Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் -15

தென்றல் – 15

 

“ஏய்…ரஞ்சி எழுந்திரு டி சீக்கிரம்”என்று அவளை உசுப்பினாள் சிந்து.



Advertisement

“ஏய்…என்ன டி சிந்து உனக்கு பிரச்சனை. மணி மூனு தான் ஆகுது டி” என்றாள் ரஞ்சி.

“அது எனக்கும் தெரியும் மிக பெரிய பிரச்சனை டி

மொதல்ல எழுந்துருச்சு தொலை எரும” என்று அவளை படுக்கையில் இருந்து படாதப்பாடு பட்டு எழுப்பி அமரச்செய்தாள் சிந்து.

Advertisement

கண்களை கூட திறக்க முடியாமல் “ஐயோ…உனக்கு இப்போ என்ன டி வேணும்” என்றாள் சிணுங்கி கொண்டே.

Advertisement

“அடியே அவர் கால் பண்ணாரு டி. உடனே கிளம்பி வரச் சொல்லறாரு டி”என்று கூறினாள் சிந்து.

“அடியே…. எவரு டி அந்த அவரு” என்று வார்த்தையை இழுக்க,

“அவர் தாண்டி விக்ரம் சார்” என்றாள்.

Advertisement

மூடி இருந்த கண்கள் விரிந்தது.

“என்ன சொல்ற விக்ரம் சாரா?

அவர் எதுக்கு உன்ன இந்த நேரத்துல வர சொல்லனும்”என்று கூறினாள்.

“தெரியல டி. திடீருனு கால்ப்பண்ணி உடனே கிளம்பி வீட்டுக்கு வர சொல்றாரு டி”என்றாள் முழித்தபடி.

அவள் பயம் கூட அத்தனை அழகாய் இருந்தது.

“போச்சு…. டி.. போச்சு…அவர் உன்ன ஏதோ பண்ண பிளான் போட்டுட்டாரு. இனி உன் கதி அவ்ளோ தான்” என்று வேண்டும் என்றே பயமுறுத்தி வைத்தாள் ரஞ்சிதா அவள் பயந்த உருட்டை விழிகளை ரசிப்பதற்காகவே.

“ஏய்…இப்போ என்னடி பண்றது. ச்ச எல்லா ஆம்பளைகளும் இப்படிதான் போலே இருக்கு.

இதற்கு தான் நான் ஆண்களை வெறுக்கிறேன்” என்று கடிந்தாள் சிந்து.

“சரி நீ போய் என்ன ஏது என்று பார்த்துவா” என்றாள் சிந்து.

“என்ன டி சொல்ற எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றியா?”

“நீ சொன்ன ஒரு பொய் இப்போ என்ன ஓடி ஓடி ஒழிய வைக்குது.

இப்படி எத்தனை நாளைக்கு தான் ஓடி ஒழிஞ்சு அவரை ஏமாத்த முடியும்.

ஒருநாள் இல்லை ஒருநாள் நாம் வசமாக மாட்டிக்கொள்ளத் தான் போகிறோம் ரஞ்சி.

அதும் இல்லாமல் அந்த விக்ரம் மிகுந்த கோபக்காரர் வேறு” என்றாள் சிந்து.

“இப்ச்…விடு சிந்து. எல்லாம் உன் நன்மைக்காகத் தானே செய்தேன்” என்றாள்.

“நல்லா செஞ்ச டி யம்மா நீ நன்மை”.

“இப்போ மாட்டிக்கிட்டு முழிக்குறது நான் தான்” என்று சாடினாள்.

மீண்டும் அவள் அலைப்பேசி ஒலித்தது.

“ஏய் விக்ரம் சார் தான் டி இந்தா பேசு” என்று கையில் அலைப்பேசியை எடுத்துக்கொடுத்தாள்.

“பயமா இருக்கு டி என்று கைகள் நடுங்கிக்கொண்டே வாங்கி ஹலோ”என்றாள்.

