Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

தேடிவருவேன் ♥️21

ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் மாவட்டத்திலுள்ள எர்ரபள்ளி…..

அண்ணையா சர்வதனிக்கு ஏடு நெலலு ப்ராரம்பம்  கன்னுனாயி ( அண்ணா சர்வதனிக்கு ஏழு மாசம் தொடங்கப்போகுது )

சுப்ப கிருஷ்ண நந்தமூரியின் ஒன்று விட்ட தங்கையும் சம்மந்தியுமான கோதாவரி தான் பேசிக் கொண்டிருந்தார்.

கூடத்தில் உட்கார்ந்து ஆவக்காய் போட மாங்காயை இரண்டாக வெட்டிக் கொண்டிருந்த மனைவி விஜய தாரணியை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தார் கிருஷ்ணா.



Advertisement

அண்ணனின் தயக்கம் உணர்ந்த கோதாவரி “வதின ஏமி செப்புத்துனாரு?” என்று நேரடியாக தாரணியை கேட்டு விட்டார்.

நான் சொல்ல என்ன இருக்கு… உங்க விருப்பம் என்று உள்ளே சென்றுவிட்டார்.

அவர் வருத்தத்திலும் நியாயம் இருக்கு. மூத்த மகன் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்க இளைய மருமகளுக்கு சீமந்தம் என்ற சங்கடம்.

Advertisement

கோதாவரி ஆசையையும் குறை சொல்ல முடியாது. தன் மகளுக்கு சீமந்தம் செய்து அழகு பார்க்க நினைப்பது ஒரு தாய் செய்யும் குற்றமா என்ன?

Advertisement

கோதாவரி நல்ல நாள் பார்த்து முடிவு பண்ணிட்டு தம்பிகளோட கலந்து பேசி நானே உனக்கு சொல்றேன் என்றார் கிருஷ்ணா.

“—————-“

நமஸ்காரம் பாபு… பக்கத்து நிலத்துகாரன் தன் வரப்பை தகர்த்து நிலத்தில் நான்கடி ஆக்கிரமிப்பு செய்து விட்டதாக ஒருவர் கண்ணீருடன் கூற…

Advertisement

வெங்கி ஆக்கிரமிப்பு பண்ணவன் யாருன்னு பாரு! நிலத்தை அளக்க ஏற்பாடு பண்ணு… அதிகம் பேசினா நம்ம பசங்கட்ட சொல்லி நாலு தட்டுதட்ட சொல்லு! தம்பி வெங்கட கிருஷ்ண நந்தமூரிக்கு கட்டளை பிறப்பித்து விட்டு பொலீரோவில் ஏறி பால் பண்ணையை பார்வையிட சென்றார் சுப்ப கிருஷ்ணா.

நானா வச்சாரு. த்வாரக்கா நிஜம் ச்செப்பி பரிபோண்டி (அப்பா வந்துட்டாரு. சீக்கிரம் உண்மையை சொல்லிட்டு ஓடி போயிடு ) மண்டியிட்டு நின்றிருந்த ஒருவனிடம் மிரட்டல் விடுத்துக் கொண்டிருந்தான் ராம் சரண்.

ராம் ஏன்டி சமஸ்யா? (ராம் என்ன பிரச்னை ) சுப்ப கிருஷ்ணாவின் கர்ஜனையில் மண்டி இட்டிருந்தவனின் உடல் கிடு கிடுத்தது.

நம்ம ஊரில் ஆரோக்கியா பால் எப்படி பிரசித்தமோ அதே போல் கிருஷ்ணா பால் மற்றும் பால் பொருட்கள் ஆந்திராவின் முன்னணி  விற்பனையில் இருக்கிறது.

கிருஷ்ணா சகோதரர்களுக்கு சொந்தமானது ஸ்ரீ கிருஷ்ணா மில்க் பிராடக்ட். மிகப்பெரிய வார்த்தகம். ராம்சரண் மற்றும் சித்தப்பா மகன் தேவ்சரண் கண்காணிப்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

டீலரில் ஒருவன் பண பரிவர்த்தனையில் நேர்மை இல்லை என்று ராம் தான் டீலர்ஷிப்பை கேன்சல் செய்திருந்தான்.

