Post Views: 4,728
கதையை பற்றி சிறு விமர்சனம் குடுத்தா சந்தோஷப்படுவேன். புடிச்சிருந்தா தெரிஞ்சவங்களுக்கு பகிர்ந்துக்கோங்க. நன்றி மறுபடியும். பாக்கலாம் அடுத்த கதையில் (கண்டிப்பா சில மாசம் ஆகும்)
*****
வீட்டினுள் நுழைந்ததுமே, “அது என்ன எப்ப பார் ஸ்ரீ ஸ்ரீனு அவங்க பேர சுருக்கி பேசுறீங்க?” கணவனிடம் கேள்வி எழுப்பினாள்.
“சுருக்கி பேர் சொல்றதுல என்ன இருக்கு, பழகிடுச்சு ஸ்டார்டிங்ல இருந்தே”
Advertisement
“நீங்க பேர் சொல்ற மாதிரி இல்ல. கொஞ்சுற மாதிரி இருக்கு”
அர்ஜுன் சத்தமாக சிரித்தான், “என்ன பொறாமை தலை தூக்குற மாதிரி இருக்கு” மனைவியை நெருங்கி வந்தான்.
“ஒரு ஆமையும் தலை தூக்கல. நானும் பாத்துட்டே தானே இருக்கேன் எப்ப அவங்கள பத்தி பேசுனாலும் ஸ்ரீ ஸ்ரீனு தான் வருது. உள்ளேயே பதிஞ்சிடுச்சு போல” முகத்தை ஒரு பக்கமாக தூக்கி வைத்த மனைவியை கைகளில் அள்ளினான் அர்ஜுன்.
Advertisement
“என்ன பண்றீங்க?”
Advertisement
அவள் அதிர, “எனக்கு பதிஞ்சிடுச்சு சொன்னல… அதான் என்ன பதிஞ்சிருக்குன்னு காட்ட போறேன்” என்றவன் குரலே ஒரு மார்கமாக இருக்க உள்ளுக்குள் சிறு ஆசை அதிர்வு.
“ஹாஸ்பிடல் போகலையா?”
“ம்ஹூம்”
Advertisement
“ஏதாவது எமெர்ஜென்சி கேஸ் இருக்குமே”
“நான் மட்டும் அங்க நியூரோ இல்லையே”
“ஆனா உங்கள பாக்க தான் நிறையா பேர் வருவாங்களே”
“நாளைக்கு பாத்துக்குறேன்” அப்போ இன்று முழுதும் இவன் வீட்டிலா? பதறி தான் போனாள்.
அதோடு அர்ஜுன் மனைவியை தங்கள் அறையிலுள்ள கட்டிலில் படுக்க வைக்க இன்னும் பயம் கூடியது.
அவன் கிடத்திய வேகத்தில், “நாம அங்க போறோம்னு சொல்லிருக்கோம்ல. வாங்க பேக்கிங் ஸ்டார்ட் பண்ணிரலாம்” கீழே குதிக்க பார்த்த மனைவியை அப்படியே அமுக்கி அவள் மேல் மொத்தமாய் சாய்ந்திருந்தான்.
இலக்கியாவின் உடலோடு மொத்தமாய் அழுத்தி இருந்தது அர்ஜுனின் கல் உடல்.
அவன் கணம் ஒரு புறமெனில் அவனின் இந்த நெருக்கம் வேறு வகையான அவஸ்தையை கொடுத்தது.
“ஆறு மாசம் கழிச்சு தான் வர்றோம்னு சொல்லிருக்கேன். அப்பவும் இங்க இருக்குறது இப்டியே தான் இருக்கும்”
“சா… சார்…”
“என்னங்க…” அவள் மூச்சு வாங்கி பேச திணறவும் இன்னும் மனைவியை அணைத்து படுத்தான்.
இவளால் மூச்சே விட முடியாமல் போக, அர்ஜுன் மார்பில் கை வைத்து தள்ளி, “ஐயோ மூச்சு முட்டுது போடா” அவளை மீறி கூறிவிட குலுங்கிய சிரிப்போடு மனைவியின் மேலிருந்து மேலிருந்து விலகி அருகே சரிந்தான்.
