Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல் – 25

தென்றல் -24

இரவு உணவு தயார் செய்யப்பட்டது.”சிந்து விக்ரம் தம்பி பேசுனது உனக்கு ரொம்ப வருத்தமா இருக்கா என்றார் அம்சவேணி.

“இப்ச்…. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லமா. தப்பு என் மேல தான். அதை விடுங்க எல்லாரும் பசியோட இருப்பாங்க. நீங்க எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைங்க.நான் போய் வாழை இலை அறுத்துட்டு வந்தறேன்.நம்ம வீட்டுல நாலு தட்டு தானே இருக்கு” என்று இலை அறுக்கப் போனாள் சிந்து.



Advertisement

அவள் வருவதற்குள் சாப்பாடு எடுத்து வைத்துவிட்டார் அம்சவேணி.

அனைவரும் அமர்ந்து இருக்க அங்கு சிந்து மட்டும் இல்லை.

“அம்மா அவுங்க எங்க” என்றான் ஆதவ்.

Advertisement

“அவ அப்பறம் சாப்பிட்டுக்கறேன் சொல்லிட்டா தம்பி நீங்க சாப்பிடுங்க” என்றார் அம்சவேணி.

Advertisement

ஆதவை பார்த்து முறைத்தான் விக்ரம்.

“ரஞ்சிதாவோ இங்க இருந்து தப்பித்தால் போதும்டா ஆண்டவா” என்று இருந்தாள்.

அந்த நிலா வெளிச்சத்தில் பனி விழும் அந்த இரவில், நெருப்பு மூட்டைப்பட்டு இருக்க அனைவரும் சுற்றி அமர்ந்து இரவு உணவை முடித்தனர்.ஆற்று மீன் குழம்பும் தேங்காய் துவையலும் அத்தனை அருமையாக இருந்தது.

Advertisement

விக்ரம் இதை ரசித்து சாப்பிட்டான். அவன் கண்கள் என்னவோ தன் எதியை தானாகவே தேட துவங்கியது.

ரொம்ப ஹார்ட் பண்ணிட்டோமோ?

“ஆளையே காணோம்” என்று அவளை நொடிக்கு ஓரு முறை தேடினான்.

ஆனால் அவள் அவன் கண்களில் படவேயில்லை.

அனைவரும் சென்று உறங்க வீட்டிற்குள் இடம் பற்றாததால் வெளியில் கையிற்று கட்டில் போடப்பட்டது.

“சார்…நீங்க இதுல படுத்துக்கோங்க நான் திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் என்று நகர, ஏய் ஆதவ் அந்த வாயாடி பொண்ணு எங்க” என்று வினவினான்.

“அது எதுக்கு சார் உங்களுக்கு. எதுவும் திட்றதுக்கு பாக்கி இருக்கா?” என்றவனை,

“ரொம்ப பேசாதா போ போய் தூங்கு” என்று கடிந்துக்கொண்டான் விக்ரம்.

இரவெல்லாம் கொசு கடியில் துளியும் உரக்கம் இல்லை.

கொசுவை அடித்தே காலை விடிந்தது.

“சரிமா நாங்க அப்போ கிளம்பறோம். என்ன தேவை என்றாலும் என்னை கன்டென்ட் பண்ணுங்க. இது தான் என் கார்ட் என்று அவர் கையில் கொடுத்து விட்டு, துளசி நல்லா படிக்கணும் சரியா” என்றான் விக்ரம்.

“ஹ்ம்ம்…சரிங்க அண்ணா” என்று கூறினாள் துளசி.

அடிக்கடி வந்து போங்க தம்பி – அம்சவேணி.

ஹ்ம்ம்… கண்டிப்பா வறேன்.

அனைவரும் சொல்லி விட்டு விடைபெற அவளை மட்டும் கூட்டத்தில் காணவில்லை.

“ஹே…. எங்க அந்த பொண்ணு. சீக்கிரம் வர சொல்லு,அவளுக்காக என்னால காத்திருக்க முடியாது” என்றான் விக்ரம்.

