Skip to content
Post Views: 9,233
காலை எழுந்தவளுக்கு எங்கிருக்கிறோம் என்றே தெரியவில்லை, அறை முழுதும் இருளில் இருக்க “எங்கிருக்கிறோம்” என்று யோசித்துக் கொண்டே எழுந்தாள் .
வெகு நாட்கள் உறக்கத்தில் இருந்த போல ஒரு உணர்வு தன்னையே ஒரு முறை நன்றாக பார்த்துக்கொண்டாள் , கனமான திரை சீலையை விலக்க ஏதோ மலை பிரதேசம் என்று புரிந்தது.
கண்ணாடியில் இரு கைகளை வைத்து உத்து பார்க்க தனியான எஸ்டேட் வீடு போன்று இருந்தது , “நம்ம வீடு இல்லையே” என்று யோசித்து நிற்க கதவு திறந்தது.
உள்ளே வந்தவளை ஆராச்சியாக பார்த்தவள் பின்பு ஆச்சர்யமாக பார்த்து “ரெம்யா சேச்சி” என்றாள் சந்தோஷமாக.
Advertisement
ஒரு நொடி ரெம்யா அதிர்த்துவிட்டாள் “அம்மு உனக்கு ஞாபகம் வந்துடுச்சா” என்றவளை பார்த்து “எனக்கு எப்போ ஞாபகம் போச்சு” என்றாள் அம்மு.
“இவ கோமால இருந்தாளா?? நான் இருந்தேனா ?” என்று சந்தேகம் வந்துவிட்டது ரெம்யாவிற்கு .
“இல்ல… உனக்கு கொஞ்சநாளா உடம்பு சரி இல்ல , நீ கோமால இருந்த மாதிரி இருந்த” என்க
Advertisement
“அப்படியா!!” என்றவள் தன்னை திரும்பி திரும்பி பார்த்துக்கொள்ள, “என்ன பண்ற” என்றாள் ரெம்யா.
Advertisement
“இல்ல கோமாலனா… படுத்தேயிருந்தேனா ! என்னால நடக்க முடியுமா?” என்றவளை பார்த்து ரெம்யா டயர்ட் ஆகிவிட்டாள்.
அவள் பழைய அம்மு ஆகிவிட்டாள் என்று புரிந்தது பேசாமல் இருக்க முடியாதே அவளுக்கு.
அவள் கட்டிலில் அமர்ந்து அம்முவை அருகில் பிடித்து அமர்த்தி, அவளிடம் நடந்தவைகளில் சிலதை விவரிக்க பொறுமையாக கேட்டுக்கொண்டாள்.
Advertisement
“எனக்கு வீட்டுக்கு போகணும், பெரியம்மா பாட்டியை பாக்கணும், அவங்க இல்லாம நான் மட்டும் எப்படி இங்க, அவங்க எப்படி விட்டாங்க!!” என்றாள் ரெம்யாவை நம்பாமல்.
“இந்த கேள்வியெல்லாம் உன் புருஷன் கூட போகும்போது கேக்கல, யாரும் இல்லாம அவன் கூட போயிட்ட” என்க.
அதிர்ச்சியில் உடனே எழுந்துவிட்டாள் அம்மு “கல்யாணமா??” என்றவள் உடல் நடுங்கியது “யாருடன்? யாருக்கு தன்னை மனம் முடித்தார்கள், அப்போ நந்தேட்டன் வரவே இல்லையா… என்னதான் நடக்கிறது தன்னை சுற்றி” என்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவள்.
தன் உடலை தடவி பார்த்தாள் கழுத்தில் தடவிப் பார்க்க தட்டுப்பட்டது அந்த செயின், அவசரமாக வெளியில் எடுத்து பார்க்க விழிகள் நிறைந்தது , சந்தோஷத்தில் மூச்சு முட்டியது.
“நந்தேட்டா” என்று மனம் துள்ளியது , சட்டென்று உடல் எல்லாம் ஒரு சந்தோஷ சாரல் அப்படியே தாலியை கையில் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.