காற்றுத் தான் வந்தது.

மீண்டும் குரலை செருமி ஹுக்கும் என்றபடி பேச துவங்கினாள்.

“சொல்லுங்க சார்” என்ற அடுத்த நொடி,

“ஏய்…உனக்கு அறிவு இல்ல” என்றான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார் என்ன ஆச்சு”என்றாள் நடுங்கும் குரலில்.

“என்ன ஆகணுமா?

அம்மா உன்ன உடனே பாக்கனும் அடம்பிடிக்குறாங்க.

எல்லாத்துக்கும் காரணம் நீ”என்றான் விக்ரம்.

“என்ன நானா?”

“நான் என்னப்பாண்ணினேன்.

நான் சரியாகத் தானே எல்லா வேலைகளையும் முடித்தேன்.

சொல்லப்போனால் அம்மாவிற்கு மருந்துகளை கூட நானே சரியாக கொடுத்துவிட்டேன்.

பின் என்ன இப்போ பிரச்சனை” என்றாள்.

“ஏன் மேடத்திற்கு எல்லாமே நான் போன்ல தான் சொல்லனுமா?

மேடம் வீட்டுக்கு வந்து என்ன ஏதுனு கேக்க மாட்டிங்களோ!”

“இங்க பாருங்க ரஞ்சிதா. நான் என் அம்மாக்காக தான் உங்களை வேலைக்கு இவ்ளோ சம்பளம் கொடுத்து வச்சி இருக்கேன்.

அவங்களை கூட உங்களை சரிவர கவனிக்க முடியலைன்னா அப்பறம் எதுக்கு உங்களுக்கு இங்க வேலை.

நாளையில இருந்து நீங்க வேலைக்கு வர வேண்டாம் ரஞ்சிதா” என்றான்.

“சார்…. சார்….” என்று பதறி தப்பே செய்யாமல் சாரி சார் என்றாள்.

அவன் மௌனமானான்.

“சார்…. நான் என்ன செஞ்சேன்னு எனக்குத் தெரியல.நான் உடனே கிளம்பி அங்க வறேன்” என்றாள்.

“குட் சீக்கிரம் வாங்க.

அம்மா நேரம் ஆக ஆக ரொம்ப ஆக்ரோசமா நடந்துக்கறாங்க, என்னால கட்ரோல் பண்ண முடியமாட்டேன்குது”என்றான் விக்ரம்.

“இதோ இன்னும் பத்து நிமிடத்தில் வந்துவிடுவேன்” என்றாள்.

“எப்படி வருவீங்க என்று வினாவினான் விக்கரம்.

“அது…. ஏதாவது ஆட்டோ…பிடிச்சு…”என்று வார்த்தையை விழுங்கினாள்.

“ஹ்ம்ம்…அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை.நான் ஆல்ரெடி கார் அனுப்பிட்டேன் சீக்கிரம் அதுல வந்து சேருங்க”என்று அழைப்பைத் துண்டித்தான்.

அதற்குள் வாசலில் ஹாரான் ஒலித்தது.

“ஏய்…சிந்து என்ன டி விக்ரம் இவ்ளோ ஃபாஸ்ட்டா இருக்காரு கட்டிக்கப்போறவ ரொம்ப கொடுத்து வச்சவ” என்றாள் ரஞ்சி.

“ஏய்…நேரம் காலம் தெரியாம இவ வேற” என்று முணங்கினாள் சிந்து.

சரி சரி திட்டித் தொலையாதா…போயிட்டு வா நானும் கொஞ்சம் தூங்கறேன்” என்று கட்டிலில் சரிந்தாள்.

“ஓய்…. என்ன டி நீ நிலைமையை புரியாம வா போகலாம்”என்று அவளை இழுத்தாள்.

“ஐயோ…நானா?

நான் எதுக்கு?

