Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 14

தென்றல் – 14

 

“போதும் நிறுத்துங்க சார்”, “இப்போ நீங்க என்ன சொல்லவரிங்க.



Advertisement

ஒரு பொண்ணு தனியா போனா இந்த ஆண் சமூகம் எங்களை கற்பழித்துவிடும் அதை தானே சொல்லவரிங்க” என்றாள் சிந்து.

என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்தான் ஆதவ்.

“என்ன சார் இப்படி அமைதியா இருந்தா எப்படி.

Advertisement

நீங்க சொல்லவந்தது இது தானே” என்றாள்.

Advertisement

சற்றே தளர்வாய் “ஹ்ம்ம்…”ஆமாம் என்றான்.

‘ஏன் சார் தெரியாமத் தான் கேக்குறேன் எப்போ பார்த்தாலும் தனியா போகாத, உடையை சரி செய், இரவு நேரம் கடந்து வெளியே செல்லாதே என்றெல்லாம் எங்களைப் பார்த்து, பெண்களைப் பார்த்து சொல்றிங்களே! ஆனா ஏன் ஒரு வாட்டி கூட ஆண்களிடம் நீ கொஞ்சம் ஒழுக்கமாக இரு, பெண்கள் தனியாக வந்தாள் அவர்களுக்கு காவலாய் செல். உன் இச்சாதாபங்களை அடக்கிக் கொள். எல்லா பெண்களும், உன் உடன் பிறந்த அன்னை, தங்கை, அக்காக்கள் என்று நினைவில் வைத்து அவர்களுக்கு பாதுகாப்பு அரணாய் இரு” என்று ஏன் சொல்ல மாட்டேங்குறீங்க என்று மூச்சு வாங்க பேசி முடித்தாள்.

“ஹே…. சிந்து இப்போ எதுக்காக இப்படி நீங்க ரியாக்ட் ஆகுறீங்க.

Advertisement

நான் பொதுவாத் தான் சொன்னேன்”என்றான் ஆதவ்.

“நீங்க வேணும்னா பொதுவா சொல்லி இருக்கலாம் ஆனா நான் என் சொந்த வாழ்க்கையில் இருந்து தான் சொல்கிறேன்” என்று வழியும் கண்ணீரைத் துடைத்து முன்னே வேகமாக நடந்தாள்.

“மேடம் நில்லுங்க” என்று அவள் பின்னே ஓடி சென்று அவளுடனே நடந்தான் ஆதவ்.

“இப்போ என்ன வேணும் உங்களுக்கு. ப்ளீஸ்…லீவ் மீ அலோன்” என்று கத்தினாள் சிந்து.

“சிந்து ப்ளீஸ்…..”

“சாரி….நான் உங்களை இந்த வார்த்தைக் காயப்படுத்தும் என்று நினைக்கவேயில்லை. நான் ஏதோ உங்களை எச்சரிப்பதாய் நினைத்து உங்கள் பாதுகாப்புக்காக தான் சொன்னேன்”.

“ரியலி சாரி மேடம்” என்றான் ஆதவ்.

அவளுக்கு கொஞ்சம் மனம் அமைதி அடைந்தது.

இதழின் ஒரு ஓரத்தில் சிரித்தாள் சிந்து.

“அப்பாடா…சமாதானம் ஆயிட்டீங்களே” என்று பெருமூச்சு விட்டான் ஆதவ்.

இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டனர்.

“எங்க போகணும் சொல்லுங்க சிந்து நானும் உங்க கூட உங்களுக்கு துணையா வறேன்” என்றான் ஆதவ்.

அவளின் சிரிப்பு மறைந்தது.

ஐயோ…. மேடம் நான் அந்த அர்த்தத்தில் சொல்லல என்று பதறினான்.

அவன் பயத்தைக்கண்டு அவளுக்கு சிரிப்புத்தான் வந்தது.

“உங்க வாழ்க்கையில் என்ன நடந்தது என்றெல்லாம் எனக்கு தெரியாது சிந்து”.