“அப்பா… ஐயோ…” மார்பினில் இவள் கை வைத்து மூச்சு வாங்க, மீண்டும் மனைவி மேல் விழுந்தான் அர்ஜுன். இம்முறை அவன் சிரம் மட்டும் அவள் கழுத்துக்கு கீழ் விழுந்தது.
“என்ன பண்றீங்க, கொஞ்சம் மூச்சு விட்டுக்குறேனே”
“பேர் சுருக்கி சொல்லி கூப்பிடுறதால அவ என்னோட லைப்ல இருக்கானு அர்த்தமாகிடுமா? இப்போ நீ சொன்னியே போடானு. அந்த உரிமை அவளுக்கு கிடைச்சிடுமா, இல்ல உன்ன தவற வேற யாரையும் தான் டி போட்டு நான் கூப்பிட்டிருப்பேனா?”
“வாய்ப்பு அதிகம். நமக்கு கல்யாணம்னு முடிவாகுறதுக்கு முன்னாடி அன்னைக்கு உங்க ரூம்ல டி சொன்னிங்களே என்னை”
“எப்டி சொன்னேன்னு எனக்கே தெரியல. எனக்கே தெரியாம ஏதோ ஒரு தேவதை வந்து என் காதுல ‘இவ தான் உன்னோட வாழ்க்கை’னு சொல்லிருக்கும் போல”
“உங்க கம்பி கட்டுற கதை எல்லாம் இங்க வேணாம்” என்றாலுமே அவள் கன்னம் சூடேறி சிவந்து தான் போனது.
“என்ன சொன்னா என் இலக்கியா நம்புவா?” புரண்டு படுத்தவன் அவள் கழுத்தெங்கும் முத்தம் வைக்க கூச்சத்தில் உடல் தாளாது போனது.
“வர வர ரொம்ப பண்றீங்க நீங்க” முத்தத்தை சுட்டிக்காட்டினாள்.
“ஏன் பிடிக்கலையா?” விலகியவன் கன்னத்தை வேகமாக பிடித்து சிவந்த கன்னத்தோடு, “பிடிச்சிருக்கு தான். ஆனா ரொம்ப கூச்சமும் இருக்கு”
அவளின் கன்னம் கிள்ளி முத்தமிட்டவன் அன்று அவள் தந்தை வீட்டிற்கு வாங்கி வந்த செடிகளை நட்டு வைக்க மாடி அழைத்து சென்றான்.
சற்று மீண்டு வந்தவளிடம் கண் பார்த்தே நெளிய வைத்தான். அவள் சிணுங்களில், “நான் என்னடி பண்றேன்” என்றான் கேள்வியாக.
“எதுக்கு இப்டி பாக்கிறிங்க? உள்ள போங்க. ஒரு காபி எடுத்துட்டு வாங்க. பசிக்கிது” ஏதோ காரணம் கூறி அனுப்பி வைத்தாள்.
திரும்பி வந்தவரிடம், “பாத்திங்களா இந்த அடுக்கு மல்லில இப்போவே ஒரு பூ வந்துடுச்சு, கூடவே ரெண்டு மொட்டு” குறிஞ்சி பூவின் அதிசயம் போல் அவள் சற்று கண் விரித்து கணவனுக்கு காட்ட அந்த சிறிய பாவனையில் மீண்டும் அவளிடம் மயங்கினான்.
“எடுத்து வச்சுக்கோ இலக்கியா?”
“ஒன்ன எப்படி?”
“இரு” உள்ளே சென்றவன் அவள் உடமைகளில் சிறு கிளிப் ஒன்றை எடுத்து வந்து பூவை பறித்து சிகையில் சூடினான். ஒற்றை பூவாயினும் அதன் வெண்மைக்கு நேர் மாறாக கருகருவென இருந்த இலக்கியாவின் கூந்தலில் எடுப்பாய் மிளிர்ந்தது.
