Skip to content
Post Views: 1,825
அத்தியாயம் – 20
லட்சுக்கும், சாலாக்கும் திருமணம் முடிந்து சரியாக ஒரு மாதம் கடந்த நிலையில்.இன்னும் வெகுவாகப் பின்னைந்து இருந்தனர் ஐவரும் அதாவது வள்ளியப்பன் தொடங்கி, மீனா தொட்டு, சாலா வரை.முரண்டு பிடித்த கண்ணாத்தாள் கூட காரைக்குடியில் அழகாகப் பொருந்தி போனாள்.
லட்சுமணன் முழு வேலையாகப் படிப்பு, பயிற்சி என்று மெட்ராசுக்கும், காரைக்குடிக்கும் அலைந்த வண்ணமிருக்க.சாலா தொழிலை கையிலெடுத்து கொண்டாள்.முன்னமே தெரிந்த தொழில் என்றாலும் இப்போது அவள் முதலாளி படியில் இருப்பதால் நிறையத் தடுமாற்றங்கள் வந்தது.
Advertisement
ஒவ்வொரு முறையும் அவள் தடுமாறும் போதும் மீனாள் தான் மருமகளுக்கு பக்கமிருந்து பக்குவமாக சொல்லி கொடுத்தாள்.என்னதான் ஒன்றாக இருந்தாலும் கொஞ்சம் விலகலை கடை பற்றி நின்றாள் கண்ணாத்தாள்.ஒரு சொல் பேச்சுக்கு இனி ஆளாகி நிற்க கூடாது என்பது அவளுடைய உறுதி இதில் வள்ளிபன்னுக்கும் பங்குண்டு.
Advertisement
லட்சுமணன் மெட்ராஸ் சென்று இன்றோடு ஒரு வாரம் கடந்து விட்டது.இன்று இரவு அல்லது விடியலில் வருவான் என்று எதிர்பார்ப்பு.வள்ளியப்பன் உணவு கடையைப் பார்த்துக் கொள்ள, வீட்டு பெண்களும் விசாலாட்சி மட்டுமே வீட்டில் இருந்தனர்.
Advertisement
மீனாள் சுற்றும் முற்றும் பார்த்துக் விட்டு மெல்லிய குரலில்,”மதனி!” என்றழைக்க வத்தல் பாக்கெட் போட்டுக் கொண்டிருந்த கண்ணாத்தாள்.
Advertisement
“என்ன மீனா?”
“இங்கன வாக” என்று தனது பக்கத்தில் உள்ள இடத்தைத் தட்டி சொல்ல கை வேலையை விட்டுவிட்டு மீனாளிடம் சென்று அமர்ந்து கொண்ட கண்ணாத்தாள்.
“என்ன மீனா? உடம்புக்கு எதுவும் செய்யுதா?”
“இல்ல மதனி நான் நல்லா இருக்கேன்“
“வேற என்ன?”
“உங்ககிட்ட ஒரு சங்கதி சொல்லனும். நானும் இதை சொல்ல பத்து நாளா கடந்து தவிக்கிறேன் தனியா பேச தோது படல” என்றதும் யோசனையாக .
“என்ன மீனா?”
“மதனி லட்சு ஐயா இருக்காகல”
“யாரு சோமு அண்ணனையா சொல்றீக?”
“ஆமா அண்ணி அவுகத்தேன்” அவுகளை கொண்டு இனி என்ன கேட்க எண்ணிய நாவை அடக்கி.
“என்ன சங்கதி?”
“அவுகதேன் சங்கதி” இன்னும் யாராவது இருக்கிறார்களா என்று மீனாள் கண்கள் அலைபாய்ந்து கொண்டே இருந்தது.அவளது எண்ணத்தைப் படித்தார் போல.
“இங்கன யாருமே இல்ல மீனா நீக சொல்லுக“
“மதனி இந்த மனுஷன் பண்ண அத்தினியும் கிறுக்குத் தனம், தன்னோட இருக்குற குரங்கு வனத்தையும் சேர்த்து கெடுக்குமா அந்தக் கதையா இவுகள கட்டினத்துக்கு என் வாழ்க்கையும் போச்சு மதனி” இம்மையும் புரியவில்லை மறுமையும் விளங்கவில்லை போலும் கண்ணாத்தாளுக்கு.
“என்ன சொல்ல வரீக ஒன்னும் விளங்கல மீனா“
“லட்சு ஐயா அப்போ எல்லாம் அடிக்கடி நேபால் போயி வருவாரு. நானும் தொழில் சங்கதினு இருந்தேன், ஆனா அவுக சூது ஆட அங்கன போயிருக்காக மதனி. நல்லா பணம் கொண்டவுக பொழங்குற இடம் போல மதனி.அள்ளி கொட்டி அத்தனையும் கோட்டை விட்டாச்சு.