“நீங்க ஒன்னும் காத்திருக்க வேண்டாம் சார். அவங்க வரமாட்டாங்க வண்டியை எடுங்க”என்றான் ஆதவ்.

ரஞ்சிதா அமைதியாய் காரில் அமர்ந்து இருந்தாள்.

“ஏன்? அப்பறம் எப்படி வருவாளாம்.”

“அதை பத்தி எல்லாம் நீங்க கவலைப்பட வேண்டாம்”என்றான் ஆதவ்.

“ஆதவ் வர வர நீயும் அவளை மாதிரி திமிரா பேச ஆரம்பிச்சுட்ட அப்புறம் நீ வேற வேலைத் தேட வேண்டியது வரும்” என்றான் விக்ரம்.

விக்ரம் வேறேதும் பேசாமல் அவன் மனம் ஏனோ படாத பாடுப்பட்டது.

ரஞ்சிதா தான் தன் அருகில் இருக்கிறாளே பின் எதற்காக இந்த தவிப்பு, அவன் கண்கள் ஏன் சிந்துவை தேடி பரிதவிக்கிறது.

வேறு வழியின்றி காரை எடுத்தான் விக்ரம்.

சிந்து விக்ரமின் கண்ணில் பட கூடாது என்பதற்காக அவன் எழும் முன்பே எழுந்து முதல் பேருந்தை பிடித்து ஊருக்கு சென்றுவிட்டாள்.

“திமிரு பிடிச்சவ”, என்று காரை விரைத்தான் விக்ரம்.

போகும் வழியெல்லாம் அவள் நினைவுகளோடு கந்தது தூரங்கள்.

சிந்துவிற்கு சுசிலா அம்மாவை பார்க்காமல் என்னவோ போல் இருக்க, வந்ததும் வராததுமாய் நேராக விக்ரம் வீட்டிற்கு தான் சென்றாள் சிந்து.

“அம்மா….” என்று அழைத்தபடி அறைக்குள் செல்ல, “இனியா வந்துட்டியா” என்று கட்டிக்கொண்டு அழுதார்.

“எங்க போன, என் கிட்ட சொல்லாமா என்ன ஏன் தனியா விட்டுட்டு போன இனி நீ எங்கையும் போகக்கூடாது” என்று அழுதார்.

“ஹ்ம்ம்…சரி சுசிலா அம்மா. உங்களை விட்டு நான் எங்கையும் போகல” என்றாள்.

மனதில் ஒன்றே ஒன்று மட்டும் தான் தோன்றியது. விக்ரமிடம் எல்லா உண்மையையும் கூறிவிடுவது நல்லது இல்லையேல் நிச்சயம் அது பெரிய விளைவுகளை எற்படுத்தும் என்று நினைத்துக்கொண்டாள்.

விக்ரம் ரஞ்சிதாவை வீட்டில் இறக்கி விட்டுவிட்டு “நாங்க ஆபீஸ் கிளம்பறோம் ரஞ்சி. நீங்க அம்மாவை பார்த்துக்கோங்க” என்று சென்றான்.

“ஐயோ…. என்ன பொழப்புடா இது. ஒரு பொய்யை சொல்லிட்டு ரொம்ப கஷ்டப்படுறேன்.இனிமே என் வாழ்க்கையில் எந்த பொய்யும் சொல்லவே கூடாது”என்றவள் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தாள்.

“அவள் வருவதைக்கண்ட சிந்து என்னடி வந்துட்டியா?”அவர் எங்கே என்றாள்.

“ஹ்ம்ம்…விக்ரம் சார் ஆபீஸ் போய்ட்டாரு. இங்க பாரு சிந்து என்னால இனியும் முடியாதுடி. நீயே நேரம் பார்த்து அவர் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லிரு” என்றாள்.

“நானும் அதை தான் நினைச்சிட்டு இருக்கேன் ரஞ்சி”.

“இதுக்கு மேலையும் உண்மையை சொல்லாமல் இருந்தாள் நாளை மிக பெரிய பிரச்சனையாகிவிடும். நான் இப்போதே அவருக்கு ஃபோன் பண்றேன்” என்று கையில் எடுக்க, சில நிமிடங்கள் யோசித்தாள்.

