Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அகல்கவி சிலையமுதே

அகல்கவி 08

 

அகல்கவி சிலையமுதே 08

 



Advertisement

“இப்போ நான் என்ன சொல்லிட்டேன்னு இவ்வளவு கோபம் சாரதா..” என்று சிவலிங்கம் கோபத்தை அடக்கிய குரலில் கேட்க, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க தன் கணவரை முறைத்துப் பார்த்தார் அவர்.

 

“பின்ன என்னங்க, அவளும் என் அண்ணன் பொண்ணுதான். இல்லன்னு சொல்லல, அதுக்காக என் பையனுக்கு அவ பொருத்தமானவளா என்ன! அவனுக்கு ஏத்த பொருத்தமான ஒருத்திதான் இந்த வீட்டுக்கு மருமகளா வரணும்..” என்று அவர் கோபமாக பேசிக்கொண்டே போக, அறை வாசலில் நின்று இதைக் கேட்டுக்கொண்டிருந்த யுவனுக்கே தன் தாயின் வார்த்தைகளில் பிபி எகிறியது.

Advertisement

 

Advertisement

“அம்மா என்ன பேசுறீங்க நீங்க?” என்று யுவன் பொறுக்க முடியாது கத்திவிட, தன் மகனை விழிகளை கூர்மையாக்கிப் பார்த்தார் அவர்.

 

“ஓஹோ.. சாருக்கு இப்போ முறைப் பொண்ணுன்னு  அகல்யா மேல கரிசனையோ..” என்று அவர் கெட்ட விதத்தில், “அசிங்கமா பேசாதீங்கம்மா, அகல்யா மேல இதுவரைக்கும் அப்படியொரு எண்ணம் எனக்கு வந்ததே கிடையாது. ஆனா நீங்க அவள பத்தி பேசுற விதம்தான் ரொம்ப தப்பா இருக்கு. அததான் வேணாம்னு சொல்றேன்” என்றான் அழுத்தமாக.

Advertisement

 

யுவனின் விழிகள் கோபத்தில் சிவந்திருந்தன.

 

“இதெல்லா என் தப்புதான் யுவா, எனக்கு தோனிச்சு.. கேட்டேன் அவ்வளவுதான். அந்த பொண்ணோட கல்யாணமும் நின்னு போச்சு, அதுமட்டுமில்லாம அகல்யாவோட அமைதி சின்ன வயசுலயிருந்து எனக்கு ரொம்பவே பிடிக்கும். அவ எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா நல்லா இருக்கும்னு பல தடவை தோனியிருக்கு. அதான்…  ஆனா உன் அம்மா எதிர்பார்ப்பு என்னவோ வேற மாதிரி இருக்கு”

 

என்று சிவலிங்கம் சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகரப் போக, சாரதாவோ கணவரின் வார்த்தைகளில் பொங்கிவிட்டார்.

 

“நல்ல கதையா இருக்கே.. எனக்கும் அகல பிடிக்கும்தான், அண்ணன் பொண்ணுன்னு அவமேல பாசம் இல்லாம இல்ல. ஆனா என் பையனுக்கு பொருத்தமானவ அவ கிடையாது..” என்று கோபமாக சொன்னவர் யுவனின் புறம் திரும்பி, “இங்க பாரு, உன் அப்பா வார்த்தையெல்லா கேட்டு நீ மனசுல தேவையில்லாத ஆசைய வளர்த்துக்காத! அம்மா உனக்கு ஏத்த நல்ல அழகான பொண்ணா இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

 

ஆடவனுக்கோ எங்கேயாவது போய் முட்டிக் கொள்ளலாம் போலிருந்தது.

 

தலையில் வெளிப்படையாக அடித்துக்கொண்டவாறு அவன் அறைக்குள் நுழைந்துக்கொள்ள, அடுத்தநாள் அரவிந்தோடு அதே இட்லி கடையில் அமர்ந்திருந்தான் யுவன்.

 

“யுவா, அந்த பொண்ணு பேரென்ன.. ஆங் அகல்யா அவ உன் முறை பொண்ணுல்ல, அவ கூட இன்னமும் பேசுறியா என்ன!” என்று உணவை பிசைந்தவாறு அரவிந்த் கேட்க, ஏதோ யோசனையில் மூழ்கியிருந்தவனுக்கு அந்த கேள்வி காதில் விழவேயில்லை.