அந்த கோபத்தில் அவன் சமூக வலைத்தளங்களில் ஸ்ரீ கிருஷ்ணா பிராடக்ட் ஆரோக்கியமானது அல்ல சுகாதாரமற்ற அந்த பால் பொருட்களை வாங்காதீர்கள். அதை பயன்படுத்திய நிறைய பேருக்கு புட் பாயிசன் ஆகிவிட்டது என்று ஒரு வீடியோ கிளிப்பிங் இணைத்து வதந்தியை பரப்பி விட்டிருந்தான்.

வதந்தியை பரப்பியவன் இவன் தானென்று கண்டுபிடித்து தூக்கி வந்து விசாரிக்கவும் அவன் உண்மையை ஒப்பு கொள்ளவில்லை.

விபரம் கேட்டறிந்த சுப்ப கிருஷ்ணா விட்ட அறையில் அவன் உதடு கிழிந்து குருதி கொட்டியது.

ஹரி சார் இருந்தா இப்படி உங்களை மாதிரி நடந்துக்க மாட்டாரு… அவன் வலியில் முணங்கினான்.

அட்டனு உண்டே மிம்மல்னி சம்பேவடு ( அவன் இருந்திருந்தால் உன்னை கொன்னிருப்பான் ) மீசையை முறுக்கியவர் எட்டி உதைக்க

உயிர் பயத்தில் எச்சில் விழுங்கியவன் மன்னிச்சுடுங்க என்று காலில் விழுந்து விட்டான் அந்த மோசக்காரன்.

சட்டையை கொத்தாக பற்றியவர் அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி அறைந்தவர்… இனி நீ ஆந்திராவிலே இருக்க கூடாது என்று எச்சரித்து விரட்டி விட்டார்.

அனந்த்ப்பூர் மாவட்டத்தில் கிருஷ்ணா பிரதர்ஸ் என்றால் தெரியாதவர்கள் இருக்க முடியாது. அவர்களை மிஞ்சி அங்கு எந்த நல்லது கெட்டதும் நடந்து விட முடியாது. எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு முரடர்கள். அவர்களே போலீஸ் அவர்களே கோர்ட். நாளை என்றெல்லாம் தீர்ப்பை ஒத்தி வைப்பதில்லை. சரி என்று பட்டால் அடுத்த நிமிடமே செயலாற்றி விடுவார்கள்.

அந்த கிருஷ்ணா பிதர்ஸில் மூத்தவரான சுப்ப கிருஷ்ண நந்தமூரியின் மூத்த வாரிசு தான் ஹரிச்சரண். அந்த முரட்டு ரத்தம் அவன் உடம்பில் இருந்தாலும் இப்போதெல்லாம் பக்குவப்பட்டிருக்கிறான்.

“—————“

ம்ம்மா…. அலாதி ஆவலான  மகனின் குரலில் விம்மி அழுது விட்டார் தாரணி.

ம்ம்மா…தயசேஸி எடவகண்டி( தயவுசெய்து அழாதீங்க )

ஹரி…. தாயின் விளிப்பில் சிலிர்த்து விட்டான்.

மகனின் நலன் விசாரித்து விட்டு அகிலன் குடும்பம் பற்றி விசாரித்து விட்டு சர்வதனி சீமந்தம் குறித்தும் வருத்தத்துடன் கூறினார்.

ம்ம்மா… சர்வாக்கு சீமந்தம் நல்ல விஷயம் தானே…?

என் பொண்டாட்டிக்கு சீமந்தம் செய்ய மாட்டிங்களா என்ன?

ஹரி… அவர் குரலில் மெல்லிய சிரிப்பு எட்டி பார்த்தது.