“அவர் எங்க” என்று வெகு நேரம் சென்று அவள் கேட்க, அவளுடைய திருமணம் மற்றும் ஜெகன் சென்றது, அவளுக்கு அங்கு நடந்தது என்று சில விஷயங்களை அவளிடம் கூறினாள் ரெம்யா.
அவன் தேடி வந்தான் என்பதை அவளால் நம்ப முடியவில்லை, திருமணம் முடிந்துவிட்டது என்றவள் கூற்றில், தன்னிச்சையாக கை கழுத்தில் கிடந்த தாலியை தழுவியது.
இதே போன்ற தாலியைத்தான் நான்கு வருடம் முன்பு அவர்களின் திருமணம் நிச்சயம் செய்த பொது அவன் செய்ய சொல்லி கொடுத்தான்.
இப்பொழுது அது தன் கழுத்தில் கிடக்க அதை விட பெரிய ஆதாரம் என்ன இருக்கிறது , முகம் புன்னகையில் விரிந்தது , சட்டென்று வாடியது “நீ எனக்கு வேண்டாம்னு சொல்லிட்டு போயிட்டு, என்கிட்டே கேக்காம ஏன் தாலி காட்டினார், வரட்டும் அவருக்கு வெச்சுக்குறேன்” என்று எண்ணியவள், “கல்யாணம் ஆயிடுச்சு, அப்புறம் ஏன் இவங்க கூட இருக்கேன்” என்று யோசித்து “ரெம்யா சேச்சி ஏன் உங்ககூட இருக்கேன்” என்றாள்.
அந்த நேரம் கதவை திறந்து உள்ளே வந்தார்கள் ஹரி மற்றும் ஜெயன்.
அவர்கள் கையில் போன் ஸ்பீக்கரில் இருந்தது “அண்ணா இப்போ அவனுக்கு தகவல் சொல்லு , அம்மு நம்ம கூட இருக்கா , அவ நல்ல படியா வரணும்னா கேஸ் வாபஸ் வாங்க சொல்லு , எல்லா ஆதாரத்தையும் நம்ம கிட்ட குடுக்க சொல்லு” என்றனர்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சுருக்கு , என்ன பண்ணறீங்கன்னு தெரியுமா ? அவன் ஏற்கனவே கொலவெறில இருக்கான் , நீங்க அவளை கடத்துனது மட்டும் தெரிஞ்சிது மொத்தமா முடிச்சுருவான்” என்ற ராஜீவ்.
“நான் சொல்றது உங்களுக்கு இப்போ புரியாது , அவன் அப்பாவையும் சித்தப்பாவையும் மட்டும் தான் டார்கெட் பண்ணான் , நீங்களா போய் அவன் வலைல சிக்குறீங்க அவளோ தான் சொல்லுவேன்”.
“உங்க மெரட்டலுக்கு அவன் பயப்படுறானா , இல்ல.. நீங்க அவன் கால்ல விழுறீங்களான்னு நானும் பாக்க தானே போறேன்”.
“அஹ்ஹ் அப்பறம் ரொம்ப முக்கியம் அவ மேல ஒரு சின்ன கீறல் கூட இல்லாம பத்திரமா பாத்துக்கோங்க, அவ நல்லா இருக்கறது தானே உங்களுக்கான பாதுகாப்பு” என்றவன் வைத்துவிட.
ரெம்யாவிற்கு இது சரியாக வருமா என்று மீண்டும் யோசனையானது.
“எனக்கு என் கல்யாணம் நடக்கணும் அதுக்கு அப்பா வெளில வரணும் அவன் கேஸ் வாபஸ் வாங்கிட்டா எனக்கு போதும்” என்றவள் தம்பிகளிடம் கூற .
“எங்களுக்கு போதாது… வெளில தலை காட்ட முடியல பெரியப்பாவும் அப்பாவும் ஜெயில்ல இருக்கறது எல்லார்க்கும் தெரியும் , ரொம்ப கேவலமா பாக்குறாங்க பேசுறாங்க”.
“பாட்டி வீட்ல பணம் கேட்டா உங்க அப்பன் சம்பாரிச்சு இங்கேயா குடுத்தான் அப்படின்னு மாமா கத்துறாரு , நாங்க இந்த ஸ்டேட் விட்டு வேற எங்காயாவது போனும் நம்ம சொத்துல கொஞ்சமாவது நமக்கு கிடைக்கணும், அப்போதான் எங்களால வெளில போக முடியும், அம்முவுக்கு ஏதாவதுன்னா அவன் நிச்சயம் இறங்கி வருவான்”.
