Skip to content
Post Views: 873

அத்தியாயம் – 24
“குவிந்த சிறுபிள்ளைக் கரங்களுக்குள் எட்டிப் பார்க்கும் மிட்டாய்கள். மனதின் நெளி கம்பிகளுக்கிடையே கண் சிமிட்டிக் கிடக்கும் காதலின் கோலப்புள்ளிகள்”
மித்ரனின் நினைவலைகளில் விரிந்தது சான் பிரான்சிஸ்கோவின் அந்த காலை. லீ அவர்களின் வாழ்வில் நுழைந்த அந்த நாள்… பனி மூட்டம் இன்னும் கலையாமல் பல்கலைக்கழக வளாகத்தின் மரங்களை ஒரு வெள்ளை மறைப்பால் சுற்றி நின்றது. காற்றில் ஒரு வித்தியாசமான குளிர் இருந்தது.. இந்தியாவில் அனுபவிக்காத குளிர். உடலை மட்டும் தொடாமல், எலும்புக்குள் நுழையும் குளிர்.
Advertisement
சந்தியாவும் மித்ரனும் வாசல் படிகளில் நின்று கொண்டிருந்தார்கள்.
அந்த ஆள் நேராக இவர்களின் அருகே வந்து நின்றான். ஒரு வசீகரமான புன்னகை .. அலட்டிக்கொள்ளாத, இயல்பான, ஆனால் உள்ளே இழுக்கும் புன்னகை.
“ஐ அம் லீ. யுவர் ரிசர்ச் மென்டர்.”
Advertisement
கை நீண்டது.
Advertisement
மித்ரன் கை கொடுத்தான். “மித்ரன், இந்தியா.”
லீ திரும்பினான். சந்தியாவை பார்த்தான்.
அவள் அப்போது நிமிர்ந்திருந்தாள். பைலை மார்போடு சேர்த்துப் பிடித்திருந்தாள் ஒரு ஷீல்ட் மாதிரி.
Advertisement
“சந்தியா?” என்று லீ கேட்டான்.
“ஆமா.”
உங்க ரெண்டு பேரோட வொர்க்ஸையும் பார்த்தேன்…. இன்ட்ரஸ்டிங்! ரொம்ப சாதாரணமாகத்தான் முதல் உரையாடல் இருந்தது
லேப் கட்டிடத்திற்குள் நுழைந்தார்கள். நடைபாதை (Corridor) நீளமாக இருந்தது. இரு பக்கமும் கண்ணாடிக் கதவுகள்.”இந்த building எத்தனை வருஷமா இருக்கு தெரியுமா?”.
“1960-ல கட்டினாங்கன்னு சொன்னாங்க,” என்று மித்ரன் சொன்னான்.
“பழைய building-ல் நல்ல ஆராய்ச்சி நடக்கும். ஏன்ன்னு தெரியுமா?”
மித்ரன் யோசித்தான். “…தெரியல.”
“Wall-களுக்கு மெமரி இருக்கும். எத்தனை பேர் இங்க யோசிச்சாங்க, எத்தனை கேள்விகள் இந்த காரிடார்-ல் பிறந்தது. அந்த எனர்ஜி இருக்கும்.”
அந்த வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டே நடந்தார்கள்.
முதல் நாளே லீ ஒரு விஷயம் தெளிவாகச் சொன்னார்: “என் லேப், என் விதிமுறைகள். எதையும் கேள்வி கேள். எதையும் தற்காத்து நில்! (My lab, my rules. Question everything. Defend everything).”
“பார்றா… இவன் பெரிய டெரரா இருப்பான் போலயே!” என இவள் கிசுகிசுக்க மித்ரன் ஒரு மெல்லிய சிரிப்பை உள்ளே தள்ளிக்கொண்டான்.
அந்த முதல் வாரம் ஒரு போர்க்களமாகவே சென்றது. லேப்பில் மூன்று பேரும் முதல் முறையாக ஒரே மேஜையில் உட்கார்ந்திருந்தார்கள்.