ஆமாம்மா ராம்சரணுக்கு முன்னாடி மேரேஜ் ஆகிடுச்சு… அவனுக்கு உடனே குழந்தை வரம் கிடைச்சிருக்கு… நான் கொஞ்சம் லேட்டா மேரேஜ் பண்ணிக்க போறேன் அவ்வளவு தானே…

பங்ஷனுக்கு வர சொந்தக்காரங்க ஏதாவது பேசுவாங்கன்னு கவலை படாதீங்க.

என் பிள்ளை ஹரி  சன்னியாசம் போக மாட்டான். லேட்டா விவாகம் பண்ணினாலும் ரகளையா பண்ணுவான்னு சொல்லுங்க!

டேய் நீ பேசுறதை பார்த்தால் பொண்ணு பார்த்து வச்சுட்ட மாதிரி தெரியுதே… அவர் உள்ளங் குளிர்ந்து கேட்டார்.

அதை விடுங்க… பிசினஸ் எப்படி போகுது? ஷியாமளா பின்னி எப்படி நடந்துக்கிறாங்க? பேச்சை மாற்றினான்.

கிருஷ்ணா குடும்பத்தில் பிசினஸில் என்ன பிரச்னை

வந்துடப் போகுது? உங்க பின்னி திருந்திட்டா தான் ஆச்சரியம்… பெருமூச்சு விட்டார் தாரணி.

மற்ற விஷயங்கள் பேசிக் கொண்டிருக்க… ஹரி எப்போ ஊருக்கு வர…? வழக்கம் போல் ஏக்கம் தொணித்த அதே கேள்வி.

சீக்கிரம் வரேன்… என்னைக்குனு சொல்ல முடியாது.. ஆனா சர்வதனி டெலிவரிக்குள்ள வரேன்.

உனக்கு பொண்ணு பார்க்க சொல்லவா?

அய்யோ வேண்டாம்…. நான் பார்த்துக்கிறேன். நீங்க ஓகே சொன்னா போதும்!

ஹரி உண்மை சொல்லு… தாரணி பேசிக் கொண்டிருக்கும் போதே அழைப்பை துண்டித்து விட்டான்.

தாரணிக்கு ஆனந்தத்தில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது. வழிந்த கண்ணீரை துடைக்காமல் மகன் புகைப்படத்தை வாஞ்சையுடன் பார்த்து நின்றார்.

அத்தம்மா… பயத்துடன் சர்வதனி அவர் தோள் தொட… மருமகளை தோளில் சாய்த்துக் கொண்டவர் கூடிய சீக்கிரம் இந்த வீட்டுக்கு இன்னொரு மருமகள் வரப்போறா என்றார்.

சர்வதனிக்கும் எல்லையற்ற நிம்மதி. மூத்தாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற வருத்தம் அவளுக்கு மிகுதியாக உண்டு.

ஹரிக்காக அந்த குடும்பமே தினமும் வருந்துவதை கண்டு அவளும் தெய்வத்திடம் முறையிடாத நாளில்லை.

மாமியாரின் பேச்சிலேயே சுப நிகழ்வு நடக்கப் போகிறது என்று உணர்ந்து கொண்டாள்.

“—————-“

தினமும் அதிகாலை காபிக்கு வந்து நின்று விடுவான் ஹரி. காலை நேர தேவதை தரிசனம்  கொடுக்கும் புத்துணர்வை அவன் இழக்க விரும்புவதில்லை.

முடிந்தவரை அவனுடன் பேசுவதை தவிர்த்து நாசுக்காய் நகர்ந்து விடுவாள் பவித்ரா. ஏற்கனவே அவள் சூடுகண்ட பூனை அல்லவா? மீண்டும் சுட்டுக் கொள்ள அவள் தயாராக இல்லை.

அவனாக பேச்சை வளர்த்தினாலும் சௌமியாவுடன் அவனை கோர்த்து விட்டு விலகி விடுவாள்.

