“செல்வி மொபைல்ல இருந்தது, உங்க அண்ணன் பொண்ணு ப்ரித்திகாவோட பர்த் டே ஃபங்சன்ல எடுத்ததாம், உன்னோட மொபைல்ல இருக்கும்னு அம்மாதான் செல்விக்கு நியாபகப்படுத்தினாங்க” என்றான்.
Advertisement
செந்தமிழ்செல்வியின் மொபைலில் தனது போட்டோ இருக்கிறது என்பதே பொற்செல்வனின் மனதை குளிரச் செய்ய, “ஓஹ்… சூப்பர்” என்றவன், “உங்களுக்கு கஸ்டம்ஸ்ல ஜாப் கிடைச்சிருக்குனு ஆன்ட்டி சொன்னாங்க, கங்ராட்ஸ். எப்படி போகுது ஜாப்?” என்று இளவரசனோடு பேச்சை வளர்த்தியபடி பயணிக்கலானான்.
விமான நிலையத்திலிருந்து இரண்டு மணிநேர பயணத்திற்கு பிறகு கடைக்கு வந்திருந்தனர். “ஆன்ட்டி எப்போ வருவாங்க?” என்றான்.
“அவங்க வந்து ஒரு மணிநேரம் ஆகிடுச்சு, இங்க தனியா வெய்ட் பண்ண வேண்டாம்னு, அம்மாவை பக்கத்துல இருக்க கஃபேல இருக்க சொன்னேன்” என்றவன், அன்னைக்கு அழைப்பு விடுத்து வர சொன்னான்.
Advertisement
செல்வியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டி, “ஆன்ட்டிக்கு இங்க செட் ஆகிடுச்சா?” என்றான்.
“ராஜஸ்தான் செட் ஆகிடுச்சுனு சொல்ல முடியாது, என்கூட இருக்கிறதால சந்தோசமா இருக்காங்க”
“தேங்க்ஸ்… ஆன்ட்டி இருக்க நம்பிக்கையிலதான் இங்க கடை ஓபன் பண்றேன்” என்றவன், சாம்பவி மற்றும் செந்தமிழ்செல்வி வருவதை கண்டு, “வாங்க ஆன்ட்டி, எப்படி இருக்கிங்க?” என்றான் மலர்ந்த முகத்தோடு.
“நல்லா இருக்கேன் தம்பி” என்று செல்வாவின் நலம் விசாரித்து, நவீனாவை நலம் விசாரித்தார் சாம்பவி. செல்வி நவீனாவையே பார்த்திருக்க, பார்க்கக் கூட மாட்டியாடீ? என நினைத்தபடி “கடை ஓபனிங் முடிச்சிட்டு பேசிக்கலாம் ஆன்ட்டி” என்றான்.
நவீனாவின் இஷ்டதெய்வம் துர்கை ஆதலால் ‘துர்காஸ் பொட்டிக்’ என்று பெயர் சூட்டியிருந்தான் பொற்செல்வன். கடையின் பெயர் நவீனாவிற்கு மிகவும் பிடித்திட, “கடை பேரு நல்லாயிருக்கு” என்றாள்.
மகிழ்ந்தவன், “ஓபன் பண்ணுங்க” என்று கத்தரியை நீட்ட, “நீங்களே பண்ணுங்க” என்றாள்.
“இது உங்க கடை, நீங்கதான் பண்ணனும்” என்று பொற்செல்வன் கட்டளையாக சொல்ல, ரிப்பன் வெட்டி, உள்ளே சென்று விளக்கேற்றினாள் நவீனா.
பூஜை முடிந்த பின்னே, “ராகுல், ஒர்கர்ஸ் நாளைக்கு வந்துடுவாங்கதானே?” என்றான்.
“இன்னைக்கே வந்துடுவாங்க சார், லெவன்க்கு மேல வர சொல்லியிருக்கேன், க்ளீனிங்க்கு ஒருத்தர், கஸ்டமர் அட்டண் பண்ண இரண்டு பேர்னு மூணு லேடீஸ் அப்பாயிண்ட் பண்ணியிருக்கேன், செக்யுரிட்டிக்கு நீங்க பாரத்துக்கிறேனு சொன்னிங்க” என்று நியாபகம் செய்தான்.
