Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

58. Shahiabi - தென்றலாய் என் காதல்

தென்றலாய் என் காதல்

தென்றல் – 26

 

காலை சூரியன் உற்சாகத்தோடு எழுந்து, தன் கதிர் கைகளைக்கொண்டு அனைவரையும் தட்டி எழுப்பிக்கொண்டு இருந்தது.



Advertisement

பறவைகளின் கீச் ஒலிக் கேட்டு, கண் விழித்தாள் சிந்து.

சமயம் ஆரைக் காட்ட,விரைந்து படுக்கையில் இருந்து எழுந்தாள்.

“ஹே…. ரஞ்சி என்ன இவ்ளோ நேரம் தூங்குற இன்னைக்கு என்ன நாளுன்னு மறந்துட்டியா” என்று கூற,

Advertisement

பாதி தூக்கத்தோடு “ஐயோ…. சிந்து எனக்கு நல்லா நினைவு இருக்குடி. ஆனா மணி இப்போ ஆரு தான் ஆகுது.கொஞ்சம் தூங்கவிடேன்டி” என்று மீண்டும் படுக்கையில் சரிந்தாள்.

Advertisement

 

“ஏய்…என்னடி நீ, கொஞ்சம் கூட சீரியஸ்னேஸ் இல்லாம இருக்க. இது லைப் மேட்டர்டி” என்றாள்.

“ஹ்ம்ம்…சரிடி” என்றவள் போர்வையை தலையில் போர்த்திக்கொண்டு அமர்ந்து இருக்க சூடான தேநீரைக் கொண்டு வந்துக்கொடுத்தாள் சிந்து.

Advertisement

அதை கையில் வாங்கி புன்னகையுடன் அருந்தினாள்.

“இப்போ நான் என்ன பண்ணனும் சொல்லு சிந்து”என்று தேநீரில் கவனத்தை செலுத்தியவாரே கேட்டாள் ரஞ்சி.

“எனக்கு லாஸ்ட்டா ஒரே ஒரு ஹெல்ப்டி” என்று கெஞ்சினாள்.

“ஹ்ம்ம் என்னனு சொல்லுடி சிந்து”.

“அது ஒன்னும் இல்லை ரஞ்சி, இந்தா இந்த புடவையை குளிச்சிட்டு கட்டிக்கோ” என்று அவள் முன்னே ஒரு சந்தன நிறத்தில் தங்க ஜரிகையால் வடிவமைக்கப்பட்ட புடவையை நீட்டினாள்.

“இப்ச்…. என்ன விக்ரம் சார் வீட்டில் இருந்து வந்ததா?எனக்கு வேண்டாம்” என்றாள்.

தலையை குனிந்து ஆமாம் ரஞ்சி. “சார் கொடுத்து விட்டதா இப்போ தான் டிரைவர் வந்து கொடுத்துவிட்டு போறாங்க” என்றாள்.

“சரி அதுக்கு நான் என்ன பண்ணனும். நீ சொல்லறதை எல்லாம் என்னால அப்டியே பண்ண முடியாது சிந்து.

நீ பண்றது எல்லாமே குழந்தை தனமா இருக்கு”.

“ஏதோ அன்னைக்கு வேலை கிடைக்கணும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக தான் நான் அந்த பொய் சொன்னேன்.”

“இப்போ அதை எப்படி சரி பண்ணலாம்னு தான் பாக்கணுமே தவிர, மேலும் மேலும் தப்புக்கு மேல தப்பு பண்ணி மாட்டிக்கக் கூடாது.

இந்த புடவையை நீ கட்டிக்கிட்டுவா”என்றாள் ரஞ்சி.

“என்ன பேசுற நீ, நான் எப்படி ரஞ்சி இந்த புடவையை கட்டிக்கிட்டு வர முடியும்.

அவர் பார்த்ததும் ரொம்ப கோபப்படுவார்.

எனக்கு ரொம்ப பயமா இருக்கு.என்னால…என்னால நிச்சயமா இதை பண்ண முடியாது ரஞ்சி” என்று வேறு திசை திரும்பினாள்.