“அழகா இருக்கு” என்றான் ரசனையாக.
அவன் என்ன அர்த்தத்தில் கூறினானோ அதன் மறைபொருளை உணர்ந்தவள் தானும் சிரிப்போடு அதனை உள்வாங்கினாள்.
இருவருக்கும் மற்றவரின் அழகை வர்ணித்து புகழ்ந்து தள்ளுவதில் விருப்பம் இல்லாது போக, இது போன்ற வார்த்தை பரிமாற்றங்கள் அழகாய் இருவானத்தையும் விரித்தது
“நான் வீட்டுல ஒரு பொய் சொன்னேன் கவனிச்சியா?” கேட்டான் அவளை ஆழம் பார்த்து.
“இல்லையே. இதை கொஞ்சம் பிரிச்சு தாங்க” மண்ணை சுற்றியிருந்த நெகிழிப்பையை நீக்கி அவளை பார்த்தவன்,
“நம்ம கல்யாணத்தோட பேஸ் (base) உன்னோட லவ் இல்லனு”
அவன் தராமல் இருக்க கை நீட்டி வாங்க போனவள் அதிர்ச்சியுற்று அப்படியே சிரம் தாழ்த்தினாள், “பொய் இல்லையே” என்று.
“அப்போ ஹாஸ்பிடல் மட்டும் தான் உன்னோட மைண்ட்ல இருந்துச்சு?”
அவள் அமைதியாக இருக்க, “எனக்காக தான்-னு கூட சொல்ல வேணாம், ஆனா எனக்காக இல்லனு என்ன பாத்து சொல்லு”
அவளில் எழுந்த தடுமாற்றத்தை உன்னிப்பாக கவனித்தவன் அவள் தோண்டி வைத்திருந்த மண்ணில் செடியை மேலோட்டமாக வைத்து உள்ளே சென்றான்.
இலக்கியாவுக்கு பெரும் பூகம்பகமே நிகழ்ந்தது, அவர்கள் திருமணத்தில் பாதி காரணம் மருத்துவமனையின் நலன் கருதி இருந்தாலும் மீதி தன்னுடைய சுயநலம் தானே.
அவனிடம் ஒப்புக்கொள்ளுதல் ஒரு வித ஆசூசையை தன் மேல் தானே உணர்வது போலிருந்தது. எல்லாம் சரியாக நடக்க பிரச்னை இல்லை, தவறி இருந்தால் அர்ஜுனின் வாழ்க்கைக்கு அவள் பதில் கூறிவிட முடியுமா?
மகிழ்ச்சியாக இருந்த மனநிலை மாறி மனமெங்கும் பாரம் இடம்பெயர்ந்து.
அப்பொழுது விட்ட பேச்சு வார்த்தை அன்று இரவு உணவை முடித்து இருவரும் மெத்தையில் படுத்தும் தொடரவில்லை.
கோவமாக இருக்கிறானோ என இலக்கியா கணவனின் முகத்தை அடிக்கடி பார்க்க, அவன் மிகவும் இயல்பாக இருந்தான்.
அந்த அமைதியும் இயல்பு மாறா முகமும் அவனின் எதிர்பார்ப்பு அவள் மனம் திறப்பது ஒன்றே என தெளிவாக கூறியது.
புத்தகம் ஒன்றை படித்துக்கொண்டிருந்தவன் உறக்கம் வரவே அதனை மூடி வைத்து இலக்கியாவின் நெற்றியில் இதழ் பதித்து, “குட் நைட்” திரும்பி படுக்க போனவன் டீ-ஷர்ட் காலரை திரும்ப விடாமல் பிடித்துகொண்டாள்.
இலக்கியா, “எப்படி தெரியும்?” கண்ணீரோடு அவனை பார்த்தாள்.
அர்ஜுன், “என்ன தெரியும்?”
