அகல்கவி 14

அகல்கவி சிலையமுதே 14
Advertisement
அன்றிரவு முகத்தில் காயங்களோடு வீட்டுக்குள் நுழைந்தவனைப் பார்த்த அகல்யாவோ ஸ்தம்பித்துப்போய் விட்டாள்.
Advertisement
Advertisement
“மாமா என்னாச்சு? ஏன் இப்படி அய்யோ…” என்று அவள் பதற்றமாகக் கேட்க, “விழுந்துட்டேன்..” என்று மட்டும் சொன்னவாறு ஹாலிலிருந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்து விழிகளை மூடி தலையை பின்னே சாய்த்துக்கொண்டான் யுவன்.
அவனை விழிகளை சுருக்கி நம்பாத பார்வைப் பார்த்தவள், “இது ஒன்னும் விழுந்த மாதிரி தெரியலயே.. சண்டை போட்டு வந்த மாதிரி இருக்கு” என்று சொல்ல, ஒற்றைப் புருவத்தை தூக்கி அவளை முறைத்துப் பார்த்தவன், “ஓஹோ.. மேடமுக்கு அதெல்லா தெரியுமோ!” என்று கேட்டான் கேலியும் கோபமும் கலந்த தொனியில்.
Advertisement
அகல்யாவோ அமைதியாக நின்றுக்கொண்டாள். அதற்குமேல் எதுவும் பேசவில்லை.
சிறிதுநேரம் கழித்து மெல்ல எழுந்துச் சென்று குளித்து முடித்து உடை மாற்றி வந்தவன், அகல்யா சமைத்து வைத்திருந்த உணவை உண்டுவிட்டு அப்படியே சுவற்றோடு சாய்ந்து அமர்ந்துக்கொண்டான்.
அவனருகே வந்தவள் தயங்கியபடி, “மாமா, பக்கத்து வீட்டுக்கு போய் இந்த மருந்த வாங்கிட்டு வந்தேன். காயத்துக்கு ரொம்ப நல்லதாம், சீக்கிரம் குணமாகிருமாம்” என்று சொல்ல, “அதெல்லா தேவையில்ல..” என்று விழிகளை மூடியபடியே சொன்னவனுக்கு களைப்பும் உடல் வலியும் பாடாய்படுத்தியது.
சில கணங்கள் மறுமுனையில் மௌனம். திடீரென அவனுடைய முகத்தில் உணர்ந்த தொடுகையில் பட்டென்று விழிகளைத் திறந்துப் பார்த்தான் யுவன்.
அவன் சொன்னதை மறுத்து அவன் காயத்திற்கு அகல்யா மருந்தை போட்டுவிட, இப்போது மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளையே இமை வெட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
அவன் தன்னை பார்ப்பதை உணர்ந்தாலும் அவன் விழிகளைப் பார்க்காமல் அவன் காயத்திற்கான மருந்திடுவதை மாத்திரம் அவள் செய்ய, மறுகணம் யுவன் கேட்ட கேள்வியில் அவனை திகைத்துப்போய் பார்த்தாள் அவள்.
“உனக்கு ஏன் யுகன பிடிச்சிருக்கு அகலு?” என்று அவன் கேட்டதும், அவனை திகைத்துப் போய் பார்த்தவள், “இப்போ எதுக்காக இது…” என்று சிறு சங்கடத்தோடு வார்த்தையை நீட்டி முழக்கினாள் அகல்யா.
“சும்மாதான், தெரிஞ்சுக்கணும்னு நினைச்சேன்” அவன் சொன்னதும், அவளோ யுகனின் நினைவில் மெல்லியதாக புன்னகைத்தாள்.