“ஆனா நீங்க ஏதோ ஒரு பிரச்சனையால் நன்கு பாதிக்கப்பட்டு இருக்கீங்க”. எப்போவாது என் கிட்ட அதை ஷேர் பண்ணனும் நினைச்சீங்கன்னா தாராளமா எந்த தயக்கமும் இன்றி சொல்லலாம்”.

“அஸ் எ பிரண்ட்டா உங்க கூட எப்போதும் இருப்பேன் ட்ரெஸ்ட் மீ”.

“அண்ட் நீங்க நினைக்குற அளவுக்கு எல்லா ஆம்பளைகளும் தப்பானவங்க இல்லை சிந்து” என்றான் ஆதவ்.

அவன் பேச பேச சிந்துவின் மனம் சற்று சாந்தம் அடைந்தது.

“இப்போ உங்க கூட நான் வரலாமா” என்றான்.

“எனக்கு யார் உதவியும் தேவை இல்லை. எனக்கு பயமும் இல்லை” என்றாள்.

“ஐயோ…சிந்து எனக்கு தான் பயம்”. “அதனால் தான் எனக்கு துணையாக நீங்க வாங்க” என்றான் ஆதவ்.

“ஹ்ம்ம்…”என்றவள் அதற்கு மேல் ஒன்றும் மிண்டாது நடந்தாள்.

இருவருக்கும்முள்ளேயான மௌனம் பேரழகாய் இருந்தது.

குளிரில் அவள் உடல் நடுங்க,தன் கோட்டை கழட்டிக் கொடுத்தான் ஆதவ்.

“இந்தாங்க இதை போட்டுக்கோங்க. குளிர் ரொம்ப அதிகமா இருக்கு” என்றான்.

“வேண்டாம்…. சார். பரவாயில்லை” என்றாள் நடுங்கிக்கொண்டே,

“இப்ச்…. என்ன சிந்து நீங்க” என்று அவனே அவள் மேல் அந்த கோட்டை போர்த்தி விட்டான்.

அவள் அதை சரியாக அணிந்துக்கொண்டாள்.

“தேங்க்ஸ் ஆதவ் சார்”.

“பரவாயில்லை சிந்து” என்றான்.

“சிறிது தூரம் நடந்து விட்டு, ஆதவ் போதும் நாம வீட்டுக்கு போகலாம்” என்றாள்.

‘ஏன் என்ன ஆச்சு சிந்து கால் வலிக்குதா”என்றான்.

“ச்ச.. ச்ச…அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல சார். ரொம்ப நேரம் ஆச்சு ரஞ்சிதா திட்டுவா” என்றாள்.

“ரஞ்சிதாவா?’

‘ஆமாம்…’

“அவங்களும் எங்க வீட்டுலயா குடி இருக்காங்க’ என்று கேட்டான் ஆதவ் சந்தேகத்தோடு.

“என்ன சார் நீங்க தெரியாதமாதிரி கேக்குறீங்க” என்றாள் சிந்து.

“உண்மையாகவே மேலே யார் குடி இருக்கிறார்கள் என்றுக்கூட தெரியாது சிந்து. நீயே பார் நான் எத்தனை நேரம் சென்று வீட்டுக்கு வருகிறேன்” என்று.

ஏ”ன் அலுவலகத்தில் அத்தனை வேலையா?”என்றாள் சிந்து.

“ச்ச.. ச்ச…இல்லை சிந்து. நான் எப்பொழுதும் அலுவலகம் முடித்துவிட்டு நண்பர்களை சந்தித்து விட்டுத்தான் வருவேன். அதனால் தான் இத்தனை தாமதம்” என்று சிரித்தான்.

“ஹ்ம்ம்…அது சரி” என்று பேசி சிரித்தபடி வீடு திரும்பினார் இருவரும்.

“ஓகே…சிந்து நாளை சந்திப்போம். நல்லா ஹாப்பியா எந்த டிப்ரசணும் இல்லாம” என்றான்.

“ஹ்ம்ம்…ஓகே ஆதவ் சார். அண்ட் தேங்க்ஸ்” என்றாள்.