அதற்கெல்லாம் பின் வாங்குபவன் ஹரி இல்லையே… அவனுக்கு பிடித்த உணவு வகைகளை அவன் விரும்பும் சுவையில் சமைத்து தர சொல்லி அடமாய் அமர்ந்து விடுவான்.

நான் உங்க குக் இல்லை.. இங்கே ஆயம்மா… சத்தம் போடாது அவன் காதில் முணு முணுப்பாள்.

மூச்… பல்லை கடித்து அதிகாரம் பண்ணினா ஹரிசரணுக்கு பிடிக்காது. ஆனா இந்த ஹஸ்கி வாய்ஸ் என்னமோ பண்ணுது குலாபி.

எனக்கு என்னென்ன பிடிக்கும்னு இப்போவே தெரிஞ்சு வச்சுக்கிறது உனக்கு நல்லது தானே.. நெற்றியில் விழுந்த அவள் ஒற்றை முடியை வாய் குவித்து அவன் ஊதிவிட அவள் பயத்தில் நான்கடி பின் வாங்கினாள்.

“—————“

அண்ணையா ஹரிக்கு ராயலசீமால நேனு வருடினி ச்சூஸானு ( ஒரு வரன் பார்த்திருக்கேன் )

சுப்ப கிருஷ்ணாவின் இளைய தம்பி ஜெய் கிருஷ்ணா பெருமை பொங்க பேசிக் கொண்டிருந்தார்.

அவுனா? ஆர்வமுடன் பெண்ணின் குடும்ப பின்புலம் பற்றி கேட்டுக்கொண்டிருந்தார் சுப்ப கிருஷ்ணா.

ஆடவாலு இல்லு மனக்கு சௌகரியங்கா உண்டுண்டி ( பொண்ணு வீடும் நம்மை போல வசதியானவங்க )

மகனின் திருமணத்தை எப்படியாவது முடிக்க வேண்டும் என்று ஒரு தந்தையாக அவர் மனம் பேரவா கொண்டது.

பெண்ணோட போட்டோ ஜாதகம் இருக்கா? உற்சாகமாய் கேட்டார்.

யாரும் என் மகனுக்கு வரன் பார்க்க வேண்டாம்… அவனுக்கு பிடிச்சிருக்குனு எந்த பெண்ணை கை நீட்டுறானோ அந்த பொண்ணு தான் இந்த வீட்டு மருமகள். ஒரே போடாக போட்டுவிட்டார் தாரணி.

வதன கோடாளு இ இண்டிக்கு ராவதானிக்கி அர்ஹாத்தா காலிக்கி உண்டாளி (அண்ணி இந்த வீட்டுக்கு மருமகளா வர ஒரு தகுதி வேணும் )

ஜெய் கிருஷ்ணா மீசையை நீவிக் கொண்டு கம்பீரமாய் நின்றார்.

“——————“

செப்பண்டிம்மா…. ஆர்வமுடன் பேசினான்.

ஹரி உன் சித்தப்பா உனக்கு வரன் பார்த்திருக்காரு.

எந்த சித்தப்பா?

ஜெய் கிருஷ்ணா.

ஹோ… என்றான் அலுப்புடன்.

உன் நானா கூட ரொம்ப ஆர்வமா இருக்காரு…!

ம்ம்மா எனக்கு யாரும் வரன் பார்க்க வேண்டாம்.

நான் சொல்லிட்டேன்!

ம்ம்மா… நான் பார்த்துட்டேன்.

ஹரி! தாரணி அதிசயித்து போனார். கொஞ்சம் மகனின் நடவடிக்கையில் சந்தேகம் இருந்தது. இப்போது ஊர்ஜிதமாகி விட்டது.

யாருப்பா? அவ்வளவு ஆர்வம் அந்த தாயிடம்.

ம்ம்மா என் முடிவு சரியா இருக்கும்னு நம்புறீங்க தானே…?

என்ன ஹரி இப்படி எல்லாம் பேசற…?

ஒரு பொண்ணு பார்த்திருக்கேன். மனதுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

அமெரிக்க பொண்ணா?

அப்படி இருந்தா ஏத்துப்பீங்களா?