“அது.. தெரியல மாமா, யுகா மாமாவ பார்க்கும் போது ஏதோ ஒன்னு வித்தியாசமா தோனும். அப்போ அவர் என் பக்கத்துல வந்தாலே ஏதோ புதுசா உள்ளுக்குள்ள ஏதோ பண்ணும். அது என்னன்னுலாம் சொல்ல தெரியல. என்னை கூட அகலு பொம்மைன்னுதான் கூப்டுவாரு.. அதுமட்டுமில்லாம அவரோட குணம் ரொம்பவே வித்தியாசம். என்னை மாதிரியே ரொம்ப அமைதியா.. நிதானமா யோசிச்சு பேசுறது.. அவரோட சிரிப்பு…”
பேசிக்கொண்டே எதேர்ச்சையாக அவன் முகத்தைப் பார்த்தவள் உடனே பேச்சை நிறுத்திக்கொள்ள, யுவனோ உதட்டை சுழித்தவாறு குறுகுறுவென்று அவளையேதான் பார்த்திருந்தான்.
“யுகன பத்தி இவ்வளவு தெரிஞ்சு வச்சிருக்க.. சரி விடு, என்னை பத்தி உனக்கென்ன தெரியும்?” அவன் கேட்ட கேள்வியில் விழித்தவள், “அது.. அது வந்து.. நீங்க ரொம்ப ஜாலியா பேசுவீங்க, எல்லார் கூடவும் சகஜமா இருப்பீங்க..” என்றுவிட்டு யோசிக்க, ஏனென்று தெரியாத ஒரு பொறாமையும் சிறு கோபமும் அவனுக்குள் துளிர்விட்டது.
“நீ ஒன்னும் சொல்ல தேவையில்ல” என வெடுக்கென்று சொன்னவன், எழுந்து அறைக்குள் சென்றுவிட, போகும் அவனை புரியாமல் பார்த்தாள் அகல்யா.
இப்படியே இரண்டுநாட்கள் கழிந்த நிலையில் அன்று,
சாரதா சோஃபாவில் தரையை வெறித்தபடி அமர்ந்திருக்க, வேலைவிட்டு அப்போதுதான் வீட்டுக்கு வந்த சிவலிங்கமோ மனைவியை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அவர் பாட்டிற்கு அறைக்குள் நுழைந்துக்கொண்டார்.
குளித்து உடை மாற்றிவிட்டு வந்தவர் சமையலறைக்குச் சென்று தானே தட்டில் உணவை வைத்து உண்ண ஆரம்பிக்க, தன் கணவரை முறைத்துப் பார்த்த சாரதாவுக்கு அதற்குமேல் பொறுக்க முடியவில்லை.
“நல்லா இருக்குங்க.. ரொம்ப நல்லா இருக்கு.. நான் எக்கேடு கெட்டு போனா உங்களுக்கென்னன்னு தானே இருக்கீங்க. என்னை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டேங்குறீங்கல்ல” என்று அவர் மூக்கை உறிஞ்ச, நெற்றியை நீவி விட்டுக்கொண்டவர் “சரி சொல்லு..” என்று கேட்டார் அலட்சியமாக.
சிவலிங்கத்தின் நடவடிக்கை சாரதாவுக்கு எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுவது போலத்தான் இருந்தது.
“என்னை வெறுப்பேத்தி பார்க்குறீங்களா? அவதான் முக்கியம்னு வீட்டை விட்டு அவன் பாட்டுக்கு போயிட்டான். சாப்பிட்டானா தூங்கினான்னு ஒன்னுமே தெரியல. ஒருத்தன பறிகொடுத்தேன் இன்னொருத்தன் வீட்டை விட்டே போயிட்டான். எனக்கு மட்டும் கடவுள் ஏன் இப்படியொரு கஷ்டத்த கொடுக்குறாரோ, நான் என்ன பாவம் பண்ணேன்?”
என்று சாரதா அழுதபடி ஆதங்கத்தோடு கேட்க, ‘கொஞ்சமா நஞ்சமா.. வாய்விட்டு சொல்லவா முடியும். ச்சே! இன்னைக்ககு வந்ததுமே ஆரம்பிச்சிட்டாளே!’ என உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார் பெரியவர்.
“நீதானே அவன போக சொன்ன, இப்பொ யோசிச்சு என்ன பயன்?” என்று சிவலிங்கம் அலட்சியமான ஒரு பதிலை சொல்ல, “அந்த அகல்யா அவனுக்கு எந்த வகையிலங்க பொருத்தம். அழகில்ல, நிறமில்ல.. என் புள்ள அளவுக்கு படிச்சது கூட இல்ல” என்று புலம்பிக்கொண்டே சென்ற மனைவியை குறுக்கிட்டார் சிவலிங்கம்.