லீ சந்தியாவைப் பார்த்துச் சொன்னார்: “ஷோ மீ யுவர் பெஸ்ட் வொர்க்”.
சந்தியா அவளது அந்தத் திட்டம் குறித்து விவரித்தாள்:
“மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில், காடுகளில், நதிக்கரைகளில் சின்னச் சின்ன சென்சார்களைப் பொருத்தி, மண்ணின் ஈரப்பதம், வெப்பநிலை, காற்றில் கார்பன் அளவு — இவற்றைத் தினமும் அளந்து, காலநிலை மாற்றம் எந்த அளவுக்குப் போய்க்கொண்டிருக்கிறது என்று கண்காணிக்கும் திட்டம் என் பெஸ்ட் வொர்க். ஆறு மாத உழைப்பு. 847 அளவீடுகள்”. அவள் அதை விளக்கும்போது குரலில் ஒரு பெருமிதம் இருந்தது. அது நியாயமான பெருமிதமே.
லீ கேட்டுக்கொண்டிருந்தார். எந்த எக்ஸ்பிரஷன் -உம் இல்லாமல்.
சந்தியா முடித்தபோது, ஒரு நொடி மௌனம்.
“உன் சென்சார்ஸ் ஐ எப்படி நட்ட?”
“ஒவ்வொரு 50 மீட்டருக்கு ஒரு சென்சார். சீரா, ஒரே தூரத்துல.”
“ஏன்?”
“அதுதான் “ஸ்டாண்டர்ட் மெத்தட். UN climate research-ல் அப்படித்தான் பண்றாங்க.”
லீ எழுந்து அருகில் இருந்த whiteboard-ல் ஒரு படம் வரைந்தார். ஒரு மைதானம். அதில் சம தூரத்தில் புள்ளிகள்.
“இது உன் மெத்தட். இது சமவெளிக்கு நல்லா வேலை செய்யும். சரியா?”
“ஆமா.”
அடுத்து அவர் ஒரு மலையை வரைந்தார். கீழே ஆறு. நடுவில் காடு. மேலே பாறை.
“இது வெஸ்டர்ன் காட்ஸ், இங்க மலை. கீழே நின்னு ஒரு சென்சார் நட்ட. மலை மேலே நின்னு இன்னொரு சென்சார். இந்த ரெண்டும் 50 மீட்டர் தூரத்துல இருக்கும். ஆனால் இந்த ரெண்டு இடங்களோட சூழல் ஒண்ணா இருக்குமா?”
சந்தியா ஒரு கணம் நிறுத்தினாள்.
“…இல்ல. கீழே ஈரமா இருக்கும். மேலே வித்தியாசமா இருக்கும்.”
“சரியா சொன்னே. கீழே ஆத்துக்கரையோட குளிர். மேலே திறந்த வெளியோட வெப்பம். இந்த ரெண்டையும் ஒரே அளவுகோலால் அளந்தா என்ன கிடைக்கும்?
உன் method-ல் ஒரு பிழை (Flaw) இருக்குன்னு சொல்றேன்.
சந்தியா நிமிர்ந்தாள். “என் அட்வைசர் அப்ரூவ் பண்ணாங்க. பிளஸ் யு.என் புரோட்டோகால் அப்படித்தான் சொல்றது.” ” யு.என் புரோட்டோகால் சமவெளிக்கு. இது மலை.”
சந்தியா எழுந்தாள். தன் உழைப்பைத் தற்காத்து (Defend) நிற்க வேண்டிய கட்டத்தில் தன்னை நிறுத்தி வைக்கிறானே என்ற கோபம் அவள் குரலில் தெரிந்தது.
“நீங்கள் ஜெர்மனியில் இருந்து வந்தவங்க. அங்க மலை வேற மாதிரி இருக்கும், மழை வேற மாதிரி இருக்கும். வெஸ்டர்ன் காட்ஸ் -ல் எப்படி மழை பெய்யும், எப்படி மண் இருக்கும்னு உங்களுக்கு என்ன தெரியும்?”