“இது என்ன? இத்தினி நாள் கண்டு அதுவும் அவுக போன பிற்பாடு சங்கதி வெளில வருது அது சரி உங்களுக்கு யாரு சொன்னாக?”
“லட்சு!” என்றதும் மீனாளை அதிர்ந்து பார்த்தாள் கண்ணாத்தாள்.
“என்ன சொல்லுறீக?”
“அவுக சாக முன்னுக்கு லட்சுவை வெளில சந்திக்க வர சொல்லி, ஆள் விட்டு தனியா பேசிருக்காக. காசு போனதும் இல்லாம அவுக ஐயா சொத்து அவருக்கே தெரியாம வித்து வச்சிருக்காக. இந்த நொடி வரை சொத்து போனது தெரியாது போல. இவுக விட்டதைப் பிடின்னு அத்தினியும் போச்சு. அந்த வெறுப்பை எங்ககிட்ட வச்சு தள்ளி நிறுத்தியாச்சு“
“இது என்ன அநியாயமா இருக்கு அவுக செஞ்சதுக்கு நீக என்ன செய்வீக.சரி மீனா அந்தப் புள்ள அங்கன வந்த கதை என்ன கதை?“
“அது இன்னும் கொடுமை வயசுல அந்த புள்ளைக்கும், இவுகளுக்கும் கல்யாணம் பேசி கிடந்து இருப்பாகப் போல.என்னை இங்கன கட்டவும் அவுக தள்ளி நின்னாச்சு.அவுக வள்ளிக்கு கல்யாணமாகி குழந்தை இல்லன்னு தள்ளி வச்சுட்டாகாலம். எங்களை விட்டு அவுக தனியா வரவும் இந்தப் புள்ள ஒரு கணக்கு வச்சு போயி ஒட்டிக்கப் பார்க்க.லட்சு ஐயா அந்தப் புள்ளைய சும்மா துணைக்கு வச்சிக்கிட்டாக போல” என்றதும் இன்னும் அதிர்ந்து போனாள் கண்ணாத்தாள்.
“இது என்ன கன்றாவி உண்மையைச் சொல்லி பிரச்சனையைச் சரி பண்ணி வாழுறதை விட்டுட்டு.சுருள் கணக்கா அதைச் சுத்தி, சுத்தி சிக்கல் பண்ணி வச்சிருக்காக என்ன மீனா இது?”
“எனக்கு இப்ப கூட அவுங்கள எண்ணி பாவம் பார்க்க முடியல மதனி.ஒரு மனுசனுக்கு எத்தினி சுயநலம் பாருங்க.குடும்பமே அப்படித்தேன் போல அவுக ஐயா தொடங்கித் தங்கைனு…கண்ணுக்கு நிறைக்க அத்தினி அழகு,அறிவுன்னு இருக்கிற லட்சு கூட வாழ குடுத்து வைக்கல பாருக” கணவனை எண்ணி இன்னும் ஆத்திரம் வந்தது மீனாளுக்கு.
சுத்த முட்டாள் தனம் மது,மாது,சூது மூன்றும் நெறி தவறிய ஒன்று இதனைத் தொட்டால் அழிவு என்பதைப் பெரியோர்கள் நித்தம் நித்தம் சொல்லி படிப்பினை வைத்து கொண்டு தானே இருக்கிறார்கள்.அதையும் மீறி உள்ளே விழுந்தால்? திடமான மனம் இல்லை என்று தானே அர்த்தம் இந்த சோமுவும் அப்படி தான் போலும்.
“என்ன சொல்லுறதுனே தெரியல இத்தினி வருஷம் செண்டு இதை சொல்லிக்கிட்டு அவர் முடிவையும் தேட வேண்டிய அவசியந்தேன் என்ன? இதுனால யாருக்கு என்ன லாபம்?” பெரும் குழப்பமாக இருந்தது கண்ணாத்தாளுக்கு.
“போகும் போது நல்லவருனு பேர் வாங்கி நாங்க கையெடுத்து கும்பிட்டு இருப்போமுன்னு எண்ணம் போல மதனி.இந்த சங்கதி சொல்லாம இருந்தாலாவது லட்சு கொல்லி சட்டி தூக்கிருப்பாக இதை கேட்ட உடனே அவுங்களுக்கு இன்னும் கோபம். இதை அவுகளே சொன்னாக.
‘ஆத்தா ஐயா இதை பேசாம இருந்திருக்கலாம் அவரை கொண்டு நல்லவன்னு காட்டி நிற்க உண்மையை சொல்லி கோழைனு பேர் வாங்கி நின்னது தான் மிச்சம்.
