சீதா கதிர் கையை விட்டாலும். கதிர் சீதா கையை விட மாட்டான்.
ரவி திருமணம் நடந்த அன்று கதிரிடம் சீதா தான் உன் அம்மா…
சீதாவை இனி அம்மா என்று தான் நீ கூப்பிட வேண்டும்,,அம்மாவை அவ வயிற்றில் உள்ள குழந்தையையும் நீ பார்த்துக்கொள்ள வேண்டும், எங்கு சென்றாலும் அம்மா கைகளை பிடித்துக் கொண்டு பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கதிரிடம் ரவி சொல்லி சென்றிருக்க..
ரவி சொன்னதை அப்படியே செய்து கொண்டிருந்தான் கதிர்.
சீதாவுக்கு கதிர் திருமண அன்று சாயங்காலம் ‘அம்மா, சீதா அம்மா’ என்று அழைத்து பேசியதும் சந்தோஷத்தை தர.
“உனக்கு யாருடா என்னை அம்மா சொல்ல சொன்னது” என்று கேட்க.
“நானா தான் சொன்னாங்க, சீதா உனக்கு அம்மா, அம்மாவையும் பாப்பாவையும், பத்திரமா பார்த்துக்கோ” என்று கதிர் கூற.
மகனை அணைத்துக்கொண்டாள் சீதா.
அன்றிருந்து அவன் சீதாவோடு தான், சீதா அறையிலே தூங்குவது, அவளுடனே உண்பது, உறங்குவது என்று பொழுதை கழித்தான்.
நாளை கும்பாபிஷேகம் என்று இருக்க.
பத்மாவும், வெங்கட்டும் கோவில் ஓமம் நடந்து கொண்டிருக்கும் பூஜையில் அமர்ந்திருக்க, சீதாவால் நீண்ட நேரம் புகையில் அமர்ந்திருக்க முடியவில்லை,..
பத்மா சீதாவை பார்த்து, “கொஞ்சம் நேரம் வெளியில் போயிட்டு வா”, என்று கதிரோடு சீதாவை அனுப்பி வைக்க..
சீதாவும், கதிரும் கோவிலை சுற்றி வந்தனர்.
கதிரை தெரிந்தவர் அவனிடம் வந்து “இது யாருடா”?, என்று கேட்க.
“என் அம்மா சீதா” என்றான்.
அனைவரும் அவன் சொல்லுவதை கேட்டு தலையாட்டி செல்ல.
சீதா கதிரை தூக்கி கொஞ்சினாள்.
எவ்வளவு உரிமையாக அனைவரிடம் என்னை அம்மா என்கிறான் என்று..
அவனுக்கு முத்தமிட்டவள்..
“உனக்கு என்னட வேணும் கண்ணா” என்று சீதா கேட்க.
“வெளியில் போலாம் சீதாம்மா, நிறைய கடை இருக்கு” என்று சொல்ல.
இருவரும் கோவில் வாசலில் போட பட்டிருந்த கடைகளை சுத்தி பார்த்து, கதிர் கேட்டதை வாங்கி கொடுத்தாள் சீதா..
பின்பு இருவரும் அவர்களுக்கு பிடித்த உணவை வாங்கி உண்டு விட்டு சுத்திக்கொண்டிருக்க.
“ஐ நானா” என்று கதிர் சீதாவை இழுத்துக்கொண்டு ரவி தேஸ்சாவிடம் சென்றான்
சீதாவுக்கு ரவி இங்கேயா இருக்கிறான்,, எப்போ வந்தான் என்று பார்க்க.
ஆமாம் அவன் கோவில் பிரசாதம் வழங்கம் இடத்தில் இருந்தான், பிரசாதம் செய்து கொண்டு வந்திருந்தா அண்டக்களை பத்திரமாக இறக்கி வைக்க, சொல்லிக்கொண்டிருந்தான்..
வெஷ்டியை மடித்து கட்டி கொண்டு அனைவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தான்…
சீதா அவனை பார்த்தபடியே செல்ல.
“நானா” என்று சத்தம் கேட்ட ரவி திரும்பி பார்க்க…
கதிரும், அவன் மனைவி சீதாவும் தன்னை நோக்கி வருவதை பார்த்தவன்..
இதழ்கள் விரித்து சிரித்தவன்.. “கதிர்” என்று மகனை அணைத்துக்கொள்ள.
“நானா எப்போ வந்தீங்க நானா, ஏன் என்னை பார்க்க வரல”?..
“நானா காலையிலே வந்துட்டேன் கதிர்.. கோவில்ல வேலையிருந்ததா, அதான் இங்கேயே இருந்துட்டேன், நீ என்ன கோவிலுக்குள்ள இல்லாமா, உன் சீதா அம்மா கூட சுத்திட்டு இருக்க”?. என்றான்.
“சீதா அம்மாவுக்கு ஓம புகையில உட்கார முடியல, அதான் பத்மா அவ்வா என்னை சீதா அம்மாவை வெளியில கூட்டிட்டு போன்னு சொன்னாங்க, நான் தான் அம்மாவை கூட்டிட்டு வந்தேன்” என்ற மகனை “சமத்து” என்று முத்தம் வைத்தவன்.
சீதாவை பார்க்க.
பட்டு புடவையில் நகைகள் பல அணிந்து, கர்பமாக இருக்கும் போது சோர்ந்த முகத்தில் கூட ஜொலித்த சீதாவை ரசிக்காமல் இருக்க முடியவில்லை ரவியால்.
ஊர் பெரியவர் வந்து ரவியை பார்த்து, அன்னதான பிரசாதம் குடுக்க ஆரம்பித்து விடலாமா என்று கேட்க.
“ஆன் குடுங்க” என்றான்.