மறுமுனையில் மௌனம்!

ம்ம்மா நம்ம நாட்டு பொண்ணு தான்.

எந்த ஊரு? அவர் குரலில் ஒரு குதூகலம்  அப்பட்டமாய் தெரிந்தது. அப்பாடா அமெரிக்கா பொண்ணு இல்லை அது போதும் என்ற ரீதியில்.

மற்ற விபரம் அப்புறம் சொல்றேன்…!

ஏம்ப்பா? அவருக்கு சப்பென்று ஆகிவிட்டது.

அந்த பொண்ணு இன்னும் சம்மதம் சொல்லலைமா.

எவடா அவ… என் புள்ளையை தட்டி கழிக்கிறவ?

போங்கம்ம்ம்மா…. லேசான வெட்கத்தில் நெளிந்து விட்டான்.

சீக்கிரம் மருமகளை கண்ணில் காட்டுப்பா!

ம்ம்மா இது பற்றி வீட்டில் யாருக்கும் தெரிய வேண்டாம்.

சரிப்பா… ரொம்ப நாள் தள்ளி போடாதே ஹரி… ஏறக்குறைய கெஞ்சினார் என்று தான் சொல்ல வேண்டும்.

“—————–“

ஹரிக்கு பொறுமை கொஞ்சம் கொஞ்சமாய் பறந்தோடி கொண்டிருக்கிறது.

பவித்ராவுடன் பேச சரியான சந்தர்ப்பம் அமையவே இல்லை.

அவளிடம் வன்மையாக நடந்து கொள்ள அவன் விருப்பமில்லை.

புண்பட்டிருக்கும் அவளை மேலும் புண்படுத்த அவன் விரும்பவும் இல்லை. முடிந்தவரை பொறுமையை கடைபிடிக்க முயன்றான்.

அவன் பொறுமையை  சோதித்துக் கொண்டிருக்கிறாள் அவன் குலாபி.

அகிலனிடம் தன்னிலையை விளக்கி வருத்தம் கொண்டான்.

ஹரி நான் வேணா பேசி பார்க்கவா? சங்கடமாய் கேட்டான் அகிலன்.

ச்சே… என் லவ்வுக்கு நீ ரெகமெண்டேஷனா?

நான் பார்த்துக்கிறேன் மச்சி.

டேய் நீ பார்த்துக்கறேன்னு சொல்ற விதமே பயமா இருக்கு!

இருக்கும்… இருக்கும்… அகிலனை குனிய வைத்து மொத்தினான் ஹரி.

“—————-“

அன்று ஞயிற்றுக்கிழமை… குழந்தைகள் துணியை மடித்துக் கொண்டு அறையில் சௌமி உட்கார்ந்திருக்க… இறைச்சி வாங்கி வர சென்றிருந்தான் அகிலன்.கிச்சனில் வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள் பவித்ரா.

ஹாய் குலாபி நாக்கு வறண்டு கிடக்கு ஒரு லெமன் ஜூஸ் போட்டு தறியா? அவள் முதுகுக்கு பின் நின்று கழுத்து வளைவில் நெருங்கி வந்து கிசு கிசுத்தான் ஹரிச்சரண்.

எ…. என்ன திடுக்கிட்டு திரும்பியவளின் கூர் நாசி அவன் இதழ் விளிம்பில் உரசி சென்றது.

அவள் ஸ்பரிசம் அவன் உயிரின் வேர் வரை ஊடுருவி சிலிர்த்து நின்றது.

குலாபி மூக்குத்தி போட்டா அழகா இருப்ப… அன்னப்பட்சி மூக்குத்தி போடு….அவள் மூக்கை நிமிண்ட துடித்த கரங்களை பெரும்பாடுபட்டு அடக்கிக் கொண்டான்.

தயவு செய்து இப்படி பேசுவதை நிறுத்துங்க…! உங்களுக்கு எப்படி சொன்னா புரியும்? தட தடவென்று தாளம் போடும் இதயத்தை இயல்பிற்கு கொண்டு வர முடியாமல் தடுமாறினாள்.

