Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய்

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் – 22.2

ஒரு உயிருக்கு ஒரு முறை
மட்டும் தான் மரணம்
ஆனால் அந்த உயிரை
நேசித்தவர்களுக்கு
தினம் தினம் மரணம்

 

முடியாத காலை வைத்து மனைவி மகள் துணையுடன் மருத்துவமனை வந்து சேர்ந்தார் துரைசெல்வம்மருத்துவமனையின்  ஐ.சி. யு விற்கு முன்பு விழிமூடி தலை சாய்த்து அமர்ந்திருந்தான் ஜெகன் .



Advertisement

எத்தனை கனவுகளோடு  விடிந்த நாள் , இன்று மாலை சென்றுவிடுவோம் நாளை காலை கார்த்தும்பி தன் மனைவியாக தன்னோடு , அவளில் தனக்கு மட்டுமே இனி உரிமை , உலகின் அத்தனை சந்தோஷத்தையும் அவளுக்கு வாரி வழங்க வேண்டும் , இப்படி எத்தனை எத்தனை கனவுகள்.

ஒரே போன் கால் அத்தனை கனவுகளையும் அடித்து குழி தோண்டி புதைத்து விட்டது , காலை செய்தி வந்து சேர்ந்தபோது  கேட்டதை அவனால் நம்பாவே முடியவில்லை.

“இல்லை இது பொய்” என்றுதான் நினைத்தான் மருத்துவமனை வரும் வரை, உள்ளே கிடப்பது தந்தை தானா என்றே அவனுக்கு சந்தேகம் .

Advertisement

முகம் தெரியவில்லை உடலில் பாதி எரிந்து  உயிரை காக்க போராடிக் கொண்டிருந்தார்கள் ,  தாயையும் தம்பியையும் ஒரு நொடி தான் பார்த்தான் உயிரே நடுங்கிவிட்டது.

Advertisement

மொத்தமாக எரிந்து இருவரும் ஒருவரோடு ஒருவர் ஒட்டிக் கிடந்தனர் , ஒரு நொடி அதற்குமேல் அங்கே  நிற்க முடியவில்லை , வியர்த்து கொட்ட இதயம் தொண்டையில் துடித்தது .

அடிகள் பதற  வெளியில் வந்துவிட்டான்  ஒரு வழியாக அங்கிருந்து தந்தையை காண வந்தவனுக்கு மனமும் உடலும் மொத்தமாக தளர்ந்து விட்டது.

அங்கேயே அமர்ந்துவிட்டான் , வெடித்து சிதற தயாராக இருந்த மனதை அடக்கி அமர்ந்திருந்தான்  , மாப்பிள என்று வந்து  நின்றவரின் இடையை கட்டி  கொண்டவன் அலறல் அந்த மருத்துவமனை முழுதும் எதிர் ஒலித்தது.

Advertisement

அதோடு சரி.. அதன் பிறகு ஒரு வார்த்தை கூட பேசவில்லை யாரிடமும் ,  சீதா வாஞ்சி  உடற்கூறாய்வு  முடித்து உடல் தரப்பட்டது  இருவரையும் என்ன என்று பிரிக்க ஒன்றாகவே எரியூட்டி முடித்தனர் .

இரு உயிர்கள்  ஒரு சிறிய குடுவையில் வெறும் சாம்பலாக , அதை கையில் வைத்துக்கொண்டே நான்கு நாட்கள் அதே இடத்தில அமர்ந்திருந்தான்.

 தந்தையின் உயிரை மட்டுமாவது காக்க முடியுமா என்று , உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் நம்பிக்கை அளித்த பிறகே அங்கிருந்து எழுந்தான்.

உயிரோடு இருக்கிறாள் என்பதற்கு சாட்சியாக ஸ்வாசம் மட்டுமே வந்து கொண்டிருந்தது கார்த்தும்பி க்கு ,  நான்கு நாட்களாக காய்ச்சலில் கிடக்கிறாள்.