“என்ன யோசிக்கிற சிந்து. கம்ஆன் டு” என்றாள் ரஞ்சி.

“சுசிலா அம்மா” என்றாள் சிந்து.

“இப்ச்…. இப்படி எல்லாருக்காகவும் பார்த்து பார்த்துத் தான் நீ இப்படி நிக்கிற சொல்றதை கேளு இப்போ உண்மையை நீ சொல்றியா இல்லை நான் சொல்லட்டுமா” என்றாள் ரஞ்சி.

“ரஞ்சி அவசரப்பாடாத நான் சொல்வதை கொஞ்சம் கேளு. நாம மட்டும் இப்போ உண்மையை சொன்னா கண்டிப்பா விக்ரம் ரொம்ப கோபப்படுவாரு. அது மட்டும் இல்லை, இனி வேலைக்கு வர வேண்டான்னு சொல்லுவாரு.”

“அப்புறம் சுசிலா அம்மாவோட நிலைமை என்ன ஆகும் பத்தி நீ யோசிச்சியா?”

“நான் இல்லமா அவங்க ரொம்ப பாவம் ரஞ்சி.”

“என்னால சுசிலா அம்மாவ கஷ்டப்படுத்த முடியாது ரஞ்சி” என்றாள் சிந்து.

“அதுக்காக இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி ரெண்டு பேரும் மாறி மாறி வேஷம் போட முடியும். அதுவும் மௌனமாய் எப்படி?”

“இதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் சிந்து”.

“உனக்கு சொல்ல பயமா இருந்தா நானே சார் கிட்ட பேசறேன்.”

“நான் தானே இந்த விளையாட்டை ஆரம்பிச்சேன். நானே முடிச்சு வைக்குறேன் என்றாள் ஆவேசத்துடன்”.

“வேண்டாம் ரஞ்சி சொன்னா கேளு நானே நேரம் வரும் போது உண்மையை அவர் கிட்ட சொல்றேன்”.

“இப்போ வேண்டாம் ரஞ்சி ப்ளீஸ்” என்று கண்ணில் நீர் வார்த்துக் கொண்டாள்.

அங்கே வந்த கீதா இருவரும் பேசுவதை கேட்டுவிட்டு “ரஞ்சி சிந்து சொல்வது தான் சரி.”

“இப்போதைக்கு இதை சொல்லவேண்டாம்.எல்லாத்துக்கும் ஒரு நேரம் வரும் பொறுத்து இரு”என்றார்.

“என்ன அக்கா நீங்களும் இப்படி பேசறீங்க. நாளுக்கு நாள் விக்ரம் சார் சிந்துவை ரொம்ப மோசமா நடத்துறாங்க”.

“அவளுக்கு வேணும்னா வலிக்காம இருக்கலாம், ஆனா எனக்கு ரொம்ப வலிக்குது.”

“என் கண்ணு முன்னாடி என் சிந்துவை இப்படி பேசும் போது நான் எப்படி பார்த்துகிட்டு சும்மா இருக்க முடியும்.”

“எல்லாம் என் தப்பு தான். நான் நல்லதுக்காக ஒரு பொய் சொன்னேன் ஆனா அதுவே இப்போ இவ்ளோ பெரிய பிரச்சனையை உண்டு பண்ணும்னு எனக்கு தெரியாது.”

“விக்ரம் சார் கால்ல விழுந்தாவது நான் மன்னிப்பு கேக்குறேன். அவர் என்ன செய்தாலும் சரி. தண்டனையாய் அதை நான் ஏற்றுக்கொள்வேன். ஆனா கண்டிப்பா என் சிந்துவை இனி காயப்படுத்த விடமாட்டேன்” என்றாள் ரஞ்சி.

“ஹ்ம்ம்….எல்லாம் எனக்கும் புரியுது மா ரஞ்சி. ஆனா இப்போ நமக்கு வேற வழியே இல்லை”.