“சரி இருக்கட்டும், நீயும் கட்ட வேண்டாம், நானும் கட்டவேண்டாம் இருவரும் செல்வோம். நடந்த உண்மையை சொல்வோம் போ போய் குளி.”

“அதுக்குகில்லை ரஞ்சி.

நீ எந்த விளக்கமும் சொல்ல வேண்டாம். நீ நிறைய காரணம் சொல்லிட்ட இனியும் காரணம் வேண்டாம் கிளம்பு போகலாம் அவ்ளோ தான்” என்றாள் ரஞ்சி.

வேறு வழி இல்லாமல் சம்மதித்தாள்.

“ஏய்…என்ன இவ்ளோ ஸ்லோவா எல்லா வேலையும் பார்த்துட்டு இருக்கிங்க கொஞ்சம் சீக்கிரம் பண்ணுங்க”என்று அதட்டியப்படி வேலைகளைப் சரிப்பார்த்துக் கொண்டு இருந்தான் விக்ரம்.

“ஆதவ்…. ஆபீஸ்ல சொன்ன மாதிரி எல்லாம் செஞ்சாச்சா” என்று வினவினான்.

“ஹ்ம்ம் எஸ் சார் ஆல்வேஸ் டன். ஜஸ்ட் ஒன் டூ ஒர்க் பெண்டிங் சார்”என்றான்.

“ஹ்ம்ம்…குட். அந்த பெண்டிங் ஒர்க்கையும் சீக்கிரம் முடிக்க சொல்லுங்க”.

ஆதவ் – எஸ் சார் என்றான்.

“தம்பி அம்மா குளிக்க அடம் பிடிக்குறாங்க.

இன்னும் ஒரு வாய்க் கூட சாப்பிடல”என்றார் கீதா.

“ஷ்….. ஸ்… “என்று பெருமூச்சு வித்தியாசம் இன்னும் “ரஞ்சி வரலையா?”என்றான்.

“இல்லை தம்பி” என்றார் கீதா.

“ஏன் மணி ஒன்பது ஆயிடுச்சு?

இன்னும் வராம என்ன பண்றாங்க. அம்மா தான் ரஞ்சி இல்லாம எதையுமே செஞ்சிக்க மாட்டாங்களே.

சரி நான் ஃபோன் அடிச்சு பாக்குறேன்” என்றவன் அவளை அலைபேசியில் தொடர்புக் கொண்டாள்.

நீண்ட நேரம் மணி ஒலித்தத்துக்கொண்டே இருந்தது. ஆனால் அவள் அழைப்பை ஏற்கவில்லை.

“என்ன ஆச்சு ஃபோன்னும் எடுக்க மாற்றாங்க” என்று சிந்தித்தான்.

“சரி வாங்க நான் அம்மாவை சமாதானம் செய்துக்கொள்கிறேன்” என்று சுசிலாவின் அறைக்குச் சென்றான் விக்ரம்.

“அம்மா….” என்ற அழைப்பில் குழந்தைப்போல் அழுது கொண்டே இனியா வேணும்” என்றார்.

“இப்ச்…. அம்மா. இனியா வந்துருவா. நீங்க மொதல்ல போய் குளிச்சிட்டு சாப்பிட்டு வாங்க.

அதுக்குள்ள இனியா வந்துருவா. ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கலாம்”என்று கூற,

“உண்மையாவா” என்றார் சுசிலா.

“ஹ்ம்ம்…ஆமாம். நான் எதுக்கு பொய் சொல்லப் போறேன்,வாங்க”என்று அவரை சமாதானம் செய்து எழுப்பி “கீதா நீங்க போய் அம்மாவை குளிக்க வைங்க” என்று அறையை விட்டுச் சென்றான்.

வீட்டிற்கு அனைவரும் வர துவங்கினர்.பந்தி பரிமாறப்பட்டது.

விக்ரம் தன் கை கடிகாரத்தை நொடிக்கு ஒரு முறை பார்த்தான்.

“என்ன ஆதவ், இன்னும் ரஞ்சி வரல?

என்ன ஆச்சு?