 

“டேய் யுவா.. யுவா..” என்று இரண்டு தடவைக்கு மேல் அழைத்துப் பார்த்தவன் பின் உலுக்கி நண்பனை நடப்புக்கு கொண்டு வர, “ஆங்.. சொல்லுடா” என்று மலங்க மலங்க விழித்தபடி கேட்டான் மற்றவன்.

 

இவனுக்கோ ஒன்றுமே புரியவில்லை. தன் நண்பனை ஊசி துளைக்கும் பார்வைக்கொண்டு சந்தேகப் பார்வைப் பாரத்தான் அரவிந்த்.

 

“டேய் என்னாச்சுடா, ஏன் ஒரு மாதிரியா இருக்க?” என்று அவன் கேட்டதும், “இல்லடா அது.. நேத்து அம்மா…” என்று ஆரம்பித்தவன் நடந்தது மொத்தத்தையும் சொல்லி முடிக்க, மற்றவனின் புருவங்கள் யோசனையில் முடிச்சிட்டன.

 

“நிஜமாவே எனக்கு அகல் மேல அப்படியெல்லா எண்ணம் இல்லடா, மித்ராவோட நான் பேசி பழகின அளவு கூட அகலோட நான் பேசினது கிடையாது. அவ ரொம்ப அமைதி, எல்லாத்தையும் விட்டு அதிகமா ஒதுங்கியேதான் இருப்பா, ஊர்ல இருக்கும் போது மித்து என் கூடவே இருந்தாலும் பாதி நேரம் அகல் என்ன பண்றான்னு கூட எனக்கு தெரியாது. அவள நான் சரியா கவனிச்சது கூட இல்ல..”

 

அவன் தன் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக, “ஏய் நிறுத்து நிறுத்து..” என்றான் அரவித்த குறுக்கிட்டு.

 

யுவனோ கேள்வியாகப் பார்க்க, “அகல பத்தி எதுவுமே தெரியாம எப்படி அவள கல்யாணம் பண்றதுன்னுதான்  உன்னோட பிரச்சனையா?” என்று மற்றவன் ஒரு கேள்வியை வைக்க, அதிர்ந்துவிட்டான் அவன்.

 

“டேய் டேய் கொன்னுடுவேன்டா உன்ன! நான் எப்போடா கல்யாணத்த பத்தி பேசினேன், அகல பத்தி சொன்னேன், அவ்வளவுதான்.. அவ கூட நான் அப்படியெல்லா யோசிச்சது கூட கிடையாது. ஒரு லவ் பண்ணி நான் அனுபவிச்சதெல்லா போதும். மறுபடியும் காதல் கல்யாணம்…” விரக்திப் புன்னகையோடு இருபக்கமும் இல்லையென்ற ரீதியில் தலையாட்டினான் யுவன்.

 

சட்டென நண்பனின் அலைப்பேசியை பிடுங்கிய அகல்யாவுடனான உரையாடல்களை பார்த்த அரவிந்தின் முகம் அஷ்டகோணலாக மாற, மற்றவனோ புரியாமல் பார்த்தான்.

 

“என்ன கருமம்டா இது! மாறி மாறி குட் நைட் சொல்லி க்ரின்ஜ் பண்ணியிருக்கீங்க. நடுவுல அப்பப்போ சாப்பிட்டியா ப்ளா ப்ளா ப்ளா… இவ்வளவுதானா! இதுதான் நீ உன் முறைபொண்ணு கூட பேசுற லட்சணமா மச்சான்?”

 

அவன் அதிர்ச்சி குரலில் கேட்க, அவன் கையிலிருந்த தன் அலைப்பேசியை பிடுங்கினான் யுவன்.

 

“அதான் சொல்றேனே, நாங்க அவ்வளவா பேசிக்குறது இல்லன்னு.. நான் பத்து மார்க் கொஷன் கேட்டா டூ மார்க் குஷனுக்கான பதிலதான் சொல்லுவா..” அகல்யாவை நினைத்து சிரித்தான் அவன்.