“விடுக மீனா அவர் பாடு இப்படித்தேன் முடியும்ன்னு இருக்கு.என்ன இதை லட்சுவை கூப்புட்டு சொன்னதுக்கு அவுக ஐயாவ கூப்புட்டு வச்சு சொல்லிருக்கலாம்” அண்ணாமலை பேச்சு இங்கணம் நியாபகம் வந்து பெரும் எரிச்சலை கொடுத்தது கண்ணாத்தாளுக்கு.
இப்படி பட்ட மகனை வைத்து எத்தனை ஜம்பம் பேசி வைத்தார். அதுவும் சபையில் அத்தனை பெரியவர்கள் முன்னில்.கணவன்,மகள் என்று பாரபட்சம் இல்லாமல் அவர் பேசியது இன்னும் கண்ணாத்தாளுக்கு வடுவாக தான் இருந்தது. அதனை எல்லாம் எண்ணி உள்ளம் கொதித்தாலும் நேர் குணம் கொண்டவளாக.
“மீனா இதை நீக எல்லாத்துக்கும் சொல்லிக்கிட்டு இருக்காதீக ஒருத்தர் எண்ணம் போல ஒருத்தர் எண்ணம் சரியா இருக்காது உங்க அண்ணன் உற்பட சொல்ல வேண்டிய அவசியம் இல்லை”
“இல்ல மதனி லட்சு எனக்கு மட்டுந்தேன் தெரியும் லட்சு வள்ளி அண்ணன் கிட்ட கண்டிப்பா சொல்லி இருப்பாக உங்ககிட்ட நான் என்னத்த மறைஞ்சு பேசிருக்கேன் அதேன் சொன்னேன்”
“ஹ்ம்ம்! இந்தப் பேச்சை வச்சு இன்னும் பொருமிக்கிட்டு நொந்து கிடக்க வேண்டியதில்லை விடுக நம்ப பொழைப்பை பார்ப்போம்” என்ற கண்ணாத்தாள் மீனாவையும் யோசிக்க விடாமல் வேலையில் இழுத்து கொண்டாள்.
அதன் பின் நேரம் இறக்கை விரித்துப் பறக்க சரியாக நடு நாசி பிடிக்கும் வேளையில் ஊரில் இருந்து வந்தான் லட்சுமணன்.இரவில் வந்து கதவை தட்ட தூக்கம் சுழட்டி அடிக்க அதனை முயன்று தள்ளி விழித்தும் விழிக்காமல் வந்து கதவை திறந்தாள் சாலா.
கதவை திறந்த வேகத்தில் நிமிர்ந்தவன் தூங்கி வழியும் மனைவியைக் கண்டு சிறு புன்னகை கொண்டு,” என்ன சாலா ஆச்சி சாமி ஆடி வைக்கிறீக” என்றவன் கதவை மூடி தாழிட்டு திரும்பி அவளை நெருங்கி நிற்க.
“வாக” என்றவள் மீண்டும் அறைக்குச் செல்ல தள்ளாடி செல்ல நொடியில் அவளை கைகளில் அள்ளி கொண்டான்.
“என்ன ஆச்சி? போதை கண்டவன் கணக்கா இந்த ஆட்டம்” அவனது பேச்சில் முயன்று முழித்து லட்சுவை முறைக்க.
“என்னக?”
“ராகோழி கணக்கா வந்துட்டு என்னை ரேக்கி வைக்காதீக ஒன்னு விடிஞ்சு பஸ் ஏறி வரணும். இல்லையா பொழுதுக்கு ஏறி வந்திருக்கனும் அது என்ன ரெண்டுக் கட்டான் நேரத்துல வர்ரது”
“ஆஹா! புதுசா கல்யாணம் பண்ண மாப்பிள்ளை ராவுலதேன் வரணும்.வேலை முடிஞ்ச கையோட சாலா ஆச்சிய தேடி ஓடி வந்தா பேச்சை பாருக? ” என்றதும் இன்னும் நன்றாக விழித்து கொண்டவள்.
“சாப்புடுக தோசை வார்த்து வைக்கிறேன்”
“சாப்பிட்டேன்” என்றவன் உள்ளே சென்று தன்னைச் சுத்த படுத்திக் கொண்டவன், உடைகளை மாற்றிக் கொண்டு சாலாவின் அருகில் வந்து அமர்ந்து கொள்ள.
அதற்காகவே காத்திருந்தவள் போல் அவனது நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.இருவரும் சில நொடிகள் மௌனம் கொண்டு இந்த தருணத்தை அழகாக ரசித்து கடந்து கொண்டிருந்தனர்.முதலில் தெளிந்த சாலா அவனிடமிருந்து விலகி.