“உன் புள்ள என்ன பெரிய கலெக்டருக்கு படிச்சிருக்கானா என்ன.. அந்த பொண்ணு தங்கமான பொண்ணு, உன் பையனுக்கு அவள விட பொருத்தமா எவளும் இருக்க மாட்டா. அதுமட்டுமில்லாம அவன் காதலிச்ச பொண்ண விட அவன காதலிச்ச பொண்ணுதான் அவன நல்லா பார்த்துப்பா. என் மருமக பல வருஷமா அவன மட்டுமே உசுரா நினைச்சுட்டு இருந்திருக்கா. இதை விட வேற என்ன வேணும்? உன்ன காதலிச்சதுக்கு பதிலா என்னை காதலிச்ச கமலத்த நான் கட்டிக்கிட்டிருந்தா வாழ்க்கை எப்படி இருந்திருக்குமோ?”
பேசி மூடித்து இறுதியில் ஒரு பெருமூச்சை இழுத்துவிட்டவரைப் பார்த்த சாரதாவுக்கு பிபி எக்குத்தப்பாக எகிறியது.
அவர் அடிக்க வருவதற்குள் சிவலிங்கம் ஓடிவிட, அடுத்தநாள் காலை வேகவேகமாக சமைத்துக்கொண்டிருந்தாள் அகல்யா.
யுவனோ நேரத்தைப் பார்த்தபடி தயாராகியவன், அவளைத் தேடி சமையலறையை எட்டிப் பார்தத்தான்.
அங்கு நெற்றி வியர்வையை புறங்கையால் துடைத்தபடி சமைத்துக்கொண்டிருந்தவள், தன் முதுகில் உணர்ந்த ஊசித்துளைக்கும் பார்வையில் திரும்பிப் பார்க்க, அங்கு நிலையில் சாய்ந்தவாறு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் யுவனாதித்.
அவனைப் பார்த்ததுமே திடுக்கிட்டவள், “நீ.. நீங்களா மாமா, அஞ்சு நிமிஷம்தான் மதியத்துக்கும் சேர்த்து கட்டி கொடுக்குறேன், எடுத்துட்டு போங்க” என்று சொல்லிக்கொண்டே, “ச்சே! நேரத்துக்கு இதுவேற சரியா வர மாட்டேங்குதே, ஊர்லயிருக்கும் போது நல்லா வரும், இப்போன்னு பார்த்து சொதப்புது! இந்த அடுப்புதான் பிரச்சனைன்னு நினைக்கிறேன்..” என்று வாய்வவிட்டே புலம்பிக்கொண்டிருந்தாள்.
அவளருகே நெருங்கியவன் அடுப்பிலிருந்த சட்டியை எட்டிப் பார்த்து, “நீ ஒழுங்கா பண்ணாம அடுப்ப குறை சொல்றியா..” என்று கேலியாகக் கேட்க, காதருகே கேட்ட அவனின் குரலில் பட்டென்று திரும்பியவள் தன்னை நெருங்கி நின்றிருந்தவனின் மீதே மோதி நிற்க, எச்சிலை விழுங்கிக்கொண்டான் யுவன்.
அவளோ மூச்சு வாங்கியவாறு அவனை பதற்றமாகப் பார்க்க, “அது.. அது வந்து.. என்ன சமைக்கிறேன்னு பார்க்க..” என்றவனுக்கும் வார்த்தைகள் தடுமாறின.
“ஓ…” என்று மட்டும் இழுத்த அகல்யாவின் விழிகள் அவனின் நெருக்கத்தில் தடுமாற, வேலை செய்ததால் அவள் முகத்தில் பூத்திருந்த வியர்வைத் துளிகளுள் அவளின் தடுமாற்றமும் அவனின் உணர்வுகளை தூண்டிவிட்டன.
அவனுடைய சிந்தனையோ தறிகெட்டு ஓட, அவன் கால்கள் தானாக அவளை நோக்கி முன்னே சென்றன.