பிறகு இனிப்பு உண்டதும், கடையை பார்வையிட்டான் இளவரசன். ஒரே தளம்தான், ஆனால் உள்ளிருக்கும் பொருள்கள் ஏழெட்டு கோடிகளை தாண்டும். “எல்லாம் பெஸ்ட் பிராண்டட், கலெக்ஷன் சூப்பரா இருக்கு” என பாராட்டினான்.
“நல்லா இருக்கா? இந்த பிஸ்னஸ் எனக்கு புதுசு, சூரத்ல பர்ச்சேஸ் பண்ணினோம், இப்போதைக்கு கொஞ்சமா வாங்கினேன், நல்லா போனுச்சுனா இன்னும் வாங்கிக்கலாம்” என்றான்.
இவன் ஒருத்தன், நேரம் காலம் தெரியாம லேடீஸ் ஃபர்ஸ்ட்டுனுட்டு இருக்கான் என கடுப்பாக நினைத்தபடி திரும்ப, இவளையே பார்த்திருந்த பொற்செல்வன் தலைசாய்த்து சிரித்தான் இதழ்பிரியாமல்.
அவனின் சிரிப்பில் கொதிப்பாகி “எனக்கு வேண்டாம்” என இவள் கடுப்பாக சொல்ல, “ம்ப்ச் செல்வி, என்ன ஆட்டிட்யூட் இது? அம்மா அவரைப் பத்தி எவ்வளோ சொல்லியிருக்காங்க, அவருக்காகவாவது பர்ச்சேஸ் பண்ண வேண்டாமா? உன் ஃப்ரண்ட் நவீனாவும் உன்னைத்தான் பார்த்துடிருக்காங்க, எதாவது செலக்ட் பண்ணு” என்றான் முணுமுணுப்பாக.
இன்னும் பணியாள்கள் வராததால் “நான் காட்டுறேன்” என்று ரேக்கில் உள்ள உடைகளை எடுத்து டேபிள் மீது வைத்தான் பொற்செல்வன்.
“நீயே செலக்ட் பண்ணு” என்று இவள் சொல்ல, தங்கைக்கு பிடிக்கும் விதத்தில் உடைகளை தேர்வு செய்தான்.
“போதும், போதும், நீயே கடையை காலி பண்ணிடுவ போல” என அதட்டினாள் அண்ணனை.
பிறகு தனக்கும் சில உடைகள் எடுத்த இளவரசன், அன்னைக்கு சேலை எடுத்து, “பே பண்ணனும்” என்றான்.
“வாங்க அண்ணி” என்று நவீனாவை அழைத்துச் சென்று இருக்கையில் அமர வைத்தான். பின்னே நவீனா கணக்கு போட்டு பில் தொகையை நீட்ட, பெற்றுக்கொண்டு பணத்தை கொடுத்தவன், “ம்மா நீங்க வாங்குங்க” என்றான்.
“வளரும் பிள்ளைங்க… நீயும் உன் தங்கையுமே வாங்குங்க” என்று சாம்பவி சொல்ல, இவன் தங்கையை வாங்க சொன்னான்.
நவீனா துணிகள் அடங்கிய பையை நீட்ட, செந்தமிழ்செல்வி பெற்றுக்கொள்ளும் காட்சியினை படமாக்கினான் பொற்செல்வன்.
பணியாள்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று வரும் வழியிலேயே நவீனாவிடம் விளக்கியிருந்தான். கடையில் உள்ள கேமரா பதிவுகளை எப்படி பார்வையிடுவது என்று தற்போது விளக்கினான்.
“எனக்கு டைம் ஆகுது, நான் கிளம்பறேன்” என்றான் இளவரசன்.
பொற்செல்வன் சரி என்பதாய் தலையசைக்க, “எனக்கு உங்களோட பேசனும், சின்ன வாக், வெளில போலாமா?” என்றான்.
“ம் யா” என்றபடி வெளியேறினான்.