“சிந்து இன்னும் என்ன ஃபார்மாலிட்டி நீங்க என்ன ஆதவ்னே கூப்பிடுங்க.

நாம தான் இப்போ பிரண்ட்ஸ் ஆகிட்டோமே” என்றான்.

“ஹ்ம்ம்…”என்று தலை அசைத்தவள் மேலேச்சென்றாள்.

போகும் அவளை கண்கள் இமைக்காமல் ரசிக்கப்பார்த்தவன்,”இந்த பொண்ணுகிட்ட என்னவோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கு”.

“எப்போ பார்த்தேனோ அப்போதில் இருந்து இவள் என்னை கொஞ்சம் கொஞ்சமாக அவள் பக்கம் ஈர்த்துக்கொண்டே இருக்கிறாள்.

எப்போது முழுதாய் குடைச் சாயாப்போகிறேனோ தெரியவில்லையே”.

“குடும்பத்துக்கு ஏற்ற பெண். என்ன சற்றே கோபம் அதிகம், அது போக போக பழகிரும்” என்று தானக்குள்ளே அவளைப் பற்றி நினைத்துக்கொண்டு இருந்தான் ஆதவ்.

“டேய் சீசர் என்ன அப்படி பாக்குற? அவ என் ஆளு!

சும்மா போறவங்க வரவங்களை எல்லாம் குலைக்குற மாதிரி குலச்ச அப்பறம் நீ இந்த வீட்டுலயே இருக்க முடியாது… டியோ..”என்றான் ஆதவ்.

“டேய்…போடா இவனே, அம்மாவுக்கு உன்ன விட நான்தான் ரொம்ப செல்லம் போவியா” என்றது.

“ஹ்ம்ம்…. என்ன லுக்கு மைண்ட்குள்ள என்ன அசிங்கமா திட்டுற அப்படி தானே” என்றான் ஆதவ்.

அதற்கு…ஒருவாராக குழைந்து அவன் காலை சுற்றி விட்டு வீட்டிற்குள் ஓடியது.

‘சமாளிச்சிட்டான் கேடி பையன்”என்றப்படி அவனும் உள்ளே சென்றான்.

ரஞ்சிதா நன்கு உறக்கத்தில் இருந்தாள்.

“ஏய்…ரஞ்சி…. ரஞ்சி…”என்று அவளைத் தட்டி எழுப்பினாள்.

“அடியே…. என்னடி உன் பிரச்சனை?

மணி என்ன ஆச்சு தெரியுமா?” என்றாள்.

ஈ…என்று சிரித்தாள்.

“அடியே என்ன டி சிரிக்குற?

ஏதாவது காத்து கருப்பு அண்டிருச்சா!மாரியாத்தா காப்பாத்து இதுக்கு தான் நைட் நேரம் கெட்ட நேரத்துல வெளிய போகாதடி போகாதடினு தலைத்தலையா அடிச்சுகிட்டேன்” என்றாள் ரஞ்சிதா.

அவளை செல்ல கோபமாய் அடித்து “விட்டு சும்மா இருடி, எனக்கு அதெல்லாம் ஒன்னும் இல்ல”என்றாள் சிந்து.

“ஐயோ…. என்னனு தான் சொல்லித்தொலையேன் டி எனக்கு தூக்கம் தூக்கமாய் வருது” என்று சாய்ந்தாள்.

“அடியே தூங்கமூஞ்சி சொல்றதை கேளு….

எல்லா ஆம்பளைகளும் கெட்டவங்க இல்ல.

சில பேர் நல்லவங்களா தான் இருக்காங்க” என்று வெக்கப்பட

ரஞ்சிதாவின் கண்கள் விரிந்தது.

உறக்கம் போயேப் போச்சு.

முகத்தில் அடித்துக்கொண்டாள். “வலிக்குது அப்போ இது கனவு இல்லை உண்மைத்தான்”என்றவளை அதிசயமாக பார்த்தாள் சிந்து.

