Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 21.1

திருமணம் முடிவு செய்த நாளில் இருந்து சங்கரனின் நடவடிக்கை சரி இல்லை, ஏதோ ஒரு வித எரிச்சலில் இருந்தார் எப்பொழுதும் அனைவர் மீதும் எரிந்து விழுந்து கொண்டு காரணம் யாருக்கும் தெரியவில்லை.

தெரிந்தவர் பிரகாஷ் மட்டுமே , ஆனால் அதை யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்து இறுதியாக மகனிடம் சொல்லிவிட முடிவு செய்து அவனின் அறை சென்றார்.

தன்னுடய உடைமைகளை சரி பார்த்துக் கொண்டிருந்தவன் திரும்பி பார்த்து “வாங்கப்பா” என்க “எல்லாம் எடுத்து வெச்சுட்டியா ஜெகா” என்றார் பிரகாஷ்.

“ஹ்ம்ம் முடிஞ்சுடுச்சுப்பா உங்களுக்கு தான் அலைச்சல், அதுக்கு தான் கல்யாணத்த ட்ரைனிங் முடிஞ்சு வெக்கலாம் சொன்னேன்,  இன்னும் என்ன அஞ்சு மாசம் தான்” என்றான்.



Advertisement

ஆம் நேவி ட்ரைனிங் முடிகிறது இன்னும் ஐந்து மாதத்தில், அதன் பிறகு திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று இவன் சொல்ல, முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார் பிரகாஷ்.

ஒரு கட்டத்தில் தந்தை வேறு ஏதோ யோசித்து சொல்கிறார் என்று புரிந்துகொண்ட ஜெகன் சரி என்றுவிட்டான் , திருமணம் இங்கு கார்தும்பியின் பிரியமான கிருஷ்ணன் ஆலயத்தில் நடக்க இருக்கிறது.

கேரளா திருமணங்கள் மிக எளிமையான சடங்குகள் கொண்டது, நலுங்கு வைப்பது கிடையாது, ஹோமம்  வளர்த்து அங்கே அமர்வது கிடையாது, சரியான நேரத்தில் மாப்பிள்ளை வர உடனே பெண் அழைக்கப்பட்டு தாலியும் கட்டப்படும்.

Advertisement

காலையில் உறவில் மூத்தவர்களுக்கு வெற்றிலை தக்ஷிணை கொடுத்து ஆசிர்வாதம் வாங்கும் சடங்கு மட்டும் நடைபெறும் , ஆகையால் திருமணம் உடனே முடிந்துவிடும்.

Advertisement

சாப்பாடு கோவில் மண்டபத்திலேயே பரிமாற ஏற்பாடு செய்யப்பட்டது, அனைத்திற்கும் பணம் செலுத்தி விட்டால் போதும் இங்கு இவர்களுக்கு வேலையே இல்லை.

ஜெகனின் ஊரில் தான் வேலைகள் மலை போல கிடந்தது, குலதெய்வம் கோவிலில் பொங்கல், உறவுகள் ஊர்காரர்களுக்கு விருந்து, சிறிய அளவில் வரவேற்பு என்று அனைத்தையும் துறைசெல்வம்  அங்கே பார்த்துக் கொண்டார்.

“இப்போ சொல்லுங்கப்பா ஏன் உடனே கல்யாணம் வெக்கணும்னு இவ்ளோ பிடிவாதம்” என்க , மகனின் புரிதல் அவருக்கு நிறைவை தந்தது, அனைத்தும் அவன் பார்த்துக்கொள்ளுவான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எப்பொழுதும் போல.

Advertisement

“அப்பா” என்று மீண்டும் அழைக்க ஆழ்ந்த மூச்செடுத்தவர் , “என் சீதா கை பிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்த நினைவுகள் இன்னும் பசுமையா  மனசுல நிக்குது , அதுக்குள்ள என் மகனுக்கு கல்யாணம்” என்றவர் அவனை தோளோடு சேர்த்து அணைத்து  “ரொம்ப சந்தோஷமா இருக்குயா”.

“உனக்கு நான் சொல்ல வேண்டியதில்லை அம்மு வெகுளி பொண்ணு, நம்ம வீட்ல அவங்க மனசு நோகாம நல்லா வெச்சு நீ வாழனும்” என்க புன்னகைத்துக் கொண்டான்.