லீ அமைதியாக இருந்தார். அது எதிர்பார்க்காத மௌனம்.
“சயின்ஸ்க்கு ஜியோகிராபி இல்ல.” என்றவர், தொடர்ந்து ஒருவிதமான முரட்டுத்தனத்துடன், “உன் ஆராய்ச்சி பிழையானது… அவ்வளவுதான்!” என்று சொல்லித் தன் கையிலிருந்த புத்தகத்தை வீசியெறிந்தார்.
“ஐயோ, இவள் வருத்தப்படுவாளே, விவாதம் நீளக்கூடாது” என்று நினைத்து
மித்ரன் சட்டென்று சொன்னான்…”ஒருவேளை உங்கள் கணிப்பு சரியாக இருக்கலாம் (Maybe you were right about the assumption).”
பின் மெல்ல நகர்ந்து லீயின் கையைப் பற்றினான். அவனது கையைப் பிடித்து மென்மையாக அழுத்தினான்.
அந்தத் தொடுதலில் ஒரு செய்தி இருந்தது: “தயவுசெய்து இதைச் சற்றுக் கனிவாக அணுகுங்கள்” என்பதுதான் அது.
லீ சிரித்தார். அந்தச் சிரிப்பில் முதல்முறையாக ஒரு மென்மை தெரிந்தது. “அறிவியல் பணயத்தில் இருக்கும்போது என்னால் கனிவாக இருக்க முடியாது. மனிதர்களுக்காக மட்டுமே நான் கனிவாக இருப்பேன் (I don’t do kind when science is at stake. I do kind when people are),” என்றவாறு எழுந்து போய்விட்டிருந்தார்.
அந்த விவாதத்தின் கடைசி வார்த்தை தன்னுடையதாக இல்லையே என்ற வருத்தம் சந்தியாவுக்கு இருந்தது. மித்ரனுக்கு இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வந்தது. அன்று சந்தியா முகம் சிவக்க “சரியான முரடன் போல இவன்’” என்றது அவனுக்கு நினைவிருந்தது. ஆனால் மித்ரனுக்கு லீயின் லாஜிக் சரியென்று அவன் மூளை சொன்னது.
சந்தியாவிற்காக மித்ரன் தன் கையைப் பற்றியதும், லீ அதை உணர்ந்து கொடுத்த அந்தப் பதிலும்… அவர்களுக்குள் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு பிணைப்பை உண்டாக்கியது.
அன்றே உண்மையில் தொடங்கியது அவர்களின் அந்த ‘பிரோமான்ஸ்’ (Bromance)!
லேப்பில் விவாதங்கள் தொடர்ந்தன. ஆனால் அவற்றுக்குள் ஒரு ரிதம் உருவானது. லீ கேள்வி கேட்பார், சந்தியா விடை தேடுவாள். சந்தியா ஒரு ஐடியா கொண்டு வருவாள், லீ அதை இரும்பில் வார்த்தெடுப்பார். மித்ரன் செயல்வடிவம் தந்து நிஜமாக்குவான் .. இந்த மூவரின் கூட்டு முயற்சியால், மலைச்சரிவுகளின் கரடுமுரடான சூழலிலும் துல்லியமாக வேலை செய்யக்கூடிய ஒரு புதிய சென்சார் சிஸ்டம் மெல்ல மெல்ல உருவானது. ஆனால் மித்ரனுக்கும் லீ-க்கும் இருந்த அந்த ஈஸ் (Ease), சந்தியாவிடம் லீ-க்கு இல்லாது போனது.
உண்மையாகவே லீ-யின் மனதில் ஒரு ஆழமான தப்பபிப்ராயம் இருந்தது. மதுரையிலிருந்து ஒன்றாக வந்த மித்ரனையும் சந்தியாவையும் பார்த்த மாத்திரத்திலேயே, இவர்கள் இருவரும் காதலர்கள் என்று அவர் முடிவு செய்துவிட்டார். அந்த எண்ணமே அவர்களை அவர் கையாளும் விதத்தை மாற்றியது. மித்ரனிடம் காட்டிய அந்தத் தோழமையை சந்தியாவிடம் காட்டாமல் ஒரு முரட்டுத்தனமான ‘சுப்பீரியாரிட்டி’யுடன் நடந்துகொண்டார்.