பொற்செல்வன் வெளியேறிய பின்னேதான் சற்று நிம்மதியானாள் செந்தமிழ்செல்வி. நவீனாவோடு இயல்பாக பேச ஆரம்பித்ததை கவனித்தபடி வெளியேறினான் இளவரசன்.
“என் தங்கையைப் பத்தித்தான் கேட்கனும்”
“செல்வியைப் பத்தி ஆன்ட்டி சொல்லியிருப்பாங்களே, என்கிட்ட கேட்க என்ன இருக்கு?” என்றான்.
“வீட்டுலயே இருக்கிறது ஒரு மாதிரி ஃபீலாகியிருக்கும், எதாவது ஜாப் ட்ரை பண்ண சொல்லுங்க, சரி ஆகிடுவா”
“இந்த ஒரு மாசத்துல மூணு ஜாப் போனா, ஐ.டி கம்பெனிக்கு போய்ட்டு ஒரே நாள்ல வேலையை வேண்டாம்னுட்டா, பி.காம் படிச்சிருக்காளேனு ஆடிட்டிங் ப்ராக்டீஸ்க்கு அனுப்பி வச்சேன், இரண்டு நாள் போய்ட்டு பிடிக்கலனுட்டா, இன்னொரு வேலை, சொல்லும்போதே வேணாம்னுட்டா.
வேலைக்கு போறேனு அவளே கேட்டதாலத்தான் என் ஃப்ரண்ஸ்கிட்ட சொல்லி ட்ரை பண்ணினேன். இப்போ வேலை வேண்டாம், காடு வேணும்ன்றா. காய்கறி, பூச்செடி வளர்த்தி பிஸ்னஸ் பண்றாளாம்.
விவசாயத்தை பத்தி இவளுக்கு என்ன தெரியும்? அதுவும் இந்த ராஜ்ஸ்தான்ல இவ பூச்செடி வளர்த்திட்டாலும்” என்று கடுப்பாக சொன்னவன், “காடு வாங்குறது பிரச்சனையில்ல, இங்க அதிக பட்சம் மூணு வருசம்தான் எனக்கு ஜாப் இருக்கும், அப்புறம் டிரான்ஸ்ஃபர் கிடைச்சிடும்.
அப்பா ஊர்ல வாங்கினா அவளுக்கு பிடிக்காது. அம்மாவோட அம்மா ஊர்ல கூட வாங்கிடலாம், ஆனா திரும்ப அம்மாவும் நானும் பிரியற மாதிரி ஆகும், செல்வியை தனியாவும் விட முடியாது.
அம்மா செல்விக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு சொல்றாங்க, கல்யாணத்துல சுத்தமா இவளுக்கு விருப்பமில்லை, எதையோ ரொம்ப மிஸ் பண்றா, அது என்னானு தெரிஞ்சாதான் சரி பண்ண முடியும்”
அங்க உங்களோட ரொம்ப இன்வால்வ்டா வேலை செய்தாளாம், வேலை செய்யிற பொண்ணு போல நடத்தமாட்டிங்களாம், இரண்டு பேரும் க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ் போல இருப்பிங்களாம். அப்படியிருந்தவ இப்போ உங்ககிட்ட சரியா பேசக் கூட இல்ல, நீங்க வெளில வந்த பின்னாடிதான் நவீனா சிஸ்டர்கிட்ட இயல்பா பேச ஆரம்பிச்சா” என்றான்.
“ஹம்…” என பெரு மூச்சிழுத்தவன், “நல்லா கவனிச்சிருக்கிங்க” என பாராட்டி, “யாரையாவது லவ் பண்றாளானு கேட்டிங்களா?” என்றான்.
“கேட்டேனே, இல்லவே இல்லைனுட்டாளே” என்றான்.
“எஸ்… இதான் பிரச்சனை. அவ லவ் பண்ணல”
“என்ன சொல்றிங்க? லவ் பண்ணலைனா பிரச்சனை எப்படி வரும்?” என இளவரசன் புரியாமல் கேட்க, “நான் அவளை லவ் பண்றேன்ல? அதான் அவளுக்கு பிரச்சனை” என்றான்.