“தெரியும்… அம்முவை நீங்க எப்படி பாத்துப்பீங்கன்னு எனக்கு தெரியும் இருந்தாலும்… மருமக அப்படிங்கறது தாண்டி அவங்க எனக்கு மக மாதிரி” என்றவரை அப்பா என்று சிரிப்போடு அணைத்துக்கொண்டான், “மாயக்காரி எல்லாரையும் மயக்கி வெச்சுருக்கா” என்று எண்ணிக்கொண்டான்.

“சங்கரன் பெருசா தப்பு பண்றான்” என்க இதுவரை இருந்த அமைதி மறைந்தது அவனிடம்.

“என்னப்பா சொல்றீங்க” என்றான் ஜெகன் அவரின் அருகில் அமர்ந்து,

“ஆமாப்பா நெறய கடத்தல்ல உடந்தையா இருக்கான், எங்கிட்ட சில ஆதாரம் சிக்கி இருக்கு”.

“அப்பறம் என்னப்பா நாட்டுக்கு துரோகம் பண்றான்,  முதல்ல புடிச்சு உள்ள போடணும்” என்றான் ஜெகன் கோபமாக.

“நானும் அதைத்தான் நெனச்சேன் முதல்ல,  ஆனா உடனே செய்ய முடியல, அங்க எங்க கூட வேல பாக்குற ஒரு பொறுக்கிக்கு நம்ம அம்முவை காட்டிக்கொடுக்க பிளான் போட்டிருக்கான்” என்க.

அமர்ந்திருந்த இடத்தில இருந்து துள்ளி எழுந்தான் ஜெகன் “யார் பொண்டாட்டிய யாருக்கு குடுக்குறான்” என்று ரௌத்திரம் கொள்ள, “தம்பி அது தெரிஞ்சதால தான் உடனே கல்யாணம் வெக்க சொன்னேன், முதல்ல அம்மு நம்ம வீட்டுக்கு பத்திரமா வரட்டும், அப்புறம் அவன் மேல நடவடிக்கை எடுக்க பாக்கலாம், இப்போ நமக்கு அம்முதான் முக்கியம்” என்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவன்.

“என்ன பிளான்” என்றான்  “ஆதாரத்தை என்னோட லாக்கர்ல வெச்சுருக்கேன்,  உனக்கு மட்டும் ஆக்ஸஸ் குடுத்துருக்கேன்  ஏதாவது பிரச்னை வந்தா நீ பாத்துக்கோ” என்றார் இறுதியாக.

“என்னப்பா இதெல்லாம்… என்ன பிரச்னை வரும் என்கிட்டே முழுசா சொல்லுங்க, என்ன நடக்குது” என்க.

“அட ஏன்பா !! ஒரு பிரச்னையும் இல்ல, சங்கரன் கொஞ்சம் பயத்துல இருக்கான் , அதனால என்னை தடுக்க ஏதாவது முயற்சி பண்ணுவான், இந்த கல்யாணத்த கூட  தடுக்க வாய்ப்பிருக்கு , நாம எதுக்கும் தயாரா இருக்கணும் அதுக்கு சொல்றேன், இது எதுவும் நான் சீதகிட்டயும் வாஞ்சி கிட்டயும் சொல்ல முடியாது , நீ ஒன்னும் யோசிக்காம கெளம்பு , பாத்துக்கலாம்”.

“முதல் நாள் வந்துடுவல்ல” என்ற தந்தையிடம்  “ஹ்ம் வந்துடுவேன்ப்பா,  இல்லனா காலைல வந்துடுவேன் , நீங்க டென்ஷன் ஆக வேண்டாம்” என்றான் மைந்தன்.

“நான் ஏன் டென்ஷன் ஆகணும் என் மருமகளை கட்டணும்னா சரியான நேரத்துக்கு நீ வந்து சேரு” என்றவர் அவன் தோளில் தட்டி கீழிறங்கினார்.

மேலே நின்று தந்தை செல்வதை யோசனையை பார்த்திருந்தவன் விழிகளில் விழுந்தாள் தும்பி,  நிமிடத்திற்கு ஒரு முறை தன்னை பார்த்துக்கொண்டு வாஞ்சியிடம் கதை பேசிக்கொண்டிருந்தாள்.