 

அரவிந்த்தோ அவனின் புன்னகையை சந்தேகமாகப் பார்த்துவிட்டு, “ம்ம்.. சரிதான் நடத்து நடத்து” என்று கேலித் தொனியில் சொல்லி சிரிக்க, “நீ நினைக்கிற மாதிரிலாம் இல்லடா பாவி, சும்மா இரு..” என்றவன் சரியாக அகல்யாவிடமிருந்து வந்த குறுஞ்செய்தியை விழி விரித்து பார்த்தான்.

 

நண்பனின் அதிர்ந்த முகத்தை புரியாமல் பார்த்த அரவிந், “என்னாச்சுடா மச்சா?” என்று கேட்க, “அடுத்த வாரம் மாமாவும் அகலும் இங்க வர்றாங்களாம்டா” என்றான் மற்றவன்.

 

“ஓஹோ..” என்று மேலும் இவன் சீண்ட, முறைத்துப் பார்த்தவனோ, “வாய மூடுடா இல்லன்னா…” என்று பதிலுக்கு முதுகிலேயே ஒன்று போட்டான்.

 

இப்படியே நாட்கள் ஓடி அகல்யா இங்கு வருவதற்கான நாளும் வர, அன்று..

 

காலையிலேயே சாரதா சமையலறையில் பாத்திரங்களை உருட்டிக்கொண்டிருக்க, அந்த சத்தத்தில் பட்டென்று விழித்த யுவன் காதில் விழுந்த சத்தத்தில் குறட்டை விட்டவாறு அங்கு சென்று பார்த்தான்.

 

அத்தனை காய்கறிகளை வைத்து அவர் நறுக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவனோ, “என்னம்மா, ஒரு வாரத்துக்கு தேவையான காய்கறிய இப்போவே கட் பண்ணி வச்சுக்க போறியா?” என்று கேட்டான் கேலியாக.

 

மகனை முறைத்துப் பார்த்தவர், “இன்னைக்கு முத்தண்ணா ஏதோ வேலை விஷயமா இங்க வந்திருக்காரம், அகலையும் கூட்டிட்டுதான் வந்திருக்காரு.. ராத்திரி போயிருவாங்களாம். அதான் மதியானம் வெளியில எங்கேயாவும் சாப்பிடாதீங்க வீட்டுக்கு வாங்கன்னு சொன்னேன்..” என்று சொன்னதும்தான், அன்று வந்த அகல்யாவின் குறுஞ்செய்தியே அவனின் ஞாபகத்திற்கு வந்தது.

 

“ஓஹோ..” என்று நீட்டி முழக்கியவன், வேலைக்கு செல்ல தயாராகியவாறு தன்னை மீறி அடிக்கடி வாசலைதான் பார்த்தான்.

 

“எங்கடா கெளம்புற, அண்ணன் வருதுன்னு சொன்னேன்ல, கொஞ்சம் இருந்து பேசிட்டு போ..” என்று சாரதா சொல்ல, நேரத்தைப் பார்த்தவனோ “இல்லம்மா, ஏற்கனவே ரொம்ப லேட் ஆகிருச்சு” என்று பதற்றமாக சொல்லிவிட்டு காலை உணவைக் கூட எடுக்காமல் அங்கிருந்து வெளியேறினான்.

 

யுவன் சென்று ஐந்து நிமிடங்கள்தான் இருந்திருக்கும், “அம்மாடி சாரதா…” என்று கத்திக்கொண்டே உள்ளே வந்தார் முத்துப்பாண்டி.

 

கூடவே, சிறு புன்னகையோடு அகல்யாவும் தன் தந்தை பின்னாலேயே வர, அவ்வளவுதான். அண்ணனைப் பார்த்ததும் சாரதவுக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை.

 

“வாங்க அண்ணே.. வாங்க வாங்க..” என்று அவர் உற்சாகமாக அழைக்க, சுற்றி முற்றி விழிகளை சுழலவிட்டு தேடினாள் அகல்யா.

 

“அத்தானும் மாமாவும் இல்லையா அத்தை?” என்று அவள் கேட்க, “இல்லடா, ரெண்டு பேரும் வேலைக்கு போயிட்டாங்க..  யுவா இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் போனான், ராத்திரிக்குள்ள வந்துருவாங்க” என்றவர் தன் அண்ணனின் இரு கரங்களைதான் மாறி மாறி பார்த்தார்.