இளவரசன் நடை தன்போல் நின்றது. தானும் நின்றவன், “ப்ரப்போஸ் பண்ணினேன், பிடிக்கலனுட்டா, பிடிக்காதவளை வற்புறுத்தக்கூடாதுனு அதுக்கப்புறம் ஒருமுறை கூட அதைப்பத்தி திரும்ப பேசல, ஆனாலும் அவளால இயல்பா இருக்க முடியல, என்னோட ஃப்ரண்ட்ஸிப்பையும் கட் பண்ணிட்டா” என்றான்.
அன்னை மூலம் பொற்செல்வனின் உயரமும், சிறந்த குணமும் அறிந்திருந்த இளவரசனுக்கு என்ன சொல்வதென்று புரியவில்லை. சில நொடி தடுமாறியவன், “அம்மாக்கு இது பத்தி தெரியுமா?” என்றான்.
“எனக்கு மறைக்கனும்னு இல்ல, செல்விக்கு விருப்பமில்லைன்றதால வேற யார்கிட்டயும் என் விருப்பத்தை சொல்லல”
“இப்போ என்கிட்ட சொல்ல காரணம் இருக்கோ?” என இளவரசன் புருவம் சுருக்க,
“எஸ்… காரணம் இருக்கு. செல்விக்கு பிடிக்கலனா விட்டுடுவோம்னு அப்போ நினைச்ச மாதிரி இப்போ நினைக்க முடியல.
அண்ணிக்காக பிஸ்னஸ்னா எங்க ஊர்லயே பண்ணியிருப்பேன், இவ்வளோ தூரம் வரத் தேவையில்லை. இங்க ஆரம்பிச்சதே செல்விக்காகத்தான். அவளை பார்க்கத்தான்” என்றான்.
இப்படிலாம் வீர வசனம் பேசவும், செய்யவும் ஆசையாத்தான் இருக்கு, ஆனா இதுக்கெல்லாம் உங்க தங்கச்சி என்னை லவ் பண்ணனும்ல?” என்று ஏக்கமாக சொல்லி “முதல்ல அவ என்னை லவ் பண்ணட்டும்” என்றான்.
“செல்வி சம்மதிச்சா போதுமா?”
“உங்க தங்கை விருப்பத்தை மதிப்பிங்கன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. என்னோட கவலை எல்லாம் செல்வி மட்டும்தான். அவளுக்கு என்னை முதலாளியாவும் ஃப்ரண்டாவும் பிடிக்கும். லவ்வரா மட்டும்தான் பிடிக்காது.
என்னை மறக்கவும்மாட்டா, ஏத்துக்கவும்மாட்டா, அதனாலதான் சம்மதிக்கவும் முடியாம, என் ப்ரப்போஸல்லயிருந்து வெளில வரவும் முடியாம திணறிட்டு இருக்கா.
அவ சம்மதத்தோட கல்யாணம் பண்ணத்தான் ஆசை. ஆனா இப்போதைக்கு அது சாத்தியமேயில்ல. ஆனாலும் என் கல்யாணம் அவளோடதான். அவளுக்கு என்னை பிடிக்கலன்றதுக்காக விடவெல்லாம் முடியாது” என்றான்.
செல்வியைப் பற்றி இவர் சொல்றது உண்மையாகத்தான் இருக்க வேண்டும், அதனால்தான் திருமணம் என்றாலே டென்ஷன் ஆகுறா என்று நினைத்தவன், “அதுக்காக கம்ப்பல் பண்ணி கல்யாணம் பண்ணிப்பிங்களா? அதுக்கு நான் விடமாட்டேன்” என்றான்.
இளவரசன் அதிர்ந்து பார்க்க, “டியூட்டிக்கு போகனும்ல? இன்னைக்கு இது போதும், நான் ஈவ்னிங் கிளம்பிடுவேன். ஒன் வீக் நல்லா யோசிச்சிட்டு எனக்கு கால் பண்ணுங்க” என்று தனது எண்ணை இளவரசனுக்கு அனுப்பி வைத்து கடையை நோக்கி நடக்கலானான்.