கொஞ்சம் என்னனு பாரு” என்றான் விக்ரம். அவன் குரளிலும், முகத்திலும் பதஷ்டம் இருந்தது.

“சார்…. நான் என்னனு பாக்குறேன். நீங்க ஒரி பண்ணிக்காதீங்க சார்”என்றவன் தன் அலைபேசியில் சிந்துவிற்கு அழைத்தான்.

அழைப்பு தூண்டிக்கப்பட்டது.

ரஞ்சிதாவிற்கு அழைத்தான் அது ஏற்கப்பாடவில்லை.

அவனுக்கும் ஒரே குழப்பம்.

“என்ன ஆச்சு ரெண்டு பேரும் ஃபோன் எடுக்க மாற்றாங்க” என்று சந்தேகித்தான்.

“விக்ரம் சார் அங்க பாருங்க, அவங்க ரெண்டு பேரும் வந்துட்டாங்க” என்று கீதா கூற விக்ரம், ஆதவ் இருவருமே திரும்பினர்.

ரஞ்சிதா அவன் கொடுத்து அனுப்பிய புடவையில் தங்கச் சிலை என ஜோலித்தாள்.

விக்ரமின் முகம் மலர்ந்தது. தான் அனுப்பிய புடவை அவளுக்கென்றே உருவாக்கப்பட்டதைப் போல் இருந்தது.

அவள் அழகில் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான்.

அவள் பின்னே வான் வண்ணம் கொண்ட புடவையில் மின்னல் கொடுக்கலாய் ஜரிகைக் கொண்ட புடவையை அணிந்து மழை நேர தோகை மயில் என நின்று இருந்தாள்.

அழகிற்கு எப்போதும் ஆராவாரம் அதிகம். ஆனால் சிந்துவோ அழகின் மறு வடிவமாய் இருப்பினும் எந்த அகந்தையும் இன்றி அமைதியோடு தலைக்குனிந்து நின்றாள்.

சிந்து ரஞ்சிதாவின் பின்னால் இருந்து முன் வந்து அவள் அருகில் ஜோடியாக நிற்க, அனைவரும் வாயடைத்து பார்த்தனர்.

ஆதவ்…. சிந்துவை கண்டு கட்டுக்கடங்காமல் துடிக்கும் இதயத்தை கைவைத்து தடுத்தான்.எங்கே சிந்துவை கண்ட பேர் ஆனந்தத்தில் இதயம் தடுமாறி விழுந்து விட்டாள் என்ன தான் செய்வது.

விக்ரமின் கண்கள் சிந்துவை பார்த்ததும் ஒரு நிமிடம் தன்னையும் அறியாமல் ரசித்தது.

அந்த நீள வண்ணம் அவள் நிறத்திற்கு மேலும் அழகைக் கூட்டி இருந்தது.

தன்னையே அறியாமல் சார்….. “ப்ளூக் கலர் சாரில அவங்க ரொம்ப அழகா இருக்காங்கல்ல” என்றான் ஆதவ்.

விக்ரமின் நெற்றி கோபத்தில் சுருங்கியது.

“இவ எதுக்கு இங்க வந்தா? நான் தான் இவளை இன்வைட் பண்ணலையே.

இப்படி கூப்பிடாத இடத்துக்கு எப்படி இவளாள கொஞ்சம் கூட வெக்கமே இல்லாம வர முடியுதுனு தெரியல” என்று முனுமுனுக்க ஆதவிற்கு கோபம் தலைக்கு ஏறியது. ஆனாலும் தற்போதைய நிலையை மனதில் வைத்துக்கொண்டு அமைதிக்காத்தான்.

இருவரும் அடி மேல் அடி வைத்து அழகாய் அன்ன நடைத்தனைப்போட்டு சபையில் நடந்து வர கூட்டத்தில் ஈ…. கூட ஆடவில்லை.

ரஞ்சிதாவை பார்த்து காதலுடன் புன்னகைத்தான் விக்ரம். அவள் ஒப்புக்கு சிரித்து வைத்தாள்.