“என்ன டி என்னப் பண்ணிக்கிட்டு இருக்க. நான் எவ்ளோ எமோஷனல்லா உன் கிட்ட பேசிகிட்டு இருக்கேன். நீ என்னடானா இப்படி பண்ணிட்டு இருக்க” என்றாள் கோபமாக.

“ஏய் என்னடி இதுக்கு எல்லாம் கோபப்பட்டா எப்படி நான் சும்மா தான் விளையாடினேன்.

சரி சொல்லு…என்ன நடந்தது அப்படி இன்று”.

“இத்தனை நாள் எல்லா ஆண்களும் கெட்டவர்கள் என்று தானே கூறிக்கொண்டு இருந்தாய். இப்போது என்ன ஒரு புது மாற்றம்?”என்றாள் ரஞ்சிதா.

 

“மாற்றம் தான் டி ரஞ்சி. இன்னைக்கு நான் ஒரு மனிதரை சந்தித்தேன். சொல்லப்போனால் இதற்கு முன் கூட நான் அவரை ஒரு முறை பார்த்து இருக்கிறேன்”.

“நீ யாரடி சொல்ற?”என்றாள் ரஞ்சிதா.

“அவர் பேர் ஆதவ். இந்த வீட்டின் உரிமையாளர் மகன்” என்றாள் சிந்து.

அப்படியா சிந்து.

ஹ்ம்ம்…. அந்த அம்மா கூட ஒரு நாள் என்னிடம் தனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்று கூறினார்.

ஆனால் நான் ஒரு நாள்க் கூட அவரைப் பார்த்ததில்லை என்றாள்”.

“ஹ்ம்ம்…அவரைத் தான் நான் நான் கூறுகிறேன் ரஞ்சி. அவர் ரொம்ப நல்லவர்” என்றாள்.

“ஓ…அப்போ இவர் தான் உன் கனவுக் கண்ணனா? மன்னனா?” என்றிட

“ஏய்…. ய்.. ஓட்டாத டி. எனக்கு அவர் நல்ல குணம் பிடித்து இருக்கிறது அவ்ளோதானே தவிர, அவரை நான் காதலிக்கவில்லை”

“அதுமட்டும் இல்லை கண்டதும் என்ன காதலா?

எனக்கு காதல் மேல் நம்பிக்கையே இல்லை” என்றானபோது இதில் நான் எவ்வாறு காதலிப்பேன் சொல் என்றாள் சிந்து.

“ஹ்ம்ம்….நான் கூட ஏதோ உன் மனசு மாறிடுச்சோனு நினச்சு சந்தேகப்பட்டேன். ஆனா இப்போ அதுவும் இல்லைனு ஆகிருச்சு” என்று பெருமூச்சு விட்டாள் ரஞ்சிதா.

‘சரி ரஞ்சி நீ தூங்கு. விட்டா விடிய விடிய உன் பிரீ அட்வைஸ் கொடுக்க ஆரம்பிச்சுருவ” என்று அடங்கியப்படி சிரித்தாள் சிந்து.

“ஏன் சொல்ல மாட்ட என்னோட அருமை இப்போ தெரியாது டி. நேரம் வரும் என் காலம் வரும் இந்த கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்” என்று பாடினாள் ரஞ்சிதா.

“ஆமாம் பெரிய எம் ஜி ஆர் இவ…. போடி”என்று தள்ளிவிட படுக்கையில் சாந்தாள்.

அடுத்த நொடி குறட்டை சப்தம் தான் கேட்டது.

“அடிப்பாவி…இப்படி தூங்கிட்டாளே”என்று ஆ…. “எனக்கும் தூக்கம் வருது குட் நைட்” என்று அவளும் உறங்கினாள்.

இரவு மூன்று மணியளவில் சிந்துவின் கைபேசி ஒலித்தது.

“ஹலோ…”

“ஹலோ…ரஞ்சிதா சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பி வாங்க குயிக் இமீடியட்லி” என்று அழைப்பைத் துண்டித்தான் விக்கரம்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!