 

உடனே தன் கையிலிருந்த பார்சலை நீட்டிய முத்துப்பாண்டி, “நம்ம தோட்டத்துல காய்ச்ச மாங்காய்ங்க.. நல்லா இருக்கும், அண்ணன் உனக்காக கொண்டு வந்திருக்கேன்” என்று காலரை தூக்கி விட்டுக்கொள்ளாத குறையாக சொல்ல,

 

‘க்கும்’ என்று நொடிந்துக்கொண்டவாறு வாங்கிக்கொண்ட சாரதாவுக்கு தன் உடன்பிறப்பை பற்றி தெரியாதா என்ன!

 

‘அதானே பார்த்தேன், இந்த கஞ்ச அண்ணன் அப்படியே வாங்கிட்டு வந்துடுவாராக்கும்!’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டு வந்தவர்களை பார்த்துப் பார்த்து கவனித்தார் அவர்.

 

“நம்ம ஊர்ல எல்லாரும் எம்புட்டு தன்மையா பேசுவாய்ங்க, ஆனா இங்க கண்டுக்கவே மாட்டேங்குறாய்ங்க சாரதாம்மா.. மோசமான ஊரா இருக்கும் போல” முத்துப்பாண்டி பேசிக்கொண்டிருக்க, இத்தனை நேரம் அவர்கள் பேசுவதை கொட்டாவி விட்டவாறு கேட்டுக்கொண்டிருந்த அகல்யாவின் பார்வை அங்கிருந்த யுவனின் அறையை நோக்கித் திரும்பியது.

 

பெரியவர்கள் பேசட்டுமென்று எழுந்து அந்த அறைக்குள்ளே சென்றவள் சுற்றிமுற்றி பார்த்தாள்.

 

கட்டில் பெட்ஷீட் கலைந்து உடைகள் கப்போர்டிலிருந்து இழுத்து போடப்பட்டு அங்குமிங்கும் குப்பை என்று அந்த அறையே அலங்கோலமாக இருக்க, விழி விரித்துவிட்டாள் அகல்யா.

 

அவளுக்கு முன் சாரதா பார்த்திருந்தால் மயங்கியே விழுந்திருப்பார் போலும்!

 

ஆழ்ந்த பெருமூச்சை விட்டு சிரித்துக்கொண்டவளின் விழிகளுக்கு அங்கு மேசை மீதிருந்த அந்த புகைப்படம் கண்ணில் பட்டது.

 

அதைப் பார்த்ததுமே அவளுடைய முகம் சிவந்து இறுக, விழிகளை அழுந்த மூடித் திறந்து தன் உணர்வுகளை கட்டுப்படுத்த முயன்றாள்.

 

அவளுக்கு ஏதோ ஒன்று தொண்டையை அடைப்பது போலிருந்தது.

 

அதற்குமேல் அந்த அறையிலிருக்க முடியாமல் வெளியில் வந்தவள், தன் தந்தையின் அருகில் சென்று அமர்ந்துக்கொள்ள, மகளின் முகத்தை உற்றுப் பார்த்தான் முத்துப்பாண்டி.

 

“அம்மாடி என்னாச்சு?” என்று அவர் கேட்க, “ஒன்னு இல்லப்பா” என்றவள் அமைதியாக இருந்துவிட, முத்துப்பாண்டிக்குதான் தங்கையோடு பேசியதில் நேரம் போனதே தெரியவில்லை.

 

சாயங்காலமே சிவலிங்கம் வந்துவிட, வந்தவருக்கு அகல்யாவைப் பார்த்ததும் அன்று நடந்ததுதான் ஞாபகத்திற்கு வந்தது.

 

தன் மனைவியிடம் அவளை விழிகளால் காட்டி இரு புருவங்களை ஏற்றி இறக்க, அவரோ கணவனை முறைத்துப் பார்த்தவர் கோபமாக முகத்தை திருப்பிக்கொண்டார்.