மெல்ல… ஒரு ஆறு மாதம் கடந்திருக்கும்.
பல்கலைக்கழகத்தின் அந்த ஆண்கள் விடுதி அறையில் (Men’s Dorm) லீயும் மித்ரனும் தங்கியிருந்தார்கள். சந்தியா லேடீஸ் ஹாஸ்டலில் இருந்தாள். அங்குதான் மித்ரனுக்கு லீயின் இன்னொரு முகம் காணக் கிடைத்தது. பகலில் லேப்பில் அதிகாரத்தோடும், அறிவியலோடும் வலம் வரும் லீ, இரவில் ஒரு மர்ம மனிதனாக மாறினான்.
ஒவ்வொரு இரவும் லீ எங்கோ சென்றுவிட்டு, அதிகாலை வேளையில்தான் அறைக்குத் திரும்புவான். வரும்போது முற்றிலும் கலைந்த உருவத்தோடும், மிகுந்த சோர்வோடும் இருப்பான். ஒரு நாள் இரவு, லீ கிளம்பத் தயாரானபோது மித்ரன் அவனைத் தடுத்தான்.
“லீ, ஏன் இப்படி உடம்பைக் கெடுத்துக்கிறீங்க? ராத்திரி முழுதும் எங்கேதான் போறீங்க?” என்று மித்ரன் அக்கறையுடன் கேட்டான்.
லீ பதில் சொல்லவில்லை. “வா” என கூட்டிப்போனான்… அவர்கள் சென்றது ஒரு பார்.
அந்த இடத்தின் சூழலே ஒருவிதமான எனர்ஜியால் நிறைந்திருந்தது. அங்கேதான் மித்ரன், லீ-யின் அந்த உண்மையான விஸ்வரூபத்தைக் கண்டான்.
அவன் கிதாரை எடுத்து ஒரு கார்டை வாசிக்கத் தொடங்கினான். அந்த ஒரு இசையிலேயே ஆயிரம் கதைகள் இருந்தன. பாடினான், ஆடினான்.. மித்ரனுக்குப் புரிந்தது. லீ ஒரு ஆராய்ச்சியாளர் மட்டுமல்ல .. ஒரு கிதாரிஸ்ட், பாடகர் மற்றும் நடனக் கலைஞர் என்பது மித்ரனுக்கு அப்போதுதான் தெரிந்தது.
“என் கலைத் தாகம் தீர, நான் இரவுகளில் பாரில் சென்று பெர்ஃபார்ம் பண்றேன் மித்ரன். அங்கதான் நான் நானா இருக்கேன்,” என்றான் லீ.
அடுத்த நாள் அவர்கள் லேப்பிற்குத் திரும்பும் வழியில், மித்ரன் மெல்லக் கேட்டான்: “நீ ஏன் ஃபுல்-டைம் மியூசிக் பண்ணக்கூடாது?”
லீ மிக எளிமையாகச் சொன்னார்: “ரிசர்ச் எனக்கு விசாவைத் தருகிறது. இசை எனக்கு வாழ்க்கையைத் தருகிறது. எனக்கு இரண்டுமே வேண்டும்.”
“ஆனா, உண்மையிலேயே இதில் நீ எது? (But which one is you, really?)” என்று மித்ரன் மீண்டும் கேட்டான்.
லீ ஒரு கணம் தன் நடையை நிறுத்தினார். பிறகு மித்ரனின் கண்களைப் பார்த்துச் சொன்னார்: “மியூசிக். எப்பவுமே மியூசிக்தான். அறிவியல் என் மூளைக்கான உணவு. இசை என் ஆன்மாவிற்கான ஆக்சிஜன்.”