அவனிதழ்களோ அவளை நோக்கி குனிய, “அகலு…” என வீட்டு வாசலில் கேட்ட குரலில் உடனே அவளை விட்டு விலகி நின்றுக்கொண்டவனுக்கு
இப்போது பதற்றத்தில் மூச்சு வாங்கியது.
“அப்பா.. அப்பா வந்திருக்காரு மாமா” என்றுக்கொண்டே வேகமாக வாசலுக்கு ஓடியவள் வாசலில் நின்றிருந்த தன் தந்தையையும் தாயையும் பார்த்துவிட்டு ஓடிச்சென்று அவர்களை அணைத்துக்கொள்ள, பொன்னியோ மகளை அணைத்து ஓவென்று அழ ஆரம்பித்தார் என்றால், முத்துப்பாண்டியோ மகளின் தலையை வாஞ்சையோடு வருடிவிட்டார்.
“என்னம்மா எப்படியிருக்க? என் மருமகன் உன்ன நல்லா பார்த்துக்குறாரா?” என்று அவர் கேட்க, “ம்ம்..” என்றவள் தன்னையே குறுகுறுவென்று பார்த்தவாறு நின்றிருந்த தன் கணவனைதான் ஒரு பார்வைப் பார்த்தாள்.
அவளின் பார்வை செல்லும் திசையை கவனித்த முத்துப்பாண்டியோ யுவனின் அருகே சென்று முதுகில் ஒரு அடியை வைத்து, “என்ன மருமகனே, கண்ணாலயே பேசிப்பீங்க போலயே, அதுக்குள்ள நல்லா ஒருத்தர ஒருத்தர புரிஞ்சிக்கிட்டீங்களோ?” என்று கிண்டலாகக் கேட்க, சுள்ளென்று வலியெடுத்த முதுகை தடவி விட்டுக்கொள்ளக் கூட முடியாமல் “ஹிஹிஹி…” என்று இழித்து வைத்தான் அவன்.
அப்போதுதான் வேலைக்கு செல்ல வேண்டுமென்பதே அவனின் ஞாபகத்திற்கு வர, தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொடுத்தவன், “மாமா, லேட் ஆகிருச்சு.. ஈவினிங் சீக்கிரமா வீட்டுக்கு வந்துருவேன். ஆறுமணி பஸ்ஸுக்கு நாலு மணிக்கே போயிராதீங்க” என்றுவிட்டு வெளியேறப் போக, குறுக்கிட்டார் முத்துப்பாண்டி.
“என்ன யுவா கண்ணா இது, நாங்க வந்திருக்கோம் அப்போவும் வேலைக்கு போற. இதுவே எங்க ஊரா இருந்திருந்தா சொந்த வேலையில ஜம்முன்னு இருந்திருக்கலாம். என்ன பண்றது..” அவர் ஒரு பெருமூச்சை இழுத்துவிட, ‘க்கும்! இது திருந்தாத கேசு’ என உள்ளுக்குள் நினைத்தபடி அங்கிருந்து வெளியேறினான் யுவன்.
“ஒரு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல” என்று அகல்யா கேட்க, “என் பொண்ணு வீட்டுக்கு நான் சொல்லிட்டா வரணும், ஆமா.. உன் அத்தை அதுக்கப்பறம் ஏதாச்சும் பேசினாளா, இல்லன்னா இன்னும் அதே கோபத்துலதான் இருக்காளா?” என்று கேட்டார் பொன்னி.
நடந்ததை நினைத்துப் பார்த்தவளின் முகம் வாடிப்போக, “ரொம்ப கோபத்துல இருக்காங்கம்மா” என்ற மகளை யோசனையோடு பார்த்தார் முத்துப்பாண்டி.
ஒரு முடிவெடுத்தவராக அவர் அமைதியாக இருக்க, மாலை வரை தன் அம்மாவோடு ஊர்க்கதைகளை பேசி நேரத்தைக் கடத்தினாள் அகல்யா.
கிட்டத்தட்ட இருள் சூழ ஆரம்பிக்கும் போதே யுவனாதித் வீட்டுக்கு வர, இரவுணவுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி வந்தவன் முத்துப்பாண்டியின் பதற்றத்தை பொருட்படுத்தாமல் அவரை உண்ண வைத்தே பஸ்ஸுக்காக அழைத்துச் சென்றான்.