“உங்களுக்கு தெரியும்” அவளின் சிணுங்களில் சிரித்தவன், “என்னடி மொட்டையா பேசுற”
“மொட்டையும் இல்ல. சொட்டையும் இல்ல. சொல்லுங்க எப்படி தெரியும்?” வசதியாக படுத்தவன் தன்னுடைய மார்பினை பெண்ணுக்கு கண் ஜாடையில் காட்ட தயக்கமின்றி சரணடைந்தாள்.
“என்னைக்குன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஸ்ரீ பத்தி… ஷ்ஷ்… அஞ்சுஸ்ரீ”
அவனின் செயலில் சிரித்தவள், “பரவால்ல சொல்லிக்கோங்க” என்றாள்.
“ம்ஹூம் சொல்லல. அஞ்சுஸ்ரீ விஷயம் தெரியாம இருந்த நேரம் அது. நாம பாத்தே ரொம்ப நாள் ஆச்சு நினைக்கிறன். அந்த ரிப்போர்ட் வந்த நாள், உன்ன பாக்குறதுக்காக நான் வீட்டுக்கு வந்தேன்.
அந்த நேரம் என் கார பாத்து நான் அதுல இருக்கேனு தெரிஞ்சு உன் கண் ஒரு சொட்டு கண்ணீர் விட்டுச்சு பார். அவ்ளோ தான். அத்தனை நாள் உன் மேல இருந்த கோவமெல்லாம் போச்சு.
அடுத்து நான் காட்டின கோவம் எல்லாம் வேணும்னு நானா வர வச்சது. அது சாதாரண கண்ணீர் மாதிரி தெரியல, அவ்ளோ பீலிங்ஸ் எதுக்கு அந்த கண்ணுக்கு வரணும் யோசிக்க ஆரமிச்சப்போ கிடைச்ச பதில் தான் இது”
விழியை அவனை விட்டு பெண்ணவள் அகற்றவில்லை. காதலை வாய் மொழியாய் கூறுவதை காட்டிலும், கண்களால் உணர்த்துவது ஒரு அழகென்றால், அந்த மொழியை புரிந்து பிரதிபலிப்பது ஒரு அழகிய வரம்.
“ஒவ்வொரு தடவ நான் எங்கையாவது போயிட்டு வர்றப்ப இதே மாதிரி தான் ரியாக்ட் பண்ணுவியா?”
“எப்பவும் இல்ல. அன்னைக்கு ஏன்னு தெரியல. ரொம்ப எமோஷன் ஆகிட்டேன்”
“எதுக்குடி உனக்கு என் மேல இவ்ளோ ஆசை?”
அர்ஜுனை இமை சிமிட்டாது பார்த்தவள், “என் அம்மா என் நியாபகத்துல கூட இல்ல ஆனா அவங்களை ரொம்ப பிடிக்கும். அதுக்கு காரணம் சொல்ல முடியுமா?” அதே போல் தான் உன்னையும் என அவள் கூறியதில் உடல் சிலிர்ப்பது அவன் முறையானது.
யாரை வெறுக்க காரணங்கள் தேடினானோ இன்று காரணமே இல்லாமல் அவள் மேல் பைத்தியமாக காத்திருந்தது மனம். இன்னும் அவளின் ஆழம் சென்று அறிய ஏக்கம்.
“என்னால உன் அளவு லவ் பண்ண முடியுமா தெரியல. கம்மியா இருந்தா அட்ஜஸ்ட் பண்ணிக்குவியா?”
கண் சிமிட்டி இலக்கியா பதில் கொடுக்க, அர்ஜுனின் இதழ்கள் மனைவியை நிதானமாக அனைத்துக்கொண்டது.
“நான் ரொம்ப தப்பான பொண்ணு தானங்க… உங்கள கார்னர் பண்ணி என்ன கல்யாணம் பண்ண வச்சிருக்கேன். எனக்கே என்ன நினைச்சா அசிங்கமா இருக்கு”
“தப்பு தான், ஆனா நீ பண்ணதுல பத்து பேர் நல்லா இருகங்கனா நம்ம பண்ண தப்பும் சரியா மாறிடும்”
இலக்கியாவுக்கு மனமே ஆறவில்லை. தன்னை சமாதானம் செய்ய தான் அர்ஜுன் இவ்வாறு கூறுகிறான் என தெளிவாக தெரிந்தது.
