்மாளே நாயகியிடம் “இப்போ எல்லாம் வீட்டு செலவுக்கே பணம் பத்துறது இல்ல… கடை ஒழுங்கவே போறது இல்ல… அதுனால கொஞ்ச நாள் பணம் தர முடியாது” என்று கூறினார்…. எதுவும் பேச முடியாமல் கோவத்தில் தான் இருந்தார் நாயகி….
நாட்கள் சென்றாலும் வன்மத்துடன் தான் சுற்றி கொண்டு இருந்தார் அவர்… அன்று நேரம் பார்த்து தன் வன்மத்தை கொட்டி இருந்தார் அவர்…
அன்று ஒருநாள் கடையில் அவசர வேலை என்று சாமியப்பன் கடை சென்று இருக்க தாயம்மாள் நெருங்கிய சொந்ததில் ஒருவர் இறந்துவிட்டார் என்று நாயகியிடம் பத்மினியை பார்த்துக்கொள் இரண்டு மணிநேரத்தில் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றுவிட்டார்…
பத்மினிக்கு எப்போது வேண்டும் என்றாலும் வலி வரலாம் என்ற சூழ்நிலை… தாயம்மாள் போகவில்லை என்று தான் கூறினார்… பத்மினி தான் அவரை பேசி அனுப்பி வைத்தாள்…. அவரும் போக மனமில்லாமல் தான் சென்றார்..
அவர் நினைத்தது போல் பத்மினிக்கு வலி வந்துவிட்டது…. அந்த நேரத்தில் நாயகி இருந்தும் அந்த நேரம் வந்த வன்மத்தில் அவர் வலியில் துடிப்பதை பார்த்துவிட்டு வேண்டுமென்றே கதவை வெளியில் பூட்டிவிட்டு தன் வீட்டுக்கு சென்றுவிட்டார்….
பத்மினியால் எழுந்து நிற்க கூட முடியவில்லை… வலியில் துடித்து கொண்டு இருந்தார்… அந்த நிலைமையிலும் தன் வயிற்றில் கை வைத்து ” தம்பி பயப்படக்கூடாது அம்மா எப்படியும் உன்னை காப்பாத்துவேன் ” என்று உள் இருக்கும் தன் சிசுவுக்கு தைரியம் கூறினார்….
மெல்ல மெல்ல அறையில் இருந்து கூடத்திற்கு வந்து இருந்தார்… ஆனால் அதுக்கு மேல் அவரால் வெளியில் செல்ல முடியவில்லை….
அவரால் சத்தமாக கூட யாரையும் அழைக்க முடியவில்லை…
நாயகி வீட்டை பூட்டிவிட்டு வெளியே செல்லும் போது பக்கத்து வீட்டு பெண் இவரிடம் “நாயகி வீட்டுல யாரும் இல்லையா… அண்ணியும் இல்லையா… பெரியம்மா அண்ணி வீட்டுல தான் இருப்பாங்கனு சொன்னாங்க… நீ பூட்டிட்டு போற…. ” என்று கேட்டார்….
“அவங்க அவங்களோட அண்ணன் வீட்டுக்கு போய் இருக்காங்க…. ” என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்….
பக்கத்து வீட்டு பெண்ணும் சரி என்று அவரின் வீட்டுக்கு சென்று விட்டார்….. அப்போது பக்கத்து வீட்டு பெண்ணின் அப்பா கடைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார்…. “என்னப்பா எல்லாம் வாங்கிட்டிங்களா” என்று கேட்டார்…
அந்த மனிதரும் “எல்லாம் வாங்கிட்டேன்… கந்தன் தம்பி தான் கடைல இருந்தது… சாமியப்பன் எதோ விஷயமா வெளிய போய் இருக்காம் ” என்று கூறினார்…
“அப்பா என்ன சொல்றிங்க…. அண்ணி அவங்க வீட்டுக்கு போய் இருக்காங்கனு நாயகி கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் கதவை பூட்டிட்டு போனா…. அவங்க அங்க இருக்காங்கனா அண்ணி எங்க…???” என்று திலகா ( பக்கத்து வீட்டு பெண் ) பதறியவாரு கேட்டார்…
“இல்ல திலகா தம்பி காலைல இருந்தே கடைல தான் இருக்காம்… நான் வீட்டை தாண்டி தானு வந்தேன்… மருமக புள்ள வீட்டுலயும் இல்ல… வழில கூட பாக்கல…” என்று அவரும் பதறியவாரு கூறினார்…
“அப்போ அண்ணி எங்க ப்பா… வாங்க” என்று கூறி தாயம்மாள் வீட்டுக்கு தந்தையும் மகளும் சென்றனர்…. அங்கு பத்மினியின் செருப்பு வெளியில் தான் இருந்தது…. அவர்களின் பதட்டதை பார்த்து அக்கம் பக்கத்தினரும் என்னவென்று கேட்டனர்…. திலகாவும் அனைத்தும் கூறினார்…. அனைத்தும் கூறிவிட்டு “இப்போ அண்ணி எங்கனு தெரியல சித்தி… அண்ணி செருப்பும் இங்க தான் இருக்கு…” என்று கொஞ்சம் அழுகையுடனே கூறினார்….