 போலீஸ்  வந்து  சென்றது  விசாரணை என்று , தவறான தொடர்ப்பு இருந்தது அது மற்றவர்களுக்கு தெரிந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் அனைவரும் சொல்ல , போலீஸ் அதையே எழுதிக்கொண்டது.

 வேறு விசாரணை ஒன்றும் நடைபெற வில்லை , வேறு எதுவும் வெளியில் வராமல் பார்த்துக் கொண்டார்கள் கிருஷ்ணனும் சங்கரனும்.

 நான்காம் நாள் காலை அந்த வீட்டிற்கு வந்தான் ஜெகன் , வந்தவனை பார்த்து லக்ஷ்மியம்மாவும் ஷ்யாமாவும் அருகில் வர அவர்களை கைநீட்டி தடுத்தான்.

எப்படியும் தங்களை தேடி வருவான் என்று கிருஷ்ணனும் சங்கரனும் ஒளிந்து கொண்டனர் வீட்டில் பெண்கள் மட்டுமே.  

 அவன் கையில் இருந்த அந்த சொம்பை பார்த்ததுமே அவர்களுக்கு மனம் பதறியது , அதுவரை உணர்வின்றி கிடந்தவள்  , உள்ளுணர்வில் தள்ளாடி எழுந்து தடுமாறி வெளியில் வந்தாள்.

ஈன ஸ்வரத்தில்  “நந்தேட்டா”  என்று அவனின் அருகில் வர நெருங்க, அவளையும் பார்வையால் தள்ளி நிறுத்தினான் , அவன் விழிகளில் தெரிந்த விலகல் , அந்நிய தன்மையில் அப்படியே சரிந்து கீழே அமர்ந்தாள் , உயிர் உடலை விட்டு பிரிந்ததை போல .

“உன்ன நேசிச்ச ரெண்டு பேர் இதுக்குள்ள இருக்காங்க”  என்க முகத்தை மூடி கதறியவளை அப்படியே வாரி அணைத்து ஆறுதல் சொல்ல மனம் துடித்தது, அவளின் மடியில் படுத்து கதற , அவள் அணைப்பில் கட்டுண்டு கிடக்க ஏங்கினான்.

 இந்த தருணத்தில் அவனின் ஒட்டுமொத்த  ஆறுதலே அவள் தானே ,  ஆனால் அவனின் இழப்பே அவளின் குடும்பத்தால் எனும்போது யாரிடம் ஆறுதல் தேட.

“இதுக்கு மேலயும் உங்க குடும்பத்தோட உறவாடுணுமா நான்??” என்றவன்,உன்னோட என்னால வாழ முடியாது , நீங்க யாரும் என் நினைவுல கூட இருக்க வேண்டாம்”  என்றவன் அப்படியே சென்றுவிட்டான்.

வீட்டை உறவினர்கள் சிலர் வந்து காலி செய்தனர் , எங்கு சென்றான் என்ன ஆனான் ஒன்றும் தெரியவில்லை கார்தம்பிக்கு.

அவனை எதிர்ப்பார்த்து தோட்டத்திலும் வாசலிலும் தவமாய் தவம் கிடந்தாள் , ஊண் இன்றி உறக்கம் இன்றி.

அவன் வரவில்லை , ட்ரைனிங் முடிய இன்னும் மாதங்களே இருக்க அதைப்பற்றிய சிந்தனையே இல்லமால் இருந்தான் பத்து தினங்களாக, “மாப்ள” என்று அருகில் வந்த துரைசெல்வதை பார்த்தவன்.

“நீங்க வீட்டுக்கு போங்க மாமா , கால் இன்னும் சரி ஆகல நா பாத்துக்குறேன்” என்றான் விழிகள் திறக்காமல் யாரிடமும் ஒன்றும் கூறவில்லை, அனைத்தையும் உள்ளே போட்டு அழுத்திக்கொண்டான்.

“உனக்கு அம்மான்னா… எனக்கு தங்கச்சியா.. ஒரே ஒரு உடன்பிறப்பு , சீரும் சிறப்புமா வாழறத கண்குளிர பாத்துட்டு இருந்தேன் , இப்படி ஒரே நேரத்துல என் தங்கச்சியையும் புள்ளயையும் தூக்கி கொடுத்துட்டு நிக்குறேன்”.