மௌனமாக அவன் மார்பினில் மூக்குரச, அவள் சிரத்தின் மேல் நாடி பதித்து, “பத்து பேர விடு. என்ன மட்டும் எடுத்துக்கோ. பணத்துக்காக என்னவும் செய்ற குடும்பத்துக்கிட்ட இருந்து என்ன காப்பாத்திருக்க. அவளை கல்யாணமே பண்ணிருந்து அதுக்கு அப்பறம் ஏதோ ஒரு சந்தர்ப்பத்துல எனக்கு தெரிஞ்சிருந்தா அவளை விட்டுட்டு எனக்குன்னு ஒரு வாழ்க்கை தேடிருக்க என் வீட்டுல விட்டிருக்க மாட்டாங்க.
அவளுக்குன்னு ஒரு சந்தர்ப்பத்தை குடுத்து பாரு அர்ஜுன்னு தான் சொல்லிருப்பாங்க. அதுக்கு அப்பறம் என் வாழ்க்கையை யோசி” தலை தூக்கி அவனை பார்த்தாள்.
“கண்டிப்பா மொத்த சந்தோஷத்தையும் இழந்து நின்னுருப்பேன். அவ பண்ணது தப்பு இல்ல, நம்பிக்கை துரோகம். அந்த நரகத்துல இருந்து என்ன காப்பாத்திருக்க”
“இருந்தாலும் நான்…”
“இல்லம்மா… மறுபடியும் சொல்றேன் நீ பண்ணது தப்பில்ல. உன் காதலை அடையிரதுக்கு நீ எடுத்த முயற்சி அது”
“உங்களுக்கு அவங்க மேல அட்ராக்ஷன் மட்டும் தான் இருக்குற மாதிரி எனக்கு பீல் ஆச்சு அதுனால தான் நான் அப்டி சொன்னேன். நீங்க அவங்கள லவ் பண்ற மாதிரி எனக்கு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா உங்களுக்கு நடுல வந்திருக்க மாட்டேன். என் மேல சத்தியம்” கரத்தை அவள் தலைக்கு எடுத்து செல்ல வேகமாக பிடித்துக்கொண்டான்.
“இதுக்கெல்லாம் சத்தியம் பண்ணுவியாடி” அவள் கன்னத்தை நனைத்திருந்த கண்ணீரை துடைத்தவன் மென்மையாக அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
அவள் என வந்தாலே காதலெனும் எதிர்பார்ப்பு பிறந்துவிடுகிறது அவனிடம். மணிகண்ணக்காய் இல்லை என்றாலும் மனம் விட்டு பேசும் சில நிமிடங்கள் அவள் கொடுக்கும் காதல் அணைப்பினில் அந்த எதிர்பார்ப்பும் முழுமையடைந்துவிடுகிறது.
“நான் உன்ன கல்யாணம் பண்ணாம போயிருந்தா என்ன பண்ணிருப்ப இலக்கியா?”
அந்த நினைவே கசந்தது, “ரொம்ப கஷ்டம் தான். உங்க நிச்சயம் வந்தே எனக்கு ஒரு வாரம் தூக்கம் இல்ல. எவ்ளோ அழுதேன் தெரியுமா? மனசெல்லாம் பாரமா இருந்துச்சு. ஆனா உங்களுக்கு கல்யாணம் ஆகிருந்தா நாலு அஞ்சு வருஷம் கழிச்சு அப்பாக்காக வேற வழியே இல்லாம இன்னொருத்தர கல்யா…”
அவள் கூற வருவதன் பொருள் புரிய வேகமாக மனைவியின் இதழை அவள் வார்த்தைகளோடு சேர்த்து சிறை செய்திருந்தான்.
“சொல்லாதடி கடிச்சே தின்னுடுவேன்” இடையே அவளை விடுவித்து எச்சரித்தவன் மீண்டும் மென்மையாக மனைவி இதழணைத்தான்.