இந்த உண்மையைத் தெரிந்துகொண்ட இரண்டாம் நாள், மித்ரன் ஒரு அதிரடியான முடிவை எடுத்தான். லீயிடமும் சொல்லவில்லை, சந்தியாவிடமும் சொல்லவில்லை. அன்று இரவு சந்தியாவை அழைத்துக்கொண்டு லீ பெர்ஃபார்ம் செய்யும் அந்த ‘பார்’ நோக்கிச் சென்றான்.
அங்கே மேடையில் லீ.! லேப்பில் பார்த்த அதே மனிதனா இது? நீல நிற ஒளியில், அந்தப் புகையும் வாசனையும் நிறைந்த சூழலில், லீ ஒரு மாயாவியைப் போலத் தெரிந்தான். அங்கே மேடையில் நின்றிருந்த அந்த ஜெர்மன் இளைஞன், வெறும் இசைக்கலைஞனாகத் தெரியவில்லை.. ஒரு நவீன காலத்துச் சிற்பம் உயிர்பெற்று வந்தது போல இருந்தான். அவனது அழகு என்பது வெறும் தோற்றமல்ல, அது அவன் வெளிப்படுத்திய அந்த அபாரமான ‘எனர்ஜி’. அவன் தன் கிதாரின் நரம்புகளைத் தொட்டபோது, அந்த இடமே ஒரு கணம் நிசப்தமானது.
“லீ தன் கிதாரில் ஒரு ‘மைனர் செவன்த் கார்டை’ (Minor 7th chord) மீட்ட, அதன் பின்னாலேயே ஒரு ‘ப்ளூஸி பென்ட்’ (Bluesy bend) இசையாக வழிந்தோடி வர, அந்த ராகம் அங்கிருந்தவர்களின் ஆன்மாவை வருடியது.”
அவர் பாடிய ஒவ்வொரு பாடலும், ஆடிய ஒவ்வொரு அசைவும் கூட்டத்தை வெறிக்கொள்ளச் செய்தது. சந்தியா அப்படியே சிலையாகி நின்றாள். அவளுக்குள் எங்கோ ஒரு ‘பல்ப்’ எரிந்தது. அவளது அறிவியல் மூளை இதுவரை லீயைக் கணக்கிட்ட விதம் தவறு என்று புரிந்தது.
மித்ரன் சந்தியாவின் கண்களைப் பார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு புதிய பிரேமை, ஒரு புதிய பாவம், வந்து போவதை அவன் கண்டான். “மித்ரனுக்குள்ளும் பல்ப் எரிந்தது..”
மித்ரனுக்கு இது ஒன்றும் புதிய அனுபவமல்ல. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் செமினார் ஹால்களில் அவன் லெக்சர் கொடுக்கும் போதெல்லாம், அவனை வைத்த கண் வாங்காமல் ஒரு ஜோடி கண்கள் தொடருமே… அவனது ஒவ்வொரு சொல்லையும் வேதவாக்காகக் கேட்டு, அவனைத் தன் கண்களாலேயே துரத்திய அந்தப் பெண்ணின், ஆதிரையின் நினைவு ஒரு கணம் மித்ரனை வருடிச் சென்றது. அந்தக் கண்களில் அவன் கண்ட அதே காதல், அதே அர்ப்பணிப்பு, அதே அலைகளை இன்று சந்தியாவிடம் லீ மீட்டெடுத்திருந்தான்.
மித்ரனுக்கென்றே ஒருத்தியின் கண்களில் அன்று அலைமோதிய அதே காதலின் சாயலை, இன்று லீயிற்காகச் சந்தியாவின் கண்களில் அவன் கண்டபோது, மனம் உள்ளுக்குள் “யா…ஹூ…!” என்று உற்சாகத்தில் கத்தியது.
மித்ரன் இப்போதும் அதை நினைத்துச் சிரித்தான்… அவன் விழிகளில் நீரோடு.