மீண்டும் திலகாவே “சித்தி நாயகி பூட்டிட்டு போகும் போது அவ முகம் வெளிரி போய் தான் போனா… ஒரு வேல அண்ணி உள்ளேயே இருந்தா….” என்று கொஞ்சம் பயமாகவே கூறினார்….
ஒரு பையனை போய் சாமியப்பனிடமும் கந்தனிடமும் கூற கூறிவிட்டு பூட்டை உடைக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர்…. பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அனைவரும் அதிர்ந்து போய் விட்டனர்… உள்ளே பத்மினி வலியில் மயக்கத்துக்கு சென்று கொண்டு இருந்தார்… பணிகுடமும் உடைந்து இருந்தது…. அனைவரும் தூரிதமாக செயல்பட்டு மருத்துவமனையில் அனுமதித்து இருந்தனர்… விஷயம் கேள்விப்பட்டு கந்தனும் சாமியப்பனும் வேகமாக மருத்துவமனை வந்தனர்… திலகா அனைத்தும் சாமியப்பனிடமும் கூறிவிட்டாள்… விஷயம் அறிந்து சாமியப்பன் இறுகி நின்றுவிட்டார்…. மருத்துவர் கொஞ்சம் சிரமம் தான் என்று கூறிவிட்டார்…. விஷயம் கேள்விப்பட்டு தாயம்மாளும் வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு அழுதாவாறே வந்தார்…..
தாயும் மகனும் அனைவரையும் பதற விட்டு தான் மீண்டும் உயிர் பெற்றனர்…. அப்போது தான் சாமியப்பன் கொஞ்சம் இலகுவானார்…. நாயகியை கண்டால் வெட்டி போடும் ஆத்திரத்தில் இருந்தார்….. தாயம்மாளும் அதே கோவத்தில் தான் இருந்தார்…. சாமியப்பன் தாயம்மாள் இருவரும் கந்தனிடம் கைக்கூப்பி மன்னிப்பு வேண்டினர்… கந்தன் பதறியவாரு இருவரின் கையையும் இறக்கிவிட்டார்… மூன்று நாள் கழித்து தாயும் மகனும் வீடு திரும்பினர்….
அவர்கள் இருவரையும் பக்கத்து வீட்டு பெண்ணை பார்க்க சொல்லிவிட்டு தாயம்மாள் கோபத்துடன் நாயகி வீட்டுக்கு சென்றார்…. சென்ற அவர் நாயகியை நான்கு ஐந்தறை அறைந்து விட்டு தான் பேசவே ஆரம்பித்தார்…..
“நீ எப்படிடி என் வயத்துல வந்து பிறந்த… குடிக்கெடுத்தவளே… இனிமே உனக்கும் எங்களுக்கும் சம்பந்தமே இல்ல…. இனிமே என் வீட்டு வாசப்டியை கூட நீ மிதிக்க கூடாது…. உன் மூஞ்சுல முழிச்சா கூட பாவம் தான்…. இனிமே உனக்கு பொறந்த வீடே இல்லனு நினச்சிக்கோ…. அம்மாவும் இல்ல… கூடபிறந்த அண்ணனும் இல்ல… நான் செத்தா கூட வீட்டு வாசப்படியை மிதிக்காத…” என்று ஆவேசமாக கூறிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார் தாயம்மாள்….
இப்போதும் திருந்தாமல் தன் தாயையும் வன்மத்துடன் பார்த்து நின்றார் நாயகி…..
error: Content is protected !!