“விக்ரம் தம்பிக்கு உயிர் அவங்க அம்மா தான். இப்போ அவங்களே உங்களால காயப்படுவதை எப்படி தாங்கிக்கொள்வார் .”

“இப்போ என்ன தான் இதற்கு வழி” என்று புரியாமல் கேட்டாள் ரஞ்சி.

“ஹான்… இப்போ தான் எனக்கு நினைவு வருது. நாளைக்கு ஏப்ரல் 23.அம்மாவோட பிறந்தநாள்” என்றார் கீதா.

“இப்ச்… இப்போ அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம் ஏன் கீதா அக்கா இப்படி சீரியஸ்சான நேரத்துல காமெடி பண்ணிட்டு இருக்கீங்க” என்றாள் ரஞ்சி.

“சொல்றதை கொஞ்சம் பொறுமையா கேளு ரஞ்சிதா”.

“நாளைக்கு அம்மோவோட பிறந்த நாள்.நாளைக்கு விக்ரம் தம்பி யார் மேலையும் கோபப்படாது. நாளை முழுக்க அம்மாவோட பேசி சிரிச்சு சந்தோசமா இருப்பாரு ”

“அந்த நேரத்துல நீங்க உண்மையை சொன்னா கொஞ்சம் கோபமாச்சும் குறையும்” என்றார் கீதா.

“குட் ஐடியா” என்றாள் ரஞ்சி.

“என்ன சிந்து உனக்கு ஓகேவா என்று ரஞ்சி வினவ, ஹ்ம்ம்… சரி. எது நடக்குமோ அதை அப்டியே ஏற்றுக்கொள்வோம். பிறகு எல்லாம் அந்த தெய்வம் துணை வரட்டும்” என்று பெருமூச்சு விட்டாள்.

“அதற்குள் இனியா”என்று வீடே அழற கத்தி ஊரை கூட்டினார்.

அவசரமாக ஓடி அறைக்குச் சென்றாள்.

அங்கு சுசிலாவின் கையில் இரத்தம் வழிந்தது.

“ஐயோ அம்மா உங்களுக்கு என்ன ஆச்சு” என்று பதறினாள்.

சிறு குழந்தைப்போல அழுது “இது என்ன அடிச்சிருச்சு” என்றார்.

கையில் சிறிய கத்தி ஒன்றை வைத்திருக்க, “அம்மா அதை யார் எடுக்க சொன்னா உங்களை, அதை தூக்கி ஏறிங்க” என்றாள் சிந்து.

அதை தூக்கி எறிந்தவர் சிந்துவின் அணைப்பில் ஆசுவாசம் அடைந்தார்.

“பயப்படாதீங்க அதான் நான் இருக்கேன்ல” என்று ஆறுதலாய் தலையை வருட, “அவன் ரொம்ப மோசம்… என்ன என்ன பயப்படுத்துறான். எனக்கு பயமா இருக்கு” என்றார் சுசிலா.

“யார் அது?”

“இங்க எப்படி வர முடியும்.”

“எனக்கு பயமா இருக்கு இனியா எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று அழுதவரை சரி அதான் நான் இருக்கேன்ல அழ கூடாது.”

“யாரும் என்ன மீறி இங்க வர மாட்டாங்க நீங்க பயப்படாதீங்க” என்று தன் மடியில் கிடத்தி அந்த தாலாட்டு பாடலை பாடினாள்.

சிந்துவின் கண்களில் கண்ணீர் வழிந்தது.

சிந்துவின் நிலை கண்டு ரஞ்சிதா மனம் உடைந்தாள்.

“எப்படியாது இந்த பிரச்சனையை சரி செய்ய வேண்டும்” என்று நினைத்தாள்.

“அம்மாக்கு நாளைக்கு பிறந்தநாள். நாளைக்கு எல்லோருக்கும் ஒரு சர்பிரைய்ஸ் இருக்கு” என்று மர்மமாய் புன்னகைத்தான் விக்ரம்.

தென்றல் மீண்டும் வீசும்….

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!