முத்துப்பாண்டியும் பொன்னியும் ஆட்டோவில் ஏறிக்கொள்ள, “நான் முன்னாடி போறேன், என் பின்னாடியே வாங்க..” என்று யுவன் ஆட்டோ ஓட்டுனரிடம் சொல்லி முடிக்கவிவில்லை, குறுக்கிட்டு பேசினார் பெரியவர்.
“யுவா, சாரதா வீட்டுக்கு போப்பா..” என்று அவர் சொன்னதும் அதிர்ந்துப் பார்த்தவனோ, “இல்ல மாமா இப்போ வேணாம்.. அம்மாவோட கோபம் குறையட்டும். அப்பற….” என்று சொல்ல வர, அவரோ கேட்பதாக இல்லை.
இவர் பேசச் சென்று எங்கு அம்மா ஏதாவது வார்த்தையை விட்டுவிடுவாரோ என்ற பயம் அவனுக்குள்.
“நான் சாரதாகிட்ட பேசணும்னு சொன்னேன்” மீசையை முறுக்கிவிட்டவாறு அவர் சொன்னணும், வேறு வழியில்லாமல் அவரை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் சென்றான் யுவன்.
அப்போதுதான் இரவுணவை முடித்துவிட்டு எச்சில் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தவர், “சாரதா..” என்ற தன் கணவரின் குரலில், “ம்ம்..” என்றார் நிமிர்ந்தும் பார்க்காமல்.
“அது.. அது வந்து.. உன்னை பார்க்க உனக்கு ரொம்ப வேண்டப்பட்டவங்க வந்திருக்காங்க” என்று அவர் சொன்னதும், பட்டென்று நிமிர்ந்தவர் வாசலில் நின்றிருந்த மூவரையும் பார்த்துவிட்டு அதிர்ந்து பின் கோபமாகப் பார்க்க, முத்துப்பாண்டியோ நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு முன்னே வந்தார்.
“அட வாங்கண்ணே, எப்படி இருக்கீங்க, பார்க்க நல்லா இருக்குற மாதிரிதான் தெரியுது. கூட பொறந்தவ கிட்டயே மறைச்சு அவ பையன உங்க பொண்ணுக்கு கட்டி கொடுத்த மகராசர் நீங்கதானே!” என்று சாரதா கோபமும் கேலியும் கலந்த குரலில் சொல்ல, அவருடைய வார்த்தைகளில் அடங்கியிருந்த கோபத்தை உணர்ந்த முத்துப்பாண்டியோ, “சாரதா, இதை உன்கிட்ட சொல்லி புரிய வச்சு பண்ற அளவுக்கு அப்போ நிலைமை இருக்கல, என் பொண்ணுக்கு உன் பையன கட்டிக்க முழு உரிமை இருக்குல்ல, அப்பறம் எதுக்குலே கோபத்த இழுத்து பிடிச்சு வச்சிருக்க?” என்று கேட்டார் நிதானமாக.
சிவலிங்கமும் யுவனும் பொன்னியும் எதுவும் பேசாது அமைதியாக இருக்க, அண்ணனின் வார்த்தைகளில் சாரதாவுக்கு கோபம் உச்சத்தை தொட்டது.
“ஆமாண்ணே உரிமை இருக்குதான். அதுக்காக பொருத்தமே இல்லாதவள கட்டிக்கொடுக்குறதா? என் பையனுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாதவ உங்க பொண்ணு. என்னால எப்படி ஏத்துக்க முடியும்?” அவர் கொஞ்சமும் யோசிக்காமல் வார்த்தையை விட, முத்துப்பாண்டியோ தன் தங்கையிடமிருந்து இத்தகைய வார்த்தைகளை எதிர்பார்க்கவே இல்லை.
தன் மகளை பேசிய ஆத்தி ரத்தில் அவர் ஏதோ சொல்ல வர, அவர் பேசுவதற்குள் அவரைக் குறுக்கிடுவது போல ஒலித்தது யுவனின் குரல்.
-Sheha zaki