“ஒரு சின்ன விஷயத்துக்கு அன்னைக்கு என்னை அத்தனை பேர் முன்னாடி அடிச்சானே இவளுக்காக தான என்றான் ஹரி அம்முவை முரைத்துக் கொண்டே” காந்தாரி மிளகாய் தண்ணீர் குடிக்க வைத்த நாளின் நினைவில்.
“இப்போ இவ நம்ம கிட்ட மாட்டி இருக்குறது தெரிஞ்சா அவனுக்கு கண்டிப்பா பயம் வரும்” என்றான் ஹரி நம்பிக்கையாக.
அவள் அவர்கள் அனைவரையும் யோசனையாக மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள், “டேய் அவளுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வந்துடுச்சு” என்று ரெம்யா கூற.
“நல்லதா போச்சு” என்ற ஹரி, கிருஷ்ணன்னும் சங்கரனும் ஜெயிலுக்கு போன கதையை அவளிடம் கூறி அதற்க்கு ஜெகன் தான் காரணம் அதனால் அவளை அழைத்து வந்திருப்பதாக கூறினான்.
“உனக்காக அவன் யோசிப்பான்ல” என்றவனை பார்த்தவள் “எனக்கு பசிக்குது” என்றாள் ரெம்யாவிடம்.
“நாங்க என்ன சொல்லிட்டு இருக்கோம் நீ என்ன பசிக்குது சொல்ற” என்ற ஜெயனை பார்த்தவள் “பசிச்சா பசிக்குது தான சொல்லணும்” என்றாள் அப்பாவியாக.
ரெம்யாவிற்கு அப்பொழுது தான் ஞாபகம் வந்தது அம்மு நேற்று காலை கொஞ்சம் சாப்பிட்டது, அதன் பிறகு ஒன்றும் சாப்பிடவில்லை, ஆர்டர் செய்திருந்த உணவை கொண்டு வந்து கொடுக்க வேகமாக உணவை உண்டு முடித்தாள்.
பிறகு சகோதரர்களை பார்த்தவள் “நந்தட்டன் உங்களைவிட வயசுல பெரியவர் அவரை அவன் இவன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க” என்றாள் முகத்தை சுருக்கி.
பின் அவர்களை நேரே பார்த்து “கண்டிப்பா எனக்காக என்ன வேணா செய்வார், ஆனா நீங்க ஒரு விஷயம் மறந்துட்டிங்க , இத அவர் சீதா அம்மாயிக்காகவும் , வாஞ்சிக்காகவும் செய்றார்”.
“இதுல பின் வாங்க மாட்டார் , யாரை வெச்சு அவரை அடக்கலாம்னு நீங்க நினைக்குறீங்களோ , அந்த கார்தும்பியவே” என்று தன்னை தொட்டு காட்டியவள் “அவங்களுக்காக வேண்டாம்னு சொல்லிட்டு போனவர் ”.
“பெரியப்பாவும் சித்தப்பாவும் பண்ணின தப்புக்கு அவங்களுக்கு தண்டனை கிடைச்சு தான் ஆகணும், அவங்கள காப்பாத்த அவர் கிட்ட நான் கேக்க மாட்டேன்”.
“நான் இங்க இருந்து பத்திரமா வீட்டுக்கு போய்டுவேன், எனக்கு அதுல கொஞ்சம் கூட சந்தேகம் இல்ல” என்றாள் திடமாக.
“இந்த தைரியத்துக்கும் நம்பிக்கைக்கும் இது ஒன்னு போதும் எனக்கு” என்றவள் கழுத்தில் கிடந்த தாலியை அவர்களின் முன் காண்பித்து அதை இறுக்கமாக பற்றிக்கொண்டு சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
பேசியது கார்தும்பியா என்று அவர்களுக்கு ஆச்சர்யம் சூழ , அவளுக்கே தன்னை நினைத்து ஆச்சர்யம் தான் , அது வருண் ஜெகன்நாதனின் மனைவி என்ற கர்வமா நம்பிக்கையா தெரியவில்லை.