அந்த பூச்சாண்டி வீட்டுக்கு நான் வர மாட்டேன்ப்பா” என்றாள்.

“என்ன இப்படி ஒரு பிரச்சனையில மாட்டிவிட்டது மட்டும் இல்லாம, இப்போ என்னடானா எனக்கு என்னனு ஜகா வாங்குற பார்த்தியா, இது தான் உன் ஃபிரண்ட்ஷிப்பா” என்றாள் பொய் கோபத்துடன்.

“ஐயோ…இவளுக்கு நல்லது செய்யப்போய் இப்போ நானே பிரச்சனையில் போய் மாட்டிக்கிட்டேனே” என்றாள்.

அதற்குள் ஹாரன் மிகுந்த சப்தத்துடன் ஒலித்தது.

“ஐயோ…”என்று ஜன்னலை பார்த்தவள் “அதெல்லாம் அப்பறம் புலம்பு இப்போவா”…என்று இழுத்துச் சென்றாள் சிந்து.

 

இருவரும் காரில் ஏறியதும் கார் மிகுந்த வேகத்துடன் புறப்பட்டது.

“இங்க பாரு இப்போதைக்கு நான் தான் நீ, நீ தான் நான்” என்றாள் சிந்து.

“புரியலையே” என்று இழுத்தாள்.

“அடியே காதை கொஞ்சம் கொடு” என்று காதில் ரகசியமாய் அவள் திட்டத்தை கூறினாள் சிந்து.

“ஐயோ…இந்த விளையாட்டுக்கு எல்லாம் நான் வரலப்பா.

என்ன ஆள விடு” என்றாள் ரஞ்சிதா.

“ஏய்…எல்லா பிரச்சனைக்கும் காரணம் நீ தானே அப்போ நீ தான் அதை சரிப்பண்ணனும்” என்றாள் சிந்து.

“ஹ்ம்ம்…ஆனா ஊனா இதையே வேற சொல்லி என்ன லாக் பண்ணிரு”. “இவ நல்லதுக்காக ஒரு பொய் சொல்லப்போய் இப்படி வந்து வசமா மாட்டிக்கிட்டேன்” என்று உள்ளுக்குள்ளேத் தன்னை நொந்துக்கொண்டாள் ரஞ்சிதா.

சிறிது நேரத்தில் கார் வீட்டை அடந்தது.

ரஞ்சிதாவும், சிந்துவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு எச்சிலை விழுங்கினர்.

கார் வரும் ஓசை கேட்டதும் கீதா வெளியே வந்தார்.

அவர்கள் இருவரும் காரை விட்டு இறங்கவே இல்லை.

“ஏய் சிந்து என்ன இது விளையாட்டுச் சீக்கிரம் வெளியேவா அம்மா ரொம்ப மோசமாக நடந்துக்கொண்டு இருக்கிறார்.

நீ என்னடானா காலம் நேரம் தெரியாம இப்படி பண்ற” என்று உரிமையாய் அதட்டினார் கீதா.

கார் கதவு திறக்கப்பட்டது.

சிந்து காரை விட்டு இறங்கினாள்.

கீதா முகம் மலர்ந்தது.

காரின் அடுத்த கதவும் திறக்க எட்டி பார்த்தார் கீதா.

ரஞ்சிதா காரை விட்டு இறங்க கேள்வியாய் “இது யார் சிந்து” என்றார்.

““ஓ…உன் ஃபிரண்ட்டா” என்றார்.

“ஹா…ஆமாம்…கீதா அக்கா.

சார் எங்கே?”என்று வினவ

“உள்ளே தான் இருக்காரு” என்றார் கீதா.

மீண்டும் அவள் மனதில் பயம் பற்றிக்கொண்டது.

இப்போது என்ன நடக்காபோகிறதோ!என்ற அச்சத்தோட ரஞ்சிதாவின் கையைப் பிடித்து அழுத்தினாள்.