“உள்ள படுத்திருக்கறது என் மச்சான், என் தங்கச்சிய கட்டலானாலும் அவன்  எனக்கு நண்பன் , என் சொந்தம்”.

“இந்த வேலை உன் அப்பாவோட ஆசை , உன்னோட கனவு அத அழிச்சுறாத வேற எதுவும் உன்கிட்ட நான் கேக்க மாட்டேன் நீ கெளம்பு, இங்க நாங்க பாத்துக்குறோம்” என்றார்.

எத்தனை சொல்லியும் அவன் கேட்கவில்லை இறுதியாக வேறு வழி இன்றி அவன் காலில் விழப்போனார் துரைசெல்வம்  “மாமா” என்று அவன் பதறி எழ.

“போயா… பிச்சையா கேக்குறேன்” என்று கெஞ்சினார் , எங்கே மருமகன் இப்படியே இருந்துவிடுவானோ என்று பயந்தார் , யாரிடமும் பேசாமல் உள்ளுக்குள் இறுகி இருப்பவனை எப்படி மாற்ற என்று தெரியவில்லை.

இறுதியாக அவரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்து கொச்சின் சென்றான்,  எட்டு மாதங்கள் மருத்துவமனையில் இருந்த பிரகாஷ் அதன் பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

நேராக அவரை உத்தமப்பாளையம் கொண்டு சென்றனர், அதன் பிறகு வீட்டில் வைத்து பார்த்துக்கொண்டார்கள் , பணியில் சேர்ந்துவிட்டான் அவர்களை பழிவாங்கும் எண்ணம் மட்டும் உள்ளுக்குள் எரிந்துகொண்டே இருந்தது.

“நந்தேட்டன் வந்திருக்கார்” என்று பாதி இரவில் கூட எழுந்து ஓடுபவளை பார்க்க வாழ்க்கையே வெறுத்து விட்டது அவள் பாட்டிக்கு , அவள் தாயின் வாழ்வு தான் அப்படி ஆகி விட்டது , இவள் வாழ்வாவது சிறக்கும் என்றும் எண்ணியிருக்க அனைத்தும் சிதறி போய் விட்டது.

ஆறு மாதங்கள் பொறுமையாக இருந்த சங்கரன் முதலில் அவர் பார்த்து வைத்த  அந்த பொறுக்கிக்கு தும்பியை திருமணம் செய்யப் பார்க்க காயலில் குதித்தாள்.

அன்றுதான் அவன் பரிசளித்த ஒரு பாத கொலுசு தொலைந்து போனது, அதோடு அவனை மொத்தமாக தொலைத்து விட்டதாக அவள் மனம் பிழற தொடங்கிய தருணம்.

அடுத்த முறை வேறு வரன் வந்தபோது கையை வெட்டிக் கொண்டாள், அதன் பிறகு அவளை முடக்கும் வழியை தேடி அதை செயல் படுத்தினர் கிருஷ்ணனும் சங்கரனும்.

அவனை இழந்துவிட்டோம் என்ற நினைவே அவளை மொத்தமாக முடக்கியதை அவர்கள் யாரும் அறியவில்லை , எந்த வார்த்தை அவனிடம் இருந்து வர கூடாது என்று உயிரை கையில் பிடித்து காத்திருந்தாளோ அதையே அவன் சொல்லி சென்றான்.

“நீ எனக்கு வேண்டாம்” என்று அதிலே பாதி செத்துவிட்டாள் , மனம் மரித்துப்போன பிறகு உடல் வெறும் சதை பிண்டம் தானே.

வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது 
அது வாழ்வினும் கொடிது 
உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன் 
வான் நீளத்தில் னை புதைகிறேன் 

இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே 
உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ 
இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம் 
காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே 

காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே 
நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை 
வாழ்வே வலிக்கிறதே..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!