 

கிட்டத்தட்ட சூரியன் மறைந்து இருள் சூழ ஆரம்பிக்க, நேரத்தைப் பார்த்தவரோ வேகமாக எழுந்து “உங்ககிட்ட பேசிக்கிட்டு இருந்ததுல நேரம் போனதே தெரியல.. ஏலே எழுந்துரு, பஸ்ஸுக்கு நேரமாச்சு கெளம்பலாம்” என்று பதற ஆரம்பிக்க, “அய்யோ அண்ணே இருங்க, இப்போ யுவா வந்துருவான். பார்த்துட்டு போங்க..” என்றார் சாரதா வேகமாக.

 

ஆனால் அந்த கிராமத்தாளுக்கோ இன்னும் ஒரு மணித்தியாலத்திற்கு பிறகு இருக்கும் ஊருக்கான பஸ்ஸை எங்கு தவற விடுவோமோ என்ற பயம்.

 

“இல்லடா சாரதா, இங்கெல்லா நேரத்துக்கு போகலன்னா விட்டுட்டு போயிடுவாங்களாமே! நம்ம ஊர் மாதிரி வருமா, என்ன பண்றது? நீ காதலிச்சு இங்க வாழ்க்கைப்படணும்னு இருந்திருக்கு” என்று போற போக்கில் சிவலிங்கத்தை பார்த்து சொன்னவர், “அது.. அப்போ நாங்க கெளம்புறோம், தங்கச்சிய அடிக்கடி ஊருக்கு கூட்டிட்டு வாங்க மச்சான்” என்று வேகவேகமாக சொல்லிவிட்டு வெளியேறப் போனார்.

 

அகல்யாவுக்கு மனம் என்னவோ போல் இருந்தது.

 

மனம் பரிதவிக்க, யோசனையோடு தந்தையின் பின்னால் சென்றுக்கொண்டிருந்தவள், “மாமா எப்படி இருக்கீங்க?” என்ற யுவனின் குரலில் பட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

“அட யுவா வந்துட்டியா.. உன்ன பார்க்காம போறேன்னு கஷ்டமா இருந்துச்சு, எப்படியோ வந்துட்ட? எப்படி இருக்கப்பா?” என்று அவர் தன் மருமகனை அணைத்து விடுவிக்க, அப்போதுதான் அகல்யாவை பார்த்தவனின் இதழ்கள் புன்னகையில் விரிந்தன.

 

“என்ன அகலு, இவ்வளவு தூரம் வந்துட்டு என்னை பார்க்காம போற.. அப்படி என்ன அவசரம்?” என்று அவன் விளையாட்டாகப் பேச, “அது மாமா… இன்னும் ஒரு மணி நேரத்துல பஸ்ல இருக்கணும், அதான்…” என்று தயக்கமாக இழுத்தாள் அகல்யா.

 

அதைக் கேட்டு வாய்விட்டு சிரித்துவிட்டான் யுவனாதித்.

 

“வன் ஹவர்ல போக போற பஸ்ஸுக்கா இப்போவே கெளம்புறீங்க அய்யோ அய்யோ..” என்று சிரித்தவன், “சரி வாங்க.. இங்க பக்கத்துல நல்ல ஹோட்டல்  இருக்கு, சாப்பிட்டுட்டு கெளம்பலாம். நானே அழைச்சுட்டு போறேன்” என்று சொல்ல, முத்துப்பாண்டியோ சில கணங்கள் யோசித்துவிட்டு தலையசைத்தார்.

 

இருவரை மட்டும் அழைத்துக்கொண்டு வெளியேறியவன், ஹோட்டலை நோக்கி நடந்தே செல்ல, முத்துப்பாண்டிடோ சுற்றிமுற்றி பார்த்தபடி முன்னே நடந்தார்.

 

அகல்யாவுக்ககு அந்த இரவு நேரக்காற்று தேகத்தை உரசிச் செல்ல, அதை ரசித்தபடி பக்கத்தில் அலைப்பேசியில் பேசியபடி வந்தவனைதான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு வந்தாள்.

 

சரியாக மனம் பார்க்கச் சொல்லி உந்தியதில் அவள் புறம் அவன்  திரும்ப, உடனே பார்வையைத் திருப்பிக்கொண்டள் அகல்யா.

 

அதை யுவனும் சரியாக கண்டுகொள்ள, அவனுடைய முகம் யோசனைக்குத் தாவியது.

 

-Sheha zaki

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!