தேவதை கதை கேட்ட போதெல்லாம்

நிஜமென்று நினைக்கவில்லை


நேரில் உன்னையே பார்த்த பின்புதான்

நம்பி விட்டேன் மறுக்கவில்லை


அதி காலை விடிவதெல்லாம்

உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்

 

அந்தி மாலை மறைவதெல்லாம்

உன்னை பார்த்த கிறக்கத்தில் தான்…

 

“வா” என்று இவன் தலை அசைக்க “மாட்டேன்” என்று விழிகளை உருட்டியவள் அப்படியே அமர்ந்திருக்க.

“இப்போ வரல வந்து தூக்கிட்டு போவேன்” என்று இவன் சைகை செய்ய, “அவன் கூப்பிடப்போவே போயிருக்கலாம்” என்றான் வாஞ்சி நிமிராமல்.

“ஐயோ” என்று தலையில் அடித்துக்கொண்டவள் மேலேற,  கார்த்தம்பியை கைவளைவில் நிறுத்தி, அவள்  இதழில் கவிதை எழுதியவன் அவள் மச்சத்தில் இதழ் பதித்து.

“கல்யாணத்துக்கு முதல் நாள் இல்லனா கல்யாணம் அன்னைக்கு காலைலே வந்துடுவேன் , சரியா..”  என்க.

“ஹ்ம்ம்” என்றாள்.

அவள் செவியில் மீசை உரச “கல்யாணம் அன்னைக்கு ராத்திரி பெரியம்மா சொன்னாங்க , அம்மாயி சொன்னாங்கனு  புடவை கட்டறேன் பின் குத்துறேன்னு எதுவம் பண்ணைக் கூடாது” என்க.

அதிர்ச்சியாகி அவனை தள்ளிவிட்டவள் விழிவிரிக்க , சிரித்தவன் அவளை தன் அருகில் இழுத்து “இருடி இன்னும் சொல்லி முடிக்கல” என்று அவளின் கையில் ஒரு கவரை கொடுத்தான்

“நீ போட வேண்டிய டிரஸ் இதுல இருக்கு” என்றவன் , வேறு ஒரு பெரிய கவரை கொடுத்து “அப்பறம் என்கூட ரூம்ல இருக்கும்போது இத மட்டும்தான் போடணும்” என்றான்.

முகத்தை சுருக்கி அவனை பார்க்க “செல்லக்குட்டி இது இல்லனாலும் எனக்கு சந்தோஷம்தான் , ஆனா நீ ஒதுக்கமாட்டியே அதனால போன போகுதுன்னு உனக்காக பார்த்து பார்த்து வாங்கினேன்” என்றவன்.

அவள் இரு பக்க கன்னத்தையும் பிடித்து ஆட்ட “ஜெகன் டைம் ஆச்சு”  என்ற தந்தையின் குரலில் அவள் பிறை  நெற்றியில் இதழ் பதித்து “பத்திரம்” என்று விடைபெற்றான்.

அழகான லாவெண்டர் நிறத்தில் ஜார்ஜெட் துணியில் நீள பிராக், இருபக்கம் தோளிலும் கட்டுவதற்கு மெலிதாக இரண்டு ரிப்பன் போன்று இருந்தது.

மற்றபடி எந்த வேலைப்பாடுகளும் இல்லை, தன்னுடைய அறையில் அதை அணிந்துபார்த்தாள் கார்த்தும்பி , அவளுக்கே அவளை பார்க்க வெக்கம் பிடுங்கி தின்றது.

கை இல்லாத அந்த பிராக் அவள் உடலில் ஒட்டி உறவாடி தவழ்ந்து கொண்டிருந்தது , கனகச்சிதமாக அவளுக்கு பொருந்தி கொள்ளை கொண்டது.

அந்த உடையில் இருந்து லாவெண்டர் பூவின் மனம் கூட மனதை கொள்ளை கொண்டது , இந்த உடையில் அவன் முன் நின்றால் அவன் விழிகளில் வந்து போகும் ரசனையை நினைத்து மொத்தமாக சிவந்த உடலை மறைக்க போர்வையை போர்த்திக்கொண்டு கட்டிலில் விழுந்தாள் கார்த்தும்பி.

பெரிய கவரில் இருந்ததும் அதே போன்ற உடை தான், அனைத்தும் கண்ணை உறுத்தாத நிறங்களில் அனைத்தையும் தன் கபோர்டில் பத்திர படுத்தினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!