எத்தனை முறை ரஞ்சி விக்ரம் கொடுத்து விட்ட புடவையை கட்ட மறுப்பு தெரிவித்தும் கேட்காமல் அடம் பிடித்து சிந்து தான் நினைத்ததை சாதித்தாள் சிந்து.

“சொன்னா கேளு சிந்து. இது மிகப் பெரிய தப்பு. அவர் உன் குணத்தை தான் நேசிக்கிறார். என் உருவத்தை இல்லை. அதை மொதல்ல”புரிஞ்சுக்கோ.

“நீ தான் புரிஞ்சுக்கணும் ரஞ்சி. அவர் என்ன காதலிக்கல. என்னை கண்டாலே அவருக்கு கோபம் தான் வரும். நீ தான் அவருக்கு பொருத்தமானவளும் கூட.

இப்போ உண்மை தெரிந்தாலும் அவர் என் மேல் தான் கோபப்படுவாறே தவிர உன்னை ஒரு வார்த்தைக்கூட சொல்லப் போறது இல்லை.

உனக்கும், அவருக்கும் சரியான ஜோடி என்று புடவையை ரஞ்சிக்கு உடுத்தி விட்டாள்.

உடைந்த குரலில்…. சிந்து உனக்கு இதுல வருத்தம் இல்லையா?

ஹா…ஹா…ஹா…”வென்று சிரித்தாள்.

“வருத்தமா எனக்கா?”என்று மீண்டும் சிரித்து வரும் அழுகையை அடக்கினாள்.

“அப்போ உன் காதல்!””

“எனக்கு யாரையும் காதலிக்கும் தகுதியில்லை ரஞ்சி.

நீ சந்தோசமா வாழனும்.

விக்ரம் காதலிக்கறது என் குரலை இல்லை. உன் அமைதியான குணம், மற்றும் உருவம். என் குரல் காற்றோடு காற்றாய் கரைந்து போகும் என்று கூறி புடவையை கட்டிமுடித்தாள்.நட்புக்காக இன்னும் என்ன என்ன செய்ய போகிறாளோ ரஞ்சிதா.

“ரஞ்சி ஏன் இவ்ளோ நேரம். அம்மா ரொம்ப நேரம் உங்களை காணாம அழுது அடம் பிடிச்சுட்டு இருக்காங்க. எப்படியோ சமாளிச்சு வச்சிருக்கோம் உடனே அம்மாவைப் போய் பாருங்க” என்றான் விக்ரம்.

“ஹ்ம்ம்…”என்று இருவரும் மேலே செல்ல சிந்துவைப் பார்த்து முறைத்தான்.

மொதல்ல இவ பிரண்ட்ஷிப்ப கட் பண்ணனும்e என்று மனதிற்குள்ளே நினைத்துக்கொண்டான் விக்ரம்.

நேரம் கரைந்து ஓடியது.

நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்க, அனைவரும் தன் ஜோடிகளுடன் வெளிநாட்டு பாணியில் மெல்லிய இசையில் ஆடிக்கொண்டு இருந்தனர்.

சுசிலா அம்மாவை அலங்கரித்து முடித்து கீழே இருவரும் இறங்கி வந்தனர்.

“ரஞ்சி என் கூட ஆட உங்களுக்கு விருப்பம்” என்று தான் நினைக்குறேன் என்று கையை அவள் முன்னே நீட்ட, ரஞ்சி சிந்துவைப் பார்த்தாள்.

அவள் கண்களால் போ…என்று தலைத்தாழ்த்திக் கொண்டாள்.

ரஞ்சியின் கண்கள் ஏனோ வியர்த்தது.

திடீர்ரென்று மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அனைவரும் குழப்பம் அடைந்து அங்கு ஒரே இறைச்சல் ஏற்பட்டது.

 

மேடையில் மட்டும் மின் விலக்கு திடீர்ரென்று ஒளிர, அந்த ஒலியில் ஆதவ் – சிந்து ஜோடி சிலையென நின்று இருக்க. அனைவரும் மேடையை நோக்கி கைத்தட்டி ஏய்….. என்று ஆராவாரம் செய்தனர்.

 

தென்றல் மீண்டும் வீசும்……

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!