எனக்கு புரிய வைக்கிற புண்ணாக்கு வேலை எல்லாம் வேண்டாம்… நீ என்னை புரிஞ்சுக்கோ குலாபி… தன் கோபத்தை  நிதானித்து ஜீரணம் செய்து பேசிக் கொண்டிருந்தான்.

யார் சார் நீங்க? விருப்பம் இல்லைன்னு சொல்ற ஒரு பொண்ணுகிட்ட இப்படி தான் கீழ் தரமா நடந்துக்குவீங்களா?

என்ன படிச்சு வேலை செய்து கிழிக்கிறீங்க? பேசிக் மேனர்ஸ் இல்லையே….அகிலன் சார் பிரண்டுன்னு பார்க்கிறேன்.. இல்லைனா வேற மாதிரி பேசிடுவேன்.

பேசு குலாபி… எதுவானாலும் பேசு! மனசுவிட்டு பேச பேச தான் புரிதல் உண்டாகும்.

என்னை பற்றி நீ என்ன நினைக்குற… உன்னை பற்றி நான் என்ன நினைக்கிறேன்னு அப்போ தான் புரிஞ்சுக்க முடியும்!

ஒரு ஈர வெங்காயமும் புரிஞ்சுக்க வேண்டாம்… உங்க லிமிட் தெரிந்து நடந்துக்கோங்க!

நமக்குள்ள என்ன லிமிட்? புருவம் உயர்த்தினான். இவள் என்று தான் தன்னை புரிந்து கொள்வாள் என்ற தவிப்பு இப்போது அவனுக்குள் மித மிஞ்சி நிற்கிறது.

சாருக்கு இப்போ தான் பதினாறுன்னு நினைப்பா.

லேதுரா… நான் அறுபதும் இல்லை.

ச்ச உங்கட்ட மனுஷி பேச முடியுமா?

தேவதூத மாட்ரமே மாட்லாடகலடு.

எனக்கு உங்களை பார்க்கவோ பேசவோ பிடிக்கல… எனக்கு இருக்கிற மனவேதனையில் நீங்க வேற ஏன் சார்…?

உன் வேதனை எனக்கு புரியும்ரா குலாபி.

ஓ… என்னை பத்தி தெரிஞ்சு தான் இந்த அக்கறை சக்கரை அதிகமா பொங்குதோ…?

அப்படிலாம் இல்லைன்னு பொய் சொல்ல மாட்டேன்… ஆனா உன்னை பற்றி தெரியலைனாலும் பிடிச்சுருக்கும்.

ஆனா சார் உங்களை,உங்க பேச்சை எனக்கு அறவே பிடிக்கல….கண்களை இறுக மூடி தன் வெறுப்பை அவள் வெளிப்படுத்திய விதம் அவனுக்குள் சுருக்கென்று இருந்தது.

பொய் சொல்ற குலாபி உனக்கு என்னை பிடிக்கும்… பிடிக்கணும்!

பிடிக்காது… என்னைக்கும் பிடிக்காது… உறுதிபட கூறினாள்.

ஏன்…?அவள் கண்களுக்குள் நுழைந்து ஆராய்ச்சி மேற்கொண்டது அவன் தீ விழி பார்வை.

ஏன்னா…. எனக்கு என் அத்தானை தான் பிடிக்கும். அவருக்கும் என்னை ரொம்ப பிடிக்கும்.

பொய்! கைகளை மார்புக்கு குறுக்காக கட்டிக்கொண்டு அவள் விழிகளை இமைக்காது பார்த்து நின்றான்.

நிஜமா எனக்கு என் ராஜேஷ் அத்தானை மேரேஜ் பண்ணிக்க தான் ஆசை. என் அத்தை சம்மதிக்கல அது தான் பிராப்ளம். அவங்க சம்மதத்துக்காக தான் வெயிட்டிங்.

—————தொடரும் —-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!