அம்முவை அவர்கள் கொண்டு சென்ற அன்று இரவு ஜெகன் வீட்டிற்கு அழைத்தபோது சரியாக ஒன்றும் கேட்கவில்லை என்று மீண்டும் மீண்டும் அழைப்பை துண்டித்தாள் ரூபா.
அம்முகிட்ட பேசணும் அவளை கூப்பிட்டு என்றான் ரூபாவிடம் அவள் மீண்டும் அழைப்பை துண்டித்து போனை ஆப் செய்துவிட்டாள் , அன்று முழுதும் அவனுக்கு தகவல் வரவில்லை.
அடுத்த நாள் துரைசெல்வதை அழைக்க அவரும் சரியாக பேசவில்லை, வற்புறுத்தியபோது அவளுக்கு கொஞ்சம் உடல் நிலை சரி இல்லை ஹாஸ்பிடலில் சேர்த்திருப்பதாக கூறினார்.
“ஏன் சொல்லவில்லை என்ன ஆயிற்று” என்று தோண்டி துருவினான், டாக்டரிடம் பேசவேண்டும் என்று பிடிவாதமாக நிற்க , அம்முவை காண்பித்து கொண்டிருந்த டாக்டரிடம் நிலைமையை எடுத்துக் கூறி பேச சொல்ல.
“மிஸ்டர் ஜெகன் , அவங்க உங்க அப்பாவை பார்த்துட்டாங்க , அந்த அதிர்ச்சில மயங்கி விழுந்துட்டாங்க கொஞ்சம் ஸ்ட்ரெஸ் வேற ஒன்னும் இல்ல நான் பாத்துக்குறேன்” என்றார்.
துரைசெல்வமும் கிஷோரும் அணைத்து வழிகளிலும் அவளை தேடிக் கொண்டிருந்தனர் , தான் இல்லாத நேரம் தன்னுடைய குடும்பத்திற்கு ஆபத்து வந்தால் என்ன செய்ய வேண்டும் என்று ஜெகன் கூறியிருந்த படி அவன் ஏற்பாடு செய்த ஆட்கள் செயல்பட்டு கொண்டிருந்தனர்.
இவர்கள் அனைவரும் சொன்ன எதிலும் அவனுக்கு நம்பிக்கை இல்லை, நேரடியாக கிஷோரை அழைத்துவிட்டான்.
அவன் வேலை பார்ப்பதே ஜெகனிற்குத்தான், தானாக அழைத்து சொல்லவேண்டாம் அவர் அழைத்தால் அனைத்தையும் சொல்லிவிடலாம் என்று காத்திருந்தான் கிஷோர்.
ஆனால் அந்த நேரத்தில் கூட அனைவரையும் முடக்கிவிட்டு அம்முவை தேடினான், கிட்டத்தட்ட நெருங்கி விட்டார்கள், கிஷோரிடம் விவரங்களை கேட்டவன் “சீக்கிரம் முடிங்க” என்றதோடு வைத்துவிட்டான்.
அவனுக்கு மனதே சரி இல்லை , “தவறு தவறு” அவளை இரண்டாம் முறையும் விட்டு வந்தது தவறு , கையில் கிடைத்த பொருட்களை எல்லாம் வீசி அடித்து உடைத்துக் கொண்டிருந்தான்.
“என்ன பண்ணறது கிஷோர்” என்ற துரைசெல்வத்திடம் “எல்லா பிளானும் முன்னாடியே ரெடி சார் , ஆனா வீடு வரைக்கும் தைரியமா வருவாங்கனு நினைக்கல” .
“ஒன்னும் பிரச்னை இல்லை மேடம அவங்க ஒன்னும் செய்ய மாட்டாங்க , ரொம்பநாளா தேடிட்டு இருந்த அந்த பொருக்கி வசமா நம்ம கைல வந்து சிக்கியிருக்கான் , இவனுங்க ஆட்டம் இதோட முடிஞ்சுது சார் நீங்க கவலை படாதீங்க” என்றான்.
error: Content is protected !!