இங்கே பேராசிரியர் தன் குரலைச் சற்றே செருமிக்கொண்டு, அந்தப் பழைய நினைவுகளின் ஆழத்திற்குச் சென்றார். “ஆதிரை, என் மகள் சந்தியா அன்னைக்கு என்னிடம் சொன்னது இன்னைக்கும் அப்படியே காதுல ஒலிக்குதுமா…”
“அப்பா… ஒரு கண் தெரியாத பையனுக்கு நிலா தெரியாதுல்லப்பா… அவன்கிட்ட போய் நிலா எப்படி இருக்கும்னு யாராவது கேட்டா, அதை அவனால பார்க்க முடியுமா? யாராலயாவது காட்டத்தான் முடியுமா? ஆனா லீ ஒரு அற்புதம் செஞ்சான்பா. அவன் தன் கிதாரை எடுத்து ஒரு மென்மையான ராகத்தை மீட்டி, ‘கண்ணா… நிலாவோட அலைகள் உன் மேல விழுந்தா இப்போ இந்த இசை உன்னைத் தொடுற மாதிரிதான் இதமா இருக்கும்’னு ஒரு மெட்டைக் கொடுத்தான் பாருங்க… அங்கதான் நான் தோத்துட்டேன்ப்பா.”
சந்தியாவின் கண்ணில் காதல் மின்னிய அந்தத் தருணத்தை அன்னைக்கே உன் மித்ரன் கண்டுபிடித்துவிட்டான் போல மா… “ஏய்… என்ன மேடம், லீ மேல அப்படியே லவ் மழை கொட்டுது போல?” “நீ என்னை எத்தனை நாள் ஆதிரையோட சேர்த்து வச்சு ஓட்டி இருப்ப… இப்போ வாமா..வா வசமா மாட்டிக்கிட்ட!” என்று அவளை அப்போதே வம்புக்கு இழுக்கத் தொடங்கிட்டான் போல”.
“செமினார் ஹாலில் மித்ரன் பேசும்போது, அவனைத் துரத்திய உன்னோட அந்தப் பார்வை, நீ அந்த டைரியில அவனைப் பற்றி எழுதியிருந்த அந்தத் ‘தேன் சொட்டுகள்’ போன்ற கவிதை வரிகள்… எல்லாமே மித்ரன் சந்தியாவிடம் சொல்லியிருந்தான்மா… அந்த கவிதைகளைப் படித்த அன்றே சந்தியா உனக்கு ஒரு பெரிய ரசிகையாகிவிட்டா மா.”
அவள் என்கிட்டயே சொன்னா, ‘ஒருத்தர் மேல எவ்வளவு அன்பு இருந்தா இப்படியெல்லாம் கவிதை எழுத வரும் இல்லப்பா? ஆதிரைதான் மித்ரனுக்குன்னு பிறந்தவள்’.
இங்கு ஆதிரை நெக்குருகி நின்றாள்.
“ஆமா ஆதிரை… சந்தியா லீ-யை ரொம்பத் தீவிரமா காதலிச்சா. லீ-யோட அந்தப் பிரம்மாண்டமான மியூசிக் அறிவையும், அவனோட அந்த ஜெர்மன் வசீகரத்தையும் அவ ஒரு ‘பார்முலா’ மாதிரி பத்திரப்படுத்தி திரிஞ்சா. ” ஐ ஆம் மேட் ஃபார் லீ-ப்பா… இட்ஸ் டிவைன்” னு … என்கிட்ட போன்ல சொன்னப்போ… ஐ வாஸ் வெரி எலேட்டட் .
“அம்மா நான் வரட்டா… வந்து மேரேஜ் பேசறேன் மா”… “நோ நோ.. நோ.. அவர் மனசில் என்னனு தெரியலப்பா”…னு என் பொண்ணு உருகினா மா!”
“பட் மிஸ்டர். லீ அவருக்குள் எப்போ சந்தியா வந்தா.. மித்ரனே சொல்லிட்டாரா..?”
“ இல்ல மா இல்ல.. மித்ரன் நியூ ஹிஸ் லிமிட்ஸ்… எவ்ரிதிங் ஃபெல் இன் இட்ஸ் பிளேஸ் ஆன் தட் ஒன் ரெய்னி டே..”
error: Content is protected !!