“முதல், முதலில் கொடுக்கும் போது நீங்க உங்க குடும்பத்தோடு கொடுங்க”.. என்றவர்.
சீதாவை பார்த்து “நீங்களும் வாங்கம்மா, சேர்ந்து கொடுங்க” என்று கூற.
சீதாவால் மறுக்க முடியவில்லை..
ரவி அவளை பார்த்து, “உன்னால முடிஞ்சா வா, இல்லன்னா அம்மாகிட்ட போ” என்றான்.
“இல்ல நான் வர்ரேன்” என்றாள்..
பெரிய அண்டக்களில் பொங்கல், புளியோதரை, வடை என்று வரிசையாக வைத்திருக்க.
ரவி ஒரு தட்டில் பொங்கலையும், புளியோதரையும் வைத்து சீதாவிடம் கொடுக்க அதில் கதிர் வடையை வைத்தான்.
சீதா அதை வரிசையில் நின்றிருந்தவர்களிடம் கொடுத்தாள்.
சீதா கொடுத்ததை வாங்கி கொண்டவர் அவளை பார்த்து சிரித்து “வெங்கட் அய்யா மருமகளா” என்று கேட்க ஆமாம் என்று தலையாட்டினாள்.
அவளின் கன்னம் தொட்ட ஒரு முதியவர் நல்லா இருக்கனும் நீங்க, என்று வாழ்த்தி செல்ல.
மனம் நிறைந்திருந்தது சீதாவிற்க்கு.
பலர் அவளை அடையாளம் கண்டு, ரவியின் மனைவியா என்று கேட்க அதற்கு தலையாட்டியிருந்தாள்..
சிலர் சீதா கர்பமாக இருப்பதை பார்த்து, எந்தனை மாதம் என்று கேட்க.
பதில் சொன்ன சீதாவை பார்த்து, நீ குழந்தை குட்டியோடு நல்லா இருக்கனும் என்று வாழ்த்தி சொல்ல.
சீதாவுக்கு மனத்தில் உள்ள பாரம் அனைத்தும் இறங்கியது போல இருந்தது,, ரவி சீதாவின் முகத்தையே பார்த்தபடியே இருந்தான்.
அவளிடம் பேசுபவர்களிடம் புன்னகை முகமாக பேசிக்கொண்டிருக்கும் மனைவியை பார்த்து ரசித்தவன்.
சிறிது நேரத்தில் போதும் சீதா, உனக்கு கஷ்டமா இருக்கும், இரண்டு பேரும் வீட்டுக்கு போங்க, என்று ரவி கூற.
“எனக்கு ஒன்னும் கஷ்டமா இல்லை சந்தோஷமா தான் இருக்கு உங்களுக்கு ஏதாவது கஷ்டமா இருந்தா நீங்க போங்க நான் கொடுக்கிறேன்” என்றவளை பார்த்து சிரித்தான்.
கோவிலில் பூஜை முடிந்து, வெங்கட்டும், பத்மாவும் வெளியே வர.
வெங்கடை பார்த்த அனைவரும், “உங்க மருமக அழகா இருக்கா, நல்லா பேசுறா, உங்க குடும்பம் நல்லா இருக்கனும்” என்று வாழ்த்த.
வெங்கட்டுக்கு ஒன்றும் புரியவில்லை இதை போலவே பலர் வந்து சொல்ல.
என் மருமக எங்கே என்று கேட்க.
அவர்கள் காட்டிய இடத்தை பத்மாவும், வெங்கட்டும் பார்க்க.
ரவிபிரசாதத்தை இலையில் வைத்து கொடுக்க கதிர் அதில் வடையை வைக்க, சீதா அதை அனைவருக்கும் சிரித்த முகமாக கொடுத்துக்கொண்டிருப்பதை பார்த்த பெற்றோருக்கு மனநிறைந்திருந்தது.
ரவி சீதாவிடம் பேசிக்கொண்டே இலையில் உணவை வைக்க, அவன் மேலே தெரிந்த உணவை துடைத்து விட்ட மருமகளை பார்த்த படியே, இவர்கள் பிரசாதம் வாங்கும் வரிசை நிற்க.
இவர்களை பார்த்த ஊர் மக்கள் முன்னாடி போங்க என்று கூற.
அனைவரையும் போல வரிசையில் வந்து பிரசாதத்தை வாங்கிய பத்மா, இன்னொன்னு குடு மா என் மருமகளுக்கு என்று கேட்க.
சீதா அப்போது தான் பத்மாவை பார்த்தவள் அத்தை என்று சிரித்தவள் இன்னொன்றை அவரிடம் தர.
அதை வாங்கிக்கொண்டு வந்தவர் மருமகளை அணைத்து, முத்தமிட்டவர்.. என் மருமக பிரசாதம் கொடுப்பதே ஒரு அழகுதான் வீட்டுக்கு போய் சுத்தி போடனும் உனக்கு” என்று மருமகளை கொஞ்சியவர் சீதாவுக்கு பிரசாதத்தை ஊட்ட..
வேறு சிலர் வந்து ஊர் மக்களுக்கு பிரசாதம் வழங்க.
“அவ்வா எனக்கு” என்று கேட்க பேரனுக்கு ஊட்டி விட்டார் பத்மா.
ரவி ஏக்கமாக தாயை பார்க்க.
அவனுக்கு ஒரு வாய் ஊட்டி விட.
பத்மாவின் தோளில் முகத்தை மறைத்து கொண்டான் ரவி..
இவர்கள் குடும்பமாக இங்கே சந்தோசமாக இருக்க.
அங்கே இந்த கும்பாபிஷேகம் நாளை நடக்க கூடாது என்று வெங்கட்டின் மூத்த மகன் ரவிகிருஷ்ணன் திட்டம் போட்டுக்கொண்டிருந்தான்..