“வாக படுக்கலாம் என்றவள் படுத்து கொள்ள அவனும் அவள் அருகில் படுத்து கொண்டவன் அவளது விரல்களைப் பிடித்து மெல்லமாக நீவி நெட்டி எடுக்கச் சுகமாக இருந்தது.
இடது கையைக் கொடுத்தவள், இப்போது வலது கையையும் அவனிடம் கொடுத்து விடச் சிறு புன்னகையுடன் அத்தனையும் நீட்டி முறித்துக் கொண்டே,”ஏங்க சாலா ஆச்சி உங்களுக்குப் புத்தகம் படிக்கப் புடிக்குமா?” இரவு வேளையில் அதுவும் தூக்கம் சுழட்ட எதற்கு இந்த கேள்வி என்று தெரிய விட்டாலும் கணவனுக்கு பதில் சொன்னாள் அரிவை.
“ஹ்ம்ம்! புடிக்குமே”
“அப்புறம் ஏன் இந்த படிக்காம இருக்கீக” என்றதும் அவன் புறம் திரும்பி படுத்தவள்.
“என்ன புத்தகம்? எங்க இருக்கு?”
“உங்க கண்ணு முன்னுக்குத்தேன் லட்சுனு ஒரு புத்தகம் ” என்றதும் முதலில் புரியாமல் குழம்பியவள் பின்பு எதோ புரிய சிறு புன்னகையுடன் அவனது நெஞ்சில் சரிந்து படுத்து கொண்டாள்.
“லட்சு புத்தகத்தைப் படிச்சாத்தேன் ஆதி முதல் அந்தம் வரை புரியும். நீக இந்தப் புத்தகத்தை வாங்குன கையோட கிடாசி வச்சுடீக”
லட்சுவின் பேச்சில் வெடுக்கென தலையை தூக்கி அவனை பார்த்தவள்.அவனது கன்னத்தைக் கிள்ளி,” என்ன பேச்சு பேசுறீக? அப்பவும் புத்தகம் நினைப்புதேன் உதாரணம் கூடப் பொறுப்பா வருதே” என்றவள் இன்னும் கன்னம் கிள்ளி கொஞ்சி வைத்தாள் தனது கள்ளனை.
“ப்ச்! பேச்ச மாத்தி வைக்காதீக உங்கள படிக்க ரொம்ப அவகாசமாகி போச்சு” என்றவன் அவள் கன்னத்தை மெல்ல வருடினான்.
“லட்சு உங்களை நான் இப்படியெல்லாம் பேசுற ஆளுன்னு எண்ணி வைக்கவே இல்ல தெரியுமா? பார்க்க சிரிச்ச மேனிக்கு சமத்தா இருந்துகிட்டு பண்ணுற சேட்டை கொஞ்சம் நஞ்சம் இல்லை.வெளில நான் சொன்னா கூட யாரும் நம்ப மாட்டாக.உங்களை பத்தி எனக்கு தெரியவே இல்லை“ சிறு சலிப்பாக சொன்னவளை சிரிப்புடன் பார்த்தவன்.
“அதேன் சொல்லுறேன் கூட வளர்ந்தே என்னைப் பத்தி எதுவும் தெரியாம இருக்கீக வாக சாலா ஆச்சி ஒருத்தரை ஒருத்தர் முதல முழுசா படிச்சுக்கிடலாம் அப்போதேன் என்னை பத்தி முழுசா தெரியும்” என்றவன் கண் இமைக்கும் நேரத்தில் அவளை அனைத்து தூக்கி கொள்ள.
கொஞ்சமாகத் தடுமாறி அவனை பிடித்து கொண்டவளை நேர் பார்வை பார்த்து, “சாலா!”
“ஹ்ம்ம்!”
“படிக்கலாம் வாக” முகம் பார்த்து கேட்க அவனில் புதைந்து கொண்டாள்.சாலாவை ரசித்து, ரசித்துப் புசித்து நின்றான் லட்சுமணன்.மருத்துவன் பெரும் ரசனைகாரன் போலும் உச்சியில் தொடங்கி உள்ளங்கால் ரேகை வரை ஆராய்ச்சி செய்து ஒவ்வொரு வரியாக அவளையும் படிக்கச் செய்து தானும் படித்து தேர்ச்சி பெற்றான்.
அடுத்த நாள் விடியல் லட்சுக்கு அத்தனை மகிழ்ச்சியை கொடுக்க அண்ணாமலைக்கு அதற்கு நேர் மாறாக இருந்தது.
error: Content is protected !!