ரஞ்சிதா அவள் கையை ஆதரவாக பற்றி கவலைப்படதே “நான் இருக்கேன் சமாளிக்கலாம்வா”என்று தைரியத்தை அவளுக்கு கொடுத்து உள்ளே அழைத்து சென்றாள்.

வீட்டிக்குள் நுழைந்தவுடன் சப்தம் காதை அடைத்தது.

பொருட்கள் எல்லாம் பறந்து கொண்டு இருந்தது.

இனியா…. இனியா என்று அழைத்தபடி ஆக்ரோசமாக கத்தினார்.

விக்ரம் எதையும் கண்டுக்கொள்ளாமல் சோஃபாவில் விட்டதை பார்த்து விரக்தியாய் அமர்ந்து இருந்தான்.

இருவரும் மெல்ல விக்ரமை நெருங்க இருவரின் நிழலும் அவன் மீது படர்ந்தது.

தன் விழிகளை மெல்ல சுழற்றி அவர்கள் பக்கம் திரும்பினான்.

அவன் கண்கள் கண்ணீரால் கனத்து இருந்தது.

காட்சிகள் மங்கி தோன்றியது.

என்ன இரு உருவம் தெரிகிறதே என்று சற்று கண்களை விரித்து பார்த்தான்.

சிந்துவை கண்டதும் அவன் முகம் கோபத்தில் சிவந்தது.

ஏய்…உனக்கு இங்க என்ன வேலை.

ஏன் இங்க வந்த? உன்ன யார் இங்கே உள்ளே விட்டா என்று கத்தினான்.

அவள் ஒன்றும் பேசாமல் தலையை தாழ்த்தி நின்று இருந்தாள்.

ரஞ்சிதா உணர்ச்சிவசப்பட்டு அவனைத் திட்ட போக கையை பிடித்து தடுத்தாள் சிந்து.

கண்களால் அவளிடம் மன்றாடினாள்.

“இப்போது மட்டும் நீ வாயைத் திறந்தாள் உன் குரலை வைத்து நான் நீ நான் இல்லை” என்பதை கண்டுக்கொள்வார்.

அவரை நான் ஏமாற்றி விட்டேன் என்று நினைத்து மேலும் கோபம் கொள்வார்.

“என் மீது மட்டும் இல்லை உன் மீதும் தான்”.

“ஏன் என்றாள் அவர் நம்பியது உன்னைத்தான்” என்றாள்.

அவள் விளக்கம் சரியாகவேப்பட்டது ரஞ்சிதாவிற்கு.

அவளும் வாயை மூடிக்கொண்டு அவன் ஏச்சுக்கலையும், பேச்சுக்களையும் தாங்கிக்கொண்டு நின்று இருந்தனர்.

“ஏய் சிந்து என்ன இங்க நின்னுட்டு இருக்க, போ போய் அம்மாவை என்னவென்று” பார்.

அவர் நீ சொன்னால் தானே கேப்பார் என்று கூற

“இருவரும் ஒரே போலே கீதாவைப் பார்த்தனர்.

“இப்ச்…என்ன இப்படியே பார்த்துகிட்டே இருக்கப் போறியா போ” என்று அதட்டலாய்க் கூற இருவரும் மேலே செல்ல படியில் அடி எடுத்து வைத்தனர்.

எங்க போற நில்லு என்றான் விக்ரம்.

“ஐயோ இவன் படுத்துற இம்சை என்னால தாங்க முடியலையே. தலை வலிக்குதுடா தலைவலிக்குதே”என்ற வசனமே சிந்துவிற்கு நினைவில் வந்தது.

அதற்குள் உள்ளே இருந்து “இனியா”என்று பயங்கரமாக கத்தினார் சுசிலா அம்மா.

அனைவரும் பயந்து மேலே ஓடினர்.

தென்றல் மீண்டும் வீசும்…

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!